| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 162 online users. » 0 Member(s) | 159 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| நான் தமிழிச்சி.... |
|
Posted by: kuruvikal - 06-22-2004, 03:02 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/refugees.jpg' border='0' alt='user posted image'>
நான் தமிழிச்சி
ஏனென்றால் தமிழில் பேசுவேன்
தனித்துவங்கள் வைத்திருக்கேன்...
நாங்கள்
வாழ்ந்ததென்னவோ சீராய்
எங்கள் சீமையில தான்...
வந்தான் சிங்களவன்
வளமான எங்கள் வாழ்வு சீரழிக்க
தொடர்ந்தான் அடக்குமுறைகள்....
அதுகண்டு
ஈழத்துக் காந்தி முதலாய் பலரும்
சாத்வீகமாய்க் குரல் கொடுக்க
கொடுத்தான் வன்முறையால் பதிலடி
அது பொறுக்காமல்
பொங்கி எழுந்தாங்கள்
நான் பெத்த பொடியள் புலியாய்
எடுத்தாங்கள் துப்பாக்கி.....
எல்லாம் விரைவாய் முடியும் என்றிருக்க
தூர இருந்து கழுகும்
அயலில் இருந்து அசோகச் சக்கரமும்
இன்னும் பலதும்
வன்முறை கண்டு வியாபாரம் செய்ய
சிங்களத்தானுடன் சேர்ந்தே
கூத்தடிக்கின்றார் எங்கள் மண்ணில்
அழிவுகளையும் துன்பங்களையும்
எங்கள் சொத்தாக்கி.....!
இது புரிந்தும் புரியாததுகளாய்
உள்வீட்டுக் குள்ளநரிகளும்
கூட இருந்து கூத்தடிக்குதுகள்
தனக்குத்தானே குழிபறிக்க
எல்லாம் கெடுதியாய்ப் போச்சு...!
சரி இவற்றோடு
போகட்டும் என் வாழ்வு
சிங்களத்தின் இனவெறிக்கு இரையாக...!
இந்தப் பிஞ்சுகள் வாழ்வுமெல்லோ
அகதி என்று
அருவருப்பாய்ப் போகுது
காலங்காலமாய்
சீரான கல்வி பெற்று
மாண்புகள் கண்ட
எங்கள் தலைமுறைகள் - இன்று
ஒரு கணணிகும்
சிங்களத்தானிடம் மண்டியிடும் நிலையிருக்கு
இந்த நிலைகள் களைந்து
பிஞ்சு இதுகள்
சொந்த மண்ணில்
செழிப்பாய்
தன் இனம் பெருக்கி
புகழ் பெருக்கி
இனம் காத்து இனமானம் காத்து
நிம்மதியாய் வாழ்ந்திட
பகையோ புகையோ
எதுகண்டும் அவைதம்
வேரறுத்துக் காட்டுங்கள் ஒரு நல்வழி
என் சீவன் போகமுதல்
நிம்மதியாய் போய்ச் சேர......!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
|
|
|
| தமிழரின் விடுதலைக் கோலங்கள் சிங்களத்தில்... |
|
Posted by: kuruvikal - 06-21-2004, 05:15 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (5)
|
 |
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/BookLaunch_6_26645_435.jpg' border='0' alt='user posted image'>
Professor Suchcharitha Gamlath is delivering his guest speech
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/BookLaunch_7.jpg' border='0' alt='user posted image'>
K.V.Balakumar the senior member of the LTTE is addressing the gathering
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/BookLaunch_3.jpg' border='0' alt='user posted image'>
Popular Sinhala singer Jayatileka Bandara is being honoured by K.V.Balakumar
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/BookLaunch_5.jpg' border='0' alt='user posted image'>
First copy of the books are being presented to Mr.Jayatileka Banadara, by Mr.K.Bernard the president of College of Education, Vavuniya. K.V.Balakumar is at the centre.
(images from tamilnet)
விடுதலைப் போராட்டம் தொடர்பான இரு சிங்கள நூல்கள் வெளியீட்டு வைப்பு
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான சிங்கள நூல்கள் இரண்டின் வெளியீட்டு விழா வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை மத குருக்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ தேசிய எழுச்சிப் பேரவை பொறுப்பாளர் சஞ்சை ஏற்றி வைத்தார்.
வெளியிட்டு விழாவில் நூலின் முதற் பிரதியை வவுனியா கல்வியற் கல்லூரி பீடாதிபதி பேர்னாட் வெளியிட்டு வைக்க பிரபல சிங்கள பாடகர் ஜயதிலக்க பண்டார பெற்றுக் கொண்டார். நூலின் மதிப்பீட்டுரையை பேராசிரியர் சுஷரித்த கம்லத் நிகழ்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் 'தேதுன்ன' பத்திரிகையில் தொடர்களாக கா.வே.பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'மௌனித்திருந்தவர் மனக்குரல்' (ஹன்டக் நெத்தியங்கே ஹதவத்த சக்ஷிய), 'வன்னியிலிருந்து ஒரு மடல்' (வன்னிய சிட்ட லியம) ஆகியனவே நூல் வடிவில் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டவையாகும்.
இந் நிகழ்வில் தென்னிலங்கையின் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
puthinam.com
|
|
|
| என்ன ஆச்சு? |
|
Posted by: vasisutha - 06-21-2004, 12:22 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (17)
|
 |
நூற்றோட்டம் பகுதியில் நான் இணைத்திருந்த ஆக்கங்களை காணவில்லை. என்ன ஆச்சு?
:? :? :? சீனத்தமிழ் பகுதியில் நான் குருவியுடன் சண்டை பிடித்திருந்தேன். அதையும் காணவில்லை.
எவ்வளவு கஸ்டப்பட்டு எழுதினேன். :roll: :roll:
|
|
|
| ஆயுதயெழுத்து |
|
Posted by: kolumban - 06-20-2004, 11:37 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
அமோரஸ் பெரஸ் அல்லது ஆயுதயெழுத்து
ஆயுதயெழுத்து படத்தின் முதல்நாள் இரவுக்காட்சிக்குச் சென்றிருந்தேன். சத்யம் தியேட்டரின் வாசலில் நின்றிருந்த கார்களும், ஜனத்திரளும் காரணமாக அந்தச் சாலையே அரைமணிநேர போக்குவரத்துதடை ஏற்பட்டிருந்தது. யுவா, ஆயுதயெழுத்து. மூன்று மொழிகளில் 800 பிரிண்டுகள் உலகமெங்கும் திரையிடப்பட்டிருந்தது. மணிரத்னத்தின் பேட்டி மற்றும் மிகரகசியமாக நடைபெற்ற படப்பிடிப்பு. படத்தினை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியிருந்தது.
படம் துவங்கியது முதலே இதே படத்தைப் பார்த்திருக்கிறோமே என்று சந்தேகமாகயிருந்தது. படத்தில் மாதவன் காட்சிகள் துவங்கியதுமே நினைவுகள் அமோரஸ் பெரஸைச் சுற்றத்துவங்கியது.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் மெக்சிகப் படமான அமோரஸ் பெரஸ் படத்தை டிவிடியில் பார்த்தேன்.மெக்சிகோ நகரின் பிரதானச் சாலையொன்றில் ஒரு கார் விபத்து நடைபெறுகிறது. ரத்தக்காயத்துடன் உள்ள நாயைக் காப்பாற்றுவதற்காக ஒருவன் மிகவேகமாக காரில் வந்து கொண்டிருக்கிறான். அவனைச் சுடுவதற்காக ஒரு கூட்டம் துப்பாக்கியோடு இன்னொரு வேனில் துரத்துகிறது. தப்பும் போது மிக மோசமானதொரு சாலை விபத்து நேர்கிறது. அந்த விபத்தில் காரில் வந்தவன் காயம்படுகிறான். அவனது கார் மோதி இன்னொரு காரிலிருந்த இளம்பெண் பலத்த காயமடைகிறாள். விபத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த வயதானவன், உதவி செய்யத் துவங்குகிறான். கதை பின்னோக்கி நகர்கிறது.
விபத்திற்கு முன்னால், பின்னால், விபத்து நடந்த நிமிஷம் என மூன்று காலங்களுக்குள் கதை நீள்கிறது, அக்டோவியாயும் சூசனாவும் என்பது இதன் முதல் பகுதி.
அக்டோவியா ஒரு வேலையில்லாதவன்.
அவனது அண்ணன் ரொமிரோ ஒரு முரடன், திருடன். அண்ணனுக்கும் தம்பிக்கும் உள்ள உறவு விசித்திரமானது. ஒருவரையொருவர் மிரட்டிக்கொள்வதும் அடிப்பதுமாக நீள்கிறது. அண்ணன் மனைவி தான் சூசனா. அக்டோவியா முரட்டுத்தனமாக அவளைக் காதலிக்கிறான். அவளோடு சேர்ந்து வாழ விரும்புகிறான். அதற்கு அண்ணன் தடையாக இருப்பதால் அண்ணனைக் கொல்வதற்குக் கூட முயற்சிக்கிறான். பணமிருந்தால் சூசனாவைக் கூட்டிக்கொண்டு வேறு ஏதாவது இடத்திற்குப் போய்விடலாம் என்று பணம் சம்பாதிப்பதற்காக, நாய்ச்சண்டைக்கு தன் நாயைக் கூட்டிப்போகிறான்.
அவனது நாய், சண்டையில் ஜெயித்து பணத்தை வாறித்தருகிறது. சூசனாவின் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்குத் தானே அப்பா என்று நம்புகிறான். ஆனால் சூசனா அவனோடு வர மறுத்து கணவனோடு ஒரு நாள் தலைமறைவாகி விடுகிறாள். இதற்கிடையில் நாய்சண்டையில் ஏற்பட்ட தகராறில் அவனது நாயை சுட்டுவிடுகிறான் ஒருவன். ஆத்திரத்தில் அவனைக் கத்தியால் குத்திவிட்டு நாயைத் து¡க்கிகொண்டு வேகமாக மருத்துவமனைக்கு காரில் வருகிறான். வழியில் விபத்துக்குள்ளாகிறது இரண்டாம் பகுதி. டேனியலும் வலேரியும் துவங்குகிறது.
டேனியல் ஒரு பிரபலமான பத்திரிக்கை அதிபர். நடுத்தரவயது. அவருக்கு வாசனைதிரவியம் ஒன்றின் விளம்பர மாடலாக உள்ள வலேரி மீது காதல். தனது மனைவி, குடும்பத்திற்குத் தெரியாமல் அவளோடு பழகுகிறான். அவளுக்காக புதிய வீடு வாங்கித் தருகிறார். அவர்களது உறவு மற்றவர்களுக்கு தெரிந்துவிடாமலிருக்கும் படி செய்திருக்கிறார். வலேரி இந்த புதிய வாழ்வைத் துவங்கிய நாளில் தான், வீட்டிலிருந்து வெளியே வரும் போது கார் விபத்திற்குள்ளாகிறாள்.
கதை முன்னோக்கி நகர்ந்து விபத்தில் கால்முறிவு கொண்டு பிழைத்த வலேரியிடம் தொடர்கிறது. அவளைத் தன் பராமரிப்பில் வைத்து காப்பாற்றுகிறான் டேனியல். அவளது நாய்குட்டி ஒருநாள் வீட்டின் சிறிய புடவு ஒன்றில் மாட்டிக்கொண்டு காணாமல் போய்விடவே, வலேரியால் அதைத் தாங்கமுடியாமல் மனச்சிதைவடைந்தவள் போலாகிறாள். கால்முறிவு அவளை வீட்டிலே முடக்கிபோட்டுவிடுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. முடிவில் அவளது துயரம் ஆறுதல் சொல்லமுடியாமலே போகிறது.
மூன்றாம் பகுதி. எல் சிவோவும் மருவும்.
இப்பகுதியில் வரும் எல் சிவோ வயதானவன், ஒரு காலத்தில் பேராசிரியராகயிருந்தவன். கொரில்லா இயக்கத்தில் சேர்ந்து போராடி சிக்கலில் மாட்டிக்கொண்டு கொலை குற்றத்திற்காகத் தேடப்படுகின்றவனாகிறான். அவனது மனைவி அவன் இறந்துவிட்டதாக மகளிடம் சொல்லிவிடுகிறாள். அதுமுதல் தெரு நாய்களைப் பராமரித்தபடியே குப்பையில் கிடைத்தவற்றைச் சாப்பிட்டுக்கொண்டு மகளது அன்பைப் பெறுவதற்காக அவள் பின்னாலே அவளுக்கு தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறான், அவனிடம் ஒருவன் தனது சகோதரனைக் கொலை செய்யப் பணம் தருகிறான். அந்த கொலையைச் செய்ய ஒத்துக்கொண்டுவிட்டு, அதற்காகக் காத்திருக்கும் போது தான் எல் சிவோ விபத்தை நேரில் பார்க்கிறான். அது அவன் மனதை மாற்றிவிடுகிறது. அதனால் கொலை செய்வதற்கு பதில் தன்னை கொல்லநியமித்தவனையும், தான் கொல்ல திட்டமிட்டிருந்தவனையும் பிடித்துவந்து கட்டிப்போட்டுவிட்டு அவர்களது காரைவிற்று அந்தப் பணத்தை மகளிடம் சேர்த்துவிட்டு, தன் புதியவாழ்க்கையைத் தேடிப்போகிறான் எல்சிவோ.
ஒரேபடத்தில் மூன்றுவிதமான மாறுபட்ட கதாபாத்திரங்கள். ஒரே நகரம் தான் கதைப்புலம். அவர்களுக்குள் ஏற்படும் சாலைவிபத்து காரணமாக ஒருவர் வாழ்வை மற்றவர் எப்படி பாதிக்கிறரர்கள் என்பதே கதை. இதில் மெக்சிகோ நாட்டு குற்றக்கலாச்சாரமும் அங்கு சீரழிந்துவரும் வன்முறையும் படம் முழுவதும் காணமுடிகிறது. மூன்றுகதைகளில் வருபவர்களும் ஒருகதை நடக்கும் போது ஆங்காங்கே உபகதாபாத்திரம் போல அடையாளமற்று கடந்து போகிறார்கள். மூன்று கதாபாத்திரங்களும் முறையே சிவப்பு, பச்சை, மற்றும் ஊதா என மூன்றுவிதமான நிறத்தில் படம்பிடிக்கபட்டுள்ளனர். மேலும் பெரும்பான்மை காட்சிகள் கையால் எடுத்துச்செல்லப்படும் காமிராக் கோணத்திலே படமாக்கபட்டுள்ளது.
மெக்சிகோவில் இந்தப் படப்பிடிப்பு நடந்த போது உண்மையிலே படப்பிடிப்பு குழுவினரின் பொருட்களை அங்கிருந்த திருடர்கள் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறி செய்துபோய்விட்டார்கள். அந்த கூட்டத்தை அப்படியே படத்தில் பயன்படுத்த விரும்பி, அவர்களோடு பேசி படத்தில் துணைநடிகர்களாக நடிக்கவைத்திருக்கிறரர் இயக்குனர். படம் முடியும்வரை அவர்கள் தான் பாதுகாப்பு பணியும் கவனித்திருக்கிறரர்கள்.
வில்லியம் பாக்னரின் தி சவுண்ட் அண்ட் ப்யூரி நாவல் தான் இந்தப் படத்தின் வடிவத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. அத்தோடு அமெரிக்க இயக்குனரான குவாண்டன் டொரண்டினோவின் ரிசர்வாயர் டாக்ஸ் படத்தின் பாதிப்பும் இதில் பெருமளவு காணப்படுகிறது. லு¡யி ப்யூனுவல், பெட்ரோ அல்மதோவர் என இந்த வகை படத்திற்கு மெக்சிகோவில் முன்னோடி இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் தொழில்ரீதியான நவீனநாடக நடிகர்கள். திரைக்கதையை எழுதியவர் நாவலாசிரியர் கலிர்மோ அரிகே. 2000ல் மெக்சிகோவில் வெளியாகி கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறப்பு நடுவர் விருது. டோக்கியோ திரைப்படவிழாவிருது உள்ளிட்ட 14 விருதுகளை வாங்கிய படம். அலஜாந்தரோ கொன்சலஸ் இனூருடு என்ற இயக்குனரின் முதல்படம். ஆஸ்கார்விருதுக்கு கூட சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள 21 கிராம்ஸ் இதே இயக்குனரின் படம் தான்.
ஆயுதயெழுத்து அப்படியே இதை நகலெடுத்திருக்கிறது. கொஞ்சமும் தயக்கமோ கூச்சமோயில்லாமல் கோழிக்குஞ்சிற்கு நிறம் மாற்றிவிடுவது போல சுலபமாக இந்தியவடிவத்திற்கு மாற்றபட்டிருக்கிறது. மூவரும் இளைஞர்கள் என்பது மட்டும் தான் மணிரத்னத்தின் பங்களிப்பு. மற்றபடி எவ்வளவு காட்சிகளை அப்படியே பயன்படுத்த முடியுமோ அவ்வளவும் பயன்படுத்தியிருக்கிறார் . அதில் உள்ள நாய்ச்சண்டைகாட்சிகளுக்கு பதிலாக கபடிவிளையாட்டு, மெக்சிகோ கீழ்தட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு நிகராக மீனவர்குடியிருப்பு. அதில் பயன்படுத்தபட்ட நவீனநாடகநடிகர் போல மாதவனின் அண்ணனாக மேஜிக்லேண்டன் நாடககுழுவின் முக்கியநடிகர் பிரவீண். அதில் அக்டோவியா மொட்டையடித்திருப்பதால் இதிலும் மாதவன் மொட்டை. அதைவிடவும் அதில் பயன்படுத்தபட்ட அதே போல நிறமாறுதல்கள். விபத்திற்குள்ளாகியவளின் காதல்காட்சி. ம்யூசிக், காட்சியமைப்பு அத்தனையும் நகலெடுக்கபட்டிருக்கிறது.
ஆனால் மெக்சிகப் படம் போல அண்ணன்மனைவியோடு ஒடிப்போக திட்டமிடுவது, பொதுவாழ்வை சீர்குலைக்கும் வன்முறை, சகோரர்களுக்குள் உருவாகி வரும் மனக்கசப்பு. எதுவும் இதில் கிடையாது. தமிழ், ஹிந்தி கலாச்சாரத்திற்கு பொருந்தாது என்று நினைத்து தான் மாதவனுக்கு ஒரு மனைவி, அவளை மூர்க்கமாக காதலிக்கிறான். மெக்சிகோ படத்திலிருந்து தழுவியதால் தானோ என்னவோ எதற்கு, ஏன் எனத்தெரியாத ஏகப்பட்ட குழப்பமாக படமிருந்தது, வீட்டிற்கு வந்த போது வழியில் சற்றே கோபமாகயிருந்தது. ஒரு படத்திலிருந்து மட்டும் நகலெடுக்க வில்லையே சிட்டி ஆப் காட் என இன்னொரு படமும் இருக்கிறதே என்று மனசாட்சி சொன்னது. அதை வீடு திரும்பிய இரவில் மனசாந்திக்காக திரும்பப் போட்டு பார்த்தேன்
சிட்டி ஆப் காட், ஒரு பிரேசில்படம். ரியோ டி ஜெனிரோவில் உள்ள குற்றவாளிகளையும் அவர்களது குடியிருப்புகளையும், குற்றம் உருவாகும் முறையையும் பற்றியது. அதில் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டு கோழிபிடிக்கிறார்கள். அதில் வேனிலிருந்தபடியே துப்பாக்கியால் சுட்டபடியே ஒடுகிறான் முக்கியகதாபாத்திரம். ( மாதவன் சித்தார்த்தை விரட்டி சுடுவது போல) இப் படம் முழுவதும் நாலைந்து சிறு பகுதிகளாக பிரிக்கபட்டு கதை மாறிமாறி சொல்லப்படுகிறது. இப்படமும் ஆஸ்கா¡ர் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
மணிரத்னம் தான் தமிழ்சினிமாவின் அடையாளம். பெரியபடிப்பாளி. உலகத்திரைப்படவிழாக்களில் கலந்து கொள்பவர் என பொய்யான பிம்பங்களுக்கு நடுவில் தொடர்ந்து கூச்சமில்லாமல் வெளிநாட்டுப்படங்களை உருமாற்றி தனது பெயரில் கதை, திரைக்கதை என்று படமாக்கிக் கொண்டுவருவதை எவரும் கண்டு கொள்ளாமலேயிருப்பது விசித்திரமாகயிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் சென்ட்ரல் ஸ்டேஷன் (ருஷ்யா), ரன் லோலா ரன், காட்பாதர். என மணிரத்னத்தின் முந்தைய படங்களின் மூலப்படங்களை பார்த்து மகிழுங்கள்.
ஆங்கிலப்படங்களை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் பழக்கம் எப்போது துவங்கியிருக்கும் என்று சற்றே தேடிய போது தமிழில் அதற்கு ஒரு வலுவான மரபிருக்கிறது. மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம், கவிதாலயா என ஒவ்வொரு கம்பெனியும் தன் பங்கிற்கு பத்துப் படத்தையாவது சாயம் மாற்றி தமிழில் தயாரித்திருக்கிறார்கள். அகிரா குரசோவாவின் ரஷோமோன், அந்த நாள் ஆனதும். ஹாம்லெட் புதுமைபித்தன் ஆனதும் தற்செயலானதல்ல, சாம்பிளுக்கு சில ஆங்கிலப்படங்கள்.
பிரிசனர்ஸ் ஆப் ஜென்டா / நாடோடி மன்னன்.
அன்னாகரீனனா/ பணக்காரி
டாக்டர் ஷெகில் அண்ட் மிஸ்டர் கைடு / நான் வணங்கும் தெய்வம்
மார்னி / வெண்ணிற ஆடை
டு சேஸ் ஏ குருக்கடு ஷேடோ/ புதிய பறவை
டெஸ்பரேட் ஹவுஸ் / நாணல்
சம்மர் ஆப் 42 / அழியாத கோலங்கள்
ஒன் புளோ ஒவர் குக்கூஸ் நெஸ்ட்./ மனசுக்குள் மத்தாப்பு
கிரீன் கார்டு / நளதமயந்தி
மிசஸ் டவுட்பயர் / அவ்வைசண்முகி
டைமீ அப் டைமீ டவுன்/ காதல் கொண்டேன்
ஸ்லீப்பிங் வித் எனிமி / அவள் வருவாளா?
ஸ்டெப் மாம் / சதிலீலாவதி
தற்போது டிவிடி வந்துவிட்டதால் நகலெடுப்பது முழுமையாக அங்கீகரிக்கபட்டுவிட்டது.
தமிழ் சினிமாவில் இந்த கள்ளக்குழந்தைகள் தான் கம்பீரமாக சுற்றியலைகின்றன. தமிழ் கதைகளும், தமிழ்வாழ்வும், தமிழ்கதைசொல்லும் முறைகளும் இவர்களின் தயைவிற்கு காத்திருக்க வேண்டியிருப்பது தான் இதன் உச்சபச்ச துரதிருஷ்டம்.
nanri http://www.tamiloviam.com/atcharam/page.as...?ID=19&fldrID=1
|
|
|
| கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு முடிவு கட்டுவோம் வாரீர்! |
|
Posted by: Aalavanthan - 06-20-2004, 08:55 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (52)
|
 |
" விதியே விதியே தமிழ்ச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? "
மேற்சொன்ன பாரதி பாடல் அடிகளுடன் கவிஞர் அம்பி எழுதிய ' உலகளாவிய தமிழர் என்ற சிந்தனைக்குரிய நூல் ஆரம்பிக்கிறது. ஈழத் தமிழர் வரலாற்றையும் கடந்த இரு தசாப்த காலங்களாக அவர்கள் உலகளாவிய ஈழத் தமிழர்களாகப் புதுக்கோலம் கொண்டதற்கான காரணங்களையும் கவிஞர் முதலில் ஆராய்கிறார். தொடர்ந்து அவர்களின் புலப் பெயர்வு,மாற்றம், புதிய சூழல், புதிய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றை அவர்கள் சமாளிக்கும் எத்தனிப்புகள் , புதிய வாழ்வு ,மாறிவரும் புறக்கோலங்கள் முதலிய விடயங்களைச் சமூகவியற் கண்ணோட்டங்களுடனும் உளவியற் பாங்குடனும் அணுகுகிறார்; ஆராய்கிறார்.
உலகளாவிய ரீதியில் தமிழர் மேற்கொள்ளும் சமய, கலாச்சார முயற்சிகள் சிலவற்றை கோடிட்டுக் காட்டும் கவிஞர் அம்பி,தமிழர் பேணிக்காக்கவேண்டிய தனித்துவ அடயாளங்களை வலியுறுத்தவும்,அன்னிய சூழலில் தமிழ் கற்பித்தலுக்கு ஏதுவான அனுபவ ரீதியிலான அறிவுரைகளை வழங்கவும் தவறவில்லை. கடைசியில் இந்து சமுத்திரத்து மொறிசியஸ் தீவில் வாழும் தமிழர் வாழ்வையும், தமிழ்மொழியின் நிலையையும் சுட்டிக்காட்டி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பையும் தருகிறார்.
இது சிந்தனைக்குரியது !
மொறிசியஸ் தீவில் உள்ள பதினொரு இலட்சம் குடிமக்களில் 75.000 பேர் தமிழ் மக்கள். 52 சதவீதம் இந்து மதத்தவர்கள் உள்ள அந்த நாட்டில் முஸ்லிம்கள் சீன-மொறிசியர்கள் நாட்டின் பூர்வீக குடிகள் என எல்லோரும் இன- மத- மொழி வேறுபாட்டால் பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
1730களில் இத்தீவை ஆண்ட பிரெஞ்சுக்காரர்,இந்தியாவில் தமது ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியிலிருந்து தமிழர்களை கட்டடக் கைத்தொழில் - நுண்கலைத் தொழிலாளராக அழைத்து வந்தனர். 1810 இல் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தொகையான தமிழ்ப் போராளிகளின் உதவியுடன் பிரித்தானியர் இத்தீவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றினர். மொறிசியசில் இன்று ஏறத்தாள 100 சைவ ஆலயங்கள் உள்ளன. அங்கே சைவப் பண்டிகைகளும் கோவில் அனுட்டானங்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. அங்கே சைவம் தழைத்து நிற்கிறது.
தமிழ் மொழியின் நிலை என்ன?
195 ஆரம்ப பாடசாலைகளிலும் 12 உயர்தரப் பாடசாலைகளிலும் தமிழ் ஆசிரியர்களால் தமிழ் மொழிக் கல்வி போதிக்கப்படுகிறது. எல்லாமாக 215 தமிழ் ஆசிரியர்கள் மொரிசியசில் உள்ளனர். ஆனால் அங்கே கட்டாய தமிழ் மொழிக்கல்வி கிடையாது. தமிழ்ப் பாடத்தில் அடையும் சித்திகள் உயர்கல்விக்கோ அல்லது தொழில் வாய்ப்பிற்கோ உதவுவதில்லை. பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகள் வீட்டிலே தமிழ் பேசுவதில்லை. கிறியோல் மொழிதான் பேசுகிறார்கள். மேலும் அரசமொழிகளான ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் அனைவரும் நன்கு பேசுகின்றனர். மொரிசியஸ் தமிழர்களுக்கு சுமாராக தமிழ் வாசிக்கத் முடியும். எழுதவும் வரும். ஆனால் தமிழ் பேசவராது.
