| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 209 online users. » 0 Member(s) | 207 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,061
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,464
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| வேண்டும்...! |
|
Posted by: tamilini - 09-03-2004, 09:14 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
வேண்டும்......!
<img src='http://tamilini.yarl.net/archives/CACPE3U1.jpg' border='0' alt='user posted image'>
சுதந்திரமாய் ஒரு
சூரிய உதையம்
தாய் நிலத்தில்.. என்
தாயுடன் வேண்டும்...!
என்னை தீண்டும்
காற்றலைகள்
சுதந்திரமாய்
தூய்மையாய் வேண்டும்...!
நீண்ட இரவதில்
நிசப்தத்தில்
நின்மதியாய்
நிலவை ரசிக்க வேண்டும்...!
அழுகுரல்கள் இன்றி...
அமைதியாய்
அன்னை மடியில்
அயர்ந்து தூங்க வேண்டும்...!
பிஞ்சுகளாய் நாங்கள்
பஞ்சுப் பாதம்
பதித்த பாதைகள்
குண்டும் குழியும் இன்றி
மிதிவெடிகள் இன்றி...
மீண்டும் எம்மை
ஏந்திட வேண்டும்...!
ஓரக்கண்ணால் ஒழிந்து
பார்க்கும்..
கொலைகார பாவிகள்
வெளியில் போக வேண்டும்..!
அரிச்சுவடி கற்ற..
பாலர் பாடசாலை..
பாழாய் போன பாவிகள் இன்றி
பழைய படி எமக்கு வேண்டும்...!
சுதந்திரமாய் என் நாய்
நிலவை பாத்து குரைக்க வேண்டும்
நாய் குரைக்கும் ஒலி கேட்டு..
நாசக்காரர்கள் என்று
நடுங்கி நாம் பதுங்கிய
நிலை அகல வேண்டும்...!
நினைவுக்காய் செதுக்கிய தூபிகள்...
நிலை பெற்று நிக்கவேண்டும்..
காணமல் போனோர்
பட்டியல் அற்று போகவேண்டும்..
சிறைச்சாலைக்காய் அலையும்
உறவுகள் அற்று போக வேண்டும்...!
உறக்கத்தின் இடையில்....
உள்ளே நுழையும்..
சிங்கள பேய்கள்... தங்கள்
ஊர் திரும்ப வேண்டும்...!
அடையாளம் காட்ட
அட்டைகள் கேட்ட...
அந்நியப்பாவிகள்
அழிந்து போகவேண்டும்...!
இனத்தை காட்டிக்கொடுத்து....
தமிழ் மண்ணை விற்று
வயிறு வளக்கும் கள்வர் கூட்டம்...
கல்லாய் போக வேண்டும்..!
தமிழ் இனத்திற்காக..
உயிரை கொடுத்த...
வேங்கைகள் என்றும்...
விடிவெள்ளிகளாய் வேண்டும்...!
மண்ணை பிரிந்து...
அந்நிய நாட்டில்...
அகதியான நான்
தாய் மண்ணில்
மரிக்கவாவது வேண்டும்...!
|
|
|
| காதலுக்காய்....! |
|
Posted by: tamilini - 09-02-2004, 08:44 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (43)
|
 |
<img src='http://tamilini.yarl.net/archives/purpleflbutflys.gif' border='0' alt='user posted image'>
<b>
காதலுக்காய்....!</b>
காதலுக்காய் உயிரையும் விடுவர்....
காதலுக்காய் உயிரையும் எடுப்பர்..
கண்மண் தெரியாது...
கன்னியரும் காளையரும் காதலிப்பர்..
காதலென்ற போர்வையிலே சுற்றியும் திரிவர்..
காதலென்று இன்னும் பலதும் செய்வார்...
காரணம் கேட்டால் இது காதல் என்பர்...
கண்ணிறைந்த காதலியென/
காதலன் என அழகாயும் பேசுவார்..
கனிவானது காதலென அதனையும் போற்றுவார்...
காதலை வாழ வைக்கும்
காவலர்கள் தாம் என
காதலர்கள் தம்மை தாமே உருவகிப்பர்...
காத்தும் இருப்பர் தமக்காய்,
காக்கவும் வைப்பர்...
கடைசியில் கம்பியும் நீட்டிடுவர்...
காதலனோ காதலியோ
புதிதாக கிடைத்துவிட்டால்....
காதல் என்னும் பந்தம்
காலத்துக்கும் தொடரும் என்று
காவியம் சொல்லுது...
