Yarl Forum
எப்படி எழுதுவது என்று தெரியேல்லை! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: எப்படி எழுதுவது என்று தெரியேல்லை! (/showthread.php?tid=7037)

Pages: 1 2


எப்படி எழுதுவது என்று - kavithan - 06-17-2004

ஜயோ!ஆராவது சொல்லங்கோவன்.

[b] இயஙகுதளம் 98 ல் எப்படி யுனிக்கோட்டில் எழுதுவது?


இயங்குதளம் 98 இல் நாங்கள் இயங்குதளம் xp இல் யுனிக்கோட்டை உபயேகிப்பது போன்று உபயோகிக்கலாமா? அப்படியாயின் எவ்வாறு?

மின் அஞ்சல், அரட்டை, இணையத்தளங்கள் என்று எல்லா இடங்களிலும் தமிழை வாசிக்க முடிகிறது ஆனால் அங்கெல்லாம் எழுத முடியவில்லை. wordpadல் கூட யுனிக்கோட் எழுத்துருவைப் பயன்படுத்தி தமிழில் எழுதமுடியவில்லை. என்ன செய்ய இயங்குதளத்தைத்தான் மாற்ற வேணுமா?


கவிதன்


- shanmuhi - 06-17-2004

தங்களுக்கு கள நீர்வாகத்தினர் உதவி செய்வார்கள்.
யாழ் களத்தையே மாற்றிவிட்டார்கள்....
யாழ் களம் சென்றவுடன் முதன்முதலாய் பார்ப்பதே... சமீப விடயங்கள்தான். அதற்கும் உடனே பதில் எழுதவேண்டும் இல்லாவிட்டால் போய் தேடி தேடி பதில் எழுத வேண்டியிருக்கு.
கள நீர்வாகத்தனர் தான் தலையை பிய்த்துக் கொள்வது போல் படம்போடுவார்கள்.
ம்... இனிமேல் நாம்தான் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டுமோ... தெரியாது.


- Mathivathanan - 06-17-2004

இஞ்சை பாவிக்கிறதொண்டும் யூனிக்கோட்டில்லை.. பொறுக்கிக்கோட்..
தேவையில்லாமல் தலையை பிக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shanmuhi - 06-17-2004

:roll: :?: :roll:


- yarlmohan - 06-17-2004

Quote:தங்களுக்கு கள நீர்வாகத்தினர் உதவி செய்வார்கள்.
யாழ் களத்தையே மாற்றிவிட்டார்கள்....
யாழ் களம் சென்றவுடன் முதன்முதலாய் பார்ப்பதே... சமீப விடயங்கள்தான். அதற்கும் உடனே பதில் எழுதவேண்டும் இல்லாவிட்டால் போய் தேடி தேடி பதில் எழுத வேண்டியிருக்கு.
கள நீர்வாகத்தனர் தான் தலையை பிய்த்துக் கொள்வது போல் படம்போடுவார்கள்.
ம்... இனிமேல் நாம்தான் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டுமோ... தெரியாது.
சண்முகி நீங்கள் கேட்டவிடயத்தினை இன்று இணைத்துவிடுகின்றேன்.

முன்னைய கருத்துக்களம் பல நல்லவிடயங்களைக் கொண்டிருந்த போதிலும், தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் update இனை (இந்த script இனை உருவாக்கியவர்கள் பின்னர் பிழைகளைக் கண்டுபிடித்து திருத்திய பதிப்புக்கள்) செய்யமுடியாது அல்லது மாற்றிக்கொள்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டன. ஏனெனில் அந்த பழைய script ல் பல்வேறு நபர்களால் உருவாக்கப்பட்ட பல செயற்பாடுகள் இணைக்கப்பட்டிருந்தன. இவர்களுக்கிடைய ஒரு ஒழுங்கான தொடர்புகள் இல்லாத காரணத்தினால் (அதாவது குழுவாக இணைந்து செயற்படாது, தனித்தனியாக), மூல scriptஇனை பல்வேறு வடிவில் மாற்றினார்கள். அதே நேரத்தில் மூல scriptல் பிழைகள் திருத்தப்பட்டபோது உடனுக்குடன் இந்த (பழைய) களத்தில் மாற்றங்கள் செய்ய முடியாது விட்டபோது hack செய்பவர்கள் அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தினார்கள் / பயன்படுத்த முற்பாட்டார்கள். அதனால் தான் மூல scriptற்கு மீண்டும் களத்திளை மாற்றியமைத்தேன்.

Microsoft இன் புதிய இயங்குதளங்களில் லதா எழுத்துருவும் இணைக்கப்பட்டள்ளதால், லதா எழுத்துருவுக்கு இங்கு முன்னுரிமை கொடுத்துள்ளேன். இதன்படி லதா எழுத்துரு உள்ள ஒருவர் லதா எழுத்துரு மூலமே யாழ் இணையத்தினைப்பார்வையிட முடியும். அவ் எழுத்துரு இல்லாத ஒருவர் TheneeUniTx எழுத்துரு மூலம் யாழ் இணையத்தினைப்பார்வையிட முடியும்.


Re: எப்படி எழுதுவது என்ற - kavithan - 06-17-2004

kavithan Wrote:ஜயோ!ஆராவது சொல்லங்கோவன்.

