| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 336 online users. » 0 Member(s) | 334 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| ஆக்ஷன் எடுங்க சிவபெருமானே..! |
|
Posted by: vasisutha - 09-17-2004, 10:53 PM - Forum: நகைச்சுவை
- Replies (7)
|
 |
<b>ஆக்ஷன் எடுங்க சிவபெருமானே..!</b>
கைலாய மலை. சிவனும் பார்வதியும் கம்பீரமாக வீற்றிருக்க, பக்கத்திலேயே பிள்ளையார், முருகன், நாரதர்.
<b>பார்வதி:</b> ''சுவாமி... இத்தோடு இந்த செஷனை முடித்துக் கொள்வோம். சன் டி.வியில் 'கோலங்கள்' போடுகிற நேரம் வந்துவிட்டது. நேற்று அபிக்கும் அவள் கணவனுக்கும் சண்டை ஆரம்பித்த சஸ்பென்ஸில் முடித்துவிட்டார்கள். என்ன நடக்குமோ என்று ஒரே டென்ஷனாக இருக்கிறது. நான் போக வேண்டும்...''
<b>சிவன் (உஷ்ணமாகி) :</b> ''ப்பார்வதீ! வர வர உனது சீரியல் பித்து எல்லை மீறிப்போகிறது. பூலோக மாதர்களுக்குச் சற்றும் குறையாமல் மெகா சீரியல்களில் மூழ்கி, பல நேரங்களில் கேஸ் ஸ்டவ்வைக்கூட மூட மறந்துவிடுகிறாய். இப்படியே போனால் நமக்குள் சண்டை வந்து, மறுபடியும் நீ உன் அப்பா வீட்டுக்குப் போக வேண்டிவரும்... ஜாக்கிரதை!''
<b>அப்போது ஓடிவரும் ஒரு சேவகர்:</b> ''பிரபோ... பிரபோ! பூலோக நகராம் கோடம்பாக்கத்தில் இருந்து உங்களைப் பார்க்க ஒரு படையே வந்து கொண்டிருக்கிறது!''
<b>சிவன்:</b>''வரச்சொல்!''
<img src='http://www.vikatan.com/av/2004/sep/26092004/p146.jpg' border='0' alt='user posted image'>
<b>நாரதர் (பதற்றத்துடன்):</b> ''ஆஹா... பிரபோ! அவர்கள் திருட்டு வி.சி.டியை ஒழித்துக் கட்டுவதற்காக ஆவேசங் கொண்டு அலைவதாக எனக்கு நியூஸ் வந்தது. ஒருவேளை அதற்காகத்தான் வந்திருப்பார்கள். உடனடியாக, நேற்று நான் கைலாய பஜாரிலிருந்து வாங்கி வந்த மதுர, வசூல்ராஜா, குடைக்குள் மழை சி.டிக்களை ஒளித்து வைத்துவிடுங்கள்...'' என்று பதற, அதற்குள் காற்றில் வருகிறது ஒரு கரகர குரல்... ''என் இனிய தமிழ்க் கடவுளே...''
படை திரட்டிப் பிரசன்னமாகிறார் பாரதிராஜா.
<b>நாரதர் (மெதுவாக):</b> ''சுவாமி... கறுப்பு ஜீன்ஸில் வெறுப்பாக நிற்கிறாரே, அவர்தான் டைரக்டர் பாரதிராஜா. பக்கத்தில் கரடித் தலைமுடியோடு காட்டமாக நிற்பது ஆல்ரவுண்டர் விஜய டி.ராஜேந்தர். கையிலே ஃப்ரூட் பொக்கேயுடன் நிற்பது புதுமைப்பித்தர் பார்த்திபன். இந்தப் பக்கம் கதர் சட்டைக்குக் கஞ்சி போட்ட விறைப்பை மெயின்ட்டெயின் பண்ணுவது கவிப்பேரரசு வைரமுத்து, அவருக்குப் பக்கத்தில்...''
<b>சிவன் (மெதுவாக):</b> ''தெரியும் நாரதரே... எத்தனை படங்களில் பார்த்திருக்கிறேன்! ஹீரோயின்களின் உதட்டைப் பஞ்சர் பண்ணுவாரே... கமல்தானே! (சத்தமாக) வெல்கம் டு கைலாயமலை! இப்படி திடுதிப்னு தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்திருக்கிறீர்களே, இங்கேயும் ஏதாவது கலைவிழா நடத்தி கலெக்ஷன் பார்க்கும் திட்டமா? ஸ்பான்சர் பிடித்துத் தர தேவர்களின் உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா?''
<b>பாரதிராஜா:</b> ''போற போக்கைப் பார்த்தா, வெறுமனே கலைவிழா மட்டும் நடத்தித்தான் எங்க பொழப்பை ஓட்டணும் போலிருக்கு. எங்க குறையை எந்தக் கோயில்ல போய் சொல்றதுன்னு தெரியாமத் தான் உங்ககிட்டே ஓடி வந்திருக்கோம் சாமி... நீங்கதான் காப்பாத்தணும். எஸ், யூ மஸ்ட் சேவ் அஸ்!''
<b>விஜய டி.ஆர்.:</b>''சாமீ... பல கோடி போட்டு எடுக்கிறோம் படம். தெருக்கோடியில திருட்டு வி.சி.டி. வித்துப் பண்றான் அடம். தேருன்னா புடிக்கணும் வடம். தெருக்குழாய்னா வைக்கணும் குடம்...''
<b>முருகன் (பயந்துபோய்):</b> ''டாடி, யார் இது? இப்படிப் பயமுறுத்துகிறாரே!''
<b>பார்த்திபன் (குறுக்கிட்டு):</b> ''மை லார்ட்... ஸாரி, காட்! வி.சி.டி., நடுவுல ஒரு எழுத்தை எடுத்துட்டா வி.டி. ஆமா... வி.டி. மாதிரி இதுவும் ஒரு நோய்தான். தமிழ் சினிமாவை அரிக்கிற நோய். 'குடைக்குள் மழை' ஷூட்டிங்ல திடீர்னு ஒருத்தர் வந்து, 'சார், காமிராவைக் கொஞ்சம் தள்ளி வைங்க... இடிக்குதுல்ல'ங் கறார். விசாரிச்சா வி.சி.டி. பார்ட்டி! அந்தளவுக்கு ஆகிப் போச்சு..!
<b>விஜய டி.ஆர்:</b> ''அட, இது பரவாயில்லய்யா! அன்னிக்கு பண்ருட்டி போற மப்சல் பஸ்ல 'மன்மதன்' படம் போட்ருக்காங்க. இப்பத்தான் ஷூட்டிங்கே நடந்துட்டிருக்கு... அதுக்குள்ளே திருட்டு வி.சி.டியான்னு மடக்கி விசாரிச்சா, ஷூட் பண்ணின வரைக்கும் சுட்டு வி.சி.டி. போட்ருக்காங்க. ஓடி முடிஞ்சதும், 'மற்றவை அடுத்த ட்ரிப் பில்'னு கார்டு வேற போடறானுங்களாம். ஏய், இதுதான் இப்ப நிலைமை. இன்னிக்கு சனிக்கிழமை...''
<b>வைரமுத்து (தொண்டையைக் கனைத்தபடி</b> ''ஆம்... திருட்டு வி.சி.... தமிழ் சினிமாவின் இருட்டு வி.சி.டி! விஞ்ஞான வளர்ச்சிக்குப் பூங்கொத்து கொடுப்போம்... அதுவே சினிமாவுக்கு வீழ்ச்சியானால் கோடரி எடுப்போம்! கோடம்பாக்கமே எழு! ஓடு... எரிமலை யைக்குடி! கோட்டையை இடி, வி.சி.டி. அழி... ஏற்று உன் கொடி!''
கவிஞரின் கணீர்க்குரல் கேட்டு பிள்ளையார் திடுக்கிட, பார்வதி, சிவனிடம் மெதுவாக, ''நாதா... இந்த ஜிப்பாக்காரரையும் அந்த தாடிக்காரரையும் பார்த்துப் பிள்ளைகள் பயப்படு கின்றன. இவர்களைச் சீக்கிரம் பேசி அனுப்பிவிடுங் கள். இல்லையென்றால் தேவையில்லாத குழப்பங்கள் வந்துவிடும்...''
<b>சிவன்:</b> ''சரி சரி... சீக்கிரம் செட்டில் பண்ணி அனுப்பி விடுகிறேன்.''
<b>கமல்:</b>''ஆ... ஹரியும் சிவனும் ஒண்ணு, சினிமாக் காரன் வாயில மண்ணுனு பழமொழியை மாத்திச் சொல்ற உரிமை எனக்கு இருக்கு. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுளுக்கு என் மேல நம்பிக்கை கிடையாதுனு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும். திருட்டு வி.சி.டி. விவகாரங்கறதால நானும் கொஞ்சம் திருட்டுத்தனமா கடவுளைப் பார்க்க வந்திருக்கேன்...''
<b>நாரதர்:</b>''சரி கமல்... சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்!''
<b>கமல்:</b>''சினிமாவோட பரிணாம வளர்ச்சியில திருட்டு வி.சி.டி'யும் ஒண்ணுனு சொன்னா செவுள்ளயே அடிப்பேன். மனிதன் பரிணாம வளர்ச்சி யில திரும்பவும் குரங்காகறான்னு சொன்னா, கோபம் வந்து குமட்டுல குத்துவீங்கள்ல... அது மாதிரிதான் இது! இந்த விஷயத்துல சாமிகள் நீங்கள்லாம் இப்படிப் பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருந்தா, நாங்கள்லாம் கோவணம் கட்டிட்டுப் பழனிக்குப் போக வேண்டியதுதான். நடிகைக்குக் கோவணம் கட்டினால் கிளாமர்னு சொல்லலாம். எங்களுக் குக் கட்டினால் அது அசிங்கம்... கலாசாரச் சீரழிவு!''
<b>பார்த்திபன்:</b>''மிஸ்டர் சிவன், நீங்க உடனடியா ஏதாவது ஆக்ஷன் எடுக் கலைன்னா இங்கேயே வி.சி.டி. மாதிரி செட் போட்டு அதுல உட் கார்ந்து சுத்திக்கிட்டே உண்ணும் விரதம் இருப்போம்!''
<b>சிவன் (டென்ஷனாகி):</b> இதோ பாருங்கள் மானிட ஸ்டார்களே... நானும் நாரதர் மூலம்
லேட்டஸ்ட் படங்களையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரே அடிதடி... இரைச்சல்! 'மன்மதராசா...', 'மச்சான் பேரு மதுர', 'உக்கடத்து பப்படமே', 'உம்மா உம்மம்மா' என கும்மாங்குத்து சத்தம் காதைப் பிளக்கிறது. பத்தாததற்கு ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசியே கொல்கிறீர்கள்!''
<b>பிள்ளையார்:</b>''அதோடு பூலோகத்தில் தியேட்டருக்குப்போய்ப் படம் பார்ப்பதே பெரிய சர்க்கஸாக அல்லவா இருக்கிறது! எனது மூஞ்சூறு வாகனத்தை நிறுத்த, பார்க்கிங் பார்ட்டிகள் பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். டிக்கெட் விலையோ, நடிகர்களின் சம்பளம் மாதிரியே ஒரு நாளைக்கு ஒரு தினுசாக இருக்கிறது!''
<b>சிவன்:</b>''என்ன கமல், உங்களைப் போன்ற அறிவாளிகள் இதையெல்லாம் முதலில் ஒழிக்காமல், திருட்டு வி.சி.டியை மட்டும் ஒழிக்க நினைத்தால் எப்படி?''
<b>கமல்:</b> ''நல்ல படம், கெட்ட படம், சுமாரான படம், ஓடுற படம், ஓடாத படம், லோபட்ஜெட் படம், ஹை'பட்ஜெட் படம், கமர்ஷியல் படம், கலைப் படம், ஆ... அந்தப் படம் இந்தப் படம் இதுல என் படம், எந்தப் படம்னு எனக்குத் தெரியும். மத்தவங்க படத்தைப் பத்திச் சொன்னா உறவுகள் கெட்டுப் போயிடும்... வாணாம், உட்ருங்க!''
<b>நாரதர்:</b> ''ஐயகோ... மண்டைக்குள் கிர்ரடிக்கிறதே! சரி, அதை விடுங்கள். சிம்ரன் திரும்பவும் நடிக்க வரப் போவ தாகக் கேள்விப்பட்டேனே! அவர் வந்தால், வளைந்த இண்டஸ்ட்ரியைப் பெண்டு நிமிர்த்தி வளமையாக்குவார், இல்லையா..?''
வைரமுத்து கவிதை பாட தொண்டையைச் செருமும்போதே, 'சம்போ சிவ சம்போ...' என்று குரல் கேட்கிறது. பார்த்தால் தனியே வந்து கொண்டிருக்கிறார் ரஜினி.
<b>நாரதர்:</b> ''பிரபோ... தனி வழியில் வருகிறாரே! அவர்தான் தமிழ் நாட்டின்சூப்பர் ஸ்டார்! நம்கைலாய மலைப் பக்கமாக இமயமலையில்தான் அடிக்கடிச் சுற்றிக் கொண்டிருப்பார்.''
<b>ரஜினி:</b> ''சாமீ, டார்ச்சர்... டார்ச்சர், ஒரே டார்ச்சர்! திருட்டு வி.சி.டிக்காரங்க தினம் தினம் போன் பண்ணி ஜக்கு பாயை நீங்க எடுக்கிறீங்களா. இல்லே, நாங்களே எடுக்கவானு மிரட்டறாங்க... உங்க பக்தனுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா சாமீ...''
<b>சிவன்:</b>''அடடா... நீயே சீக்கிரமாக ஜக்குபாயை எடுக்கவேண்டியதுதானே, சூப்பர் பக்தா?''
<b>ரஜினி:</b>''எப்டி... எப்டி சாமீ? இது வரைக்கும் டைட்டில் மட்டும்தான் டிஸ்கஷன் முடிஞ்சிருக்கு.கே.எஸ்.ரவிகுமார் போன்ல சிக்கமாட்டேங்கறாரு. தனியா உட்கார்ந்து கதை யோசிச்சா மண்டை காயுது. அரசியல்வாதிகளைப் பார்த்து பொக்கே கொடுக்கறது, பிரஸ்மீட் வைக்கறதுனு டைம் பாஸ் பண்ற நம்ம ஐடியாக்கள் எல்லாருக்கும் புரிஞ்சுடுச்சு. அவனவன் ஓடறான். அதான், அப்படியே கோயில் கோயிலா சுத்திட்டிருக்கேன்...''
<b>பாரதிராஜா (தடாலடி யாகக் குறுக்கிட்டு): </b> ''திருட்டு வி.சி.டி. பிரச்னைக்குத் தீர்வு கேட்டு வந்தா இங்கேயும் ரப்ச்சர்! எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லாத சிவனை எதிர்த்து இங்கேயே உண்ணாவிரதம் இருக்கப் போறோம். எல்லாம் அப்படி அப்படியே உட்காருங்கப்பா...''
<b>ரஜினி:</b> ''நோ...நோ... நான் இங்கே உட்கார மாட்டேன். பூலோகம்தான் என் ஸ்பாட்! என் உண்ணாவிரதம், தனி உண்ணாவிரதம்...''
<b>சிவன்:</b> ''உங்க சினிமா உலகப் பிரச்னையில் என் தலையைஏன் உருட்டுகிறீர்கள்? உடனே கிளம்புங்கள்!''
<b>விஜய டி.ஆர்.:</b> முன்னாடி வெச்ச எங்க கால... இனி வாங்க மாட்டோம் பின்னால! சொல்லுங்க சாமீ உங்க முடிவு... வி.சி.டிக்குப் பொறக்கட்டும் ஒரு விடிவு! கிளம்பிட்டோம் உண்ணாவிரதப் போருக்கு... சிவ சாமி! உங்க ஆதரவு யாருக்கு...?''
<b>நாரதர்:</b>''ஆத்தாடி, பிரபோ! அரசியல் ஆரம்பித்துவிட்டது. எகிறி எஸ்கேப் ஆகிடுங்க!''
நாரதரின் அலறல் முடிந்த விநாடி, சிவன் ஃபேமிலி விஷ்ஷ்க்க்!
thanks to
vikatan.com
|
|
|
| நல்லூர் நல்லவனுக்காய்....! |
|
Posted by: kuruvikal - 09-17-2004, 08:06 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (54)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/nallur_13_09_04_03_28865_435.jpg' border='0' alt='user posted image'>
நல்லைநகர் வீதியெங்கும்
சின்னக் கால் பதித்து
சிங்கார வேலன் பாதம் தேடி
வந்த கூட்டத்துள்
மூச்சுத் திணறிக் கண்டேன்
வெள்ளி மயில் வாகனனை கொடியன்று...!
பசும் பொன்னொளி வீச
பொன்னோடு வருவான்
சிங்கார வேலன் சிரித்தபடி
மஞ்சத்து நாளில் வள்ளியுடன்...!
இப்படியே இனியவன் நினைவுடன்
நாட்கள் கழியும் களிப்புடன்
நண்பரும் நாமுமாய்
வீதியெங்கும் உலாவந்து தேடுவோம்
நம் தோழமை மிகு கந்தனை...!
சப்பறமும் வரும்
வான்முட்டும் உயரத்தோடு
வடிவான மங்கையரும்
வாட்டசாட்ட காளையரும் வருவர்
அதன் பின்னே...
காதல் மன்னன் வள்ளி மணாளன்
வழிக்காட்டிச் செல்வான் அவர் முன்னே...!
அழகான தேர்
சரியாய் மணி ஒலிக்க
ஒலியோடு கிளம்பும்....
தினமும் சிட்டாய் பறந்து
பள்ளி செல்லச் சொன்ன அந்த மணி - அன்று
நண்பன் முருகன்
விழாப் பெருமை சொல்லி
நால் வீதியெங்கும் ஒலிக்கும் பெருமையோடு...!
தேரோடு மறுநாள்
மயிலேறி வருவான் முருகன்
தான் கொண்ட தீர்த்தமாடி
தான் கண்ட பக்தகோடிகள் மேல்
அருள் மழை பொழிந்திட....
நாமும் கூடவே
"சொப்பிங் பாக்" வாங்கி
தீர்த்த மழை பொழிந்து மகிழ்ந்திடுவோம்...!
இறுதி நாள்
வைரவர் மடையோடு முடிய முதலாய்
கலிகாலக் கடவுளாம்
காதல் மன்னன்
பணக்கார நாயகன்
பூங்கா வனம் ஏகி
"சைற்றடிப்பாராம்"
பூவுலக நாயகியாம் வள்ளியை....
தேவலோக நாயகியாம்
தெய்வானை கூட இருக்கவே...!
கந்தா இது கொஞ்சம் "ஓவர்"
இருந்தாலும் நீ எம் நண்பன் - என்று
முணுமுணுக்கும் இளவட்டத்து மனசுகள்....!
இப்படியாய்
கூடக் குடியிருந்த அன்பன்
நல்லை முருகனவன் திருவிழாக் காலம்
வாழ்வில் சொர்க்கத்து நாட்களாய்
கழிந்த நினைவுகளுடன்
வாரம்தோறும் உன்னோடு
உன் முற்றத்திலேயே
மண்வீடு கட்டி விளையாடிய
உந்தன் நண்பன் குருவிகள்
சொல்லும் இம்மொழிதனில்
பிழை கண்டால் பொறுக்க என்று வேண்டி
என்றும் - நீ
நின் புகழோடு விளங்க
வாழ்த்தி வணங்குகிறோம்...!
முருகா மன்னிக்க... நம் நாட்கள் உன் திருவிழாவுக்க கொஞ்சம் பிசியாப் போட்டுது... இந்த வரிகளை உன் நினைவுகளுடன் இங்கு வைக்க முடியாமைக்காக...!
நன்றி...http://kuruvikal.yarl.net/
|
|
|
| தேசியப் பூ !!! |
|
Posted by: raahul - 09-17-2004, 07:28 PM - Forum: புலம்
- Replies (2)
|
 |
1.<img src='http://img.free.idleserv.net/2104er26.jpg' border='0' alt='user posted image'>
2.<img src='http://img.free.idleserv.net/2104er27.jpg' border='0' alt='user posted image'>
மேலே உள்ள 2 படங்களில் இல.1றில் உள்ள தமிழிழ தேசியப் பூவான கார்த்திகைப் பூவிற்க்கு பல பிரபலமான இணையத்தளங்களில் கால் முளைத்துள்ளது எனது எண்ணப்படியும் பலரை விசாரித்தளவிலும் படம் 2டில் தரப்பட்ட பூவே சரியானதென்றே நினைக்கிறோம். இது தவறாயின் சரியானதைத் தெரியப்படுத்துவீர்களென எண்ணுகின்றோம்.
|
|
|
| ஈராக் மீதான யுத்தம் சட்டவிரோதமானது - ஐநா பொதுச்செயலர்...! |
|
Posted by: kuruvikal - 09-16-2004, 08:41 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40364000/jpg/_40364655_annanap203bok.jpg' border='0' alt='user posted image'>
The United Nations Secretary-General Kofi Annan
ஈராக் மீதான அமெரிக்க - பிரிட்டன் ஆக்கிரமிப்பு யுத்தம் ஐநாவின் சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக தன்னிச்சையாக நடத்தப்படும் ஒரு சட்டத்துக்குப் புறம்பான செயல் என்று ஐநா பொதுச்செயலர் கொபி அனான் பிபிசியுடனான செவ்வியின் தெரிவித்துள்ளார்...!
மேலதிக விபரம் ஆங்கிலத்தில்...
<b>Iraq war illegal, says Annan</b>
The United Nations Secretary-General Kofi Annan has told the BBC the US-led invasion of Iraq was an illegal act that contravened the UN charter.
He said the decision to take action in Iraq should have been made by the Security Council, not unilaterally.
The UK government responded by saying the attorney-general made the "legal basis... clear at the time".
Mr Annan also warned security in Iraq must considerably improve if credible elections are to be held in January.
The UN chief said in an interview with the BBC World Service that "painful lessons" had been learnt since the war in Iraq.
"Lessons for the US, the UN and other member states. I think in the end everybody's concluded it's best to work together with our allies and through the UN," he said.
'Valid'
"I hope we do not see another Iraq-type operation for a long time - without UN approval and much broader support from the international community," he added.
He said he believed there should have been a second UN resolution following Iraq's failure to comply over weapons inspections.
And it should have been up to the Security Council to approve or determine the consequences, he added.
When pressed on whether he viewed the invasion of Iraq as illegal, he said: "Yes, if you wish. I have indicated it was not in conformity with the UN charter from our point of view, from the charter point of view, it was illegal."
UK Colonel accuses Allies
In response, a UK foreign office spokeswoman said: "The Attorney-General made the government's position on the legal basis for the use of military force in Iraq clear at the time".
Australian Prime Minister John Howard also rejected Mr Annan's remarks, saying the legal advice he was given was "entirely valid".
The BBC's Susannah Price at UN headquarters in New York says Mr Annan has made similar comments before.
He has said from the beginning the invasion did not conform with the UN charter - phrasing that was seen as a diplomatic way of saying the war was illegal.
Our correspondent says Mr Annan's relationship with the US might be made a little uncomfortable for a while following his comments, but both sides are likely to want to play it down.
US President George W Bush is due to speak at the UN General Assembly next week.
Iraq elections
Mr Annan also said in the interview the UN would give advice and assistance in the run-up to the elections, but it was up to the Iraqi interim government to decide whether such a vote should go ahead.
He warned there could not be "credible elections if the security conditions continue as they are now".
The UK foreign office spokeswoman said there was a full commitment to hold elections in January.
Election and political party laws had already been passed and an independent electoral commission established.
"The task is huge and the deadline tight, but the Iraqi people clearly want elections," she said.
On Wednesday, the head of the British army General Sir Mike Jackson said national elections in Iraq were still on track.
On Monday, Iraq's interim Prime Minister Iyad Allawi said elections must go ahead as planned although he conceded the violence might stop some Iraqis voting.
However, a day later a car bomb close to an Iraqi police station in central Baghdad killed 47 people and gunmen opened fire on a police minibus in Baquba, killing 12.
bbc.com
|
|
|
| நீ .! என்றும் வேண்டும் எனக்கு. |
|
Posted by: kavithan - 09-16-2004, 07:32 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b>நீ .! என்றும் வேண்டும் எனக்கு.</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/niivaaNdum.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'>
காக்க காக்க கனவில் நோக்க
போக்க போக்க பொழுதை போக்க
பாக்க பாக்க உன் கண்களை பாக்க
நீ .! என்றும் வேண்டும் எனக்கு.
மனதும் மனதும் இடம் மாறிய
ஆணும் பெண்ணும் என்ற சாதிகள் இரண்டொளிய
உலகில் சாதிகள் வேறேது.- அது
நானும் நீயும் ஆகியதால்
நீ....! என்றும் வேண்டும் எனக்கு.
கண்ணு மண்ணு தெரியாமல்
பொன்னும் பொருளும் வாங்கி
பெருமையோடு செய்யும் திருமணத்திலும்,
பண்பும் பாசமும் மிக்க
நீ.....! என்றும் வேண்டும் எனக்கு.
கண்ணும் கருத்துமாக
காலம் உள்ள வரைக்கும்
உன்னை நான் காதல் செய்வேன் - அதற்கு
நீ..! என்றும் வேண்டும் எனக்கு
சொந்தம் பந்தம்...
சொத்து சுகம்..
சொர்க்கம் நரகம்
எல்லாம் நீயே எனக்கு - அதற்கு
நீ..! என்றும் வேண்டும் எனக்கு.</span>
யாவும் கற்பனை
கவிதன்
6/9/2004
இசை கேட்டபடி கவிதை வாசிக்க கவிதனின் குடிலுக்கு செல்லுங்கள் [url=http://kavithan.yarl.net/]<span style='font-size:25pt;line-height:100%'><b>குடில்</b></span>
|
|
|
| சினிமாவுக்கு பின்னால்... |
|
Posted by: AJeevan - 09-16-2004, 02:58 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (26)
|
 |
<span style='color:brown'><b>சினிமாவுக்கு பின்னால்...
சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்
_ பெ.கணேஷ்</b>
<img src='http://www.kumudam.com/cinema/camra.png' border='0' alt='user posted image'>
சினிமாவைப் பற்றி நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். பல புத்தகம் சினிமா தொடர்பாக வந்திருக்கின்றன. ஆனால் அதிலெல்லாமிருந்து சற்றே வித்தியாசமானதாக இந்த தொடர் இருக்கும்.
பதினைந்து ஆண்டுகள் சினிமாவின் உதவி இயக்குநனராக, இணைஇயக்குனராக, வசனகர்த்தாவாக பணியாற்றி இயக்குனராக போராடியவன் நான். என்னுள் இருக்கும் ஏமாற்றம், ஆதங்கம், பின்னோக்கி பார்த்தல், புரிதல் தெளிவு என எல்லா உணர்வுகளையும் கொட்டப்போகிறேன்.
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என்று சினிமாவிலுள்ள அத்தனை டெக்னிகலாக விஷயத்திலும் என்னோட சேர்ந்து நீங்களும் பயணிக்கப் போகிறீர்கள். இத்தொடர் படித்து முடிக்கிற வேளையில் நிச்சயமாக நீங்கள் ஒரு திரைப்படத்தில் வேலை பார்த்த முழுத்திருப்தியை அடைவீர்கள்.
சினிமா கனவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் சினிமாவை தொடமுடியாமல் வெளிநாடுகளில் ஏக்கத்தோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் இத்தொடர் ஒரு இளைப்பாருதலாக இருக்கும்.
1
"சினிமா என்பது ஒரு மாய வித்தையோ, கம்பசூத்ரமோ அல்ல நான் என்ன செய்கிறேன் என்பதை என்னருகில் இருந்து இரண்டு நாட்கள் கூர்மையாக கவனித்தாலே போதும் சினிமா என்பது இதுதானா? என அவர்களுக்கு புரிந்துவிடும்"
என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் சொல்வது போல் சினிமா ஒரு செப்படு வித்தையோ, விடைகாண முடியாத புதிரோ அல்ல. அது ஒரு கலை. யாரும் எந்த வயதினரும் கற்றறியக்கூடிய, பார்த்து உணரக்கூடிய ஒரு மென்மையான கலை.
நான் முன்னுரையில் சொன்னது போல். நீங்கள் இத்தொடரை படித்து முடிக்கிற வேளையில் நீங்களும் ஒரு சினிமாவை உணர்ந்த, சினிமாவை அறிந்த கலைஞனாகியிருப்பீர்கள்.
அந்த நம்பிக்கையோடு இத்தொடருக்குள் நீங்கள் பிரவேசியுங்கள். முதலில் இத்தொடரை கடினமான டெக்னிகல் வார்த்தைகள் இல்லாமல் மிக இயல்பான வழக்குத் தமிழிலேயே எழுதப்போகிறேன்.
இத்தொடரில் என்னோடு உங்களை கைகோர்த்து அழைத்து செல்லும்விதமாக உங்களுக்கு (வாசகர்களுக்கு) தமிழ் என்கிற பெயரை வைத்திருக்கிறேன். உங்களுக்குள் எழும் சந்தேகம், கேள்விகள் எல்லாமும் தமிழ் என்கிற பெயரின் மூலம் எழுப்பப்பட்டு அதற்கு நான் பதில் சொல்லும் விதமாக தொடர் நகரும். இந்த நடை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையோடு முதலில் திரைப்படத்திற்கு வேர் போன்ற 'கதை'யில் இத்தொடர் துவங்குகிறது.
1.திரைப்படத்திற்கு கதை எழுதுவது எப்படி?
நிறைய பேர் மனதிலிருக்கும் கேள்வி இது. கிராமங்களில், நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் மனதில் செதுக்கி கதையாக வடிவம் கொடுத்திருப்பார்கள். ஆனால் அதை எப்படி சொல்வது? எப்படி எழுதுவது என்று தெரியாது. எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்கிற குழப்பம் இருக்கும். கதை என்பது எப்படி சொல்லப்படவேண்டும் கதை எப்படி உருவாக்கப்படவேண்டும் என்று இப்போது பார்ப்போம்.
என்ன தமிழ் நீங்க எதுவும் கேட்கலே?
தமிழ் : அது நானும் ஒரு கதை எழுதி வச்சிருக்கேன் அதை அப்புறம் சொல்கிறேன். முதல்ல நீங்க கதைங்கிறது எவ்வளவு இருக்குன்னு சொல்லுங்க? கதைங்கிறது பெரும்பாலும் எல்லாமும் ஒரே மாதிரிதான் இருக்கும் ஒரு படத்துல ஹீரோ ஏழை, ஹீரோயின் பணக்காரர்ன்னா இன்னொரு படத்துல ஹீரோயின் ஏழை ஹீரோ பணக்காரர்னு இருப்பார்.
நமக்கு கதையைவிட கதையோட கருதான் முக்கியம். அதாவது எலிப்ஸ்டார் உங்கள் காலத்தில் இன்னைக்கு செல்வராகவன், காலம் வரைக்கும் எடுக்கப்பட்டிருக்கிற எல்லா படங்களும் ஒன்பது 'கரு'விற்குள் தான் அடங்கியிருக்கு.
காதல், பாசம், விட்டுக்கொடுத்தல், தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல், பழிவாங்குதல், வறுமையிலிருந்து முன்னேறுதல், தெய்வீகம்னு ஒன்பது கருக்களில்தான் இதுவரையில் தமிழ் சினிமா நகர்ந்திருக்கிறது. நீங்கள் இதுவரை வெளிவந்திருக்கும் எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் இந்த ஒன்பது கருக்களில் ஏதாவது ஒன்றுதான் இருக்கும்.
இப்படி நீங்கள் முதலில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு அந்தக் கருவை சார்ந்த கதையை சொல்ல முற்பட வேண்டும். அல்லது உங்கள் மனதிலிருக்கும் கதை இந்த கருக்களில் எந்த கருவை சார்ந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு மேலே இருக்கும் ஒன்பது கருக்களில் தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல் என்கிற கருக்களை சார்ந்து உங்கள் கதைஇருந்தால் அது ஒரு சக்ஸஸ் பார்முலா கரு. நீங்கள் தாராளமாக உங்கள் கதையை விரிவுபடுத்த ஆரம்பிக்கலாம்.
அடுத்து சமீபத்தில் வந்திருக்கிற வெற்றி படங்களை நீங்கள் இந்த 'கரு' என்கிற கண்ணோட்டத்தில் ஆராட்யந்தால் எந்த கருக்களை கொண்ட படங்கள் ஹிட்டாகியிருக்கிறது என்பது உங்களுக்கு புலப்படும்.
உதாரணத்திற்கு தற்போது பெரிய அளவில் ஹிட்டான படங்கள் என்று பார்த்தால் கேரக்டர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்துவிட்டு அந்த சஸ்பென்ஸை ஆடியன்சுக்கு முதலிலேயே விளக்கிவிடுகிற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. இது ஹாலிவுட் இயக்குனர் ஹிட்ச் காக் ஸ்டைல். அதாவது ஹிட்ச் காக் தனது படங்களில் பலவிதமான சஸ்பென்ஸ் படங்களை எடுத்திருக்கிறார். படம் முழுவதும் குற்றவாளி யார் என்பது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் தெரியாது. பார்க்கும் பார்வையாளருக்கும் தெரியாது. கடைசியில்தான் அந்த சஸ்பென்ஸ் விளக்கப்படும் இது ஒருவகை சஸ்பென்ஸ்.
குற்றவாளி யார் என்பது கேரக்டர்களுக்கு தெரியும். ஆனால் பார்வையாளனுக்கு சொல்லாமல் படம் முடியும்போது தான் தெரியப்படுத்துவார் அது இரண்டாவது வகை சஸ்பென்ஸ்.
குற்றவாளி யார் என்பதை முதலிலேயே பார்வையாளனுக்கு சொல்லி விட்டு படத்திலுள்ள கேரக்டர்களுக்கு அந்த சஸ்பென்ஸ் படங்கள்தான் தமிழில் பெரிய சக்ஸஸ் ஆகிறது.
உதாரணத்திற்கு காதல் கோட்டை. இந்த படத்தில் அஜீத்தும் தேவயாணியும் காதலிப்பது பார்வையாளனுக்கு தெரியும். ஆனால் அந்த கேரக்டர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமல் காதலிப்பார்கள். நேரிலே வரும் போது கூட அவர்களுக்கு தாங்கள் தான் காதலர்கள் என்று தெரியாது. அப்போது முதலிலேயே சஸ்பென்ஸ் தெரிந்ததால் பார்வையாளர்கள் பதறுவார்கள். கடைசியில்தான் அஜீத்துக்கும், தேவயாணிக்கும் தங்கள் தான் காதலர்கள் என்பது புரியும்.
அதேபோல் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதல் ரீலிலேயே ரம்பா யார் என்பது ஆடியன்சுக்கு சொல்லப்பட்டு விடும். ஆனால் கார்த்திக்கிற்கு ரம்பா யார் என்பது தெரியாமல் அவர் வீட்டுக்கே வந்து டிரைவராக வேலைபார்ப்பார். முடிவில்தான் ரம்பாவை தான் தன் அப்பா தனக்கு பெண் பார்த்தார் என்ற விஷயம் தெரியும்.
அதேபோல் சேதுவில் டிவக்ரமின் மனநிலை தெளிவடைந்த விஷயப் சூஆடியன்சுக்கு தெரியும் அபிதாவுக்கு தெரியாது.
ரமணாவில் விஜயகாந்த் தான் மக்கள் புரட்சி நாயகன் என்பது ஆடியன்சுக்கு தெரியும் படத்திலுள்ள கேரக்டர்களுக்கு தெரியாது.
காதல் கொண்டேனில் தனுஷ் சைக்கோ என்பது ஆடியன்சுக்குத் தெரியும் படத்திலுள்ள கேரக்டர்களுக்கு தெரியாது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் தற்போது உருவாக்கும் கதையை இந்த கருவில் மையப்படுத்தி துவங்குவது நல்லது.
தமிழ் : சரி கதைக்கான நாட் என்கிறார்களே அது என்ன?
இரண்டு மணிநேரம் நீக்க சொல்லப் போகிற கதையின் முக்கியமான பிரச்சனை மற்றும் கருவை சார்ந்த முடிச்சு தான் 'நாட்' எனப்படுகிறது.
அதாவது கதையின் போக்கில் அதிரடியாய் ஒரு பிரச்சனையை உருவாக்கி அது எப்படி விலகும் என்கிற கொக்கியை போடுவது.
உதாரணத்திற்கு இத்தனை நாள் தன்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொண்ட அப்பா அம்மா இருவரும் தன் நிஜ அப்பா அம்மா இல்லை என்கிற அதிரடியான தகவலை சொல்வது. பிறகு அது எப்படி நிகழ்ந்தது அதற்கான தீர்வு என்ன? என்று யோசிக்க வைப்பது முடிவில் விடை சொல்வது. இதுதான் நாட் அதாவது முடிச்சு.
நீங்கள் கதையை தீர்மானித்துவிட்டிருந்தால் அதிலுள்ள முக்கியமான திருப்பம் அல்லது முக்கியமான சம்பவம் எது என்பதை யோசியுங்கள். அந்த திருப்பத்திற்கு பிறகு சம்பவத்திற்கு பிறகு கதையை எப்படி நகர்த்தப் போகிறீர்கள். எப்படி அந்த திருப்பத்திற்கு சம்பவத்திற்கு தீர்வு சொல்லப்போகிறீர்கள் என்று தீர்மானியுங்கள் இப்படி நீங்கள் தீர்மானித்து விட்டால் முழு கதையையும் உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
தமிழ் : நான் முழுகதையையும் யோசிச்சிட்டேன். அதை எப்படி தயாரிப்பாளர்கள் கிட்டே சொல்றது?
நீங்கள் யோசித்திருக்கும் கதையில் முதலில் 'கரு' என்ன என்பதை தீர்மானித்து விட்டீர்களா? அடுத்து கதைக்குள் நிகழும் அதிரடியான சம்பவமும் அதற்கான தீர்வும் என்கிற 'நாட்'டை தீர்மானித்துவிட்டீர்களா? இப்போது தாராளமாக கதை சொல்ல புறப்படலாம். ஏனெனில் ஒரு தயாரிப்பாளர் முதலில் கேட்கும் கேள்விகள் இதுதான் படத்தின் கரு என்ன? நாட் என்ன?
நீங்கள் இதில் தெளிவாக இருப்பதால் பிரச்சனையில்லை உடனே சொல்லிவிடலாம். கதையின் கருவும், நாட்டும் பிடித்திருந்தால் உடனே முழுக் கதையையும் சொல்லும்படி தயாரிப்பாளர் உங்களிடம் கேட்பார். உடனே நீங்கள் உங்கள் கதையில் வரும் நாயகன் யார் என்பதை அவரின் கற்பனைக்காக ஒரு பிரபல ஹீரோவின் பெயரைச் சொல்லி அவர் மூலமாகவே கதை நகர்வதாக ஆரம்பிக்கலாம்.
நீங்கள் சொல்லப்போகிற கதைக்காக ஒரு மணி நேரத்தையோ அதற்கும் கூடுதலான நேரத்தையோ செலவிட முடியாத பிஸியில் இருக்கும் தயாரிப்பாளர் என்றால் இரண்டு வரியில் உங்கள் கதையை சொல்லுங்கள் என்பார். அப்பொழுது நீங்கள் அதிர்ச்சியடையாமல் தைரியமாக இரண்டு வரிகளில் கதை சொல்ல முடியும் அதாவது கதையின் கருவையும் நாட்டையும் இணைத்து நீங்கள் தீர்மானித்திருக்கிற கதையை இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம்.
