| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 254 online users. » 0 Member(s) | 250 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,626
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| யாழ் கலாச்சாரம் |
|
Posted by: Mathan - 05-31-2004, 11:02 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (7)
|
 |
கட்டுமீறிய அடாவடித்தனங்கள் விரைவில் முடிவுக்கு வருமா? - ஞாபகன்
இப்பொழுது யாழ்ப்பாணத்து வீதிகளில் அச்சுறுத்தும் வகையாய் பறக்கும் அசுர வேகங்களை கொண்ட வாகனங்களைவிட, இன்னோர் வகை எமதூதர்களை சாதாரணமாக காணமுடியும். பகலில் முக்கிய சந்திகளில் கூடியிருக்கும் வேலையற்ற இளைஞர் குழுவினரே அத்தூதர்களாவர்.
தென்னிந்திய திரைப்பட கதாநாயகர்களாக துணைப்பாத்திரங்களாக தம்மைத் பாவனை செய்துகொள்ளும் இக் குழுவினர்., பல பெயர்களில் உள்ளனர் என்பது ஏற்கனவே அறியப்பட்ட விடயம். இரவு நேரங்களில் வாள்கள், உடைக்கப்பட்ட போத்தல்கள், பொல்லுகள் சகிதம் மது போதையில் தமது எதிரிகளை தேடி இவர்கள் புறப்படுவார்கள்.
தேவையேற்படின்; பட்டப்பகலிலும் திரைப்பட நடவடிக்கைகள் போல செயலில் ஈடுபடுவார்கள். சில நாள்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த பிற்பகலில் ஒரு சம்பவம் நடந்தது. முச்சந்தி ஒன்றில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் உச்சமது போதையில் வாகனங்களை தடுத்து வைத்து கொண்டு நின்றார்கள். இருபுறமும் வந்த வாகனங்கள் பலமாக ஹோர்ன் அடித்து வழிவிடுமாறு கோரின. தவிரவும் ஏராளமான சைக்கிள், மோட்டார்சைக்கிள், பயணிகளும் போக்குவரத்து தடைப்பட்டு எதிரெதிரே நின்றார்கள்.
மதுபோதையில் நின்ற மூவரும் தூசன வார்த்தைகளால் வாகனத்தில் இருந்தவர்களை ஏசியபடி காரணமின்றி அடிப்போம், உதைப்போம் என்றனர். ஆனால் எவரும் அவர்களை திருப்பிக் கேட்கத்துணியவில்லை இறுதியில் வெறியர்களோடு வந்த நாலாம் நபர் பிரயனத்தனப்பட்டு அவர்களை அழைத்துச் சென்ற பின்பே வீதிப்போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
இத்தகைய சம்பவங்களை அல்லது இது போன்ற வடிவம் மாறிய சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் பரவலாக காணமுடியும். இவர்கள் அதிகமாக 17 வயதிலிருந்து 24, 25 வயதிற்குட்பட்டவர்களாகவே உள்ளனர். இதில் மாணவர்களும் உள்ளடக்கம் என்பது தான் வேதனையான விடயம்.
தத்தமது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆட்கடத்தல், கொலைகள், கொள்ளைகள், பிறரைஅச்சுறுத்தல், தாக்குதல் என்பவற்றில் ஈடுபடும் மனோபாவம் இவர்களிடம் வளந்து விட்டுள்ளது. இவர்கள் புதியரக மோட்டார்சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், ஹையஸ் வான்கள் கூட கைவசம் வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக பகலில் பாடசாலைக்கு மாணவிகள் செல்லும் போது, திரும்பும்போதும் இவர்களின் செயல்கள் தீவிரம் அடைகின்றன. யாருக்கு அஞ்சாத சிங்கங்கள் என தம்மை பறைசாற்றிக் கொள்ளும் இவர்கள் இளம் பெண்கள் பலரை வற்புறுத்தல்களுக்கு உட்படுத்தியுள்ளனர். கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டதாகவும் வெளியடையாக பலரும் பேசும் நிலையிலும் உள்ளனர்.
சிறிலங்கா இராணுவம் குடாநாட்டை ஆக்கிரமித்த பின்னரே இக்குழுக்கள் வேகமாக வளர்ந்தன. இராணுவத்தினர் இவர்களை குடாநாட்டில் பரவலாக வளர்த்தெடுப்பதில் அக்கறை கொண்டு செயற்பட்டனர். இப்போதும் கூட சிறிலங்கா இரணுவத்தினரதும் சிறிலங்கா பொலிசாரதும் ஆசிர்வாதம் இவர்களுக்கு உண்டு என்பது வெளிப்படையானது.
இக்குழுவினர் மேற்கொள்ளும் சமூகவிரோதச் செயல்கள் சிறிலங்கா அரசின் குற்றவியல் சட்டங்களுக்கு முரணானவை. ஆயினும் அச்சட்டங்களும் அவற்றை கையில் வைத்துள்ள இயந்திரங்களும் அதனைக்கவனிப்பதில்லை சில சந்தர்பங்களில் மட்டும் பொதுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இவையே இக்குழுக்களுக்கு ஊக்கமளிக்க போதுமாவை.
குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தகாலத்தில் கூட இக்குழுக்கள் அட்டகாசங்களில் ஈடுபட்டன.
விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்துக்கு அரசியல் பணிகளுக்காக 2001ல் திரும்பிய போது மக்கள் மகிழ்ந்ததற்கு இவர்களின் அடாவடித்தனங்கள் கட்டுப்படும் என்ற காரணமும் ஒன்றாகும்.
ஆனால் போர்நிறுத்த உடன்பாட்டுக்குள் அடங்;கிய வகையில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணி, இதனைக்கட்டுப்படுத்த இடமளிக்கவில்லை. போதாதற்கு அதுவரை கண்டும் காணமலும் சிறிலங்கா பொலிசார் அதன்பின் தாம் தீவிரமாக செயற்படுவது போலவும் வேறுயாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாதுதென்பது போலவும் காரியமாற்றினார்கள்.
