![]() |
|
மரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மரம் (/showthread.php?tid=7044) |
மரம் - AJeevan - 06-16-2004 மரம் மரத்துக்கு உயிர் உண்டென்று அறிவோம் வசந்தத்தில் துளிர்த்தும் மலர்ந்தும் கோடையில் செழித்து நின்றும் இலையுதிரில் துகிலுரித்தும் மரம் உணர்வுகளும் காட்டும் மரத்துக்குப் பேசத் தெரியும் மரத்தின் மொழி உடலின் மொழி பாடி லாங்வேஜ் என்கிற பதமே மரம் தந்ததுதான் சில மரங்கள் ஜீவிதமானவை தலைமுறைகள் கண்டவை என்றபோதினும் வீரியத்திலும் விளைச்சலிலும் இளைக்காதவை மரத்துக்குப் பேதங்கள் இல்லை தன் நிழலில் உறங்குபவனும் தன்னருகே சிறுநீர் கழிப்பவனும் அதற்கு ஒன்றுதான் மரத்துக்குக் கட்சிகள் இல்லை எல்லா கட்சிக் கொடிகளுக்கும் பேனர்களுக்கும் இடம் தருகிற சமத்துவபுரம் அது மரத்துக்கு அழத் தெரியாது கிளை வெட்டும்போதுகூட கைபற்றித் தடுப்பதில்லை மரத்துக்குப் பங்காளிச் சண்டைகள் இல்லை வெவ்வேறு மரத்தின் வேர்கள் இணைந்தும் பிணைந்தும் எல்லை தாண்டியும் ஓடுவதுண்டு மரத்துக்கு அசூயை இல்லை அதன் இலையோடும் கிளைகளில் பட்சிகளும் எறும்புகளும் வேரோடும் பூமிக்கடியில் புழுக்களும் பூச்சிகளும் ஒட்டி உறவாடுவதுண்டு மரத்துக்கு வாழ்க்கை அலுப்பதில்லை காலம் பூராவும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறபோதிலும் மரத்துக்குத் தேவை அதிகமில்லை மழையில்லா வறட்சிக்கும் கொளுத்துகின்ற கோடைக்கும் அரசாங்க உதவியெதுவும் அது எதிர்பார்ப்பதில்லை மரத்துக்கு ஜீவகாருண்யம் அதிகம் அதன் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வோரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை மரம் யாருடனும் எதற்கும் சண்டைக்குப் போவதில்லை "ஏன் மரம் மாதிரி நிற்கிறாய்" என்று யாரும் யாரையேனும் திட்டினாலும் மவுனமாய்ப் பார்த்தலன்றி ஆட்சேபணை செய்வதில்லை "ஏன் மனிதன் மாதிரி செய்கிறாய்" என்று யாரையும் கேட்காத அறிவும் கொண்டது மரம் -http://pksivakumar.blogspot.com/ - Mathivathanan - 06-16-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 06-16-2004 ![]() <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றாக இருக்கின்றது கவிதன் |