Yarl Forum
புலம்பலுக்குள் ஒரு புன்னகை...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: புலம்பலுக்குள் ஒரு புன்னகை...! (/showthread.php?tid=7046)



புலம்பலுக்குள் ஒரு பு - kuruvikal - 06-15-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/sa1.jpg' border='0' alt='user posted image'>

இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது
கிபீரும் ஆட்லறியும்
இந்தியா இரகசியமாய் அனுப்பியது
மிக்கும் மிரண்டாவும்
அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது
பெல்லும் கிறீன்பரேட்டும்
ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது
தரையில் தாங்கியும் ஆகாயத்தாங்கியும்
சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது
எப் 7ம் ரி 56 உம்
பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது
மல்டிபரலும் பல்டி அடியும்
சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது
சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல்
இன்னும்
விட்டது குறையாய் தொட்டது குறையாய்
யார்யாரோ எல்லாம்
ஆயுதவியாபாரச் சந்தை விரித்தார்
எங்கள் அன்னை பூமியின்
அழிவுகளின் மேல்....

இத்தனைக்கும் சாட்சியாய்
இதோ அவள்....
இருந்தாலும்
முகத்தில் ஒரு புன்னகை
சொந்தக் கருவறை பிரசவித்த
வேங்கைகளின் வீரத்தால்
எதிரியின் நிலைகுலைவுக்காய்
எழுந்த சூறாவளியிலும்- அவள்
விடுதலைக் காற்றை
சுவாசித்ததாலோ என்னவோ....!


நன்றி.... http://kuruvikal.yarl.net/


- kuruvikal - 06-16-2004

மேலும் சில கவிதைகளையும் இங்கு பார்வையிடலாம்....

http://kuruvikal.yarl.net/


- kuruvikal - 06-16-2004

கிறுக்கல்கள் கண்டு அங்கும்
சில கிறுக்கல்கள் கிறுக்கிவிடுங்கள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- phozhil - 06-16-2004

பொல்லாப் பகை மீறியப் புன்னகை,
தீரத்தின் திறத்திற்கு நற்சான்று.
நயமுணர்ந்தேன், நனிமகிழ்வு!


- kuruvikal - 06-17-2004

கிறுக்கலோடு கிறங்கி
நறுகி நயம் கண்ட
எழிலரே பொழிலரே
தங்கள் மகிழ்வு கண்டு
தலை வணங்குகிறோம்...!

தலை திருப்பி
இரத்த உறவுமறந்து
எட்ட நிற்கும் உறவுகளுக்கும்
கொஞ்சம் எட்ட உரைத்திடுங்கள்
ஈழத்து உண்மைகள் சில.....!


- vallai - 06-17-2004

குருவி உங்கடை குடில் பாத்தன் எனக்கும் சின்னனா ஒரு கொட்டில் போடவேணும் கள்ளுக்கொட்டில் கொஞ்சம் ஐடியா தாங்கோவன்


- kuruvikal - 06-17-2004

இங்கேயே...யாழ்களத்தில் குடில் பகுதியில போய்ப் பாருங்கோ நிறைய ஐடியாக் கிடக்கு....அதொண்டும் பெரிய வேலையில்ல.....என்ன...எட்டுக் கிடுகும்...நாலு பூவரசம் தடியும்....போதும்...டோன்ட் வொறி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vallai - 06-17-2004

பிறகு நீங்கள் சொன்னதை நம்பி நாலு பூவரசங்கட்டை இறுக்கிப்போட்டு கடைசியிலை என்னை மாதிரி ஆடக்கூடாது


- kuruvikal - 06-17-2004

எதோ இருக்கிறத வச்சு இறுக்கிறத இறுக்கி..... கட்டுறதக்கட்டி..உள்ளதைக் காட்டினாச் சரி...சனம் பாக்கட்டன்....வல்லை முனியின் திறமைகளையும்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 06-17-2004

புலம்பலுக்குள் ஒரு புன்னகை...!
அருமையான கவி தலைப்பு.

<b>சொந்தக் கருவறை பிரசவித்த
வேங்கைகளின் வீரத்தால்
எதிரியின் நிலைகுலைவுக்காய்
எழுந்த சூறாவளியிலும்- அவள்
விடுதலைக் காற்றை
சுவாசித்ததாலோ என்னவோ....! </b>

விடுதலைக்காற்றின் சுவாசத்தில் ஐக்கியமாகிப்போன புன்னகை.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...


- kuruvikal - 06-19-2004

உங்கள் கருத்துருவக் கண்காணிப்புக்கு நன்றிகள்....!