[b] இயஙகுதளம் 98 ல் எப்படி யுனிக்கோட்டில் எழுதுவது?


இயங்குதளம் 98 இல் நாங்கள் இயங்குதளம் xp இல் யுனிக்கோட்டை உபயேகிப்பது போன்று உபயோகிக்கலாமா? அப்படியாயின் எவ்வாறு?

மின் அஞ்சல், அரட்டை, இணையத்தளங்கள் என்று எல்லா இடங்களிலும் தமிழை வாசிக்க முடிகிறது ஆனால் அங்கெல்லாம் எழுத முடியவில்லை. wordpadல் கூட யுனிக்கோட் எழுத்துருவைப் பயன்படுத்தி தமிழில் எழுதமுடியவில்லை. என்ன செய்ய இயங்குதளத்தைத்தான் மாற்ற வேணுமா?


கவிதன்






ஜயோ!என்ரை கேள்விக்கும் பதில் சொல்லுங்கோவன்.


கவிதன்


- vallai - 06-17-2004

ஐயோ ஆராவது சொல்லுங்கோவன் எண்டு கேட்டியள் நான் சொல்லுறன்
ஐயோ


- yarlmohan - 06-17-2004

சுரதாவின் இந்த இணைப்பில் சில விபரங்கள் உள்ளன

http://www.jaffnalibrary.de/tools/index.htm
http://www.jaffnalibrary.de/tools/uniwin98.html


- shanmuhi - 06-17-2004

"சமீப விடயங்கள்" இணைத்தது கண்டு மகிழ்ச்சி மோகன். நன்றியும்கூட.....


- kavithan - 06-17-2004

மோகன் Wrote:சுரதாவின் இந்த இணைப்பில் சில விபரங்கள் உள்ளன

http://www.jaffnalibrary.de/tools/index.htmhttp://www.jaffnalibrary.de/tools/uniwin98.html

அப்ப கணனியில்வைத்தே இயங்குதளம் 98 ல் எழுத முடியாது. சுரதா அண்ணனின்ரை இணையத் தளத்திலை போய்த்தான் எழுத வேணுமே. நன்றி மோகன் அண்ணை.

கவிதன்


- kavithan - 06-17-2004

சுரதாண்ணை உங்களுக்கும் நன்றி.
மிகமிக அவசியமான செயலி ஒன்றை எங்களுக்காக தந்திருக்கிறியள்.


கவிதன்


- Mathivathanan - 06-18-2004

இவனுக்கு முரசு அஞ்சல் பற்றி தெரியாதுபோலை.. மிச்சமெல்லாம் பொறுக்கிதான்..


- shanmuhi - 06-18-2004

:x


- vasisutha - 06-18-2004

8)


- kavithan - 06-20-2004

Mathivathanan Wrote:இவனுக்கு முரசு அஞ்சல் பற்றி தெரியாதுபோலை.. மிச்சமெல்லாம் பொறுக்கிதான்..

எனக்கு தெரியாது எண்டுதான் கேட்டனான், அந்த அஞ்சலோ, கிஞ்சலே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோவன். அதை விட்டிட்டு சும்மா தெரியாது போலை கிடக்கெண்ணிறியள்.



கவிதன்


- Eelavan - 06-20-2004

கவிதன் நீங்கள் சுரதா அண்ணனின் பக்கத்தில் எழுதி வெட்டி ஒட்டுவதை விடவும் இந்தப்பக்கத்துக்குச் சென்று இ-கலப்பை என்னும் தமிழ் எழுதியைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் இதன் மூலம் நேரடியாக மின்னஞ்சல்,அரட்டை,போன்றவற்றில் தமிழில் எழுத முடியும்

http://www.developer.thamizha.com/ekalappai/


- kavithan - 06-26-2004

நன்றி ஈழவன் அண்ணா. நல்ல செயலி.மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என் நண்பனக்கு.


- kavithan - 06-26-2004

kavithan Wrote:
Mathivathanan Wrote:இவனுக்கு முரசு அஞ்சல் பற்றி தெரியாதுபோலை.. மிச்சமெல்லாம் பொறுக்கிதான்..

எனக்கு தெரியாது எண்டுதான் கேட்டனான், அந்த அஞ்சலோ, கிஞ்சலே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோவன். அதை விட்டிட்டு சும்மா தெரியாது போலை கிடக்கெண்ணிறியள்.



கவிதன்


இது என்ன முரசு அஞ்சல் என்றால்? :?: :?:


- vallai - 06-27-2004

அந்தக்காலத்திலை இப்பிடி தவால் கிவால் டெலிபோனுகள் இருக்கிரேலை ஒரு இடத்திலையிருந்து இன்னொரு இடத்துக்கு செய்தியனுப்போனுமெண்டா அதுக்கு இருக்கிற விசேடமான முரசுகளை அடிப்பினம் விதவிதமான சத்தங்களிலை ஊருக்கு ஊர் இருக்கிற முரசுகாரர் செய்தியைக் கடத்துவினம் அதுதான் முரசு அஞ்சல்


- kavithan - 06-27-2004

ஜயோ... இதில்லையண்ணை இது பழைய விளக்கம். புதுசு அண்ணை வேணும். தாத்தா இந்த வயதிலை அறிஞ்சு வைச்சிருக்கிறதைக் கூட நீங்கள் அறியேல்லையா? :?: :?: :?: