![]() |
|
நட்பின் கரங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நட்பின் கரங்கள் (/showthread.php?tid=7088) |
நட்பின் கரங்கள் - sharish - 06-02-2004 [size=18][b]நட்பின் கரங்கள் நூலகத்தில் ஏதோ ஒரு புத்தகத்தை தேடிக்கொண்டிருக்க இன்னும்... ஏதோ ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டு நெஞ்சைத்தொட்டு கையில் தவழ்கிறது... அதே புத்தகத்தை தேடிக்கொண்டே... யாரோ ஒருவன் வருகிறான்...! ஒற்றைக் கால் இழந்தாலும் கலங்காத நடை ஓர விழிகளில் ஒரு துளி சோகம் பாற்பதற்கு... எதையோ இழந்தவனாய்... பின்புதான் புரிந்தது அவன் அனைத்தையும் இழந்தவனாம்...! பாலஸ்தீனத்தில் இருந்து அகதியாகி ஐந்து வருடமும் அனாதையாகி ஆறு வருடமுமாம்...! என் சொந்த வீட்டைப்போலவே அவனது வீட்டின் சுவர்களிலும் கூரையிலும் கதவுகளிலும் துப்பாக்கி துளைகளும் இரத்தக் கறைகளும் படிந்திருக்கின்றனவாம்...! நான் அவனை என் தற்காலிக... துப்பாக்கி துளைகள் இல்லாத வாடகை வீட்டுக்கு அழைத்தேன்...! ஆவலாய்... கதவைத் திறந்த என் அன்னை... அன்போடு கேட்டாள் யார் இந்த புதுத்தம்பி...? இவன் என் தம்பி அல்ல என் புதிய நண்பன்...! உனக்கும்... இவன் நண்பன் அல்ல... ஏனெனில்... இவன் "அம்மா" என்று அழைக்க யாருமே இல்லையாம்...!!! த.சரீஷ் 23.05.2004 (பாரீஸ்) - sharish - 06-02-2004 நன்றி பதிவுகள் http://www.geotamil.com/pathivukal/poem_ju...004_sarish.html - Paranee - 06-02-2004 கவிதை அருமை சரிஸ் நீண்ட இடைவெளியின் பின் வித்தியாசமான கோணத்தில் வாழ்த்துக்கள் இன்னமும் எதிர்பார்த்து - shanmuhi - 06-02-2004 <b>என் சொந்த வீட்டைப்போலவே அவனது வீட்டின் சுவர்களிலும் கூரையிலும் கதவுகளிலும் துப்பாக்கி துளைகளும் இரத்தக் கறைகளும் படிந்திருக்கின்றனவாம்...! </b> தாயக சூழலை நினைவுபடுத்துகின்ற கவிதை. அருமை. வாழ்த்துக்கள்.. - tamilini - 06-02-2004 கவி அருமை - Eelavan - 06-03-2004 கவிதை அருமை சரீஷ் இதையே நான் சூரியன் இணையத்தளத்தில் படித்து ரசித்தேன்,ரசித்தேன் என்று சொல்வதை விட உணர்வுகளால் சூழப்பட்டேன் |