Welcome, Guest
You have to register before you can post on our site.

Username

Password

Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 358 online users.
» 0 Member(s) | 356 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,061
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,464
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

திருநெல்வேலிக்கே அல்வா !
Posted by: kavithan - 08-27-2004, 09:12 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (2)

திருநெல்வேலிக்கே அல்வா !

தமிழ் ஊடகத்துறைக் கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆரம்பக்கட்ட வேலைகள் பூர்த்தி.........
யாழில் இருந்து குரு

[size=20]அறிமுகம்

தமிழ் ஊடகத்துறைப் பற்றிப் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்நாட்டவர் மத்தியிலும், வெளிநாட்டவர் மத்தியிலும் நிலவி வருகின்றது. அவற்றில் முக்;கியமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் அநேகமான பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் முறைமையான ஊடகத்துறைக்கான கல்வியூடாக வெளிவர வரவில்லை என்றும்,

யாழ்ப்பாணத்தினது அல்லது தமிழ் மக்களினது வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கவேண்டிய யாழ் பல்கலைக்கழகமானது, தீண்டாப்பெண்டாட்டி போல தமிழ்ச்சமூக வளர்ச்சியில் அக்கறை எடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காரணம். இதுவரை காலமும் பல பயனற்ற டிப்ளோமாக்களையும், பட்டப்படிப்பையும் உருவாக்கி, தமிழ் மாணவர்களை ஏய்த்துக்கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழகமானது, 2006ஆம் ஆண்டளவில் எப்படியாவது ஊடகத்துறைக்கான ஒரு கற்கை நெறியை ஆரம்பிக்க உள்ளதாக, பீடாதிபதி ஒருவர் தெரிவித்தார்.

தமிழர்களைப்பற்றித் தமிழர்கள் கவலைப்படுவதிலும் பார்க்க வெளிநாட்டவர்கள் தமிழர்களுக்காகக் கவலைப்படுவது போல் காட்டிக்கொள்வதே, இப்போது அதிகமாகக்காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் முயற்சியாலும், வட இலங்கைப்பத்திரிகையாளர் சங்கத்தலைவரின் முயற்சியாலும், யுனஸ்கோவின் (விரைவில் ஜேர்மன் நிறுவனமான புவண இன் நிர்வாகத்தில்) நிர்வாகத்தில்,; வேலைசெய்யும் பத்திரிகையாளர்களுக்காக டொன்மார்க் அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இதழியல் டிப்புளோமா கற்கை நெறியில் கற்றுப் பயன்பெறும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். அந்த வகையில் எனக்கு இந்த ஆய்வு செய்யும் வாய்ப்புக்கிடைத்தது எனலாம்.

பத்திரிகையாளர்களின் பாவனைக்கு என சகல வசதிகளும் கொண்ட ஊடக வளநிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு 20 மாணவர்களும், மற்றும் தொழில் புரியும் ஏனைய பத்திரிகையாளர்களும் உபயோகிப்பதற்கென புத்தகங்கள் உள்ளன. அவற்றில், அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் ஊடகத் துறையில் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக எழுதி, வெளியிட்ட புத்தகம் உட்பட, பல புத்தகங்கள் உள்ளன. அவற்றில் அடிகளார் அவர்களால் 2003ஆண்டு மார்கழி மாதம் தமிழ் மொழியில் வெளியிட்டிருந்த 'ஊடகவியல் கலைச்சொல் அகராதி\" என்பதும் அடங்கும். இந்நு}லிற்கு செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகள் முன்; இயலும்@ மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஆசி இயலும்@ கலாநிதி க. குணராசா அவர்கள் ஆய்வு இயலும் எழுதியுள்ளனர். ஊடகவியல் கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்கென வெளியிடப்பட்டுள்ள இந்தத் தமிழ் அகராதி பற்றி, உலகத்தமிழ்hகள் சரியாக அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.

அகராதியின் அட்டைபடம்

[url=http://www.mousegroup.net/news/news/mediadic/dic_1.htm]இதுகுறித்து தொடர்ந்து படிக்க... இதனை அழுத்துங்கள்

Print this item

எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?
Posted by: shanthy - 08-27-2004, 12:33 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?

