Yarl Forum
எண் சோதிடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: எண் சோதிடம் (/showthread.php?tid=6759)

Pages: 1 2 3 4 5 6 7


எண் சோதிடம் - shanmuhi - 08-27-2004

பிறப்புக்கும் பெயருக்கும் எண்ணுக்கும் உறவே இல்லை!
(நக்கீரன் - கனடா)


அடுத்ததாக ஒருவர் பிறந்தபோது பதிவு செய்த பெயர் எண்ணாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் எந்த எழுத்துக்களின் பெறுபேற்றைக் குறிக்கிறது என்பது கீழே தரப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9

A B C D E F G H I
J K L M N O P Q R
S T U V W X Y Z


இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள்.

1 - ஞாயிறு, 2 - கேது, 3 - குரு, 4 - இராகு, 5 - புதன், 6 - சுக்கிரன் (வெள்ளி )
7 - சந்திரன், 8 - சனி, 9 - செவ்வாய்

இப்போது எண்சோதிட அடிப்படையில் ஒருவரது பிறந்த திகதியை வைத்து எண்ணைக் கணித்துப் பார்ப்போம்.

ஒருவர் டிசெம்பர் 14, 1968 இல் பிறந்ததாக வைத்துக்கொள்வோம். மாதம் 3 (1சக 2) நாள் 5 (1சக 4) மற்றும் ஆண்டு 6 (1சக 9 சக 6 சக 8 சமன் 24, மீண்டும் 2 சக 4 சமன் 6).

முதல் அறைகூவல் (challenge) பிறந்த மாதத்துக்கும் பிறந்த நாளுக்கும் உள்ள வேற்றுமையைக் காணல். இது 5 சய 3 சமன் 2.

இரண்டாவது அறைகூவல் பிறந்த நாள் பிறந்த ஆண்டு இரண்டுக்கும் இடையில் உள்ள வேற்றுமையைக் காணல். இது 6 சய 5 சமன் 1.

இறுதி அறைகூவல் மேற்காட்டிய முதல் அறைகூவலுக்கும் இரண்டாம் அறைகூவலுக்கும் இடையில் உள்ள வேற்றுமை. இது 2 சய 1 சமன் 1.

முதல் அறைகூவல் ஒருவரது முதல்ப்;பாதி வாழ்க்கைப் பாதையை முடிவு செய்கிறது. இரண்டாவது அறைகூவல் மீதி வாழ்க்கைப் பாதையை முடிவு செய்கிறது. இறுதி அறைகூவல் முழு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவீனத்தையும் சிக்கல்களையும் காட்டுகிறது.

இவ்வாறு எண்களுக்கு ஆங்கில அகர வரிசையை ஒதுக்குவதும் கோள்களை ஒதுக்குவதும் அவற்றுக்கு குணாம்சங்கள் கற்பிக்கப்படுவதும் எண் சோதிடர்களால் விதிக்கட்டுப்பாடின்றி செய்யப்படுகின்றன என்பது நன்கு புலனாகும். அடிப்படை பிழையென்றால் அதன் கீழ் எடுக்கப்படும் முடிவுகளும் பிழையாகவே இருக்கும்.

சிலர் பெயரை விட்டு விட்டு பிறந்த திகதியை வைத்தே பலன் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பிறந்த நாளை வைத்தே பலன் சொல்லிவிடுகிறார்கள்! இதனால்தான் இன்று யார் மீது நீங்கள் தடுக்கி வீழ்ந்தாலும் அவர் ஒரு எண் சோதிடராக இருக்கிற வாய்ப்பு இருக்கிறது!

சாதக சோதிடம் போலவே எண் சோதிடத்திலும் கோட்பாடு பற்றி ஒத்த கருத்தில்லை. சிலர் 1-9 எண்களை வைத்துப் பலன் சொல்கிறார்கள். சிலர் 1-8 எண்களை வைத்துப் பலன் சொல்கிறார்கள்.

எண் சோதிடத்தில் ஒருவர் பிறந்தவுடன் வைத்த பெயரே முக்கியமானது. அதுதான் அவரது தலைவிதியை தீர்மானிக்கிறது. இடையில் அவர் பெயரை மாற்றினால் அது அவரது தற்போதைய ஆளுமையை நிர்ணயிக்கிறதாம்.

ஆனால் இதுபற்றி நடத்திய ஆய்வுகள் இந்த நம்பிக்கைகளை மெய்ப்பிக்கவில்லை.

எண் சோதிடர்கள் இப்படி பிறந்த திகதியையும் பெயரையும் கூட்டி வருகிற எண் அலையதிர்வுகளை (vibrations)எழுப்புவதாகச் சொல்கிறார்கள்.

எண்களுக்கு அலையதிர்வுகள் உண்டா? எண்கள் தெய்வ சக்தியின் வெளிப்பாடா? இன்ன எண்ணுக்கு இன்ன பலன் என்று யார் வகுத்தார்கள்? என்ன அடிப்படையில் வகுத்தார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு எண் சோதிடர்கள் சொல்லும் பதில் 'இந்த எண்சாத்திரம் மாய மந்திரம் சார்ந்த ஒரு தெய்வீகக் கலை. நாங்கள் சொல்லும் பலன் சரியா பிழையா என்று ஒருமுறை சோதித்துப் பாருங்கள்" அப்போது உண்மை தெரியும் என்கிறார்கள்! ஆனால் வேறு சிலர் எண் சோதிடம் அறிவியல் அடிப்படையில் அமைந்த கலை என்கிறார்கள்!

எண்களை வைத்துக் கொண்டு ஒருவரது குணம், நடை, திறமை, வாழ்க்கையின் நோக்கம், துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த நகரத்தில் எந்த வீட்டில் குடியிருக்க வேண்டும், எப்போது நிலபுலம் வாங்க வேண்டும், எப்போது முதலீடு செய்ய வேண்டும், பயணம் செய்வதற்குரிய சிறந்த நாள் எது, புது வாணிகம் எப்போது தொடங்க வேண்டும், எப்போது அறுவைச் சிகிட்சையை வைத்துக் கொள்ளலாம் என்பதை எல்லாம் தங்களால் கணித்துக் கூற முடியும் என்கிறார்கள்.

சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடிக்குள் என்பது போல உலகத்தில் இன்று வாழும் 102 கோடி மக்களை 9 எண்களில் எண்சோதிடர்கள் அடக்கி விடுகிறார்கள். இதனால் அண்ணளவாக ஒரே எண்ணில் உள்ள 11 கோடி மக்களது விதி ஒரேமாதிரி இருக்க வேண்டும்! அப்படி இருக்கிறதா? இருக்க முடியுமா? அது சாத்தியமா?

எண் சோதிடர்கள் அரபிக் எண்களைப் பயன்படுத்துவதை ஓரளவு நியாயப்படுத்தலாம். அது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆங்கில அரிச்சுவடியை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? ஆங்கில மொழி பேசுவோர் தொகையைவிட இந்தி, சீன மொழி பேசுவோர் தொகை உலகில் அதிகம் ஆயிற்றே?

வேடிக்கை என்னவென்றால் இந்திய எண் சோதிடர்கள் கூட ஆங்கில அரிச்சுவடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது எண் சாத்திரம் மிக மிக அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

எண்களைப் பற்றிய மூடநம்பிக்கை எல்லாப் பண்பாட்டிலும் இருந்து வந்துள்ளது. இன்றும் இருக்கிறது.

இரண்டு (2) சீன மொழியில் (Cantonese) 'சுலபம்" என்பது போல் ஒலிக்கிறது. அதே நேரம் 24 எண் 'சுலபமாக இறத்தல்" என்பது போல் ஒலிக்கிறது.

நான்கு (4) சீன யப்பானிய பண்பாட்டில் போகூழ் (unlucky) எண்ணாகக் கருதப்படுகிறது. காரணம் அந்த எண்ணை ஒலிக்கும்போது சாவு என்ற ஒலிபோல் ஒலிக்கிறது. எனவே சீனர் 4 எண் வரும் வீட்டை வாங்குவதில்லை. மாறாக தமிழர் பண்பாட்டில் 4 பற்றிய பயம் இல்லை.

ஏழு (7) பல பண்பாட்டில் போகூழ் எண்ணாகவே கருதப்படுகிறது. ஆனால் தமிழரிடையே இந்த எண் தீமையான எண்ணாகக் கருதப்படுகிறது. ஏழில் செவ்வாய் தோசமாக எண்ணப்படுகிறது. ஏழரைச் சனியன் ஒருவரை அலைக்கும் எனக் கருதப்படுகிறது.

எட்டு (8) சீனர் யப்பானியர் இருபாலாராலும் ஆகூழ் (lucky )எண்ணாக கருதப்படுகிறது. காரணம் அதன் ஒலிப்பு வளமை என்ற ஒலிப்பை போல் இருக்கிறது. ஆனால் தமிழரிடையே எட்டு கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. எட்டில் சனி மரணத்தைக் குறிப்பதாக சோதிடம் சொல்கிறது. கனடாவில் வீடு வாங்கும் தமிழர்கள் எட்டு வரும் வீடுகளை வாங்குவதில்லை. ஆனால் சீனர் அதனையே விரும்பி வாங்குகிறார்கள்.

பதின்மூன்று (13) மேற்குலக பண்பாட்டில் அச்சத்தை ஊட்டும் எண்ணாகக் கொள்ளப்படுகிறது. தொடர்மாடி வீடுகளைக் கட்டும்போது 12வது மாடிக்கு அடுத்த மாடியை 14வது மாடி என்று எழுதி வைத்து விடுகிறார்கள். யேசுநாதரின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட 13 சீடர்களில் ஒருவர் யேசுவை உரோம ஆளுநருக்குக் காட்டிக் கொடுத்தவன் என்பதுதான் இந்த அச்சத்துக்குக் காணரம். ஆனால் 13 எண் சீனர்களது மொழியில் 'வாழ்வு நிச்சயம்" என ஒலிப்பதால் அது நல்ல எண்ணாகக் கருதப்படுகிறது.

பதினேழு (17) இலத்தீன் மொழியில் VIXI என்று எழுதும் போது அது 'நான் வாழ்ந்து முடித்து விட்டேன்" (I have lived')என்ற பொருளைத் தருகிறது. அதாவது இறப்பைக் குறிக்கிறது. எனவே இத்தாலி நாட்டில் 17 எண் போகூழாகக் கருதப்படுகிறது.

666 மிருகத்தின் எண் எனச் சொல்லப்படுகிறது.

எண் 9413 சீன மொழியில் 'தப்பி வாழும் வாய்ப்பு மிகவும் குறைவு" (slim chance of survival) மற்றும் 'ஒன்பது பேர் இறக்கிறார்கள் ஒருவர் மட்டும் வாழ்கிறார்" என்ற பழமொழிகளைக் குறிப்பதால் அது போகூழாகக் கருதப்படுகிறது!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு எண் நல்லதா கெட்டதா நன்மையா தீமையா என்பது மனிதரது மனதைப் பொறுத்தது. எண் பாபம். கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள், வீடுகள் போல அதற்கு ஒன்றும் தெரியாது!

சாதகத்தைக் கணிக்கும் சோதிடனாவது ஒருவன் பிறந்த இடம், நாள், நேரம் இவற்றை வைத்து அந்தக் கணத்தில் விண்ணில் கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் நின்ற இருக்கையின் அடிப்படையில் சாதகத்தை எழுதுகிறான். கையால் கணித்து எழுதுவதென்றால் ஒரு நாள் பிடிக்கும்! ஆனால் எண்சோதிடத்தில் பலனைக் கணித்துச் சொல்ல சில மணித்துளிகள் போதும்!

பிறந்த திகதியை எடுத்துக் கொண்டால் எதற்காக கிறித்தவ ஆண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்? கிறித்தவ ஆண்டை விட கலியுக ஆண்டு (கிமு3102) பவுத்த ஆண்டு (கிமு 544) விக்கிரமாதித்த ஆண்டு (கிமு 57) திருவள்ளுவர் ஆண்டு (கிமு 31) சாலிவாகன ஆண்டு (கிபி 78) இஸ்மாலிய (கிஜிரி) ஆண்டு (கிபி 622) கொல்லம் ஆண்டு (கிபி 825) இவற்றை ஏன் பயன்படுத்தக் கூடாது?

இந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது. காரணம் அவற்றுக்கான பதில் எண் சோதிடர்களிடம் இல்லை. அவர்கள் வெறுமனே தாங்கள் சொல்வதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

கிறித்தவ நாட் காட்டியை எடுத்துக் கொண்டால் கூட அது தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. கிமு 1 அடுத்து கிபி 1 என கணிக்கப்பட்டதால் ஒரு ஆண்டு கூடுதலாக கணக்கிடப்பட்டுவிட்டது. யேசுநாதர் பிறந்த ஆண்டுத் தொடக்கமும் ஒரு ஊகம்தான்.

கிபி முதல் நூற்றாண்டு 1-100 வரை, இரண்டாம் நூற்றாண்டு 101-200 வரை. முதல் புத்தாயிரம் 1-1000 வரை. இரண்டாவது புத்தாயிரம் 1001 - 2000 வரை. இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டு 2000 என எண்ணப்பட்டது. 2001 தான் மூன்றாவது புத்தாயிரத்தின் முதல் ஆண்டு. ஆனால் உலகம் 2001 ஆம் ஆண்டுக்கு காத்திராது 2000 ஆம் ஆண்டையே மூன்றாவது புத்தாயிரம் ஆகக் கொண்டாடியது! இந்தக் குழப்பத்திற்குக் காரணம் கிபி 976 வரை பாழி (zero) அய்ரோப்பாவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான். நடப்பு ஆண்டு 2004 க்குப் பதில் 2003 என்று இருக்க வேண்டும்!

இது மட்டுமல்ல. கிறித்தவ நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தி அமைக்கப்பட்டு வந்திருக்கிறது.

போப் கிறெகோறி (Pope Gregory XIII) 1582இல் யுூலியன் நாட்காட்டியை திருத்தி அமைத்தார். காரணம் யுூலியர் சீசரால் உருவாக்கப்பட்ட நாட்காட்டி ஒரு ஆண்டு என்பது 365.2425 நாட்கள் அடங்கிய காலப் பகுதி எனக் கணிக்கப்பட்டு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை (leap year) பெப்ரவரியில் ஒரு நாள் கூட்டப் பட்டது. ஆனால் அப்படி செய்த போது ஆண்டொன்றுக்கு 11 நிமிடம் 14 வினாடி கூடுதலாகக் கணக்கிடப்பட்டு விட்டது.

இந்தத் தவறைத் திருத்த 1582 இல் போப் கிறெகோறி யுூலியன் நாட்காட்டியில் இருந்து 10 நாட்கள் குறைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். அதற்கு அமைய 1582 ஒக்தோபர் 4 க்கு அடுத்த நாள் ஒக்தோபர் 15 எனக் கொள்ளப்பட்டது!

எனவே காலத்துக்கு காலம் மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் வந்த நாட்காட்டியின் அடிப்படையில் எண்கணித சோதிடர்கள் பலன் கூறுவது பகுத்தறிவுக்கு முரணானது.


எண் சோதிடர்கள் வௌ;வேறு எண்முறை (9,8) வௌ;வேறு எழுத்துமுறை (ஆங்கிலம், ஹீப்புறு) பயன்படுத்துவதால் அவை வௌ;வேறு முடிவுகளைத் தருகின்றன.

எண்களைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் ஒரே மாதிரியான விளக்கம் இல்லை. முதலாம் எண்காரர் மிகவும் செல்வாக்கானவர் எனவும் பேரளவு ஆளுமை உடையவர்; என்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் 4 எண்காரர் 'தோல்வி, வறுமை மற்றும் துயர் நிறைந்தவர்களாக இருப்பர்" எனச் சொல்லப்படுகிறது.

எனவே எண் சோதிடரின் பலன்கள் எண்சோதிட முறையைப் பொறுத்திருக்கிறதே ஒழிய எண்களைப் பொறுத்தல்ல என்பது எளிதில் பெறப்படும். இதற்கு மேல் எண் சோதிடத்தைப் பற்றி எழுதுவது நேர மினக்கேடு வேலை மினக்கேடு என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


நன்றி :தமிழ்நாதம்

<span style='font-size:25pt;line-height:100%'><b>எண்சோதிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....? ? ?</b></span>


- tamilini - 08-27-2004

தகவலுக்கு நன்றி சண்முகி அக்கா... அது சரி இதெல்லாம் நம்புறநீங்களா....??


- vasisutha - 08-27-2004

கட்டுரைக்கு நன்றி ஷண்முகி.


- shanmuhi - 08-27-2004

Quote:தகவலுக்கு நன்றி சண்முகி அக்கா... அது சரி இதெல்லாம் நம்புறநீங்களா....??

வானொலி, தொலைக்காட்சியில் எல்லாம் அடிக்கடி இதுபற்றிய உரையாடல்கள் நடைபெறுகிறது அல்லவா...?

பிறந்ததிகதியை வைத்து குணநலன்களை பார்ப்பது எல்லாம் நம்பத்தகுந்த மாதிரி யிருந்தாலும் பெயரை எல்லாம் மாற்றம்படி சொல்கிறார்களே... அதில் எனக்கு உடன்பாடு இல்லை.


- kavithan - 08-27-2004

அக்கா கட்டுரைக்கு நன்றி .. கட்டுரையில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டவை எல்லாம் நீங்கள் யுனிக்கோட்டுக்கு மாற்றும் போது.. விளங்காத சொற்களாக மாறிவிட்டன.... கவனிக்கவும்


- shanmuhi - 08-27-2004

நன்றி கவிதன்.


- kavithan - 08-28-2004

[size=16]நீங்களும் ஜோதிடம் கற்கப்போகிறீர்களா... இதோ இதனை சுட்டி நீங்களும்


- tamilini - 08-28-2004

நானும் கேட்டிருக்கிறன்.. நான் ஒரு புத்தகம் பார்த்தேன்.. எண் ஜோதிட புத்தகம்.. கிட்டத்தட்ட அதில சொன்னவைகள் எனக்கு பொருத்தமாக எனது பிறந்த திகதிக்கு பொருத்தமாக இருந்தது...!


- kuruvikal - 08-28-2004

சூப்பர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-28-2004

எனக்கு கொஞ்சம் எண் ஜோதிடம் தெரியும்.. தேவையானவர்களுக்கு தகவல் தரலாம்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எப்படி தெரியும் என்று எல்லாம் கேட்க கு}டாது...! குருவிகளிக்கு என்ன சிரிப்பு...??


- kuruvikal - 08-28-2004

இல்ல அந்தப் புத்தகம் எழுதினவர் உங்களப் போல ஆக்களின்ர குணத்தையும் எழுதி இருக்காரே என்று நினைக்கேக்க....அவரும் மகா கில்லாடியா இருப்பாரோ என்று நினைச்சம்...சிரிப்பு வந்திட்டுது....! ஏன் உங்களப் பாத்து சிரிக்கக்கூடாது என்று எண் ஜோதிடம் சொல்லுதோ...??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-28-2004

எங்களைப்போல ஆக்கல் என்டால் நாம் என்ன...?? அப்படி உங்களுக்கு மேசமாக தெரிகிறமா....! நாங்கள் ஒரு அப்பாவிகள் குருவிகளே....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 08-28-2004

