![]() |
|
சிலோன் விஜயேந்திரன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சிலோன் விஜயேந்திரன் (/showthread.php?tid=6762) |
சிலோன் விஜயேந்திரன் - yarl - 08-26-2004 தமிழ்த்தேசியவாதியும் நல்லதொரு கவிஞரும் இலக்கியவாதி தற்ஸ்ரமில்கொம் செய்தி தீ விபத்தில் துணை நடிகர் பலி சென்னை: சென்னை திருவல்லிககேணியில் ஏற்பட்ட தீ விபத்தில் துணை நடிகர் ஒருவர் பலியானார். திருவல்லிக்கேணி பகுதியில் பெட்ரோல் குடோன் ஒன்று உள்ளது. இங்கு பேரல்களில் பெட்ரோல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை இங்கு மோட்டார் சைக்கிளில் இருந்து வந்த தீப்பொறி பட்டு தீப்பிடித்தது. இதில் துணை நடிகர் சிலோன் விஜயேந்திரன் என்பவர் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் ராயபேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிலோன் விஜயேந்திரன் பலியானார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. - aathipan - 08-26-2004 முன்று மாதங்கள்முன்பு அவரைபார்த்துப்பேசினேன். நிறைய இலக்கிய சேவைகள் செய்துள்ளதாக கூறினார். அதன்பின் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது உருவம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. பஞ்சு போன்ற தலைமுடியும் வெறித்த பார்வையும் மறக்கமுடியாது.... - aathipan - 08-27-2004 தினத்தந்தியில் காயம் என்றுதான் போட்டுள்ளார்கள் http://www.dailythanthi.com/article.asp?Ne.../27/2004&advt=1 - tamilini - 08-27-2004 விபத்தின் பின் சிகிச்சை பலன் இன்றி இறந்ததாக தான் செய்தி உண்மை தெரியாது.. இற்க்காமல் இருந்தால் நீடுழி வாழட்டும்....! - yarl - 08-28-2004 தீ விபத்தில் காயமடைந்த நடிகர் விஜயேந்திரனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை சென்னை, ஆக. 28: சென்னையில் தீ விபத்தில் காயமடைந்த சினிமா நடிகர் சிலோன் விஜயேந்திரனுக்கு (58) சிறந்த முறையில் சிகிச்சையளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அவர் காயமடைந்தார். ராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். முகம், கை, கால்களில் அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரன் அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சிலோன் விஜயேந்திரனுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம் ஆகியோரிடம் தீரன் கோரியுள்ளார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் கே. நடராஜனைச் சந்தித்து வெள்ளிக்கிழமை மனு ஒன்றையும் தீரன் தந்தார். தீ விபத்து குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் dinamani - kavithan - 08-28-2004 அவர் நல்ல முறையில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். - tamilini - 08-28-2004 நலம் பெற பிராத்தனைகள்....! - kavithan - 08-28-2004 தவறாகப் பதியப்பட்டதுக்கு வருந்துகிறேன் - Thiyaham - 08-29-2004 அவருடைய குடும்பத்திற்கு தவறான செய்தியால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மனம் வ்ர்ந்துகின்றேன் |