Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 338 online users.
» 0 Member(s) | 335 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  பிரபலமான 3Dமென்பொருள்களின் உலகம்.
Posted by: kavithan - 06-18-2004, 02:16 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (10)

இங்கு குறிப்பிடப்படும் அனைத்து மென்பொருள்களும் மிக பிரபலமானவை. பலருக்கு மென் பொருளைப்பற்றித் தெரியும் ஆனால் அவற்றை எவ்வாறு பயன் படுத்துவதென்றோ அல்லது அதில் உள்ள நுடப்பங்கள்,உத்திகளை எவ்வாறு கையாள்வதென்று தெரியாது. இதனை 3D கபே என்ற இணையத்தளம் எங்களுக்காக வழங்குகின்றது.
இதுதான் அது
http://www.3dcafe.com/asp/tutorial.asp


எவ்வெவ் மென்பொருள்கள் என்பதையும் தனித்தனியே இணைக்கின்றேன்


3D STUDIO MAX

http://www.3dcafe.com/asp/tut3ds.asp
ANIMATION MASTER

http://www.3dcafe.com/asp/tutanim.asp
AUTOCAD
http://www.3dcafe.com/asp/tutacad.asp

BRYCE 3D
http://www.3dcafe.com/asp/tutbryce.asp

FLASH

http://www.3dcafe.com/asp/tutflash.asp
HTML

http://www.3dcafe.com/asp/tuthtml.asp
JAVA

http://www.3dcafe.com/asp/tutjava.asp
LIGHTWAVE 3D

http://www.3dcafe.com/asp/tutlw.asp
MAYA

http://www.3dcafe.com/asp/tutalias.asp
PHOTOSHOP

http://www.3dcafe.com/asp/tutphotoshop.asp
POSER

http://www.3dcafe.com/asp/tutposer.asp
PROFESSIONALS
http://www.3dcafe.com/asp/platinumdefault.asp

RAYDREAM STUDIO
http://www.3dcafe.com/asp/tutray.asp

RHINO 3D

http://www.3dcafe.com/asp/tutrhino.asp

SOFTIMAGE|3D
http://www.3dcafe.com/asp/tutsi.asp

TRUESPACE
http://www.3dcafe.com/asp/tuttrue.asp

VRML
http://www.3dcafe.com/asp/tutvrml.asp





கவிதன்

Print this item

  றிகிணோசர்ஸ்(Rhinoceros)3D மென் பொருள்
Posted by: kavithan - 06-18-2004, 01:47 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (6)

[size=18]றிகிணோசர்ஸ்(Rhinoceros)3D மென் பொருள்
இது ஒரு 3Dமென் பொருள். நான்நினைக்கின்றேன் இது 3D MAXக்கு நிகரானது என்று. எற்கும் அனுபவம் உள்ள நீங்களே போய்ப்பாருங்கள் இத்தளத்துக்கு. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்.
இதுதான்
http://www.rhino3d.com/


உங்களுக்கு பிடிச்சிருந்தா எனககும் சொல்லுங்கோ. மறந்திடாதைங்கோ என்னை....


கவிதன்

Print this item

  தமிழர்களின் பொது விழாக்களில் தமிழை புறக்கணிப்பது சரியா?
Posted by: kavithan - 06-17-2004, 10:32 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (8)

:?: :?: :?:
தமிழர்களின் பொது விழாக்களில் தமிழை புறக்கணிப்பது சரியா? அதுவும்எம் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒரு மதகுருவால் :?: :?: :?:



நான் ஒரு இரண்டுவாரத்துக்கு முன்னை ஒரு திருமணவீட்டுக்குப் போனன். அங்கை எல்லாம் தமிழ் தான். நானும் இதுதான் முதல் முறை கனடாவுக்கு வந்து ஒரு விசேசத்துக்கு போறது. எல்லாரும் சொல்லிச்சினம் கோட், சூட்டோடை தான் எல்லாரும் வருவாங்கள் எண்டு.பின்னை நானும் வீட்டிலை கிடந்ததொன்றைக் கொழுவிக் கொண்டுபோனன். அங்கை என்னடா எண்டா கன பொடியள் எல்லாம் வேட்டியோடை நிக்கிறாங்கள்.எனக்கும் கொஞ்சம் வெக்கமாய்ப் போச்சு நான் ஒரு மூலையிலை போய் இருந்திட்டன்.


கொஞ்ச நேரத்தாலை ஆங்கிலத்திலை யாரோ மணமக்களை வாழ்தி உரையாற்றிக் கேட்டுது.ஆரெண்டு பார்த்தா அது குருக்கள். அங்கு தமிழ் விளங்காத ஆட்கள் யாருமே இல்லையென்று சொல்லலாம். குருக்களும் தமிழர்தான். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
என் மனம் சொன்னது அப்போ "தமிழுக்கு வந்த கெதியைப் பார்த்திய எண்டு" :?: :?: :?: :?: :?:

எம் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒரு மதகுருவே தமிழை இரண்டாம் பட்சமாக்கி ஆங்கிலத்தில் உரையாற்றியதைத் தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

[size=18]நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவிதன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  யாழ் மண்ணிலிருந்து சமாதனச் சுருள். . . . .
Posted by: AJeevan - 06-17-2004, 05:16 PM - Forum: குறும்படங்கள் - Replies (8)

<img src='http://scriptnet.org.uk/images/filmstrip_b5.jpg' border='0' alt='user posted image'><img src='http://scriptnet.org.uk/images/filmstrip_b4.jpg' border='0' alt='user posted image'><img src='http://scriptnet.org.uk/images/filmstrip_t2.jpg' border='0' alt='user posted image'>

இலங்கைத் தமிழ் கலைஞர்களின், திரைக்கலையை சர்வதேச தரத்துக்கு ஒப்பாக்குவதற்கான அறிகுறிகள் கொண்ட 7 குறும்படங்கங்கள் யாழ் மண்ணிலிருந்து, போருக்கு பின் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கின்றன.

இக் குறும்படங்கள் , ஸ்கிரிப்ட் நெட் எனும் பிரித்தானிய நிறுவனத்தின் தலைமையின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உருவாகியிருக்கின்றன.

இயக்குனர்களுக்கான பயிற்சியை, பிரிட்டிஸ் திரைப்பட இயக்குனர் நொயெலா ஸ்மித் அவர்களும் ,தயாரிப்பாளருக்கான பயிற்சியை சிங்கள இயக்குனரான இரன்தி அபேசிங்க ஆகியோரும் நடாத்தியுள்ளனர்.

ஸ்கிரிப்ட் நெட் எனும் அரசு சாரா தொண்டர் நிறுவனம், போர் ஓய்வு காலத்தில் <b>REEL PEACE</b> "சமாதனச் சுருள்" எனும் திட்டத்தின் கீழ் வடபுலத்தில் யுத்தம் காரணமாக மககள் அனுபவித்த கொடுமைகளையும், போரினால் விளைந்த கோர யதார்த்தங்களையும் 7 குறும்படங்களாக சிங்கள-தமிழ் கலைஞர்களின் பங்களிப்புடன் சித்தரித்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இதயங்களைப் பற்றி திரையில் பேசி மனதை உலுப்பும் யதார்த்தமான படைப்புகளாகவே இவை வந்திருக்கின்றன. இப்படைப்புகளை சிங்கள கலைஞர்களும் யாழ்-வன்னிக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

தற்போது சுவிஸ் வந்திருக்கும் <b>REEL PEACE </b>, யாழ் திட்ட இணைப்பாளரும் <b>அழுத்தம்</b> குறும்பட இயக்குனருமான கா.ஞானதாஸ் மற்றும் <b>போருக்குப் பின்</b> இயக்குனர்: ஜெயரஞ்சனி ஞானதாஸ் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக <b>1மணி 30 நிமிடங்கள்</b> ஓடக்கூடிய இக் குறும்படங்களைத் திரையிடப்படவுள்ளது. <b>

சுவிஸ் மூவி மற்றும் சுவிஸ் ஊடகங்களுக்கான திரையிடல்:
ஓல்ட்டன் நகரில் 30.07.2004 - 20.00hrs to 22.45hrs),

<span style='color:red'>உங்கள் கவனத்துக்கு:-

இத் குறும்படத்துக்கான திரையிடல் சுவிஸ் சினிமாத்துறை மற்றும் ஊடகவியலாளருக்கானதாக இருந்த போதிலும்
ஒரு சிலரின் வேண்டுகோளுக்கிணங்க ஏனையோரும் திரையிடலில் கலந்து கொள்ள அனுமதிப்பது என்று முடிவாகியுள்ளது.