நீழும் இரவின் கருமைக்குள்
கண்ணெங்கும் விளக்காக....
அச்சத்தின் விரல்களுக்குள்
ஆவிகள் நசிபட
வேலி பிரியும்..., நாய் குரைக்கும்....,
விதம் விதமாய்
ஒலியெழும் திசைபார்த்து
விக்கித்துப் போய்விடும் உயிர்களுக்கு
உத்தரவாதம் தராத இரவுகள்.

வேட்டதிரும்....,
எங்கோ ஒரு வீட்டின் மகனோ , மகளோ....
அவர்களுக்கு இரையாக....
இருளோடு ஒரு சாவு உறுதியாய்....
'சலோ" என்றபடி விடிகாலை - அவர்கள்
வீதியுலா வெளிக்கிடுவர்.
புலியொன்றைக் கொன்றதாய் பொய்சொல்லி
ஊர்வாயில் மெய்யாக்கிப் போய்விடுவர்.

சந்திகளில் அரணமைத்து
சாவிழுத்தக் காத்திருக்கும்
மந்திகளின் மணம் உணரும்
மூக்குத் துவாரங்கள் - உயிர்
மூச்சையே அதிர்விக்கும்.
வீதியில் தேவைகட்காய்
விரையும் மனிதரின்
உயிர்களில் வலியெடுக்கும்....

பெண்களைக்காணும் பனைமரத்து
அரணிருக்கும் பேய்களின்
இடையிருக்கும் உடை நழுவ
விரல் நீட்டி அழைக்கும்
விழுங்கிடும் பார்வைகளில்
உயிர் மூச்சே நின்றுவிடும்....,
பாவாடை கட்டிய ஒரு பூவின் இதழ்கள்
பற்களின் அடையாளங்களுடன்
பனைவடிலிப் பற்றையில் பிணமாகும்.

இப்படித்தான் அவர் வருகை
சாவையும் , கண்ணீரையும் ,
உறவுப்பிரிவையும் , ஊரழும் துயரையும்
தந்து போன உண்மைகள்.
எதை மறக்க....? எதை நினைக்க.....?
என்றுதான் எமை வாழவிட்டார் நன்றியுரைக்க
எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?

Print this item

சிலோன் விஜயேந்திரன்
Posted by: yarl - 08-26-2004, 02:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

தமிழ்த்தேசியவாதியும் நல்லதொரு கவிஞரும் இலக்கியவாதி

தற்ஸ்ரமில்கொம் செய்தி

தீ விபத்தில் துணை நடிகர் பலி

சென்னை:

சென்னை திருவல்லிககேணியில் ஏற்பட்ட தீ விபத்தில் துணை நடிகர் ஒருவர் பலியானார்.

திருவல்லிக்கேணி பகுதியில் பெட்ரோல் குடோன் ஒன்று உள்ளது. இங்கு பேரல்களில் பெட்ரோல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை இங்கு மோட்டார் சைக்கிளில் இருந்து வந்த தீப்பொறி பட்டு தீப்பிடித்தது.

இதில் துணை நடிகர் சிலோன் விஜயேந்திரன் என்பவர் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் ராயபேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிலோன் விஜயேந்திரன் பலியானார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Print this item

கடவுள் நம்பிக்கை
Posted by: Thiyaham - 08-25-2004, 09:47 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (324)

கடவுள் நம்பிக்கை.. ஆம் இந்த தலைப்பில் ஒரு காரசாரமான விவாதத்தை எழுதலாம் என சில வாரங்களுக்கு முன் நினைத்திருந்தேன். வெளி இடம் சென்றதால் முடியவில்லை.

ஆதிகாலத்தில் மிருகங்களை போல் சுற்றி திரிந்த மனிதர்களை சீரிய வழியில் கொண்டு வருவதற்கு ஒரு சாராரால் அறிமுகப்படுதபட்டதே சமய நம்பிக்கை. இது எப்படி என்றால், "சொல்வழி" கேளாத சிறு பிள்ளைகளை நாம் "அதிற்ர பிடிச்சு கொடுப்பன் இதிற்ர பிடிச்சு கொடுப்பன்" என்று மிரட்டுகின்றோமே அதைப்போன்றது (குழந்தைகள் விஞ்ஞானதில் இது ஒரு தவறான செயல் என்பது வேறு விடயம்).

இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....?????

Print this item

உலக சாதனையாளர்கள்
Posted by: kavithan - 08-25-2004, 08:46 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

1 - செர்கி பூப்கா

35 உலக சாதனைகளை புரிந்த செர்கி பூப்கா

தடகள உலகில் 16 ஆண்டு காலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது மட்டுமின்றி, உலக சாதனை படைத்து அந்த உலக சாதனையை 35 முறை உயர்த்தி மகா சாதனை புரிந்து மாவீரர் உக்ரைனைச் சேர்ந்த செர்பி பூப்கா.

1963 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி டோனெட்ஸ் எனும் தொழிற்சாலை நகருக்கு அருகே பிறந்த செர்பி பூப்கா, தனது 19 வயதில் சர்வதேச தடகளப் போட்டியில் அடியெடுத்து வைத்து முதல் முறையிலேயே உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

1983 ஆம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன் போட்டிகளில் களமிறங்கிய பூப்கா, தங்கம் வென்று அதுவரை உலக சாதனையாக இருந்த உயரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக தடகள சாம்பியன் போட்டிகள் ஆறிலும் அடுத்தடுத்து பங்கேற்று ஒவ்வொரு முறையும் புதிய சாதனை படைத்து தனக்குப் பிறகு யார் என்கின்ற கேள்வியை உலகத்திற்கு தொடர்ந்து விடுத்தவர் செர்பி பூப்கா.

பூப்கா என்றாலே போல் வால்ட், போல் வால்ட் என்றாலே பூப்கா என்று இன்று வரை விளையாட்டு ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பிடித்தவர்.

உலக மற்றும் சர்வதேச தடகளப் போட்டிகளில் இறங்கும் ஒவ்வொரு முறையும் புதிய சாதனை படைத்த செர்கி பூப்காவால் ஒலிம்பிக் போட்டிகளில் - ஏனோ தெரியவில்லை - பெரிதாக சாதனைகள் படைக்கவில்லை.

1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி 6 மீட்டர் உயரத்தை கடந்து பெரும் சாதனை புரிந்த பூப்காவால் அதன் பிறகு நடந்த சியோல் ஒலிம்பிக் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்த முடியவில்லை. 5.90 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டினார். அதுவே அவருக்கு தங்கப்பதக்கத்தைப் பெற போதுமானதாக இருந்தது.

1991 ஆம் ஆண்டு 20 அடி உயரத்தை உள் விளையாட்டரங்கிலும், வெளியிலும் தாண்டிய ஒரே வீரர் என்கின்ற பெருமையை பூப்கா பெற்றார்.

1992 ஆம் ஆண்டு நடந்த ஒலிப்பிக் போட்டிகளில் தான் நிர்ணயித்த இலக்கை தாண்ட முடியாமலேயே ஏமாற்றமடைந்த பூப்கா, அடுத்த 36 நாட்களில் இரண்டு முறை உலக சாதனை ஏற்படுத்தினார்.

தனது தடகள வாழ்க்கையில் 35 முறை - 18 முறை உள்ளரங்கிலும், 17 முறை வெளியிலும் - உலக சாதனைகளை நிகழ்த்திய செர்கி பூப்கா, தடகளம் என்பது மனிதனின் சாதனை ஓட்டத்திற்கு ஒரு மைல் கல் என்பதை நிரூபித்துள்ளார்.

ஃபைபர்கிளாஸ் பொருளால் ஆன கம்பத்தைக்கொண்டு ஓடிவந்து 6 மீட்டருக்கும் அதிகமான உயரங்களை அவர் தாண்ட முயற்சிக்கும் போது, அந்தக் கம்பம் ஒடிவதுபோல் வளைவதும், தனது மூச்சைப் பிடித்துக்கொண்டு அந்தக் கம்பத்தின் உச்சியையும் தாண்டி வைக்கப்பட்டுள்ள குறுக்குக் கோலைத் தாண்டி செர்பி பூப்கா சாதனை படைக்கும் போது யாராலும் தங்களின் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாது. உள்ளபடியே மயிர்கூச்செரியும் மாய காட்சியைப் போல அவருடைய முயற்சி இருந்தது.