ஆபால் அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாது விடுவிக்கப்பட்டமையே நிகழ்ந்தது. இப்பின்னணியில் விடுதலைப்புலிகளால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பல தடவை வேண்டுகோள்களும் எச்சரிக்கைகளும் விடுவிக்கப்பட்டிருந்தன.
அதனை எல்லாம் தம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற தோரணையிலேயே எதிர் கொண்டுவந்துள்ளனர். விடுதலைப்புலிகளால் ஒரு எல்லைக்கு அப்பால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற துணிவே இவற்றுக்கு காரணமாகும்.
குடாநாட்டில் இக்குழுக்களால் இளம் பெண்கள் உடபட சாதரண சிவில் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் இடையறாது தொடர்கின்ற நிலையில் கடந்த வாரத்தில் புதியதிருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் அடி காயங்களுடன் ஒரு சடலம் யாழ். றக்கா வீதியில் நள்ளிரவிலி போடப்பட்டிருந்தது.
சடலத்துக்கு அருகே காணப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கொலை,கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வல்லுறவு, சிறுமியர் மீதான வற்புணர்ச்சி, கூலிக்குதாக்குதல் நடத்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டமைக்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இவ்வாறான ஏனைய சமூக விரோதிகளுக்கு படிப்படியாக தண்டணை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இத்தண்டனையை வழங்கியமைக்கு ?எல்லாளன் படை? உரிடை கோரியிருந்தது. அன்றை தினம் இரவு வேறும் நான்கு சமூகவிரோதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு எல்லாளன் படையால் வௌ;வேறு இடங்களில் உயிரோடு இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மக்களிடையே ஒருஆசுவாச பெருமூச்சை உருவாக்கியுள்ளது.
சட்டம் ஒழுங்கைப்பேண வேண்டிய சிறிலங்காப் பொலிசாரதும் கூடவுள்ள படையினரதும் ஆசிர்வாதத்தோடு அடிதடிக்குழுக்கள் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட, மக்களது ஆசிர்வாதத்தோடு எல்லாளன் படை களத்தில் இறங்கவேண்டியதாயிற்று இனியும் அதிகாரம் படைத்த சமூகப் பொறுப்பாளிகள் காட்டும் அசமந்த போக்கு எல்லாளன் படையினரின் எழுச்சிக்கே வழி வகுக்கும்.
ஞாபகன்
|
|
|
| புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் |
|
Posted by: aathipan - 05-31-2004, 10:27 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (63)
|
 |
அன்பான வாசகர்களே உங்களி;ல் பலர் புகைப்படமெடுப்பதை பொழுதுபோக்காகக் கொண்டு இருக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை எழுதுங்கள். தெரிந்த தொழில் நுட்பங்களை பரிமாறிக்கொள்ளுங்கள். புகைப்படம் தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்ளுங்கள்.
|
|
|
| வீரப்பெண் |
|
Posted by: AJeevan - 05-31-2004, 03:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
[align=center:7b0fa5f7b9]<img src='http://www.kumudam.com/kumudam/31-05-04/25.jpg' border='0' alt='user posted image'>[/align:7b0fa5f7b9]
அன்று தமிழக சட்டசபையில் சேர்களோ.. மைக் செட்டுகளோ பறக்காமல், வார்த்தைகளில் அனல் பறந்தது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, கோயில்களில் பொட்டுக்கட்டுதல் என்கிற 'தேவதாசி'முறை வழக்கத்திலிருந்தது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனல் பறக்கும் விவாதத்திற்குக் காரணமாக இருந்தது.
பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து.. தனது நெஞ்சுரத்தால் பெண் விடுதலைக்காகவும் தேவதாசி ஒழிப்புக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அந்த வீரப்பெண், " 'தேவதாசி'முறை தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டே தீரவேண்டும்.. வரும் காலத்தில் 'தேவதாசி' என்கிற பெயர் சரித்திரத்தில்கூட இடம்பெறக் கூடாது" என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.
அந்தப்பெண்ணின் வீரமுழக்கத்தை மறுக்கும் விதமாக.. சத்தியமூர்த்தி அவர்கள், "தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?" என்று கேட்டார்.
சற்றும் தாமதிக்காமல்.. அந்தப் பெண், "தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்ஜாதிக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!" என்று அனல்தெறித்தார். சட்டசபையே ஒரு நொடி ஆடிப்போனது.
அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் என்கிற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரான இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
1886_ஆம் வருடம் புதுக்கோட்டையில் நாராயணசாமிக்கும், சந்திரம்மாளுக்கும் மூத்தமகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி.
முத்துலட்சுமியின் குடும்பம் அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரும் மதிப்புக்குரிய குடும்பமாகத் திகழ்ந்தது. அவரது தந்தை நாராயணசாமி, மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோதும் கரைபடியாத கரம் என்பதால்... வீட்டுக்குள் நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.
மூத்த பெண்ணான முத்துலட்சுமியை பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடலாமா? என்று நாராயணசாமி நினைத்தபோது... முத்துலட்சுமியின் கல்வியறிவை முடக்கி அவரை கிணற்றுத் தவளையாக்கிவிட வேண்டாம் என, அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள் நாராயண சாமியிடம் கெஞ்சினார்கள்.
முத்துலட்சுமி, அவர்களின் கெஞ்சுதலுக்கு நன்றி உபகாரமாக, பள்ளிக்கூடத்திலேயே அவர் ஒருவர் மட்டும் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியின், ஆசிரியர்களின் மானத்தைக் காப்பாற்றினார்.
அதற்கடுத்து புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் சேர்ந்தபோது, அவருக்கு கல்லூரி நிர்வாகம் ரத்தினக் கம்பள வரவேற்புத் தந்தது. அங்கே அவரது ஆங்கிலப் புலமை... ஆசிரியர்களை அசரவைத்தது.
அத்தனை திறமையும், புத்திக்கூர்மையும் கொண்ட முத்துலட்சுமிக்கு கண்பார்வைக் கோளாறு என்கிற குறையிருந்தது. இருப்பினும், படிப்பையே தனது பார்வையாக, இருவிழியாக மாற்றிக்கொண்டார். அடுத்து, அவருக்குள்ளிருந்த உடல்நலக் குறைபாடு அவரை மருத்துவத் துறையில் கால் பதிக்கத் தூண்டியது. அதேபோல் அவரது தந்தை நாராயணசாமியின் மாணவர் சீனிவாசராவ் என்பவரின் தாயார் டைபாய்டில் அவதிப்பட்டதைக் கண்டு மனம் பதைத்தவர்... தான் எப்படியும் மருத்துவராகி... ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்கிற உறுதியை தனக்குள் கொண்டுவந்தார்.
மருத்துவக் கல்லூரி மாணவியாக அவர் கால் பதித்தபோது, அந்தக் கல்லூரி அவரை இருகரம்நீட்டி வரவேற்றது.
மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். 1912_ல் மருத்துவராய் வெளியே வந்தார்.
அடுத்து, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றியபோதுதான் அவருக்கு அரசியல் மீது ஆர்வம் பிறந்தது.
பெண்ணடிமைத்தனம் விலக வேண்டும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள் அழிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அரசியலில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் உதயமானது.
முத்துலட்சுமியின் அயராத உழைப்பு.... அவரை மருத்துவத்துறையில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
அறுவை சிகிச்சைத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 'முதல் இந்திய மருத்துவப் பெண்மணி' என்கிற வரலாற்றுச் சான்றிதழோடு வெளியே வந்தார்.
அடுத்து அவருடைய இலக்கு.. ஏழை எளிய மக்களுக்காக அதுவும் தனது பகுதி மக்களுக்கான சேவையில் தொடங்கியது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் அவர் கரம்பட்டுக் குதூகலமாயின.... அவர் சிகிச்சையால் புத்துயிர் பெற்றன.
அவரது வளர்ச்சியில்... சேவை மனப்பான்மையில்... புளங்காகிதம் அடைந்த அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினர். ஆனால், திருமணம், பெண்களை அடிமையாக்கும்_ஆணாதிக்கம் செலுத்தும் ஒரு சடங்கு என்று நினைத்ததால் அவர் மறுத்தார்.
இருப்பினும், அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயுலு ரெட்டியாரின் மகன் டாக்டர் சுந்தர்ரெட்டியார்... முத்துலட்சுமியின் தந்தையை அணுகி... "முத்துலட்சுமியின் மனம் அறிந்தவன் நான். அவரைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்.." என்று பெண் கேட்டார்.
அவர் தனது விடுதலை உணர்வுக்கு எந்த விதத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருக்கமாட்டார் என்று உணர்ந்த பின்பு முத்துலட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார்.
1914_ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துலட்சுமி திருமதி ஆனார். ராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி என்கிற இரண்டு மகன்களைப் பெற்றார்.
அவரது கணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி மாற்றலாக, முத்துலட்சுமி புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் அவரது தங்கைக்கு புற்றுநோய் தாக்க... தான் ஒரு மருத்துவராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் பதறினார்.
புற்றுநோய் எனும் உயிர்க்கொல்லி நோயிலிருந்து இனி யாரையும் சாகவிடக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியானது.
1925_ல் கணவர், குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்று அங்கே செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்ய ஆரம்பித்தார்.
அதோடு அங்கே நாற்பத்திரண்டு நாடுகள் கலந்துகொண்ட மகளிர் மாநாட்டில் இவரும் இந்திய மாதர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அப்போது... உலகம் முழுக்கப் பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், ஆண்கள் ஆதிக்கத்தால் பெண்கள் அடிமைகளாய் கட்டுண்டு கிடப்பதும், பெண்கள் வெறும் போகப்பொருள் என்கிற நிலையிலிருப்பதும் அவருக்குள் ஒரு புரட்சித் தீயை உருவாக்கியது.
இங்கிலாந்திலிருந்து புற்றுநோய்க்கான ஆராய்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் இந்திய மாதர் சங்கம் அவரை அரசியல் களத்திற்குள் இறக்கிவிட்டது. முத்துலட்சுமியின் வீரமும், விவேகமும் அவரை இந்தியத் திருநாட்டின் முதல் சட்டசபை உறுப்பினராக்கியது.
அந்த உறுப்பினர் எனும் கவசத்தால்... 'தேவதாசி...' 'பெண் அடிமை' 'பால்ய வயதுத் திருமணம்' எனும் பேய்களை ஓட்டினார்.
எல்லாவற்றிற்கும் மேலே... புற்றுநோய் நிவாரண மருத்துவமனையை அவர் சார்ந்திருந்த மாதர் சங்கம் சென்னையில் தொடங்கியது. அன்று சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட அந்தப் புற்றுநோய் மருத்துவமனை, இன்று பல்லாயிரக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளின் உயிர் காக்கும் தோழியாகச் செயல்பட்டு வருகிறது.
1954_ல் பன்னிரெண்டு படுக்கைகளோடு தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு _ டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி... என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று அந்த மருத்துவமனையில் பயன்பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு எண்பதாயிரம் பேர்.
பெண் விடுதலைக்காகவும்.. ஏழை, எளிய மக்களுக்காகவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937_ம் வருடம் சென்னை மாநகரத் தலைமையாரால் 'ஆல்டர் வுமன்' என்கிற பட்டம் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி 1956_ல் இந்திய அரசின் பத்மபூஷண் விருதுக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.
1936_ல் சென்னை அடையாறில் குடியேறிய பிறகு.. முழு நேர மருத்துவ உதவிகளோடு.. மீனவக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார். நூலகங்களை உருவாக்கினார். டாக்டர் சௌந்திரம் இராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.
தனது இறுதி மூச்சு உள்ளவரை பொதுநலமும்.. பெண்களின் சுதந்திர வாழ்க்கையுமே அவரின் ஒரே மூச்சாக இருந்தது.
1968_ம் வருடம் தனது 82_வது வயதில் அந்த இதயம் நின்றபோது, அவருக்காக பல ஆயிரம் உள்ளங்கள் கண்ணீர் சிந்தின.
டாக்டர் முத்துலட்சுமி மறைந்தாலும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அவர் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது.
_ திருவேங்கிமலை சரவணன்
--------------------------------------------------------------------------------
முத்துலட்சுமி அம்மையாருக்கு தேவதாசி
ஒழிப்பு எண்ணம் வர ஒரு நிகழ்ச்சியே காரணம். புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலில் வழிபடச் சென்றபோது, கண்ட ஓர் நிகழ்ச்சி. ஒரு பன்னிரண்டு வயதுப் பெண்ணை கோயில் குளத்தில் நீராட வைத்து, அலங்காரம் செய்து, மேளதாளத்தோடு அழைத்துச் சென்றனர். பின், கோயிலுக்கு காணிக்கையாக நேர்ந்துவிட்டு, பொட்டுக் கட்டிவிட்டனர். கோயிலில் சுவாமி வலம் வரும்போது ஆடியும், பாடியும் அபிநயம் பிடித்தும் வந்தாள் அப்பெண். பின்னர் இவர்களே பொதுமகளிர் ஆயினர்.
இதைச் சட்டப்படி முறியடிக்கவே மேலவை தீர்மானம். தேவதாசி எனும் இழிநிலையை எடுத்துரைத்தார். ஆனால், அதே புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி இதை இடைவிடாது மறுத்தார். டாக்டரம்மாவோ விடுவதாயில்லை. 'இது புண்ணிய காரியமென்று நீங்கள் கருதுகிறீர்கள். இழி செயல் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, உங்கள் பிள்ளைகுட்டிகளை பொட்டுக்கட்டிவிடுங்கள்' என்றார். சத்தியமூர்த்தி வாயடைத்துப் போனார். சட்டம் நிறைவேறியது. பெரியார் பெரிதும் உதவினார்.இன்று பெண்கள் அலுவலகங்களில் சிறப்பாக, ஆணுக்குச் சமமாய் பணிபுரிய டாக்டரம்மாவே காரணம்.
--------------------------------------------------------------------------------
டாக்டர் முத்துலட்சுமியை திருமணம் செய்துகொள்ள டாக்டர் சுந்தர்ரெட்டி விருப்பம் தெரிவித்தபோது, மூன்று நிபந்தனைகளை அம்மையார் விதித்தார்.
1. தம்மை சரிசமமாக நடத்த வேண்டும்.
2. தன் சொந்த விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது.
3. தம்மை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சுந்தர்ரெட்டி இவற்றுக்கு இணங்கிய பிறகே 1914 ஏப்ரலில் 'தியாசபிகல் சொசைட்டி (பிரம்ம சமாஜ) சட்டத்தின்படி திருமணம் நடந்தது.
kumudam.com
|
|
|
| இலங்கையில் பிறந்தது அதிஷ்டமா துரதிஷ்டமா? |
|
Posted by: Mathan - 05-31-2004, 01:11 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (33)
|
 |
நான் அதிர்ஷ்டசாலியா?துரதிர்ஷ்டசாலியா?
மணிரத்தனம் அவர்கள் இயக்கி கமலகாசன் நடித்த 'நாயகன்" படத்தில் ஒரு காட்சி வரும்,ஆரம்பத்தில் தந்தையைக் கொன்றவனை ஆத்திரத்தில் கொலை செய்த கமலகாசன் (நாயக்கர்) பின்னர் அதனையே நல்லவர்களைக் காக்கவும் தீயதை அழிக்கவும் ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்,"நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றா ஒருத்தன் அழிவதில் தப்பில்லை" என்பது அவர் கொள்கை.அப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தி வரும் 'நாயக்கரை'ப் பார்த்து அவரது பேர்த்தி கேட்பதாக ஒரு காட்சி வரும்.
"தாத்தா நீங்கள் நல்லவரா கெட்டவரா' என்று பேர்த்தி கேட்க கமல் சிறிது நேரம் யோசித்துவிட்டு "தெரியலைம்மா' என்று பதில் சொல்வார்
அந்தத் திரைப்படத்தில் என்னை மிகவும் பாதித்த காட்சி அது,இன்னும் நிறையப் பேர் அந்த ஒரு கேள்வியில் கலங்கிப் போயிருக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தீர்களானால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை,ஈழத்தில் நடக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் அந்தத் திரைப்படத்தின் கதைக்கருவுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பது தோன்றும்.
இங்கு நான் சொல்ல வந்தது அதுவல்ல,நீங்கள் நல்லவரா கெட்டவரா என்றே திடுக்கிடும் கேள்வி மாதிரி ஒரு கேள்வி வீரம் செறிந்த மண்ணில் பிறந்த நீங்கள் அதிர்ஷட்க்காரரா, துரதிருஷ்டக்காரரா? என்று மிகவும் கஷ்டமான ஒரு கேள்வியை சுந்தர்வடிவேல் அண்ணா எனது ஓடுகிற வண்டியோட தொடரின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்காவிட்டால் வேதாளத்துக்குப் பதில் சொல்லாத விக்கிரமாதித்தன் கணக்கில் எனது தலை சுக்கு நூறாகிவிடும் என்றெல்லாம் அவர் மிரட்டவில்லை.ஆனாலும் அவர் மிரட்டவில்லை என்பதற்காக அதனை என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.
