06-15-2004, 03:18 AM
<img src='http://www.kumudam.com/junction/010604/pg3-t.jpg' border='0' alt='user posted image'>
‘இயக்குநர் இருக்கையில் பெண்கள்’ _ (women in the director's chair WIDC) இப்படியரு வித்தியாசமான தலைப்போடு ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச ஃபிலிம் மற்றும் வீடியோ திருவிழா அமெரிக்காவில் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க பெண் இயக்குநர்களின் படைப்புகளைத் திரையிடுகிற திருவிழா இது. டபிள்யூ ஐடிசி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த விழாவில், இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் லீனா மணிமேகலை. பார்வையாளராக அல்ல; பங்கேற்பாளராக. அந்த அனுபவத்தை லீனாவே விவரிக்கிறார்.
‘‘இந்த வருடம் நடந்தது டபிள்யூ ஐடிசியோட இருபத்திமூன்றாவது ஃபெஸ்டிவல். அஞ்சு நாட்கள்ல மொத்தம் ஐம்பது படங்களைத் திரையிட்டாங்க. பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பெண் படைப்பாளிகளோட விதவிதமான படங்களைப் பார்க்க முடிஞ்சுது.
கமர்ஷியல் படங்களுக்கான ஃபெஸ்டிவல் எவ்வளவு பாப்புலரோ, அதே அளவு இந்த விழாவும் பாப்புலர். ஆனா இங்க திரையிடப்பட்டது எல்லாமே எக்ஸ்பரிமென்டல் அடிப்படையிலான படங்கள். கமர்ஷியல் வடிவத்துல இல்லாம, வித்தியாசமான, புதுமையான அணுகுமுறையைக் கொண்ட படங்கள். எல்லாப் படங்களுமே ஏதோ ஒரு விதத்துல, மரபுகளை உடைத்தெறியற, நம்ம சமூக அமைப்பை, கலாச்சாரத்தைக் கேள்வி கேக்கற படங்களாக இருந்தன. தர்க்க ரீதியா ஒவ்வொரு விஷயத்தையும் கேள்விக்குள்ளாக்குகிற அவங்களோட பார்வை பிரமிப்பா இருந்துச்சு.
குறிப்பா என்னை இம்ப்ரஸ் பண்ணின விஷயம் என்னன்னா, ஒவ்வொரு பெண் இயக்குநரும் தேர்ந்தெடுத்திருந்த கருக்கள்தான். பொதுவா, ‘இந்த விஷயங்களைத்தான் விஷ§வலா பதிவு செய்யணும். இதையெல்லாம் படமா எடுக்கக்கூடாதுன்னு ஒவ்வொரு படைப்பாளியின் மனசுக்குள்ளும் சில தடைகள்இ தயக்கங்கள் இருக்கும். இந்த விஷயத்தில் பெண் படைப்பாளிகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனா அந்தத் தயக்கங்களையெல்லாம் நான் பார்த்த படங்கள் சுத்தமா உடைச்சு எறிஞ்சிடுச்சு.
இயற்கைக்கு மாறான விஷயங்களாக இருந்தாலும் சரி, நம்ம மனசுக்கு சரின்னு பட்டதை விஷ§வலா பதிவு செய்யலாங்கிற தெளிவை அழுத்தமா உருவாக்கிடுச்சு.
இந்த விழாவில பல்வேறு பிரிவுகள்ல படங்களை திரையிட்டாங்க. ஸ்ட்ரேடஜிச் அஃபன்ஸ்னு ஒரு பிரிவு. அமெரிக்காவோட அரசியல் அமைப்பு பத்தியும் கொள்கைகள் பத்தியும், பாதுகாப்புங்கற பேர்ல அவங்க அடிக்கிற கூத்துக்கள் பத்தியும் கேள்வி மேல கேள்வி கேட்கிற துணிச்சலான படங்களை இதில் திரையிட்டாங்க. அமெரிக்காவில இருந்துகிட்டே அந்த நாட்டோட முரண்பாடான கொள்கைகள் பத்தி காரசாரமா விமர்சனம் பண்ற தைரியமும், துணிச்சலும் அங்குள்ள படைப்பாளிகள் கிட்ட இருக்கு. அந்த நாட்டு மக்கள்கூட அரசோட தவறான முடிவுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கிறவங்களா இருக்காங்கங்கறதையும் உணர முடிஞ்சுது.
