Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 209 online users.
» 0 Member(s) | 207 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,061
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,464
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ஈழம் காட்சிகள்
Posted by: kavithan - 09-09-2004, 04:33 AM - Forum: இணையம் - Replies (1)

<span style='font-size:23pt;line-height:100%'>புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகம்.... ஆம் எம் ஈழத்தின் அனைத்து விடையங்களையும் மையமாக கொண்டு இத்தளம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. அனைதும் காட்சிகளாக விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.. .. . இதை அமைத்து வழங்கியவர்களுக்கு என் நன்றிகள். நீங்களும் சென்று பாருங்களேன்............ </span>

http://www.eelavision.com/


<img src='http://www.eelavision.com/gallery/5007-8117.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  தமிழ் இணையம் 2004- கட்டுரைகள்
Posted by: சுடரோன் - 09-07-2004, 06:52 PM - Forum: கணினி - Replies (2)

visit:http://www.infitt.org/minmanjari/issue2_2/index.html

தமிழ் இணையம் 2004- கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
ஆகஸ்ட் 16 2004

டிசம்பர் 11,12 தேதிகளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள தமிழ் இணையம் மாநாட்டிற்கான கட்டுரைகளை வரவேற்று உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநாட்டை உத்தமம், சிங்கப்பூர்த் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுவோடும் வேறு சில அமைப்புகளோடும் சேர்ந்து நடத்துகிறது.

இந்த மாநாட்டில் அளிக்கப்படும் கட்டுரைகளை வரவேற்கவும், பரிசீலிக்கவும், மாநாட்டு நிகழ்ச்சி அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முனைவர் கு.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து) இந்தக் குழுவின் தலைவராகவும், திரு. அருண் மகிழ்நன் (சிங்கப்பூர்) துணைத்தலைவராகவும், திரு. மாலன் (இந்தியா), திரு.அ.இளங்கோவன் (இந்தியா), திரு. தொ. சிவராஜ் (இந்தியா) முனைவர். வாசு ரங்கநாதன் ( அமெரிக்கா) கியோர் அதன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இணையப் பல்கலைக்கழத்தின் இயக்குநர் முனைவர். பேரா. வி.சங்கரநாராயணன் குழுவின் லோசகராக இருக்க இசைந்துள்ளார்.

இதுவரை நடந்துள்ள மற்ற மாநாடுகளிலிருந்து இந்த இணைய மாநாடு சற்றே வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான, ழமான விவாதங்களுக்கு இடமளிக்கும் வகையில், அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநாட்டுப் பேராளார்கள் அனைவரும் எல்லா அமர்வுகளிலும் பங்கேற்க ஏதுவாக ஒரு நேரத்தில் ஒரு அமர்வு மட்டுமே நடைபெறும்.

"நாளைய உலகில் தமிழ்த்தகவல் தொழில் நுட்பம்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு அது தொடர்பான அனைத்து பொருள்களிலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. செப்டம்பர் 16ம் தேதிக்குள், இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளின் சுருக்கம் மாநாட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். நவம்பர் 16ம் தேதிக்குள் முழுக் கட்டுரையும் அனுப்பப்பட வேண்டும். கட்டுரைச் சுருக்கங்கள் பரிசீலிக்க உதவும் வகையில் தெளிவாகவும், கட்டுரையின் பொருள் குறித்த அனைத்துத் தகவல்களும் கொண்டிருப்பதாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைச் சுருக்கங்கள் துறைசார்ந்த வல்லுநர்களால் பரீசிலிக்கப்பட்டு தகுதியுள்ளவை ஏற்கப்படும். தேர்வு முடிந்தவுடனேயே, ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டுரையாளர்களுக்கு முடிவு தெரிவிக்கப்பட்டுவிடும்.

கட்டுரைகள் தமிழிலோ, ங்கிலத்திலோ, அல்லது இரு மொழிகளிலுமோ அமைந்திருக்கலாம். கட்டுரைகள் மின் வடிவில் இருத்தல் அவசியம். தமிழில் சுருக்கங்கங்களை அனுப்புவோர், டாப் (TAB) அல்லது தகுதரம் 1.7 (TISCII 1.7) குறிமுறைகளில் அமைந்த எழுத்துருக்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த குறி முறைகளைப் பயன்படுத்த இயலாதவர்கள், jpeg/gif போன்ற காட்சிப் படிமங்களாகக் கட்டுரைகளை அனுப்பக் கோருகிறோம். கட்டுரைச் சுருக்கங்களில் அதனை எழுதியவர் பெயர், பணி விவரங்கள், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் கியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டுரைகளை அனுப்புபவர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என மாநாட்டின் அமைப்பாளர்கள் விரும்புகிறார்கள். மாநாட்டில் அளிக்க ஏற்றுக் கொள்ளப்படும் கட்டுரைகளின் சிரியர்களுக்கு, இலவசமாக இரு நாட்களுக்குத் தங்குமிடம், உணவு, மாநாட்டின் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு இவற்றை அளிக்க சிங்கப்பூர் மாநாட்டு அமைப்புக் குழு முன் வந்துள்ளது.

கடந்த ண்டுகளைப் போலவே மாநாட்டில் வாசிக்கப்படும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்படும். உத்தமம் இணையதளத்தில் மின் வடிவில் பதிப்பிக்கப்படும். அதன் களஞ்சியத்தில் சேமிக்கப்படும். இவற்றிற்கான உரிமைகள் உத்தமம் அமைப்பிற்குரியன.

உங்கள் வசதிக்காக முக்கியத்துவம் வாய்ந்த நாள்களை மீண்டும் குறிப்பிடுகிறோம். அவற்றை நினைவில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்:

கட்டுரைச் சுருக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: செப்டம்பர் 16, 2004
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முழுமையான இறுதி வடிவம் வந்து சேர வேண்டிய தேதி: நவம்பர் 16, 2004

மாநாட்டு நாள்கள்: டிசம்பர் 11, 12, 2004
உங்கள் கட்டுரைச் சுருக்கங்களை ti2004-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இயன்ற விரைவில் அனுப்பி வையுங்கள். உங்கள் ஒத்துழைப்பையும், தமிழ் இணையம் மாநாட்டில் உங்கள் பங்கேற்பையும் வலுடன் எதிர் நோக்குகிறோம்

அன்புடன்,
கு.கல்யாணசுந்தரம்
தலைவர்
மாநாட்டு நிகழ்ச்சி அமைப்புக் குழு
தமிழ் இணையம் 2004
http:/www.infitt.org/ti2004/
தமிழ் இணைய மாநாட்டில் விவாதிக்க ஏற்ற பொருள்களில் சில (பட்டியல் முழுமையானதல்ல)

1.தமிழ் எழுத்துக் குறிமுறைகளின் தரங்கள்:

16 பிட் அமைப்புக்கள், யூனிகோடின் இன்றைய நிலை, பயன்நிரல்களிலும், பணித் தளங்களிலும் அதன் இயைபுநிலை
அடுக்கு வரிசை, வரிசை ஒழுங்கு இவை தொடர்பான பிரசினைகள்
8 பிட்டிலிருந்து 16 பிட்டிற்கு மாறுவது தொடர்பான பிரசினைகள்
யூனிகோடில் உள்ளிடுவதற்கேற்ற தமிழ் 99 விசைப்பலகை

2. பன்மொழிக் களப்பெயர்கள்
தமிழை முன்னிலைப்படுத்தி, பன்மொழிக் களப்பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் குறித்த விவாதம்
பன்மொழிக் களப்பெயர்களுக்கான கட்டுமானங்கள், உகந்த சூழல்கள், குறிமுறைகள், செயல்படுத்துதல் இவை தொடர்பான தொழில் நுட்ப விவாதங்கள்
*பயன்பாடு, பயனாளர் எண்ணிக்கை மற்றும் வீதம், இதில் உத்தமத்தின் பங்கு இவை குறித்த பொது விவாதம்
3.பன்மொழிச்சூழலில் தமிழ்
மொழி வகைகள் (அகரவரிசையிலமைந்த மொழிகள், வரைமொழிகள், ஒலிசார்ந்த மொழிகள்)மற்றும் பன்மொழிச்சூழல்
இந்திய மொழிச் சூழலில் இயைந்து வாழும் தமிழ்- இயங்கு தளங்கள், செயலிகள் குறித்த பிரசினைகள்
மற்ற வரை மொழிகள், ஒலிசார்ந்த மொழிகள் இவற்றுடன் இயைந்து வாழ் நிலை. குறிப்பாகச் சீனம், சிங்களம், அரபி மொழிகள்

4.ஒளிவக் குறி உணர்தல், பொறிவழி மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்து சரிபார்த்தல், பேச்சு ஒலி உணர்தல்
கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள்
நெருடலான மற்றும் சிக்கலான பகுதிகள் ("செங்கொடி")
தொழில்நுட்பம் மற்றும் மொழிசார்ந்த நிலைப்பாடுகள்
இணையான முயற்சிகள்- ங்கிலம் தவிர்த்த மொழிகளோடு ஓர் ஒப்பாய்வு
முன் வைக்கப்படும் தீர்வுகள்

5.கைத் தொலைபேசி, மற்றும் கைக் கணினிகளுக்கான தொழில்நுட்பங்கள்
கைத் தொலைபேசி, கம்பியில்லா சாதனங்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள், களஞ்சியங்கள்
பணித்தளம் மற்றும் பயன்பாட்டு நிலைகளில் தமிழைப் பயன்படுத்துவதில் உள்ள பிரசினைகள்
கைத் தொலைபேசி விசைப்பட்டைகளில் தமிழை உள்ளிடுவதற்கான தரப்படுத்தல்
கையெழுத்தை உணர்தல், தமிழ் வரிவடிவங்களுக்கான பரிசீலனைகள்
தரவுப் பரிமாற்றங்கள், அகநிலை உருவகிப்பு இவற்றிற்கான எழுத்துக் குறிமுறைகள்

6.திறவூற்று மென்பொருட்கள், தமிழாக்கங்கள்
தமிழ் திறவூற்று முயற்சிகள், தமிழ்-லினக்ஸ், தமிழ்-00.0, தமிழ்- மோசில்லா, இன்ன பிற
மொழிபெயர்ப்பு மற்றும் தமிழாக்க முயற்சிகள்- சொற்தொகுப்புகள் வட்டார அமைப்புக்கள் - இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், மலேசிய தமிழ், சிங்கைத் தமிழ் இன்ன பிற
தமிழாக்கத்திற்குத் தேவையான கருவிகள், தொழில்நுட்பங்கள்
எதிர்காலத்திட்டங்கள்

7.கல்வித் தொழில்நுட்பம்
மற்ற மொழிகளில் பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களோடு ஓர் ஒப்பாய்வு. ங்கிலம், இந்தி, சிங்களம், சீனம், மலாய் இன்ன பிற
தமிழுக்கே உரிய தேவைகளைக் கண்டறிதல்
தற்போது பயன்பாட்டில் உள்ளவற்றின் செயல்விளக்கம், அவற்றின் நோக்கங்கள், மேம்படுத்தலுக்கான பரிந்துரைகள்

8.தரவுதளம் சார்ந்த செயல்பாடுகள்
பொதுநோக்கு மற்றும் வணிகச் பணிகள் சார்ந்த செயலிகள்
16பிட் குறிமுறையில் அமைந்த தரவுதளங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் விதம்
ஒழுங்கு வரிசையை நடைமுறைப்படுத்தல்
பயன்பாடு குறித்த பிரசினைகள்: இணையம் தொடர்பானவை(வலைப்பூக்கள், வலைவாயில்கள், மின்னிதழ்கள், தகவல் அனுப்புதல், மின் வணிகம்) மேசைக்கணினி தொடர்பானவை

9. மின் அரசு
மின் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களும் வாய்ப்புக்களும்
பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த பிரசினைகள்
பன்மொழிச் சிக்கல்கள்
பன்மொழி கருவூலக் கட்டமைப்புகள், பன்மொழி PDF படிவம் உருவாக்குதல்/ நிரப்புதல்

மேலதீக விபரங்களுக்கு:visit:http://www.infitt.org/minmanjari/issue2_2/index.html

Print this item

  தேடப்படுகிறார்...!
Posted by: kuruvikal - 09-07-2004, 12:37 PM - Forum: அறிமுகம் - Replies (48)

களத்தின் மாற்றுக் கருத்து அரசியல் வித்தகர் எங்கள் தாத்தாவைக் காணவில்லை... தாத்தா எங்கிருந்தாலும் தகவல் தரவும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  நீயா பேசியது?
Posted by: வெண்ணிலா - 09-07-2004, 11:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

[size=24]<b>
நீயா பேசியது?</b>


<img src='http://www.yarl.com/forum/files/vennila_1_.jpg' border='0' alt='user posted image'>

<b>என் உள்ளத்தில் புகுந்து
உன் உருவத்தை இழைக்க வைத்து
என் கனவுகளையும்
இனிமையாக்கிய என் இனியவனே!
நீயா பேசியது
அந்தக் கொடிய வார்த்தையை

சோகத்திலும் உனது
சொர்க்கவைக்கும் வார்த்தைகளை
நினைத்த எனக்கு இன்று
தீயால் செய்த பூவைத்
தூவி நோயால் என்னை
வாட வைத்து பேயாய்
நடந்து கொண்டாயே

உன் பேச்சில் நான்
வார்த்தையாய் இருக்க
நினைத்தேன் - ஆனால்
நீயோ வார்த்தையைப்
பிழையாகப் பேசிவிட்டாயே!

என் இதயத்தில் இருண்டு
கிடந்த மேகத்தை - உன்
மின்னல் பார்வையால்
மழையாய்ப் பொழிய வைத்து
என்னை நீல வானம்
ஆக்கியவனே
நீயா பேசியது?

இரக்கமில்லாதவளே!
உனக்குள் இனியும்
எதற்கு என் ஞாபக உறக்கம்
கலைந்துவிடு உனது
காதல்த் தூக்கத்தை
என்னை மறந்த விடு
வேறு ஆடவனை மணந்து விடு
என்ற பஞ்சமில்லாத பொல்லாத
பொய்யான வார்த்தையை
நீயா பேசியது?</b>

Print this item

  புலத்தின் தகவல்கள்
Posted by: sayanthan - 09-07-2004, 11:07 AM - Forum: புலம் - Replies (8)

இன்றைக்கு தமிழர்கள் உலகின் பெரும்பான்மையான இடங்களில் எல்லாம் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில் ஆங்கிலம் மட்டுமே(அதுவும் படித்த வர்க்கத்திற்கு) தெரிந்திருந்த தமிழனுக்கு இன்று உலக மொழிகள் அத்துப்படி. இந்த பகுதியில் புலத்தில் இருக்கும் தமிழ்ர்கள் தாங்கள் வாழும் நாடுகள் பற்றி தாங்களுக்கு தெரிந்த தகவல்கள், காலநிலை விபரங்கள் உங்களுக்கு பிடித்த பிடிக்காத விடயங்கள்.. எதுவாயினும் பகிரலாமே..

Print this item

  ரொறன்ரோ ஆலயத்தில் சிறை......?
Posted by: kavithan - 09-07-2004, 09:12 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (49)

[b][u]<span style='font-size:25pt;line-height:100%'>ரொறன்ரோ ஆலயத்தில் சிறை......?</span>

<span style='font-size:23pt;line-height:100%'>ஆலயங்களை எல்லாம் தற்போது தொழிலாகமாற்றி வருகிறார்கள்.. ஆனால் இங்கு சிறையாக மாற்றிவிட்டார்கள் ..ஆம் அந்த சிறையில் வாடுவது 10 இந்திய சகோதரர்களாம்.. இது பற்றி முழக்கம் வார இதழில் வந்த செய்தியை இங்கு போடுகிறேன் நீங்களே படியுங்கள்.. இந்த குருக்கள் முன்னரும் ஏதோ பிரச்சனையில் ஈடுபட்ட தாக சிலர் கதைத்த ஞாபகம்... வேறு யாராவது தெரிந்தால் கூறுங்கள்.........?</span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/muzakkam_news1.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  வாழ்த்துக்கள்
Posted by: Thiyaham - 09-07-2004, 08:20 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (10)

கடந்த 30ம் திகதி மீண்டும் ஒரு முறை தந்தையாகிய கள நிர்வாகி மோகனுக்கு கள உறுப்பினர்கள் சார்பில் பிந்திய வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  றாயனின் தாயார் இறைவனடி சேர்ந்தார்
Posted by: tamilini - 09-07-2004, 01:03 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (12)

Quote: யாழ் களத்தில் மிக அன்பானமுறையில் கருத்துகளை தந்த றாயன் என்பவருடைய தாயார் இன்று இறைவன் அடி சேர்ந்தார் இலன்டனில் மருத்துவமனையில் தாமேதரம்பிள்ளை கமலாவதியாகிய றாயனின் தாயார் இறைவனடி சேர்ந்தார் உங்கள் கன்னீர் அஞ்சலியை தொலைபேசி ஊடாகவும் செலுத்தலாம் 00447751717097 அன்னாருடைய குடும்பத்திற்கு எனது கன்னீர் அஞ்சலிகள்

றாயன் அண்ணாவின் தாயரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்....!

Print this item

  சூட்சுமமாய் வலைவிரிக்கும் சூனியக்காரர்கள்
Posted by: kavithan - 09-06-2004, 07:47 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

[i][u]<span style='font-size:25pt;line-height:100%'>
இது அமெரிக்க இராணுவம் இலங்கையில் பயிற்சி அளிக்கும் காட்சி</span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_img/ussltraining.jpg' border='0' alt='user posted image'>




[u][b]<span style='font-size:27pt;line-height:100%'>சூட்சுமமாய் வலைவிரிக்கும் சூனியக்காரர்கள்</span>


<span style='font-size:23pt;line-height:100%'>சுத்தி..! சுத்தி..! வந்து
சூட்சுமமாய் வலைவிரிக்கும்
சூனியக்காரர்கள் விரிக்கும்
சூட்கேஸ் வலையில்...
சுகமாவிழுந்திடுவர்
சூடான கண்டத்து
சுக்கிர திசைக்காரர்... - அதன் பின்
சுட சுட வந்திறங்கும் சுடுகலன்கள்
அதனை சுட்டு காட்ட வந்திடுவர் சிலர்
அதை படம் பிடிக்க வந்துடுவர் இன்னும் சிலர்..
அப்புறமாய் - இது
பாட்டுக்கு சும்மா கிடக்கு என
பட.. பட .. என
பார்த்து பாக்காமல்
சுட்டு பார்த்திடுவர் கனவாங்கள்
தொப்.. தொப்பென...
தொலைவில் நின்றவரும்
தோட்டத்தில் நின்றவரும்
சொல்லிக் கொள்ளாமல்
சொர்க்கம் போயிடுவர்..
செத்தவரின் உழைப்பில்
தள்ளாடி நின்ற குடும்பம்
தடக்கி விழுந்து
ஊன்றுகோல் இன்றி
உருக்குலைந்து போகிறது.</span>

Print this item

  அக்கரைக்கு இக்கரை....
Posted by: shanmuhi - 09-03-2004, 10:17 PM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

<b>அக்கரைக்கு இக்கரை.... </b>

அகதியாய் அநாதரவாய் அந்நியதேசமதில்
முகவரி தொலைத்து புகலிடம் தேடி வந்ததால்
விசா தந்த வாழ்வு இங்கே வளமாக
சமூக உதவிகள் அனைத்தும் பெற்றே
வசதியான ஏகபோக வாழ்க்கையில்
அக்கரையில் காணத வாழ்வு
இக்கரையில் கண்டு விட்ட பெருமிதம்

எட்டுமணிநேர பகுதி நேர வேலையென்றே
பட்டும்படாமல் பருப்பும் சோறும் உண்டே
சீட்டுப்பிடித்தே சிக்கனமாய் சேர்த்த பணத்தை
வட்டிக்கு விட்டே வளமாய் வாழ்ந்து
குட்டிபோட்ட பணத்தையும் தந்திரமாய்
வட்டிக்கு விட்டே சொகுசாய் வாழ்ந்திடும்
வாழ்வுதான் அக்கரையில் வந்திடுமோ

தேசத்தின் விடியலுக்காய்
நேசத்துடன் நெஞ்சுருக வாய்கிழிய
மூச்சுக்கு மூன்னுறு முறை முழங்கிடுவர்
பங்களிப்புச் செய்யாமலே போலியாய்
தத்துவங்கள் பேசியே தர்க்கங்கள் புரிந்தே
வாழ்ந்திடும் பகட்டு வாழ்க்கை
இக்கரையில் கற்றுவிட்ட வித்தைகளோ

<b>இக்கரையில் கண்டுவிட்ட அத்தனையும்
அக்கரையில் கிடைத்துவிட்டால்
இக்கரைக்கு அக்கரை பச்சையென்று
அக்கணமே சொல்லிடுவாரோ..</b>

Print this item