Yarl Forum
ஐரோப்பிய கிண்ணம் 2004 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: ஐரோப்பிய கிண்ணம் 2004 (/showthread.php?tid=7073)

Pages: 1 2 3 4


ஐரோப்பிய கிண்ணம் 2004 - ganesh - 06-05-2004

2004


- ganesh - 06-05-2004

போர்த்துக்கலில் நடைபெறவுள்ள ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ள நாடுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன

1 வது

போர்த்துக்கல்
கிறீஸ்
ஸ்பெயின்
ரஸ்யா

2 வது

பிரான்ஸ்
இங்கிலாந்து
சுவிஸ்
குரோசியா

3 வது

சுவீடன்
பல்கேரியா
டென்மார்க்
இத்தாலி

4 வது

செக்கோ
லெட்லாந்து
ஜேர்மனி
நெதர்லாந்து

முதலாவது போட்டியில் 12.6.2004
போர்த்துக்கல் கிரேக்கத்தை எதிர்த்து விளையாடும்

நன்றி ஈரோ2004


- ganesh - 06-05-2004

பயிற்சிப்போட்டிகளில் தோல்வியற்றபோதும் நெதர்லாந்து
திடமாக போர்த்துகலுக்கு செல்கிறது இறுதியாக மூன்று பயிற்சிபோட்டிகளில் பெல்ஜியம்
அயர்லாந்து ஆகியநாடுகளுடன் தோல்வி கண்டுள்ளது பாரூர்தீவுடன்
விளையாடி வெற்றிபெற்றது அதோபோல் ஜேர்மனி பயிற்சிபோட்டியில் ரூமேனியாவுடன் படுதோல்வி அடைந்தது அதேவேளை சுவிட்ஸ்சலாந்தை 2-0 கோல் வித்தியாசத்தில் வென்றது

தொடரும்


- ganesh - 06-06-2004

முதல்பரிசான 18 மில்லியன்ஈரோக்களை கைப்பற்றப்போவது யார்?

இதனைவிட 16 நாடுகளுக்கும் ஆரம்பபணமாக 4.9 மில்லியன் ஈரோக்களும் வழங்கப்படவுள்ளது
ஐரோப்பிய உதைபந்தாட்ட சங்கத்திற்கு 820 மல்லியன் ஈரோக்கல் வருமானமாக வரவுள்ளது


- ganesh - 06-06-2004

டென்மார்க்கை சேர்ந்த தோமாஸ் கிராவேசன் குரோட்சாவியைச்சேர்ந்த ரூடர் சுவிட்சலாந்தைச்சேர்ந்த றிக்காடோ ஆகியோர் தமக்கு கிடைத்த தண்டனை காரணமாக
முதலாவது போட்டியில் விளையாடமுடியாது
....................................................
ரஸ்யா முதலாவது நாடாக போர்த்துகலுக்கு வந்து சேர்ந்துள்ளது இவர்களது முதலாவது போட்டி 12ம் திகதி சனிக்கிழமை 8.45 மணியளவில்நடைபெறவுள்ளது எதிர்த்து விளையாடும் நாடு ஸ்பெயின்


- ganesh - 06-07-2004

நெதர்லாந்து முதலாவது சுற்றுடன் வெளியேறிவிடும்?
இப்படி கூறியுள்ளார் மன்செஸ்ரர்யுனைட்டட் மனேஜர் சேர் அலெக்ஸ் பேர்கூசன்

இதோ அவரின் கணிப்பு
செக்கி - லெத்வேனியா 1-1
ஜேர்மனி- நெதர்லாந்து 2-0
லெத்வேனியா- ஜேர்மனி 1-1
நெதர்லாந்து- செக்கி 1-1
நெதர்லாந்து- லெத்வேனியா 2-1
ஜேர்மனி- செக்கி 2-2

இதன்படி பார்த்தால் ஜேர்மனியும்
செக்கியும் அடுத்த சுற்றுக்குசெல்லும்

பிரான்ஸ் வெற்றிக்கிண்ணத்தை வெல்லும் இது இறுதிப்போட்டியில்
2-1 என்ற ரீதியில் இத்தாலியை வெற்றிகொள்ளும்


- ganesh - 06-07-2004

இதுவரை வெற்றிபெற்ற நாடுகள்

1960 ரஸ்யா
1964 ஸ்பெயின்
1968 இத்தாலி
1972 மேற்கு ஜேர்மனி
1976 செக்கோலாவாக்கியா
1980 மேற்கு ஜேர்மனி
1984 பிரான்ஸ்
1988 நெதர்லாந்து
1992 டென்மார்க்
1996 ஜேர்மனி
2000 பிரான்ஸ்


- ganesh - 06-07-2004

இப்பகுதியில் தவறுகள் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்


- ganesh - 06-09-2004

போர்த்துக்கலில் குழப்பம் ஏற்படுத்தும் உதைபந்தாட்டரசிகர்களை பிடித்து சிறைவைப்பதற்காக 5 சிறைச்சாலைகளில் 500 அறைகளை போர்த்துக்கல் அரசு தயார் நிலையில் வைத்துள்ளது


- ganesh - 06-09-2004

கிரேக்க உதைபந்தாட்டக்குழு கால் இறுதிஆட்டத்தில் பங்கபெற தகுதிபெறுமானால் விளையாடும் வீhர்களுக்கு 2 மில்லியன் ஈரோக்கள் வழங்கப்படவுள்ளது


- ganesh - 06-09-2004

1 பிரான்ஸ்
2 இத்தாலி
3 போர்த்துக்கல்
4 இங்கிலாந்து
5 ஸ்பெயின்
6 நெதர்லாந்து
7 செக்கி
8 ஜேர்மனி
9 சுவீடன்
10 டென்மார்க்
11 ரஸ்யா
12 பல்கேரியா
13 குரோட்சி
14 கிறீஸ்
15 சுவிஸ்
16 லெத்வேனியா


2004 இறுதிமுடிவு இப்படிஅமையும்?


- ganesh - 06-12-2004

12வது ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்ட போட்டி இன்று போர்த்துகலில் ஆரம்பமாகியுள்ளது முதலாவது போட்டியை கண்டுகளிக்க 48761மேற்பட்ட மக்கள் போற்ரோவில் ட்ராகோ மைதானத்தில் கூடியிருந்தார்கள்
முதலாவது போட்டியில் போர்த்துக்கலை எதிர்த்து கிரேக்கம் விளையாடியது
கிரேக்கவீரர் காராகவுனிஸ் 6வது நிமிடத்தில் முதலாவது கோலைப்போட்டிருந்தார் இது ஐரோப்பியகிண்ணத்தின் 350 கோல்ஆகும்
51 வது நிமிடத்தில கிடைத்த பனால்டி மூலம் கிரேக்கவீரரர் பசிநாஸ்2 வது கோலை போட்டிருந்தார்90 நிமிடத்தில் போர்த்துகலின் சார்பில் ரொனால்டோ 1 கோலைப்போட்டார் இறுதியில் கிரேக்கம் 2க்கு 1 என்ற hPதியில் வெற்றி பெற்றுள்ளது


- ganesh - 06-12-2004

இரண்டாவது போட்டியில் ரஸ்யாவும் ஸ்பெயினும் மோதிக்கொண்டன இதில் ஸ்பெயின் 1 0 என்ற hPதியில் ரஸ்யாவை வென்றது இதில் 3 ஸ்பெயின் வீரர்களுக்கும் 4 ரஸ்யவீரர்களுக்கு மஞ்சல்காட்டும் ஒரு ரஸ்யவீரருக்கு சிவப்புகாட்டும் கிடைத்து மைதானத்தை விட்டு வெளியேறப்பட்டார்


- ganesh - 06-13-2004

2004


- ganesh - 06-13-2004

12 வது ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று சுவிற்ஸ்லாந்தை எதிர்த்து குரோசியா விளையாடியது மிகவும் சுவாராஸ்யமாக நடைபெற்ற இப்போட்டி எவரும் கோல் போடாத நிலையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது 50 வது நிமிடத்தில் சுவிஸ்வீரர் போகில் சிவப்பு காட்டைபெற்று வெளியேற்றப்பட்டதால் சுவிற்ஸ்லாந்து 10 வீரர்களுடன் இறுதிவரை விளையாடவேண்டியிருந்தது

நேற்றைய போட்டியில்
கிறீஸ் போர்த்துக்கலை 2 க்கு 1 என்ற hPதியிலும் ஸ்பெயின் ரஸ்யாவை 1 க்கு 0 என்ற hPதியிலும் வெற்றிபெற்றதும் யாவரும்
அறிந்ததே. ஸ்பெயின் ரஸ்யாவிற்கு இடையில் நடைபெற்றபோட்டியில் 7 மஞ்சல் காட்டும் 1 சிவப்புக்காட்டும் வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது



தற்போதைய ஐரோப்பியசாம்பியன் பிரான்ஸ் இங்கிலாந்தை 2க்கு 1 என்ற hPதியில் வெற்றிபெற்றுள்ளது
......................................
தற்போதையநிலை

குறூhப் 1

கிறீஸ் 3 புள்ளிகள்
ஸ்பெயின் 3 புள்ளிகள்
போர்த்துக்கல் புள்ளிகள் இல்லை
ரஸ்யா புள்ளிகள் இல்லை

குறூப் 2

பிரான்ஸ் 3 புள்ளிகள்
குரோசியா 1 புள்ளி
சுவிஸ் 1 புள்ளி
இங்கிலாந்து புள்ளிகள் இல்லை


- Mathivathanan - 06-13-2004

இங்கிலாந்து தோத்துப்போச்சுது.. இரவு போத்துக்கலில் எத்தனை குத்துப்படுதோ தெரியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ganesh - 06-14-2004

தோல்விஅடையும் முன்போ அங்கு பலர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்


- ganesh - 06-14-2004

<img src='http://www.tamil.nl/decup.gif' border='0' alt='user posted image'>


- kuruvikal - 06-15-2004

ஐரோப்பியக் கிண்ண கால்பந்தாட்டச் செய்திகளை திறப்படத் தொகுத்து வழங்கும் எம் கணேசண்ணைக்கு பாராட்டுக்கள்...தொடரட்டும் தங்கள் சேவை...


- ganesh - 06-15-2004

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தோல்வியின் காரணமாக ரஸ்யவீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் இதன்காரணமா பயிற்சியாளருக்கும் மத்திய விளையாட்டுவீரரான மொஸ்ரோவோய்க்கும் ஏற்பட்ட தகராறினால் அவர் ரஸ்ய குழுவில்
இருந்து நீக்கப்பட்டுள்ளார்