இந்த செக்ஷன்ல ‘லெட் மை கண்ட்ரி அவேக்’ன்னு ஒரு படம். ஈராக் மீது புஷ் அரசு போர் தொடுத்ததை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் நடந்த போராட்டங்களையும், மக்களோட எதிர்ப்பு உணர்வுகளையும் டாக்குமென்ட்ரியா பண்ணியிருந்தாங்க. ரொம்ப எஃபக்டிவா இருந்தது இந்தப் படம்.
அடுத்து, பிளாக் பிளானட்ங்கற பிரிவு, என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. எல்லாமே இனவெறி மற்றும் அதோட கொடூர முகங்கள் பற்றிய படங்கள். இன துவேஷமே எங்க நாட்டில இல்லன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டாலும், இன்னிக்கும், சம்பந்தப்பட்ட நாட்டு மக்களோட மனசில அந்தத் தீ எரிஞ்சிட்டுத்தான் இருக்குங்கறதை எமோஷனலா பதிவு செஞ்சிருந்தாங்க.
‘லெட்மி ஹியர் யுவர் பாடி டாக்கு’ங்கிற செக்ஷன்ல, பெண்களோட உடல் தொடர்பான கேள்விகளையும், நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய படங்கள் இடம் பெற்றிருந்தன. அந்தப் பிரிவில் நான் ரொம்ப ரசிச்சது, ஒன் இன் எய்ட்ங்கிற படம். மார்பகப் புற்று நோயால பாதிக்கப்பட்ட ஒரு பெண், அதற்கு எதிராக எப்படிப் போராடறா? அந்தப் போராட்டத்தில எத்தனை சவால்களைச் சந்திக்கிறா? எந்த மாதிரியான ஆதரவு அவருக்குக் கிடைக்குதுன்னு ஆராய்கிற படம். இந்தப் படம் ரியலிஸ்டிக்காவும் டச்சிங்காவும் மட்டுமல்ல, என்டர்டைனிங்காவும்இ காமெடியாவும் இருந்தது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
(இண்டர்)நேஷனல் கமாடடீஸ்’ங்கிற செக்ஷன்லதான் என்னோட பறை டாக்குமென்டரியை திரையிட்டாங்க. உலகம் முழுக்க பெண்களை எப்படி போகப் பொருளாகப் பார்க்கறாங்க, பல்வேறு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்படறாங்கன்னு அழுத்தமா சொல்ற படங்களை இந்த செக்ஷன்ல பார்த்தேன். ‘சம்திங் பிட்வீன் ஹர் ஹேன்டி’ன்னு ஒரு படம். தென்கிழக்கு ஆசியப் பகுதியில் பெண்கள் பாலியல் அடிமைகளா தள்ளப்படறது பத்தியும், அதற்கான காரணங்கள், அதிலிருந்து விடுபட்டவங்களோட வாழ்க்கை முறை பத்தியும் எமோஷனலா பதிவு செய்திருந்தாங்க.
ஸ்கிரீனிங் மட்டுமல்லாமல் கலந்துரையாடலும் அன்னிக்கு இருந்தது. ‘வளரும் நாடுகளில் பெண்கள்’ எனும் தலைப்பில நான் என்னுடைய ரிப்போர்ட்டை பிரசன்ட் பண்ணினேன்.
பிரிசன் லல்லபிஸ்ங்கற டாக்குஃப்யூச்சர் பத்தி நான் கண்டிப்பா சொல்லியாகணும். கர்ப்பிணியா இருக்கிற ஐந்து பெண்கள் போதைப் பொருள் வழக்கு தொடர்பா சிறையில் அடைக்கப் படறாங்க. அவங்களுக்கு பிறக்கற குழந்தைகள் ஒரு வயசு வரையிலும் அம்மாக்களோடு இருக்க அனுமதிக்கப்படறாங்க. அதற்குப் பிறகு அந்தக் குழந்தைகள் வெளியே அனுப்பப்படறாங்க. அந்த தாய்மார்கள் அடைகிற சந்தோஷம், குழந்தைகளைப் பிரிஞ்ச பிறகு அவங்களுக்கு ஏற்படற சோகம், தங்களோட பிள்ளைகளைப் பார்க்கறதுக்காக அவங்க படற கஷ்டங்கள், சிதறிப்போன அவங்களோட குடும்பம்ன்னு பல்வேறு உணர்வுகளை ரொம்ப அற்புதமா இந்த டாக்குமென்டரியில் டச் பண்ணியிருந்தாங்க.