உதாரணத்திற்கு இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் தனது படத்தின் கதையை இரண்டே வரிகளில் தீர்மானிப்பதாக எழுதியிருக்கிறார். அதாவது அவருடைய அந்த ஏழு நாட்கள் படத்தின் கதையை இரண்டு வரியில் சொல்வதென்றால்.
"என் காதலி உன் மனைவியாகலாம். ஆனால்
உன் மனைவி என் காதலியாக முடியாது."
இதுதான் அந்த முழுபடத்தின் கதை நீங்கள் யோசித்திருக்கும் கதை இதுபோல் இரண்டு வரிகளில் சொல்ல முடியுமா? என்று யோசியுங்கள்.
வித்தியாசமான 'நாட்'கள் உருவாக இந்த இரண்டு வரி கதை என்பது ஒரு டெக்னிக்கான விஷயமாக இருப்பதால் உங்கள் கதையை நீங்கள் மேலும் மெருகூட்ட இது ஒரு வழியாக இருக்கும். அடுத்து நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு கதை சொல்வதாக இருந்தால் முதலில் கதையை துவங்கும் போது கதை துவங்கும் காலம் அதாவது பருவம் கதை நடக்கும் இடம் (களம்) இரண்டையும் மிகத் தெளிவாக குறிப்பிடுங்கள். அது ஒரு மழைக்காலம் கடற்கரையோர கிராமம் அதில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த முஙபபது வயது இளைஞன் தான் ஹீரோ என்று தெளிவாக ஆரம்பிக்க வேண்டும். அடுத்து கதையின் போக்கை முழு படத்திற்கும் நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
முதல் பகுதியில் கதையிலுள்ள பாத்திரங்களும், பாத்திரங்களின் தன்மைகளும் விளக்கப்பட வேண்டும். அதேபோல் படத்தில் முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே கதைக்குள் பார்வையாளனை ஒன்ற வைக்கும் விதமாக கதையை உருவாக்க வேண்டும்.
அடுத்து இடைவேளை பகுதிவரை இரண்டாவது பகுதியாக நிர்ணயிக்க வேண்டும் அந்த இரண்டாவது பகுதியில்தான் நீங்கள் அனுமானித்திருக்கிற திருப்பம் என்கிற நாட் வரவேண்டும் அப்பொழுது தான் இடைவேளைக்கு செல்கிற பார்வையாளர்களின் மனதில் அது என்ன? ஏன்? என்னவாகும்? என்கிற கேள்விகளை உருவாக்கி அடுத்த நகர இருக்கிற படத்தில் ஆர்வமாக ஒன்றிடச் செய்யும்.
இடைவேளைக்கு அடுத்தது மூன்றாவது பகுதியாக தீர்மானித்து கதையை துவக்கி, நீங்கள் உருவாக்கிய பிரச்சனை எதனால் வந்தது? ஏன் அந்த நிலை என்பதை விளக்க வேண்டும்.
கடைசி நான்காவது பகுதியில் அந்த திருப்பத்திற்கு விடை சொல்ல ஆரம்பித்து தெளிவான பதிலாக சொல்ல வேண்டும். இப்படி நான்கு பகுதிகளாக பிரித்துக் கொண்டால் நீங்கள் கதையை நகர்த்தி செல்ல ஏதுவாக இருக்கும்.
முன்பெல்லாம் எம்.ஜி.ஆர் ஃபார்முலா என்றிருந்தது முதலில் ஒரு அம்மா அல்லது பாசத்தை உள்ளடக்கிய ஒரு செண்டிமெண்ட் சீன். அடுத்து ஒரு காமெடி அடுத்து ஒரு ரொமான்ஸ் சீன் அடுத்து ஒரு ஃபைப் என முழுபடமும் சங்கிலிக் கோர்வையாக நகரும்.
முதலில் சீனில் ஹீரோவும் ஹீரோயினும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அடுத்த சீள்ன சோக சீனாக இருக்கும்.
ஆனால் இன்று அதுபோல் எந்த பார்முலாவில் இல்லை முதல் ரீலிலேயே மூன்று பாடல்கள் கூட வருகிறது. இடைவேளைக்கு முன்பே கதை முடிந்து இடைவேளைக்குப் பிறகு வேறு கதை ஆரம்பிக்கிறது.
ஆனாலும் கதையோட்டத்தில் ப்ளோ என்கிற தெளிவு இப்போது கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டிய சூழலிருக்கிறது.
நீங்கள் உங்கள் கதையை மேலே சொன்னது போன்று நான்கு பகுதிகளாக பிரித்துக்கொண்டால் கண்டிப்பாக கதையோட்டம் தெளிவாகி விடும்.
தமிழ் : சரி. கதை இப்படி இருக்கட்டும் திரைக்கதைன்னு சொல்றாங்களே அதை எப்படி எழுதுறது?
மேலே சொன்ன நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்ளும் டெக்னிக்கே திரைக்கதைக்கான டெக்னிக்தான்.
Thanks: Kumudam.com</span>
|
|
|
| NIRUPAM TAMIL WEEKLY |
|
Posted by: Rajan - 09-15-2004, 06:31 PM - Forum: புலம்
- Replies (19)
|
 |
பிரித்தானியா தமிழருக்கு ஒரு
பிரத்தியேக பத்திரிகையாக
இவ்வாரம் முதல் நிருபம் என்ற
பத்திரிகை வெளிவரயுள்ளது
இந்த பத்திரிகை நடு நிலையாக
இருந்து உண்மையை பிரசுரிக்கும்
என்று நம்புகிறோம் எனது வாழ்த்துக்கள்
நிருபம் 0044 869 1001
|
|
|
|