Yarl Forum
புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: புகைப்பட ஆர்வலர்கள் நட்புவட்டம் (/showthread.php?tid=7094)

Pages: 1 2 3 4


புகைப்பட ஆர்வலர்கள் ந - aathipan - 05-31-2004

அன்பான வாசகர்களே உங்களி;ல் பலர் புகைப்படமெடுப்பதை பொழுதுபோக்காகக் கொண்டு இருக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை எழுதுங்கள். தெரிந்த தொழில் நுட்பங்களை பரிமாறிக்கொள்ளுங்கள். புகைப்படம் தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்ளுங்கள்.


- aathipan - 05-31-2004

சூரியகாந்திப்புூ

இந்தப்புகைப்படம் இயற்கை ஒளியைமட்டுமே பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதாவது புகைப்படக்கருவியில் பயன்படுத்தும் விளக்கு பயன்படுத்தப்படவில்லை. அதனால் மலரின் மத்தியில் சரியான வெளிச்சம் இல்லை. மலர் பிரகாரசம் இல்லாமல் போய்விட்டது என்பது கைதேர்ந்த புகைப்படக்கலைஞர்களின் கருத்து.


- aathipan - 05-31-2004

மஞ்சள்ப்புூக்கள்

மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை.


- vasisutha - 06-01-2004

அழகாய் இருக்கின்றன. புூக்களை மட்டும் தான் புகைப்படம் எடுப்பீர்களா?


- Chandravathanaa - 06-01-2004

<img src='http://www.selvakumaran.de/pookkal/photos/fotos-1.5.2004-4%20121.jpg' border='0' alt='user posted image'>
கஸ்தானியன்


- aathipan - 06-01-2004

சந்திரவதனா நீங்கள் அனுப்பிய புூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது. எதாவது ஒரு புூவை அருகில் பார்க்க ஆசையாக உள்ளது.


- aathipan - 06-01-2004

இந்தியா வாசல்(கேட்) மும்பை


- aathipan - 06-01-2004

பனைமரம்


- aathipan - 06-01-2004

மகாபலிபுரம் கடற்கரைக்கோவில்

(மதிய நேரம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அளவுக்கதிகமான வெளிச்சம் படத்தைப்பாதித்து உள்ளதாக புகைப்படக்கலைஞர்கள் விமர்சித்துள்ளனர்.)


- aathipan - 06-01-2004

புகைப்படம் எடுப்பது ஓவியம் வரைவது போல ஒரு கலையாகத்தான் கருதப்படுகிறது. நீங்கள் எடுக்கின்ற புகைப்படம் நல்ல புகைப்படம எனப்படும்போது அது ஆண்டாண்டு காலத்திற்கும் உங்கள் பெயர் சொல்லும்.

புகைப்படம் எடுப்பது மிகவும் இலகுவானது என்று தான் எண்ணுகிறோம். அது உண்மை என்றபோதிலும் சில புகைப்படங்களே கலையம்சம் கொண்டதாக போற்றப்படுகிறது. நல்ல புகைப்படம் எடுப்பதற்கு நல்ல புகைப்படக்கருவியோ நல்ல ஒரு காட்சியோ மட்டும் போதாது கலைநுணுக்கம் அதை எடுக்கும் கோணம் வெளிச்சத்தின் அளவு என பலகாரணிகள் ஒன்று சேரவேண்டி உள்ளன. அவை மட்டுமன்றி சில விதிகளும் பின்பற்றப்பட வேண்டும் அவற்றை எல்லாம் பார்ப்பதற்கு முன் முக்கியமான இரண்டு செயல்கள் எவை என்று பார்ப்போம். அதில் ஒன்று காட்சியைத்தீர்மானிப்பது. மற்றையது காட்சியைப்பதிவு செய்வது.

காட்சியைத்தீர்;மானி;ப்பது என்பது எதை எடுக்கப்போகிறோம் என்பதை புகைப்படக்கருவியுூடாகப்பார்த்து நுணுக்கமாக தீர்மானிப்பதாகும். இச்சந்தர்ப்த்திலே நீங்கள் வேண்டாதவற்றை நீக்கி தேவையானதை மட்டும் புகைப்படக்கருவி ஊடாக தீர்மானித்துக்கொள்ளலாம்.; இங்கே சிறிது கலைநுணுக்கம் தேவைப்படுகிறது.

அடுத்த செயல் காட்சியை புகைப்டச்சுருளில் பதிவுசெய்வதாகும். இங்குதான் விஞ்ஞானம்(physics and chemistry) முழுமையாக உதவுகிறது எனலாம். வெளிச்சத்தையும் இரசாயனபதார்த்தங்களையும் பயன்படுத்தி காட்சியானது புகைப்பட்சுருளில் பதிவுசெய்யப்படுகிறது.


- aathipan - 06-02-2004

காட்சியைத்தீர்மானித்தபின்

1. மக்களைப் புகைப்படம் எடுக்கின்றீர்கள் என்றால் அவர்களை ஒழுங்கு படுத்தலாம்.

2. புகைப்படக்கருவியினூடாக பார்த்து எடுக்கப்போகும் காட்சிக்கு ஏற்ப அருகிலோ அல்லது தூரவோ தேவைக்கேற்ப நகர்ந்து கொள்ளவோண்டும்

புகைப்படக்கருவியினுடாக காட்சியைப்பார்க்கப்பயன்படும் நீள்சதுர துவாரத்தை இனி நான் சட்டம் என்று அழைக்கின்றேன். இச்சட்டத்தினூடாக மீண்டும் மீண்டும் பார்த்து காட்சியை செம்மைப்படுத்தவேண்டும்.ஆரம்பத்தில் நீங்கள் ஒரு காட்சியைப் பதிவு செய்ய அதிக நேரம் ஒதுக்கவேண்டியிருந்தாலும் தேவையற்று புகைப்பச்சுருள் விரயமாவதை இது தடுக்கும்.

முடிந்தவரை சட்டத்தினுள் காட்சியை நிரப்பிக்கொள்ளவேண்டும். பதிவுசெய்யும் பொருளோ நபரோ சிறிதாக இருந்து அவரைச்சுற்றி தேவையற்று வெற்றிடம்இருப்பின் முன்னோக்கி நகர்ந்து அதைத்தவிர்க்கலாம். புகைப்படக்கருவின் பொத்தானை அமுக்குவதற்கு முன் ஒரு தடவை நுணுக்கமாக சட்டத்தின் ஓரங்களைப் பார்த்துவேண்டாதவற்றை தவிர்த்துக்கொள்ளவேண்டும். எடுக்கப்படும் பொருளோ அல்லது நபருக்குப்பின்னாலும் ஒருதடவை பார்த்துக்கொள்ளுதல் நல்லது. தலையில் இருந்து மரம் முளைத்ததுபோல காட்சி அமைவதை இதன்மூலம் தவிர்க்கலாம். புகைப்படம் எடுக்கப்படடும் நபரோ பொருளோ முடிந்தவரை சட்டத்தின் மையப்பகுதியில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. சில புகைப்படக்கருவிகளில் காட்சியைப்பார்க்கும் துவாரத்தின் உள்ளே மஞ்சள் வண்ண கோடிட்டு சட்டத்தை வரைந்து இருப்பார்கள். அப்படிப்பட்ட புகைப்படக்கருவியில் காட்சி அந்தச்சட்டத்தினுள் வரும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். சட்டம் வரையப்பாடாவிட்டால் நாமே கற்பனையாக தீர்மானித்துக்கொள்ளவேண்டும். சட்டத்தை ஒட்டி வரும் காட்சிகள் 5 வீதம் புகைப்படச்சுருளில் பதிவாகாமல் போகலாம். ஆகவே எடுக்கப்படும் பொருளோ நபரோ இந்த சட்டத்தின் ஓரங்களைத்தொட்டு நிற்காதபடி பார்த்துக்கொள்வது நன்று.


- aathipan - 06-02-2004

எனது நண்பன்


- aathipan - 06-02-2004

திருமயிலை புகையிரதநிலையம்


- aathipan - 06-02-2004

இராட்டினம்


- aathipan - 06-02-2004

<img src='http://www.microsoft.com/windowsxp/digitalphotography/images/lmphotos/lm_101c.jpg' border='0' alt='user posted image'>
[align=left:f3bbe8594f]மூன்றுகளின் விதி

புகைப்படத்துறையில் மட்டுமன்றி ஓவியத்துறையிலும் பிரபலமானது இவ்விதி. ஆரம்பநிலையில் இது பயன்பட்டாலும் எப்போதும் இது பின்பற்பவேண்டும்மென்பது கிடையாது. நன்கு கற்றுத்தேர்ந்தபின் இவ்விதிகளை பின்பற்றாமலே உங்களால் நல்ல புகைப்படங்களை எடுக்கமுடியும்.
[/align:f3bbe8594f]
<img src='http://www.silverlight.co.uk/tutorials/tutorial_graphics/fig1.gif' border='0' alt='user posted image'>
பேருக்கமைய இவ்விதி மூன்றுகளுடன் தொடர்புடையது. நீங்கள் எடுக்கப்போகும் காட்சியை இரண்டு கற்பனைக்கோடுகளைக்கொண்டு மூன்று சமஅளவுகளாக மேலிருந்து கீழாகவும் பின்பு அவை ஒவ்வொன்றையும் கற்பனையாக மூன்று பகுதிகளாக இடமிருந்து வலமாகவும் பிரிக்கவேண்டும். இப்போது உங்கள் காட்சி ஒன்பது கட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்தக்கற்பனைக்கோடுகள் ஒன்றைஒன்று சந்திக்கும் புள்ளிகளில் நீங்கள் எடுக்கும் காட்சியின் மிகமுக்கியமானவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.[/code][/right][/align]


- aathipan - 06-02-2004

துடுப்புப்படகுகள்


- Chandravathanaa - 06-03-2004

நன்றி ஆதிபன்

மிக அருகாமையில் எடுத்த கஸ்தானியன் பூக்களின் புகைப்படங்கள் எதுவும் என் கைவசம் இல்லை.
அவசரமாய் அவைகள் எல்லாம் வாடிக் கொண்டிருப்பதால் இவ்வருடம் புதிதாக எடுப்பதற்கான சாத்தியமும் இல்லை.
ஆனால் நீங்கள் கேட்டதற்கிணங்க Google இல் தேடி ஓரிரு புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக இங்கு தருகிறேன்..

<img src='http://www.sir-henrys-villa.de/Links/Album_15/Kastanienblute_01.jpg' border='0' alt='user posted image'>

[b]Kastanien

<img src='http://www.sir-henrys-villa.de/Links/Album_15/Kastanien_02.jpg' border='0' alt='user posted image'>

நீங்கள் பதியும் புகைப்படங்களை பதிந்திருக்கும் போது மட்டுமே பார்க்க முடிகிறது.


- Eelavan - 06-03-2004

இந்தப்பூக்கள் எமது நாட்டிலுள்ள கிளிசறியா(சீமைக் கிழுவை) பூக்கள் மாதிரியே இருக்கின்றன.சரிதானே ச்ந்திரவதனா அக்கா?


- aathipan - 06-03-2004

நன்றி சந்திரவதனா

அழகான புூக்கள். இந்தவகைப்புூக்களை நான் பார்த்தது இல்லை. நான் உங்களைப்புகைப்படம் எடுக்க தூண்டவே அப்படி எழுதினேன். என் வார்த்தைக்கு மதிப்பளித்து அனுப்பி உள்ளீர்கள். நன்றி. இன்னும் நிறை புகைப்படங்கள் குறிப்பாக நீங்கள் எடுத்தவற்றை பார்க்க ஆவலாக உள்ளேன். நேரம் கிடைக்கும் பொது முயற்சியுங்கள்.


- aathipan - 06-03-2004

சவபநசசவ