இந்த ஃபெஸ்டிவல் முடியற அன்னைக்கு டிரின் மின்_ஹாங்கற அற்புதமான பெண் படைப்பாளிக்கு மரியாதை செலுத்தற விதமா, அவங்க கடைசியா டைரக்ட் செய்த நைட் பேசன்ஜர் படத்தைத் திரையிட்டாங்க. இயக்குநர், பெண்ணியவாதி, கவிஞர்ன்னு மின்_ஹாவுக்கு ஏகப்பட்ட முகங்கள்.
அவங்களோட கடைசி படம், ‘ஒரு படம் இப்படித்தான் ஆரம்பிக்கணும், இப்படித்தான் முடியணும். இந்த மாதிரி காட்சி அமைப்புகள் தான் இருக்கணுங்கிற தியரியையெல்லாம் உடைச்சு எறிஞ்சிடுச்சு. தத்துவம், கவிதைஇ ரியலிசம், உருவகம்னு எல்லாவிதமான கலை வடிவங்களையும் உள்ளடக்கிய அந்தப் படத்தைப் பார்க்க பிரமிப்பா இருந்துச்சு.
மக்களோட கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்ற எத்னோகிராபிங்கிற செக்ஷன்ல என்னோட மாத்தம்மா படத்தைத் திரையிட்டாங்க. மீடியா உலகில் மிக முக்கியமான திருவிழாவாகக் கருதப்படற டபிள்யூஐடிசியில என்னோட இரண்டு டாக்குமென்டரிகள் திரையிடப்பட்டது ரொம்ப பெருமையான, சந்தோஷமான விஷயம்.
நான் அமெரிக்கா போனது அந்த விழாவுக்காக மட்டும்தான். ஆனா, அங்குள்ள தமிழர் சங்கங்கள் என்னோட டாக்குமென்டரிகள் பத்திக் கேள்விப்பட்டு உடனடியா பத்து, பன்னிரண்டு ஸ்கிரீனிங்ஸ் அரேஞ்ச் பண்ணாங்க. நியூயார்க், சிகாகோ, மேரிலாண்ட்ன்னு பயங்கர டூர். கொலம்பியா பல்கலைக்கழகம், விவேகானந்தர் பேசின சிகாகோ பல்கலைக்கழகம்ன்னு புகழ் பெற்ற இடங்களில் ஸ்கிரீன் பண்ணினது என்னால மறக்கவே முடியாத விஷயம்’’ பெருமிதமாய்ச் சொல்கிறார் லீனா.’’
_ ஆனந்த்
படங்கள்: ஆர். கோபால்
Kumudam.com
டாக்குமென்றி படமெடுத்து மிலியனர் ஆக முடியுமா?
<img src='http://sifyimg.speedera.net/sify.com/news_info/tamil/pennaenee/images/penjune484.jpg' border='0' alt='user posted image'>
-லீனா மணிமேகலை
செயல்களைக் குறித்த விமர்சனங்களைவிட, தமிழ்நாட்டில் அந்தச் செயல்களைச் செய்தவர்கள் யார்? அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு அந்தச் செயலைச் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்பதைக் குறித்தெல்லாம் விமர்சனங்கள் எழும். இதற்கு சமீபத்திய உதாரணம் லீனா மணிமேகலை!
அரக்கோணத்திற்கு அருகிýருக்கும் மாங்காட்டுச்சேரி கிராமத்தில், அருந்ததியினர் சமூகத்தில் இன்றைக்கும் ஆண்குழந்தை வேண்டி, உடல் நலம் பெற வேண்டி பெண் குழந்தைகளை, அவர்களின் சிறு தெய்வமான "மாத்தம்மா'விற்கு நேர்ந்து விடுவதையும், முறையான உறவுகள் இன்றி அவர்களின் வாழ்க்கையும், அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கையும் சூன்யமாவதை, தன்னுடைய "மாத்தம்மா' ஆவணப்படத்தில் சுட்டிக் காட்டியிருந்தவர் லீனாமணிமேகலை.
"தýத் பிரச்சனைகளை படமாக்கி காசு பார்க்கிறார் லீனா. அவர் அடிப்படையில் தýத் அல்ல' என்பது போன்ற விஷமப் பிரச்சாரங்கள், ஏதோ சில ஆதாயத்துக்காக உள்ளூரில் பரப்பப்பட்டாலும், லீனா மணிமேகலையின் படைப்பு நேர்மை, அமெரிக்காவில் நடந்த 23வது சர்வதேசப் பெண் இயக்குனர் களுக்கான திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டதின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.
