Yarl Forum
யாழ் கலாச்சாரம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: யாழ் கலாச்சாரம் (/showthread.php?tid=7093)



யாழ் கலாச்சாரம் - Mathan - 05-31-2004

கட்டுமீறிய அடாவடித்தனங்கள் விரைவில் முடிவுக்கு வருமா? - ஞாபகன்

இப்பொழுது யாழ்ப்பாணத்து வீதிகளில் அச்சுறுத்தும் வகையாய் பறக்கும் அசுர வேகங்களை கொண்ட வாகனங்களைவிட, இன்னோர் வகை எமதூதர்களை சாதாரணமாக காணமுடியும். பகலில் முக்கிய சந்திகளில் கூடியிருக்கும் வேலையற்ற இளைஞர் குழுவினரே அத்தூதர்களாவர்.

தென்னிந்திய திரைப்பட கதாநாயகர்களாக துணைப்பாத்திரங்களாக தம்மைத் பாவனை செய்துகொள்ளும் இக் குழுவினர்., பல பெயர்களில் உள்ளனர் என்பது ஏற்கனவே அறியப்பட்ட விடயம். இரவு நேரங்களில் வாள்கள், உடைக்கப்பட்ட போத்தல்கள், பொல்லுகள் சகிதம் மது போதையில் தமது எதிரிகளை தேடி இவர்கள் புறப்படுவார்கள்.

தேவையேற்படின்; பட்டப்பகலிலும் திரைப்பட நடவடிக்கைகள் போல செயலில் ஈடுபடுவார்கள். சில நாள்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த பிற்பகலில் ஒரு சம்பவம் நடந்தது. முச்சந்தி ஒன்றில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் உச்சமது போதையில் வாகனங்களை தடுத்து வைத்து கொண்டு நின்றார்கள். இருபுறமும் வந்த வாகனங்கள் பலமாக ஹோர்ன் அடித்து வழிவிடுமாறு கோரின. தவிரவும் ஏராளமான சைக்கிள், மோட்டார்சைக்கிள், பயணிகளும் போக்குவரத்து தடைப்பட்டு எதிரெதிரே நின்றார்கள்.

மதுபோதையில் நின்ற மூவரும் தூசன வார்த்தைகளால் வாகனத்தில் இருந்தவர்களை ஏசியபடி காரணமின்றி அடிப்போம், உதைப்போம் என்றனர். ஆனால் எவரும் அவர்களை திருப்பிக் கேட்கத்துணியவில்லை இறுதியில் வெறியர்களோடு வந்த நாலாம் நபர் பிரயனத்தனப்பட்டு அவர்களை அழைத்துச் சென்ற பின்பே வீதிப்போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

இத்தகைய சம்பவங்களை அல்லது இது போன்ற வடிவம் மாறிய சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் பரவலாக காணமுடியும். இவர்கள் அதிகமாக 17 வயதிலிருந்து 24, 25 வயதிற்குட்பட்டவர்களாகவே உள்ளனர். இதில் மாணவர்களும் உள்ளடக்கம் என்பது தான் வேதனையான விடயம்.

தத்தமது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆட்கடத்தல், கொலைகள், கொள்ளைகள், பிறரைஅச்சுறுத்தல், தாக்குதல் என்பவற்றில் ஈடுபடும் மனோபாவம் இவர்களிடம் வளந்து விட்டுள்ளது. இவர்கள் புதியரக மோட்டார்சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், ஹையஸ் வான்கள் கூட கைவசம் வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக பகலில் பாடசாலைக்கு மாணவிகள் செல்லும் போது, திரும்பும்போதும் இவர்களின் செயல்கள் தீவிரம் அடைகின்றன. யாருக்கு அஞ்சாத சிங்கங்கள் என தம்மை பறைசாற்றிக் கொள்ளும் இவர்கள் இளம் பெண்கள் பலரை வற்புறுத்தல்களுக்கு உட்படுத்தியுள்ளனர். கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டதாகவும் வெளியடையாக பலரும் பேசும் நிலையிலும் உள்ளனர்.

சிறிலங்கா இராணுவம் குடாநாட்டை ஆக்கிரமித்த பின்னரே இக்குழுக்கள் வேகமாக வளர்ந்தன. இராணுவத்தினர் இவர்களை குடாநாட்டில் பரவலாக வளர்த்தெடுப்பதில் அக்கறை கொண்டு செயற்பட்டனர். இப்போதும் கூட சிறிலங்கா இரணுவத்தினரதும் சிறிலங்கா பொலிசாரதும் ஆசிர்வாதம் இவர்களுக்கு உண்டு என்பது வெளிப்படையானது.

இக்குழுவினர் மேற்கொள்ளும் சமூகவிரோதச் செயல்கள் சிறிலங்கா அரசின் குற்றவியல் சட்டங்களுக்கு முரணானவை. ஆயினும் அச்சட்டங்களும் அவற்றை கையில் வைத்துள்ள இயந்திரங்களும் அதனைக்கவனிப்பதில்லை சில சந்தர்பங்களில் மட்டும் பொதுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இவையே இக்குழுக்களுக்கு ஊக்கமளிக்க போதுமாவை.

குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தகாலத்தில் கூட இக்குழுக்கள் அட்டகாசங்களில் ஈடுபட்டன.

விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்துக்கு அரசியல் பணிகளுக்காக 2001ல் திரும்பிய போது மக்கள் மகிழ்ந்ததற்கு இவர்களின் அடாவடித்தனங்கள் கட்டுப்படும் என்ற காரணமும் ஒன்றாகும்.

ஆனால் போர்நிறுத்த உடன்பாட்டுக்குள் அடங்;கிய வகையில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணி, இதனைக்கட்டுப்படுத்த இடமளிக்கவில்லை. போதாதற்கு அதுவரை கண்டும் காணமலும் சிறிலங்கா பொலிசார் அதன்பின் தாம் தீவிரமாக செயற்படுவது போலவும் வேறுயாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாதுதென்பது போலவும் காரியமாற்றினார்கள்.

ஆபால் அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாது விடுவிக்கப்பட்டமையே நிகழ்ந்தது. இப்பின்னணியில் விடுதலைப்புலிகளால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பல தடவை வேண்டுகோள்களும் எச்சரிக்கைகளும் விடுவிக்கப்பட்டிருந்தன.

அதனை எல்லாம் தம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற தோரணையிலேயே எதிர் கொண்டுவந்துள்ளனர். விடுதலைப்புலிகளால் ஒரு எல்லைக்கு அப்பால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற துணிவே இவற்றுக்கு காரணமாகும்.

குடாநாட்டில் இக்குழுக்களால் இளம் பெண்கள் உடபட சாதரண சிவில் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் இடையறாது தொடர்கின்ற நிலையில் கடந்த வாரத்தில் புதியதிருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் அடி காயங்களுடன் ஒரு சடலம் யாழ். றக்கா வீதியில் நள்ளிரவிலி போடப்பட்டிருந்தது.

சடலத்துக்கு அருகே காணப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கொலை,கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வல்லுறவு, சிறுமியர் மீதான வற்புணர்ச்சி, கூலிக்குதாக்குதல் நடத்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டமைக்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இவ்வாறான ஏனைய சமூக விரோதிகளுக்கு படிப்படியாக தண்டணை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இத்தண்டனையை வழங்கியமைக்கு ?எல்லாளன் படை? உரிடை கோரியிருந்தது. அன்றை தினம் இரவு வேறும் நான்கு சமூகவிரோதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு எல்லாளன் படையால் வௌ;வேறு இடங்களில் உயிரோடு இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மக்களிடையே ஒருஆசுவாச பெருமூச்சை உருவாக்கியுள்ளது.

சட்டம் ஒழுங்கைப்பேண வேண்டிய சிறிலங்காப் பொலிசாரதும் கூடவுள்ள படையினரதும் ஆசிர்வாதத்தோடு அடிதடிக்குழுக்கள் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட, மக்களது ஆசிர்வாதத்தோடு எல்லாளன் படை களத்தில் இறங்கவேண்டியதாயிற்று இனியும் அதிகாரம் படைத்த சமூகப் பொறுப்பாளிகள் காட்டும் அசமந்த போக்கு எல்லாளன் படையினரின் எழுச்சிக்கே வழி வகுக்கும்.

ஞாபகன்


- Mathivathanan - 05-31-2004

தங்களது கொலைவெறிக்கு அங்கீகாரம் தேடுகிறார்கள்.. செய்யப்போகும் கொலைகளுக்கு முன்கூட்டியே அனுதாபவாக்கு கோருகிறார்கள்.. வேறொன்றுமில்லை..
Idea Idea Idea


- kuruvikal - 06-01-2004

இப்படியான சமூகவிரோதச் செயல்களுக்கு உலகெங்கும் சட்டத்தின் மூலம் மரண தண்டனை தொடக்கம் ஆயுள் தண்டனை உள்ளடங்கலாக பலவகைத் தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன....யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கள இராணுவ அரச நிர்வாகத்திற்கு இவற்றைக் கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால் அல்லது விரும்பாவிட்டால் மக்களின் சமூகத்தின் மீது பற்றுள்ள யாராவது பொறுப்புடன் இப்படியான சமூகவிரோதிகளுக்கு நீதியின்பாலான தீர்ப்புக்களை வழங்கி தாம் சார்ந்த சமூகத்தின் மீதுள்ள சகலவிதமான பீதி நிலைகளையும் சீரழிவு நிலைகளையும் அகற்ற முன்வரவேண்டும்....!

Idea Idea Idea


- Mathan - 06-01-2004

எல்லாம் மறந்துவிட்டோம்!!பாணுக்கு கியூ, சீனிக்கு கியூ, ...

எல்லாம் மறந்துவிட்டோம்!!
அகதியாய் தெருவெங்கும்
ஓடி ஒளிந்ததுவும்,
அநாதரவாய் வீதிகளில்
அலைந்து திரிந்ததுவும்,
குண்டு வீச்சுக்காய்
குழிகளில் பதுங்கியதும்,
அண்டை அயலெல்லாம்
அவலமாய்ச் செத்ததுவும்!

கூடப்படித்தவர்கள்
காணாமற் போனதுவும்,
கூடித் திரிந்தவர்கள்
காட்டுக்கு ஓடியதும்!

வீதித்தடைகளில்
இறங்கி நடந்ததுவும்,
சென்றிக்கு சென்றி
சலாம் போட்டதுவும்!.

ஊரடங்கு, காவலரண்,
செம்மணி, சுடுகாடு,
பண்டுக்கு உள்ளே,
பண்டுக்கு வெளியே.!

பாணுக்கு கியூ,
சீனிக்கு கியூ,
பால்மாவுக்கு தட்டுப்பாடு,
பனடோலுக்குக் காத்திருப்பு.


கொழும்பு போக பாஸ்,
திரும்பி வர பாஸ்,
வடமராச்சிக்கு ஒரு பாஸ்,
வலிகாமம் இன்னோர் பாஸ்.

எல்லாம் மறந்துவிட்டோம்!
எதுவுமே நினைவில்லை!!.
போர் ஓய்ந்து போனதோடு,
ஓரிழவும் நினைவில்லை!.

பணம், பகட்டு மட்டுமல்ல
பஜாஜ் பல்ஸர் கூட
கண்களை மறைத்துக்
களியாட்டம் போடுதோ?

நாளொரு கொள்ளை,
பொழுதொரு கற்பழிப்பு!
நாலு பேர் கூடினால்,
நாளுக்கு ஒரு சண்டை!

ஹையேஸ் கடத்தல்கள்,
காசுக்கு வெருட்டல்கள்.
வாளெடுத்துச் சண்டைகள்,
தாளுடைத்துத் திருட்டுக்கள்.

இதுதானா நாம் பார்க்கும்
இன்றைய யாழ்ப்பாணம்?
இந்தச் சீரழிவுக்கா?
இத்தனை உயிரிழப்பு!!

நன்றி - ஈழநாதன்


- Mathivathanan - 06-01-2004

இவங்களுக்கு குடாநாட்டிலையும் மட்டக்களப்பு யதார்த்தம் தேவை.. அதுதான் பாடுபடுறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 06-01-2004

அதுசரி அதுதானே பார்த்தேன் இவ்வளவு நேரமும் எதற்காகப் பாட்டுப் பாடுகிறீர்கள் என்று.அப்படியே எல்லாம் சீர் குலைஞ்சு போனால் கடைச்யில் சிங்கள/அடிவருடிகளான உங்கள் காலில் தனே விழவேண்டும் என்று நினைத்தீர்களாக்கும்

அது என்ன மட்டக்களப்பு யதார்த்தம் அபிவிருத்தி என்ற பெயரில் கல்விமான்களையும் ஊடகவியலாலர்களையும் போட்டுத் தள்ளும் உங்கள் ஆசீர்வாதம் பெற்ற கருணா பாணியா


- Mathan - 06-05-2004

3 வயது பாலகனை வெட்டிý கொன்ற தந்தை மனைவி, மாமியாருக்கும் கத்திவெட்டு

புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல், குடும்பத்தகராறு காரணமாக தனது மூýன்று வயது மகனை வெட்டிýக்கொலை செய்த தந்தையொருவர், மனைவியையும், மாமியாரையும் வெட்டிýப் படுகாயப்படுத்தியதுடன், தன்னை தானே வெட்டிýயுமுள்ளார்.

குடும்பத் தகராற்றை தீர்க்க பொலிஸார் தனது வீட்டுக்கு ந்துகொண்டிýருப்பதை அவதானித்த பின்பே அவர் இந்த வெறியாட்டத்தை ஆடிýயுள்ளார்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:.

சீவல் தொழிலாளியான ராஜதுரை ராஜ்குமார் (33 வயது) என்பவர், ஹற்றன் டிýக்கோயாவைச் சேர்ந்த ஜெயந்திமாலா (30 வயது) என்பவரைக் காதலித்து மணம் முடிýத்தார்.

ஆனாலும், இவர்களுக்கிடையே அடிýக்கடிý குடும்பத்தகராறு ஏற்படவே, இவரது மனைவி தனது தாயாருடனும், பிள்ளையுடனும் டிýக்கோயாவுக்கு சென்றுவிட்டார்.

எனினும், பலத்த முயற்சியின் பின் டிýக்கோயா சென்ற இவர் அங்கிருந்த ஒருவாறு 3 வயது மகனுடன் வீடுவந்து சேர்ந்தார்.

அதேநேரம் தனது மனைவியை வருமாறு பலதடவை அழைத்த நிலையில் அவரும் அங்கிருந்து தாயாருடன் புலோலி வந்து சேர்ந்தார்.

ஆனாலும், இவர்களுக்கிடையிலான குடும்பத் தகராறு தொடரவே, மனைவி இது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். விசாரணைக்காக பொலிஸாரும் நேற்று முற்பகல் வீட்டிýற்கு வந்துள்ளனர்.

பொலிஸார் வருவதை கண்டு கடும் சினமுற்ற நிலையில் தனது 3 வயது மகன் ராசாவை தூக்கி நிலத்திலடிýத்ததுடன் கத்தியால் வெட்டிý அவனை கொன்றுள்ளார்.

மகனை மீட்க வந்த மனைவியை கண்டபடிý வெட்டிýயதில் அவரது வலது கை தோள்மூýட்டிýற்கு கீழே துண்டாகி கீழே விழுந்தது.

மகளைக் காப்பாற்ற முயன்ற மாமியார் மீதும் கண்டபடிý வெட்டிýயதில் அவரும் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து, தனது தலை, கழுத்து, தோள் பகுதிகளில் வெட்டிýயதில் இவரும் படுகாயமடைந்தார்.

இவ்வேளையில் அங்கு வந்த பொலிஸார், படுகாயமடைந்த மனைவியையும், உயிரிழந்த மகனையும் மந்திகை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அதேநேரம், படுகாயமடைந்த நிலையில் இவரையும், இவரது மாமியாரையும் பொலிஸார், யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thinakkural


- Mathivathanan - 06-05-2004

ஆச்சரியமில்லை.. தினமும அப்படித்தானே களையெடுக்கிறினம்..
:oops: :oops: :oops: