Yarl Forum
அன்பால் அணைக்க ஒரு அன்புச்சோலை... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: அன்பால் அணைக்க ஒரு அன்புச்சோலை... (/showthread.php?tid=7072)



அன்பால் அணைக்க ஒரு அன் - kuruvikal - 06-06-2004

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_2.jpg' border='0' alt='user posted image'>
(tamilnet)

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையில் வாழும் முதியோருக்கு உதவும் வகையில் அன்புச்சோலை எனும் அன்பு இல்லத்தை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரின் பாரியார் சகிதம் சென்று திறந்துவைத்து முதியோருக்கு பரிசில்களையும் வழங்கினார்....!

முதுமையிலும் வாழ்வு உண்டு...அது வீழும் பருவமல்ல....என்பதை மனத்தில் உறுதியாகக் கொண்டு அனைத்து முதியோரும் செயற்படுதல் வருங்காலத்திற்கு மிகவும் அவசியம்....! அதை ஈழத்தில் வலுவாகக் கட்டியெழுப்ப அன்புச்சோலை கைகொடுக்கட்டும்...!

உலகில் மனிதவலுத் தேவையைப் பூர்த்தி செய்ய முதியோரின் பக்கங்களிப்பு எதிர்காலத்தில் மிகமுக்கிய பங்களிப்பு செய்ய வேண்டி வரும் என்பது இன்று மேற்குலகிலேயே கருத்தில் எடுக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன...! காரணம் இன்னும் சில தசாப்தங்களின் பின் முதியோரின் எண்ணிக்கை இளையோரின் எண்ணிகையைவிட பல மடங்கு அதிகரிக்கும் என்று ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுள்ளதால்...!


- kuruvikal - 06-06-2004

மூதாளர் பேணலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் திறந்து வைப்பு

அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் திறந்து வைத்து, மூதாளர்களுக்கு அன்புப் பரிசில்களையும் வழங்கினார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள மூதாளர் பேணலகத்தில நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர். சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து பொதுச்சுடரினைத் தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட பெண்களுக்கான தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

மாவீரர்கள், போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் திருக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது துணைவியாருடன் கலந்து கொண்டு மூதாளர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களுக்கு அன்புப் பரிசில்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு. வே.பாலகுமாரன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர் உட்பட பல பொறுப்பாளர்கள் போராளிகள் கலந்து கொண்டனர்.

தாயக மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் பெற்றோர்கள் அன்புச்சோலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நன்றி புதினம்....!


- kuruvikal - 06-07-2004

மூதாளர்களுடன் (முதியோருடன்) புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன்...

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_1_26289_435.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_4_26301_435.jpg' border='0' alt='user posted image'>

படங்கள் தமிழ்நெற்....!

எல்லோரும் வழமையாகச் செய்வது போல் அன்றி.... வெறும் நிகழ்ச்சிக்காக அன்றி... உண்மையான கருசணையுடன் இந்த மூதாளர்கள் என்றும் அன்பு இல்லத்தால் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் மனம் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கத்தக்க வகையில் அன்பு அவர்களை உலகெங்கும் வாழும் மற்றையவர்களுடனும் பிணைத்திருக்க வேண்டும் என்பதே எமது அவா....!