""ஏறக்குறைய 50லிக்கும் மேற்பட்ட நாடுகளிýருந்து பெண் இயக்குனர்களின் படைப்புகள் திரையிடப்பட்ட இந்த விழாவில், என்னுடைய "மாத்தம்மா', "பறை' இரண்டு படங்களுமே திரையிடப்பட்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்ற லீனா மணிமேகலையிடம் நாம் முன் வைத்த சில கூர்மையான கேள்விகளும், அவரின் முனை மழுங்காத பதில்களும்....
"தýத் பிரச்சனைகளை காசாக்குகிறீர்கள்' என்ற விமர்சனத்திற்கு உங்களின் பதில்?
அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு. டாகுமெண்டரியை விற்று யாரும் மில்ýயனராக முடியுமா? "மாத்தம்மா' எங்களின் "கனவுப்பட்டறை' தயாரிப்பு. நிறையபேருக்கு ஒவ்வொரு முறையும் எங்கள் சொந்த செலவிலேயே சி.டி.யில் படத்தை மாற்றி கொடுப்போம். "பறை' "அகில உலக டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்' சார்பில், யேசுமரியானின் பெருமுயற்சியில் தயாரிக்கப்பட்டது. இதில் எண்ணற்ற வர்களின் பணம் இருக்கிறது. அவர்களுக்கான பணம் இந்த சி.டி.யை விற்பதில்தானே திரும்பக் கிடைக்கும்?
ஒடுக்கப்பட்டவர்களின் வேதனை யை, சாதி இந்துக்களின் அராஜகப் போக்கின் பதிவுதான் "பறை'. 45 நிமிட நேர இந்த ஆவணப்படத்தில் 22 இடத்தில் வெட்ட வேண்டும் என்றது சென்சார். இதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. சென்சாரை மீறி தனிச்சுற்றுக்குதான் இதை கொடுத்து வருகிறோம்.
வணிக ரீதியான படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் கருவிகளைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். இதற்கான காமிராவை வாடகைக்கு எடுப்பதிýருந்து, படப்பிடிப்பு நடத்துவது வரை எதிலும் தனிப்பட்ட சலுகைகள் என்பது எதுவும் கிடையாது. அப்படி இருக்கும்போது, இதற்கென்று ஒரு விலையை நிர்ணயிப்பதால்தானே இதில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும்? ஒரு ஜனரஞ்சக சினிமாவை சில நூறுரூபாய் கொடுத்து பார்க்கும்போது, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையைப் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டே எடுத்திருக்கும் "டாகுமெண்டரி'யைக் காசு கொடுத்து வாங்கிப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் நினைப்பதில் என்ன தவறு? இங்கு நிறையபேருக்கு டாகுமெண்டரி என்றால் "ஓசி'யில் பார்க்க வேண்டியதுதான் என்ற நினைப்பு இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
அருந்ததியர் விடுதலை முன்னணியின் தயாளன், ""மாத்தம்மா' படம், படப்பிடிப்பு நடந்த மாங்காட்டுச்சேரி கிராமத்திலேயே திரையிடப்பட வில்லை. அது உண்மைக்கு புறம்பான விஷயங்களைப் பேசுகிறது. அதை தடை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளாரே...? (கோபத்தில் முகம் சிவக்கிறது)
யார் இந்த தயாளன்? உண்மையிலேயே அருந்ததியர் விடுதலையில் அவருக்கு ஆர்வம் இருந்தால், அங்கு நடக்கும் அவலங்களை தடுத்து நிறுத்த வேண்டும். பிரச்சனையின் ஆழத்தை, அவலத்தை அந்தப் பகுதி மக்களைக் கொண்டேதான் பதிவு செய்திருக்கிறேனே தவிர, துணை நடிகைகளை நடிக்க வைத்து அல்ல. மாங்காட்டுச்சேரியில் திரையிட வில்லையே தவிர, அரக்கோணத்தில் திரையிடும்போது, மாங்காட்டுச் சேரியிýருந்து சம்பந்தப்பட்ட வர்களை, அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில்தான் திரையிட்டேன். அதோடு பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களையும் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
தýத் பிரச்சனைகளை பேசுவதற்கும், படமாக்குவதற்கும் நான் தýத்தாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனுஷியாக இந்தப் பிரச்சனைகளை நான் எடுத்துக்கொண்டேதான் இருப்பேன்.