இப்போது மீண்டும் கதைக்கு வருவோம்,நாயக்கர் ஒரு கொள்கையுடன் போராடுகிறார் அதற்காகக் கொலை கூடச் செய்கிறார்,இது நாயக்கர் கொள்கை அவரது பிரச்சனை ஆனால் அடியுங்கடா என்று சொன்னவுடன் அடித்துவிட்டு வரும்,கொண்டுவா என்றவுடன் வெட்டிக் கொண்டுவரும் கூட்டமொன்று அவருடன் இருக்கிறது.
அது கூலிக்கு மாரடிக்கும் கூட்டமென்று இலகுவில் கூறிவிடலாம் ஏன் கூலிக்கு இந்தத் தொழிலைச் செய்யவேண்டும் வேறு தொழில்கள் இல்லையா? என்று கேட்டால் கூலியை விட தாமும் நாயக்கர் செய்யும் நல்ல காரியங்களில் பங்கெடுக்கிறோம் என்றொரு மனச்சாந்திதான் அவர்களை வழிநடத்துகின்றது.
இப்படி இந்தக் கதை சொன்னவுடன் ஈழத்தில் நடக்கும் போராட்டத்தை தாதா சாம்ராஜ்ஜியமாகவும் பிரபகரனை நாயக்கர் மாதிரியும் கற்பனை பண்ணிவிடவேண்டாம் ஒரு யதார்த்தமான உவமை அவ்வளவே.
என்னிடம் நிறையப் பேர் இதைவிட வித்தியாசமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்,வெறும் மண்னுக்கு,மொழிக்கு இவ்வளவு உயிரிழப்புக்கள் தேவையா என்று அப்போது எனக்குத் தோன்றியது இதே கேள்விதான் வெறுமனே ஒரு சீலைத்துணி அதற்கு தேசியக் கொடியென்று பேர் சூட்டி அது ஏற்றப்படும் போது காலிழந்தவன் கூட ஒருகணம் எழுந்திருக்க முயற்சிக்கிறானே அது ஏன் வெறும் துணிக்கு ஏன் இத்தனை மரியாதை?
சிங்களம் மட்டும் தனிச்சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்த்து அரசாங்கத்தில் தாம் வகித்து வந்த பெரிய பெரிய பணமும் புகழும் நிரம்பிய பதவிகளை உதறித்தள்ளிவிட்டு விவசாயம் செய்தார்களே எமக்கு முந்திய தலைமுறை.அவர்களுக்கு தமது தமிழ் மொழியின் மீது ஏன் இத்தனை வெறி?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை போனார்களே தமிழகத்துப் பெருமக்கள் வெறுமனே ஒரு மொழிக்காக ஏன் இத்தனை வெறி?
சுதந்திரம் என்ற ஒரு சொல்லுக்காக செய்து கொண்டிருந்த வேலைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு சுபாஷ் சந்திரபோஸ் பின்னால் திரண்டார்களே ஒரு கூட்டம் அவர்களுக்கு ஏன் மண்மீது இத்தனை வெறி.அதே சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்த பகத்சிங்,வாஞ்சிநாதன் போன்றொருக்கு ஏன் வன்முறையில் இவ்வளவு ஆசை?
அதேபோல இங்கே கணணியின் முன்னால் உட்கார்ந்து நான் கவிதையும் கதையும் எழுதிக் கொண்டிருக்க என் நாட்டைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்யக் காத்திருக்கும் என்னுடன் கூடப்படித்தவர்கள்,இவர்களுக்கு என்ன தேவை போராடவேண்டும் அதற்காக உயிரைக் கொடுக்க வேண்டுமென்று?
வெறுமனே கங்கை கொண்ட கடாரம் வென்ற தமிழர் என்ற பெருமையை நிலைநாட்டவா இத்தனை ஆண்கள் போராடப் போகின்றார்கள்?.ஆனையடக்கிய அரியாத்தையின் வம்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவா இத்தனை பெண்கள் போராடப் போகிறார்கள்?எல்லாவற்றையும் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்து செய்யும் சினிமா விமர்சனம் மாதிரி ஒரு வரியில் சொல்லிவிடலாம்
தமிழீழப் போராட்டம்...அபத்தம்.
கரும்புலிகள் உயிர்த்தியாகத்தால் கிளாலி கடந்த எத்தனை பேர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் போய் இருந்து கொண்டு இப்படிச் சொன்னார்கள்?
நாங்கள் கவிதை எழுதுவோம் கட்டுரை எழுதுவோம்,தேவையான போதெல்லாம் விமர்சனம் கூடச் செய்வோம்.எல்லாம் இன்னொருவன் குருதியிலும் எலும்பிலும் நாங்கள் கட்டிய வீடுகளில்...விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதாகச் சொல்லிக் கொண்டு செத்தவர்கள் மீது சேறள்ளிப் போடுகிறோம் அவர்களின் ஆவி திரும்ப வந்து என்னால் தானே நீ உயிரோடிருக்கிறாய் என்று கேட்கமாட்டாது என்ற துணிவு எங்களுக்கு.
என் மண்ணில் பிறந்ததற்காய் நான் அதிர்ஷ்டசாலியா துரதிர்ஷ்டசாலியா என்று என்னால் சொல்ல முடியவில்லை.இன்னொருவன் உயிர்த்தியாகத்தில் உயிர் தப்பி வாழ்வது எனது 'அதிர்ஷ்டம்' என்று சொல்லமுடியவில்லை.அதே போல நான் நேசிக்கும் மண்ணை விட்டு வர நேரிட்டதற்கு நான் 'துரதிர்ஷ்டசாலி' என்பதை சொல்லாமலும் இருக்க முடியவில்லை
நன்றி - ஈழநாதன் http://kavithai.yarl.net/archives/000985.html#more
|
|
|
| கருணாவை எதிர்த்தவர் கொலை! |
|
Posted by: Mathan - 05-31-2004, 01:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (75)
|
 |
கருணாவையும் அவரது குழுவினரையும் வெளிப்படையாக எதிர்த்த வீரகேசரி பத்திரிகை மற்றும் லண்டன் IBC தமிழ் நிருபர் நெல்லை நடேசன் சுட்டு கொல்லப்பட்டார், இவர் முன்பு EPRLF அமைப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்: Asian Tribune
|
|
|
| உஷார்! |
|
Posted by: AJeevan - 05-31-2004, 11:23 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (41)
|
 |
[align=center:add104f7ba]<img src='http://www.kumudam.com/reporter/030604/pg2a-t.jpg' border='0' alt='user posted image'>[/align:add104f7ba]
சென்னை போன்ற பெரிய நகரங்களிலுள்ள பெண்கள் இப்போது அச்சத்துடன் உச்சரிக்க ஆரம்பித்திருக்கும் வார்த்தை இது.
ஓட்டல் குளியலறைகள், ஜவுளிக்கடைகளில் உள்ள உடைமாற்றும் அறை போன்றவற்றில் நுழையும் பெண்கள், தாழ்ப்பாள் சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதைவிட, அங்கிருக்கும் கண்ணாடியை ஒருமுறை செக் பண்ணிவிட்டு ஆடை களைய ஆரம்பிப்பது நல்லது!
பெண்களின் அழகை ஒளிந்திருந்து பார்ப்பதற்காக, கதவில் ஓட்டை போடுவது, சாவித் துவாரத்தைப் பயன்படுத்துவது என்பதெல்லாம் பழைய டெக்னிக்! இப்போது முகம்பார்க்கும் கண்ணாடியே போதுமானது! இது ஒரு ஸ்பெஷல் கண்ணாடி. 'டூ வே மிரர்' என்றழைக்கப்படும் இக்கண்ணாடி, உள்ளதை உள்ளபடி காட்டிவிடும்!
இந்தக் கண்ணாடி, பார்ப்பதற்கு வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடி போல்தான் இருக்கும். எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், கண்ணாடிக்குப் பின்புறமிருந்து வேறொருவர் நம்மை முழுவதுமாகப் பார்க்கலாம்! ஆனால், நமக்கு நமது உடல் மட்டும்தான் தெரியும். கண்ணாடிக்குப் பின்னால் இருப்பவர் தெரிய மாட்டார். கார்களில் சன் கண்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியிருப்பார்களே அதேபோல்தான்!
வெளிநாடுகளில் சிறைக்கைதி களின் நடவடிக்கையைக் கண்காணிக்கவும், மனோதத்துவ ஆராய்ச்சிக்காகவும் இம் மாதிரியான கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். இக் கண்ணாடியைத்தான் செக்ஸ் வக்கிரம் பிடித்த சிலர் இப்படிப் பயன்படுத்தி விடுகிறார்கள்.
சென்னையிலுள்ள பெண்களிடையேயும் இதுபற்றிய சந்தேகங்கள் இப்போது பரவலாக எழத் தொடங்கியிருக்கின்றன. ஈமெயில்களில் 'ஜாக்கிரதை' என்று உஷார்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
குற்றச்சாட்டுகளும் எச்சரிக்கைகளும் ஒருபுறமிருக்கட்டும், சென்னையில் இந்த 'டூ வே மிரர்' கிடைக்கிறதா என்பதையறிய கண்ணாடி வியாபாரத்திற்குப் பெயர்பெற்ற பாரிமுனையிலுள்ள தேவராஜ முதலித் தெருவிலுள்ள ஒரு கண்ணாடி கடைக்காரரிடம் விசாரித்தோம்.
"ஆமாங்க! இப்படி ஒரு கண்ணாடி இருக்குது! ஆனா, இந்தியாவில் யாரும் இதைத் தயாரிக்கிறதில்லை. வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதியாகுது. சாதாரண கண்ணாடிக்கும் இந்தக் கண்ணாடிக்கும் வித்தியாசமே தெரியாது. ஆனால், விலைதான் ஜாஸ்தி. சென்னையில் எங்கேயும் இந்தக் கண்ணாடியை ஸ்டாக் வச்சுக்கிறதில்லை. தேவைன்னு கேட்டால் மும்பையிலிருந்து வரவழைச்சுக் கொடுக்கிறோம்" என்று சொல்லி, அதிர்ச்சியை அதிகமாக்கினார் அவர்.
சரி, அறையின் உள்ளே மாட்டியிருப்பது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடியா அல்லது வில்லங்க கண்ணாடியா என்பதை எப்படித்தான் கண்டுபிடிப்பது?
மிகச் சுலபமான வழி ஒன்று இருக்கிறது. உங்கள் ஆள்காட்டி விரலைக் கொண்டு கண்ணாடியைத் தொடுங்கள். உங்கள் விரலின் நகத்திற்கும் கண்ணாடியிலுள்ள பிம்ப நகத்திற்கும் இடையே இடைவெளி இருந்தால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். கண்ணாடி நல்ல கண்ணாடிதான்! ஆனால், பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் இடைவெளியின்றி ஒட்டியதுபோல தோற்றமளித்தால் வெளியே ஓடிவந்துவிடுங்கள். அது நிச்சயம் வில்லங்க கண்ணாடிதான்! உலகம் முழுக்க கண்ணாடியைப் பரிசோதிக்க இந்த ஒரே ஒரு சோதனைதான் இருக்கிறது!
உஷார்! உஷார்!!
படம்: புதூர் சரவணன்
Kumudam.com
|
|
|
| எதிர்ப்பு |
|
Posted by: Mathan - 05-29-2004, 02:21 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
எதிர்ப்பு
"...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..."
காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம்.
அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது.
காகங்களின் கூடு மரத்தின் உச்சியில் ஓரமாக இருந்தது,அதில் பலவிதமான காகங்கள் குடியிருந்தன,அவற்றிற்கிடையே பல நேரங்களில் சச்சரவு கிளம்பும்,உணவுக்கும் இடத்துக்கும் தத்தமக்கிடையே அடித்துக் கொள்ளும்,ஆனாலும் அவை மரத்தை விட்டுப் போகவில்லை,கிழட்டுக் காகங்களின் சமரசத்தில் ஓரளவு ஒற்றுமையாக வாழ்ந்தன.
இதே நிலவரம் தான் மரத்தின் நடுப்பகுதியில் பொந்துகளில் வாழ்ந்து வந்த ஆந்தைகளுக்கும்,பொந்துகளின் தலைமைப் பதவிக்கு காலம் காலமாக சச்சரவு நடக்கும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளும் கிழக்கோட்டான்களின் மத்தியஸ்தத்தில் அவையும் ஒற்றுமை பேணின.
காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் இடப்பிரச்சனையில் என்றுமே நல்லுறவு இருந்ததில்லை,காலம் காலமாக அந்த மரத்தின் நிழலையும் வளத்தையும் பங்கு போட்டுக் கொள்வதில் இரு பகுதிக்குமே பிரச்சனைதான்,இரண்டு பக்கத்திலுமிருக்கும் முதியவர்களால் நிலமை கட்டுக்குள் இருந்தது.
காலப்போக்கில் இருபகுதியிலும் இனப்பெருக்கத்தால் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியது,குடும்பங்கள் புதிதாக உருவாகின மரம் கொடுத்து வந்த பழங்கள் போதாமல் பிற மரங்களையும் நாடவேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்த நேரத்தில் தான் ஆந்தைகள் மத்தியில் புதிய எண்ணம் முளைவிட்டது அந்த மரம் காலம் காலமாக ஆந்தைகளுக்குச் சொந்தமெனவும்,காகங்கள் இடையில் வந்து உச்சியை ஆக்கிரமித்துக் கொண்டனவெனவும் கிழட்டு ஆந்தைகள் ஆந்தைக் குஞ்சுகளுக்குப் போதித்தன,ஆந்தைக் குஞ்சுகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது தங்களுக்கு சொந்தமான வளத்தை காகங்கள் சுரண்டுவதாக எண்ணின,இரவு நேரங்களில் காகங்கள் தூங்கியதும் அவர்களது கூடுகளைக் கலைப்பதும் முட்டைகளைத் திருடுவதுமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தன,சில ஆந்தைகள் இன்னும் மேலே போய் உச்சிப்பகுதிகளில் இருந்த சிறு பொந்துகளை துளை செய்து தமது குடியிருப்புகளாக்கிக் கொண்டன.தடுக்கவேண்டிய வயதான ஆந்தைகள் கைகட்டி வேடிக்கை பார்த்தன
வயதில் இளைய காகங்களுக்கு பொறுமை காக்க முடியவில்லை அவை இரவுகளில் விழித்திருந்து முட்டைகள் களவு போகாமலும் கூடுகள் கலையாமலும் காவலுக்கிருந்தன,இன்னும் சில உச்சியில் வந்து கூடு கட்டிக் கொண்ட ஆந்தைகளுடன் சண்டைக்குப் போயின,வயதான காகங்களுக்கு இது பிடிக்கவில்லை மரம் இருவருக்கும் பொது இருவரும் சண்டையிடாமல் வாழ்ந்தால் அம்மரத்தின் பலனை இன்னும் பலகாலம் பயன்படுத்தலாம் என்பது அவர்களது வாதம்,ஆந்தைகள் என்ன செய்தாலும் சண்டைக்குப் போவதை அவை விரும்பவில்லை பொறுமை காக்கும்படி குஞ்சுகளுக்கு அறிவுறுத்தின.
இது ஆந்தைக் குஞ்சுகளுக்கு வாய்ப்பாகியது நாளுக்கு நாள் காகக் குஞ்சுகளை சீண்டி வேடிக்கை பார்த்தன,இவற்றைப் பொறுக்க முடியாத கிழக்காகங்கள் ஆந்தைத் தலைவர்களிடம் முறையிட்டன இனி இப்படி நடக்காது என்று உறுதிமொழி கிடைத்தாலும் அதை நம்புவதற்கு காகக்குஞ்சுகள் தயாராக இருக்கவில்லை,இது எங்கள் மரம் நீங்கள் வந்தேறு குடிகள் என்ற ஆந்தைக் குஞ்சுகளின் கூச்சல் அவற்றை சீற்றமடைய வைத்திருந்தது.
காகங்கள் கூடி ஆலோசித்தன இப்படியே போனால் விரைவில் அம்மரம் தங்களிடமிருந்து பறிபோய் விடும் என்று குஞ்சுகள் வாதிட்டன கிழக்காகங்களும் நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால் மௌனம் காத்தன,குஞ்சுகள் தீர்மானம் மேற்கொண்டன இனி அவர்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித் தாக்குவோம் வயதில் இளைய குஞ்சுகள் முழங்குவதைக் கேட்க கிழக்காகங்கள் கவலை கொண்டன என்ன மாதிரி அமைதியாக இருந்த மரம் இனி அங்கே அமைதி நிலைக்குமா என்ற கவலை கிழக்காகங்களுக்கு,அவை இன்னும் ஆந்தைகளுடன் சமரசமாகப் போய்விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தன.
குஞ்சுக்காகங்கள் தீர்மானத்தைச் செயற்படுத்த முனைந்தன மரத்தின் ஒருபக்கத்தில் வளர்ந்து செழித்திருந்த பனைமரத்திலிருந்து தும்புகளையும் ஓலைகளையும் கொண்டுவந்து தங்கள் கூடுகளை பலப்படுத்தின,இரவுகளில் முறை வைத்துக் காவல் காத்தன,பனைமரம் பலவிதங்களிலும் காகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்தது.
இந்தத் தகவல்கள் ஆந்தைகளுக்கு எட்டியபோது இளைய ஆந்தைகள் கோபத்தில் குதித்தன காகங்களை பூண்டோடு அழித்து மரத்தை மீட்போமென சபதமிட்டன,விடயம் கிழக்கோட்டானுக்குப் போனது ஆந்தைகளிடத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும்,காகங்களை அழித்து மரத்தை முற்றாகத் தம்வசப்படுத்தவும் இளைய ஆந்தைகளின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வழி என்று கிழக்கோட்டான் எண்ணமிட்டது.
இரவிரவாக ஆந்தைகள் கூடின,நிலவொளியில் கூடி காகங்களை அழிக்கும் வழிவகைகளை ஆராய்ந்தன கிழக்கோட்டான் தலைமை வகித்தது,காகங்கள் மீது ஆந்தைகள் எல்லாம் கூடித் தாக்குதல் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது,இந்த நேரம் அறிவாளி ஆந்தையொன்று ஒரு யோசனை கூறியது மரத்தின் ஓரமாக வளர்ந்துள்ள பனைமரமே காகங்களைப் பலமுள்ளவர்களாக மாற்றியுள்ளது,சகலவிதத்திலும் அவற்றைப் பனைமரமே வளர்க்கின்றது எனவே அதனை அழித்துவிட்டால் காகங்களின் வளர்ச்சி தடைப்படும் எப்போதும் ஆந்தைகளுக்கு அடிமையாக இருக்கும் என்று அது கூறியது இளைய ஆந்தைகளுக்கு மட்டுமல்ல கிழக்கோட்டானுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது.
இரவிரவாக ஆந்தைகள் பனைமரத்தை முற்றுகையிட்டன,கொலைவெறிதாண்டவமாட தும்புகள் ஓலைகளைக் கிழித்தன அப்படியும் ஆத்திரம் தணியாமல் கிழித்தவற்றை மேலே போட்டு பனைமரத்தைக் கொழுத்தின கொழுத்தி முடிந்ததும் சுவாலை விட்டெரியும் பனைமர வெளிச்சத்தில் அவை காகக் கூடுகளுக்குள் பாய்ந்தன எதிர்ப்பட்ட காகங்களைக் குதறின,இந்நேரம் காகஙக்ளும் அலறியடித்துக் கொண்டு எழுந்தன இவ்வளவுநாளும் தங்களுக்கு படிமுறை வளர்ச்சி தந்த பனை மரம் தீயில் கருகிக் கொண்டிருப்பதை அவற்றால் தாங்கமுடியவில்லை போதாக்குறைக்கு காகக் கூடுகள் பல சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன உயிரிழந்த காகங்கள் மரத்தின் அடியில் விழுந்து கிடந்தன.
இளைய காகங்கள் ஆத்திரத்தில் துடித்தன "இப்படியே போனால் எதுவுமே எஞ்சாது" இளைய காகம் ஒன்று குரல்கொடுத்தது "வாருங்கள் என்னோடு" காகக் குஞ்சுகள் எழுந்தன பறக்கும் அந்த இளைய காகத்தைத் தொடர்ந்தன எரிந்து கொண்டிருக்கும் பனை மரத்தை வட்டமிட்டது அந்த காகம் பாதி எரிந்து கொண்டிருந்த ஓலைத் துண்டொன்றை வாயில் கவ்வியது பறந்து போய் ஆந்தைகளின் பொந்தொன்றில் போட்டது,காகக் குஞ்சுகள் கோபத்தில் ஆர்ப்பரித்தன "இதுதான் வழி" "இதுதான் வழி" "எங்களைப் பணிய வைக்கமுடியாதென்று உணர்த்துவோம்" இளைய காகத்தைத் தொடர்ந்து மற்றக் குஞ்சுகளும் எரியும் கொள்ளிகளைப் பொறுக்கி வந்து ஆந்தைகளின் பொந்தில் போடத்தொடங்கின.வயதான காகங்கள் தடுக்க முயற்சி செய்யவில்லை,கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
விடிந்தபோது மரம் புகைகக்கியபடி எரிய ஆரம்பித்திருந்தது
பி.கு:- இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல
ஈழநாதன்
|
|
|
| காதல் வந்தாச்சு... |
|
Posted by: kuruvikal - 05-29-2004, 11:52 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (63)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/flower.jpg' border='0' alt='user posted image'>
காதலிக்க
மனசிருக்கு
காதலிக்க யாருமில்லை
காதலிப்பார் யாருமில்லை
கனவில் காட்சிகளாய்
நானும் வாழ்ந்திருக்க....
நீயும் வந்தாய்
வசந்த காலத்தின்
பரிசாய்
நானும் கண்டேன்
காதலின் நிஜம்
பூவே நீயே
என் காதலி....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
| Miss Universe 2004 |
|
Posted by: Mathan - 05-29-2004, 06:49 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (9)
|
 |
இந்திய அழகி தனுசிறி தத்தா மிஸ் யூனிவேர்ஸ் 2004 அழகி போட்டியில்
<img src='http://images.indian-magic.com/tanushreemu/tanushreemu13.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
|