| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 358 online users. » 0 Member(s) | 356 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,061
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,464
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| மௌனிகாவும் என் மனைவி தான்! |
|
Posted by: vasisutha - 08-31-2004, 08:00 PM - Forum: சினிமா
- Replies (53)
|
 |
<b>மௌனிகாவும் என் மனைவி தான்!
[b]பாலுமகேந்திராவின் ஒப்புதல் வாக்குமூலம்</b>
நாலைந்து வாரங்களுக்கு முன்னால், 'பாலுமகேந்திராவுக்கு மாரடைப்பு' என்ற செய்தியைப் பார்த்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்துபோயிருப்பார்கள். என்ன நடந்தது?
ஜூலை 15_ம் தேதி அதிகாலை, கட்டிலில் இருந்து எழுந்தேன். தரையில் காலை ஊன்றி ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை... பிடுங்கி எறியப்பட்டதுபோல் சுவரில் மோதி அப்படியே விழுந்தேன். என் இடது கால், உடம்பின் கனம் தாங்காமல் துவண்டு சுருண்டது. எழுந்திருக்க முயற்சி செய்தேன். ம்ஹ¨ம்... முடியவில்லை. கை, கால்களை அசைக்கமுடியவில்லை. 'அடடா... என்னவோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. உடனே என் மனைவி அகிலா ஓடிவந்தார். என்உதவியாளர் செந்திலும் உடன்வர, பதினைந்து நிமிஷத்தில் விஜயா மருத்துவமனையில் இருந்தேன். எனக்கு ஏற்பட்டது மாரடைப்பு அல்ல... ஸ்ட்ரோக்! மூளைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் குழாயில் லேசாக அடைப்பு ஏற்பட்டதால் உண்டான ஸ்ட்ரோக்.
அது ஒரு கனாக் காலம் படப்பிடிப்புக்கு தனுஷ் தேதிகளை ஒதுக்கித் தராததால் மன உளைச்சல் ஏற்பட்டு, அதனால் மாரடைப்பு வந்தது என்று வந்த செய்தியில் துளியும் உண்மை கிடையாது. தனுஷ§டன் பணிபுரிவது சந்தோஷமான விஷயம்.
என் மன உளைச்சலுக்கான காரணங்கள் வேறு. எனது ஜூலி கணபதி படம் தேசிய விருதுக்கு அனுப்பப்படவில்லை என்ற செய்தி அறிந்ததும் அதிர்ந்துபோனேன். படப்பெட்டியை வாங்கி போட்டிப் படிவங்களை நிரப்பி, நானே அதை அனுப்பியிருக்க வேண்டும். சரிதாவுக்குக் கிடைத்திருக்கவேண்டிய தேசிய விருது என் கவனக்குறைவு காரணமாகக் கிடைக்காமல் போய்விட்டதே என்று வருத்தமாகிவிட்டது.
அடுத்து, எனது சம்பளப் பாக்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருவதாகச் சொல்லியிருந்த தயாரிப்பாளரால், ஏனோ தரமுடியவில்லை. பாவம், அவருக்கு அவருடைய பிரச்னைகள். அதே நேரத் தில் நான் பணம் தரவேண்டிய ஒருவர், நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கே வந்து பலர் முன்னிலையில் என்னை அவமரியாதையாகப் பேசிச் சென்றார். அதுவும் மனஉளைச்சலுக்கான காரணம். பிறகு, எனது மருத்துவச் செலவுகளை மகன் ஷங்கியும், எனது துணைவி மௌனிகாவும் கவனித்துக் கொண்டார்கள்.
<span style='color:orange'>''மௌனிகா உங்கள் துணைவியா?
ஆமாம். மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. <img src='http://www.vikatan.com/av/2004/sep/05092004/p71.jpg' border='0' alt='user posted image'>
மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை.
ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திபூர்வ மாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு.
சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமா வோடும், இலக்கியத் தோடும் சம்பந்தப் பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான்.
இந்த உறவை ஆரம்பிப் பதற்கு முன், என் அகிலா வைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் | பரிசுத்தவதிகள் | புராணகாலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
மனைவியைத்தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க் காத, மனசால்கூட நினைக்காத ஒரு நல்ல ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அகிலா. என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப் பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும்போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது!
<img src='http://www.vikatan.com/av/2004/sep/05092004/p68.jpg' border='0' alt='user posted image'> அகிலாவுடன்.. மௌனிகாவுடன்..
''இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?''
''காரணம் மௌனியின் பேரன்புதான். 'நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!' என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்ட வளை எப்படி உதற? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். இந்த செவ்வாய்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக் கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.
இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதேசமயம், என்அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!
''மௌனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?''
''ஷங்கி என் சிநேகிதன். என்னை அணுஅணுவாகப் புரிந்தவன். மௌனி மீது கோபப்படவோ அவளை அவமரியாதை செய்யவோ அவனால் இயலாது. அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீரமான ஆண் ஷங்கி. எனக்கும் மௌனிக்குமான உறவை அவன் அங்கீகரிக்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவன் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு இருக்கிறான். என்னை என் பலங்களோடும் பலவீனங்களோடும் நேசிப்பவன் ஷங்கி.'
''மௌனிகாவைத் திருமணம் செய்துகொண்டீர்களா?''
''என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், 'பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு' என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 98|ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன்.
மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்.'
''மருத்துவமனையில் இருந்த நாட்கள் எப்படியிருந்தன?''