விழாவில் எந்த மாதிரியான திரைப்படங்கள் திரையிடப்பட்டது?
வளரும் நாடுகளில் பெண்கள் மீதான, குறிப்பாக தýத் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக நான் எடுத்த "பறை' திரைப்படம் திரையிடப்பட்டது. நம் நாட்டில் சாதி, மதங்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அவலங்களைப் போலவே, இனவெறியால் அயல்நாடுகளில் நடக்கும் பாýயல் வன்முறைகள் பற்றி நிறைய படங்கள் திரையிடப்பட்டது. மேலும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை தீவிரமாகக் கிண்டலடிக்கும் படங்கள், பாýயல் சுதந்திரம் குறித்த படங்கள், அரசியýல் மத நம்பிக்கைகளின் திணிப்பு, இன்றைய சூழ்நிலையில் பின்பற்றப்படும் கடந்தகால கலாச்சார அதிர்வுகள் பற்றிய படங்கள் ஆகிய தலைப்புகளில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
அமெரிக்காவில் எந்தெந்த இடங்களில் திரையிடப்பட்டது?
சிகாகோ தமிழ்ச்சங்கம், வாஷிங்டன் தமிழ்ச்சங்கம், மிட்லிஈஸ்ட் தமிழ்ச்சங்கம், நியூயார்க் தமிழ்ச்சங்கம், நியூஜெர்சி, எய்ட், கொலம்பியா பல்கலைக்கழகம், பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகம், யுனிவர்சிட்டி ஆப் மேரிலேண்ட் ஆகிய இடங்களில் ஏறக்குறைய பன்னிரண்டு மாநிலங்களில் இந்த விழாவிற்கான படங்கள் திரையிடப்பட்டது.
சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள, படங்களில் இருக்கும் கருத்துகள் தவிர, அந்தப் படம் பற்றிய விமர்சனங்கள் கணிப்புகள் பற்றிய பத்திரிகைச் செய்திகள் மற்றும் மீடியா ரிப்போர்ட்டும் முக்கியம். அதை அடிப்படையாக வைத்துதான், என்னுடைய மாத்தம்மாவும் பறையும் தேர்ந்தெடுக்கப் பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டதின் மூலம், தýத் பெண்கள் மீதான பாýயல் வன்முறைகளை சர்வதேச அளவில் கொண்டு சென்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதோடு முன்னிலும் வேகமாகவும், தெளிவாகவும் நிறைய விஷயங்களை அணுகக்கூடிய விஷய ஞானம் கிடைத்திருக்கிறது. புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கிடைத்திருக்கிறது.
அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது?
அமெரிக்காவில் "எச்' விசாவில் இருப்பவர்கள், இந்தியாவுக்கு வந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டு போகின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் கிடைக்கும். அங்கு சென்றவுடன் நமது பெண்களை வெளியுலகமே தெரியாத அளவுக்கு கூண்டுக்கிளியாக்கி வருகின்றனர். திருமண பந்தத்தைத் தொடரவும் முடியாமல், துண்டிக்கவும் வழியில்லாமல் நாளுக்கு நாள் இந்திய அபலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பாதிக்கப்பட்ட அமெரிக்கா வாழ் பெண்களின் துயர் துடைக்க பல சங்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் பற்றியே ஒரு டாகுமெண்டரி எடுக்கலாம் என்ற எண்ணம்கூட ஏற்பட்டது. அவ்வளவு சோகம் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் இருக்கிறது.
உள்ளூர் பிரச்சனையை உலகளாவிய அரங்கத்துக்கு கொண்டு சென்றதில் நிறைய கருத்து வேறுபாடுகள் எழுந்ததா?
பிரச்சனை நடக்கும் இடம் வேறாக இருக்கிறதே தவிர, பிரச்சனையின் மையம் பெண்தான் என்பதில் பொதுமை இருக்கிறது. பகை, போர் போன்ற சூழ்நிலைகளில்கூட பெண்ணுடைய உடல்தான் களமாக இயக்கப்படுவதை உணர முடிந்தது. மாங்காட்டுச்சேரியில் நடக்கும் விஷயம் எங்கேயோ கம்போடியாவிலும் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்த பகிர்ந்து கொள்ளல் நிச்சயம் பெண்ணியத்தின் சாளரத்தை அல்ல; கதவுகளையே திறக்கும்!
- ரவிக்குமார்
http://tamil.sify.com/pennaenee/index.php

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->