6.24 மீட்டர் உயரத்தை தாண்டி கடைசி உலக சாதனையை ஏற்படுத்திய அந்த மகா வீரர் இன்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தடகள ஆணையத்தின் தலைவராக உள்ளார்.

நன்றி
வெப் உலகம்

Print this item

இது எப்படி இருக்கு...........?
Posted by: kavithan - 08-25-2004, 08:25 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (10)

ஷாதி டாட் காமின் மெஸஞ்சர் சேவை அறிமுகம்!

நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஷாதி டாட் காம் நிறுவனம், சந்தாதாரர்கள் அவர்களுக்கு இணையான துணையை நேரடியாக இன்டர்நெட்டில் பேசி தேர்வு செய்து கொள்ள ஏதுவாக மெஸஞ்சர் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஷாதி டாட் காம் இணைய தளத்தில் தங்களின் துணையைத் தேர்வு செய்வதற்காக பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

தங்களின் வாழ்க்கைத் துணை குறித்த தகவல்கள், அவர்களின் முழு விவரங்களை இந்த ஷாதி டாட் காமின் மெஸஞ்சர் மூலம் சந்தாதாரர்கள் அறிந்த பின்னர் அவர்களுடன் சாட்டிங் செய்து தங்களின் உள்ள வெளிப்பாடுகளை பரிமாறிக் கொண்டு, துணையாகத் தேர்வு செய்ய இது வழி வகுக்கிறது.

மற்ற மெஸஞ்சர்களைப் போல் அல்லாமல் ஷாதி டாட் காம் மெஸஞ்சரை டவுன்லோட் செய்யத் தேவையில்லை. சந்தாதாரர்கள் அனைவருக்கும் மெஸஞ்சர் வசதி அளிக்கப்படும். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உரிய நபர்களின் பயோடேட்டா தரப்படும். அந்த பயோடேட்டாவின் அடிப்படையில் தேவைப்பட்டால் மெஸஞ்சரில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேசவோ அல்லதோ விலகிக் கொள்ளவோ முடியும்.

இதன் மூலம் ஷாதி டாட் காம் சந்தாதாரர்கள் தாங்கள் விரும்பும் துணையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ள முடிகிறது.

பிளாஷ் தொழில்நுட்பத்தில் ஷாதி டாட் காம் மெஸஞ்சர் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், டெலிகிராப் / டெலிகாம் துறையைப் பின்பற்றி ஏற்கனவே பேஜர் தொழில்நுட்பத்தை வழங்கிய இந்த நிறுவனம், தற்போது செல்பேசி தொழில்நுட்பத்துடன் இந்த வசதியை அளிப்பதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அனுபம் மிட்டல் கூறினார்.

கடந்த 1997ம் ஆண்டு பீப்பிள்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக தோற்றுவிக்கப்பட்ட ஷாதி டாட் காம், ஆஹருது மற்றும் ப்ராப்பர் டாட் காம் கடந்த 7 ஆண்டுகளில் 200 சதவீத வளர்ச்சியை அடைந்து தற்போது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இன்டர்நெட் மற்றும் ஒயர்லெஸ் வர்த்தகத்தை மேற்கொண்டிருப்பதாக மிட்டல் மேலும் குறிப்பிட்டார்.

ஷாதி டாட் காம் இணைய தளத்தில் பணம் செலுத்தியோ அல்லது இலவசமாகவோ பதிவு செய்துள்ள அனைத்து சந்தாதாரர்களுக்கும் மெஸஞ்சர் கோரிக்கை விடும் வசதி அளிக்கப்படுகிறது. அவர்கள் கோரும் வாழ்க்கைத் துணை (ஆணோ, பெண்ணோ), மெஸஞ்சர் கோரும் நபரின் பயோடேட்டாவை பார்த்து தெரிந்த பின்னர் பேசுவதற்கு தேர்வு செய்யலாம் எனவும் மிட்டல் தெரிவித்தார்.