என்னையும், என் சினிமாவையும் நேசிக்கிறவர்கள் வந்திருந்தார்கள். பாரதிராஜா, மணிரத்னம், பாலசந்தர், செல்வராகவன், தனுஷ்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மணிரத்னம் எனக்கே தெரியாமல் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
''உங்கள் சிஷ்யன் பாலா வந்திருந்தாராமே?''
'நான் அட்மிட் ஆன முதல் நாளே வந்தாராம் பாலா. இன்டென்சிவ் கேர் ரூமில் இருந்ததால் பார்க்கமுடியவில்லை. மூன்றாவது நாள் மீண்டும் வந்தார். என் கால்களைத் தொட்டு வணங்கினார். என் நெற்றியில் முத்தம் தந்தார். என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என் காதருகில், Ôநீங்க சிங்கம் சார். சீக்கிரமா எழுந்து நடமாட ஆரம்பிச்சிருவீங்கÕ என்றார். நான் கண்ணீரில் கரைந்தேன். வார்த்தைகள் இன்றி நின்ற அந்தக் கணத்தை அப்படியே சொல்ல இயலாது. கடினம். என் அருகிலேயே வைத்து, நான் சினிமா சொல்லிக் கொடுத்து வளர்த்த பிள்ளையல்லவா பாலா!'
''உங்கள் இருவருக்குமான மனபேதங்கள் மறைந்தனவா?''
'Forgive and you shall be forgiven' என்ற இயேசுபிரானின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கையுள்ளவன் நான். பாலா, தன் மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான்தான் Ôமுழுமையாகக் குணம் அடைந்த பிறகு பார்க்கலாம்Õ என்று சொல்லித் தள்ளிப் போட்டிருக்கிறேன். நிஜமாகச் சொன்னால் சரியான காரணம் அதுவல்ல.
ஆசி வாங்க வரும்போது பாலாவுக்குப் பரிசாகத் தர மிக உயர்ந்த துணிமணிகள் எடுக்கவேண்டும், அந்தப் பெண் ணுக்கும் நல்ல பட்டுச்சேலை தரவேண்டும் என்பது என் விருப்பம். அதற்குப் போதிய பணம் இப்போது என்னிடம் இல்லை. பணம் வந்ததும் பாலாவுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்.
என்னைப் போல அல்லாது ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும், நல்ல மனிதனாகவும் பாலா திகழ இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.
என் மகன் பாலா, தமிழுக்கு மூன்று நல்ல படங்களைத் தந்திருப்பதும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக மதிக்கப்படுவதும் என் சினிமா வாழ்வில் நான் சந்தோஷப்படுகிற விஷயம்! </span>
www.vikatan.com
|
|
|
| புஷ் அடித்தார் தேர்தல் பல்டி...! |
|
Posted by: kuruvikal - 08-31-2004, 03:10 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
[b]தீவிரவாதத்தை வெல்ல முடியாது
தீவிரவாதத்தை வெல்லவே முடியாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் புஷ், நேற்று முறைப்படி அக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நியூயார்க்கில் நடந்த இந் நிகழ்ச்சியின்போது புஷ்ஷைக் கண்டித்து போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஆர்பாட்டத்தினரில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் என்பிசி தொலைக்காட்சிக்கு புஷ் அளித்துள்ள பேட்டியில்,
தீவிரவாதத்தை நாம் வெல்லவே முடியாது. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவோரை ஆதரிப்பவர்களை தடுக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இருந்து அமெரிக்கா பின் வாங்கினால் அது அடுத்த தலைமுறையினருக்கு பெரும் கேடுகளை விளைவிக்கும்.
இந்த உலகில் நாம் நமது பலவீனத்தை வெளிக்காட்ட முடியாது. அப்படி வெளிக் காட்டினால் அதை நமது எதிரிகள் தங்கள் வெற்றிக்கு பயன்படுத்திவிடுவார்கள் என்றார்.
புஷ்ஷின் இந்தப் பேச்சையே தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி ஈடுபட்டுள்ளது. அக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜான் எட்வட்ர்ஸ்சும் புஷ்ஷை கடுமையாகத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற ஒன்றை எதற்காக புஷ் ஆரம்பித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், சர்வதேச அளவில் புஷ் நிர்வாகம் அடைந்த தோல்வியின் எதிரொலி தான் அவர் டிவி பேட்டி என்று கூறியுள்ளனர்.
thatstamil.com
|
|
|
| நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? |
|
Posted by: kavithan - 08-31-2004, 08:09 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
<b><span style='font-size:27pt;line-height:100%'>நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? </b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சிலருக்கு ஒன்றுமே பிடிப்பதில்லை ஆனால் யாழ் இணையத்தினை பொறுத்த வரை இங்கு ஏராளமான கவிதைகள் கருத்தாடுபவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த கவிதைகள் உங்களை கவர்கின்றன என அறிய ஒரு ஆவல் அந்த நோகில் தான் இதனை உங்கள் முன் வைக்கின்றேன்.</span>
|
|
|
| கண்ணடிச்சா காதல் வரும் என்றார்கள் ஆனால் இங்கு கண்ணசைத்தா கணன |
|
Posted by: kavithan - 08-31-2004, 07:20 AM - Forum: கணினி
- Replies (2)
|
 |
[b][u]<span style='font-size:30pt;line-height:100%'>கண்ணடிச்சா காதல் வரும் என்றார்கள் ஆனால் இங்கு கண்ணசைத்தா கணனி இயங்கும் என்கிறார்கள்.</span>
<img src='http://www.yarl.com/forum/files/irscomdata.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'> உடல் ஊனமுற்றோருக்கு உதவ வந்துள்ளது ஸ்பெய்ன் தொழில் நுட்பம். கண் அசைவுகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில் நுட்பத்தை Irscom எனும் ஸ்பெய்ன் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இத்தொழில் நுட்பமூலம் கண் அசைவுகளுக்கு ஏற்ப கணனி mouse குறியீடுகள் நகரும். கண் இமைப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பை |கிளிக்| பண்ணலாம். இது கை இயக்கத்தை முற்றாக இழந்தோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
தற்போது ஸ்பெய்ன் மொழி வழக்கத்தில் உள்ள நாடுhளிலும் போச்சுக்களிலும் அறிமுகம் கண்டுள்ள இத்தொழில் நுட்பம் விரைவலை; உலகம் முழுலதும் அறிமுகம் கானும்.</span>
நன்றி
தாயகம் இணையம்
|
|
|
| புரட்சி |
|
Posted by: vasisutha - 08-31-2004, 01:21 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
ஆகஸ்ட் 13&ந் தேதியை நாக்பூர், கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த பெண்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை, ஒரு அசுரனை வேருடன் அழித்த, தீபாவளித் திருநாள் அது. <img src='http://www.vikatan.com/aval/2004/sep/10092004/p5.jpg' border='0' alt='user posted image'>
பத்து வருடங்களாக இந்தப் பகுதியின் அப்பாவி ஏழைப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்த அக்கு யாதவ் என்ற கொடூரனை, பெண்களே ஒன்று சேர்ந்து சூரசம்ஹாரம் செய்திருக்கிறார்கள்.
நாக்பூர், மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாநகரம். இந்தியாவின் மையமான ஊர். ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளையும் இந்நகரத்தை ஆரஞ்சு நகரம் என்பார்கள். இப்போது ஒரு கொலையால் சிவப்பு நகரமாகி சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
பாலியல் பலாத்காரத் துக்கு எதிராக மாபெரும் புரட்சியே செய்திருக்கும் இந்தப் பெண்களைச் சந்திக்க நாக்பூருக்கு பயணமானோம். <img src='http://www.vikatan.com/aval/2004/sep/10092004/p4.jpg' border='0' alt='user posted image'>
சவீதாஜிதேந்தர் லீலாரகுநாத்
பத்திரிகையாளர்களின் படையெடுப்பு, அரசியல்வாதி களின் அணிவகுப்பு என்று பரபரப்பாக இருக்கிறது நாக்பூரின் கஸ்தூரிபா நகர். எங்கு பார்த்தாலும் அந்த சூரசம்ஹாரம் பற்றிய பேச்சுதான்!
ஊருக்குள் நுழைந்ததுமே அக்கு யாதவ் என்ற அரக்கன் பற்றி விரிவாக சொன்னார் உள்ளூர் பெண்மணி ஒருவர்.
அவனுக்கு 32 வயசுதான் ஆகுது. எங்க ஏரியாக்காரன் தான். கொலை பண்றது, கொள்ளையடிக்கிறது, கற்பழிக்கிறது... இதெல்லாம்தான் அவனுக்கு தொழிலே! அதிலும், பெத்தவங்க கண்ணெதிர்ல இளம்பெண்களை நாசம் செய்யறதுல அவனுக்கு வெறியே உண்டு. <img src='http://www.vikatan.com/aval/2004/sep/10092004/p4a.jpg' border='0' alt='user posted image'>
அஞ்சனா பாய் பிங்கி பகீரதா
அவனோட அராஜகத்துக்கு யாராவது முற்றுப்புள்ளி வைக்க மாட்டாங்களானு கவலையோட நாங்க காத்திருந் தப்ப, கொஞ்ச நாள் முன்னாடி ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளோட தாய் முன்னாடியே பலாத்காரம் பண்ணிட் டான். இனிமேலும் காத்திருக்கக் கூடாதுனு ஊரே முடிவு பண்ணிச்சு. நினைச்சமாதிரியே அவனை வதம் பண்ணிட்டோம்... என்றார், சாதித்த திருப்தியோடு.
ஊர் மக்கள் தனக்கு தேதி குறித்துவிட்டார்கள் என்பதை எப்படியோ அறிந்துகொண்ட அக்கு யாதவ், ஒரு சிறிய வழக்கில் வலியப் போய் சிக்கி, சிறைக்குள் பாதுகாப்பாக இருக்க திட்டமிட்டிருக்கிறான். ஆனால், அந்த வழக்கை ஒட்டி அவன் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட, நீதிபதியின் இருக்கைக்கு அருகிலேயே அவனைக் கொன்றுபோட்டது பெண்கள் கூட்டம்!
இவர்களில் அஞ்சனா பாய், லீலா ரகுநாத், பகீரதா பாய், சவீதா ஜிதேந்தர் மற்றும் பிங்கி என்னும் ஐந்து பெண்களை மட்டும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்ய, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தரப்பும் குரல் கொடுத்தன. தேசிய மகளிர் ஆணையத் தலைவி பூர்ணிமா அத்வானி, ''இது தற்காப்புக்கான தாக்குதல். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இத்தகைய கொலையைச் செய்யலாம் என்று சட்டம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டதோடு, மாலையிட்டு திலகமிட்டு அந்தப் பெண்களை வாழ்த்திவிட்டுப் போனார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையாகிவிடும் என்கிற காரணத்தால் இப்போது அந்த ஐந்து பெண்களும் பெயிலில் விடுவிக்கப் பட்டுள்ளனர். ஐவரில் மூவர் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவர் இருபதுகளில் இருக்கும் இளம்பெண்கள்.