தமிழிலிருந்து உக்கிரத் திரிபு அடைந்த பெயர்களை இங்குள்ளவர்கள் வைத்துள்ளனர். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதற்கு பிறந்த நட்சத்திரம் பார்த்து, தமிழ்ப் பெயர் அடி எடுத்துக் கொடுப்பது கோவில் குருக்கள். மொரிசியசில் சைவ சமயமே வாழ்க்கையின் அடிப்படைக் கலாச்சாரத்தைப் பேணுகின்றது. சமய,விரத நாட்களை மக்கள் அறியும் வண்ணம் ஆண்டு தோறும் பஞ்சாங்கம் ஒன்று பிரெஞ்சு மொழியில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. தமிழர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். அழுவதா சிரிப்பதா என தெரியாத இன்னொரு விடயமும் உண்டு. பிறப்புச்சாட்சிப் பத்திரம் திருமணப்பதிவுப்பத்திரம், குடிசனமதிப்புப் பத்திரம் போன்ற அரச ரீதியான பதிவேடுகளிலெல்லாம் மொரிசியசின் தமிழ் மக்கள் தமது மதத்தை - தமிழ் என்று பதிந்து வருவது வழக்கம்! இங்கே சைவமும் தமிழும் ஒரு பொருட் கிழவிகள் போல் பாவனையில் இருந்து வருகின்றன. ' மெல்லத் தமிழ் இனிச்சாகும் " என்று பாரதியார் எச்சரித்தது இதைத்தானோ? மொரிசியசைப் போலவே தென்னாபிரிக்காவிலும் தமிழர் சென்று குடியேறினர். இங்கே தமிழரின் இன்றைய நிலை என்ன?
தென்னாபிரிக்காவில் தமிழ் படும்பாடு, இரண்டு தலைமுறைகளாக தமிழ் நாட்டுடன் தொடர்பு அறுந்து விட்டது. தமிழில் கடிதப் போக்குவரத்து இல்லை. பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வெளிவருவது இல்லை. தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. தென்னாபிரிக்கர்களுடன் தமிழ்சமூகத்தின் சங்கமம் அங்கே பெரும் பாலும் பூர்த்தியாகி விட்டதாகவே தெரிகிறது. ' மெல்லத் தமிழ் இனிச்சாகும் " என்ற நோய்,அங்கெல்லாம் முற்றிய நிலையில் இருப்பதாக தெரிகிறது. மொரிசியசில்,தென்னாபிரிக்காவில் தமிழினத்தின் கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலையின் சோகக்கதை இது. தமிழ் மக்களின் கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு அடுத்த களம் எங்கே? ஐரோப்பா,கனடா,அவுஸ்திரேலியா. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஏழு இலட்சம் பேர் இந்த நாடுகளில் கலாச்சார ரீதியிலான இனத் தற்கொலைக்கு தயாராக நிற்பதாக தெரிகிறது. இந்த நாடுகளில் பாடசாலைகளில் தமிழ்ப் பிள்ளைகள் அந்தந்த நாடுகளின் மொழிகளிலேயே கல்வி கற்கின்றனர். சில வீடுகளில் பெற்றோர்கள் வீடுகளில் தமிழ் பேசுவதால் பிள்ளைகளும் தமிழ் பேசுகிறார்கள். பல வீடுகளிலே பெற்றோர்கள் தமிழ் பேசுவதில்லை. ஆங்கிலமே பேசுகிறார்கள். பிள்ளைகளையும் ஆங்கிலம் பேச வைக்கிறார்கள். வீட்டிலே தமிழில் பேசினால் பிள்ளைகள் சரிவர ஆங்கிலம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற தவறான நம்பிக்கையின் காரணமாகவே இந்த கொடிய தவறு இழைக்;கப்படுகிறது. இனத் தற்கொலைக்கு அத்திவாரம் இடப்படுகிறது. தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் சிந்திப்பது அவசியம். தமிழில் பேசுவது அவசியம் . தமிழில் சந்தித்து,தமிழில் பேசினால் தமிழ் முதல் மொழியாக வாழ்கிறது. ஆங்கிலத்தில் சந்தித்து,தமிழில் பேசினால் தமிழ் இரண்டாம் தரமொழி என்ற நிலைக்கு வந்துவிடும்.
இங்கிலாந்து,கனடா,அவுஸ்திரேலியா,மற்றும் ஐரோப்பிய புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அந்நாடுகளில் தமிழ்பாடசாலைகள் நிறுவி,தமது பிள்ளைகளுக்குத் தமிழும் தமிழ்க் கலாச்சாரமும் பயிற்றுவிக்க எடுத்து வரும் முயற்சிகள் வரவேற்புக்குரியன. ஆனால்,இந்தப் பாடசாலைகளில் கற்பித்தல் அறிவும் தரமும் அனுபவமும் உள்ள தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பதும் மறக்க முடியாத ஓர் உண்மை. 26 எழுத்துக்கள் உள்ள ஆங்கிலத்தை முதலில் படித்து விட்ட பிள்ளைகள் 244 எழுத்துக்கள் தமிழில் உள்ளன என்பதை கேள்விப்படும் போதே, தமிழைக் கற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் தமிழ் கற்பிக்க புதிய அணுகுமுறைகள் தேவை. புதிய பாடத்திட்டங்கள் தேவை. புதிய நூல்கள் தேவை. இல்லா விட்டால் - ' மெல்லத் தமிழ் இனிச்சாவதைத் " தவிர வேறு வழியில்லை.
மொரிசியஸ்,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலை இனி உலகின் எந்தப்பகுதியிலும் ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் சபதமெடுக்க வேண்டும். புலம்பெயர்த நாடுகளில் சிறார்களின் தமிழ்க்கல்வி தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில்,அதிலும் குறிப்பாக மேற்கு நாடுகளில்,தமிழ்ச் சிறார்களின் தமிழ் மொழிக்கல்வி கவலை ஊட்டுவதாகவே உள்ளது. உலகளாவிய ரீதியில்,எமது இரண்டாம் தலைமுறையினர்,ஐரோப்பிய மொழிகளுடன் விதேசிய கலாச்சாரங்களுடன் கலப்படமாகி சங்கமமாகப் போகின்ற அபாய மணி ஒலிக்கிறது. ஆயுத ரீதியிலான இன ஒழிப்பு,எம் கண் முன்னால் நடைபெறுகிறது. ஆனால்,புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் இன,மொழி,கலாச்சார ரீதியிலான இன ஒழிப்பு நாம் அறியாமலே ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. இந்த இன ஒழிப்பை எவரும் எம்மீது திட்டமிட்டு திணிக்கவில்லை. இதற்கு காரணம் புலம் பெயர்ந்த எமது பெற்றோர்கள் தான்.
விதேசியச் சூழ்நிலைகளின் பொருளாதாரப் பலவந்தம் காரணமாகவோ ,புலம்பெயர்ந்த நாடுகளின் பொருளாதார,கலாச்சார மோகம் காரணமாகவோ,நாம் தமிழை மறந்தால்,எமது தாயகத்தை மறந்தால்,எமது சிறார்களின் தமிழ்க் கல்வியை மறந்தால்,எமது சிறார்களும் விதேசியக் கலாச்சாரத்தின் அடிப்படையில்,தமக்கு வயது வந்ததும்,தமது பெற்றோர்களை மறந்து விடுவார்கள் என்பது நிச்சயம். இத்தகைய பெற்றோர் தமது இறுதிக் காலங்களை மேற்கு நாடுகளின் அன்பும்,பாசமும் அற்ற முதியோர் இல்லங்களில் தான் அழுந்தி,வருந்தி வாழப் போகிறார்கள் என்பதும் நிச்சயம். கேடு வரமுன் காப்பது தான் புத்திசாலித்தனம். எனவே,தமிழ்ப் பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்கல்வி ஊட்டப்படும் போது, அதனோடு சேர்ந்து பாரம்பரிய தமிழ்ப் பண்புகளும்,கலாச்சார மரபுகளும் ஊட்டப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் பணியில் நீங்கள் தவறினால்,பாழாகப் போவது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல,உங்களின் எதிர்காலமும் கூடத்தான்.
தாய் மொழிக் கல்வியின் அவசியம் !
'எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால்,நான் இன்றே நம் மாணவர்கள் அன்னிய மொழி மூலம் கல்வி கற்பதை நிறுத்தி விடுவேன். எல்லா ஆசிரியர்களையும்,விரிவுரையாளர்தளையும் உடனே,தாய் மொழி மூலம் கற்பிக்கும் படி கட்டளையிடுவேன். எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து விலக்கி விடுவேன். " இவ்வாறு கூறியவர் ஒரு இனவாதி அல்ல, ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, சர்வாதிகாரத்தில் நாட்டம் உடையவரும் அல்ல மறாக - அகிம்சை,அமைதி,பொறுமை,சகிப்புத்தன்மை,ஜனநாயக பண்புகள் என்பவற்றிற்கு உலகத்திற்கே உதாரணமாக 20- ம் நூற்றாண்டில் திகழ்ந்தவர். அவர் - மகாத்மா காந்தி. 'தாய்மொழிக் கல்விதான் இயற்கையானது ,எளிமையானது,குழந்தைகளுக்குப் " பிடித்தமானது என்பதை உலகம் முழுவதும், உள்ள கல்வியாளர்கள்,குழந்தை மனோதத்துவவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அறிவியல் பூர்வமாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமாக | தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலம் ஒரு காலத்தில் திகழ்ந்த பெரிய பிரித்தானியா | அவர்களது மொழியாகிய ஆங்கிலத்தை அரிய உலகத் தொடர்பு மொழி, அறிவியல் மொழி | என்ற நிலைக்கு தூக்கி வைத்தது. இந்த மாயையினை லெனினின் அக்டோபர் சோசலிசப் புரட்சி 1917 - இல் தகர்த்தெறிந்தது. அறிவின் மொழியாக உருவாக்கப்பட்ட ஆங்கிலத்தின் அரிச்சுவடியே அறியாத சோவியத் விஞ்ஞானிகள்,மிகக் குறுகிய காலத்தில் அறிவியலின் உச்சங்களைத் தொட்டனர். பிரமிப்பு ஊட்டும் சாதனைகள் பலவற்றை,மனித இனத்திற்கு தந்தனர். ஆங்கில விஞ்ஞானிகளை மூத்கில் விரல் வைத்து மலைத்து நிற்கச் செய்தனர்.
'சுயமொழிப்பாட போதனைகள்,ஒரு மனிதனின் அறிவை அதி விரைவில் விருத்தி செய்கின்றன . மொழியியலாளர்கள் பிற மொழிகளைக் கற்று அவற்றில் உள்ள நல்லவற்றை,நமக்குத் தேவையானவற்றை மொழிபெயர்க்க வேண்டும். 'அழிவென்பது ஆக்கத்திற்கே " என்பதை தாரக மந்திரமாகக் கொண்டுள்ள ஜப்பான்,தனது சுயமொழிப் போதனைகளால் உருவாக்கிய விஞ்ஞானிகள் மூலமாக இன்று உலகிலேயே இலக்ரோனிக்ஸ் விஞ்ஞானத்தில் உச்ச நிலையை வகிக்கிறது. ராக்கட் விஞ்ஞானத்தை உலகிற்கு தந்தது சுயமொழி வழிக்கல்வி கற்ற சோவியத் ஒன்றியமும் ஜேர்மனியுமாகும். இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பின்னர் ஜேர்மன்,விஞ்ஞானிகளை தனது நாட்டிற்கு அழைத்துச் சென்று,அவர்கள் மூலமே இந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தை அமெரிக்கா கற்றுக் கொண்டது.
இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர்,வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த யாழ்ப்பாணத்தில் படித்துப் பணம் சம்பாதித்து சுகவாழ்வு பெற்ற தமிழர்கள் எல்லாம்,ஆங்கில நிழலில் நின்மதியாக உறங்கினார்கள். ஆங்கிலத்தில் சிந்தித்து,ஆங்கிலத்தில் பேசி,அதுவே அறிவுக்கு அறிகுறியெனவும் வாழ்ந்தார்கள். அத்தகைய சமுதாயத்திலே கூட,தாய் மொழிமூலம் கல்வி ஊட்டுவதே சிறந்தது என்று துணிந்து செயலாற்றினார்,அமெரிக்க மிசன் டாக்டரான சாமுவேல் பி. கிறீன் என்பவர். ஆரம்பக்கல்வியை அல்ல,மேனாட்டு மருத்துவக் கல்வியையே தமிழ் மூலம் புகட்டி,தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதில் வெற்றியும் கண்டார். 1848 - 1875கால கட்டத்தில் டாக்டர் கிறீன் 85 யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மேனாட்டு மருத்துவக் கல்வியைத் தமிழல் புகட்டி,அவர்களைத் திறமை மிக்க டாக்டர்களாக உருவாக்கினார்.
சிறந்த மருத்துவ விஞ்ஞான நூல்களையெல்லாம்,டாக்டர் கிறீன் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். கலைச்சொற்;களைத் தொகுத்தும்,அமைத்தும்,நூல்கள் எழுதினார். அவரிடம் கற்று,மருத்தவர்களான அவரது மாணவர்களும்,பல மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதினர். எனவே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது எமது முயற்சியிலேயே தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம். இயல்- இசை - நாடகம் என்றிருந்த முத்தமிழ் புத்தாயிரத்தில் இயல்- இசை - நாடகம் -அறிவியல் என்ற நாலு தமிழாக தரணியெங்கும் புகழ்பரப்பிட வேண்டும்.
நன்றி மேகம் சஞ்சிகை
சுவிஸ் தமிழ் மாணவர் அமைப்பு
Swiss Tamil Students Organization
கணினித் எழுத்தாக்கம்: சுரேஸ்
நன்றி
www.stso.ch
|
|
|
| எச்சரிக்கை....! |
|
Posted by: kuruvikal - 06-20-2004, 07:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>சிங்களத் தடைமுகாம்களில் புலனாய்வாளர்களால் போடப்படும் தூண்டில்கள் மீதான விழிப்பு நிலை. </b>
"...தமிழர்களை வீழ்த்துவதற்கு சிறிலங்காப்புலனாய்வாளர்கள் தமது புலனாய்வுச் செயற்பாடுகளுடன் ஒட்டிய வகையில் பல கருமங்களை தடை முகாம்களில் ஆற்றி வருகின்றார்கள்...."
"....எதிரியால் போடப்படும் சூழ்ச்சிகரமான தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாது நூறு ஆயிரம் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த தமிழர் தாயகத்தை பாதுகாத்து பலமாக்குவோம்..."
தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றிணைந்து வாழ்வதைக்கொள்கையாகக் கொண்ட விடுதலைப்போர் இன்று அர்த்தமுள்ள, சகத்திமிக்கதான தமிழத்தேசியமாக வீறுகொண்டு எழுந்து நிற்கிறது.
இத்தேசிய எழுச்சியால் பேரினவாதசக்திகளை எதிர்த்து நிற்கக்கூடிய பலத்தை தமிழினம் பெற்றுள்ளது.
இப்பலத்தை சீர்குலைந்து தமிழர்களை வீழ்த்துவதற்கு சிறிலங்காப்புலனாய்வாளர்கள் தமது புலனாய்வுச் செயற்பாடுகளுடன் ஒட்டிய வகையில் பல கருமங்களை தடை முகாம்களில் ஆற்றி வருகின்றார்கள்.
அக்கருமங்கள் தமிழரின் இலட்சியப்போருக்கு ஓர் முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது.
இம்முட்டுக்கட்டையை ஏற்படுத்த தமிழர்களின் சக்தியே தேவைப்படுவதனால், தமிழர்களை இலக்குவைத்தே புலனாய்வாளர்களால் தூண்டில்கள் போடப்படுகின்றன.
அதாவது தடைமுகாம்களில் எட்வேட், ராஜபக்ஷ, ராஜா, நசீர், திலக்,சமன், மனதுங்கா, நௌபர், பாஸ்கரன், பெரேரா, பண்டிதரட்ணா ஆகிய பல்தரப்பட்ட புனைப்பெயர்களில் புலனாய்வாளர்களாக பணியாற்றுகின்றார்கள்.
இவர்களது பணிசார்ந்த நோக்கங்களாக புலிகள் தொடர்பாக அனைத்தத் தகவல்களையும் சேகரித்தல், தமது புலனாய்வுப் பணிக்கான ஆட்திரட்டல், புலிகளின் மறைமுகச் செயற்பாட்டாளர்களை இனம்காணுதல், விடுதலைப்போருக்கு எதிரான கருத்தூட்டல்களைச் செய்தல், பொய்யான தகவல்களைப் பரப்புதல் போன்றவைகள் இருக்கின்றன.
இவற்றை இன்னும் சற்று கண்ணோக்கில் பார்ப்பது நன்மை பயக்கும்.
அதாவது தமக்குத்தேவையான தகவல்களை சேகரிக்கும் மையத்தை நோக்கியே சிறிலங்காப் புலனாய்வாளர்களின் இலக்கு இருக்கும்.
சிறிலங்கா புலனாய்வாளர்கள் தமக்குத்தெரியாத தகவல்கள் இல்லை என்கிறவகையிலும், தகவல்களை சொல்லாமல் போக முடியாது என்கிற உளவியல் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலும், போலியான நட்புறவை ஏற்படுத்தும் வகையிலும் தமக்கான தகவல்களைச் சேகரித்துக் கொள்வார்கள்.
இதுபோன்ற பணிசார்ந்த நோக்கங்களை எட்டுவதற்காக சலுகைகள் வழங்குதல், ஆசைவார்த்தைகள் கூறுதல், உதவிசெய்தல், அனுதரப்படுத்தல், இனிக் இனிக்க பேசும் உரையாடல், தமிழரின் நலன்களை பேணுபவர்களாக வெளிப்படுத்தல் ஆகியவைகள் தூண்டில்களாக போடப்படுகின்றன.
இவ்யுக்தி அனைத்தும் தமிழர்களது மகிழ்ச்சியையும் நல்லதொரு ஒளிமயமான வாழ்க்கையையும் சிதைப்பதாகவே இருக்கும்.
இதனைக் கருதிக்கொள்ளாது நல்லவர்கள் என்கின்ற ஒரே அளவு கோலால் அளக்க முற்படும் போது சிறிலங்காப் புலனாய்வாளர்களின் உண்மை முகத்தை பார்க்கும் சாத்தியம் இல்லாமல் போய்விடும்.
அதாவது 'ரகுலா' ஆங்கிலப்படத்தில் இரவில் இரத்தம் குடித்து மனிதர்களைக் கொல்லும் பிசாசு பகலில் அப்பாவியாக நல்லவர் போல் பாசாங்கு செய்து மனிதர்களை ஏமாற்றும், இதனை ஒத்த பாசாங்கு போலவே எதிரிப்புலனாய்வாளர்களின் முக மூடிகளாகும்.
இவர்கள் தமிழர்களுக்கு ஏற்படுத்திய அட்டூழியங்கள், அக்கிரமங்கள் ஏராளம். அதிகம்.
தமிழர்கள் வெள்ளைவான் கடத்திக் காணாமல் போயினர். ரயர் எரியும் நெருப்பில் வெந்துபோயினர், சித்திரவதைகளால் ஊனமுற்று வாழ்க்கையை தொலைத்தனர், பாலியல் வன்முறைகளால் மானமிழந்து போயினர், செம்மணி போன்று பல புதைகுழிகளுக்குள் புதையுண்டு போயினர்.
இப்படியான மனித அலவல்களைத் தந்த இப்பிசாசுகளின் நடிப்பில் மயங்கிவிடாது தம்மை நோக்கிப் போடப்படும் தூண்டில்களின் மீதான விழிப்புநிலைதான் தமிழர்களை அனைத்து வழிகளிலும் பாதுகாக்கும். மனிதமனம் ஒரு குரங்கு என்பர். அதனால் மனம் மாற்றம் அடையும் அல்லது தளம்பல் அடையும். ஆனால் தமிழ்ச்சமுதாயத்தின் சுதந்திரமான வாழ்விற்காய் தமிழர்கள் தம் மனதைக் கட்டிக் காத்து பக்குவமாய் வாழ்வதிலேயே தாயகப்பாதுகாப்பு தங்கியுள்ளது.
அதாவது விரைவான பயணம் செய்யவேண்டும் என்பதற்காகவோ, தடையின்றி இலகுவான பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவோ, பொருட்களை தடையின்றி உள்ளே கொண்டு வருவதற்காகவோ மொத்தமாக ஓர் செல்வாக்கை செலுத்தவேண்டுமென்பதற்காகவோ எதிரிப்புலனாய்வாளர்களால் போடப்படும் தூண்டில்களில் சிக்கி கொள்வதனால் தமிழர்கள் பேராபத்தையே சந்திப்பர்.
ஆதலால் ஆபத்தில் சிக்கி வைக்கப் போடும் தூண்டில்களில் இருந்து தப்பிக்கொள்ளும் சில மீன்களைப்போல எதிரிப்புலனாய்வாளர்களை ஏமாற்ற வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும்.
அவ்வாறு இல்லாது இரையுடன் தூண்டில்களை விழுங்கும் மீன்களைப்போல ஏமாந்து போகும் தமிழர்கள் தம் உயிரை தம் வாழ்வை மட்டும் இழந்திடக் காரணமாக இருக்கவில்லை.
மாறாக தமிழ்ச் சமுதாயத்தை, வருங்கால தமிழ்ச்சிறார்களை, பிறக்கப்போகும் சந்ததியினரை மீளா சகதிக்குள் தள்ளி விடும் நாசகாரத் துரோகிகளாகவே இருப்பர்.
ஒரு மனிதன் தன் வாழ்வை இரண்டு விதமாக அமைத்துக்கொள்கிறான்.
ஒன்று இப்படித்தான் வாழ வேண்டும் என்பதாகும். இது வழிகாட்டல்களைக்கொண்ட வாழ்க்கை.
இரண்டாவது எப்படியும் வாழலாம் என்பதாகும். இவ்வாழ்க்கை நெருக்கடிகளையும். பிரச்சினைகளையும் பெருமளவில் கொண்டுவரக் கூடியது.
ஆகவே தமிழர்களைப் பொறுத்தவரையில் இப்படித்தான் வாழவேண்டும் என்கின்ற வழிகாட்டல்களைக்கொண்ட வாழ்க்கைதான் தூண்டில்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கொள்ள உதவும்.
இயேசு பாலைவனத்தில் தங்கி இருக்கும் போது சாத்தானால் கொடுக்கப்பட்ட மூன்று வாழ்க்கை கொள்கைகளை அவர் மறுத்துவிடுகிறார்.
அதில் ஒரு நிகழ்வை மட்டும் இங்கு பார்ப்போம். அதாவது சாத்தான் ஓர் உயர்ந்த இடத்திற்கு இயேசுவை அழைத்துச்செல்கிறது. அங்கிருந்து கீழே தெரியும் எல்லா அரசுகளையும் அவருக்குக் காட்டி அவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமையை உமக்கு கொடுக்க முடியும் நீர் தெண்டவிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவையாகும் என்றது.
இயேசு இவ்வாழ்க்கை கொள்கையை மறுக்கிறார். அவரின் பொதுவாழ்க்கை கொள்கையை சிதைப்பதற்கான தீய எண்ணத்துடனே சாத்தான் ஆசைகாட்டியது. அதனால் இயேசுவை தன் அடிமையாக்க முயற்சிசெய்தது. ஆனால் இயேசுவின் மன உறுதியால் சாத்தான் தோற்கடிக்கப்படாது.
இச்சம்பவமானது மனித குலத்திற்கு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டவும், தீய எண்ணங்களுக்கு அடிமையாகப் போகக்கூடாது என்கிற செய்தியை வெளிப்படுத்தவும் சொல்லப்படுவதாகும்.
சிங்கள தேசத்தின் போர்க் கொடூரம் தமிழர்களது வாழ்வியலை நெருக்குதல்களுக்குள்ளாகியது. அதனால் உளநெருக்கீடுகளுக்குள் தமிழர்கள் வாழும் நிலை.
இதனால் தமிழர்கள் மனம் தொய்வு நிலைக்குள் இருக்கும் என்கிற அடிப்படையில் சலுகைகளால், வசதிவாய்ப்புக்களால் தமிழர்களை உள்வாங்க முனையும் புலனாய்வாளர்கள்.
எப்படி சித்திரவதைகளுக்குள்ளாகி சிறையில் இருக்கும் கைதி ஒருவனுக்கு சித்திரவதை செய்தவனே தன்கையால் ரொட்டித்துண்டை கொடுப்பதுபோல இங்கு புலனாய்வாளர்களது செயல்கள் அமைகின்றன.
தமிழர்கள் இதுவரை காலமும் அல்லல்பட்டு துன்பப்படுகிறார்கள். அவர்களது துன்பியல் வாழ்விற்கு ஒத்தடம் கொடுக்கப்படவேண்டுமென்கின்ற அடிப்படையில்தான் எதிரிப்புலனாய்வாளர்கள் சலுகைகள், உதவிகள், வசதிவாய்ப்புகளை தருகின்றார்கள் என்று தமிழர்கள் எவரும் எண்ணிவிடலாகாது.
தமிழரின் விடுதலைப்போர் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதிலும் பலசாலிகளாக இருக்கும் தமிழினத்தை பலவீனமுள்ளவர்களாக ஆக்கவேண்டுமென்பதிலும் புலனாய்வாளர்கள் பிடிவாதமாகவே இயங்குகின்றார்கள்.
அத்தகைய நிலையிலே தமிழரின் தேசிய உரிமைகளை வென்றெடுக்கப் போராடிவரும் புலிகள் இயக்கத்தின் பலத்தை சிதைக்கத்தக்க புலனாய்வுப் பணிகளையே சிங்களத் தடைமுகாம் புலனாய்வாளர்கள் முன்னெடுகிக்கிறார்கள்.
இப்புலனாய்வாளர்களாலேயே தமிழரின் உயிரும், தமிழரின் மாண்பும் வரலாற்றில் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்படுகின்றது என்பதை தமிழர்கள் மறக்கலாகாது.
தமிழரின் தாயகத்தை, தமிழரின் படைபலத்தை பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. தம் தன்னலங்களுக்கு அப்பால் தமிழினத்தை பாதுகாக்க எண்ணும் கடமையுணர்வை மேலானது.
ஆதலால் எதிரி நம் தீய எண்ணங்களுக்குள் வீழ்த்தபோடும் தனிமனித உளவியல் தூண்டில்களில் மாட்டிக்கொள்ளாது தமிழர்களது, உள உரனை பேணி ஆரோக்கியமான தமிழ் சமுதாயத்தை உருவாக்குவோம்.
எதிரியால் போடப்படும் நாசகரமான தூண்டில்களில் அகப்பட்டுக்கொள்ளாது தமிழ் இனத்தின் நல்வாழ்விற்காக தியாகம்செய்த பதினெட்டாயிரம் மாவீரர்களது கல்லறைகளை புனிதமாக்குவோம்.
எதிரியால் போடப்படும் சூழ்ச்சிகரமான தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாது நூறு ஆயிரம் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த தமிழர் தாயகத்தை பாதுகாத்து பலமாக்குவோம்.