ஆன்லைனில் உள்ள நபர்கள் யார் என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னரும் மெஸஞ்சரை பயன்படுத்தி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இந்த வசதியை ஷாதி டாட் காம் சந்தாதாரர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். மெஸஞ்சர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களின் வேண்டுகோளை வைத்து பதிவு செய்து வருவதாகவும் மிட்டல் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு : vandana@shaadi.com

நன்றி
வெப் உலகம்

Print this item

மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதி
Posted by: Sabesh - 08-25-2004, 06:31 PM - Forum: அறிமுகம் - Replies (29)

when i try to reply to a posting getting this message "ன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும்." Why is that? how should I reply to a comment and how do I post an article in tamil????

Print this item

புத்திசாலியான வைரஸ்கள்
Posted by: kavithan - 08-25-2004, 07:28 AM - Forum: இணையம் - Replies (6)

புத்திசாலியான வைரஸ்கள்

[size=12]
என்ன ஆச்சரியமாக இருக்குகிறதா நண்பர்களே....! இது வேறு ஒன்றும் அல்ல நான் மின்னஞ்சல் மூலம் பெற்றுகொண்ட இரு வைரஸ் குறித்து தான் இங்கு சொன்னேன் புத்திசாலியானவை என்று........ ஆமாம் உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உங்களின் நம்பிக்கைகுரிய தளங்களின் மினனஞ்சல்களில் இருந்து யாரோ சிலர் கோப்பு வடிவில் வைரஸ்களை அனுப்புகிறார்கள் .. எனவே நீங்களும் அப்படியான மின்னஞ்சல்களை பெற்றுக்கொண்டால் அவர்கள் அனுப்பும் கோப்புக்களை திறக்கும் போது கவனமாக இருங்கள்.. ... இதில் சில படங்களை போடுகிறேன் அதில் எவ்வாறு தலைப்பிட்டு அனுப்புகிறார்கள் என்பது எல்லாம் காணப்படுகிறது... அதனை பார்த்து நீங்கள் உங்கள் கணணியை காப்பாற்றி கொள்ளுங்கள்

மின்னஞ்சலை திறந்த போது காணப்படது இவ்வாறு

முன்பக்கத்தில் காட்டியது இவ்வாறு

மின்னஞ்சலில் காணப்பட்ட அன்ரிவைரஸ் ஸ்கான் கோப்பை திறக்க முயற்சித்த போது காட்டியது....

Print this item

நதிக்கரையோரத்து நாணயங்கள்...
Posted by: kavithan - 08-24-2004, 12:46 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (25)

நதிக்கரையோரத்து நாணயங்கள்...

"நதிக்கரையோர நகரங்களில்தான் நாகரீகம் தோன்றியது. அப்படிப்பட்ட இடங்களில்தான் நாணயங்களும் முதன் முதலாக புழக்கத்திற்கும் வந்தன. அதனால் நதிக்கரையோரமுள்ள நகரங்களுக்குச் சென்று நாணயங்களைச் சேகரித்து வருகிறேன்" என்கிறார், வேலூர் அருகேயுள்ள வள்ளிமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆர்.சங்கரன்.

ஆர்.சங்கரன்

அபூர்வ நாணயங்கள் சேகரிப்பது இவரது பொழுதுபோக்கு. கடந்த 16 வருடங்களாக இவ் வாறு இவர் சேகரித்த பழமையான நாணயங்களின் எண்ணிக்கை இரு நூற்றுக்கும் அதிகம்.

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாணயங்களைக் கூட இவர் சேகரித்து வைத்திருக்கிறார். இவற்றில் பல்லவ, சோழர்கள் கால நாணயங்களும் அடங்கும்.

1803-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வெளியிட்ட விநாயகர் படம் பொறித்த நாணயம், 1818-ல் வெளியிட்ட ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் பொறித்த ராமர் பட்டாபிஷேக நாணயம், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் காட்சி கொண்ட நாணயம் (1840), என்று அன்றைய காலத்தின்படி அரையணா முக மதிப்பு கொண்ட அரிய நாணயங்களும் இவரிடம் உண்டு. இந்த நாணயங்களில் அதன் மதிப்பிற்கேற்ப ஒன் கேஷ், பைவ் கேஷ் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

1907-ல் விக்டோரியா மகா ராணி உருவம் பொறித்த வெள்ளி நாணயம் வெளியிடப் பட்டது. இதன் அன்றைய மதிப்பு ஒரு ரூபாய் (16 அணாக்கள்) ஆகும். இதன் எடை 11 கிராம். முழுக்க முழுக்க வெள்ளியால் தயாரிக்கப்பட்டது. இதே ஆண் டில் எட்வர்ட் மன்னர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதன் மதிப்பும் ஒரு ரூபாய்தான். இப்போது வெள்ளியின் மதிப்பு மட்டும் 120 ரூபாய் பெறும்.

பல்லவர், சோழ கால நாணயங்கள்
இப்படி பழமையான நாணயங்களைச் சேகரிக்கும் ஆர்வம் சங்கரனுக்கு எப்படி வந்ததாம்?...அவரையே கேட்டோம்.

"முதன் முதலில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பல்வேறு வகை நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வம் வந்தது. முதலில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா என சேகரித்தேன். அதிலும் பழமையான வருடங்கள் கொண்ட நாணயங்களைத் தேடினேன். இப்படி வருடம் பின்னோக்கிய பழைய நாணயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தபோது, 50, 60 வருடங்களுக்குமுந்தைய நாணயங்களும் கிடைத்தன. உற்சாகம் அதிகமானது. அப்படியே ஆங்கிலேயர் கால நாணயங்கள், மொகலாயர் கால நாணயங்கள் என்று இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போக ஆரம்பித்தேன்.

சோழர் காலம், பல்லவர் காலம், கிருஷ்ண தேவராயர், நாயக்கர் மன்னர் காலம், மைசூர் மன்னர்கள், ஹைதராபாத் நிஜாம் காலம் ஆற்காட்டு நவாப் என்று அப்படியே பெரிய வரலாற்று பின்னணி கொண்ட நாணயங்கள் சேர்ந்து விட்டன. புதுச்சேரியில் நாணயங்கள் சேகரித்தபோது பிரஞ்சு நாட்டவர்கள் ஆட்சி காலத்தில் அச்சிட்ட நாணயங்களும் கிடைத்தன.

இயேசு நாதர், அனுமன்,விநாயகர், ராமர்பட்டாபிஷேக உருவம் பொறித்த நாணயங்கள்.
இந்த நாணயங்கள் எல்லாமே பொன், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் வார்க்கப்பட்டுள்ளன.

இப்படி நாணயங்கள் சேகரிக்கப்போய் அது தொடர்பான அரிய தகவல்களும் கிடைத்தன. அதற்கு ஒரு சின்ன உதாரணம். இப்போது பல இடங்களில் புதையல் எடுத்ததாக கூறுகிறார்களே, அதன் பின்னணி என்ன தெரியுமா?

அந்தக் காலத்தில் பொன் வெள்ளி, செம்பு நாணயங்களை சரியான முறையில் மக்களுக்குப் பாதுகாக்கத் தெரியவில்லை. இதனால் மண் அல்லது உலோக கலசங்களில்தான் இவற்றைப் புதைத்து வைத்தனர். அதுவே இப்போது புதையலாகக் கிடைக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1818 மற்றும் 1840_ல் வெளியிட்ட நாணயங்கள்.

1996-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு பழமையான நாணயங்கள் சேகரிப்பதை தீவிரமாக செய்துவருகிறேன்.

நதிக்கரை நகரங்களில்தான் நாகரீகம் தோன்றியது, வளர்ச்சி யடைந்தது என வரலாறு கூறுவ தால் நதிக்கரையோரம் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், ஆக்ரா, மதுரா போன்ற பல வடமாநில நகரங்களுக்குச் சென்று நாண யங்களைச் சேகரிக்கிறேன்.

இவ்வாறு சேகரித்த நாண யங்களையெல்லாம், தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சென்று பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்களுக் காக கண்காட்சியும் நடத்தி வருகிறேன்."

நன்றி
தினத்தந்தி

Print this item

வணக்கம்
Posted by: tholar - 08-23-2004, 07:46 PM - Forum: அறிமுகம் - Replies (26)

வணக்கம் அன்பு நெஞ்சங்களே
உங்கள் இனிய வரவேற்பை எதிர்பார்க்கும்
உங்கள் தோழர்

Print this item