கணடவுடன் காதல் கொண்டு இன்று
காதலை கொல்லுது¸û
காலம் காலமதாய்
காதலின் பெருமையறிந்து...
காதலதனை புரிந்து உண்மையாய்
காதலிப்பவர்கள் எத்தனை பேரோ.......?
கடவுளுக்கும்
காதலுக்கும் மடடுமே வெளிச்சம்....!
|
|
|
| கரும்புலிகள் |
|
Posted by: Thusi - 09-02-2004, 05:05 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (25)
|
 |
கரும்புலிகள்
தரையின் மடியில் வெடியாகி - இடியாகி
கடலின் அடியில், அலையில் சுழியாகிப் பேரலையாகி
தொலைதூர நகரங்களில் முகம் மறைத்து, முடிவெடுத்து பகையழித்துப்
போனவர்களின்
நினைவில் குளித்து நிமிர்வோம்.
குறிப்பு: கரும்புலிகள் நாளுக்கு எழுதினது. இப்பத்தான் பிரசுரிக்கக்கூடிய மாதிரி சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
|
|
|
| அவுஸ்ரேலியாவின் ஆதிக்குடிகள்.. |
|
Posted by: sayanthan - 09-02-2004, 10:50 AM - Forum: புலம்
- Replies (39)
|
 |
அவுஸ்ரேலியாவின் ஆதிக்குடிகள் தெற்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என்றும்.. அல்லது அவுஸ்ரேலியா பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக தெற்கையொட்டிய ஆசியாவுடன் இணைந்திருந்த போது அங்கேயே இருந்தவர்கள் என்றும் அவர்களுடைய சில பண்பாட்டு நடைமுறைகள் திராவிட பண்பாட்டை ஒத்திருக்கின்றன (தை மாதத்தில் அவர்களும் சூரியனுக்கு பொங்குகிறார்களாம்) என்றும் படித்தேன்.. ஊகம் தான்.. யாருக்காவது ஏதாவது இது பற்றி தெரியுமா..? அவர்களை பார்க்கின்ற போது ஒரு வேளை இது உண்மையாயிருக்குமோ என்று தோன்றுகிறது. ஆகக்கூடியது 4 தலைமுறைகளாகத்தான் ஆங்கிலேயர்கள் இங்கு வாழ்கின்றார்கள்.. ஆதிக்குடிகளுக்கு 40 000 வருடங்கள் வரலாறு இருக்கிறதாம்.. ஒரு வேளை நாங்கள் அவுஸ்ரேலியாவின் ஆண்ட பரம்பரையோ...?
|
|
|
| நெருக்கடியில் ரஷ்சியா...! |
|
Posted by: kuruvikal - 09-02-2004, 10:49 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (16)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40022000/gif/_40022632_ossetia_belsan_map203.gif' border='0' alt='user posted image'>
<b>தீவிரவாதிகளின் பிடியில் 200 ரஷ்ய குழந்தைகள்</b>
ரஷ்யாவில் பள்ளி ஒன்றில் நுழைந்த செசன்ய தீவிரவாதிகள் சுமார் 200 குழந்தைகள், ஆசிரியர்கள் உள்பட 400 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
குழந்தைகளை உடனே விடுவிக்க வேண்டும் என அவசரமாய் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பெஸ்லன் என்ற இடத்தில் நேற்று பள்ளிக்குள் நுழைந்த 17 தீவிரவாதிகள் குழந்தைகள், ஆசிரியர்களை சிறைப் பிடித்தனர்.
இரு வாரங்களுக்கு முன் இரு ரஷ்ய விமானங்களை நடுவானில் குண்டு வைத்துத் தகர்த்த தீவிரவாதிகள், நேற்று முன் தினம் ஒரு ரயில் நிலையத்தில் குண்டு வைத்தனர். இந் நிலையில் பள்ளிக் குழந்தைளை சிறைப் பிடித்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து செசன்யாவைப் பிரித்துத் தனி நாடாக்கக் கோரி தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் ரஷ்ய ஆதரவாளர் ஒருவர் முறைகேடான தேர்தல் மூலம் அந் நாட்டு அதிபராக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரஷ்யா மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, பள்ளிக் குழந்தைகளைப் பத்திரமாக மீட்க தீவிரவாதிகளுடன் ரஷ்யா பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் கூடிய ஐ.நா. பாதுகாப்பு சபை, பள்ளிக் குழந்தைகளை உடனே விடுவிக்குமாறு செசன்ய தீவிரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
-------------
<b>Talks begin in school siege drama</b>
Families are facing an agonising wait for news
The Russian authorities have held talks with an armed group who are holding hundreds of people hostage at a school in North Ossetia.
The hostage takers want Russian troops to leave Chechnya and the release of Chechen rebels held in Ingushetia.
At least 200 people, many of them children, were seized on Wednesday at the school in Beslan in North Ossetia.
The UN Security Council - at a meeting on Wednesday - condemned the hostage takers "in the strongest terms".
The 15-member council demanded "the immediate and unconditional release of all hostages of the terrorist attack", at a session requested by Moscow.
thatstamil and bbc.com
|
|
|
| எப்படித்தான்...? |
|
Posted by: shanthy - 09-01-2004, 11:47 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
எப்படித்தான்...?
நீண்ட நாளின் பின்னான
இந்த இரவு எங்களுக்காய்
தனிமையில் காய்கிறது.
வழமைபோல் இந்த இரவும்
அரசியல்,சமூகம்,
ஆணாதிக்கம்;...பெண்ணியம்...,
அப்படித்தானே ஆரம்பித்தோம்.
யாருக்காகவோ நாங்களே
எங்கள் மனங்களைச்
சுட்டுக் கொள்ளும் வழமை
இன்றும் என்றையும் போல....
எத்தனையோ கவனமாய்
எடுத்து வந்த வார்த்தைகள்...
எப்படித்தான்....?
'மௌனக்கண்ணீர்" வடித்து
எங்கள் மனங்களைச் சிதைக்கும்
மகத்துவம் கற்றதோ....?
27.08.04.
|
|
|
| உனக்கே உனக்காய்....! |
|
Posted by: kuruvikal - 09-01-2004, 01:18 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (33)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/flower1.jpg' border='0' alt='user posted image'>
நேசம் என்று
நெஞ்சோடு கூடிவிட்ட மலரே
உன் பாசம் என்னை
பாசிச ஆட்சி செய்யுது
இருந்தும் வலியுணரவில்லை
வாழ்வின் வன்மை உணர்கிறேன்...!
மலரே...
வாழ்வின் முதல் நேசமாய்
நீ வர....
வாடாமலராய் - நீ
என்றும் வாழ வேண்டும் என்று
வாடிய உன்னை
வாடாமல் காத்ததும்
இதயக் கோவில் கட்டி
குடியிருத்திக் களித்ததும்
உனக்காய் பரிசளிக்க
இதயச் சுவர் கொண்டு
மனதோடு கட்டிய மகாலும்
என் உயிர் உள்ளவரை
உனக்கே உனக்காய்....!
கலியுகத்தில்
கண்ட இடத்தில் கண்டபடி
காதல் என்று களிக்கவல்ல
மலரே உன்னோடு
பூங்குருவிதன் நேசம்...!
சாத்தியமென்றால்...
கலியுகம் கடந்தும்
காலமெல்லாம் வாழ வேண்டும்
நம் நேசம்
வேசமில்லா வாசமாய்
எம்மிருவரோடு....!
உலகிற்கு
உதாரணத்துக்காய் அன்றி
நமக்கு நாமே
நேசத்தின் மொழி உணர
மலரே உன்னோடு கொண்டேன் நேசம்..!
உன்னைக் கலங்கடத்தி
காயப்படுத்தவல்ல என் நேசம்
இது சத்தியம்....!
இது உனக்காய் வரும்
பூங்குருவிதன் ஜீவ வரிகள்
உன் இனிய வாசம் கண்டு
நான் கூட
என் கீச்சிடும் மொழிகேட்டு
நீ கூட
அதுவே தொடர்கதையாய்
என் நேசத்தின் கரு வளர்த்தாய்
வசந்தத்தோடு வந்த மலரே
நீ நனி குளிரிலும்
வாடாதே இருப்பாய்
என் மனதோடு....!
|
|
|
| Vanakkam |
|
Posted by: Thusi - 08-31-2004, 08:25 PM - Forum: அறிமுகம்
- Replies (102)
|
 |
வணக்கம் யாழ் இணைய நண்பர்களே,
நான் துசி,
தமிழீழம் - கிளிநொச்சியிலிருந்து.
என்னை யாழ் இணையத்திற்கு வரவேற்பீர்கள் தானே?
உங்கள் அனைவரதும் அன்பையும் ஆதரவையும் வேண்டி,
என்றும் அன்புடன்,
துசி
|
|
|
|