நீலன் ஈழநாதம். & sooriyan.com
|
|
|
| அமெரிக்க உளவுத்துறையில் குழப்பம்... |
|
Posted by: kuruvikal - 06-20-2004, 07:28 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.cia.gov/employment/images/0b_logo_o.jpg' border='0' alt='user posted image'>
உலக வல்லரசை அடுத்து ஆட்சிசெய்யப்போவது யார் என்ற கேள்விக்கு விடை தேடி தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வில்லியம் புஷ்ம் ஜோன் கெரியும் தேர்தல் பிரசாரங்களில் கவனமாய் இருக்க சத்தமில்லாமல் ஒரு சங்கதி நடந்திருக்கிறது அமெரிக்காவில்.அமெரிக்க வல்லாதிக்கத்தின் பலமான தூணாக கருதப்படும் Central Intelligence Agency (C.I.A) என அழைக்கப்படும் மத்திய புலனாய்வு பிரிவின் தலைமைப்பொறுப்பிலிருந்து அதன் தலைமை நிர்வாகி George Tenet பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆட்சியை மட்டுமல்ல உலக நாடுகளின் ஆட்சியை கூட தீர்மானிக்கும் சக்தியாகவும் உலக நாடுகளை ஆட்டிவைக்கும் மந்திரமாகவும்
செயற்படும் (C.I.A) யின் தலைமை நிர்வாகி திடீரென பதவி விலகுவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதற்காகவும் உலக நாடுகளில் இடம்பெறும் முக்கியமான நகர்வுகள் குறித்து அமெரிக்க
ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காகவுமென 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவே பின்பு (C.I.A) என மாற்றம் பெற்றது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை தீhடமானிக்கும் அதிகாரிகளுக்கான புலனாய்வு தகவல்களை வழங்குவதும் இதன் மூலமாக
அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை திட்டங்களை உருவாக்குவதும் இதன் முக்கிய பணிகள்.
முத்திய புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குனர் ஜனாதிபதியின் முக்கிய ஆலொசகராக செயற்படுவதோடு ஜனாதிபதியின் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கும் நபராகவும் விளங்குவார் ஆக மொத்தத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மக்கள் ஒருவரை வாக்களிப்பின் மூலம் தேர்வு செய்தாலும் கூட உண்மையில் அமெரிக்காவை வளிநடத்துவது (C.I.A) யும் அதன் தலைமை இயக்குனரும் தான் என்பதே உண்மை.
சரியான நேரத்தில் மிகத்துல்லியமாக வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை வழங்கல் உலகம் முழவதிலும் தேவையான தகவல்களை திரட்டுவதற்குரிய புலனாய்வு நகர்வுகளை திட்டமிடல் இவற்றின் மூலம் அமெரிக்க வல்லாதிக்கத்தை உலக நாடுகள் அனைத்திலும் ஏற்படுத்தல் முதலான முக்கிய பணிகள் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் என்ற பெயர்பத்ததின கீழ் நடத்தப்படுகின்றன.
உலகில் எங்கெல்லாம் பிளவுகளும் குழப்பங்களும் தோன்றுகின்றதோ அங்கெல்லாம் இந்த (C.I.A) யின் தாக்கம் நேரடியாகவோ அன்றி அறைமுகமாகவோ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலகில் அனைத்து நாடுகளிலும் (C.I.A) Agents உலவிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆவர்களை அடையாளம் காண்பது முதலில் கடினம்.ஒரு நாட்டு அரசியலில் பெறமதிக்க ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஒருவர் (C.I.A) யின் Agent ஆக செயற்பட்டுகொண்டிருப்பார் ஆனால் யாருக்கும் அவருடைய இரண்டாவது முகம் தெரிந்திருக்க வாய்பில்லை.குறிப்பிட்ட நாட்டில் அமெரிக்கா கண்வைத்து விட்டால் போதும் அவர் மூலமாகவே தான் விரும்பியதை எல்லாம் சாதித்துக்கொள்ளும்.ஆட்சியில் உள்ள அரசை கவிழ்கவும் முடியும் கட்டுக்கோப்பான அமைப்புகளை பிளவுபடுத்தவும் இதனால் முடியும்.எப்படி இது சாத்தியம் என்றால் இரண்டு
காரணங்களை சொல்லலாம் ஒன்று அமெரிக்காவின் High Technology மற்றையது சுகபோக வாழ்விற்காக எதையும் செய்யத்
துணிந்தவர்களை சரியாக அடையாளம் காணும் திறமை.
இவையிரண்டும் போதும் அமெரிக்கா தான் விரும்பியபடி எல்லாம் உலகத்தை ஆட்டுவிக்க.
இப்படியாய் பலம் படைத்த ஒரு அமைப்பின் உயர் நிலையிலிருந்து ஒருவர் திடீரென
இராஜினாமாச்செய்வதாக அறிவித்துள்ளார் என்றால் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய மர்ம
முடிச்சுக்கள் இலகுவில் அவிழ்க்கப்பட முடியாதவை என்பது தான் உண்மை.
கிரேக்க குடியேற்ற வாசிகளான பெற்றோருக்கு 1953 ஜனவரி மாதம் 5ம் திகதி
அமெரிக்காவின் தலைநகரான நியூயோர்கில் ஜேர்ஜ ரெனட் பிறந்தார்.அமெரிக்காவின் உயர்நிலை பல்கலைக்கழகங்களான Georgetown
மற்றும் Columbia பல்கலைக்களகங்களில் பட்டப மேற்படிப்புகளை இவர் முடித்திருந்தார்.
பில் கிளின்டனின் ஆட்சிக்காலத்தின் முதல் 3 வருடகாலம் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் கடமையாற்றிய இவர்
(C.I.A) யின் உதவி நிர்வாகியாக 95/96 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்ட இவர் பின்னர் 97ம் ஆண்டு முதல் (C.I.A) யின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
97 ம் ஆண்டு முதல் இன்று வரை 7 ஆண்டுகள் (C.I.A) ஐ பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் தலைமை தாங்கி வழிநடத்தியவர் இந்த முடிவிற்க தள்ளப்பட காரணம் எதுவாக இருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செப் 11 அமெரிக்காவின் Image ஐ சரியச்செய்த விமானத்தாக்குதல்களை தடுத்து நிறுத்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தவறிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்ளுக்கான பதில் இதுவரை கூறப்படவில்லை. இதனை அடுத்து எதிர்க்கடச்சிகள் கூட இவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியிருந்தமையும் இங்க நினைவு கூறத்தக்கது. உலகத்கின் மூலை
முடுக்கெல்லாம் முக்கை நழைத்து முகர்ந்து பார்க்கும் (C.I.A) .அமெரிக்க பாதுகாப்பு குறித்து போதுமான அக்கறையை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை அதிகம்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போகின்றார்கள் என்ற தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியமைக்கான காரணம் என்ன ? என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டியவர் George Tenet ஆனால் அவரிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை எனவே தான் அந்த கேள்வி
அவரிடம் கேட்கப்பட முன்பாகவே பதவியை இராஜினாமாச்செய்வதாக அவர் அறிவித்திருக்கவேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.இதிலும் ஒரளவிற்கு உண்மை இருக்கலாம் செப் 11 தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்ற வேளை George Tenet
முன்னாள் புலனாய்வதுறை உயர் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட போது அவர் தெரிவத்த கருத்து அமெரிக்காவை மட்டுமல்ல உலகநாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்தது.செப் 11 போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் அளவிற்கு அமெரிக்க புலனாய்வு பிரிவு மாற்றி அமைக்கப்பட வேண்டுமானால் குறைந்தது 5 ஆண்டுகள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்,அதில் உள்ள
யதார்த்தம் உண்மையானது.என்னதான் பணம் படைத்த செல்வந்த நாடாக தன்னை இனம் காட்டிக்கொண்டாலும் அமெரிக்கா ஒரு பிச்சைக்கார நாடு தான்.அது தனது வளத்தின் பெரும் பகுதியை இராணுவ மேலாதிக்க செயற்பாடுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்காகவுமே செலவிட்டுவருகின்றது. புலனாய்வு பணிகளுக்கு அது செலவிடும் தொகை போதுமானதாக இல்லை எனவே புலனாய்வுத்துறையை நவீனமயப்படுத்தி கட்டி எழுப்ப 5 ஆண்டுகள் தேவைப்படும் என்று அவர் கூறிறது உண்மை தான்.ஆனால் அந்த காரணங்களையும் வியாக்கியானங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் விசாரணைக்குழு இல்லை அது தனது விசாரணைகளை நிறைவு செய்து அது குறித்த அறிக்கையை எதிர்வரம் ஜீலை மாதம் வெளியிடவிருக்கின்றதுஅதில் (C.I.A) யின்
கவனமின்மைக்கும் கண்டுகொள்ளாமைக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு George Tenet யே சாரும் எனவே எதற்கு வம்பு என பதவி பறிக்கப்பட முன் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ள இவர் நினைத்திருக்கலாம். ஈராக் மீதான அமெரிக்க போர் தேவையற்ற ஒன்று என இப்போது பரவலாக குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ள நிலையில் ஈராக் மீதான அமெரிக்க படைநடத்துகைககுரிய காரணங்களை உருவாக்கி மக்களை மயங்கவைத்து ஈராக் போருக்கான ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட் முயற்ச்சிகளின் பின்னணியில் இருந்த முக்கிய நபர் George Tenet.
ஈராக் மீதான அமெரிக்க போர் அமெரிக்க ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவு.துணை ஜனாதிபதி டிக் செனி அமnரிக்க இராஜாங்க அமைச்சர் ரிச்சரட் ஆர்மிடேஜ் வெளியுறவத்துறை அமைச்சர் கொலின் பௌவல பாதுகாப்பு துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் போன்ற மிக முக்கிய அமைச்சர்களுடன் கூட அமெரிக்க ஜனாதிபதி கலந்து பேசவில்லை ஈராக் மீது போர் தொடுக்கப்பட வேண்டும் என்ற தனது சுயலாபம் கருதிய நோக்கத்தையே செயற்படுத்தினார் அதற்கு புலனாய்வு பிரிவுத் தலைவர் George Tenet ம் மிக முக்கிய
காரணம் என அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளர் Woodward எழுதிய நுலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நுல் அமெரிக்காவில் தற்போது ஏற்படுத்தியுள்ள பரபரப்பும் George Tenet ன் பதவி விலகலுக்கான காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அமெரிக்க வல்லாதிக்கத்தின் நிலைகளை வீழ்ச்சியடையச்செய்த செப் 11 தாக்குதல் மற்றும் ஈராக் மீதான பேர் என்பவற்றின் பின்னணியில் மிகமுக்கிய சூத்திரதாரியாக செயற்படப்ட George Tenet இந்த பாதிப்புகளுக்குரிய தார்மீக பொறப்பை ஏற்று பதவி விலகுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு கட்சிகளினது இருவேறு ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர் என்ற பெருமை George Tenet க்கு உண்டு.
இப்போதைய பதவி விலகலுக்கு இந்த அரசியல் கூட ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. George Tenet ன்தவறான வழிநடத்துகையில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தனது செல்வாக்கை இழந்துள்ளார்.எனவே George Tenet வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றி வலும்பெற்று கருத்து முரண்பாடாக வளாந்துவிட்டதாகவும் இதனை அடுத்தே George Tenet பதவிவிலகும் முடிவை அறிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. இதில் கூட உண்மை இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது காரணம் (C.I.A) யின் புதிய தலைவராக பொறுப்பேற்கவிருப்பவர் John McLaughlin தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ற்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் தான் குறிப்பிடாத விடயங்களை அமெரிக்க அதிபர் சேர்த்து வாசித்துள்ளார் என George Tenet பகிரங்கமாக அறிவித்து அமெரிக்க அதிபரை சங்கடத்திற்குள்ளாக்கியதும் இந்த முரண்பாடுகளின் உச்சக்கட்டம் தான் என்று சொல்லப்படுகின்றது. அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் இடம்பெற்ற 16 சொற்கள் கொண்ட வாக்கியம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.அந்த வசனத்தின் பொருள் "ஈராக் யுரெனியத்தை ஆபிரிக்காவில் இருந்து கொள்வனவு செய்வதற்கு முயற்சிப்பதாக பிரித்தானிய நம்பகமாக தெரிவித்துள்ளது".என்பது தான் சர்சைக்குரிய அந்த வாசகம்.(C.I.A) யால் எழுதி அதன் தலைமை நிர்வாகியால் சரிபார்க்கப்ட்ட இந்த உரையில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை ஆனால் அமெரிக்க அதிபர் புஷ் தனது உரையில் இதனை சேர்த்திருந்தமை அவருடைய தவறு என்று George Tenet பகிரங்கமாக அறிவித்து பெரும் சர்சையை ஏற்படுத்தினார்.அப்பொழுதே இருவருக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் தோன்றியிருந்ததாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதை தொடர்ந்து மேற்கொள்ளகப்பட்ட அரசியல் அழுத்தங்களால் George Tenet இந்த தவறுக்கான தார்மீக பொறுப்பை தான் ஏற்பதாக அறிவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதும் இது குறித்த விசாரணைக்கு முகம் கொடுத்ததும் அவருக்கு பாரிய தாக்ங்களை ஏற்படுத்திவிட்டதாக கருதப்படுகின்றது.
ஏது எப்படி இருப்பினும் ஜீலை நடுப்பகுதி வரை தனது பதவியில் George Tenet தொடர்வார் என அறிவிக்கப்ட்டுள்ளது.எதிர்வரும் நொவெம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு சாதகமான நிலைகளை பலப்படுத்துவதற்கான முயற்ச்சிகளில் ஒன்றாகவே George Tenet இந்த பதவிவிலகல் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் பயன்படுத்தப்போகின்றார் என்பது மட்டும் மறுக்கப்படமுடியாத உண்மை.
பில் கிளின்டனால் நியமிக்கப்பட்டு பின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திலும் அடித்துச்செல்லப்படால் நின்ற George Tenet எனும் கோபுரம் இப்போது மெல்லச்சரியத்தொடங்கியுள்ளது.இந்த சரிவு அமெரிக்காவில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
sooriyan.com
|
|
|
| செய்திகளின் உண்மைத்தன்மை..?? |
|
Posted by: Mathivathanan - 06-20-2004, 11:44 AM - Forum: புலம்
- Replies (35)
|
 |
இன்றைய செய்தியில் நேற்று நடந்ததாகந் சொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடுபற்றிய செய்தி சொல்லப்படவில்லை..
ரமேஸ் அறிக்கைவிட்டார்..
நான்கு பெயர் தெரியாத கருணாவுடன் தப்பிச்சென்ற மட்டக்களப்பு பெண் தளபதிகள் வந்து சேர்ந்துள்ளனர்..
இவைதான் சொல்லப்படுகின்றன..
இன்று நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் மகாநாடு பற்றிய செய்தி சொல்லப்படவில்லை..
மேலும் அவசர அவசரமாக 9 மணி செய்தியின் பின்னர் மட்டக்களப்பில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிய உண்மையான செய்திகளறிய இரவு 7 மணிவரை (செய்திக்கு) காத்திருங்கள் என்று ஒரு அறிக்கை மட்டும் வந்திருக்கின்றது.. அது இன்றைய பத்திரிகையாளர் மகாநாடு பற்றியதாக இருக்குமா..?
பல கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்குமென நம்புகிறேன்.. எந்த ஊடகம் போலி ஊடகம்.. எந்த ஊடகம் நாடகமாடுகின்றது.. என்ற முக்கியமான கேள்விகளுக்கு இன்று நிச்சயமாக பதில் கிடைக்கும்..
நேற்றைய தராக்கி சிவராமுடைய ஆய்வுக்கலந்துரையாடலின்போதுகூட ரமேஸ் நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடுபற்றிய செய்தியோ இன்று நடக்கப்போகும் முக்கியமான பத்திரிகை மகாநாடுபற்றிய கருத்துக்கள் எவையும் பரிமாறப்படவில்லை..
பொய்யுரை பரப்பும் மற்ற ஊடகங்கள் பற்றி நடந்த இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது இந்த மகாநாடுகள் பற்றி எந்தவிதமான தகவலும் பரிமாறப்படாதது வேதனைக்குரிய விடையம்..
கருணா அணியினரால் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட ரமேஸ் நடாத்திய முக்கிய முதல் மகாநாடு பற்றிய செய்தி.. இன்று நடக்கவிருக்கும் முக்கிய மகாநாடு பற்றிய செய்திகள் இந்த ஆய்வு கலந்துரையாடலின்போது ஏன் விவாதிக்கப்படவில்லை..
:?: :?: :?:
|
|
|
| கணனியிலிருந்தே பூஜை பண்ணலாம். |
|
Posted by: kavithan - 06-19-2004, 11:24 PM - Forum: இணையம்
- Replies (6)
|
 |
கோயிலில் ஜயர் பூசை செய்வார், வீட்டை யாராவது விளக்கேற்றுவார்கள் சாமிப்படத்துக்கு. ஆனால் புலம் பெயர்ந்து வாழுகின்ற எங்களில் பலருக்கு கோயிலுக்கு போக நோரமிருக்காது, அதுதான் சரி வீட்டிலை விளக்கை கொழுத்தி கும்பிடுவம் எண்டால் வீட்டுக்கை கிடக்கிற மணி பூசைக்கடிக்கிற மாதிரி அடிக்க தொடஙகீடும். இதெல்லாததையும் இலகுவாய் தீர்க்கிறதுக்கு ஒரு வழியொண்டு நேற்றுக் கண்டுபிடிச்சனான்.அது தான் உங்களுக்கும் சொல்லவம் எண்டு................ஆம் உங்களுக்கு விரும்பின கடவுளுக்கு கணனியில் இருந்தே பூசை செய்யமுடியும். இது எப்படி இருக்கிறது.
நான் சில மாதங்களுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு செய்தி, ஜப்பானில் கணனிக்கு பூஜை செய்தவர்களாம். ஏனென்றால் வைரஸ்சில் இருந்து அதனைப் பாதுகாப்பதற்கா. அவர்கள் கணனிக்கு பூஜை செய்தார்கள் நாங்கள் கணனியில் இருந்து பூஜை செய்வோம். எப்படி இணையம் கடவுளையும் மிஞ்சீட்டுது............ஒ
இதுதான் அது
http://www.eprarthana.com/virtual/vpooja.asp
கவிதன்
|
|
|
|