திருவிழாவன்று தெய்வத்தை தரிசிக்க முண்டியடிக்கும் கூட்டத்தைப் போல, இந்த ஐவர் தரிசனத்துக்காக மாலையோடு, வீரமுழக்கமிட்டபடி சாரை சாரையாக நிற்கிறது பெண்கள் கூட்டம். லீலா ரகுநாத் மட்டும் முகம் புதைத்து அழுதுகொண்டே இருந்தார். அவரை நெருங்கி நாம் பேச்சு கொடுக்கவும்,
'எல்லாரும் இப்ப வர்றீங்க. போட்டோ எடுக்கறீங்க. டி.வி&யில போடறீங்க. இவ்ளோ நாள் எங்கய்யா போயிருந்தீங்க? எங்க வீட்டுல பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு, அந்த அரக்கனுக்கு பயந்து அணுஅணுவா செத்துகிட்டிருந்தோமே... அன்னிக்கு உதவுறோம்னு யார் வந்தா? இப்ப எதுக்காக வர்றீங்க? வராதீங்க... போங்க' என்று ஆத்திரத்தோடு வெடித்துக் கதறினார்.
''தம்பி, தப்பா நெனைச்சுக்காதீங்க. அந்தளவுக்கு நாங்க வேதனையை அனுபவிச்சுட்டோம்...'' என்றபடி நம் பக்கம் வந்த மூதாட்டி அஞ்சனா பாய், 'அந்தப் பாவிகிட்ட அவ்ளோ பாடுபட்டுட்டோம். இங்க யாருக்கும் புதுசா கல்யாணம் ஆகக்கூடாது. மறுநாளே வந்து பொண்ணைத் தூக்கிட்டுப் போயிடுவான். எம்மருமகள எவ்வளவு கஷ்டப்பட்டு பொத்தி பொத்தி பாதுகாத்தேன்னு எனக்குத்தான் தெரியும்' என்றபடி முந்தானையை வாயில் புதைத்து கேவினார்.
''போதையில வருவான். ஏதாவது ஒரு பொண்ணுமேல கண்ணு வெச்சுட்டான்னா, அவ்ளோதான். அவன் கூப்பிட்டதும் அடம் பண்ணாம போயிட்டு வரணும். மொரண்டு புடிச்சா அந்தக் குடும்பமே ரத்தக் காயம் படணும். பிளேடு காயம்பட்டு ரத்தம் வழிய வீட்டுக்கு வருவாங்க பொம்பளைப் பிள்ளைங்க. 'ஏண்டா இந்தப் பொம்பள பொறப்பு'னு மனசு வெறுத்துப் போயிடும். எத்தனைப் பொண்ணுங்க தற்கொலைக்கு முயற்சி பண்ணுனது தெரியுமா?'' என்று அஞ்சனா பாய் கண்ணீரோடு சொல்லிமுடிக்க, தொடர்ந்தார் சவீதா...
''அவன் ஜெயிலுக்குப் போன நாட்கள்லதான் நாங்க நிம்மதியா இருந்திருக்கோம். ஆனா, எந்த கேஸானாலும் ஒரு மாசத்துக்குள்ள திரும்பி வந்துடுவான். வந்த உடனே ஒடம்பு திமிர் எடுத்து அலைவான்.
போலீஸ்ல புகார் சொன்னாலும் பலனில்லை. அவனுக்கு சலாம் போட்டுட்டு, அவன் கொடுக்கற காச வாங்கிட்டுப் போயிடும். யாரையும் நம்பாம, நாங்களே அவனை தண்டிக்கணும்னு தீர்மானிச்சோம். போட்டுத் தள்ளிட்டோம்...'' & சொல்லும்போதே ஆத்திரத்தில் அவரது நரம்புகள் புடைக்கிறது.
சோகத்துடன் இருந்த பகீரதா பாய், 'நாங்க அஞ்சு பேர் கஷ்டப்பட்டாலும் இனிமே எங்க ஜனங்க நிம்மதியா தூங்குவாங்க. இந்தச் சின்ன புள்ளயும் இதுல மாட்டிக்கிடுச்சேனுதான் வருத்தமா இருக்கு'' என்று 23 வயது பிங்கியைப் பார்த்துக் கண்கலங்கினார்.
ஆனால், பிங்கிக்கு இதில் வருத்தமெல்லாம் இல்லை. ÔÔஎங்களுக்கு நிம்மதி வேணும். அதான் அவனை கொலை செஞ்சோம். அதுவும் எல்லாருமே சேர்ந்துதான் செஞ்சோம். எத்தனை பேரை ஜெயில்ல அடைக்கிறாங்கனு பார்க்கலாம்ÕÕ என்றார் ஆவேசமாக. ÔÔசட்டத்தைக் கையிலெடுப்பதை ஆதரிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?ÕÕ என்று இவர்களை ஆதரிக்கிற ராஷ்ட்ர சேவிகா சமிதியின் துணைத்தலைவர் பிரமீளா மேடேயிடம் கேட்டோம்...
பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பத்து ஆண்டுகளாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அவன் இத்தனை காலம் தப்பித்திருக்கிறான். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. அந்தச் செயலில் நியாயம் இருப்பதால்தான் இவ்வளவு ஆதரவு குவிகிறது. நாங்களும் ஆதரிக்கிறோம். அக்கு யாதவ்கள் இருந்தால் சட்டத்தைக் கையில் எடுப்பது தவிர்க்க முடியாதது என்றார் பிரமீளா மேடே, ஆக்ரோஷம் குறையாமல்!
அப்பாவிகளின் கோபத்தில் எப்போதுமே ஒரு நியாயம் இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு!
<b>இது தவறான முன்னுதாரணம்</b>
நாக்பூர் நகர கமிஷனராக இருப்பவர் சிவானந்தன், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரிடம் பேசினோம்.
நான் இங்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அக்குயாதவ்மீது அதிகாரப் பூர்வமாக 24 வழக்குகள் இருக்கின்றன. விசாரணையில் மேலும் விவரங்கள் தெரிந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் தரப்பில் நடந்த ஒரே தவறு, மூன்றே போலீஸாரோடு இந்தக் கைதியைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோனதுதான். நானூறு பேர் சூழ்ந்துகொண்ட பிறகு அவர்களால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
மற்றபடி, புரட்சி நடந்துவிட்டதாகக் கூறுவதெல்லாம் தவறான முன்னுதாரணமாகி அவரவர் சட்டத்தைக் கையிலெடுப்பதில் கொண்டுபோய் விட்டுவிடும் என்றார்.
VIKATAN.COM
|
|
|
| இப்போதைக்கு ரகசியமாய்.......! |
|
Posted by: tamilini - 08-28-2004, 06:36 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (37)
|
 |
<img src='http://tamilini.yarl.net/archives/BeautifulRedRose.gif' border='0' alt='user posted image'>
<b>இப்போதைக்கு ரகசியமாய்.......!</b>
ரகசியமாய் நம் உறவு
ரசனையே இல்லாத வாழ்க்கையில்...
எனக்கு ஆதாரம் நீ
உனக்கு நான்...
பெய்யாகி போன பந்தங்களை...
உன்னால் தான் உணர்கிறேன்..
எனக்கு எது நடந்தாலும்...
என்னோடு தான் இதுவரை
துன்பங்கள் தூங்கின....
தூர தேசம் வாழும்.
ரத்த சொந்தங்கள்..
துன்பத்தில் துடிக்க விரும்பாது.
நெஞ்சுக்குள்ளே அழுது...
கண்ணீருடன் தான் உறங்கினேன்..
கண்ணாக என்னை காத்த
கண்கள் நான்கும்...
கண்ணீர் வடிப்பது
தெரிந்தும் தெரியாதவளாய்..
அன்பாய் படம் அனுப்பு என்றுவிட்டு.....
நெஞ்சுவிக்கி வார்த்தையின்றி
தவித்து நிக்கும் சகோதரங்கள்...
இதனை நினைத்து தினம் வருந்தியும்
வெளியே சிரித்து..
தம்பி தங்கையுடன் பிறர்
இன்பமாய் இருக்க கண்டு....
நான் இழந்ததை எண்ணி
பலதடவை வருந்தியிருக்கிறேன்....
இது யாவும்
இதுவரை யாருக்கும் தெரியாது...
என் கண்ணீரை தவிர
இன்று முற்றிலும் மாற்றம்...
நெஞச்சுக்குள் தங்கி நிக்க
எதுவும் இல்லை...
பஞ்சியில் பட்டினி முதல்....
பள்ளிப் பகிடி வரை
பலதும் உன்னுடன்...
இத்தனைக்கும் எமக்குள்
என்ன இருக்கு
எனக்கு தெரியாது
எது இருந்தாலும்
எனக்கு இந்த உறவு தேவை..
இப்போதைக்கு ரகசியமாய்.......!
|
|
|
| சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா |
|
Posted by: kavithan - 08-27-2004, 07:16 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா</b></span>
[i]<span style='color:green'><b>ஓகஸ்ட் 6 ஆம் திகதி 1945 ஆம் வருடம்... ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதுடன் - சர்வதேசப் பொலிஸ்காரன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்கா குறித்து ஒரு கவிதை இது பற்றி உங்கள் கருத்து </b>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/00910460_132kavithan.jpg' border='0' alt='user posted image'>
[u][size=18]<b>
சர்வதேச பயங்கரவாதி.... அமெரிக்கா</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>போலியாக வேடமிட்டு
போக்கிரியாக உலாவி
போர்புரிந்து
போசாக்கற்ற போலியோவை உருவாக்கும்
போலீஸ்கார வர்க்கமே.(சர்வதேச போலீஸ்காரன் அமெரிக்கா)
சர்வதேச உலகில்
சாத்..! சாத்..! நான் தான்
சத்தியவான் என்று
சாக்கு போக்கு சொல்லி
சாதாரண நாடுகளின் மேல்
சரித்து கொட்டுகிறார்கள் குண்டுகளை
கிட்லர் எதிரி யூதன் - அதனால்
கிருமினல் ஆனவன்
கிட்லர்...!
கிருமியாய் இருப்பவன்
அமெரிக்கன்....! - அதனால்
கிடங்குகளில் தேடுவதோ
கிருமிநாசினி.
அணுகுண்டுகளை
அடுத்தடுத்து ஹிரோஷிமா நாகஷாகியில்
ஆக்ரோசமாய் வீசி
அப்பாவி மக்களை கொன்று குவித்த
அசுரர் கூட்டம்...
அமெரிக்கன் கூட்டம்
காலிழந்து, கையிழந்து
காலம் எல்லாம் வாழ்விழந்து
கருகாகிப்போனது
எத்தனை உறவுகள்...!
அந்த அணுகுண்டு வீச்சில்.
ஊர் இழந்து, உறவிழந்து,
உருக்குலைந்து போயிருக்கும்
எத்தனை நாடுகள்...!
