![]() |
|
சவுதியில் அல் குவைடா தாக்குதல்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சவுதியில் அல் குவைடா தாக்குதல்....! (/showthread.php?tid=7092) |
சவுதியில் அல் குவைடா த - kuruvikal - 06-01-2004 <img src='http://wwwi.reuters.com/images/2004-05-31T160424Z_01_GALAXY-DC-MDF582006_RTRIDSP_2_INTERNATIONAL-SECURITY-SAUDI-DC.jpg' border='0' alt='user posted image'> மீட்புப்படை வீரர்கள்....உலங்குவானூர்தியில் இருந்து பயணக்கைதிகள் இருந்த கட்டடத்தின் மீது குதிக்கும் காட்சி..(reuters) <b>சௌதி அரேபியா: அல்கொய்தா தாக்குதலில் 8 இந்தியர்கள் பலி</b> சௌதியில் அல்கொய்தா தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில் 8 இந்தியர்கள் உள்பட 22 பேர், கமாண்டோ படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாயினர். 80க்கும் மேற்பட்டவர்களை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இதில் வெங்கடமணி பாஸ்கர் என்ற துபாய் வாழ் இந்தியர் உள்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அல் கோபர் நகரத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் 4 முஸ்லீம் தீவிரவாதிகள் புகுந்தனர். ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்து வெள்ளைக்காரர்களையும், முஸ்லீம் அல்லாதவர்களையும் தேடித் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களில் பலரை ஒரு அறையில் பிணைர் கைதிகளாக அடைத்து வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க சௌதி கமாண்டோ படையினர் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 இந்தியர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இருந்து வெங்கடமணி பாஸ்கர் (44) என்ற இந்தியர் உட்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாஸ்கர் துபாயில் வசிக்கும் கம்ப்யூட்டர் நிறுவன மேலாளர் ஆவார். தொழில் நிமித்தமாக அடிக்கடி இவர் சௌதி அரேபியா செல்வது வழக்கம். இந்த முறை அவர் செல்லும்போது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத திகில் அனுபவத்துக்கு உள்ளானார். ஒயாசிஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார் பாஸ்கர். ஹோட்டலின் சேவை பிரிவுக்கு தொலைபேசி மூலம் அவர் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம், அறையிலேயே தங்கியிருங்கள். அறைக் கதவை இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு மூடிக் கொள்ளுங்கள். யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்று வரவேற்பாளர் கூறியுள்ளார். இதனையடுத்து பாஸ்கர் அறைக் கதவை சாத்திக் கொண்டார். சிறிது நேரத்தில் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தமும், மரண ஓலமும் அவருக்குக் கேட்கத் தொடங்கியது. இதனையடுத்து நடந்தது குறித்து அவர் கூறியதாவது: கொஞ்ச நேரம் கழித்து என்னுடைய அறைக் கதவு தட்டப்பட்டது. கதவில் உள்ள துளை வழியாக வெளியே பார்த்தேன். ஓட்டல் சிப்பந்தியின் தலையின் இரண்டு பக்கமும் இரண்டு துப்பாக்கிகள் தெரிந்தன. நான் கதவைத் திறக்கவில்லை. வெடிகுண்டுகள் தரையில் எறியப்படும் சத்தமும், அதைத் தொடர்ந்து வெடிக்கும் சத்தமும் எனக்குக் கேட்டது. ஹோட்டலுக்கு வெளியே போலீஸாருடன் இருந்த எனது சக ஊழியரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டேன். ஜன்னல் கதவு வழியாகக் குதித்துவிடட்டுமா என்று கேட்டேன். கால்கள் உடைந்து போனாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளலாமே என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்த அறையிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். பின்னர் குளியறைக்குள் நுழைந்து, கண்ணாடிகள் அனைத்தையும் துண்டு, போர்வை கொண்டு மூடினேன். அப்படியே உள்ளேயே அமர்ந்து கொண்டேன். இறுதியில் கமாண்டோ படையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து என்னை மீட்டனர் என்றார். ஹெலிகாப்டர் மூலம் ஹோட்டலின் மேல் தளத்தில் குதித்த கமாண்டோக்கள் திடீரென உள்ளே புகுந்து 60 பிணைக் கைதிகளை மீட்டனர். அல்கொய்தாவைச் சேர்ந்த பாகிஸ்தானியர் உள்பட 7 தீவிரவாதிகளை படையினர் கைது செய்தனர். இந்தத் தாக்குதலில் 8 இந்தியர்கள், 3 பிலிப்பினோக்கள், 3 அரேபியர்கள், 2 இலங்கை நாட்டவர்கள், ஒரு அமெரிக்கர், ஒரு இத்தாலியர், ஒரு ஆங்கிலேயர், ஒரு ஸ்வீடன் நாட்டவர், ஒரு தென் ஆப்பிரிக்கா நாட்டவர், ஒரு எகிப்து சிறுவன் (10) ஆகியோர் கொல்லப்பட்டனர். (thatstamil) |