Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 241 online users.
» 0 Member(s) | 238 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  தமிழ் பேரினவாதி
Posted by: kavithan - 06-25-2004, 11:14 PM - Forum: கவிதை/பாடல் - Replies (17)

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_kathirkammer2.jpg' border='0' alt='user posted image'>


<b>தமிழ் பேரினவாதி</b>

தமிழனாய் பிறந்து!
பேரினவாதியாய்!
வாழ்பவர் உண்டோ!
என்றால்?
ஆம்.

தமிழனுக்காய்
பாடுபடும் (சும்மா) !
ஒரே ஒரு !
பேரினவாதி உண்டோ!
என்றால் ?
ஆம்.

தமிழை !
தமிழ் மண்ணை !
தமிழ் இனத்தை !
உலகிற்கே !
விற்பவர் உண்டோ!
என்றால்?
ஆம்.

தலைவியின் மனதில்
தனக்கென !
ஒரு இடத்தை
அமைத்தவர் !
ஒருவர் உண்டோ!
என்றால்?
ஆம்.

தன் வாயால்!
தரணி எங்கும்!
தப்புத் தப்பாய்!
தனக்கே உரிய தோரணையில்!
ஒன்றுக்கு முரணான
கருத்தக்களை
வெளியிடுவதிலும்!
பின் மறுப்பதிலும்!
அலாதிப் பிரியம்
கொண்டவர் உண்டோ!
என்றால்?
ஆம்.

ஆமாம்,
இவையெல்லாம்,
ஒருங்கே கொண்ட..
அவர்தான்!
சந்திரிக்கா அரசில்
தற்காப்பு இயந்திரமாய்
வெளி நாட்டு அமைச்சை
நெடுங்காலமாய்
தன்னகத்தே கொண்டு
அமெரிக்கா, அவுஸ்திரேலியா..,
இந்தியா, இஸ்ரேல்..,
இங்கிலாந்து, ஐப்பான்..
என்று..........
உள்ள நாடெல்லாம்
சும்மா சுற்றி திரிந்து
கனவு கண்டு
கண்டபடி உளறுகின்ற
கதர்காமர்.

என்னத்தை சொல்ல
பட்டும் திருந்தலையே (பிரதமர் பதவி)….....




கவிதன்
15/5/2004

Print this item

  வணக்கம் கூறி உங்களுடன் இணையும் வெண்ணிலா
Posted by: வெண்ணிலா - 06-25-2004, 07:47 PM - Forum: அறிமுகம் - Replies (19)

எல்லோருக்கும் இனிய தமிழ் வணக்கங்கள்
எவ்வளவு கஸ்டப்பட்டு உங்களுடன் இணைந்துள்ளேன்
உங்களுடன் எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

Print this item

  பயன் தரும் யாழ் இணையம்
Posted by: kirubans - 06-25-2004, 02:01 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (39)

பல காலமாக இத் தளத்தை பாவித்து வருகிறேன். எனினும் இதுவரை முழு விடயங்களையும் பார்த்து முடிக்கவில்லை. நல்ல முயற்சி. நீண்ட காலம் நிலைத்து தமிழ் மக்களுக்கு சேவையற்றுமென நம்புகிறேன்.

Print this item

  வணக்கம்
Posted by: kirubans - 06-25-2004, 01:46 AM - Forum: அறிமுகம் - Replies (22)

கருத்துக்களத்துக்கு நான் புதிய அங்கத்துவன். ஒரு மாதிரி தமிழில் எழுத பழகி விட்டேன். விரைவில் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்ன வழி?

Print this item

  காதலின் விதி.....!
Posted by: kuruvikal - 06-24-2004, 10:39 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<img src='http://kuruvikal.yarl.net/archives/flower1.jpg' border='0' alt='user posted image'><img src='http://kuruvikal.yarl.net/archives/bird_on_tree.jpg' border='0' alt='user posted image'>

மலரே
வசந்தத்தோடு வந்த
வாசமே
பூங்குருவி நானும்
மனதோடு பூத்த
இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு
சுற்றிச்சுற்றி வந்தேனே....!
பாவி....
பாத்திருக்க பருதவிக்க
காதல் கனவெல்லாம் பறித்தெடுத்து
பாதி வழியில் விட்டு
நீ மட்டும்
வாடி வீழ்வதேனோ
உன்னோடு
என் கூடும் வரும்
வாடா
என் காதல் மலரே.....!

அப்படி என்று பிதட்ட
இது பேதைக் குருவியல்ல....
அதுதான் காதலின்
பொது விதி போலும்....?!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி ... http://kuruvikal.yarl.net/

Print this item

  வெளிநாடு சென்று தேடும் பிரபஞ்சப் பரத்தை...!
Posted by: kuruvikal - 06-23-2004, 02:47 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (41)

நம்மவர்களின் வாழ்க்கையில் வெளிநாட்டுக் காசு என்பது இப்போது பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது. ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையாவது வெளிநாட்டில் இல்லையென்றால் அவர்களின் சீவியம் கஷ்டம் என்று ஒரு வழமையே தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அநேகமாக, ஒரு குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் இல்லாத நிலைமை நம்மவர்களின் மத்தியில் அபூர்வம்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் நம்மவர்கள் என்ன பாடுபடுகின்றார்கள் என்பதைப் பற்றி இங்குள்ள நம்மவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உண்டியலில் பணம் வருகிறதென்றால் போதும் அவ்வளவுதான். வெளிநாட்டில் அவர்கள் வெயிலில், குளிரில் என்று படும் கஷ்டங்களைப் பற்றி கடிதம் எழுதினாலும் என்ன செய்வது தம்பி வீட்டு நிலைமையை யோசித்து மனதைப் பொறுத்து வாழப்பழக்கொள். சகோதரங்கள் கரைசேர வேண்டுமல்லவா என்று கண்களைக் கலங்க வைக்கக்க் கூடியதாக பதில் கடிதம் எழுதுவதில் நம்மவர்கள் பாண்டித்தியம் பெற்று விட்டார்கள்.

போர் நிலைமைகளினால் வடக்கு,கிழக்கில் ஏற்பட்ட அவலங்களுக்கு மத்தியிலும், நம்மவர்கள் எமது பாசையில் சொல்வதானால் 'ஒருவாறு சரிக் கட்டினார்கள்' என்றால் அதற்கு பெருந்துணை புரிந்து இந்த வெளிநாட்டுக் காசுதான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்துவரும் நம்மவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்களின் நிலைமைகளின் அவலம் குறித்து எவருமே பெரிதாக அக்கறைப்படுவதாக இல்லை. அவர்கள் எந்த நோக்கத்துக்காக அந்தப் பாலைவன நாடுகளுக்குச் சென்றார்களோ அந்த நோக்கம் நிறைவேறுவதாக இல்லை. மாறாக, முன்னர் இருந்ததையும்விட வாழ்க்கை பெரும் கஷ்டமானதாகப் போயிருப்பதையும் காணமுடிகிறது.

நேற்றுக்கூட சார்ஜாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் இந்தியப் பிரஜையால் கொல்லப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பைகளில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தியைப் படித்திருப்பீர்கள். இப்படி எத்தனை பேருக்கு நேர்ந்த சதி எமக்குத் தெரியாமல் போனதோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். மானம் மரியாதையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். உயிரைப் போக்கக் துணிச்சல் இல்லாமல் நாடு திரும்பியவர்களை குடும்பத்தவர்கள் திரும்பியும் பார்க்காமல் அநாதை இல்லங்களில் தஞ்சமடைந்தவர்களும் ஏராளம்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைசெய்யும் இலங்கையர்களில் 64 சதவீதமானவர்கள் வெறுங்கையுடன் தான் கட்டுநாயக்கா வந்து இறங்குகிறார்களாம். விமானம் ஏறுவதற்கு முன்னர் தங்களிடம் இருந்தவற்றைக்கூட திரும்பிவரும்போது அவர்களிடம் காணமுடிவதில்லையாம். வீட்டில் விட்டு விட்டுப்போன கணவன்மான், பிள்ளைகளைக் கூட நாடு திரும்பி வந்து தேட வேண்டிய நிலையில் சில பெண்கள்.

இது எனது கண்டுபிடிப்பில்லை. வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் இயக்கம் அண்மையில் கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றில் சிறீஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வி யசான்ஜலி தேவிகா என்பவர் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் இத்தகவல் வெளியாகியிருக்கிறது.