அவை அத்தனைக்கும் காரணம்
அந்த அமெரிக்கன் தான்
உலகின் உளவாளி
உலக நாடுகளின் பிரிவாளி
உலக மக்களின் கொலையாளி
உண்மையில் அவன் ஒரு சுயநனலவாதி
உண்மையில் அவன் ஒரு பயங்கரவாதி</span>
நன்றி
கவிதன்
27/08/2004
|
|
|
| எண் சோதிடம் |
|
Posted by: shanmuhi - 08-27-2004, 06:44 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (121)
|
 |
பிறப்புக்கும் பெயருக்கும் எண்ணுக்கும் உறவே இல்லை!
(நக்கீரன் - கனடா)
அடுத்ததாக ஒருவர் பிறந்தபோது பதிவு செய்த பெயர் எண்ணாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் எந்த எழுத்துக்களின் பெறுபேற்றைக் குறிக்கிறது என்பது கீழே தரப்பட்டுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9
A B C D E F G H I
J K L M N O P Q R
S T U V W X Y Z
இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள்.
1 - ஞாயிறு, 2 - கேது, 3 - குரு, 4 - இராகு, 5 - புதன், 6 - சுக்கிரன் (வெள்ளி )
7 - சந்திரன், 8 - சனி, 9 - செவ்வாய்
இப்போது எண்சோதிட அடிப்படையில் ஒருவரது பிறந்த திகதியை வைத்து எண்ணைக் கணித்துப் பார்ப்போம்.
ஒருவர் டிசெம்பர் 14, 1968 இல் பிறந்ததாக வைத்துக்கொள்வோம். மாதம் 3 (1சக 2) நாள் 5 (1சக 4) மற்றும் ஆண்டு 6 (1சக 9 சக 6 சக 8 சமன் 24, மீண்டும் 2 சக 4 சமன் 6).
முதல் அறைகூவல் (challenge) பிறந்த மாதத்துக்கும் பிறந்த நாளுக்கும் உள்ள வேற்றுமையைக் காணல். இது 5 சய 3 சமன் 2.
இரண்டாவது அறைகூவல் பிறந்த நாள் பிறந்த ஆண்டு இரண்டுக்கும் இடையில் உள்ள வேற்றுமையைக் காணல். இது 6 சய 5 சமன் 1.
இறுதி அறைகூவல் மேற்காட்டிய முதல் அறைகூவலுக்கும் இரண்டாம் அறைகூவலுக்கும் இடையில் உள்ள வேற்றுமை. இது 2 சய 1 சமன் 1.
முதல் அறைகூவல் ஒருவரது முதல்ப்;பாதி வாழ்க்கைப் பாதையை முடிவு செய்கிறது. இரண்டாவது அறைகூவல் மீதி வாழ்க்கைப் பாதையை முடிவு செய்கிறது. இறுதி அறைகூவல் முழு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவீனத்தையும் சிக்கல்களையும் காட்டுகிறது.
இவ்வாறு எண்களுக்கு ஆங்கில அகர வரிசையை ஒதுக்குவதும் கோள்களை ஒதுக்குவதும் அவற்றுக்கு குணாம்சங்கள் கற்பிக்கப்படுவதும் எண் சோதிடர்களால் விதிக்கட்டுப்பாடின்றி செய்யப்படுகின்றன என்பது நன்கு புலனாகும். அடிப்படை பிழையென்றால் அதன் கீழ் எடுக்கப்படும் முடிவுகளும் பிழையாகவே இருக்கும்.
சிலர் பெயரை விட்டு விட்டு பிறந்த திகதியை வைத்தே பலன் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பிறந்த நாளை வைத்தே பலன் சொல்லிவிடுகிறார்கள்! இதனால்தான் இன்று யார் மீது நீங்கள் தடுக்கி வீழ்ந்தாலும் அவர் ஒரு எண் சோதிடராக இருக்கிற வாய்ப்பு இருக்கிறது!
சாதக சோதிடம் போலவே எண் சோதிடத்திலும் கோட்பாடு பற்றி ஒத்த கருத்தில்லை. சிலர் 1-9 எண்களை வைத்துப் பலன் சொல்கிறார்கள். சிலர் 1-8 எண்களை வைத்துப் பலன் சொல்கிறார்கள்.
எண் சோதிடத்தில் ஒருவர் பிறந்தவுடன் வைத்த பெயரே முக்கியமானது. அதுதான் அவரது தலைவிதியை தீர்மானிக்கிறது. இடையில் அவர் பெயரை மாற்றினால் அது அவரது தற்போதைய ஆளுமையை நிர்ணயிக்கிறதாம்.
ஆனால் இதுபற்றி நடத்திய ஆய்வுகள் இந்த நம்பிக்கைகளை மெய்ப்பிக்கவில்லை.
எண் சோதிடர்கள் இப்படி பிறந்த திகதியையும் பெயரையும் கூட்டி வருகிற எண் அலையதிர்வுகளை (vibrations)எழுப்புவதாகச் சொல்கிறார்கள்.
எண்களுக்கு அலையதிர்வுகள் உண்டா? எண்கள் தெய்வ சக்தியின் வெளிப்பாடா? இன்ன எண்ணுக்கு இன்ன பலன் என்று யார் வகுத்தார்கள்? என்ன அடிப்படையில் வகுத்தார்கள்?
இந்தக் கேள்விகளுக்கு எண் சோதிடர்கள் சொல்லும் பதில் 'இந்த எண்சாத்திரம் மாய மந்திரம் சார்ந்த ஒரு தெய்வீகக் கலை. நாங்கள் சொல்லும் பலன் சரியா பிழையா என்று ஒருமுறை சோதித்துப் பாருங்கள்" அப்போது உண்மை தெரியும் என்கிறார்கள்! ஆனால் வேறு சிலர் எண் சோதிடம் அறிவியல் அடிப்படையில் அமைந்த கலை என்கிறார்கள்!
எண்களை வைத்துக் கொண்டு ஒருவரது குணம், நடை, திறமை, வாழ்க்கையின் நோக்கம், துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த நகரத்தில் எந்த வீட்டில் குடியிருக்க வேண்டும், எப்போது நிலபுலம் வாங்க வேண்டும், எப்போது முதலீடு செய்ய வேண்டும், பயணம் செய்வதற்குரிய சிறந்த நாள் எது, புது வாணிகம் எப்போது தொடங்க வேண்டும், எப்போது அறுவைச் சிகிட்சையை வைத்துக் கொள்ளலாம் என்பதை எல்லாம் தங்களால் கணித்துக் கூற முடியும் என்கிறார்கள்.
சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடிக்குள் என்பது போல உலகத்தில் இன்று வாழும் 102 கோடி மக்களை 9 எண்களில் எண்சோதிடர்கள் அடக்கி விடுகிறார்கள். இதனால் அண்ணளவாக ஒரே எண்ணில் உள்ள 11 கோடி மக்களது விதி ஒரேமாதிரி இருக்க வேண்டும்! அப்படி இருக்கிறதா? இருக்க முடியுமா? அது சாத்தியமா?
எண் சோதிடர்கள் அரபிக் எண்களைப் பயன்படுத்துவதை ஓரளவு நியாயப்படுத்தலாம். அது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆங்கில அரிச்சுவடியை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? ஆங்கில மொழி பேசுவோர் தொகையைவிட இந்தி, சீன மொழி பேசுவோர் தொகை உலகில் அதிகம் ஆயிற்றே?
வேடிக்கை என்னவென்றால் இந்திய எண் சோதிடர்கள் கூட ஆங்கில அரிச்சுவடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது எண் சாத்திரம் மிக மிக அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
எண்களைப் பற்றிய மூடநம்பிக்கை எல்லாப் பண்பாட்டிலும் இருந்து வந்துள்ளது. இன்றும் இருக்கிறது.
இரண்டு (2) சீன மொழியில் (Cantonese) 'சுலபம்" என்பது போல் ஒலிக்கிறது. அதே நேரம் 24 எண் 'சுலபமாக இறத்தல்" என்பது போல் ஒலிக்கிறது.
நான்கு (4) சீன யப்பானிய பண்பாட்டில் போகூழ் (unlucky) எண்ணாகக் கருதப்படுகிறது. காரணம் அந்த எண்ணை ஒலிக்கும்போது சாவு என்ற ஒலிபோல் ஒலிக்கிறது. எனவே சீனர் 4 எண் வரும் வீட்டை வாங்குவதில்லை. மாறாக தமிழர் பண்பாட்டில் 4 பற்றிய பயம் இல்லை.
ஏழு (7) பல பண்பாட்டில் போகூழ் எண்ணாகவே கருதப்படுகிறது. ஆனால் தமிழரிடையே இந்த எண் தீமையான எண்ணாகக் கருதப்படுகிறது. ஏழில் செவ்வாய் தோசமாக எண்ணப்படுகிறது. ஏழரைச் சனியன் ஒருவரை அலைக்கும் எனக் கருதப்படுகிறது.
எட்டு (8) சீனர் யப்பானியர் இருபாலாராலும் ஆகூழ் (lucky )எண்ணாக கருதப்படுகிறது. காரணம் அதன் ஒலிப்பு வளமை என்ற ஒலிப்பை போல் இருக்கிறது. ஆனால் தமிழரிடையே எட்டு கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. எட்டில் சனி மரணத்தைக் குறிப்பதாக சோதிடம் சொல்கிறது. கனடாவில் வீடு வாங்கும் தமிழர்கள் எட்டு வரும் வீடுகளை வாங்குவதில்லை. ஆனால் சீனர் அதனையே விரும்பி வாங்குகிறார்கள்.
பதின்மூன்று (13) மேற்குலக பண்பாட்டில் அச்சத்தை ஊட்டும் எண்ணாகக் கொள்ளப்படுகிறது. தொடர்மாடி வீடுகளைக் கட்டும்போது 12வது மாடிக்கு அடுத்த மாடியை 14வது மாடி என்று எழுதி வைத்து விடுகிறார்கள். யேசுநாதரின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட 13 சீடர்களில் ஒருவர் யேசுவை உரோம ஆளுநருக்குக் காட்டிக் கொடுத்தவன் என்பதுதான் இந்த அச்சத்துக்குக் காணரம். ஆனால் 13 எண் சீனர்களது மொழியில் 'வாழ்வு நிச்சயம்" என ஒலிப்பதால் அது நல்ல எண்ணாகக் கருதப்படுகிறது.
பதினேழு (17) இலத்தீன் மொழியில் VIXI என்று எழுதும் போது அது 'நான் வாழ்ந்து முடித்து விட்டேன்" (I have lived')என்ற பொருளைத் தருகிறது. அதாவது இறப்பைக் குறிக்கிறது. எனவே இத்தாலி நாட்டில் 17 எண் போகூழாகக் கருதப்படுகிறது.
666 மிருகத்தின் எண் எனச் சொல்லப்படுகிறது.
எண் 9413 சீன மொழியில் 'தப்பி வாழும் வாய்ப்பு மிகவும் குறைவு" (slim chance of survival) மற்றும் 'ஒன்பது பேர் இறக்கிறார்கள் ஒருவர் மட்டும் வாழ்கிறார்" என்ற பழமொழிகளைக் குறிப்பதால் அது போகூழாகக் கருதப்படுகிறது!
இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு எண் நல்லதா கெட்டதா நன்மையா தீமையா என்பது மனிதரது மனதைப் பொறுத்தது. எண் பாபம். கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள், வீடுகள் போல அதற்கு ஒன்றும் தெரியாது!
சாதகத்தைக் கணிக்கும் சோதிடனாவது ஒருவன் பிறந்த இடம், நாள், நேரம் இவற்றை வைத்து அந்தக் கணத்தில் விண்ணில் கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் நின்ற இருக்கையின் அடிப்படையில் சாதகத்தை எழுதுகிறான். கையால் கணித்து எழுதுவதென்றால் ஒரு நாள் பிடிக்கும்! ஆனால் எண்சோதிடத்தில் பலனைக் கணித்துச் சொல்ல சில மணித்துளிகள் போதும்!
பிறந்த திகதியை எடுத்துக் கொண்டால் எதற்காக கிறித்தவ ஆண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்? கிறித்தவ ஆண்டை விட கலியுக ஆண்டு (கிமு3102) பவுத்த ஆண்டு (கிமு 544) விக்கிரமாதித்த ஆண்டு (கிமு 57) திருவள்ளுவர் ஆண்டு (கிமு 31) சாலிவாகன ஆண்டு (கிபி 78) இஸ்மாலிய (கிஜிரி) ஆண்டு (கிபி 622) கொல்லம் ஆண்டு (கிபி 825) இவற்றை ஏன் பயன்படுத்தக் கூடாது?
இந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது. காரணம் அவற்றுக்கான பதில் எண் சோதிடர்களிடம் இல்லை. அவர்கள் வெறுமனே தாங்கள் சொல்வதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
கிறித்தவ நாட் காட்டியை எடுத்துக் கொண்டால் கூட அது தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. கிமு 1 அடுத்து கிபி 1 என கணிக்கப்பட்டதால் ஒரு ஆண்டு கூடுதலாக கணக்கிடப்பட்டுவிட்டது. யேசுநாதர் பிறந்த ஆண்டுத் தொடக்கமும் ஒரு ஊகம்தான்.
கிபி முதல் நூற்றாண்டு 1-100 வரை, இரண்டாம் நூற்றாண்டு 101-200 வரை. முதல் புத்தாயிரம் 1-1000 வரை. இரண்டாவது புத்தாயிரம் 1001 - 2000 வரை. இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டு 2000 என எண்ணப்பட்டது. 2001 தான் மூன்றாவது புத்தாயிரத்தின் முதல் ஆண்டு. ஆனால் உலகம் 2001 ஆம் ஆண்டுக்கு காத்திராது 2000 ஆம் ஆண்டையே மூன்றாவது புத்தாயிரம் ஆகக் கொண்டாடியது! இந்தக் குழப்பத்திற்குக் காரணம் கிபி 976 வரை பாழி (zero) அய்ரோப்பாவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான். நடப்பு ஆண்டு 2004 க்குப் பதில் 2003 என்று இருக்க வேண்டும்!
இது மட்டுமல்ல. கிறித்தவ நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தி அமைக்கப்பட்டு வந்திருக்கிறது.
போப் கிறெகோறி (Pope Gregory XIII) 1582இல் யுூலியன் நாட்காட்டியை திருத்தி அமைத்தார். காரணம் யுூலியர் சீசரால் உருவாக்கப்பட்ட நாட்காட்டி ஒரு ஆண்டு என்பது 365.2425 நாட்கள் அடங்கிய காலப் பகுதி எனக் கணிக்கப்பட்டு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை (leap year) பெப்ரவரியில் ஒரு நாள் கூட்டப் பட்டது. ஆனால் அப்படி செய்த போது ஆண்டொன்றுக்கு 11 நிமிடம் 14 வினாடி கூடுதலாகக் கணக்கிடப்பட்டு விட்டது.
இந்தத் தவறைத் திருத்த 1582 இல் போப் கிறெகோறி யுூலியன் நாட்காட்டியில் இருந்து 10 நாட்கள் குறைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். அதற்கு அமைய 1582 ஒக்தோபர் 4 க்கு அடுத்த நாள் ஒக்தோபர் 15 எனக் கொள்ளப்பட்டது!
எனவே காலத்துக்கு காலம் மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் வந்த நாட்காட்டியின் அடிப்படையில் எண்கணித சோதிடர்கள் பலன் கூறுவது பகுத்தறிவுக்கு முரணானது.
எண் சோதிடர்கள் வௌ;வேறு எண்முறை (9,8) வௌ;வேறு எழுத்துமுறை (ஆங்கிலம், ஹீப்புறு) பயன்படுத்துவதால் அவை வௌ;வேறு முடிவுகளைத் தருகின்றன.
எண்களைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் ஒரே மாதிரியான விளக்கம் இல்லை. முதலாம் எண்காரர் மிகவும் செல்வாக்கானவர் எனவும் பேரளவு ஆளுமை உடையவர்; என்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் 4 எண்காரர் 'தோல்வி, வறுமை மற்றும் துயர் நிறைந்தவர்களாக இருப்பர்" எனச் சொல்லப்படுகிறது.
எனவே எண் சோதிடரின் பலன்கள் எண்சோதிட முறையைப் பொறுத்திருக்கிறதே ஒழிய எண்களைப் பொறுத்தல்ல என்பது எளிதில் பெறப்படும். இதற்கு மேல் எண் சோதிடத்தைப் பற்றி எழுதுவது நேர மினக்கேடு வேலை மினக்கேடு என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நன்றி :தமிழ்நாதம்
<span style='font-size:25pt;line-height:100%'><b>எண்சோதிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....? ? ?</b></span>
|
|
|
|