கண்டிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
(இக் குறும்படங்கள் வயது வந்தவர்களுக்கானவையல்ல.
இருப்பினும் குழந்தைகளின் கூச்சல்கள் பார்வையாளர்களை பாதிக்கும் என்பதாலேயே இந் நடைமுறை பின் பற்றப்படுகிறது.)

[b] திரையிடல் குறித்த நேரத்தில்
30.07.2004 மாலை 20.00 மணிக்கு ஆரம்பமாகும்.
நேரம் தாமதித்து வருவோர் குறும்பட திரையிடல் நடுவே நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

இருப்பினும் தாமதித்து வருவோர் ஒரு குறும்படம் முடிந்து அடுத்த குறும்படம் ஆரம்பிக்கும் முன் உள்ள 1 நிமிட இடைவெளி காலத்தில் மண்டபத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அல்லது
இடைவேளைக்குப் பின்னர் கூட உள்ளே பிரவேசிக்கலாம்.


[size=14][b]நிகழ்ச்சி நிரல்</b>

(1) 20.00மணிக்கு வரவேற்புரை மற்றும் அறிமுகம்
<b>திரு.மார்க்கஸ் பஸ்லர்</b> (தலைவர்)
Swiss Movie மற்றும் Europe Movie Club

(2) 20.05 மணிக்கு குறும்பட திரையிடல்</span>
(i) <b>அதிகாலையில் இருள்: Darkness at Down</b>
( இயக்கம்: ஆனந்த அபேநாயக்க)
யுத்தக் களத்தில் கிடந்த ரவைகளைப் புல்லாங்குழலாக்கி , போரினால் ஏற்பட்ட ஊனத்தைக் கூட மறக்கும் குழந்தைகளின் நம்பிக்கை.

(ii) <b>அழுத்தம்:Under Pressure</b>
(இயக்கம்: கா.ஞானதாஸ்)
கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது.

(iii) <b>செருப்பு (The Slipper)</b>
(இயக்குனர்:கௌதமன்)
காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்ட சிறுமிக்கு செருப்பு கிடைக்கிறது.ஆனால் கண்ணி வெடியின் கோரம் அதை சாத்தியப்பட வைத்ததா?

(3) 20.50 மணிக்கு இடைவேளை

(4) 21.30 மணிக்கு குறும்பட திரையிடல் . .............

(iv) <b>தடை ( The Barrier) </b>
(இயக்கம்:அல்பர்ட் பவுலஸ்)
மருந்துகளுக்கான தடையினால் ஏற்படும் விபரீதங்கள்.


(v) <b>மூக்குப் பேணி (Nose-Cup)</b>
(இயக்கம் :ச.ராகவன்)
சுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள்,மனிதனின் புலனுக்குப் புரியாமலே, யுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை உணர்த்தும் கதைக்கரு . . .

(vi) <b>ஒளித்துப்பிடித்து (Hide & Seek)</b>
(இயக்கம்: டெலோன் வீரசிங்க)
127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணியைக் கருவாகக் கொண்டது.

(vii)<b>போருக்குப் பின் (After the War)</b>
(இயக்கம்: ஜெயரஞ்சனி ஞானதாஸ்)
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும் , ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.

(5) 22.15 மணிக்கு கலைஞர் திரு.திருமதி.ஞானதாஸ் கௌரவிப்பு

(6) 22.25 மணிக்கு விரும்பியவர்கள் திரைப்படங்கள் பற்றிய கலந்துரையாடலில் பங்கு பற்றலாம்.

புகையிரதங்களில் வருவோரை புகையிரத நிலையங்களுக்கு கொண்டு சென்று விடுவதற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:

AJeevan
EUROPE MOVIE CLUB
P.O.Box.950
4601 - Olten
Switzerland
Tel. 0041 (0)62 212 96 23
0041 (0) 79 209 12 49
0041 (0) 79 773 94 47

e-mail: info@ajeevan.com

Print this item

  மாறிவரும் யாழ்ப்பாண வாழ்வியல்....!
Posted by: kuruvikal - 06-17-2004, 02:38 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (9)

யாழ்ப்பாணத்தைப் பற்றி பெருமை பேசுகின்ற யாழ்ப்பாணத்தவரே அதிகம். ஒருகாலத்தில் அப்படித்தான் பெருமை பேசும் வகையில் இருந்தது. ஆனால் இன்று எல்லாத் திசையிலும் தனது சரியான பாதையிலிருந்து தவறி தடம்புரண்டு செல்கின்றது. உள்நாட்டுப் போர் நடக்கின்ற எல்லா நாடுகளைப்போலும் சீரழிவுகள் நடக்கத்தான் செய்யும் என பொதுவான காரணம் பலர் சொல்லி வாதிடலாம்.

இருப்பினும் சில சந்தர்பங்களில் தவறுகள் திட்டமிட்டு அல்லது விபரம் அறியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. அனேகமான தமிழர்கள் தேசவிடுதலையில் கவனத்தை செலுத்த, சாதாரண மக்கள் சரியான வழிநடத்தல் இன்றி தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. இருந்தாலும் வழிகாட்ட வேண்டியவர்களும் (பத்திரிகைகள், பத்திரிகை ஆசிரியர்கள்) தடம்புரள்வதும் அதன் விளைவாக வழிநடத்தப்படுவர்கள் தடம்புரள்வதும் தான் வேதனைக்குரியது.

கல்வி

தமிழர்களின் எதிர்காலம் கல்வியில்தான் முற்றுமுழுதாகத் தங்கியிருக்கின்றது என நம்பிச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்கும்போது கூடக் கல்வியைக் கட்டியெழுப்பியவர்கள்தான் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள். மாணவர்களுக்கு கல்வியில் காட்டப்பட்ட துரோகத்தனத்தால் எழுந்ததே இந்த விடுதலைப் போராட்டம் என்பதும் யாவரும் அறிந்ததே!

கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காரணமாக குடாநாட்டில் அரச பாடசாலைகளில் கற்பித்தலில் ஏற்படும் குறைபாடுகளைப் போக்கவும், சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/jaffna/advert1.jpg' border='0' alt='user posted image'>

நாவலர் கலாசார மண்டபத்தில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது எந்த வகையில் கலாசாரம் என்று இதற்கான அனுமதியளித்த மாநகர சபையினரும் அதன் நலன் விரும்பிகளும் விளக்கம் தருவார்களா?

பிற்பட்ட காலப்பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களின் தேவை குடாநாட்டில் அத்தியாவசியம் எனக் கருதப்பட்டது. அதாவது பரிசோதனைக் கூடங்கள் எதுவும் பாடசாலைகளில் முற்றாக இயங்காத நிலையில் விஞ்ஞான பாடங்களை சில ஆசிரியர்கள் ரியூசன் கொட்டகையில் கற்பனையில் செய்து காட்டியமை அளப்பரிய சாதனைகளே. சில ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையால் பயன்பெற்றோரில் நானும் ஒருவன். அந்த வகையில் நன்றிக்குரியவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களும் அதன் ஆசிரியர்களும்.

ஆனால் இன்று நிலைமை வேறு, தொடர் போரினாலும், 1995 குடாநாட்டு இடப்பெயர்வினாலும் அதிகளவில் மனதில், பண்பாட்டில், ஒழுக்கத்தில் உறுதிமிக்கவர்களில் பெரும்பாலோனோர் குடாநாட்டை விட்டு வெளியேறவும் மிகுதியாக இருந்தவர்கள் பலமில்லாது போகவும், சமுதாயத்தின் ஒழுங்குமுறைகள் தலைகீழாக மாறத்தொடங்கியது.

முன்னெடுக்கப்படும் ஒரு விடயம், காலம் செல்லச்செல்ல அவற்றில் உள்ள குறைபாடுகள் நீங்கி முற்றிலும் கூர்ப்படைந்து நல்ல நிலைக்கே வருவது வழமை (கூர்ப்புக்கொள்கை). ஆனால் யாழ்ப்பாணத்தில் அனேகமான செயல்கள் இயற்கை விதிகளுக்கே முரணான வகையிலேயே அண்மைக் காலங்களில் மாற்றம் பெற்று வருகின்றன.

ஒரு காலத்தில் (1995ற்கு முன்) அத்தியாவசியமாக கருதப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று, அழகு கலைப்பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைப் பதிவு செய்யும் இடமாக மாறியுள்ளது. ஏககாலத்தில் பாடசாலைப் பாடங்களுக்கான கற்பித்தலும் நடைபெறுவதனால், இந்த மேல்நாட்டு மோகத்தில் தவறிப் போவதும் மாணவர்களே.

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/jaffna/advert2.jpg' border='0' alt='user posted image'>

12.06.2004 குடாநாட்டின் பிரபல பத்திரிகையில் வெளிவந்த விளம்பரங்கள்

அண்மைக் காலமாக புதிது புதிதாகக் குடாநாட்டில் தோன்றிவரும் அழகுப் பயிற்சி மையங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் நிபுணர்கள் என்றும், பெண்களுக்கான பிரத்தியேகமான பயிற்சி என்றும் குடாநாட்டுப் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபார உத்திகள் அதிகமாகவே காணப்படுகின்றது. இவை நம்மில் சிலருக்கு பெருவாரியான பணத்தை அள்ளிக் கொடுப்பதால் தாம் சமுதாயத்திற்கு செய்யும் துரோகத்தனத்தையும் புரிந்தும் புரியாததுபோல் துணை போகின்றனர்.

பெண்கள் தம்மைச்சுழ இருந்த அடிமைத்தளைகளை உடைத்து, பெண்களே படைநகர்த்தி போராடி தங்களது ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கும் காலகட்டத்தில், சில சக்திகள் பெண்களில் காணப்படும் சில பலவீனங்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யவும் சமுதாயத்தை பிழையான வழிகளில் வழிநடத்தவும் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகின்றன. விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பதும், அதன் முனைப்பை கெடுத்து அழித்து கொச்சைப்படுத்த நினைப்பதும் தேசத்துரோகம். சமுதாயத்தை, அங்குள்ள மக்களை பிழையான வழியில் நடத்திச்சென்று சீரழிப்பதும் தேசத்துரோகமே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அதாவது இன்று அழகுப்பயிற்சி, மணப்பெண் அலங்காரம் என்று சொல்பவர்கள் தங்களுக்கு இடையில் போட்டிகள் நடாத்தி பரிசில்கள் கொடுப்பார்கள், பின்பு இங்குள்ள வெளிநாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்தி சமாதானத்திற்காக உலக அழகிப்போட்டி என்று ஏதாவது சொல்லி பெண்களை உலக சந்தைக்கு அனுப்புவார்கள். இவ்வளவும் நடந்தபின்பு தான் இங்குள்ள பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். ஆகவே விபாPதங்களை முளையில் கிள்ளிவிடுதலே நல்ல சமுதாய வாழ்விற்கு ஏற்ற வழி. நல்ல கட்டுக்கோப்பான அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் வாழ்வு காலஓட்டத்தால் கீழ்நோக்கி சென்று மக்களின் வாழ்வு துன்பமடைய கற்றவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

குடாநாட்டு ஊடகங்கள் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டாமல் மௌனம் சாதிக்கின்றது. அத்தோடு நின்றுவிடாமல் இவற்றுக்கு துணைபோகின்றது. (பிரபல பத்திரிகைக் காரியாலயத்திற்கு சொந்தமான கட்டிடத்திலேயே முன்பு பல பயிற்சிகள் நடைபெற்றறதும் குறிப்பிடத்தக்கது.) பெண்கள் சம அந்தஸ்து பெறவேண்டும், பெண்ணடிமை உடைக்கப்பட வேண்டும். அதற்காக அவர்களுக்கு சிறந்த கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வியின் மூலம் சிந்திக்கும் ஆற்றலைப் பெண்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதை உறுதிசெய்வதில், ஒரு சமுதாயத்தின் பெரும்பங்கு ஊடகங்களிடமே இருக்கிறது என்பதை இவர்கள் புரிய மறுப்பதேன்?

பெண்களில் ஏற்படுகின்ற முன்னேற்றமே சமுதாய முன்னேற்றம். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் 10 மாதம் தாயின் கருவறையில் இருந்து பெறுகின்ற உணர்வே அந்தப் பிள்ளையின் உணர்வு. குழந்தை வளர்ப்பிலும் பெண்களே அதிகம் ஈடுபடுவதால் முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களாக பெண்களே கடமையாற்றுவதாலும் தமிழ் சமுதாய எதிர்கால நலன் கருதி பெண்களுக்கான சரியான வழிகாட்டல்கள் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இது இவ்வாறு இருக்க, குடாநாட்டின் கல்வித் தரம் குறைந்து போயுள்ளமையை ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ளார்கள். குடாநாட்டு பெண்களை அழகுபடுத்த எண்ணுபவர்கள், பெண்களை கல்வியில் மேம்படுத்த வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரலாமே? இவர்கள் தங்களது பெண் பிள்ளைகளை இதே வழியில் செல்ல அனுமதிப்பார்களா?

சுய லாபங்களுக்காக தன்இனத்தையோ, சுற்றத்தையோ ஏமாற்ற நினைப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தான் தேசத்துரோகி அல்ல, மக்களின் பலவீனங்களைப் பணமாக்க முயல்பவனும் தேசத்துரோகிதான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

பணம் யாரும் உழைக்கலாம், ஆனால் நுகர்வோன் (குறிப்பாக சிந்தனையில் வறுமைப்பட்டவன்) ஏமாற்றப்படக் கூடாது. எந்த நிறுவனத்திற்கும் தரநிர்ணயம் முக்கியம், இந்த தரநிர்ணயத்தை தமிழர்களை நிர்வகிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

வியாபார உலகில் தரநிர்ணயம் ஒன்றே மக்களை பாதிக்காமல் காப்பாற்றக்கூடியது. வியாபாரத்தில் பாதிப்படையும் மக்களைக் காப்பாற்ற நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் நேர்த்தியாக அமுல்படுத்தப்பட வேண்டும். பலவீனத்தைப் பணமாக்குவது முற்றாக நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும், ஆவன செய்யவேண்டும்.

அழகுப் பயிற்சி நிலையங்களின் வளர்ச்சி அழகுராணிப் போட்டிகள் என்று வளர்ந்து தமிழர்களின் ஆணிவேரிலேயே கைவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை எதற்காக இரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தப் போரில் வெற்றி பெறும்போது நாம் எமக்கிருந்த அழியாத சொத்து, பண்பாடு, கலாச்சாரம், விழுமியங்களை இழந்து இரவல் பண்பாடு, கலாசாரங்களை வலிந்து எமக்குள் இணைத்துக் கொள்பவர்களாக இருந்து விட்டால், எமது போராட்டமே அர்த்தமற்றதாகி விடுமல்லவா? குறுகிய ஆயுள் உடைய நிரந்தரமற்ற வாழ்வில், சந்தோஷமான சமூக வாழ்வே மனித வாழ்க்கை. இதனை நன்கு ஆராய்ந்து அறிந்து உருவாக்கப்பட்டது தமிழர்களின் பண்பாடும், கலாசாரமும்.

ஒளிமயமான சமூகவாழ்வை நோக்கி வெற்றி வேங்கைகளாகப் பயணிக்கும் எம் புரட்சித்தமிழ்ப் பெண்களின் உள்ளங்களைச் சிதைக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கான மூலவேர்களை இனம்கண்டு அப்புறப்படுத்த தமிழ் ஊடகங்கள் விரைந்து செயற்படுமா ...........?

(கலாசார பண்பாட்டுச் சின்னங்கள் அணிவது கலாசாரம், பண்பாடு ஆகிவிடாது. நாம் வாழும் சமூகத்தோடு சேர்ந்து உடைகள், சின்னங்கள் மாறினாலும், சிந்திப்பதும் செயற்படுவதும் தமிழர்களாக இருக்க வேண்டும்).


யாழிலிருந்து குரு... தகவல் மூலம்...tamilnatham.com

Print this item

  எப்படி எழுதுவது என்று தெரியேல்லை!
Posted by: kavithan - 06-17-2004, 02:29 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (35)

ஜயோ!ஆராவது சொல்லங்கோவன்.

[b] இயஙகுதளம் 98 ல் எப்படி யுனிக்கோட்டில் எழுதுவது?


இயங்குதளம் 98 இல் நாங்கள் இயங்குதளம் xp இல் யுனிக்கோட்டை உபயேகிப்பது போன்று உபயோகிக்கலாமா? அப்படியாயின் எவ்வாறு?

மின் அஞ்சல், அரட்டை, இணையத்தளங்கள் என்று எல்லா இடங்களிலும் தமிழை வாசிக்க முடிகிறது ஆனால் அங்கெல்லாம் எழுத முடியவில்லை. wordpadல் கூட யுனிக்கோட் எழுத்துருவைப் பயன்படுத்தி தமிழில் எழுதமுடியவில்லை. என்ன செய்ய இயங்குதளத்தைத்தான் மாற்ற வேணுமா?


கவிதன்

Print this item

  இந்திய உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
Posted by: kuruvikal - 06-17-2004, 02:15 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (11)

நிழல் உலக தாதா கும்பல்களில் "டபுள் ஏஜெண்ட்" என்ற வார்த்தை ரொம்ப பாப்புலர். ஒரு குழுவின் தலைவரிடம் விசுவாசமாக இருப்பது மாதிரி நடித்தபடி, போட்டியாக இருக்கும் இன்னொரு குழுவுக்கு உளவு பார்க்கிறவர்களுக்கு இப்படித்தான் பெயர்.
இந்திய அரசாங்கத்தின் பிரதான உளவுப்படை RAW (Research and Analysis Wing). இதன் மிக முக்கிய பொறுப்பிலிருந்த உயர்அதிகாரி ஒருவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அமெரிக்காவுக்காக உளவு பார்த்திருப்பது தெரிய வந்தது. விஷயம் வெளியில் கசிந்ததும் அந்த அதிகாரி அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட, இப்போது இந்தியா - அமெரிக்க உறவையே இது பாதித்து இருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், உச்சகட்ட டென்ஷன் அடைந்து கிடப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமரின் ஆலோசகர்கள் எம்.கே.நாராயணன், ஜே.என்.தீட்சித், ---RAW---- நிறுவனத்தின் தலைவர் சகாய் ஆகியோர் படுகவலையோடு இந்த விவகாரம் பற்றி விவாதித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த தேச துரோக அதிகாரியின் பெயர் ரவீந்திரசிங். RAW அமைப்பில் இணை செயலாளராக பதவி வகித்தவர். அவரது அலுவலக அறையில் இருந்த ஜெராக்ஸ் மெஷின் இருபது வருடங்களாக ஓவர்டைம் வேலை பார்த்திருக்கிறது. புதுடெல்லியின் லோதி ரோட்டில் இருக்கும் RAW தலைமை அலுவலகத்தில் அந்தஸ்தான பதவியிலிருந்த ரவீந்திரசிங் 'எதையெல்லாம் ஜெராக்ஸ் பிரதியெடுத்து அமெரிக்காவுக்கு கொடுத்திருக் கக்கூடும்?' என்று பட்டியல் போட்டுப் பார்த்து அதிர்ந்துபோய்விட்டனர் பல அதிகாரிகள்.

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரத்துக்காரர் இந்த ரவீந்திரசிங். இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்தவர். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோயிலில் தீவிரவாதிகளை அழிக்க ராணுவம் நுழைந்தபோது அதில் தீவிரமாக பங்கு பெற்றவர். அடுத்த சில நாட் களிலேயே அமெரிக்க ராணுவ ரகசியங்கள் தொடர்பாக சில முக்கிய டாகுமெண்ட் களை இவர் எங்கிருந்தோ சுட்டுக்கொண்டு வந்துதர, அப்போதுதான் 'ரா' அமைப்பின் பார்வை இவர் மீது விழுந்தது. 'உளவு பார்ப்ப தில் கில்லாடியான ஆள்' என்று நினைத்து 'ரா' அமைப்பு இவரை ராணுவத்திலிருந்து தங்கள் துறைக்கு இழுத்து உயர்பதவி கொடுத்தது.

ஆனால், அதன் பின்னணி இப்போதுதான் தெரிகிறது. 'ரா' நிறுவனத்தின் உள்ளே நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள வழி தெரியாமல் அமெரிக்கா தவித்து வந்தது. அதனால் சி.ஐ.ஏ. நிறுவனமே அந்த டாகுமெண்ட்களைக் கொடுத்து, ரவீந்திரசிங்கை பெரிய துப்பறியும் புலி மாதிரி காட்டி 'ரா'வில் சேர வழி செய்து கொடுத்ததாக இப்போது தெரிய வந்திருக்கிறது.

'ரா' அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் ஆபீஸிலிருந்து வீடு திரும்பும் போது கடுமையாக சோதிக்கப்பட்டுதான் வெளியேறுவார்கள். தங்கள் சொந்த பொருட்களைத் தவிர வேறெதையும் அவர்கள் எடுத்துப் போக முடியாது. அவர்கள் எங்கிருந்தாலும் போனில் பேசுவது, பேக்ஸ் அனுப்புவது எல்லாமே கண்காணிக்கப்படும். டெல்லியின் டிஃபன்ஸ் காலனி பகுதியில்தான் நிறைய பேருக்கு வீடு. இவர்களது வீடுகளைக்கூட இன்னொரு மத்திய அரசின் உளவு நிறுவனமான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பார்கள். சி.ஐ.ஏ வின் டைரக்டர் ஜார்ஜ் டெனெட், சி.ஐ.ஏ. ஆபரேஷன்ஸ் டைரக்டர் ஜேம்ஸ் பாவிட் என கடந்த வாரம் இரண்டு பேர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. 'இந்தியாவை சரியாக உளவு பார்க்கவில்லை' என ஒரு விசாரணை கமிஷன் குற்றம் சாட்டவேதான் இந்த ராஜினாமா.

இந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது 'கடந்த 98ம் ஆண்டு இந்தியா அணுகுண்டு வெடித்ததை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாதது.'

என்னதான் ரஷ்ய நெருக்கத்தை உதறிவிட்டு, அமெரிக்கா மீது இந்தியா பாசம் காட்டினாலும், தொடர்ந்து சந்தேகக் கண்ணோடுதான் இந்தியாவை பார்க்கிறது அமெரிக்கா. சி.ஐ.ஏ. தீவிர கண்காணிப்பு காட்டும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று!

'ரா' நிறுவனத்துக்குள் ஊடுருவிவிட்டால் போதும்... இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சிஐ.ஏ. சுலபமாக தன் கழுகுப் பார்வைக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்றுதான் 'ரா'வை வளைத்தபடியிருக்கிறது அமெரிக்கா.

இதற்கு அமெரிக்கா ஒரு அதிரடி டெக்னிக்கை வைத்திருக்கிறது. 'ரா' உயர்அதிகாரிகளின் வாரிசுகளாக தேடிப்பிடித்து, அமெரிக்காவில் படிக்கவோ, வேலைபார்க்கவோ வாய்ப்புகளை உருவாக்கித்தந்து, உடனே விசா கொடுத்து அங்கேயே செட்டிலாக வைக்கிறார்கள். அவர்களை வைத்து அப்பாவை வளைக்கிறார்கள். அப்பா ஒருவேளை உடன்படாவிட்டால் வாரிசு அங்கே நீடிக்க முடியாதாம். விசாவை நீட்டிக்காமல் ஏதாவது காரணம் சொல்லி திரும்பவும் இந்தியாவுக்கு துரத்திவிடுவார்களாம். ரவீந்திரசிங்கின் மகள் அமெரிக்காவுக்கு படிக்கப் போய் அங்கேயே கல்யாணம் செய்து செட்டிலாகி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது....!

நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களைக் கையாளும் இவர்கள் தேச துரோகிகள் ஆகிவிடக்கூடாதே என்ற கவலைதான் இதற்கு காரணம். அப்படி ஏற்கெனவே பலர் மாட்டியும் இருக்கிறார்கள். 'ரா' உயர் அதிகாரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி ஒருவரோடு ஜெய்ப்பூரில் உல்லாச விடுதி ஒன்றில் இருந்ததை, ஐ.பி. அதிகாரிகள் விடியோ எடுத்து, அதை வைத்து அவர் 'டபுள் ஏஜெண்ட்' ஆனதை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். இன்னொரு அதிகாரியும் இதேபோல் சென்னை மெரீனா பீச்சில் வைத்து, அமெரிக்க அதிகாரி ஒருவரோடு பேசியதை விடியோ எடுத்து மடக்கப் பட்டார். இப்படி மாட்டும் 'ரா' அதிகாரிகள் லேசில் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதற்காகவே விடியோ எடுக்கப்படுகிறது.

'ரா' தலைமையகத்தில் கடுமையான சோதனை இருந்தாலும், இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேல் இருக்கும் யாரையும் சோதிப்பதில்லை. உயர் அதிகாரிகள் தப்பு செய்யமாட்டார்கள் என்ற எண்ணமும் மிகமேல் மட்டத்தில் சந்தேகப்படுவது சரியல்ல என்ற நாகரிகமும்(?)தான் காரணம். ரவீந்திரசிங்குக்கு இதுவே வசதியாகி விட்டது. பல டாகுமெண்ட்களை தனது அலுவலக அறையில் இருக்கும் ஜெராக்ஸ் மெஷினிலேயே copy செய்து, வீட்டுக்கு கொண்டு போய் வைத்துவிடுவார். இவருடைய அமெரிக்க உறவினர் ஒருவர் அவ்வப்போது, நேரடி விசிட் அடித்து டாகுமெண்ட்களைக் கையோடு அமெரிக்கா எடுத்துப்போய் விடுவார். இதனால், எந்த சந்தேக வலையிலும் சிக்காமல் அவர் தப்பி வந்திருக்கிறார். 'ரா' நிறுவனத்தின் எல்லா வேலைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் அண்டை நாடுகளில் நிலவும் அரசியல் சூழ்நிலை. விடுதலைப் புலிகள், நேபாள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் போன்ற கலகக்குழுக்கள் பற்றிய விவரம், அங்கெல்லாம் நடக்கும் கவிழ்ப்பு முயற்சிகள், அந்நிய நாடுகளின் உளவுப்படைகளின் ஊடுருவல் என எல்லாவற்றையும் கண்காணித்து அறிக்கை தருவார்கள். சில சமயங்களில் 'ரா' அமைப்பே கூட இந்தியாவின் பாதுகாப்பு கருதி சதிவேலைகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுவது உண்டு.

இதுபோன்ற முக்கிய ஆவணங்கள் --- RAW .....நிறுவனத்தின் டைரக்டர், பிரதமர், பாதுகாப்பு செயலாளர் போன்ற வர்களைத் தவிர யார் பார்வைக்கும் போகாது. இப்படிப்பட்ட ஆவணங் களைப் பாதுகாக்கும் Ԧ#2992;ாՠதலைமையக அதிகாரிகள் பலரைக் கைக்குள் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் பிரதி எடுத்து சி.ஐ.ஏ. கையில் ரவீந்திரசிங் கொடுத்திருக்கக்கூடும் என்று தற்போது பீதியடைந்திருக்கிறது மத்திய அரசு.

இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இவர் மீது முதல் சந்தேகப்புள்ளி விழுந்தது. ரவீந்திரசிங் அப்போது பொறுப்பு வகித்தது, Ԧ#2980;ூரக்கிழக்கு ஆசிய நாடுகள்ՠசெக்ஷனில். ஆனால், அவருக்கு சம்பந்தமில்லாத இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பணிபுரியும் பல அதிகாரிகள் டெல்லி வரும்போது அவர்களைக் கூப்பிட்டு ஏகப்பட்ட கேள்விகள் கேட்டிருக்கிறார். உயர் அதிகாரி கேட்கிறாரே என்று அவர்களும் தகவல்கள் சொன்னார்கள். இது ஏதோ இன்டர்வியூ மாதிரி தினசரி தொடர்கதையாக, இவரது இந்த ஆர்வம் குறித்து RAW டைரக்டர் சகாய்க்கு தகவல் போனது.

உடனே ரவீந்திரசிங்கின் எல்லா போன்களும் RAW வால் டேப் செய்யப்பட்டன. ஆனால், எதுவும் சிக்கவில்லை. அவர் யார் யாரைச் சந்திக்கிறார் என்று கண் காணித்தனர். ஆனால், மனிதர் ஆபீஸ் விட்டால் வீடு... வீட்டில் கிளம்பினால் ஆபீஸ் என்று படு சமர்த்தாக இருந்தார்.

இவர் ஏதோ தப்பு செய்கிறார். ஆனால், என்ன செய்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த 'ரா' மேலிடம், விஷயத்தை ஐ.பி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. ஐ.பி. அதிகாரிகள் ரவீந்திரசிங்கின் அலுவலகத்தை அதிரடியாகக் கண்காணித்து, அவர் முக்கிய டாகுமெண்ட்களை ஜெராக்ஸ் எடுப்பதை விடியோ படமாகவே எடுத்து விட்டனர். ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி இது 'ரா' டைரக்டர் கவனத்துக்குப் போக, அன்று 'டைரக்டர் உள்ளிட்ட எல்லோரையும் வீட்டுக்கு போகும்போது சோதனை போடுங்கள்' என்று அவரே உத்தரவு போட்டார். ஆனால், விஷயம் ரவீந்திரசிங்குக்கு முன்கூட்டியே தெரிந்துவிட, அன்று சோதனை போட்டபோது அவரது காரில் இருந்தது தண்ணீர் பாட்டிலும், காலி சாப்பாட்டு கேரியர் மட்டும்தான். தனக்காகத்தான் இந்த சோதனை என்பதை உணர்ந்துகொண்ட அவர் மறுநாளே, 'அமெரிக்காவிலிருக்கும் என் மகளைப் பார்க்கப் போகிறேன்' என்று காரணம் சொல்லி லீவ் கேட்டார். ஆனால், உடனே அவரது லீவ் லெட்டர் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கடுமையான கண்காணிப்பு! ஆபீஸில், வீட்டில், போகும் வழியில் என எங்கும் ஐ.பி. அதிகாரிகள் அவரைத் தொடர்ந்தார்கள். எந்த நிமிடமும் தான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்பது புரிந்தது அவருக்கு. ஏப்ரல் 30 இரவு... டிஃபன்ஸ் காலனியில் இருக்கும் வீட்டுவாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போன அவர் உடனே படுக்கை அறைக்குள் நுழைந்தார். அவர் தூங்கி விட்டார் என நினைத்து வெளியே கண்காணித்த ஐ.பி. அதிகாரிகள் அசட்டையாக இருக்க, தன் மனைவியுடன் பின்பக்க வழியாக எகிறிக்குதித்து வெளியேறிய அவர், தயாராக இருந்த மைத்துனர் காரில் ஏறி நேபாள எல்லைக்குப் பறந்தார். அவருக்கு அமெரிக்க பாஸ்போர்ட்டும், விசாவும் வைத்துக்கொண்டு சிஐ.ஏ. ஏஜெண்டுகள் தயாராக இருக்க, உடனடியாக அமெரிக்காவுக்கும் பறந்துவிட்டார். இப்போது அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் ரவீந்திரசிங் குடும்பம் வைக்கப் பட்டிருக்கிறதாம்.

கிட்டத்தட்ட ஒருமாத காலம் இந்த விஷயம் 'ரா' அதிகாரிகளால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த வியாழக்கிழமைதான் பிரதமர் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு, ரவீந்திரசிங் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஏகப்பட்ட மர்மமான கேள்விகள் எழுகின்றன. ரவீந்திரசிங் டபுள் ஏஜெண்ட் ஆக இருக்கிறார் என்பது தெரிந்தும் ஏன் அவர் தப்பி ஓடும் வரை அசந்து இருந்தனர்? 'ரா'வில் இன்னும் நிறைய பேர் அவருக்கு உடந்தையாக இருந்திருப்பார்களோ? என்ற சந்தேகம் ஐ.பி. அதிகாரிகளுக்கு இருக்கிறது. இதற்கு காரணமும் சொல்கிறார்கள். வழக்கமாக சிஐ.ஏ வுக்காக உளவு பார்த்த இந்திய அதிகாரிகள் மாட்டிக் கொண்டால் அவர்களை அமெரிக்கா 'அம்போ'வென்று விட்டுவிடும். ஆனால், ரவீந்திரசிங்குக்கு அமெரிக்க குடியுரிமை உட்பட ஸ்பெஷல் உபசரிப்பு. இதற்குக் காரணம்.. மேற்கொண்டு, அவர் அமெரிக்காவில் இருந்தபடி இந்திய 'ரா' அதிகாரிகளை ஆட்டிப்படைத்து அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பார் என்பதுதானாம்!

இனி ரவீந்திரசிங்கின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்று கேட்டால், அவரை 'ரா' தனது கண்காணிப்பு பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கிறது. 'ரா' ஏஜெண்டுகள் அமெரிக்காவில் தேடுதல் வேட்டை நடத்துவார்கள். அவர் சில நாட்களில் மாட்டலாம்... பல வருடங்கள் ஆகலாம். ஆனால், என்றாவது ஒருநாள். முன்னாள் இந்திய அதிகாரி அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுடப்பட்டுக் கொலை என்று பேப்பரில் நியூஸ் வரும் என்றபடி கண்சிமிட்டுகிறார் 'ரா' உயர் அதிகாரி ஒருவர். தேசபக்தி என்றால் "கிலோ என்ன விலை?" என்று கேட்கும் இந்த மாதிரி ஆசாமியை அடையாளம் கண்டுபிடிக்கவே இருபது வருடம் ஆகியிருக்கிறது என்றால், இந்தியா எங்கு உளவு பார்த்து என்னதான் புண்ணியம்?!

Courtecy: ஜூ.வி.க்ரைம் டீம் & sooriyan.com

Print this item

  செல்லிடப்பேசியிலும் வைரஸ்....!
Posted by: kuruvikal - 06-17-2004, 01:47 AM - Forum: இணையம் - Replies (22)

<img src='http://www.s60.at/hardware/hwpics/6600.jpg' border='0' alt='user posted image'>
(Image from friend paranee)

ஏன் இரண்டு நாளா பேசல்ல?"
"தொண்டைல, சாரி, செல்போன்ல வைரஸ் தொல்லை"

இப்படியான உரையாடலை நீங்கள் கேட்கும் நாள் வந்துவிட்டது. ஜூன் 15, 2004 வரலாற்றில் இடம்பெறுகிறது. செல்பேசிகளுக்கான முதல் வைரஸ் இன்றைக்குப் பரவிக்கொண்டிருக்கிறது. சிம்பியன் இயக்கு தளத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கியா ப்ளூடூத் செல்பேசிகளில் பரவும் இந்த வைரஸின் பெயர் கபிர்.

பாதிக்கப்பட்ட செல்பேசிகளின் திரைகளில் "caribe" என்ற எழுத்துக்களைக் காட்டிவிட்டு சமர்த்தாக உள்ளேபோய் உட்கார்ந்துகொள்ளும் இந்த வைரஸ் தனக்கு அருகில் வரும் பிற ப்ளூடூத் சிம்பியன் இயக்குதள செல்பேசிகளிலும் பரவி உட்கார்ந்து கொள்ளும். மற்றபடி எந்தவிதமான அதிகப்படி பாதிப்புகளையும் தரவில்லை என்று நம்பப்படுகிறது. இது செல்பேசிகளுக்கும் வைரஸ் எழுதமுடியும் என்று கொள்கைபூர்வமாக நிரூபிக்கத் தயாரிக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்.

இதுவரை இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு நிரலியும் கிடையாது.

ம்ம்ம்.. முக்கியமான விஷயம். இது ப்ளூடூத் மூலம் பரவுவதால் விரைவில் இது அந்த வசதிகொண்ட அச்சுப்பொறி, காமெரா, அலகி, நேற்று நான் எழுதிய உலகளாவிய இடங்காட்டி என்று விரைவில் பரவும் என்று எதிர்பார்க்கலாம். வாருங்கள், வைரஸ்கள் வியாபித்த உலகிற்கு.

--------------------------
<i>வெங்கட்ரமணன் - ஒரு நாடோடியின் வடதுருவ வலைக்குறிப்புகள்</i>

Sooriyan.com

Print this item

  கவனம் - செல்பேசி வைரஸ்
Posted by: AJeevan - 06-17-2004, 01:33 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

"ஏன் இரண்டு நாளா பேசல்ல?"

"தொண்டைல, சாரி, செல்போன்ல வைரஸ் தொல்லை"

இப்படியான உரையாடலை நீங்கள் கேட்கும் நாள் வந்துவிட்டது. ஜூன் 15, 2004 வரலாற்றில் இடம்பெறுகிறது. செல்பேசிகளுக்கான முதல் வைரஸ் இன்றைக்குப் பரவிக்கொண்டிருக்கிறது. சிம்பியன் இயக்கு தளத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கியா ப்ளூடூத் செல்பேசிகளில் பரவும் இந்த வைரஸின் பெயர் கபிர்.

பாதிக்கப்பட்ட செல்பேசிகளின் திரைகளில் "caribe"
http://www.news.com.au/common/story_page/0...0%255E2,00.html
என்ற எழுத்துக்களைக் காட்டிவிட்டு சமர்த்தாக உள்ளேபோய் உட்கார்ந்துகொள்ளும் இந்த வைரஸ் தனக்கு அருகில் வரும் பிற ப்ளூடூத் சிம்பியன் இயக்குதள செல்பேசிகளிலும் பரவி உட்கார்ந்து கொள்ளும். மற்றபடி எந்தவிதமான அதிகப்படி பாதிப்புகளையும் தரவில்லை என்று நம்பப்படுகிறது. இது செல்பேசிகளுக்கும் வைரஸ் எழுதமுடியும் என்று கொள்கைபூர்வமாக நிரூபிக்கத் தயாரிக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்.

இதுவரை இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு நிரலியும் கிடையாது.

ம்ம்ம்.. முக்கியமான விஷயம். இது ப்ளூடூத் மூலம் பரவுவதால் விரைவில் இது அந்த வசதிகொண்ட அச்சுப்பொறி, காமெரா, அலகி, நேற்று நான் எழுதிய உலகளாவிய இடங்காட்டி என்று விரைவில் பரவும் என்று எதிர்பார்க்கலாம். வாருங்கள், வைரஸ்கள் வியாபித்த உலகிற்கு.

* * *
செல்பேசி இயக்குதளங்கள் பற்றிய என்னுடைய முந்தைய குறிப்புகள்.

1. என் டி டி (ஜப்பான்) தோகோமோவை லினக்ஸ் இயக்கவிருக்கிறது
http://www.tamillinux.org/venkat/myblog/ar...ves/000125.html

2. இயக்குதள உலகின் முடிசூடா மன்னன் - ட்ரான் பதி தளம்
http://www.tamillinux.org/venkat/myblog/ar...ves/000078.html

Thanks
http://www.tamillinux.org/venkat/myblog//

Print this item

  இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்.........
Posted by: AJeevan - 06-16-2004, 01:10 PM - Forum: குறும்படங்கள் - Replies (6)

[size=15]<b>இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்.......... </b>

அமெரிக்காவின் நியூஜெர்சியில் சிந்தனை வட்டம் சார்பில் நடைபெற்ற குறும்பட விழாவில் சுவிசில் தயாரான "நிழல் யுத்தம்" குறும்படம் காண்பிக்கப்பட்ட போது பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட மொழி பிரச்சனைகள் தொடர்பாக விமர்சனங்கள் வந்திருந்தன.

அவர்களது பிரச்சனை மற்றும் அதற்கான எனது பதிலும் இடம் பெறுகின்றது. இதைவிட வேறு கருத்துகளும் இருக்கலாம். தெரிந்தால் எழுதுங்கள் வளரும் புலம் பெயர் தமிழ் சினிமாவுக்கு பிரயோசனமாகலாம்....................

அன்புடன்
AJeevan
info@ajeevan.com
www.ajeevan.com
http://ajeevan.blogspot.com/
_______________________________________________________

நிழல் யுத்தம் என்று அஜீவன் இயக்கத்தில் ஒரு படம் திரையிடப்பட்டது. அற்புதமான ஒளிப்பதிவு..பல காட்சிகளில் 'லைட்டிங்' பிரமாதமாய் இருந்தது. ஆனால் படத்தொகுப்பு சுமாராய்த் தான் இருந்தது. இலங்கைத் தமிழ் வசனங்கள் படம் முழுதும் நிரம்பியிருந்ததால்..ஒன்றுமே புரியவில்லை (?!) அதற்கான சப்டைட்டில்களும் சுவிஸ் மொழியில் போட்டதால், போச்ச்ச்ச்! எனினும், இவரின் முயற்சி பாராட்டப் பட வேண்டியது. வேகமானப் படத்தொகுப்பு மற்றும் கதையில் கவனம் இன்னும் செலுத்த வேண்டும்.
'There are signs of great talent'!

http://arunviews.blogspot.com/
______________________________________________________________________

Shadow fight: நிறைய வசனம் புரிய வில்லை. புரிந்த வசனங்கள் படு ஜோர். காட்சியமைப்பு, எடிட்டிங், ஓளிப்பதிவு எல்லாமே ப்ரொபெஷனல் ரகம். இயக்குநர் அஜீவன் குறித்து அதிகம் அறியேன். ஆனால், நிச்சயம் நிறையப் பேசப்படுவார். கணவன் - மனைவி உறவில் ஓடும் மெல்லிய இழைகளை ஆர்பாட்டமில்லாமல் மனதில் தைக்கிறார்.

http://etamil.blogspot.com/2004/06/blog-po...3808935000.html
_____________________________________________________________
அன்புள்ள அஜீவன்,

வணக்கம். தங்கள் மடலுக்கு நன்றிகள். தங்களின் Shadow Fight பார்த்தேன்.
ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, லைட்டிங், எடிட்டிங் எல்லாம் அருமை.
Professional Touch இருந்தது. வந்திருந்த குறும்படங்களிலேயே
தொழில்நுட்பத்தில் சிறந்த படமாகத் தங்கள் படம் இருந்தது என்பேன்.
Shadow Fight படத்தின் கதையும் நல்ல கரு. இலங்கைத் தமிழுக்கு நான்
புதியவன் என்பதால் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனாலும், ஜெர்மன்
ஓரளவு தெரிந்த நண்பர் ஒருவர் ஜெர்மன் சப்-டைட்டில்களைப் பார்த்துப் புரிந்து
கொண்டு பார்வையாளர்களுக்கு படத்தை அறிமுகம் செய்யும்போது படம் குறித்து
விவரித்தார். அது மிக உதவிகரமாக இருந்தது. உங்களிடம் நிறைய திறமை
இருப்பது தெரிகிறது. தொடர்ந்து நிறைய படங்கள் எடுங்கள்.

அன்புடன்,
பி.கே.சிவகுமார்
pksivakumar@yahoo.com
_____________________________________________________________________
அன்புடயீர்,

தங்கள் மடலுக்கும், வாழ்த்துக்கும், மனம் திறந்து கூறியிருக்கும் விமர்சனத்துக்கும் நன்றிகள்.

இலங்கைத் தமிழர்களது பேச்சுகளை, இந்திய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,இலங்கைத் தமிழை, குறும்படத்தில் இடப்பட்டிருந்த ஜேர்மன் மொழி உப தலைப்பின் வழி, இன்னுமொரு தமிழர் மொழி பெயர்க்க வேண்டி வந்தது வியப்பாக இருந்தாலும், சுவிஸ் போன்ற ஒரு நாட்டுக்குள், புலம் பெயர்ந்து வாழும் போது, இது எனக்கு வியப்பாக இல்லை.

ஏனைய மொழிகளிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

இருந்தாலும் இது ஒரு முக்கிய விடயமாகப்பட்டதால் இதுபற்றி எழுதுவதும், கருத்துகளை பகிர்ந்து கொள்வதும், பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

எனவே நான் வாழும் நாட்டிலிருந்து இவ்விடயத்தை அலச முயல்வது எனக்கு இலகுவாக இருக்கிறது.

சுவிசின் முக்கிய மொழிகளாக ஜேர்மன்,(German) பிரென்ஜ்,(Franch) இத்தாலி (Italy), ரொமானிஸ்(Romanish), ஆகிய மொழிகள் பேசப்படுவதோடு, அரசு ஆளும் முக்கிய பகுதிகளாக, ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி பகுதிகள் என ஆட்சியாளர்களால் பிரித்தாளப்படுகின்றன.

சுவிசில் ஜேர்மன் மொழி, ஒரு பகுதியின் மிக முக்கிய ஆட்சி மொழியாகும்.

அது போலவே அண்டை நாடுகளான, ஜேர்மன்(Germany) ஒஸ்ரியா (osterreich) ஆகிய நாடுகளில் ஜேர்மன் மொழி, ஆட்சி மொழியாகும்.

இருப்பினும், சுவிஸ்-ஜேர்மன் மொழித் திரைப்படங்களை, ஜேர்மனியிலுள்ள அல்லது ஒஸ்ரிய மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
(<i>இதுவும் ஜேர்மன் மொழிதான் இருப்பினும் இலங்கைத் தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் இடையேயிருப்பது போன்ற பேச்சு வழக்கு முறையான பிரச்சனை இருக்கிறது</i>.)

சுவிசில் தயாராகும் சுவிஸ்-ஜேர்மன் திரைப்படங்கள், எழுத்து மொழியிலான ஜேர்மன் உப தலைப்புகளுடன்தான், (சப்டைட்டில்) அவர்களுக்கு, திரையிடப்படுகின்றன.

ஆனால் ஜேர்மன் திரைப்படங்களை, சுவிஸ் ஜேர்மன் மக்களால் இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம், பேச்சு தமிழ் போல, பேச்சு ஜேர்மன் ஒயில்கள் மாறுபட்டாலும், பாடசாலைகளில் கற்பிக்கும் எழுத்து ஜேர்மன் மொழி ஒன்றாக இருப்பதேயாகும்.

ஆனால் இவை எமது விடயத்தில் முழுமமையாக ஒத்துவருவதில்லை.

இந்திய தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்குமிடையே, பெரியதொரு புரிந்து கொள்ள முடியாத தன்மையிருக்கிறது.

இந்தியத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள், ஆங்கிலம் கலந்த தமிழையே பேசுகிறார்கள். இலங்கைத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தவிர்த்து, பெரும்பாலனவர்கள் பேசும் தமிழில் ஆங்கலத்தைக் கலப்பதில்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூட, இலங்கையின் மற்றுமொரு பிரதேசத்தில் வாழும் தமிழர்களது பேச்சுத் தமிழையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தென்னிந்தியாவிலும் இந்நிலை இருக்கிறது. இருப்பினும் தமிழ் சினிமாவின் தாக்கத்தால் அது பெரிதாகப் புலப்படுவதில்லை.

இந்திய தமிழர்களைப் போலவே இலங்கைத் தமிழர்களுக்கும் இருந்த ஒரு முக்கிய பொழுது போக்கு சினிமாதான். ஆரம்பம் தொட்டே இந்திய தமிழ் சினிமா இலங்கைத் தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் இந்தியத் தமிழை இலங்கைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இலங்கை தமிழ் சினிமா , இலங்கையிலேயே தோல்வியடைந்ததாலும், பெரும்பாலான இலங்கை தமிழ் சினிமாக்கள், இந்திய தமிழ் சினிமா தமிழையே பேசியதாலும், வேறு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்குக் கூட இலங்கைத் தமிழ் சென்றடையவில்லை அல்லது இலங்கை தமிழ் கடல் கடந்து செல்லவில்லை.

இலங்கைத் தமிழர்கள் கடல் கடந்தாலும், இலங்கையில் இருந்த நிலையே தொடர்கதையாகியது. இலங்கை மற்றும் புலம் பெயர் தமிழ் வானோலி-தொலைக் காட்சிகளில் கூட நாடகத் தமிழ் அல்லது மேடைத் தமிழ் வசனங்களை இவர்கள் பேசத் தலைப்பட்டனரே தவிர அதை மாற்றிக் கொள்ள எவரும் முன் வரவில்லை.

பெரும் பாலான புலம் பெயர் திரைப்படங்கள் கூட, சினிமா தமிழையே உச்சரித்தன. அத் திரைப்படங்கள் கூட ஒரு வரையறைக்குள் எம்மவரால் முடக்கப்பட்டன. இலங்கையிலோ புலம் பெயர் நாடுகளிலோ இலங்கை தமிழர்களால் தயாரிக்கப்பட்ட எத்தனையோ படைப்புகள் அவரவர் பெட்டிகளுக்குள் பிணமாகிக் கிடப்பதற்கு அது சம்பந்தப்பட்டவர்களும், ஊடகங்களும், வியாபாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

அண்மையில் நான் எழுதி-இயக்கி-ஒளிப்பதிவு செய்த குறும்படத்தை திரைப்பட விழாக்களுக்குக் கூட அனுப்ப முடியாமல் ஆக்கியதற்கு தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதாக மேடைகளில் முழங்கும் தயாரிப்பாளர் காரணமாயிருப்பது வேதனை தருகிறது. ஆதி முதல் இலங்கை தமிழ் சினிமா வளராமல் இருப்பதற்கு மட்டுமல்ல ஒருவருக்கும் போய் சேராமல் போனதற்கும் இப்படியானவர்களே காரணம். . . . . . . .

இலங்கை தமிழர்களது பிரச்சனைகளை இந்திய தமிழ் இயக்குனர்கள் கொண்டு வர முயன்றாலும், சினிமா என்ற வகையில் இந்திய தமிழர்களிடையே வெற்றி பெற்றாலும், இலங்கை தமிழர்களால் அத்திரைப்படங்கள் தங்களைப் பற்றிச் சொல்கின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அக்கதாபாத்திரங்கள் கூடப் பேசிய தமிழ், இலங்கைத் தமிழோ அல்லது சிங்களமோ அல்ல. மலையாளத் தமிழும் மலையாளம்-தெலுங்கு-கன்னடம் கலந்த சிங்களமுமேயாகும். இதைச்சொல்லக் கூட பலரால் முடியாததற்கு காரணம் அந்த மொழிகள் பற்றிய தெளிவில்லாமையேயாகும்.

இலங்கை தமிழ் பிரச்சனையை மையமாக்கிய ஒரு படத்தில், பிரகாஷ்ராஜ் பேசும் ஒரு வசனம் என்னை உலுக்கியதற்கு காரணம், அது "ஒரு குழந்தையை படுக்கை அறைக்கு அழைப்பதாக........." பேசப்பட்டிருந்ததேயாகும்.

அதை மொழி பெயர்த்தவரோ இயக்குனரோ அதை உணர வாய்ப்பில்லை.

ஓரு வார்த்தையை மொழி பெயர்க்கும் போது அது சரியாகத் தோன்றினாலும் அந்த (சிங்கள) வார்த்தை பாவிக்கப்படும் இடம்-தொனி காரணமாக படுக்கைக்கு அழைப்பதான கருத்தைத் தருகிறது.

இது போன்ற விடயங்கள் தெரிவதற்கு, மேடைகள் தேவை.......... விமர்சனங்கள் தேவை..........

அதற்கான தளத்தை நியுஜெர்சியில் நடைபெற்ற, சிந்தனை வட்டம் குறும்பட விழா வழி செய்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

இலங்கை தமிழர்களதும், புலம் பெயர் தமிழர்களதும் பிரச்சனைகள் வெளிவர ஒன்றிரண்டு குறும்படங்கள் மட்டும் போதாது. முழு நீளப்படங்களும், அத்துடன் கூடிய உப தமிழ் தலைப்புகளும் இருந்தாலன்றி இவை உலக அரங்குக்கல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகத்துக்குக்கே கூட, போய் சேர வாய்ப்பில்லை. . . . . . . .

ஒரு சமூகத்தின் மொழி-கலை-பண்பாடுகள் பரவ கலைகள் அதுவும் சினிமாக்கலை எவ்வகையான பங்கை வகிக்கிறது என்பது இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழ் ஊடகங்களுக்கும் புரியுமா?

பணிவன்புடன்
அஜீவன்
http://ajeevan.blogspot.com/
info@ajeevan.com

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........

Print this item