வெளிநாட்டுக் காசு கையிலை கிடைத்ததும் அது எப்படி வருகிறது போகிறது என்று கொஞ்சமேனும் யோசிக்காமல் ஊதாரித்தனம் பண்ணுகின்றவர்களின் கண்களைத் திறக்க வேண்டும் என்பதற்காக இதை உங்களுடன் பகிர்கிறேன். வேறு ஒன்றுமில்லை.

வெளிநாட்டு வேலைக்குச் செல்கிற 50 பெண்களில் 46பேர்தான் பொருளாதாரக் கஷ்டங்களால் அவ்வாறு செய்கின்றார்கள். எஞ்சியவர்கள் குடும்பப் பிரச்சினையில் இருந்து தப்புவதற்காகத்தான் வெளிநாட்டு வேலைக்குப் போகின்றார்கள்.

பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிற 46 பெண்களில் 19 பேர் தங்களின் பணவசதியைப் பெருக்குவதற்காகப் போகிறார்கள். 13 பேர் வீடுகள், சொத்துக்களை வாங்குவதற்காகப் பணம் சேர்க்கப் போகின்றார்கள். அதேவேளை, 4பேர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிறார்கள். 50 பணிப்பெண்களில் 25பேர் கடும் வட்டிக்கு கடன் வாங்குகின்றார்கள் என்று தேவிகா தனது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.

இவ்வாறு கடும் வட்டிக்கு கடன் பெற்று வெளிநாடு போகிற பெண்கள் திரும்பி வந்து கடன்களை அடைத்தும் கையில் ஒரு சதமும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். மீண்டும் வெளிநாடு போவதற்காக அவர்கள் கடும் வட்டிக்கு மீண்டும் கடன்படுகின்றார்கள். 13 பேர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் எந்தவிதமான பிணையும் இல்லாமல் கடன் வாங்கிச் செல்கின்ற அதேவேளை, 50 பேரில் 8 பேர் வீடு வாசல்களை அடகுவைத்துச் செல்கின்றார்கள். 50 பேரில் ஒருவருக்குத்தான் கணவனிடம் இருந்து உதவி கிடைக்கிறது.

40 வீதமான கணவர்கள் குடும்பத் தலைவன் என்று பிள்ளைப் பெயர் பதிவுக்குத்தான் இருக்கின்றார்கள். மற்றும்படி, குடும்பத்தின் ஜீவனோபாயத்துக்காக எந்தத் தொழிலையும் செய்வதில்லை. இவர்கள் மனைவிமாரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லுமாறு உற்சாகப்படுத்துகிறார்கள்.

இந்தப் பணிப் பெண்களின் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் பல விதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி நாளடைவில் நாசகாரத்தனமான சிந்தனையுடையவர்களாக சமூகத்தில் பிரவேசிப்பதால் வெளிநாட்டு வேலைக்கு பெண்களை அனுப்பவது எமது நாட்டுக்கு ஒரு சாபக் கேடாக அமைகிறது. இதனால் பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதை அரசாங்கம் ஊக்குவிக்கக் கூடாது.

நாட்டு நீண்ட காலப் போக்கில் ஏற்பட்ப் போகிற பாதிப்புப் பற்றிப் பொருட்படுத்தாமல், வெளிநாட்டு செலாவணிக்காக அரசாங்கம் பெண்களை வெளிநாட்டு வேலைக்கு ஊக்குவிக்கின்றது. மாதம் 2500ரூபா சம்பாதித்துக்கொண்டு பிள்ளைகளைக் கவனிப்பது சிறந்தது. அதைவிட்டு விட்டு மாதம் 8000 ரூபா சம்பாதிப்பதற்காகச் சென்று ஈற்றில் குடும்பம் உட்பட சகலதையும் இழப்பதில் என்ன மிஞ்சப் போகிறது என்று தேவிகா கேட்கிறார்.

பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் 6 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்.

பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதில் இருக்கிற ஆபத்தை உணர்ந்து இந்தியா அதை முற்றுமுழுதாகத் தடை செய்திருக்கிறது. பாகிஸ்தானும் பங்காளதேஷீம் கடுமையான நிபந்தனைகளுடனேயே பெண்களை வேலைக்கு அனுமதிக்கின்றன. பெணகள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதால் சமுதாயத்துக்கு ஏற்படுகிற ஆபத்துக்கள் குறித்து ஆய்வறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டி அந்தச் சாபக்கேட்டை நிறுத்துமாறு வலியுறுத்தினாலும் எமது அரசாங்கம் அவ்வாறு செய்யத் தயாரில்லை. பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதைத் தடை செய்யத்தான் தயக்கம் என்றால், உற்சாகப்படுத்தாமலாவது இருக்கலாமல்லவா? இவ்வாறு விரிவுரையாளர் தேவிகா அந்தக் கருத்தரங்கில் தர்மாவேசத்துடன் விளக்கங்கள் தந்தார்.

உண்மையில் இதை நீங்கள் எத்தனைபேர் அறீந்திர்களோ தெரியாது என்பதால் உங்கள் எல்லோருக்கும் இது தெரியவேண்டுமென்ற அக்கறையில் இதை சொல்லுகிறேன்.

வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தாய்மாரின் பெண் பிள்ளைகளை தந்தைமார் கெடுத்ததாகவும் செய்திகளை நாங்கள் படிக்கின்றோம். வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிட்டு தனது குடும்பம் தான் அனுப்பிய பணத்தில் சந்தோசமாக இருப்பதைப் பாரக்கும் ஆவலில் ஓடோடி வரும் பெண்மணிகள்.

கணவன்மார் ஊதாரித்தனமாக பணத்தைச் செலவு செய்து பிள்ளைகளையும் அப்போ என்று கைவிட்டு, இன்னொருத்தியுடன் உல்லாசம் செய்வதைக் கடண்ட அவல அனுபவங்கள் பற்றி படித்திருப்பீர்கள். தாய்மாரின் முறையான பராமரிப்பில் வாழ வாய்ப்பில்லாமல், தாய் அனுப்புகின்ற காசில் ஊதாரித்தனம் பண்ணும் அப்பன்மார் ஏதோ தாணோ என்று வளர்ந்த ஆண் பிள்ளைகளில் பலர் தான் இன்று பாதாளலோகம் அது இது என்று அடாவடித்தனம் பண்ணுகின்ற கும்பல்களில் பெரும்பாலும் சேருகின்றார்கள்.

இந்தமாதிரியான நிலைமைகளால் தான் சமுதாயம் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது என்பதையும் பணம் மாத்திரம் தான் வாழ்வு என்ற சிந்தனை கொண்டு வந்த தாழ்வு இது என்பதையும் நம்வர்கள் புரிந்து கொள்ளவேணும்.

காசு ஒரு பிரபஞ்சப்பரத்தை என்று யாரோ ஒருமேதை சொன்னதாக எங்கேயோ வாசித்த ஞாபகம் எனக்கு. அந்த மேதை யார் என்று மூளையைப்போட்டுக் குழப்பியும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. அறிந்தால், அறிய முடிந்தால் எனக்கும் அறிவியுங்கள்.

அவர் சொன்னது எவ்வளவு தூரம் சரி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள உங்களிடம் விட்டு விடுகிறேன் பொறுப்பை.


அண்ணாவியார் தினக்குரல் & sooriyan.com

Print this item

  தெற்காசியா நோக்கி பலமடைய முனையும் அமெரிக்க வல்லாதிக்கம்...
Posted by: kuruvikal - 06-23-2004, 01:51 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

மத்திய ஆசியாவில் அதிகரித்து வரும் அமெரிக்க தலையீட்டுக்கு இருப்பிட வசதியளிக்கும் இலங்கை

அமைதி காக்கும் படைக்கான பயிற்சி முகாமும் அமெரிக்க - இலங்கை இராணுவ உறவுகளும்

இலங்கையில் ஏப்ரல் 2 தேர்தலை அடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றிய அதன் வரையறுக்கப்பட்ட விமர்சனங்களை கைவிட்டுள்ள அதேவேளை, அது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" ஆதரவளித்தல் என்ற போர்வையில் புஷ் நிர்வாகத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குகிறது.

வெளியுறவு அமைச்சர் லஷ்மன் கதிர்காமர், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உட்பட ஒரு தொகை விடயங்கள் பற்றி சிரேர்ட அமெரிக்க அலுவலர்களுடன் ஒரு தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக மே நடுப்பகுதியில் வார்pங்டனுக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டார். ஈராக்கினுள் பரந்தளவிலான அமெரிக்க விரோத எழுச்சியும் மற்றும் ஈராக்கிய கைதிகள் மீதான திட்டமிடப்பட்ட அமெரிக்க சித்திரவதைகள் பற்றிய அம்பலப்படுத்தல்களும் இடம்பெற்ற சமயத்திலேயே கதிர்காமர் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த போதிலும், அவர் அமெரிக்க கொள்கைகள் பற்றிய எந்தவொரு விமர்சனமும் செய்யவில்லை.

மாறாக, புரூகிங்ஸ் நிலையத்தில் கதிர்காமர் உரையாற்றும் போது, புஷ் நிர்வாகத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். செப்டெம்பர் 11 க்கும் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே இலங்கை பயங்கரவாதத்திற்கு இலக்காகி வந்துள்ளது. இப்போது அது உலகம் அறிந்த விடயம். பயங்கரவாதத்தின் கொடுமைகளையிட்ட உங்களுடைய மனவேதனைகளை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். அமெரிக்காவை உலகம் முழுவதும் மெச்சுகிறது. நாம் அமெரிக்காவின நிரந்தர நண்பர்களாக இருப்போம் என அவர் தெரிவித்தார்.

இலங்கை, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு வழங்கும் ஆதரவிற்கு பிரதியுபகாரமாக, கொழும்பு அரசியல் நிறுவனம் வழமையாகவே 'பயங்கரவாதிகள்" என முத்திரை குத்தி வரும் விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதில் அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றது. வாசிங்டன், விடுதலைப் புலிகளுடனான இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு நெருக்கி வருகின்றது. கொழும்பு அரசாங்கம் தன்னுடைய நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு தள்ளுவதற்காக புஷ் நிர்வாகத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.

கதிர்காமரின் கருத்துகள், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது சிலங்கா சுதந்திரக் கட்சியின் (சி.ல.சு.க.) பக்கம் ஒரு பெரும் மாற்றத்தை பிரதிபலிக்கவில்லை. 2001 இல் அவரது முன்னைய ஆளும் கூட்டணியான பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை வெளியேற்றுவதற்காக தனது முழு ஆதரவையும் கொடுத்தது. இது ஐம்பது வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்குள் இந்தியத் துணைக்கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவத் தலையீடாகும். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமெரிக்காவிற்கு விமானத்தள மற்றும் துறைமுக வசதிகளை வழங்குவதற்கு தனது தயார் நிலையை பிரகடனப்படுத்தியது.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட சமயம் பொதுஜன ஐக்கிய முன்னணி, அரசாங்கத்தில் இருக்கவில்லை. ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் யுத்தத்திற்கு சந்தேகத்திற்கிடமற்ற ஆதரவைப் பிரகடனப்படுத்தியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, ஐ.தே.மு.வின் நிலைப்பாட்டை தொகுத்துரைத்தார். ஐ.நா.வை குற்றம் சாட்டுவதன் மூலம் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி வாசிங்டனுக்கு ஒரு உலக பொலிஸ்காரனைப் போல் தலையீடு செய்வதைத் தவிர வேறு தேர்வுகள் இல்லாத நிலைமையை தோற்றுவித்துள்ளது எனப் பிரகடனம் செய்தார்.

குமாரதுங்கவோ அல்லது 'இடதுசாரி" பங்காளிகளான லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோ சரி அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பையும், அதை நியாயப்படுத்துவதற்கு கூறப்பட்ட பொய்களையும் அல்லது இந்த எண்ணெய் வள நாடு மீதான சட்டவிரோதமான நவ காலனித்துவ ஆக்கிரமிப்பையும் கண்டனம் செய்யவில்லை. யுத்த விரோத எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்வதன் பேரில், குமாரதுங்க சில எச்சரிக்கைகளை வெளிப்படுத்தியதோடு விக்கிரமசிங்கவையும் விமர்சித்தார். சில சி.ல.சு.க. தலைவர்கள் யுத்த விரோத எதிர்ப்புகளிலும் இணைந்து கொண்டனர்.

எவ்வாறெனினும், குமாரதுங்கவின் நிலைப்பாடானது எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் எனும் பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் அழைப்பிற்கு ஆதரவளிப்பதோடு வரையறுக்கப்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரியில் கோலாலம்பூரில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய போது, ஐ.நா. அமைப்பின் அங்கீகாரமின்றி ஒரு இறைமையுடைய நாட்டை ஆக்கிரமிப்பது இலங்கையின் நிலைப்பாடு அல்ல எனப் பிரகடனப்படுத்தினார். அவரது உரையில், அமெரிக்கா பற்றியோ அல்லது ஈராக்கிலான அதன் திட்டங்கள் பற்றியோ குறிப்பிடுவதற்குக் கூட தவறி விட்டார். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து குமாரதுங்க இந்த முணுமுணுப்பு விமர்சனங்களைக் கூட கைவிட்டு விட்டார்.

எவ்வாறெனினும், குறிப்பிடத்தக்க வகையில், சுதந்திரக் கூட்டமைப்பில் சி.ல.சு.க.வின் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசாங்கத்தின் நிலைப்பாட்டையிட்டோ அல்லது அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளை பலப்படுத்துவதையிட்டோ எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. 1960 இல் சிங்கள பேரினவாதம் மற்றும் காஸ்ட்ரோவாதத்தின் ஒரு கலவையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஜே.வி.பி., இன்னமும் சில சந்தர்ப்பங்களில் ஏகாதிபத்திய விரோதியாக காட்டிக் கொள்வதோடு மற்றும் அடிக்கடி ஊடகங்களில் மார்க்சிச அமைப்பாகவும் விபரிக்கப்படுகிறது.

ஜே.வி.பி. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, யுத்தத்திற்கு தனது எதிர்ப்பை பிரகடனப்படுத்தியதோடு பிரான்ஸையும் ஜேர்மனியையும் சமாதானத்தின் வல்லுநர்கள் என புகழ்ந்தது. ஆனால், புஷ் படையெடுப்பை பிரகடனப்படுத்திய பின்னரும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈராக்கிலான அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்வதை ஏற்றுக் கொண்டதை அடுத்தும் ஜே.வி.பி. 'எதிர்ப்பு" மங்கிப்போனது.

இப்போது சி.ல.சு.க. முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஜே.வி.பி. அரசியல் நிறுவனத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. அதன் யுத்தவிரோத வாய் வீச்சுகள் சம்பிரதாய சொற்பொழிவுகளுக்காக விதிவிலக்கற்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு இராணுவங்கள் ஈராக்கை விட்டு 'வெளியேற வேண்டும்" என்பது ஜே.வி.பி.யின் இந்த வருட மே தினக் கூட்டத் தீர்மானங்களில் ஒன்றாக இருந்த போதிலும், சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அத்தகைய கொள்கைக்கு அடிபணிய வேண்டும் மற்றும் பிரசாரம் செய்ய வேண்டும் எனக் கோரும் எண்ணம் அந்தக் கட்சிக்கு கிடையாது.

அமெரிக்க - இலங்கை இராணுவ உறவுகள்

சுதந்திரக் கூட்டமைப்பு சொற்களில் மாத்திரமன்றி செயலிலும் பிராந்தியத்திலான வார்pங்டனின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றது. புதிய அரசாங்கமானது வார்pங்டனுடனான இராணுவ உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள முன்செல்கின்றது. இது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்புக்கு வசதியளிக்கும். இலங்கைத் தீவானது முக்கிய கடல் மார்க்கங்களைச் சார்ந்திருக்கும் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் விசேடமாக தெற்காசியாவிலான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு வசதியான தேவை நிரப்பும் மையமாக விளங்கும் இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கின்றது.

கதிர்காமரின் விஜயத்தின்போது, அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், அமெரிக்காவின் மூலோபாயத்திற்கு இலங்கையில் அதிகரித்துவரும் முக்கியத்துவம் பற்றி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் சமிக்ஞை செய்தார். 'எல்லா விவகாரங்களிலும் இலங்கையின் உதவி பெறப்படும்... பயங்கரவாதம் மீதான யுத்தம் பற்றிய விடயத்தில்" என அவர் விபரிக்காமலே பிரகடனம் செய்தார்.

ஐ.தே.மு. அரசாங்கம், அமெரிக்க யுத்தக் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எண்ணெய் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய சேவைகளுக்குமாக இலங்கையிலுள்ள தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதற்காக பாவனைக்கும் பரிமாற்றத்திற்குமான உடன்படிக்கை ஒன்றைப் பற்றி அமெரிக்காவுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களைத் தொடங்கிவிட்டது. கதிர்காமர் வார்pங்டனில் இருக்கும்போது, பிராந்தியத்தில் ஒரு விரிவான அமெரிக்க இராணுவ தேவை நிரப்பு வலையமைப்புக்கான திட்டத்தின் பாகமாக விளங்கும் இத்தகைய உடன்படிக்கையுடன் முன்செல்வதற்கு சுதந்திரக் கூட்டமைப்பின் விருப்பத்தைச் சுட்டிக்காட்டினார்.

2002 இல் பிலிப்பைன்ஸால் கைச்சாத்திடப்பட்ட இதுபோன்ற ஒரு உடன்படிக்கை அமெரிக்காவின் கோரிக்கையின் அளவு என்ன என்பதை சுட்டிக் காட்டுகிறது. இராணுவ அணிவகுப்பு மற்றும் உதவி உடன்படிக்கையானது, படைவீரர் தங்குவதற்கு வசதியளிப்பது போன்ற அடித்தள சேவைகள், தொலைத் தொடர்பு மற்றும் வைத்திய சேவை உட்பட, விரிவான தேவை நிரப்பு மற்றும் களஞ்சிய வசதி போன்றவற்றை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்குகின்றது.

சுதந்திரக் கூட்டமைப்பு ஈராக்கிற்குத் துருப்புகளை அனுப்பாத போதிலும், இலங்கை தற்போது 'அமைதிகாக்கும்" படைக்கு அமெரிக்க அனுசரணையிலான ஒரு பயிற்சி முகாமை நடத்துகிறது. முதற்தடவையாக பங்களாதேர்pய, நேபாள மற்றும் மொங்கோலிய துருப்புகள் தெற்காசிய அமைதி காக்கும் முன் நடவடிக்கையின் ஆதரவின் கீழ் தீவின் தெற்குப் பகுதியில் ஒரு இரகசியமான இருப்பிடத்தில் கூட்டு காலாட்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்கிலி பத்திரிகையின் அண்மைய வெளியீட்டில், இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல, ஆரம்பத்தில், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு, நாம் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடவேண்டி வரும். பின்னர், எங்களால் சமாதான அமுலாக்கத்திற்கு செல்லமுடியும் எனக் குறிப்பிட்டார். இந்தக் கருத்துகள், இலங்கை அமெரிக்காவின் பூகோளம் முழுவதும் கொள்ளையிடும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய தயாராகின்றது என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இவை அனைத்தும் அமைதிகாத்தல் என்ற போர்வையிலேயே இடம்பெறுகின்றன.

அமெரிக்கா இலங்கை இராணுவத்தில் நீண்ட தலையீடு செய்துள்ள வரலாற்றைக் கொண்டுள்ளது. இதில், இலங்கையின் விசேட படைப் பிரிவுகளுக்கு பயிற்சியளிப்பதும் அடங்கும். ஆயினும், இந்த அபிவிருத்திகள், சுதந்திரக் கூட்டமைப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவை அமைப்பதை சுட்டிக் காட்டுகின்றன. கதிர்காமர் அமெரிக்காவில் இருக்கும்போது, அமெரிக்க கடற்படை இலங்கைக்கு விற்கவுள்ள கடற்கரை பாதுகாப்பு கப்பலையும் பார்வையிட்டார். பென்டகனும் மே மாதத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க அனுசரணையிலான கோப்ரா கோல்ட் கூட்டு இராணுவப் பயிற்சியைப் பார்வையிட இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இலங்கை, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்ப்பதோடு எல்லா வெளிநாட்டு துருப்புகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றக் கோருமானால், இந்த அனைத்தும் இயல்பாகவே சாத்தியமற்றதாகிவிடும். இது குமாரதுங்கவும் சி.ல.சு.க. வும் மற்றும் ஜே.வி.பி.யும் செய்ய விளையாத ஒன்று.

thinakkural.com

Print this item

  கண்டு பிடியுங்களேன் பார்ப்போம்......
Posted by: kavithan - 06-23-2004, 07:56 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (72)

நீங்கள் எவ்வளவு கவனத்துடன் ஒருவிடையத்தைப் பார்க்கிறீர்கள் என்பதை இதை வைத்து அறிவோமா. ஆமாம் இது ஒரு ஒவியரால் வரையப்பட்ட ஓவியம் இதில் அதிசயம் என்னவென்றால் கண், முக்கு, வாயுடன் கூடிய தெளிவான முகங்கள் சில இதில் உண்டு. நீங்கள் அதைக் கண்டு பிடித்து எழுத வேண்டும்.
விடையை நான் ஞாயிற்றுக்கிழமை சொல்லுறன். சரியா.எதுக்கும் ஞாபகப் படுத்துங்கள். இதனை இன்னொரு இணையத் தளத்தில் இருந்துதான் எடுத்தனான். ஆனாலும் அதனை இப்ப சொன்னால் நன்றாக இருக்காது. இதைக் கண்டுபிடியுங்கோ முன்னம்.......................................... Arrow Arrow Idea Idea :?:

Print this item

  100MB இலவச மின் அஞ்சல் யாகுவிலில் YAHOO.COM
Posted by: kavithan - 06-23-2004, 05:37 AM - Forum: இணையம் - Replies (35)

<b>யாராவது யாகு இணையத்துக்குப் போனீர்களா? எவ்வளவு அருமையான திட்டம் 100 மெகாவாடஸ் இலவச மின்னஞ்சல் வசதியைப் பெற்றுக் கொள்ளலாமாம். எவ்வளவு முக்கிய அஞ்சலையெல்லாம் அழித்து ,அழித்து 2mbக்கையும், 4mbயும் எண்டு 5, 6 மெயிலை பதிவுசெய்து வத்திருப்பீர்கள். இனியந்தக் கவலையே இல்லை.

http://www.yahoo.com
http://mail.yahoo.com/
இதே வசதியை கூகிள் ளும் குடுக்குதாம் G_MAIL என்ற பெயரிலை. ஆனால் அங்கை கன கேள்வியள் கேக்கிறாங்கள். இஞ்சை அப்படியில்லை முந்தி எப்படி பதிஞ்சமோ அதே மாதிரிதான். ஆனாலும் இதிலை 2 கேள்வி வித்தியாசம், பொய்தான் சொல்லி பதிஞ்சு ஒண்டு எடுத்துட்டு தான் உங்களுக்கே எழுதுறன்.
வேளைக்கு போங்கோ உங்களுக்கு விரும்பிற பேர் கிடைக்காது........ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[size=18][b]Take a closer look at
Yahoo! Mail.</b>
<b><ul>Get these great features:
Powerful protection against spam and viruses
100MB of email storage
Message size up to 10MB
Mail anywhere there's a web connection மேலதிக விபரங்களுக்கு
http://us.info.mail.yahoo.com/



[size=24] [b]WWW.YAHOO.COM</b>

Print this item

  அம்பலமாகின்றது இன்னுமொரு சதி
Posted by: kuruvikal - 06-22-2004, 09:00 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (48)

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எல்லோரும் தங்களின் எதிர்கால சுதந்திர வாழ்வைப்பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்க தமிழர்களின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றும், இன்றைய போராட்டத்தின் உயிர்நாதமுமாகிய கல்வியை அழிக்க முனையும் சக்திகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போராட்டம் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமானது.

கடந்த 14.06.2004 முதல் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக அங்கு பணிபுரியும் ஊழியர்களால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை முற்றுமுழுதாக தரப்படுகின்றது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக சமூகத்தவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் 14.06.2004 முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தம வித்திட்ட காரணிகள் (முக்கியமானவை மட்டும் கீழே தரப்பட்டுள்ளன)

1. பல்கலைக்கழக பதிவாளர் ஏழாட்டை விடுமுறையுடன் இணைந்த வெளிநாட்டு விமானப் பயணச்செலவை குறிப்பிட்ட நாட்டிற்கு செல்லாமலே பெற்றுக்கொண்டமை. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காததுடன் காலதாமதத்தின் மூலம் மோசடியை மூடிமறைக்க முனைகின்றமை.

2. பல்கலைக்கழக போதனைசாரா பணியாளர்களின் பணிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்க பலத்தை நசுக்க முனைவதுடன், அவ்வாறு தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்சை; சார்ந்தவர்களும் அவர்களின் பங்குக் கூட்டாளிகளும் இலாபமீட்டல்.

உ-ம் 1. வெளிவாரி கற்கை நெறிஅலகில் துப்பரவாக்கல் பணிகளுக்கு தனியார் நிறுவனமொன்றிற்கு மாதமொன்றிற்கு ரூபா 14,700 + VAT (வரி) உள்ளக ஊழியர் ஒருவரை நியமித்தால் ஏற்படும் செலவு ரூபா 7,000 மட்டுமே.

உ-ம் 2. தனியார் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளமை. வாடகை நாளொன்றுக்கு ரூபா 500 பிரயாணத்தின்போது கிலோ மீற்றருக்கு ரூபா 5, தரி;த்து நிற்பதற்கு மணித்தியாலம் ஒன்றுக்கு ரூபா 124 ஆகவே நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ரூபா 1,500 10 கடமை நேரம் தவிர்ந்த பிற நேரப் பாவனைக்கு புறம்பான கட்டணம்.

வாகன உரிமைiயாளராகப் பல்கலைக்கழக காதிதாதி வழங்குனர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிகின்றோம். நிதிக்கிளையின் பெரும்புள்ளிகள் சிலரும் இவ்வாகன உரிமையுடன் சம்பந்தப்படவதாகவும் சில தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஓட்டோ வாகனம் மாதக் கணக்காக உபயோகப்படாமல் உள்ளது. ஓட்டோ மற்றும் வாகனங்களுக்கென நாட் கூலி அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஊழியரும் சேவைக்கு அழைக்கப்படுவதில்லை. பல்கலைக்கழகத்தின் வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய தருணங்களிலும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இத்தனியார் வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

உ-ம் 3. அரியாலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் குடியிருந்த அவரின் உறவினர் வீடு துணைவேந்தர் விடுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீட்டு உரிமையாளர் சிலர் விண்ணப்பித்திருந்த போதிலும் 5 கிலோமீற்றருக்கும் கூடிய தொலைவிலுள்ள இவ்வீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் விடுதிக் காப்பாளராக 67 வயது முதியவர் நியம விதிமுறைகளுக்கு முரணான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. சகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ரூபா 1150/1000 சம்பளப்படி பிற பல்கலைக்கழகங்களில் நிலுவையுடன் வழங்கப்பட்டுள்ள போதும் எமது பல்கலைக்கழகத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.

4. சேவை மூப்பும் கல்வித்தகமையும் கொண்டோரைப் புறக்கணித்து குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்ட சேவை மூப்புக்குறைந்த ஒருவரை பிரதம பாதுகாப்பு அதி;காரியாக எமது பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவு செய்தது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவரின் பிரத்தியேகக் கோவையில் பல பக்கங்கள் அகற்றப்பட்டிருப்பதாக எமக்கு நம்பகமாக தெரிய வந்துள்ளது. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் அலுவலகத் தளபாடத் திருட்டு வழக்கி;ல் குற்றவிசாரணைக்கு உள்ளானவர். வேறொரு திருட்டுக்கு உடந்தையாக இருந்தமைக்காக ஒருவார சம்பளம் தண்டமாக விதிக்கபட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் ஏராளமான திருகுதாளங்களில் ஈடுபட்டவர். பல்கலைக்கழக கடனொன்றைப் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்த அலுவலகங்களில் இக்கடனை இருமுறை (உண்மையான கடன்தொகையிலும் இருமடங்கு) பெற்றுள்ளார். இம்மோசடி கண்டு பிடிக்கப்பட்டது. இவருக்கும் எமது துணைவேந்தருக்கும் இருந்த நெருக்கத்தின் காரணமாக பிரதம பாதுகாப்பு அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த நெருக்கத்தின் பயனாய் இவர்கள் இருவரும் பெற்ற பலன்களும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. எனினும் அழுத்தங்களின் காரணமாக இதுவரை இதுகுறித்த நியமிக்கும் மனுவை பேரவைக்கு சமர்ப்பிக்காது துணைவேந்தர் இழுத்தடித்து, ஒத்தி வைத்துள்ளார்.

5. பல்கலைக்கழக ஊழியர் சிலருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்படாமல் தண்டனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு இவ்வாறு தண்டனைக்கு வழங்கப்பட்டமை தவறானது என்பதை வெளிப்படுத்தியது. எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்பை அமுலாக்க மறுக்கும் நிர்வாகம் இத்தீர்ப்பு தொடர்பாக அறிக்கை வெளியிடுமாறு பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினர்கள் இருவரைப் பணித்துள்ளது. அவர்கள் இருவரும் 10 மாதங்களாக இந்த அறிக்கையை ஆராய்ந்து வருகிறார்கள்!!!

6. ஊழியர் இடர்கடன் மீளளிப்புத் தொகைக்கடன் வழங்கலுக்கு மீளப்பயன்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை. மேலும் இடர்கடனுக்கும், ரூபா 12,200 கடனுக்கும் ஆவணங்கள் ஆதாரம் காட்டுமாறு கோரப்பட்டுள்ளன. இந்நடைமுறை ஏனைய பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படுவதில்லை. இங்கும் இவ்வாறு ஆதாரம் காட்டாத அதிகாரிகள் சிலருக்கு இடர் கடன் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் கடன் மீளளிப்பு தொகையும் பிற தேவைகளுக்கு பயன்படுகின்றது. போதனை சாரா ஊழியர் கணினிக்கடனைப்பெற சுற்றுநிருபத்தின் வாயிலாக தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் இக்கடன் வழங்கல் இப்பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டது.

இது தவிர 30.01.2004 அன்று அங்கத்தவர்களுக்கு வெளியிட்ட பிரசுரத்தில் குறிப்பிட்ட கோரிக்கையில் தீர்க்கப்படாதவைகளும், 14.05.2004 பொதுச்சபை தீர்மானங்களும் எமது கோரிக்கையில் அடங்கும்.

ஏன் இந்தப்போராட்டம்?

நிர்வாகத்தில் காணப்படும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் தனியார் மயமாக்கலால் பாதிக்கப்படும் ஊழியர்களையும் அவர்களது நலனையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையாகும். இந்த ஊழியர்களின் பிரச்சனை அநேகருக்கு சாதாரண பிரச்சனைபோல் தோன்றலாம். இந்தப் பிரச்சனையின் தாற்பரியம் எவ்வாறு இருப்பினும் அவர்களால் வெளிக்கொண்டு வரப்பட்ட பிரச்சனைகளின் ஆழத்தினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

நிர்வாகத்தின் ஊழல்!

ஒரு நிர்வாகத்தில் காணப்படும் ஊழல் என்பது பலருக்கு சாதாரண விடயமாக இருக்கலாம் ஏனெனில் இன்று ஊழல் என்பது இலங்கை அரச ஆட்சியில் எல்லா இடங்களிலும் பரவலாக மலிந்து காணப்படுகின்றது என்ற கருத்து நிலவுகின்றமையே ஆகும். ஆனாலும் 1995ற்கு முன்பு இவ்வாறானதொரு பிரச்சனை யாழ் பல்கலைக்கழக ஊழியர்களால் முன்வைக்கப்படவில்லை. அப்படியானால் அதற்கு பின்னர் ஏதாவது ஊழியர் போராட்டங்கள் இடம்பெற்றதா? என்ற கேள்வி எழும். ஆம் பல போராட்டங்கள் எழுந்தன அவை மிகச் சாதுரியமாக கையாளப்பட்டு தற்காலிக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆகவே தற்போது ஊழியர்களால் வெளிப்படுத்தப்படும் யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடு என்பது இன்றைய அரசியல் நிலைமைகளில் முக்கியமானதொன்றாகும்.

நிர்வாகம் சரியில்லை என்றால் நிர்வாகியின் மீது உள்ள பிரச்சனையே! என்பது படித்தவர்கள் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். மேலும் இக்கூற்றை விளங்கப்படுத்துவதாயின் தமிழ் மூதாட்டி ஒளவை சொன்னது போல 'தலைவன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி" என்ற அனுபவமொழி நன்கு தெளிவுபடுத்தும். 1995ம் ஆண்டிற்கு பின் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்த, தலைமை வகிக்கின்ற உபவேந்தர்கள் இருவரும் பின்கதவால் பதவியில் அமர்ந்தவர்களே! தற்போது உள்ள துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மூன்றாது இடத்தைப்பெற்றவர் என்பதும், அவர் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சர் ஒருவரின் சிபாரிசு பெற்றுப் பதவியில் அமர்த்தப்பட்டவர் ஆவார். முன்னைய துணைவேந்தரும் மேற்படி அமைச்சரின் சிபாரிசில் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லோருக்கும் பதவியில் ஆசை இருப்பது சாதாரணம், இருப்பினும் தகுதியுடையவருக்கு அப்பதவியை வழங்குவதன் மூலமே நிர்வாகத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும் என்ற உண்மை புரியாதவரல்ல அமைச்சர்!. ஆக, அப்பதவியை வழங்கியது என்பது திட்டமிட்ட செயல்.

பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சியால் முதன் முதலாக பொங்குதமிழ் நிகழ்வு கொண்டாடப்பட்டு தமிழருக்கு இழைக்கப்டும் கொடுமைகள் உலகிற்கு வெளிக்கொண்டு வரப்பட்டன. பல்கலைக்கழகம் விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்தது. ஆகவே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் கவனம் பல்கலைக்கழத்தின் பக்கம் திரும்பியுள்ளமை ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல.

அண்மைக்காலமாக சில வெளிநாட்டு சக்திகள் தமிழர் போராட்டத்தை முற்றாக ஒழித்துக்கட்ட பல வழிகளிலும் முயற்சி செய்வது அனேகர் அறிந்த விடயம். அவ்வாறானவர்கள் நேரடியாக எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். தங்களை சிறந்த அறிவாளிகளாக எண்ணுவார்கள். ஏனெனில் சோவியத் யூனியனை (ரஷ்யா) சின்னாபின்னப்படுத்திய பின்பு தங்களின் எட்டு வருட முயற்சியை புத்தகமாக வெளியிட்டவர்கள். தங்களின் நலனுக்காக ஒரு இடத்தில் ஒரு நியாயமும் இன்னொரு இடத்தில் வேறு ஒரு நியாயமும் பேசுவார்கள். இவர்கள் நேரடியாகவே தமிழீழத்தில் வந்து தங்களது வேலைகளைச் செய்ய அவர்களது வெள்ளைத்தோல் இடமளிக்காது! அதனால் தான் காலத்திற்குக் காலம் இலங்கையில் பல துரோகிகள் இவர்கள் வசம் பணிந்துபோனதை வரலாறு குறித்து நிற்கிறது.

அதற்காக நம்மவர்களையே உபயோகப்படுத்துவது தவிர்க்க முடியாது. அந்த வகையில் தங்களை அறியாமலோ அல்லது அறிந்தோ செயற்படுபவர்கள் தான் எங்களுடைய படித்த கல்விமான்களில் சிலர். கல்விமான்களிடையே காணப்படுகின்ற பலவீனங்களுக்கு தீனிபோடுவதன் மூலம் காரியங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதாவது உயர் பட்டங்களின் மீதுள்ள பற்று, உயர் பதவிகளின் மீதுள்ள பற்று, உடல் இச்சைகளின் மீதுள்ள பற்று இவற்றை நிறைவு செய்வதன் மூலம் தமிழர்களின் உயிர்நாதமாகிய கல்வியை சிதைப்பதற்கு கல்விமான்களின் உதவி பெறப்படுகின்றது. எத்தனையே ஆண்டுகளாக விலைகொடுத்து கட்டியெழுப்பபட்ட விடுதலை உணர்வை, இதுவரை கண்ட வெற்றிகளை, சுயலாபங்களுக்காகவும், தனிப்பட்ட குரோதங்களினாலும் இவர்கள் கூட இருந்து செய்கின்ற செயல்களால் சில காலங்களுக்குள் தீர்வு காணப்பட முடியாத நோய்கள் போல (எயிட்ஸ்) எமக்குள் இருந்து எம் இனத்தின் சுவடுகளை அழிக்கும்! வாழ்வை நாசமாக்கும்.

சாதாரண வியாபாரி தனது அன்றாட உணவுத் தேவைக்காக புலிகளின் முகாமைக்காட்டிக் கொடுத்த துரோகம், புலி உறுப்பினர்களை காட்டிக்கொடுத்த துரோகம், படித்த கல்விமான்கள் செய்யும் துரோகத்தோடு ஒத்துப்பார்க்கையில் மன்னிக்கக் கூடியதே! ஏனெனில் அவர்கள் படிக்காத பாமரர்கள், சாதாரண விடயங்களில் உள்ள அரசியல் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியாதவர்கள். படித்து பட்டம் பெற்ற கல்விமான்களை தமிழர் சமூகம் அவ்வாறு எண்ணக்கூடாது! துரோகம் செய்த பாமர மக்களையே தமிழ் சமூகம் மன்னித்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வியில் சிதைவை ஏற்படுத்துவது என்பது எந்த சாதாரண குடிமகனாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத துரோகம். இன்றைய உலக ஒட்டத்தில் சிந்திக்கமுடியாதவர்கள் வாழ்ந்தால் அவர்கள் நாளுக்கு நாள் ஏமாற்றப்படுவதும் சிலரால் உறிஞ்சப்படுவதும் தவிர்க்க முடியாதது. அடிப்படையான, ஆரோக்கியமான கல்வியே ஒருவனைச் சிந்திக்கத் து}ண்டுகின்றது. அவ்வாறான கல்வியை வழங்கும் நிறுவனத்தில் ஏற்படுத்தப்படும் முறைகேடுகள், ஒழுக்கக் குறைவுகள் நிச்சயம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தில் குறைவை ஏற்படுத்தும்!

இதற்கு சான்றாக பின்வரும் சம்பவம் விளங்குகின்றது.....

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழியர் போராட்டத்தைப்பற்றி மாணவர்களிடையே கருத்துக் கேட்டபோது ஒரு பகுதி மாணவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் கூறிய விளக்கம் 'நாங்கள் வீண் பிரச்சனைகளுக்கு தலைகொடுக்க விரும்பவில்லை, நிர்வாகத்தால் நாங்கள் பழிவாங்கப்படுவதை உங்களால் தடுக்கமுடியாது! அந்தக் கட்டிடத்தில் இறுதி வருட மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் போய்க்கேளுங்கள்" என்றார்கள்.

மற்றைய பகுதியினர்

'நாங்கள் எவற்றிலும் தலையிடுவது கிடையாது. நாங்கள் காலையில் வந்தால் மாலையில் போய்விடுவோம், யாரும் என்னவாவது செய்யட்டும் எங்களுடைய படிப்பைக் குழப்பாது விட்டால் போதும்.." என்றார்கள். இந்த இருமாணவ குழுக்களின் கருத்து பல்கலைக்கழக நிர்வாகத்தால் எவ்வாறு மாணவர்கள் அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான உதாரணமாகும்.

(சிந்தனைக்கு......

சீர்கெட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்படும் மாணவர்கள் சீராக இருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு (நான்கு வருடம் வாழுகின்ற சூழல் நிட்சயம் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வரும்) அவ்வாறு வெளிவரும் மாணவர்கள் அநேகர் ஆசிரியர் பதவி பெற்று சேவையாற்றுவது பொதுவானது. இது இவ்வாறு இருக்க எப்படி ஒரு ஒழுங்கான சமுதாயத்தை இனிவரும் காலங்களில் உருவாக்க முடியும்?)

இதேவேளை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றும் முக்கியமானது, ஊழியர்களை இடைநிறுத்துவது பற்றிய விளம்பரம். இதுவும் கிளர்ந்து எழுகின்ற மக்களை பயமுறுத்தி அடக்குவதற்கான செயற்பாடுகளில் ஒன்று.

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/notice.jpg' border='0' alt='user posted image'>

இந்த விளம்பரத்தில் ஒன்று கூர்ந்து கவனிக்கப்படல் வேண்டும். அதாவது குடாநாட்டில் ஐந்து தினசரிகள் வெளிவருகின்ற போதும் ஒரு பத்திரிகையில் மட்டும் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ அறிக்கைகளை விடுவது என்பது பல்கலைக்கழகம் பிரச்சனைகளை எந்தவகையில் ஜனநாயக ரீதியாக கையாளுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்! (அரச பத்திரிகையில் வெளியிட்டிருக்கலாம் அல்லது எல்லா தனியார் பத்திரிகையிலும் வெளியிட்டிருக்கலாம்) இதற்கு சரியான விளக்கம் சொல்வார்களா?

ஊழியர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஊழல்களை மறைப்பதற்கும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பல உத்திகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்து.

1. ஊழியர்களிடையே பிரிவை ஏற்படுத்த சில ஊழியர்களை பதவிகளில் இருந்து இடைநிறுத்துவது.

2. மாற்றுக் குழுக்களை நிறுவி (10 தொடக்கம் 20 பேர் கொண்ட குழு) அவர்களின் மூலம் பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுவது, அதன் மூலம் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பலமில்லை என்று வெளிப்படுத்துவது அல்லது இரண்டு அணி உள்ளது போன்ற தோற்றப்பாட்டைக்காட்டுவது. (இரண்டு மூன்று பேர் மட்டுமே தீவிரமாக செயற்படுவதாகவும் மற்றவர்கள் தங்களது மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவதற்காக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.)

சரி துணைவேந்தர் ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவை பல்கலைக்கழக சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை அதற்காக தானே பல்கலைக்கழக பேரவை (செனற்) இருக்கின்றது என்று எண்ணுபவர்களுக்கு..... அதற்குள்ளும் ஊழல்கள் இருப்பது அதிர்ச்சி தரும் செய்தி!

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட பிரபல பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் உட்பட பலரை அரசாங்கம் கடந்த ஐந்து வருட காலத்தில் பல்கலைக்கழக பேரவையில் அங்கம் வகிக்க அனுமதி அளித்துள்ளது! இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்பும் பல்கலைக்கழக நிர்வாகம் சரியான முடிவுகளை எடுத்துத்தான் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் எண்ணுவார்களே ஆயின் அது துரதிர்ஷ்டமே.

மற்றவர்களைப் பற்றி ஆராய்வதிலும் பார்க்க பிரபல பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் ஏன் பல்கலைக்கழக பேரவையில் அங்கம் வகிக்கவேண்டும் என்பதன் காரணத்தை பத்திரிகையாளன் என்ற வகையில் மக்கள் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளோடு ஒத்துப்பார்ப்பதன் மூலம் அதன் உள்நோக்கத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்!

1. பிரபல பத்திரிகை குடாநாட்டு மக்களின் மனதில் மிக ஆழமாகவே குடிகொண்டுள்ளது. ஏனெனில் சில காலமாக மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றியது என நம்பப்படுகின்றது. இப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் உண்மை என்று மக்கள் நம்புகின்றார்கள். (அமெரிக்காவிற்கு தப்பி ஒடிய இந்திய புலனாய்வு அதிகாரி பொற்கோயில் நடவடிக்கையில் நடந்து கொண்ட முறையால் இந்திய இராணுவத்தில் இருந்து இந்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றம் பெற்றமை போல - நன்றி ரிஷியின் புலனாய்வு அரசியல்)

2. மக்களிடம் செல்வாக்கு பெற்ற பத்திரிகையில் சில விடயங்கள் (அரசியல்) மட்டும் வெளிவர குடாநாட்டில் நடந்துகொண்டிருக்கும் சில விடயங்களைப்பற்றி மூச்சு விடாமல் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. குறிப்பாக கல்வியி;ல் ஏற்படுத்தப்படுகின்ற அழிவு வேலைகள். அதேவேளை மக்களை வேறுபக்கமும் திசை திருப்பவேண்டிய தேவையும் இருக்கின்றது?

(முன்பு பித்தன் பதில்கள் என்று அப்பட்டமான ஆபாசமான பதில்களை பத்திரிகையூடாக வெளியிடுவதால் பாலியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில் மலினப்படுத்துவது, தற்போதும் சகோதர பத்திரிகை மூலம் செய்து வருகின்றது.)

3. எந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எந்தச் செய்தியை பிரசரிக்காது விடவேண்டும் என்ற முடிவு நிர்வாகத்தாலே எடுக்கப்படுகின்றது. அதற்கு வேறு வகையான விளக்கமும் கொடுக்கப்படுகின்றது. (வியாபாரத்தை பாதிக்கும், சிலரின் எதிர்ப்பைச் சந்தித்தல் போன்ற சில போலிக் காரணங்கள்)

4. எல்லாச் செய்திகளையும் வெளியிட்டு நடுநிலைமை போல் காட்டிக்கொண்டாலும், வெளிவிடப்படும் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நிர்வாகத்தின் அல்லது ஆசிரியபீடத்தின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.

அண்மையில் ஊழியர் சங்க போராட்டம் சம்பந்தமான அறிக்கைகளை உதாரணமாகப் பார்க்கலாம்.

(இரண்டு அறிக்கைகள்)

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/uni3.jpg' border='0' alt='user posted image'>

(ஊழியர்களின் அறிக்கை மூன்று கொலம் 9 சென்ரிமீற்றர் அளவு)

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/uni5.jpg' border='0' alt='user posted image'>

(ஊழியருக்கு எதிரான அறிக்கை மூன்று கொலம் 17 சென்ரிமீற்றர் அளவு)

<img src='http://www.tamilnatham.com/articles/kuru/uni/uni6.jpg' border='0' alt='user posted image'>

மேற்படி அறிக்கையானது பிரபல பத்திரிகை ஒன்றின் முன்பக்கத்தில் 21.06.2004 இல் பிரசுரிக்கப்பட்டது. இதன் தலையங்கத்தினை வாசிக்கும் ஒரு சாதாரண வாசகனுக்கு ஏற்படும் கருத்து என்பது முக்கியமானது.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட மாணவர்களின் அறிக்கையானது, மக்களுக்கு ஊழியர்களின் மேல் எதிரான கருத்தினை தோற்றுவிக்கும் வகையில் தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இன்னுமொரு பேரவை உறுப்பினரும் பிரபல சட்டவல்லுனர் ஒருவரின் செயலும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊழியர் ஒருவருக்கு எதிராக நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக ஊழியர் சங்கத்தினால் மனித உரிமைகள் குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் முடிவு ஒன்று நிர்வாகத்திற்கு எதிராக அமையவே அம்முடிவை அமுல்படுத்துவதற்கு காலம் கடத்தும் நிர்வாகம் மனித உரிமைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட முடிவைப் பரிசீலிப்பதற்காக குறிப்பிட்ட பேரவை உறுப்பினரை அமர்த்தியது. ஆனாலும் பத்து மாதங்கள் கடந்தும் அம்முடிவுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை!

மேலே விபரிக்கப்பட்டவை எல்லாமே அறிந்த, வெளிவந்த விடயங்கள் இன்னும் எத்தனை வெளிவராமல் மூடி மறைக்கப்டபட்டுள்ளன?

இவை தவிர இன்னும் சில.....

பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை?

1. 300 மாணவர்கள் அடிப்படை ஆங்கில பாடத்தில் சித்தியடையவில்லை. மாணவர்கள் படிக்கவில்லை என்று காரணம் கூறினாலும் இத்தனை தொகையான மாணவர்கள் ஒரே தடவையில் சித்தியடையவில்லை எனின், அதற்குரிய போதனா ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?

குடாநாட்டு கல்வி வீழ்ச்சி அடைவதை ஆராய்வதற்கு ஜேர்மனியில் இருந்து வெளிநாட்டவர் வந்ததைப்போல் பல்கலைக்கழக கல்வித்தர வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று அறிய வெளிநாட்டில் இருந்து யாரையாவது எதிர்பார்க்கிறார்களா?