அப்படியா அப்ப சரி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-29-2004

Quote:நானும் கேட்டிருக்கிறன்.. நான் ஒரு புத்தகம் பார்த்தேன்.. எண் ஜோதிட புத்தகம்.. கிட்டத்தட்ட அதில சொன்னவைகள் எனக்கு பொருத்தமாக எனது பிறந்த திகதிக்கு பொருத்தமாக இருந்தது...!
மற்ற எண்களுக்கு போட்டிருக்கும் பலன்களையும் படிச்சுப் பாருங்கள் தமிழினி. அதுவும் உங்களுக்கு பொருத்தமாக இருப்பது போலத் தான் தோன்றும். அது தான் எண் சோதிடம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 08-29-2004

vasisutha Wrote:
Quote:நானும் கேட்டிருக்கிறன்.. நான் ஒரு புத்தகம் பார்த்தேன்.. எண் ஜோதிட புத்தகம்.. கிட்டத்தட்ட அதில சொன்னவைகள் எனக்கு பொருத்தமாக எனது பிறந்த திகதிக்கு பொருத்தமாக இருந்தது...!
மற்ற எண்களுக்கு போட்டிருக்கும் பலன்களையும் படிச்சுப் பாருங்கள் தமிழினி. அதுவும் உங்களுக்கு பொருத்தமாக இருப்பது போலத் தான் தோன்றும். அது தான் எண் சோதிடம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->




ஏன் நீங்கள் எங்கையன் கணக்குப் புத்தகத்திலையே படிச்சனிங்கள்....? அதிலை கூட கூட்டல் , கழித்தல், பெருக்கல், பிரித்தல் என கனக்க இருக்கும்..... இந்த புத்தகங்களை எழுத்தினவங்கள் அவ்வளவு கேணையங்களா? கற்பனையிலையாவது மாற்றி மாற்றி எழுத மாட்டாங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- vasisutha - 08-29-2004

Quote:இந்த புத்தகங்களை எழுத்தினவங்கள் அவ்வளவு கேணையங்களா? கற்பனையிலையாவது மாற்றி மாற்றி எழுத மாட்டாங்களா?
அட அப்ப நீங்களே சொல்லிட்டீங்கள் கற்பனையில் எழுதுறாங்கள் என்று பிறகு என்ன? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு அந்த புத்தகங்களை வாசிக்கும் போது எழுதியவங்கள் கேணையங்கள் மாதிரித்தான் தெரியுது. எப்படி கண்டு பிடிச்சனீங்கள் கவிதன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-29-2004

Quote:மற்ற எண்களுக்கு போட்டிருக்கும் பலன்களையும் படிச்சுப் பாருங்கள் தமிழினி. அதுவும் உங்களுக்கு பொருத்தமாக இருப்பது போலத் தான் தோன்றும். அது தான் எண் சோதிடம்.
புதிதாக என்னத்தை எழுதிறது.. மனிதருக்கு இருக்கிற குணங்களை தானே ஏழுத முடியும்.. சிலது சரியாகுது.. சிலருக்கு அவ்வளவு தான்....!


- kavithan - 08-29-2004

கற்பனையல்ல .. கற்பனையிலாவது..... கவனிக்கவும்... அவங்கள் கேணையங்கள் என்றால் வாசித்த நீங்கள்... :roll:


vasisutha Wrote:
Quote:இந்த புத்தகங்களை எழுத்தினவங்கள் அவ்வளவு கேணையங்களா? கற்பனையிலையாவது மாற்றி மாற்றி எழுத மாட்டாங்களா?
அட அப்ப நீங்களே சொல்லிட்டீங்கள் கற்பனையில் எழுதுறாங்கள் என்று பிறகு என்ன? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு அந்த புத்தகங்களை வாசிக்கும் போது எழுதியவங்கள் கேணையங்கள் மாதிரித்தான் தெரியுது. எப்படி கண்டு பிடிச்சனீங்கள் கவிதன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



- vasisutha - 08-30-2004

நீங்களும் வாசிச்சனீங்களா கவிதன்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 08-30-2004

vasisutha Wrote:நீங்களும் வாசிச்சனீங்களா கவிதன்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அந்த புத்தகம் வாசிக்கலை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: