![]() |
|
யாழ் மண்ணிலிருந்து சமாதனச் சுருள். . . . . - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: யாழ் மண்ணிலிருந்து சமாதனச் சுருள். . . . . (/showthread.php?tid=7035) |
யாழ் மண்ணிலிருந்து சம - AJeevan - 06-17-2004 <img src='http://scriptnet.org.uk/images/filmstrip_b5.jpg' border='0' alt='user posted image'><img src='http://scriptnet.org.uk/images/filmstrip_b4.jpg' border='0' alt='user posted image'><img src='http://scriptnet.org.uk/images/filmstrip_t2.jpg' border='0' alt='user posted image'> இலங்கைத் தமிழ் கலைஞர்களின், திரைக்கலையை சர்வதேச தரத்துக்கு ஒப்பாக்குவதற்கான அறிகுறிகள் கொண்ட 7 குறும்படங்கங்கள் யாழ் மண்ணிலிருந்து, போருக்கு பின் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கின்றன. இக் குறும்படங்கள் , ஸ்கிரிப்ட் நெட் எனும் பிரித்தானிய நிறுவனத்தின் தலைமையின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு, உருவாகியிருக்கின்றன. இயக்குனர்களுக்கான பயிற்சியை, பிரிட்டிஸ் திரைப்பட இயக்குனர் நொயெலா ஸ்மித் அவர்களும் ,தயாரிப்பாளருக்கான பயிற்சியை சிங்கள இயக்குனரான இரன்தி அபேசிங்க ஆகியோரும் நடாத்தியுள்ளனர். ஸ்கிரிப்ட் நெட் எனும் அரசு சாரா தொண்டர் நிறுவனம், போர் ஓய்வு காலத்தில் <b>REEL PEACE</b> "சமாதனச் சுருள்" எனும் திட்டத்தின் கீழ் வடபுலத்தில் யுத்தம் காரணமாக மககள் அனுபவித்த கொடுமைகளையும், போரினால் விளைந்த கோர யதார்த்தங்களையும் 7 குறும்படங்களாக சிங்கள-தமிழ் கலைஞர்களின் பங்களிப்புடன் சித்தரித்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இதயங்களைப் பற்றி திரையில் பேசி மனதை உலுப்பும் யதார்த்தமான படைப்புகளாகவே இவை வந்திருக்கின்றன. இப்படைப்புகளை சிங்கள கலைஞர்களும் யாழ்-வன்னிக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். தற்போது சுவிஸ் வந்திருக்கும் <b>REEL PEACE </b>, யாழ் திட்ட இணைப்பாளரும் <b>அழுத்தம்</b> குறும்பட இயக்குனருமான கா.ஞானதாஸ் மற்றும் <b>போருக்குப் பின்</b> இயக்குனர்: ஜெயரஞ்சனி ஞானதாஸ் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக <b>1மணி 30 நிமிடங்கள்</b> ஓடக்கூடிய இக் குறும்படங்களைத் திரையிடப்படவுள்ளது. <b> சுவிஸ் மூவி மற்றும் சுவிஸ் ஊடகங்களுக்கான திரையிடல்: ஓல்ட்டன் நகரில் 30.07.2004 - 20.00hrs to 22.45hrs), <span style='color:red'>உங்கள் கவனத்துக்கு:- இத் குறும்படத்துக்கான திரையிடல் சுவிஸ் சினிமாத்துறை மற்றும் ஊடகவியலாளருக்கானதாக இருந்த போதிலும் ஒரு சிலரின் வேண்டுகோளுக்கிணங்க ஏனையோரும் திரையிடலில் கலந்து கொள்ள அனுமதிப்பது என்று முடிவாகியுள்ளது. கண்டிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (இக் குறும்படங்கள் வயது வந்தவர்களுக்கானவையல்ல. இருப்பினும் குழந்தைகளின் கூச்சல்கள் பார்வையாளர்களை பாதிக்கும் என்பதாலேயே இந் நடைமுறை பின் பற்றப்படுகிறது.) [b] திரையிடல் குறித்த நேரத்தில் 30.07.2004 மாலை 20.00 மணிக்கு ஆரம்பமாகும். நேரம் தாமதித்து வருவோர் குறும்பட திரையிடல் நடுவே நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள். இருப்பினும் தாமதித்து வருவோர் ஒரு குறும்படம் முடிந்து அடுத்த குறும்படம் ஆரம்பிக்கும் முன் உள்ள 1 நிமிட இடைவெளி காலத்தில் மண்டபத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அல்லது இடைவேளைக்குப் பின்னர் கூட உள்ளே பிரவேசிக்கலாம். [size=14][b]நிகழ்ச்சி நிரல்</b> (1) 20.00மணிக்கு வரவேற்புரை மற்றும் அறிமுகம் <b>திரு.மார்க்கஸ் பஸ்லர்</b> (தலைவர்) Swiss Movie மற்றும் Europe Movie Club (2) 20.05 மணிக்கு குறும்பட திரையிடல்</span> (i) <b>அதிகாலையில் இருள்: Darkness at Down</b> ( இயக்கம்: ஆனந்த அபேநாயக்க) யுத்தக் களத்தில் கிடந்த ரவைகளைப் புல்லாங்குழலாக்கி , போரினால் ஏற்பட்ட ஊனத்தைக் கூட மறக்கும் குழந்தைகளின் நம்பிக்கை. (ii) <b>அழுத்தம்:Under Pressure</b> (இயக்கம்: கா.ஞானதாஸ்) கல்வியே கருந்தனம் என்று கருதும் யாழ்பாண மத்தியதர வர்க்க நிலைப்பாடால் குழந்தைகளது சிந்தனைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது. (iii) <b>செருப்பு (The Slipper)</b> (இயக்குனர்:கௌதமன்) காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்ட சிறுமிக்கு செருப்பு கிடைக்கிறது.ஆனால் கண்ணி வெடியின் கோரம் அதை சாத்தியப்பட வைத்ததா? (3) 20.50 மணிக்கு இடைவேளை (4) 21.30 மணிக்கு குறும்பட திரையிடல் . ............. (iv) <b>தடை ( The Barrier) </b> (இயக்கம்:அல்பர்ட் பவுலஸ்) மருந்துகளுக்கான தடையினால் ஏற்படும் விபரீதங்கள். (v) <b>மூக்குப் பேணி (Nose-Cup)</b> (இயக்கம் :ச.ராகவன்) சுகபோகப் பொருட்கள் வழி கவரும் ஆக்கிரமிப்பாளர்கள்,மனிதனின் புலனுக்குப் புரியாமலே, யுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை உணர்த்தும் கதைக்கரு . . . (vi) <b>ஒளித்துப்பிடித்து (Hide & Seek)</b> (இயக்கம்: டெலோன் வீரசிங்க) 127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணியைக் கருவாகக் கொண்டது. (vii)<b>போருக்குப் பின் (After the War)</b> (இயக்கம்: ஜெயரஞ்சனி ஞானதாஸ்) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும் , ஒரு சிறுவனின் ஆக்ரோசம். (5) 22.15 மணிக்கு கலைஞர் திரு.திருமதி.ஞானதாஸ் கௌரவிப்பு (6) 22.25 மணிக்கு விரும்பியவர்கள் திரைப்படங்கள் பற்றிய கலந்துரையாடலில் பங்கு பற்றலாம். புகையிரதங்களில் வருவோரை புகையிரத நிலையங்களுக்கு கொண்டு சென்று விடுவதற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு: AJeevan EUROPE MOVIE CLUB P.O.Box.950 4601 - Olten Switzerland Tel. 0041 (0)62 212 96 23 0041 (0) 79 209 12 49 0041 (0) 79 773 94 47 e-mail: info@ajeevan.com - இளைஞன் - 06-17-2004 மிகவும் நல்ல தகவல் அஜீவன் அண்ணா... TTN தொலைக்காட்சியிலும் இதனை ஒளிபரப்ப இருக்கிறார்களா? விளம்பரம் பார்த்தேன் ஆனால் சரியாகக் கவனிக்கவில்லை. சில காட்சிகளைக் கவனித்தேன். மிரண்டு போய்விட்டேன். நடிப்பில் கூட சில காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் நம் கலைஞர்கள். தொடர்ந்தும் இதுபோன்ற முயற்சிகள் தொடரப்படவேண்டும்... - yarl - 06-18-2004 திரு ஞானதாஸ், அவரது சகோதரர் சம்பந்தமான ஒரு குறும்படம் தொலைக்காட்சியில் பார்த்திருந்தேன். இப்பொழுது இந்த வளர்ச்சி யை அறியும்போது சந்தோசமாவுள்ளது.பாராட்டுக்கள். - kavithan - 06-18-2004 சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அனைவருக்கும் கவிதன் - Mathivathanan - 06-18-2004 எங்கை குருவியின்ரை வாழ்த்தை கானேல்லை..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 06-18-2004 யாழ்ப்பாணத்தைப் படங்காட்டுறாங்களோ என்ன மதி சிண்டு முடியுறியள் - tamilini - 06-18-2004 வழ்த்துக்கள் அனைவருக்கும். - AJeevan - 06-18-2004 இளைஞன் Wrote:மிகவும் நல்ல தகவல் அஜீவன் அண்ணா... [b]ஆம் இக் குறும்படங்கள் TTN தொலைக் காட்சியிலும் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. நடிப்பில் மட்டுமல்ல ஒலி-ஒளி, ஒளிப்பதிவு, கதைத் தேர்வு, திரைப்பட உத்திகள், இயக்கம் என அனைத்து விதங்களிலும் இக் குறும்படங்கள் விஞ்சி நிற்கின்றன இளைஞன். IBC வாலோலியில் இயக்குனர் கா.ஞானதாஸ் உடனான பேட்டியொன்று ஒலிபரப்பாகியது. TTNக்காக யாழ் நகரிலும் வன்னியிலும் பணிபுரியும் கலைஞர்கள், பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தேன். முழுமையான விபரங்களை கேட்டு அறியத் தருகிறேன். இத் தயாரிப்புக்கான பயிற்சிகளை, மட்டுமல்ல நிதியையும் scriptne t கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://scriptnet.org.uk/ AJeevan ______________________________________________________________________________________________________________________________________ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... -அஜீவன் - Paranee - 06-21-2004 செருப்பு குறும்படம் பற்றி வீரசேகசரி வாரவெளியீட்டில் ஒரு விமர்சனம் வாசித்தறிந்திருந்தேன். வாசிக்கும்போது பார்க்கவேண்டும் என்ற ஒரு அவாவவை ஏற்படுத்தியது. உறங்காத கண்மணிகள் என்ற திரைப்படம் பார்த்தில் இருந்த தாயக தயாரிப்புகள் அனைத்திலும் ஒருவித ஈர்ப்பு தகவலிற்கு நன்றிகள் அஜீவன் அண்ணா தாயகம் சென்று பார்க்கும் சந்தர்ப்பத்திற்காய் ஆவலுடன் |