2. யாழ் பல்கலைக்கழகத்தினை இலங்கையில் உள்ள மற்றைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அந்த மாணவர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான வசதிகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அனுபவிப்பதில்லை.

கணினி வசதிகள் இதுவரை காலமும் இல்லை (சமாதான சூழ்நிலை உருவாகி பல மாதங்களாகியும் தற்போது தான் நூலகத்தில் பொருத்துவதற்காக 100 இற்கும் அதிகமான கணினிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.)

தங்களுடைய பதவிகளுக்காக அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்கும் பின்னால் திரிபவர்கள் மாணவரின் நலன்களிலும் அக்கறை எடுப்பதும் நன்று)

3. அநேகமான நாடுகளில் பல்கலைக்கழகத்தில் தான் சமுதாயத்திற்கு தேவையான பல விடயங்களை ஆராய்கின்றார்கள். அதன் மூலம் கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிலை வேறு அதாவது யப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு அது இது என்று ஆராய்வார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் எம் சகோதரர்களின் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏதாவது ஆராய்ச்சி செய்தார்களா? அல்லது ஏதாவது கண்டு பிடித்தார்களா?

4. முன்னைய துணைவேந்தரால் புதிய புதிய கற்ககைநெறிகள் (இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இல்லாத) ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுள் 1. மீன்பிடியியல் டிப்ளோமா (தற்போது பட்டப்படிப்பாக மாற்றப்பட்டுள்ளது) 2. சித்திரமும் வடிவமைப்பும் (முதலாவது அணி வெளியேறியுள்ளது இதுவும் பட்டப்படிப்பு) 3. உடற்கல்வியில் டிப்ளோமா (பிசிக்கல் எடியுக்கேசன்) ஒரு வருட டிப்ளோமா கற்கைநெறி. இக்கற்கை நெறியில் இது வரை 300 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். இவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் இன்னும் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இக்கற்கை நெறி தற்போது இரண்டு வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு மூன்று வருட பட்டப்படிப்பாக மாற்றப்படவுள்ளது. (ஒரு ஆண்டுக்கு 7,500 வரை கட்டணம் யாழ்பல்கலைக்கழகத்தால் அறவிடப்படுகின்றது. ஒரு மாணவனுக்கு மொத்த செலவாக 40,000 தொடக்கம் 50,000 ரூபா வரை வருடம் ஒன்றிக்கு செலவாகின்றது.) பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தும் இவர்கள் எவருக்கும் இது வரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. இதற்கு கல்வித்திணைக்களம் சொல்லும் காரணம் அவதானிக்கவேண்டிய தொன்றாகும். அதாவது தங்களுக்கு கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் கற்பிக்கப்படும் உடற்கல்வி டிப்ளோமாவை கல்வித்தராதரமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும்?

இந்த இடத்தில் தான் சந்தேகமே தோன்றுகின்றது அதாவது யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அநேகமானவர்கள் தாம் கற்கும் கல்வி தமக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற இலக்கிலேயே கல்வி கற்கின்றார்கள். யாழ் மாணவர்களின் எதிர்பார்ப்பு அறியாதவரா முன்னாள் துணைவேந்தர்? ஏன் இவ்வாறான அரைகுறைக் கற்கைநெறிகளை யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் ஆரம்பிக்க வேண்டும்? தனது சொந்த சிந்தனையில் செயல்பட்டாரா? அல்லது மாற்றான் சிந்தனையில் செயல்பட்டாரா? தன்னுடைய காலத்தில் தொடக்கப்பட்ட கல்வி மாற்றங்களுக்கு விளக்கம் சொல்வாரா முன்னாள் துணைவேந்தர்..?

பல்கலைக்கழகத்தினுள் இன்னும் சில பேராசியர்கள் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் குரல்கள் வெளியில் கேட்காமல் தடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

விஞ்ஞான பீடத்தின் அதிபதி ஒருவரே கடந்த பல்கலைக்கழக உபவேந்தருக்கான போட்டியில் அதிக வாக்குகளால் வென்றவர். அவருடைய நேர்மையான வாழ்வைப்பற்றி குடாநாட்டில் உள்ள கல்விசார் சமூகம் அனைவரும் அறிவர். மேற்படி பேராசிரியரை ஆசிரியராக கொண்டு வெளிவந்த பத்திரிகை இந்து சாதனம். ஆனால் குடாநாட்டின் பிரபல பத்திரிகை ஒன்றில் முகாமையாளராக பணிபுரியும் முன்னை நாள் கல்லூரி அதிபர் அவர்கள் பேராசியருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியை தனதாக்கிக்கொண்டார்!

அப்பேராசிரியர் தொடர்ந்து இந்து சாதனத்தின் ஆசிரியராக இருந்தால் உண்மைகள் ஏதாவது வெளிவரலாம் என்ற அச்ச உணர்வின் காரணமாக செய்யப்பட்ட அரசியல் நடவடிக்கையாகவே கருத இடமளிக்கின்றது?

வெளிநாட்டு உளவுப்படையால் செய்து முடிக்கப்பட்ட செயற்பாடுகளை ஒரே பார்வையில் பார்த்தால் இந்தியப் புலனாய்வு அமைப்பில் இருந்த உயர் அதிகாரி ஒருவரை பல வருடமாகப் பயன்படுத்தி இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளைப் பற்றி இந்தியப் புலனாய்வாளர்களால் பெறப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட வெளிநாடு பெற்றுக்கொண்டமை.

சில செய்தியாளருக்கும், அரச உயர் அதிகாரிகளுக்கும், சமய நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கும் உயர் கௌரவங்களை வழங்கி பெருமைப்படுத்துவதன் மூலம் தமக்கு எதிராக இருக்கும் உணர்வை மாற்றி அந்த அதிகாரிகளிடையே ஒரு நட்பை வளர்த்துக்கொள்வது! இதனால் தாம் செய்யப்போகும் காரியங்களுக்கு அவர்களால் வரக்கூடிய தடைகளை முன்கூட்டியே தடுப்பது அத்தோடு அவர்களின் ஆசீர்வாதங்களுடன் சில வேலைகளைச் செய்துகொள்வது.

தமது நாட்டில் உயர்படிப்பு, பட்டங்கள் பெற வாய்ப்பளிப்பது. தமது நேரடி உதவிகள் மூலம் சமூக அமைப்புக்களை, தனிநபர்களை தமக்கு விசுவாசமாக செயற்பட வைப்பது போன்ற வேலைகளை தமிழர் பிரதேசங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. புனர்வாழ்வுப் பணிகள் புலிகள் ஊடாக மட்டும் இடம்பெற்றால் தமது வேலைகளை செய்ய முடியாது போகும் என்ற காரணமும் சிரான் என்கின்ற புனர்வாழ்வு அமைப்பு செயல் இழப்பதற்கு ஒரு காரணமாகும்.

விடுதலைப்புலிகள் அல்லாத அமைப்பினரால் குடாநாட்டில் அல்லது தமிழர் பிரதேசங்களில் நடைபெறுகின்ற நடவடிக்கைகள் அனேகமானவை தமிழர்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்டு செய்யப்படுவதாக கருத முடியாது. அவற்றை வேண்டாம் என்று ஒதுக்குவதால் தமிழர்களுக்கு அவப்பெயரே உருவாகும். அதனால் மக்கள் விழிப்பாக இருப்பதே சிறந்த முடிவு !

இக்கட்டுரை மூலம் தெரிந்த பல தகவல்கள் அதனோடு தொடர்புடைய சில நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருப்பது, குறிப்பிட்ட சிலருக்கு கசப்புணர்வையே வெளிப்படுத்தும். கோபமுற்று என்னுடைய உயிருக்கு அல்லது உடமைக்கு சேதம் ஏற்படுத்த அவர்கள் முனையலாம். அவ்வாறு நடந்தால் என்னுடைய பேனா தொடர்ந்து எழுதாது. ஆனாலும் இந்த உலகில் உள்ள நிரந்தரமானதும், தடுக்க முடியாததுமான மரணத்தை தழுவி என்னுடைய ஆன்மா விடுதலை அடையும் அதேவேளை என்னுடைய ஆன்மா இந்த உலகில் வாழும் மக்களின் ஆன்ம விடிவுக்காக பிரார்த்திக்கும்!


யாழிலிருந்து குரு...tamilnatham.com

Print this item