Yarl Forum
நான் தமிழிச்சி.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நான் தமிழிச்சி.... (/showthread.php?tid=7012)



நான் தமிழிச்சி.... - kuruvikal - 06-22-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/refugees.jpg' border='0' alt='user posted image'>

நான் தமிழிச்சி
ஏனென்றால் தமிழில் பேசுவேன்
தனித்துவங்கள் வைத்திருக்கேன்...
நாங்கள்
வாழ்ந்ததென்னவோ சீராய்
எங்கள் சீமையில தான்...
வந்தான் சிங்களவன்
வளமான எங்கள் வாழ்வு சீரழிக்க
தொடர்ந்தான் அடக்குமுறைகள்....
அதுகண்டு
ஈழத்துக் காந்தி முதலாய் பலரும்
சாத்வீகமாய்க் குரல் கொடுக்க
கொடுத்தான் வன்முறையால் பதிலடி
அது பொறுக்காமல்
பொங்கி எழுந்தாங்கள்
நான் பெத்த பொடியள் புலியாய்
எடுத்தாங்கள் துப்பாக்கி.....
எல்லாம் விரைவாய் முடியும் என்றிருக்க
தூர இருந்து கழுகும்
அயலில் இருந்து அசோகச் சக்கரமும்
இன்னும் பலதும்
வன்முறை கண்டு வியாபாரம் செய்ய
சிங்களத்தானுடன் சேர்ந்தே
கூத்தடிக்கின்றார் எங்கள் மண்ணில்
அழிவுகளையும் துன்பங்களையும்
எங்கள் சொத்தாக்கி.....!
இது புரிந்தும் புரியாததுகளாய்
உள்வீட்டுக் குள்ளநரிகளும்
கூட இருந்து கூத்தடிக்குதுகள்
தனக்குத்தானே குழிபறிக்க
எல்லாம் கெடுதியாய்ப் போச்சு...!

சரி இவற்றோடு
போகட்டும் என் வாழ்வு
சிங்களத்தின் இனவெறிக்கு இரையாக...!
இந்தப் பிஞ்சுகள் வாழ்வுமெல்லோ
அகதி என்று
அருவருப்பாய்ப் போகுது
காலங்காலமாய்
சீரான கல்வி பெற்று
மாண்புகள் கண்ட
எங்கள் தலைமுறைகள் - இன்று
ஒரு கணணிகும்
சிங்களத்தானிடம் மண்டியிடும் நிலையிருக்கு
இந்த நிலைகள் களைந்து
பிஞ்சு இதுகள்
சொந்த மண்ணில்
செழிப்பாய்
தன் இனம் பெருக்கி
புகழ் பெருக்கி
இனம் காத்து இனமானம் காத்து
நிம்மதியாய் வாழ்ந்திட
பகையோ புகையோ
எதுகண்டும் அவைதம்
வேரறுத்துக் காட்டுங்கள் ஒரு நல்வழி
என் சீவன் போகமுதல்
நிம்மதியாய் போய்ச் சேர......!

நன்றி.... http://kuruvikal.yarl.net/


- kuruvikal - 06-22-2004

இந்தப் படத்துக்கு ஏற்ற இன்னும் கவி வரிகளை நீங்களும் தாருங்களேன்....அல்லது தர முயலுங்களேன் இங்கு....!


- kavithan - 06-22-2004

உங்கள் கவிகேட்டு
அன்னையிவள் வாய்பொத்தி நிற்க
சிறுசுகள் கொஞ்சமாய் சிந்திக்கின்றன போலும்.

கவியெழுதிய குருவி அண்ணைக்கு கரம் கூப்பி வந்தனங்கள்


- kuruvikal - 06-22-2004

இரண்டு வரி எண்டாலும் சீராப் போட்டிருக்கிறியள் கவிதன்....நீங்க கவிதான்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 06-22-2004

சுதந்திரக்காற்றுக்காய்
சுகம் பல இழந்து
சொந்தம் தொலைத்து
சொப்னம் விதைத்து
இன்று சோபையிழந்து
அன்னையிவள் அகதியாகி
அன்னத்திற்காய் ஏங்கி நிற்கின்றாள்


பிஞ்சு விழிகளில்
விடியலின் ஏக்கம்
விலங்கிற்கும் மானம் மறைக்கும் வையகத்தில்தான்
இந்த மானிடக்குழந்தைகளும் வாழ்கின்றனரோ ?


- kuruvikal - 06-22-2004

அதுகள் குழந்தைகள் பரணி...வரேக்க எல்லாரும் என்ன மானம் மறைச்சண்டே வந்தனாங்கள்.... ஆனா தமிழன்ர மானம் வாங்கிறாங்கள் அவங்கள மறைக்கிறதுதான்...தப்பு....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- phozhil - 07-01-2004

kuruvikal Wrote:இந்தப் படத்துக்கு ஏற்ற கவி வரிகளை தர முயலுங்களேன் இங்கு....!

நரைமனப் பிஞ்சுகளின் நயனங்கள்
நவில்வது யாதோ?
"நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்...."
நல்லப்பர் மரபாம் நாங்கள்:

நரைகிழடு நகையினூடே நாணி
நனிவியப்பதேனோ?
நயவஞ்சம் நசிக்க,
நச்சுநரிகளை முறிக்க,
நகுமுக நறுமுகைகள்
நிரலும் நயம் நண்ணி:


காற்றில் கலந்த இவர்கள் கீதம்
நாறும் நாளை இறையே நல்க.....


- sWEEtmICHe - 07-03-2004

படிக்க நன்றாய் இருக்கு ..
நன்றி குருவி நண்பா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 07-03-2004

பொழில் அவர்கள் இனிய தமிழில் உரையாடுகிறார்... நன்றாக இருக்கிறது.