![]() |
|
சினிமாவுக்கு பின்னால்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26) +--- Thread: சினிமாவுக்கு பின்னால்... (/showthread.php?tid=6716) Pages:
1
2
|
சினிமாவுக்கு பின்னால - AJeevan - 09-16-2004 <span style='color:brown'><b>சினிமாவுக்கு பின்னால்... சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் _ பெ.கணேஷ்</b> <img src='http://www.kumudam.com/cinema/camra.png' border='0' alt='user posted image'> சினிமாவைப் பற்றி நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். பல புத்தகம் சினிமா தொடர்பாக வந்திருக்கின்றன. ஆனால் அதிலெல்லாமிருந்து சற்றே வித்தியாசமானதாக இந்த தொடர் இருக்கும். பதினைந்து ஆண்டுகள் சினிமாவின் உதவி இயக்குநனராக, இணைஇயக்குனராக, வசனகர்த்தாவாக பணியாற்றி இயக்குனராக போராடியவன் நான். என்னுள் இருக்கும் ஏமாற்றம், ஆதங்கம், பின்னோக்கி பார்த்தல், புரிதல் தெளிவு என எல்லா உணர்வுகளையும் கொட்டப்போகிறேன். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என்று சினிமாவிலுள்ள அத்தனை டெக்னிகலாக விஷயத்திலும் என்னோட சேர்ந்து நீங்களும் பயணிக்கப் போகிறீர்கள். இத்தொடர் படித்து முடிக்கிற வேளையில் நிச்சயமாக நீங்கள் ஒரு திரைப்படத்தில் வேலை பார்த்த முழுத்திருப்தியை அடைவீர்கள். சினிமா கனவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் சினிமாவை தொடமுடியாமல் வெளிநாடுகளில் ஏக்கத்தோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் இத்தொடர் ஒரு இளைப்பாருதலாக இருக்கும். 1 "சினிமா என்பது ஒரு மாய வித்தையோ, கம்பசூத்ரமோ அல்ல நான் என்ன செய்கிறேன் என்பதை என்னருகில் இருந்து இரண்டு நாட்கள் கூர்மையாக கவனித்தாலே போதும் சினிமா என்பது இதுதானா? என அவர்களுக்கு புரிந்துவிடும்" என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். அவர் சொல்வது போல் சினிமா ஒரு செப்படு வித்தையோ, விடைகாண முடியாத புதிரோ அல்ல. அது ஒரு கலை. யாரும் எந்த வயதினரும் கற்றறியக்கூடிய, பார்த்து உணரக்கூடிய ஒரு மென்மையான கலை. நான் முன்னுரையில் சொன்னது போல். நீங்கள் இத்தொடரை படித்து முடிக்கிற வேளையில் நீங்களும் ஒரு சினிமாவை உணர்ந்த, சினிமாவை அறிந்த கலைஞனாகியிருப்பீர்கள். அந்த நம்பிக்கையோடு இத்தொடருக்குள் நீங்கள் பிரவேசியுங்கள். முதலில் இத்தொடரை கடினமான டெக்னிகல் வார்த்தைகள் இல்லாமல் மிக இயல்பான வழக்குத் தமிழிலேயே எழுதப்போகிறேன். இத்தொடரில் என்னோடு உங்களை கைகோர்த்து அழைத்து செல்லும்விதமாக உங்களுக்கு (வாசகர்களுக்கு) தமிழ் என்கிற பெயரை வைத்திருக்கிறேன். உங்களுக்குள் எழும் சந்தேகம், கேள்விகள் எல்லாமும் தமிழ் என்கிற பெயரின் மூலம் எழுப்பப்பட்டு அதற்கு நான் பதில் சொல்லும் விதமாக தொடர் நகரும். இந்த நடை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையோடு முதலில் திரைப்படத்திற்கு வேர் போன்ற 'கதை'யில் இத்தொடர் துவங்குகிறது. 1.திரைப்படத்திற்கு கதை எழுதுவது எப்படி? நிறைய பேர் மனதிலிருக்கும் கேள்வி இது. கிராமங்களில், நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் மனதில் செதுக்கி கதையாக வடிவம் கொடுத்திருப்பார்கள். ஆனால் அதை எப்படி சொல்வது? எப்படி எழுதுவது என்று தெரியாது. எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்கிற குழப்பம் இருக்கும். கதை என்பது எப்படி சொல்லப்படவேண்டும் கதை எப்படி உருவாக்கப்படவேண்டும் என்று இப்போது பார்ப்போம். என்ன தமிழ் நீங்க எதுவும் கேட்கலே? தமிழ் : அது நானும் ஒரு கதை எழுதி வச்சிருக்கேன் அதை அப்புறம் சொல்கிறேன். முதல்ல நீங்க கதைங்கிறது எவ்வளவு இருக்குன்னு சொல்லுங்க? கதைங்கிறது பெரும்பாலும் எல்லாமும் ஒரே மாதிரிதான் இருக்கும் ஒரு படத்துல ஹீரோ ஏழை, ஹீரோயின் பணக்காரர்ன்னா இன்னொரு படத்துல ஹீரோயின் ஏழை ஹீரோ பணக்காரர்னு இருப்பார். நமக்கு கதையைவிட கதையோட கருதான் முக்கியம். அதாவது எலிப்ஸ்டார் உங்கள் காலத்தில் இன்னைக்கு செல்வராகவன், காலம் வரைக்கும் எடுக்கப்பட்டிருக்கிற எல்லா படங்களும் ஒன்பது 'கரு'விற்குள் தான் அடங்கியிருக்கு. காதல், பாசம், விட்டுக்கொடுத்தல், தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல், பழிவாங்குதல், வறுமையிலிருந்து முன்னேறுதல், தெய்வீகம்னு ஒன்பது கருக்களில்தான் இதுவரையில் தமிழ் சினிமா நகர்ந்திருக்கிறது. நீங்கள் இதுவரை வெளிவந்திருக்கும் எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் இந்த ஒன்பது கருக்களில் ஏதாவது ஒன்றுதான் இருக்கும். இப்படி நீங்கள் முதலில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு அந்தக் கருவை சார்ந்த கதையை சொல்ல முற்பட வேண்டும். அல்லது உங்கள் மனதிலிருக்கும் கதை இந்த கருக்களில் எந்த கருவை சார்ந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மேலே இருக்கும் ஒன்பது கருக்களில் தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல் என்கிற கருக்களை சார்ந்து உங்கள் கதைஇருந்தால் அது ஒரு சக்ஸஸ் பார்முலா கரு. நீங்கள் தாராளமாக உங்கள் கதையை விரிவுபடுத்த ஆரம்பிக்கலாம். அடுத்து சமீபத்தில் வந்திருக்கிற வெற்றி படங்களை நீங்கள் இந்த 'கரு' என்கிற கண்ணோட்டத்தில் ஆராட்யந்தால் எந்த கருக்களை கொண்ட படங்கள் ஹிட்டாகியிருக்கிறது என்பது உங்களுக்கு புலப்படும். உதாரணத்திற்கு தற்போது பெரிய அளவில் ஹிட்டான படங்கள் என்று பார்த்தால் கேரக்டர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்துவிட்டு அந்த சஸ்பென்ஸை ஆடியன்சுக்கு முதலிலேயே விளக்கிவிடுகிற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. இது ஹாலிவுட் இயக்குனர் ஹிட்ச் காக் ஸ்டைல். அதாவது ஹிட்ச் காக் தனது படங்களில் பலவிதமான சஸ்பென்ஸ் படங்களை எடுத்திருக்கிறார். படம் முழுவதும் குற்றவாளி யார் என்பது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் தெரியாது. பார்க்கும் பார்வையாளருக்கும் தெரியாது. கடைசியில்தான் அந்த சஸ்பென்ஸ் விளக்கப்படும் இது ஒருவகை சஸ்பென்ஸ். குற்றவாளி யார் என்பது கேரக்டர்களுக்கு தெரியும். ஆனால் பார்வையாளனுக்கு சொல்லாமல் படம் முடியும்போது தான் தெரியப்படுத்துவார் அது இரண்டாவது வகை சஸ்பென்ஸ். குற்றவாளி யார் என்பதை முதலிலேயே பார்வையாளனுக்கு சொல்லி விட்டு படத்திலுள்ள கேரக்டர்களுக்கு அந்த சஸ்பென்ஸ் படங்கள்தான் தமிழில் பெரிய சக்ஸஸ் ஆகிறது. உதாரணத்திற்கு காதல் கோட்டை. இந்த படத்தில் அஜீத்தும் தேவயாணியும் காதலிப்பது பார்வையாளனுக்கு தெரியும். ஆனால் அந்த கேரக்டர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமல் காதலிப்பார்கள். நேரிலே வரும் போது கூட அவர்களுக்கு தாங்கள் தான் காதலர்கள் என்று தெரியாது. அப்போது முதலிலேயே சஸ்பென்ஸ் தெரிந்ததால் பார்வையாளர்கள் பதறுவார்கள். கடைசியில்தான் அஜீத்துக்கும், தேவயாணிக்கும் தங்கள் தான் காதலர்கள் என்பது புரியும். அதேபோல் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதல் ரீலிலேயே ரம்பா யார் என்பது ஆடியன்சுக்கு சொல்லப்பட்டு விடும். ஆனால் கார்த்திக்கிற்கு ரம்பா யார் என்பது தெரியாமல் அவர் வீட்டுக்கே வந்து டிரைவராக வேலைபார்ப்பார். முடிவில்தான் ரம்பாவை தான் தன் அப்பா தனக்கு பெண் பார்த்தார் என்ற விஷயம் தெரியும். அதேபோல் சேதுவில் டிவக்ரமின் மனநிலை தெளிவடைந்த விஷயப் சூஆடியன்சுக்கு தெரியும் அபிதாவுக்கு தெரியாது. ரமணாவில் விஜயகாந்த் தான் மக்கள் புரட்சி நாயகன் என்பது ஆடியன்சுக்கு தெரியும் படத்திலுள்ள கேரக்டர்களுக்கு தெரியாது. காதல் கொண்டேனில் தனுஷ் சைக்கோ என்பது ஆடியன்சுக்குத் தெரியும் படத்திலுள்ள கேரக்டர்களுக்கு தெரியாது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் தற்போது உருவாக்கும் கதையை இந்த கருவில் மையப்படுத்தி துவங்குவது நல்லது. தமிழ் : சரி கதைக்கான நாட் என்கிறார்களே அது என்ன? இரண்டு மணிநேரம் நீக்க சொல்லப் போகிற கதையின் முக்கியமான பிரச்சனை மற்றும் கருவை சார்ந்த முடிச்சு தான் 'நாட்' எனப்படுகிறது. அதாவது கதையின் போக்கில் அதிரடியாய் ஒரு பிரச்சனையை உருவாக்கி அது எப்படி விலகும் என்கிற கொக்கியை போடுவது. உதாரணத்திற்கு இத்தனை நாள் தன்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொண்ட அப்பா அம்மா இருவரும் தன் நிஜ அப்பா அம்மா இல்லை என்கிற அதிரடியான தகவலை சொல்வது. பிறகு அது எப்படி நிகழ்ந்தது அதற்கான தீர்வு என்ன? என்று யோசிக்க வைப்பது முடிவில் விடை சொல்வது. இதுதான் நாட் அதாவது முடிச்சு. நீங்கள் கதையை தீர்மானித்துவிட்டிருந்தால் அதிலுள்ள முக்கியமான திருப்பம் அல்லது முக்கியமான சம்பவம் எது என்பதை யோசியுங்கள். அந்த திருப்பத்திற்கு பிறகு சம்பவத்திற்கு பிறகு கதையை எப்படி நகர்த்தப் போகிறீர்கள். எப்படி அந்த திருப்பத்திற்கு சம்பவத்திற்கு தீர்வு சொல்லப்போகிறீர்கள் என்று தீர்மானியுங்கள் இப்படி நீங்கள் தீர்மானித்து விட்டால் முழு கதையையும் உருவாக்கி விட்டீர்கள் என்று அர்த்தம். தமிழ் : நான் முழுகதையையும் யோசிச்சிட்டேன். அதை எப்படி தயாரிப்பாளர்கள் கிட்டே சொல்றது? நீங்கள் யோசித்திருக்கும் கதையில் முதலில் 'கரு' என்ன என்பதை தீர்மானித்து விட்டீர்களா? அடுத்து கதைக்குள் நிகழும் அதிரடியான சம்பவமும் அதற்கான தீர்வும் என்கிற 'நாட்'டை தீர்மானித்துவிட்டீர்களா? இப்போது தாராளமாக கதை சொல்ல புறப்படலாம். ஏனெனில் ஒரு தயாரிப்பாளர் முதலில் கேட்கும் கேள்விகள் இதுதான் படத்தின் கரு என்ன? நாட் என்ன? நீங்கள் இதில் தெளிவாக இருப்பதால் பிரச்சனையில்லை உடனே சொல்லிவிடலாம். கதையின் கருவும், நாட்டும் பிடித்திருந்தால் உடனே முழுக் கதையையும் சொல்லும்படி தயாரிப்பாளர் உங்களிடம் கேட்பார். உடனே நீங்கள் உங்கள் கதையில் வரும் நாயகன் யார் என்பதை அவரின் கற்பனைக்காக ஒரு பிரபல ஹீரோவின் பெயரைச் சொல்லி அவர் மூலமாகவே கதை நகர்வதாக ஆரம்பிக்கலாம். நீங்கள் சொல்லப்போகிற கதைக்காக ஒரு மணி நேரத்தையோ அதற்கும் கூடுதலான நேரத்தையோ செலவிட முடியாத பிஸியில் இருக்கும் தயாரிப்பாளர் என்றால் இரண்டு வரியில் உங்கள் கதையை சொல்லுங்கள் என்பார். அப்பொழுது நீங்கள் அதிர்ச்சியடையாமல் தைரியமாக இரண்டு வரிகளில் கதை சொல்ல முடியும் அதாவது கதையின் கருவையும் நாட்டையும் இணைத்து நீங்கள் தீர்மானித்திருக்கிற கதையை இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் தனது படத்தின் கதையை இரண்டே வரிகளில் தீர்மானிப்பதாக எழுதியிருக்கிறார். அதாவது அவருடைய அந்த ஏழு நாட்கள் படத்தின் கதையை இரண்டு வரியில் சொல்வதென்றால். "என் காதலி உன் மனைவியாகலாம். ஆனால் உன் மனைவி என் காதலியாக முடியாது." இதுதான் அந்த முழுபடத்தின் கதை நீங்கள் யோசித்திருக்கும் கதை இதுபோல் இரண்டு வரிகளில் சொல்ல முடியுமா? என்று யோசியுங்கள். வித்தியாசமான 'நாட்'கள் உருவாக இந்த இரண்டு வரி கதை என்பது ஒரு டெக்னிக்கான விஷயமாக இருப்பதால் உங்கள் கதையை நீங்கள் மேலும் மெருகூட்ட இது ஒரு வழியாக இருக்கும். அடுத்து நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு கதை சொல்வதாக இருந்தால் முதலில் கதையை துவங்கும் போது கதை துவங்கும் காலம் அதாவது பருவம் கதை நடக்கும் இடம் (களம்) இரண்டையும் மிகத் தெளிவாக குறிப்பிடுங்கள். அது ஒரு மழைக்காலம் கடற்கரையோர கிராமம் அதில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த முஙபபது வயது இளைஞன் தான் ஹீரோ என்று தெளிவாக ஆரம்பிக்க வேண்டும். அடுத்து கதையின் போக்கை முழு படத்திற்கும் நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் பகுதியில் கதையிலுள்ள பாத்திரங்களும், பாத்திரங்களின் தன்மைகளும் விளக்கப்பட வேண்டும். அதேபோல் படத்தில் முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே கதைக்குள் பார்வையாளனை ஒன்ற வைக்கும் விதமாக கதையை உருவாக்க வேண்டும். அடுத்து இடைவேளை பகுதிவரை இரண்டாவது பகுதியாக நிர்ணயிக்க வேண்டும் அந்த இரண்டாவது பகுதியில்தான் நீங்கள் அனுமானித்திருக்கிற திருப்பம் என்கிற நாட் வரவேண்டும் அப்பொழுது தான் இடைவேளைக்கு செல்கிற பார்வையாளர்களின் மனதில் அது என்ன? ஏன்? என்னவாகும்? என்கிற கேள்விகளை உருவாக்கி அடுத்த நகர இருக்கிற படத்தில் ஆர்வமாக ஒன்றிடச் செய்யும். இடைவேளைக்கு அடுத்தது மூன்றாவது பகுதியாக தீர்மானித்து கதையை துவக்கி, நீங்கள் உருவாக்கிய பிரச்சனை எதனால் வந்தது? ஏன் அந்த நிலை என்பதை விளக்க வேண்டும். கடைசி நான்காவது பகுதியில் அந்த திருப்பத்திற்கு விடை சொல்ல ஆரம்பித்து தெளிவான பதிலாக சொல்ல வேண்டும். இப்படி நான்கு பகுதிகளாக பிரித்துக் கொண்டால் நீங்கள் கதையை நகர்த்தி செல்ல ஏதுவாக இருக்கும். முன்பெல்லாம் எம்.ஜி.ஆர் ஃபார்முலா என்றிருந்தது முதலில் ஒரு அம்மா அல்லது பாசத்தை உள்ளடக்கிய ஒரு செண்டிமெண்ட் சீன். அடுத்து ஒரு காமெடி அடுத்து ஒரு ரொமான்ஸ் சீன் அடுத்து ஒரு ஃபைப் என முழுபடமும் சங்கிலிக் கோர்வையாக நகரும். முதலில் சீனில் ஹீரோவும் ஹீரோயினும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அடுத்த சீள்ன சோக சீனாக இருக்கும். ஆனால் இன்று அதுபோல் எந்த பார்முலாவில் இல்லை முதல் ரீலிலேயே மூன்று பாடல்கள் கூட வருகிறது. இடைவேளைக்கு முன்பே கதை முடிந்து இடைவேளைக்குப் பிறகு வேறு கதை ஆரம்பிக்கிறது. ஆனாலும் கதையோட்டத்தில் ப்ளோ என்கிற தெளிவு இப்போது கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டிய சூழலிருக்கிறது. நீங்கள் உங்கள் கதையை மேலே சொன்னது போன்று நான்கு பகுதிகளாக பிரித்துக்கொண்டால் கண்டிப்பாக கதையோட்டம் தெளிவாகி விடும். தமிழ் : சரி. கதை இப்படி இருக்கட்டும் திரைக்கதைன்னு சொல்றாங்களே அதை எப்படி எழுதுறது? மேலே சொன்ன நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்ளும் டெக்னிக்கே திரைக்கதைக்கான டெக்னிக்தான். Thanks: Kumudam.com</span> - AJeevan - 09-16-2004 <b>சினிமாவுக்கு பின்னால்... சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்- பாகம் - -2</b> _ பெ.கணேஷ் _ திரைக்கதை எழுதுவது எப்படி? மிக அழகாக கதை எழுதுபவர்கள் கூட திரைக்கதை என்று வருகிற போது அதை எப்படி ஆரம்பிப்பது அதற்கான வழிமுறைகள் என்ன என்று புரியாமல் இருப்பார்கள். சென்ற வாரம் நலன் சொன்னது போன்று ஒரு கதையை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்வது கூட திரைக்கதை வடிப்பதில் ஒரு யுக்தியாகும். தமிழ்: கதையை விரிவுப் படுத்துவதற்கு பெயர்தான் திரைக்கதையா? கதையை விரிவுபடுத்துவதற்கு பெயர் திரைக்கதை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஒரு கதையை விரிவுபடுத்துவதால் அது திரைக்கதையாகி விடாது. திரைக்கதை என்பது கதையோடு இணைந்த ஒரு சம்பவங்களில் கோர்வை என்று சொல்வதே மிகச் சரி. தமிழ் உங்களுக்கு விளக்கும்படியாகவே சொல்கிறேன். காதல் கோட்டை என்கிற படத்தை எடுத்துக் கொண்டால் பார்க்காமலே இருவர் காதலித்து.. முடிவில் இணைகிறார்கள் இதுதான் கதை. ஆனால் அந்த இரு வரிகளுக்கு மிக அழகாக சம்பவங்களை பொருத்தமாக வடித்ததால்தான் இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் என்கிற விருது இயக்குனர் அவத்தியனுக்கு கிடைத்தது. அதாவது பார்க்காமலே இருவர் காதலிக்கிறார்கள் என்கிற விஷயத்தை அவர் செல்ல ஆரம்பிக்கும் சம்பவம் மிக யதார்த்தமாக துவங்கும். இரயிலில் சர்டிபிகேட்டை தொலைப்பது அதன் மூலம் கடித நட்பு. நட்பு காதலாக மாறுவது அந்த பெண்ணின் அக்காவின் கணவரின் கண்டிப்பு. முடிவில் அந்த கேரக்டரையும் நல்லவராக மாற்றுவது. இடையில் கதாநாயகனை நெய்யப்பட்டிருக்கு அனுப்புவது அங்கிருந்து ஃபோன் பேச முயலும் போது தடங்கல் இருவரும் சென்னையில் சந்தித்தபோதும் உணர்ந்து கொள்ள முடியாதது. அடைமழையில் ஒரே ஆட்டோவில் இருந்தும் தாங்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியாது என்று மனித உணர்வுகளை தட்டி எழுப்பும் படியான சம்பவங்களின் சோர்வை அந்த படத்தில் இருந்துதான் அப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகிறது. திரைக்கதை என்று இப்படித்தான் கதையை நகர்த்தி செல்லும் சம்பவங்களிலே கோர்வையாக இருக்கவேண்டும். தமிழ் : சம்பவங்களின் கோர்வை சரி.. அதற்கான வழிமுறை எப்படி இருக்க வேண்டும்? இதற்கு பெரிதாக வழிமுறை எதுவும் இல்லை. நீங்கள் மனதில் நினைத்திருக்கும் கதையை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொண்டவுடன் கதையை நகர்த்தும் சம்பவங்களின் அடிப்படையில் எழுபதிலிருந்து என்பது சீன்களை உருவாக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு பகுதிக்கும் இருபது சீன்கள் இருக்கலாம். இந்த இருபது சீன்களிலேயே கதையோடு ஒட்டிய பாடலும்_சண்டைக் காட்சியும் அமைக்க வேண்டும். அதாவது நீங்கள் சம்பவங்களை யோசித்த பிறகு அதை ஒவ்வொரு சீன்களாக பிரித்து எழுத வேண்டும் உதாரணத்திற்கு சீன் : 1 இடம் : மார்க்கெட் காலம் : பணிக்காலம் _ அதிகாலை. பாத்திரங்கள் : ராஜா (ஹீரோ), மின்மினி (ஹீரோயின்), காய்கறிகடைக்காரர் வயதான மீசைக்காரர், துணை நடிகர்கள். என்று சீன் என்னையும் காலம், இடம் மற்றும் பாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டுவிட்டு சம்பவத்தை எழுத வேண்டும். அதாவது அதிகாலையில் காய்கறிகடைக்குள் நுழையும் ராஜா காய்கறிகளை விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கும் போது எதிரே தலைமறவாக விலைக்கேட்டு எதிர் கடைக்காரரை கலாய்த்துக் கொண்டிருக்கும் மின்மினியை பார்க்கிறாள். அப்பொழுது மின்மினி ராஜாவை ஒரு நொடி கவனித்துவிட்டு மீண்டும் கடைக்காரரிடம் கலாய்க்கிறாள். ராஜா அவளின் சமார்த்திய பேச்சை ரசித்தபடி அவளையே பார்க்க.. பேச்சின் இடையே ராஜாவை கவனித்த மின்மினி.. "யோவ் சின்னாலுக் விடறே... மார்க்கட்டுக்கு வந்தமாம் காய்கறியை வாங்கினமாம்னு போய்கிட்டே இரு.. இங்க வந்து லுக் விடறது.. ரொமான்ஸ் பண்றது இதெல்லாம் வச்சிக்காதே அப்புறம் டங்குவாளு அறுந்திடும்" என்று சொல்ல ராஜா திடுக்கிட்டு தலைகுனிகிறாள். ஆனால் உண்மையில் மின்மினி திட்டியது ராஜாவை அல்ல ராஜாவிற்கு பின்புறமாக இருக்கும் வயதான ஒரு கடாமீசை ஆசாமியை என்று உணர்த்தப்படுகிறது. இது தான் அந்த காட்சியின் சம்பவம் என்று வைத்துக்கொள்வோம் இந்த காட்சியின் சம்பவத்தை நீங்கள் இப்படி தெளிவாக எழுதியவுடன் கடைசி வரியான கடாமீசை ஆசாமியைத்தான் ஹீரோயின் திட்டினாள் என்பதை உணர்த்த ஹீரோயினுக்கும் வயதான ஆசாமிக்கும் இரண்டு குளோசம் ஷாட்களை வைத்து விளக்கி விட வேண்டும் என்பதையும் குறித்து விட வேண்டும். அடுத்து சீன்: எண்:2 என்று புதிய சம்பவத்தோடு மீண்டும் அந்த ஹீரோவும், ஹீரோயினும் சந்திக்கும் காட்சியோ அல்லது நீங்கள் ஹீரோயின் குடும்ப சூழலை விளக்க நினைக்கும் காட்சியையோ தொடர வேண்டும். இப்படி நீங்கள் எழுபதிலிருந்து எண்பது சீன்களை சம்பவங்களை யோசித்தவுடன் முதலில் One Line Order என்கிற சம்பவ சுறுக்கத்தை எழுதிக்கொள்ள வேண்டும். சீன்: 2 இடம்: ராஜா வீடு காலம்: பகல் நடிகர்கள் : ராஜா, சிவகாமி, பாட்டி. ராஜாவின் பாட்டி ராஜாவிடம் அவன் அம்மா சிவகாமி அவனை சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளும்படி வருந்துவதாக சொல்ல, ராஜா அவன் அம்மாவை கண்வீனியன்ஸ் செய்தல். சீன்:3 இடம்: மின்மினிவீடு. காலம்: பகல். நடிகர்கள்: மின்மின் _ தாத்தா _ சுலோச்சனா மின்மினி மிகவும் துடிப்பான பெண்ணாக இருப்பது பயமாக இருப்பதாக மின்மிணியின் அம்மா சுலோச்சனா சொல்ல அவள் தாத்தா என் பேத்தி இப்படித்தான் இருக்கணும் என்று மின்மினிக்கு தைரியம் சொல்லுதல். இப்படி சம்பவத்தை மிகச் சிறிதாக குறித்துக் கொண்டால் அடுத்து அடுத்த சம்பவத்தை மாற்றவோ அல்லது அந்த சம்பவத்தை மேலும் சுவாரஸ்யமாக உருவாக்கவோ வசதியாக இருக்கும். இதுபோல் கிளைமாக்ஸ் வரை One line order ஐ முடித்த பிறகு விரிவான சம்பவங்களை எழுத துவங்க வேண்டும். ஒரு சிலர் முதலில் விரிவான சம்பவத்தை எழுதி முடித்து பிறகு அதிலிருந்து One line order ஆக சுறுக்கி எழுதுவார்கள் அப்படியும் கூட எழுதலாம். ஏனெனில் ஷீட்டிங் புறப்படுவதற்கு தயாராகும் பிரேக்டவுன், ஷெட்யூல் ஆர்டர், ஆர்டிஸ்ட் காம்பினேஷன் ஆட்ரரை தயாரிக்க இந்த One line order மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் : பிரேக் டவுனா அப்படின்னா என்ன? ஒரு முழு திரைப்படத்தின் ஒட்டு மொத்த காட்சிகளுக்கும் தேவையான பொருட்கள், நடிகர்கள், உடைகள், போன்றவற்றை கண்டறிவதற்கும், நடிகர்களின் கால்ஷீட் தேதிகளை நிர்ணயிப்பதற்கு உதவியாக இருப்பது தான் பிரேக் டவுன். உதாரணத்திற்கு இப்போது சொல்லப்பட்ட மூன்று காட்சிகளை வைத்த ஒரு பிரேக் டவுனை பார்ப்போம். சீன் இடம் காலம் சம்பவம் நடிகர்கள் உடைகள் ஸ்பெஷல் பிராபர்ட்டீஸ் தகவல் குறிப்பு 1 மார்க்கெட் அதிகாலை காய்கறி கடையில் ராஜாவும் மின்மினியும் முதல் சந்திப்பு ராஜா மின்மினி காய்கறி கடைக்காரர் வயதான மீசைக்காரர் துணை நடிகர்கள் சட்டை லுங்கி பாவாடை தாவணி லுங்கி, பனியன் வேட்டி, சட்டை காய்கறிகள் பிளாஸ்டிக்கூடை துணிப்பை தராசு 2 ராஜா வீடு பகல் ராஜா கல்யாணம் குறித்து அம்மா வருத்தம் ராஜா ஆறுதல் சொல்லுதல் ராஜா பாட்டி அம்மா (சிவகாமி) சட்டை ஃபேண்ட் புடவை புடவை காபி டம்ளர்கள் 3 மின்மினி வீடு பகல் மின்மினியின் துணிச்சல் குறித்து அம்மா கவலை தாத்தா உற்சாகப்படுத்துதல். மின்மினி அம்மா (சுலோச்சனா) தாத்தா பாவாடை தாவணி புடவை ஜிப்பா வேட்டி காய்கறி கூடை கத்தி காய்கறிகள் மேலே நீங்கள் பார்ப்பதுதான் பிரேக்டவுன் இதில் உங்கள் காட்சியின் சம்பவங்களில் தேவைப்படும் பொருட்களை ஸ்பெஷல் ப்ராப்பர்டி காலத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். இப்படி என்பது சீண்டலுக்கான அட்டவணையை தயார்படுத்திவிட்டால் ஷீட்டிங் நடக்கும்போது நாம் எடுக்க வேண்டிய காட்சிக்கு தேவையான பொருள்களை இதன் மூலம் எளிதில் அடையாளம் கண்டு விடலாம். அதன்படி முன்நாளே அப்பொருள்களை தயார்படுத்த முனைந்து விடலாம். அதேபோல் ஷெட்யூல்க்களின் லோக்கேஷன்களை பிரிப்பதற்கும் எந்தஎந்த காட்சிகளில் யார், யார் நடிக்கிறார்கள் எத்தனை காட்சிகளில் சேர்ந்து நடிக்கிறார்கள். எந்த இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அதன்படி கால்ஷீட்டுக்கான நாங்களை உருவாக்க முடியும். தமிழ் : கால்ஷீட் தேதி நடிகர்களிடம் துள்ளியமாக கணித்து வாங்குவதற்கு சுலபமான வழிமுறை இருக்கா..? இருக்கு. அதுவும் ஒரு அட்டவணை முறை தான். இதை பொதுவாக திரைப்படக்கல்லூரியில் பயின்ற இயக்குனர்கள் பயன்படுத்துகிறார்கள் அதாவது கீழே உள்ள அட்டவணையை கவனியுங்கள். சீன் ராஜா மின்மினி ராஜா அப்பா மின்மினி அப்பா மின்மினி அம்மா மின்மினி தாத்தா வில்லன் ராஜா தங்கை காய்கறி கடைக்காரன் துணை நடிகர்கள் ................... படத்தில் நடிக்கும் முக்கியமான நடிர்களை கொண்டு இப்படி அட்டவணை தயாரிக்க வேண்டும் இதன் மூலம் எந்த சீனில் யார், யார் நடிக்கிறார்கள் என்பதை ஸ்டார் அடையாளத்தை வைத்து எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும் அதன்படி எங்கே எந்தெந்த காட்சிகளில் எந்த எந்த நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள் என்பதை பொறுத்து கால்ஷீட் தேதியை கணித்து வாங்கிவிடலாம். என்ன.. ஓரளவுக்கு சூட்டிங் கிளம்புவதற்கு தயாராகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்தவாரம் ஒரு சீனை எப்படி பல ஷாட்களாக பிரிப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம். அதுவரை ........................ - AJeevan - 09-16-2004 <span style='color:green'>சினிமாவுக்கு பின்னால்... -சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்- பாகம் - 3 _ பெ.கணேஷ் _ சினிமாவின் இயக்கம் என்பது என்ன? தமிழ்: நீங்க ஒரு காட்சியை எப்படி பல ஷாட்களாக பிரிப்பது? எத்தனை வகையான ஷாட்கள் இருக்கிறது என்று சொல்றதுக்கு முன்பாக சினிமா எப்படி இயங்குகிறதுன்னு தெளிவா சொல்லுங்க அப்பதான் எனக்கு விளங்கும். ஓ. நீங்க அப்படி வர்றீங்களா? சரி முதல்ல ஃபிலிம்ல இருந்து ஆரம்பிப்போம் சினிமாவுக்கு பயன்படுத்தற பிலிமை ரா ஸ்டாக்குன்னு (பிலிம் நெகட்டிவ்) சொல்லுவாங்க. அதாவது நானூறு அடி கேன்ல இதை கலர் லேப்ல இருந்து வாங்க முடியும். ஒரு படத்துக்கு அறுபது ஆயிரத்துல இருந்து ஒரு லட்சம் அடி வரைக்கும் செலவாகும் அது டைரக்டர்கள், கேமராமேன்களை பொறுத்து மாறுபடும் இப்போதைக்கு ஃப்யூஜியும் ஈஸ்ட்மென் கலர்பிலிமும்தான் பெரும்பாலும் உபயோகப்படுத்தறாங்க. ப்யூஜியோட விலை ஆயிரம் அடி பதினைந்தாயிரம் ரூபாய் ஈஸ்ட்மென் கலர் பிலிம் இருபத்தொரு ஆயிரம் ரூபாய். இது ரெண்டுக்கும் என்ன வித்யாசம்னா ப்யூஜி ஃபிலிம் யூஸ் பண்ணும்போது லைட்டிங் கொஞ்சம் அதிகமா தேவைப்படும் ஈஸ்ட்மென் பிலிம்க்கு அவ்வளவா தேவைப்படாது. அந்த பிலிம்லயும் டே லைட்டிற்கான ஃபிலிம், நைட் ஃஎபடெக்டுக்கான பிலிம் ஹை ஸ்பீடு பிலிம்னு நிறைய வெரைட்டி இருக்கு. நாம படமெடுக்கற சூழலுக்குத் தகுந்த மாதிரி மழைகளிலும், வெயில்களிலும், இரவு நேரம், அதிகாலை நேரம்னு ஒவ்வொரு காலத்துக்கு தகுந்த மாதிரி ஃபிலிம்களை உபயோகிப்பாங்க. அடுத்து கேமராவுல படம் பதிவாகிற ஸ்பீடுங்கிறது தான் படம் அசைவதற்கும், இயங்குவதற்கும் முக்கிய காரணம். அதாவது ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம்கள் என்கிற வேகத்தில் படம் பதிவாகிறது. அதே வேகத்தில் தியேட்டர் புரொஜக்டரில் ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம்கள் என்கிற வேகத்தில் சுழல்வதால் படம் அசைகிறது கேரக்டர்கள் நகர்கிறது, நடிக்கிறது, பாடுகிறது. அடுத்து ஒரு ஷாட்டுக்கும் மற்றொரு ஷாட்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி மைனஸ் ஒரு செகண்டுக்கும் குறைவான நேரம் என்பதால் அடுத்த காட்சி வருவது நம் கண்ணுக்கு புலப்படாமல் போகிறது. அதாவது நமது கண் உணரும் சக்தியை விட வேகமாக ஒரு பிரேமும் மற்றொரு பிரேமும் இணைவதால் நாம் படச்சுருள் ஓடுகிறபோது காட்சி மாற்றத்தின் கட்டிங்கை அதாவது ஃப்லிமின் ஒட்டுதலை உணரமுடியாமல் போகிறோம். உதாரணத்திற்கு ஒருவர் முகம் குளோசப்பாக காட்டப்பட்டு அடுத்த நொடி மிகப் பெரிய வீடு காட்டப்படும்போது அந்த காட்சி மாற்றத்தின் ஃபிலிம் ஒட்டுதலை உணராமல் காட்சியை மட்டும் நாம் கவனிக்க முடிகிறது. ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம் அதாவது ஒன்றரை அடி பிலிம் கேமராவில் பதிவாகிறது. அப்படியெனில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரத்து நானூற்று நாற்பது பிரேம்கள், அதாவது தொன்னூறு அடி பிலிம் பதிவாகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஐந்தாயிரத்து நானூறு அடிகள் பதிவாகிறது. ஒரு ரீல் என்பது ஆயிரம் அடிகளை குறிக்கும் அப்படியெனில் இரண்டு மணி நேரப் படத்திற்கு பதினோராயிரம் அடி பிலிம் தேவைப்படுகிறது. ஆனால் நேரடியாக பதினோராம் அடிகளுக்கு பிலிமில் படம் எடுத்தால் போதும் என்றாகிவிடாது. குறைந்தது அறுபதாயிரம் அடிகள் வரை பதிவு செய்தால் மட்டுமே அதிலிருந்து நமக்கு எடிட்டிங் போக பதினோராயிரம் அடிகள் கிடைக்கும். அடுத்து தற்போது சினிமா ஸ்கோப் படங்கள் மட்டுமே எடுக்கப்படுவதால் இதற்கு தனியாக ஃபிலிம் வேண்டுமோ என்று நீங்கள் நினைக்கலாம். தேவையில்லை 35எம்எம் பிலிமிலேயே தற்போது சினிமாஸ்கோப் எடுக்கும் வசதியுள்ளது அதாவது தற்சமயம் சினிமாவிற்கு பயன்படுத்துகிற ERRIFLEX2, ERRIFLEX3, 435 போன்ற கேமராக்களின் பதிவு செய்யும் கேட்டை சினிமாஸ்கோப் படம் எடுக்கும் விதத்தில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். சினிமாஸ்கோப்பிற்கென்று படம்பிடிக்கும் லென்சும் மாற்றப்படவேண்டும். அடுத்து நான் சொன்னதுபோல் ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம்கள் என்கிற வேகத்தை கூட்டி ஒரு செகண்டுக்கு நாற்பத்தெட்டு, எழுபத்து இரண்டு பிரேம்கள் என்று மாற்றி பதிவு செய்தால் அது ஸ்பீடு ஆகும். அதாவது எழுபத்து இரண்டு பிரேம் வேகத்தில் ப்ராஜெக்டரில் ஓட்டும்போது திரையில் நடிக்கும் நடிகர்கள் மெல்ல நடப்பது போலவும், பறப்பது போலவும் தெரியும் கனவு காட்சிகளில் தேவதைகள் பறந்து வருவதுபோல் வரும் காட்சிக்குபடி எடுக்கப்பட்டதுதான். இப்பொழுது ஓரளவு சினிமாவின் இயக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அடுத்து காட்சியை எப்படி பல கோணங்களாக (ஷாட்) பிரிப்பது என பார்ப்போம். தமிழ் : ஷாட்ன்னா என்ன? அதுல எத்தனை வகைகள் இருக்குன்னு முதல்ல சொல்லுங்க. ஷாட்ங்கிறது நமது கண்பார்வையின் கோணம். அதாவது நாம் ஒரு பொருளை பார்க்கும்பேறு அது நம் கண்ணுக்கு எப்படி புலனாகிறது என்பதை குறிப்பதுதான் ஷாட். ஷாட்டில் பலவகை இருக்கிறது. அதாவது ரொம்ப நெருக்கமா ஒரு பொருள் நம் கண்பார்வையில் படுவது குளோசப். <img src='http://www.kumudam.com/cinema/ecs.jpg' border='0' alt='user posted image'> <b>BCU or XCU</b> தமிழ் இப்ப நீங்க என் கண்களை மட்டுமே பார்க்கறீங்கன்னு வச்சுப்போம் அதுக்கு எக்ஸ்ட்ரீம் குளோசப் ஷாட்டுன்னு பேரு. <img src='http://www.kumudam.com/cinema/cs.jpg' border='0' alt='user posted image'> <b>CU</b> அதையே நீங்க என் முகத்தை முழுதுமாக அதாவது முகத்தை மட்டுமே கூர்ந்து பார்ப்பது குளோசப் ஷாட் <img src='http://www.kumudam.com/cinema/ms.jpg' border='0' alt='user posted image'> <b>MS</b> அடுத்து முகத்திலிருந்து இடுப்பு வரை பார்ப்பது மிட் ஷாட். <img src='http://www.kumudam.com/cinema/fs.jpg' border='0' alt='user posted image'> <b>LMS</b> என்னை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பார்ப்பது ஃபுல் ஷாட். அதாவது லாங் மிட் ஷாட் இப்படி நீங்க என்னை முழுதுமாக பார்க்கும்போது உனக்கு என் பின்னாலிருக்கும் இடமும் சூழ்நிலையும் தெரியும் என்பதை மனதில் குறித்துக்கொள். <img src='http://www.kumudam.com/cinema/mls.jpg' border='0' alt='user posted image'> or <b>MLS</b> அதற்கடுத்து நான் உன்னுடன் பேசுவதை மற்றொருவர் கவனிக்கிறார் என வைப்போம். அப்போது தொலைவில் அவருடைய பார்வையில் நாம் இருவரும் நமக்கு பின்னாலிருக்கும் இடமும், சூழலும் தெரியும் அது மிட் லாங் ஷாட். <img src='http://www.kumudam.com/cinema/ls.jpg' border='0' alt='user posted image'> <b>LS</b> நாம் இருவர் பேசிக்கொண்டிருக்க பின் பிறமிருந்து மலை எல்லாம் எதிரே இருக்கும் நபரின் பார்வைக்கு தெரிய வருகிறதென்றால் அது லாங் ஷாட். <img src='http://www.yarl.com/forum/files/has.jpg' border='0' alt='user posted image'> <b>H/A அடுத்து நாம் பேசுவதை ஒரு உயரமான மாடியிலிருந்து ஒருவர் கவனிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது பார்வையில் நாம் தெரிவது டாப் ஆங்கிள் ஷாட். <img src='http://www.yarl.com/forum/files/las.jpg' border='0' alt='user posted image'> [b]L/A</b> அப்படியில்லாமல் நாம் மாடியிலிருந்து பேச, கீழேயிருந்து ஒருவன் நம்மை பார்த்தால் அவரது பார்வையின்படி அது லோ ஆங்கிள் ஷாட். <img src='http://www.quintessentialwebsites.com/lordoftherings/movieshots/arwen_romance_tn.jpg' border='0' alt='user posted image'> <b>OSS</b> அடுத்து என் முன்பாக நீ நிற்க நான் உன்னுடன் பேசுவதை உன் இடது தோள்பட்டையின் வழியாக என் முகத்தை ஒருவர் கவனித்தால் அது ஓவர் ஷோல்டர் ஷாட். சினிமாவில் இப்படி ஒரு காட்சி எடுக்காவிட்டால் அதற்கு கவுண்ட்டர் (தொடர்ச்சி) ஷாட்டாக என் வலது தோளின் வழியாக உன் முகம் தெரியும் விதமாக அடுத்த ஷாட்டை எடுப்பார்கள். அதாவது லெப்ட் & ரைட் இதுதான் சினிமா இலக்கணம். என் வலத்தோளின் வழியாக உன் முகம் தெரியும்படி ஷாட் வைத்தால் அடுத்த ஷாட் இடத்தோளின் வழியாக என் முகம் தெரியும்படி எடுக்கவேண்டும். அடுத்து... ஒரு சீனுக்கு எத்தனை ஷாட்களை பிரிக்கலாம் என்பது அந்த காட்சியின் முக்கியத்துவத்தை, சூழ்நிலையை பொறுத்து மாறுபடும். ஒரு சில காட்சிகள் இரண்டு மூன்று ஷாட்களிலேயே எடுத்து விடலாம். ஆனால் ஒரு சில காட்சிகளுக்கு இருபதிலிருந்து ஐம்பது ஷாட்கள் வரை தேவைப்படும். உதாரணத்திற்கு கிளைமாக்ஸ்ஸை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஹீரோ.. ஹீரோயின் வீட்டுக்கு வந்து நமக்கு நடந்தது காதல் திருமணம் என்றாலும் இன்றிலிருந்து உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். நாம் பிரிந்துவிடலாம் என்று சொல்லும் காட்சி என்று வைத்துக்கொள்வோம். இந்த காட்சியை எத்தனை ஷாட்களில் எடுக்கலாம் தெரியுமா? நீங்கள் கொஞ்சம் யோசித்து வையுங்கள். அடுத்த வாரம் நான் சொல்கிறேன்.. அப்போது நீங்கள் யோசித்தது எந்தளவிற்கு பொறுந்தி வருகிறது என பார்க்கலாம்.</span> <span style='font-size:17pt;line-height:100%'>மு.கு:- சில படங்கள் & குறியீடுகள் கட்டுரையில் இணைக்கப்படாததால் தேவை கருதி இணைத்துள்ளேன். நன்றி.</span> - tamilini - 09-16-2004 ஓ படம் எடுக்கிறது என்டால் சும்மா இல்லை என்ன..?? பாக்கும் போது எவ்வளவு ஈசியாக பாக்கிறம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றிகள் அஜீவன் அண்ணா.....! - kavithan - 09-16-2004 எப்படி படங்களை எடுக்கிறார்கள் என்று ஒரு ஒளிப்பதிவுடன் கூடிய விளக்கம் கவிதன் இணையத்தில் - AJeevan - 09-17-2004 நமக்கு கிடைக்கும் நல்ல தகவல்களை மனமுவந்து பகிர்ந்து கொள்வதால் நாமும் நாம் அடங்கும் சமூகமும் பயன் பெறுகிறது. நன்றிகள் அன்பு <b>தமிழினி.</b> நல்ல தகவல்களை செல்லுமிடமெல்லாம் தூவி மணம் பரப்பும் <b>கவிதனுக்கு</b> பாராட்டுகளும் அன்புகளும்.............. - AJeevan - 09-20-2004 [b]<span style='color:green'>சினிமாவுக்கு பின்னால்... -சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்- பாகம் - 4 பெ.கணேஷ் _ சென்ற வாரம் நான் சொன்னதுபோல் கிளைமாக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஹீரோ _ ஹீரோயின் வீட்டுக்கு வருகிறான் "நமக்கு நடந்தது திருமணம்தான். இருந்தாலும் இன்றிலிருந்து உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாம் பிரிந்து விடலாம்" என்கிறான் இந்த காட்சியை நீங்கள் எத்தனை ஷாட்களாக பிரித்தீர்கள்? சரி இப்போது எனது சிந்தனையின் படி நான் பிரித்திருக்கும் ஷாட்களை பாருங்கள் அதில் நீங்கள் பிரித்திருக்கும் ஷாட்டோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சீன் : நெ : 65 இடம் : ஹீரோயின் வீடு _ Interier காலம் : இரவு (மழைக்காலம்) நடிகர்கள் : ஹீரோ, ஹீரோயின். Shot No: 1 M.S (Mid shot) ஹீரோயின் தனது படுக்கையறையிலுள்ள கண்ணாடி முன்பாக பரபரப்பான முகத்தோடு அமர்ந்திருக்கிறாள். அவளது முகம் Close up- ல் இருக்கிறது. ஏற்கனவே ஹீரோ வரும் செய்தி அவனுக்கு தெரிந்திருப்பது போன்ற பரபரப்பு அவளிடம் தெரிகிறது. மெல்ல அவள் முகத்திலிருந்து கேமரா பின்னோக்கி வருகிறது.. இப்போது கண்ணாடிக்கு முன்பாக அவள் உட்கார்ந்திருக்க அவளது பரபரப்பு முகம் கண்ணாடியில் தெரிகிறது. தனது கைவிரல்களிலுள்ள நகத்தை கடிக்க முற்படுகிறாள்... ஆனால் விரல்கள் லேசாக நடுங்கிறது. Shot No: 2 CS to ஹீரோயின் முகம் இப்போது வெளியே மழை ஆரம்பிக்கும் சப்தம் அவள் முகத்தின் மீது ஒலிக்கிறது. மேலும் வேகமாய் நகம் கடிக்கிறாள். இப்பொழுது பெரிதாக மின்னல் வெட்ட அந்த ஒளி கண்ணாடியில் தெரிகிறது... Shot No: 3 Long Mid Shot இப்போது காமரா அந்த அறையின் ஜன்னலுக்கு வெளிப்புறம் இருக்கிறது. ஜன்னல் கம்பிகளின் வழியே அவள் கண்ணாடி முன்பு பரபரப்பாய் நகம் கடித்துக் கொண்டிருப்பது காட்டப்படுகிறது. சட்டென்று அவள் எழுகிறாள்;பரபரப்பாய் கதவை பார்க்கிறாள்; மெல்ல கதவருகே சென்று கதவின் பிடியில் கை வைக்கிறாள். Shot No:4 CS to கதவின் கைப்பிடி கதவின் கைப்பிடியில் அவள் கை மெல்ல அழுத்தி திறக்க முயல்கிறது. ஆனால் சட்டென்று நிறுத்திவிட்டு கைப்பிடியிலிருந்து கை விலகுகிறது. Shot No:5 Long Mid Shot இப்போ மீண்டும் காமெரா அந்த அறையின் ஜன்லுக்கு வெளிப்புறமாக வருகிறது. அவள் கதவின் பிடியிலிருந்து கையெடுத்துவிட்டு பரபரப்பான முகத்தோடு மீண்டும் கண்ணாடியின் முன்பாக வருகிறாள். கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கிறாள். அதில் வியர்வைத் துளிகள் தெரிகிறது. உடனே சேலை தலைப்பை எடுக்கிறாள். Shot No:6 CS to ஹீரோயின் முகம் முகத்திலுள்ள வியர்வையை சேலைப் தலைப்பில் துடைக்கிறாள். இருப்பினும் முகத்தில் ஒருவித பய உணர்ச்சி தெரிகிறது. இப்போது அவள் முகத்தின் மேலே காலில் பெல் அடிக்கும் சப்தம் கேட்க சடாரென வலப்பக்கமாக முகம் திரும்புகிறது. Shot No: 7 Long mid Shot மீண்டும் காமெரா ஜன்னலுக்கு வெளிப்புறமாக வருகிறது. வலப்புறமாக முகத்தை திருப்பிய ஹீரோயின் பரபரப்பாக கதவருகே செல்கிறாள். கைப்பிடியில் கை வைக்கிறாள். Shot No: 8 CS to கதவின் கைப்பிடி கதவின் கைப்பிடியிலுள்ள அவள் கை ஒரு நொடி நிதானித்து சட்டென்று அழுத்துகிறது... மெல்ல இழுக்கிறது. Shot No:9 CS to கதவு to ஹரோ Close up-ல் கதவின் மேல்பாகம் திறக்க... வெளியே... வெளிரிய முகமாய் ஹீரோ நின்றிருக்கிறான். அவன் பார்வையில் ஏதோ வன்மம் தெரிகிறது. Shot No : 10 CS to ஹீரோயின் ஹீரோயின் அவன் கண்களைப் பார்க்கிறாள். ஒரு நொடி தடுமாறுகிறாள். Shot No : 11 CS to ஹீரோ அவளின் தடுமாற்றத்தை ரசித்தவனாக அவள் கண்களையே ஆழமாக ஊடுருவுகிறான். Shot No : 12 CS to ஹீரோயின் அவன் கண்களை ஆழமாக பார்க்கிறாள். பிறகு அவள் உதடுகள் மெல்ல அசைகிறது. "வாங்க.." Shot No : 13 Mid long shot (Wide Angle lence -Trally Shot) இப்போது அவர்களுக்கு அதாவது ஹீரோயினுக்கு பின்புறமாக கேமரா டிராலியில் இருக்கிறது. முன்பக்கமாக திரும்பியிருந்த ஹீரோயின்... ஹீரோவைப் பார்த்து.. வாங்க... என்று சொல்லிவிட்டு காமராவின் பக்கமாக திரும்பி... கேமராவின் இடப்புறமாக கண்ணாடியிருக்கும் இடத்தை நோக்கி நகர்கிறாள். ஹீரோவும் அவளை பின்தொடர்ந்து செல்கிறான். இப்போது கேமரா பின்னோக்கி ட்ராலியின் நகர்கிறது... நகரும்போதே Zoom Back ஆகி அந்த அறையின் முழுப் பரிமாணமும் தெரிகிறது. கண்ணாடிக்கு அடுத்திருக்கும் பெட்டின் அருகே இருவரும் செல்கிறார்கள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தயக்கமாக பார்த்துக்கொள்கிறார்கள். Shot No : 14 OSS (Over Shoulder Shot) to ஹீரோயின் (அதாவது ஹீரோவின் இடத்தோள் வழியாக ஹீரோயின் முகம் தெரிகிறது) ஒரு நொடி மௌனமாக அவன் முகத்தையே ஹீரோயின் பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கிறது. Shot No.15 OSS to ஹீரோ (ஹீரோயினின் வலத்தோளின் வழியாக ஹீரோவின் முகம் தெரிகிறது) அவள் கண்கள் கலங்குவதை கவனிக்கிறான். ஆனால் அவனிடம் எந்த சலனமும் தெரியவில்லை. Shot No : 16 OSS to ஹீரோயின் அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியிருக்க அதிலிருந்து ஒரு துளி கன்னத்தில் வழிகிறது. இருப்பினும், அவள் அவன் முகத்தையே கூர்மையாக பார்க்கிறாள். Shot No : 17 OSS to ஹீரோ அவள் கண்ணீர் நிரம்பிய முகத்தை கவனிக்கிறான்... அவனுக்குள் அனுதாபம் வராமல் எரிச்சல் தெரிகிறது. ஹீரோ : இப்ப எதுக்கு இந்த நாடகம்? Shot No : 18 OSS to ஹீரோயின் அவன் கேள்வியில் அவளது கண்கள் விரிகிறது. அதில் கோபம் தெரிகிறது. சட்டென்று சுதாரிக்கிறாள்... பின் மெல்ல அவன் கண்களைப் பார்த்து... ஹீரோயின் : ப்ளீஸ்... ஒரு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து பேசலாமா? Shot No : 19 OSS to ஹீரோ அவள் கேள்விக்கு பதிலளிக்காமல் சலனமின்றி பார்க்கிறான். Shot No : 20 OSS to ஹீரோயின் அவன் சலனமற்ற முகத்தை பார்த்தபடி ஹீரோயின். " ஃப்ளீஸ் உட்காருங்க" என்கிறாள். Shot No : 21 Mld.Shot இப்போது கேமரா அவர்களுக்கு இடப்புறமாக இருக்க கட்டில்... கட்டில் முன்பாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க... அவள் அவனின் கையைப் பற்றி கட்டிலில் உட்கார வைக்கிறாள். ஹீரோயின் : "சொல்லுங்க என் மேல எந்த தப்பு இருக்குன்னு நீங்க இந்த முடிவுக்கு வந்தீங்க?" ஹீரோ : அது உனக்குத் தெரியாதா? ஹீரோயின் : இல்ல... தெரியாது... தெரியாததாலத்தானே உங்கக்கிட்டே கேட்கிறேன். ஹீரோ : நீ அருண காதலிச்சது உண்மையா இல்லையா? Shot No : 22 CS to ஹீரோயின் அருண் என்ற சொல்லால் சட்டென்று அவள் முகம் மாறுகிறது. ஒரு நொடி தடுமாற்றத்திற்கு பிறகு.. ஹீரோயின் : அதுதான் நம்ம ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு முன்னாடியே சொல்லிட்டேனே? Shot No : 23 CS to ஹீரோ ஹீரோ : "சொன்னே... நீ சொன்னதுல பாதிதான் நிஜம். மத்ததெல்லாம் பொய். முழு பூசணிக்காயை சோத்துல மறைச்ச மாதிரி எல்லாத்தையும் மறைச்சிட்டு வெளியே வெண்மையா, வெகுளியா நடிச்சு என்னை ஏமாத்திட்டே..! Shot to 24 CS to Zoom Mid Shot (Trally Shot) ஹீரோயின் : இல்ல... என்று ஆவேசமாக எழ.. கேமரா அவள் முகத்திலிருந்து Zoom back ஆகிறது இப்போது கட்டில் மற்றும் ஹீரோ எல்லாம் காட்சியில் தெரிகிறது. கட்டிலிலிருந்து சற்று முன்னோக்கி வந்த ஹீரோயின் காமராவை பார்த்தபடி பேசுறாள். ஹீரோயின் : இல்ல... நீங்க நினைக்கிறா மாதிரி எந்த பூசணிக்காயும் நான் மறைக்கல. என் மனசுல இருந்த எல்லா விஷயத்தையும் ஒளிவு மறைவில்லாம உங்ககிட்டே சொல்லிட்டேன். நான் அந்த அருணை காதலிச்சது உண்மை. அந்த பாவத்துக்கு பரிகாரமா எவ்வளவோ சித்ரவதைகளை அனுபவிச்சிட்டேன். அவரும் நானும் காதலிச்சோமே தவிர ஒண்ணா சேர்ந்து தியேட்டர், பீச்சுன்னு எங்கேயுமே போனதில்லை... Shot No : 25 Mid Shot அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து அவளருகே வருகிறான். அவள் பேசி முடித்த நொடியில்... ஹீரோ : ஆனா.. ஓட்டலுக்கு போயிருக்கீங்களே? ஐ .மீன்... லாட்ஜிக்கு. Shot No : 26 OSS ஹீரோயின் அவன் சொல்லி முடித்த நொடியில் சடாரென திரும்புகிறாள். கண்களில் கோபம் தெரிகிறது. ஹீரோயின் : சே... இல்லாத ஒரு விஷயத்தை கற்பனையா சொல்றதுல உங்களுக்கு அவ்வளவு ஆனந்தமா? அபாண்டமான பழிச்சொல்றீங்களே... ஒரு கணவனா இதைச் சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்ல... Shot No : 27 OSS to ஹீரோ... ஹீரோ : நான் ஏண்டி அசிங்கப்படணும். அந்த அசிங்கத்தை செஞ்சிட்டு பத்தினி மாதிரி இத்தனை நாளும் என் கூட வாழ்ந்தியே.. அதுக்கு நீதான் அசிங்கப்படணும். Shot No : 28 Ms to Tralley shot இப்போது கேமரா அவர்களுக்கு வலப்புறமாக வாயில் கதவுக்கு எதிரே இருக்கிறது. அவர்கள் கட்டிலுக்கு அடுத்தப்படியாக நிற்கிறார்கள். ஹீரோயின் : இதப்பாருங்க... திரும்ப... திரும்ப நடக்காத ஒரு விஷயத்தைச் சொல்லி என்னை கேவலப்படுத்தாதீங்க.. ஓ...கே... இப்ப நீங்க என்ன முடிவோட வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? ஹீரோ : அதான் ஃபோன்ல சொல்லிட்டேனே.. ஹீரோயின் : அப்படின்னா நீங்க விலகிப் போறதுதான் உங்க முடிவா? Shot No : 29 CS to ஹீரோ ஒரு நொடி யோசித்துவிட்டு.. ஹீரோ : ஆமா... Shot No : 30 Mid Shot ஹீரோயின் சட்டென்று ஹீரோ முன்பாக வந்து நிற்கிறாள். ஹீரோ : நீங்க என்னைவிட்டு விலகிப் போங்க. நான் மறுக்கல.. ஆனா... இல்லாத தவறை இருக்கிறதா சாதிச்சிக்கிட்டு விலகிப் போறேன்னு சொல்றீங்க பாத்தீங்களா... இதுலருந்தே தெரியுது நீங்க ஒரு கோழைன்னு... அவள் கோழை என்றதும் சட்டென்று உக்கிரமான ஹீரோ அவள் கன்னத்தில் அறையும்விதமாக கை ஓங்குகிறான்; ஹீரோயின் அவன் கைகளை பிடித்து இழுக்கிறாள். Shot No : 31 OSS to ஹீரோ கையை பிடித்து தடுத்த ஹீரோயினை மிரட்சியாய் பார்க்கிறான் Shot No : 32 OSS to ஹீரோயின் ஹீரோவை கோபமாப் பார்க்கிறாள் Shot No : 33 OSS to ஹீரோ ஒருநொடி தடுமாறி கையை எடுக்கிறான். Shot No : 34 mid Shot to Long mid shot (Trally Shot) இப்போது அவர்களுக்கு வலப்புறமாக ட்ராலியில் கேமரா இருக்கிறது. இருவரும் எதிர்எதிரே மூச்சுவாங்கும் கோப நிலையில் இருக்கிறார்கள். ஹீரோயின் எப்ப நீங்க என்னை விட்டு விலகிப் போறதுன்னு முடிவெடுத்தீங்களோ அப்பவே என் கணவர்ங்கிற தகுதியை இழந்துட்டீங்க... அதனாலத்தான் உங்க கையை பிடிச்சித் தடுத்தேன்.. இனி நீங்களா மனசு திருந்தி நாம வாழலாம்னு கூப்பிட்டாலும் அதுக்கு நான் சம்பதிக்க மாட்டேன்.. ஏன்னா கணவன் மனைவிக்குள்ளே நடக்கிற அந்த புனிதமான உறவுல கூட அவன் முகம் உனக்கு ஞாபகம் வருதான்னு கேட்பீங்க? அப்படி ஒரு சந்தேக வாழ்க்கையில தினம் தினம் நான் சாக விரும்பல... ப்ளீஸ் நீங்க உங்க வழியில போகலாம். என்று இரண்டு கைகளையும் அவன் முன்பாக கூம்பிட... கேமரா பின்னோக்கி நகர்கிறது.. ஹீரோ அவள் முகத்தை ஒரு நொடி கவனித்துவிட்டு.. சட்டென்று திரும்பி வேகமாக நடக்கிறான்... இப்போது zoom Forward ஆகி ஹீரோயின் முகம் Close up க்கு வருகிறது.. அவள் உதட்டில் மெல்ல புன்னகை எழுகிறது. cut to next scene இப்போது நீங்கள் பார்த்த இந்த ஷாட்கள் உங்களுக்கு ஓரளவுக்கு ஒரு சீனை எப்படி பல ஷாட்களாக பிரிப்பது? என்பதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன். இருப்பினும் இப்படிதான் ஒரு சீனுக்கு மிகச் சரியாக ஒரு ஷாட்களாக பிரிக்க வேண்டுமா? என்று யோசிக்காதீர்கள் அது உங்கள் கதையை காட்சியின் தன்மையை பொறுத்தது மேலே பார்த்தது கிளைமாக்ஸை நெருக்கி வரும் காட்சி என்பதால் அதற்கு அதிகப்படியான பின்இசைச்சேர்ப்புக்கு (Re-recording) இடம் வேண்டுமென 34 ஷாட்களாக பிரித்திருக்கிறேன். இதே காட்சியை வேறு ஒரு இயக்குனரிடம் கொடுத்தால் அவரது கற்பனைக்கு ஏற்றாற்போன்று அவர் பல ஷாட்களாக பிரிப்பார்.. அதாவது மேலே பார்த்த காட்சியை 34 ஷாட்களாகவும் அல்லது நான்கே ஷாட்களாகவும் கூட பிரிக்க முடியும்.. ஆனால் 34 ஷாட்கள் என்பது கொஞ்சம் சுவை கூட்டும். அடுத்து நாம் ஷாட் பிரிக்கும் போது ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சினிமா என்பது ஒரு இயங்கும் விஷயம். அதனால் ஒரு காட்சியில் ஒன்று நடிகர்கள் இயக்க வேண்டும். இல்லையேல் கேமரா இயக்க வேண்டும். அதாவது ஒரு ஷாட்டில் நடிகர் நின்றிருந்தால் கேமரா ஃபேனிங்கிலோ சூம்மிலோ நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல் காமரா அசையாமல் நின்றால் உள்ளே நடிக்கும் நடிகர்கள் அசைந்துக் கொண்டிருக்க வேண்டும். காமராவும்_நடிகர்களும் அசையாமல் ஒரே இடத்தில் நிற்பது போல் ஷாட் இருந்தால் அது சினிமா அல்ல டிராமா. அதாவது சினிமாவில் இயக்கம் என்பதை முக்கியமான விஷயமாக கருத வேண்டும். இந்த விதி முறையில் குளோசப் ஷாட் மட்டும் தான் விதி விலக்கு. அதாவது இருவரது குளோசப் ஷாட்டிலோ இருவரது ஓவர் ஹோல்டர் ஷாட்டிலோ நாம் கேமராவையும் நடிகர்களையும் அசைவில்லாமல் நிறுத்த வேண்டியிருக்கும்; அது தவறில்லை. ஆனால் அந்த இருவரின்...... ஓவர்ஷோல்டர் ஷாட்டைக் கூட... டிராலியை உபயோகித்து இடது, வலது பேனிங் மூலமாக மூவ்மெண்ட் கொடுத்து எடுக்க முடியும். அதை அடுத்தவாரம் பார்ப்போம்... அதுமட்டுமல்ல.. ஒரு காட்சியில் நடிகர்களின் எண்டரி. மற்றம் தவறாக எடுக்கப்பட்ட ஷாட்களை சமாளித்து அதற்கு கவுண்டர்ஷாட் (தொடர்ச்சி ஷாட்) எடுப்பது எப்படி என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.. அதுவரைக்கும்... சினிமா பாருங்க...</span> Thanks : Kumudam - AJeevan - 09-24-2004 <span style='color:darkred'><b>சினிமாவுக்கு பின்னால்... -சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்- பாகம் - 5</b> - பெ.கணேஷ் <img src='http://www.kumudam.com/cinema/camra.png' border='0' alt='user posted image'> ஒரு காட்சிக்கு எண்ட்ரி என்பது எவ்வளவு முக்கியம்? ஒரு காட்சியின் எண்ட்ரி எவ்வளவு முக்கியமானது என்பதை அறியும்முன் அந்த ஒரு காட்சியை நம் தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் எப்படி பல ஷாட்களாக பிரித்து 'பேசிக்' என்கிற முறையில் படமாக்குகிறார்கள் என்று பார்ப்போம். அதாவது ஒரு காட்சியை பல ஷாட்களாக பிரித்பிறகு... காட்சியின் முதல் ஷாட்டை மாஸ்டர் ஷாட்டாக எடுப்பார்கள். அதன்பிறகு குளோப் ஷாட்ஸ், ஓவர் ஷோல்டர் ஷாட்ஸ் என எடுத்துவிட்டு இறுதி ஷாட்டை மீண்டும் முதல் ஷாட்டை மாஸ்டர் ஷாட்டாக எடுப்பார்கள். அதன்பிறகு குளோப்ஷாட்ஸ், ஓவர் ஷோல்டர் ஷோட்ஸ் என எடுத்துவிட்டு இறுதி ஷாட்டை மீண்டும் முதல் ஷாட்டை போல மிட் ஷாட்டாகவோ லாங் ஷாட்டாகவோ லாங் ஷாட் அல்லது குளோசப் ஷாட்டாகவோ முடிப்பார்கள். உதாரணத்திற்கு... "புகுந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணை பார்ப்பதற்காக அவளது அப்பாவும், அம்மாவும் வருகிறார்கள். மகளிடம் நலம் விசாரித்துவிட்டு அவளிடம் தாங்கள் கொண்டு வந்த உணவு பண்டங்களை கொடுத்துவிட்டு... நாங்கள் அவசர வேலையாக வந்தோம் உடனே கிளம்பணும். அடுத்தமாதம் வரும்போது இரண்டுநாள் இங்கே உன்னோடு தங்கியிருக்கிறா மாதிரி வர்றோம்" என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சியை... எப்படி பேசிக் முறையில் படம்பிடிக்கலாம் என்று பார்ப்போம். முதல் ஷாட் : மகள் அடுப்படியிலோ அல்லது துணி துவைத்துக்கொண்டோ அல்லது மாடியில் துணிகளை உலர்த்திக்கொண்டோ இருக்கிறாள். இதை குளோசப் ஷாட்டிலோ மிட் ஷார்ட்டிலோ பதிவு செய்வார்கள். இந்த முதல் ஷாட் என்பது இதற்கு முந்தைய சீனில் கடைசி ஷாட்டைப் பொறுத்து மாறுபடும். அதாவது... ஒரு காட்சியின் கடைசி ஷாட். கதாநாயகியின் முகத்தில் குளோசப்பில் முடிகிறது என்றால் அடுத்த சீனில் முதல் ஷாட் அதே கதாநாயகியின் முகத்திலிருந்து துவங்கக்கூடாது. ஏனெனில் தொடர்ந்து இந்த சீனின் கடைசி ஷாட்டிலும் அடுத்த சீனின் முதல் ஷாட்டிலும் அடுத்த சீனின் முதல் ஷாட்டிலும் கதாநாயகியின் குளோசப் ஷாட் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் முதல் சீன் முடிந்ததும், அடுத்த சீன் ஆரம்பித்ததும் ஆடியன்சுக்கு தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் சென்ற சீனின் கடைசி ஷாட் கதாநாயகியின் முகத்தில் முடிந்தது என்றால் அடுத்த சீனின் முதல் ஷாட்டை கதாநாயகியின் முகத்தை குளோசப்பில் எடுக்காமல் அவள் வேலை செய்யும் பொருட்களில் குளோசப்பிலிருந்து ஆரம்பிக்கலாம். உதாரணத்திற்கு சமையலறையில் அவள் வேலை செய்வது முதல் ஷாட் என்றால், கொதிக்கும் பானையை குளோசப்பாக வைத்து அதிலிருந்து சூம்பேக் வர கதாநாயகியை கமிட் பண்ணலாம். அடுத்து இதுபோல் ஒரே கேரக்டரின் மீது ஷாட் முடிந்து அதே கேரக்டரில் அடுத்த சீன் ஆரம்பிக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட அந்த கேரக்டருக்கு காஸ்ட்யூமை (டிரஸ்ஸை) மாற்றிவிடலாம். டிரஸ் மாறினாலே அது அடுத்த சீனாக... ஆடியன்சக்கு புரிந்துவிடும். சரி... முதலில் பார்த்த காட்சிக்கு வருவோம். முதல் ஷாட். ஹீரோயின் அடுப்படியில் வியர்வையோடு வேலை செய்துகொண்டிருக்கிறாள். இப்போது அவள் மீது காலிங்பெல் ஒலி ஒலிக்கிறது. சட்டென்று வியர்வையை சேலை தலைப்பில் துடைத்தவாறு இடப்புறடமாக வெளியே செல்கிறாள். இந்த ஷாட்டில் நீங்கள் மிகவும் கவனிக்கவேண்டியது அவள் எந்த பக்கமாக ப்ரேம் அவுட் போகிறாள் என்பதைத்தான் (பிரேம்அவுட் என்பது கேமராவில் தெரியும் கோணத்திலிருந்து வெளியே செல்வது) அதாவது ஒரு நடிகர் ஒரு ஷாட்டிலிருந்து இடது பக்கமாக வெளியே சென்றார் என்றால் அடுத்த ஷாட்டில் அவரது வருகை வலப்புற வழியாக இருந்து வரவேண்டும். அதேபோல் வலது பக்கமாக ஒருவர் ஃபிரேம் அவுட் ஆனால் அடுத்த ஷாட்டில் வலது பக்கமாக எண்ட்ரி ஆகவேண்டும். ஒரு காட்சியில் முதல் ஷாட்டில் கார் ஒன்று இடது பக்கமாக இருந்து உள்ளே வந்து வலப்புறமாக சென்றுவிட்டால்... இரண்டாவது, மூன்றாவது நான்காவது என அந்த காட்சி முடிகிற வரையில் இடப்புறமாக எண்ட்ரி ஆகி வலப்புறமாகவே ஃப்ரேம் அவுட் ஆகவேண்டும். சரி நாம் முதலில் பார்த்த காட்சிக்கு வருவோம். காலிங்பெல் சப்தம் கேட்டு இடப்புறமாக வெளி செல்கிறாள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அடுத்த ஷாட்... மாஸ்டர் ஷாட்டாக எடுக்கலாம். அதாவது மாஸ்டர் ஷாட் என்பது காட்சியின் முதன்முதலில் ஒரு பெரிய ஷாட்டாக.. லாங் ஷாட்டாக அத்தனை கேரக்டர்களையும் ஒரே கோணத்தினுள்ளே கொண்டு வரும் ஷாட்டாகும். மாஸ்டர் ஷாட்டில் அந்த பெண் வலப்புறமாக உள்ளே வர இடப்புறமாக அவள் அப்பாவும் அம்மாவும் உள்ளே வருகிறார்கள். அவள் முகம் மலர "வாங்கப்பா.. வாங்கம்மா" என்று அழைத்தவாறு அவர்களின் கையைப் பற்றி அழைத்துச்சென்று ஷாலினி நடுவேயிருக்கும் சோபாவில் உட்கார வைக்கிறாள். அவளும் அவர்களுக்கு பக்கவாட்டிலிருக்கும் சோபாவில் உட்காருகிறாள். வழக்கமாக நீங்கள் பார்க்கும் சினிமாவில் இப்படித்தான் இருவர் ஒரு சோபாவில் உட்கார இன்னொருவர் பக்கவாட்டு சோபாவில் உட்காருவார். இப்படி உட்கார வைக்கப்படுவதன் நோக்கம்... அந்த மாதிரி உட்கார்ந்தால்தான் ஓஎஸ்எஸ் _ ஓவர் ஷோல்டர் ஷாட் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். அவள் அப்பாவிடமும்... அம்மாவிடமும் ஏதோ கேட்க வாயெடுக்கிறாள் இதுவரை மாஸ்டர் ஷாட் வைக்கலாம். இதற்கு அடுத்த ஷாட். அவள் திறந்து பேசுவதை அவர்கள் இருவரின் வலஇடத்தோள்களின் வழியாக அவள் முகத்தையோ அல்லது அவள் அப்பாவின் இடத்தோள் வழியாக அவள் முகத்தை குளோசப்பில் கொண்டு வந்து அவள் பேசும் ஷாட்டை எடுக்கலாம். அதற்கடுத்து அவள் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவளின் வலத்தோளின் வழியே அவள் அப்பா பேசுவதை எடுத்து இப்படி வசனம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து குளோசப் ஷாட்களாகவோ, ஓவர் ஷோல்டர் ஷாட்களாகவோ எடுத்துவிட்டு கடைசியில் காட்சியின் முடிவு ஷாட்டாக மீண்டும் ஒரு மாஸ்டர் ஷாட் எடுக்கலாம். அதில் (லாங் ஷாட்டில்) மூவரும் இருக்கும் சோபாவிலிருந்து எழுந்துகொள்வதை காட்டி அவளின் அம்மா அவளிடம் பலகாரப் பையை திணித்துவிட்டு புறப்பட... அவள் அப்பா அவளை கனிவோடு பார்த்துவிட்டு புறப்பட அவர்கள் வாசல் கடந்து ஃபிரேம்அவுட் போகிறார்கள். அவள் காமெராவின் பக்கம் திரும்புகிறாள். மிட்லாங் ஷாட்டிலிருந்து காமெரா சூம் ஆகி அவள் முகத்திற்கு குளோஸ் போகிறது. இப்போது அவள் கண்கள் கலங்கியிருக்க. ஒரு நொடியில் சோகத்தை உணர்த்திவிட்டு ப்ரேம் அவுட் போகிறாள். இத்துடன் அந்த காட்சி முடிகிறது. இந்த காட்சி அவள் முகத்தில் முடிந்ததால் அடுத்த காட்சி அவள் முகத்திலிருந்து ஆரம்பிக்கும் விதமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தமிழ் : ஆமா... இந்த எண்ட்ரி பிரேம் அவுட்டுன்னு சொல்றீங்களே ஒரு ஷாட்ல ஹீரோ வலது பக்கமாக பிரேம்அவுட் ஆகிட்டாரு. அடுத்த ஷாட்ல இடது பக்கமாக எண்ட்ரி தரணும் இல்லையா? ஆனால்... அவர் முதல் ஷாட்ல வலதுபக்கமாக பிரேம் அவுட் ஆனது மறந்து போயிருச்ச. அப்ப இடது பக்கமா எண்ட்ரி தராம வலது பக்கமாவே எண்ட்ரி கொடுத்தா என்னாகும்! இல்லேன்னா அதை சமாளிக்கிற மாதிரி வேறு எப்படி கவுண்ட்டர் ஷாட் (தொடர்ச்சி ஷாட்) எடுக்கறது? நல்ல கேள்வி தமிழ்... உனக்கு இப்ப கொஞ்ச கொஞ்சமா சினிமா விஷயம் எல்லாமே புரிய ஆரம்பிச்சிடுச்சி. நீ கேட்ட மாதிரி முதல்ல ஒரு அறையிலிருந்தோ ஹாலில் இருந்து மாடிக்கு ஏறி வருகிற மாதிரியான ஷாட்ல இடது பக்கமாக வெளியே செல்கிற மாதிரி லெப்ட் அவுட் கொடுத்து ஷாட் எடுத்துட்டோம்னு வச்சிட்டோம். இல்ல வலது பக்கமாக அவுட் போகிற மாதிரி எடுத்துட்டோம்னு வச்சிட்டோம். மறுபடி அதோட தொடர்ச்சி ஷாட் எடுக்கும்போது அதற்கு முந்தைய ஷாட்ல இடது பக்கம் அவுட் போனாரா? வலது பக்கம் அவுட் போனாருன்னு குழப்பம் வந்திச்சின்னா... அதை சரி பண்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அதாவது முன் ஷாட் எந்த பக்கம் அவுட் போனாலும் பரவாயில்லை. அதன் தொடர்ச்சி ஷாட்டில் நடிகரை கேமராவிற்கு முன்புறமாக நின்று Away to camera கேமராவின் அருகில் முதுகுப்புறமாக நின்று கடந்து போவதுபோல் ஒரு ஷாட் எடுத்துவிட வேண்டும். அதற்கு ஷாட்டில் வலப்புற எண்ட்ரியோ, இடப்புற எண்ட்ரியோ எது தேவையோ அதற்கு தகுந்த மாதிரி அவருக்கு வலப்புறம், இடப்புறம் என கேமராவின் நிலையை தீர்மானித்து ஷாட் எடுத்தால் ஷாட் தொடர்ச்சியில் எந்த சிக்கலும் ஜர்க்கும் இருக்காது. அடுத்து இப்போது சீட்டிங் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : ஒரு காட்சியில் நான்கு நடிகர்கள் நடிக்கவேண்டும். மிக அவசரமான சூழலில் சூட்டிங்கை இப்போதே முடித்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் நான்கு நடிகர்களில் ஒருவர் வரவில்லை. என்ன செய்வது? என்று தலைமேல் கைவைத்து உட்கார தேவையில்லை. சீட்டிங் முறையில் மூன்று நடிகர்களை வைத்து நான்கு நடிகர்கள் இருப்பதைப் போன்று காட்சியை எடுக்கலாம். அது ஒரு டெக்னிக் விஷயம்தான். அதாவது சினிமாவில் இருக்கிற பாயிண்ட் ஆப் வியூ என்கிற சமாச்சாரம் இதற்கு கை கொடுக்கும் பாயிண்ட் ஆப் வியூ என்பது என்ன? என்று நீங்கள் கேட்டால் ஒரு படத்தில் ஒரு நடிகர் ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு ஓடுகிறார் திடீரென அவர் காட்சியில் இல்லாமல் அவரது பார்வையில் கேமரா நகர அந்தப் பெண் ஓடுவாள். இதுதான் பாயிண்ட் ஆஃப் வியூ. இந்த முறையில் மூன்று நடிகர்களை வைத்துக்கொண்டு நான்காவதாக இல்லாத நபரின் பார்வையில் மற்றவர்களை பேசவைத்து அதற்கு பதிலை இல்லாத நபரின் குரலின் மூலமாக மட்டுமே சொல்ல வைத்தால் பார்க்கிற நபருக்கு அந்த காட்சியில் நான்கு பேர் நடிப்பதாகவே தோன்றும். அத்துடன் கண்டிப்பாக ஓவர் ஷோல்டர் ஷாட்டிற்கு ஒரு தோள் தேவை என்றால்.. அந்த வராத நடிகரின் டிரஸ்ஸை வேறொருவருக்கு கொடுத்து அவரின் பின்புற தோள்பட்டையின் வழியாக காட்சியை எடுக்கலாம். அதற்கு கவுண்ட்டர் ஷாட்டாக இல்லாத நபரின் முகத்தை காட்டாமல் அருகே இருக்கும் மற்றொரு நபரின் முகத்தை காட்டி அந்த முகத்தில் இல்லாத நபரின் குரலை போட்டால் அவர் இருப்பது போலவே ஆடியன்சுக்கு தெரியும். அடுத்து ஒரு குழந்தை காட்சியின்போதே தூங்கிவிட்டது அது எழுந்து செல்வது போல் ஷாட் எடுக்கவேண்டும். ஆனால் அந்த குழந்தை எழ மறுக்கிறது என்ன செய்வது? அந்த குழந்தை தூங்கிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அது எழுந்து சென்றதைப் போல் காட்சியை எடுக்கலாம். எப்படித் தெரியும் முதலில் மிட்ஷாட்டில் குழந்தையையும் அதை எழுப்ப வரும் நபரையும் காட்டவேண்டும். மெல்ல சூம் ஃபார்வேர்ட் ஆகி குழந்தையை தவிர்த்து அந்த நபரின் முகத்திற்கு குளோஸ் செல்ல வேண்டும். இப்போது அந்த நடிகர் குழந்தையை எழுப்புவது போலவும் குழந்தை எழுந்துவிட்டதைப்போலவும். அது நடந்து செல்வதைப் போலவும் குளோசப்பில் பார்வையை மாற்றி "பார்த்து பார்த்தும்மா... விழுந்துடப்போறே..." என்று சொன்னால் பார்க்கிற பார்வையாளருக்கு அந்த ஷாட் குழந்தை இல்லாமலே அது எழுந்து செல்வதைப் போன்ற ஃபீலிங் கிடைக்கும். இப்படியான டெக்னிக்களுக்கு நடிகரின் பார்வையே முக்கியம் பெறுகிறது. அடுத்த வாரம் ஒவ்வொரு ஷாட்டிற்கும் பார்வை எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கலாம். அதுவரை எதிர்பார்ப்போடு... காத்திருங்கள்.</span> Thanks: Kumudam - tamilini - 09-24-2004 நன்றாக செல்கிறது ஆவலுடன் காத்திருக்கிறோம் ... தொடருங்கள் அஜீவன் அண்ணா...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 09-24-2004 tamilini Wrote:நன்றாக செல்கிறது ஆவலுடன் காத்திருக்கிறோம் ... தொடருங்கள் நன்றி <b>தமிழினி</b>. - AJeevan - 09-29-2004 <span style='font-size:22pt;line-height:100%'><b>சினிமாவுக்கு பின்னால்... -சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்- பாகம் - 6</b> _ பெ.கணேஷ் தமிழ் : நீங்க பார்வையைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி கேமராவை பத்தியும் லென்ஸ் பத்தியும் சொல்லுங்க. சொல்றேன். சினிமா இயக்கத்திற்கு முதல் காரணம் கேமராதான். அதில் பார்வையாளர்களின் கண்ணோட்டத்தில் ஒரு இயக்குனரின் கற்பனையின்படி கேமராமேன் கோணம் அமைத்து படம்பிடிக்கிறார். இன்று நம்ம தமிழ் சினிமாவுல ERRI 2, ERRI 3, 435ன்னு மூணு கேமராவைத்தான் பயன்படுத்தறாங்க. பெரும்பாலும் சினிமாஸ்கோப் படம்தான் இப்ப எடுக்கப்படுது. ஆனால் அதற்காக 35MM பிலிமைத்தான் பயன்படுத்தறாங்க. அப்படின்னா அந்த மூணு கேமராவும் 70எம்.எம் கேமராவான்னு நீங்க கேட்லாம். இல்ல. அதிலுள்ள லென்சையும் கேட்டையும் சினிமாஸ்கோப்பா மாற்றித்தான் படம்பிடிக்கிறாங்க. அப்படி படம் பிடிக்கப்பட்ட பிலிமை தியேட்டர் புரொஜெக்டர்ல அதே மாதிரி சினிமாஸ்கோப் லென்சின் மூலமா திரையிடறாங்க. தெளிவாகச் சொல்லணும்ணா நம்ம உபயோகபடுத்துற 35எம்எம் பிலிமோட ஒரு பிரேம் 0.868 நீளமும் 0.631 அகலமும் இருக்கும். புரொஜெக்டரின் ஒளி பிலிமில் ஒரு பிரேமில் விழும் நீளம்னு பார்த்தா 0.825 நீளமும் 0.600 அகலமும் இருக்கும். இது கிட்டதட்ட கேமராவில் ஸ்கோப்பாக பதிவு செய்யும் அளவிலேயே இருப்பதால் படம் திரையில் சினிமாஸ்கோப்பாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் இப்போது 70எம்எம் பிலிம் தயாரிப்பிலும் புழக்கத்திலும் இல்லை. 35எம்எம் தான் சினிமாஸ்கோப்பாக பயன்படுத்தப்படுகிறது. 70எம்எம் பிலிம் 35எம்எம் பிலிம்மைவிட சிறப்பம்சம் மிகுந்ததாக இருந்தது. ஆனால் தயாரிப்பு விலை, விற்பனை விலையில் நஷ்டம் என்பதால் அது புழக்கத்தில் இல்லாமல் போனது. 70எம்எம் பிலிமில் சிறப்பம்சம் என்று சொல்வதென்றால் அதன் பிரேமின் இரண்டு பக்கமும் மூன்று , மூன்று ஒலிப்பாதைகள் என சிக்ஸ் டிராக்ஸ் வசதி இருக்கும். 35எம்எம் பிலிமில் அப்படியில்ல ஒரே ஒலிப்பாதைதான். மேலே பார்க்கும் அதே பிரேம் அளவு ப்ரொஜக்டரில் இருப்பதாலும் சினிமாஸ்கோப் லென்ஸ் கேட் கேமராவில் பயன்படுத்துவதைப் போலவே ப்ரொஜக்டரில் இருப்பதாலும் திரையில் ஸ்கோப்பாக தெரிகிறது. ஆனால் நீங்கள் ஸ்கோப்பில் பதிவு செய்யப்பட்ட 35எம்எம் பிலிம்மை எடுத்து பார்த்தால் அது வெறும் கண்களுக்கு கம்பரஸ் ஆகி நீளநீளமான உருவமாகத் தெரியும். இப்போது கேமராவிற்கு வருவோம். தமிழ் நீங்க கேட்ட மாதிரி கேமராவின் லென்ஸ்கள் பற்றி காமெரா மேன்களை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் அதை ஒரு ரகசியமாகவே பாதுகாத்து வருகிறார்கள். <img src='http://www.kumudam.com/cinema/film-strip.jpg' border='0' alt='user posted image'> புதிய இயக்குநர்கள், ஏன் பழைய இயக்குனர்கள்கூட கேமரா லென்ஸ் பற்றி அதிக ஆர்வம் காட்டாமல் அது கேமராமேன் வேலை என்ற கண்ணோட்டத்தில் ஒரு காட்சியில் ஒரு (ஷாட்டை) பரிமாணத்தை சொல்லும்போது. கழுத்தளவு ஷாட் வச்சிக்க... இடுப்பளவு வச்சிக்க... இதுல ரெண்டு பேர் வரணும்னு சொல்லுங்க. இதுக்கு காரணம் அவங்களுக்கு கேமரா லென்ஸ் டெக்னிக் தெரிந்திருந்தாலும் அது அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு சுலபத்துல தெரிஞ்சிடக்கூடாதுன்னு நினைப்பாங்க. அடுத்து பார்வையாளர்கள், நடிகர்களுக்கும் அந்த லென்ஸ் ரகசியம் தெரிய வேணாம்னு நினைப்பாங்க. நம்ம தொடர்லதான் ரகசியமே இல்லையே! சொல்றேன் 35 எம்எம் பிலிம்ல படம் எடுக்கும்போது ERRI 2, கேமராவுல 9.6 , 16, 24, 32, 50, 85, 100, சூம் லென்ஸ்னு எட்டு வகை லென்ஸ்களை பயன்படுத்துவாங்க. சினிமாஸ்கோப் படம்னா... 24, 40, 50, 75, 100 சூம் லென்ஸ்னு ஆறு வகை லென்ஸ்களை இப்ப பயன்படுத்தறாங்க. 35எம்எம் படத்துல உபயோகிக்கிற அந்த லென்ஸ் எந்தெந்த ஷாட்டுக்குன்னு பார்ப்போம். 9.6 இதை அவ்வளவு யாரும் பயன்படுத்தமாட்டாங்க. ஏன்னா முழு லாக் ஷாட் அதாவது ஒரு அறையின் மூலையில் கேமராவை வைத்தால் அந்த அறையின் முழு பரிமாணத்தையும் கொண்டு வரும் ஆற்றல் உள்ளது. 16 இதுதான் ஒரு அறைக்குள்ளே முழுதும் கவர் ஆகிற மாதிரியான காட்சியை எடுக்க பயன்படுகிறது. கேமராவின் இரண்டு பக்க எட்ஜிலிருந்து முழு பரிமாணமும் துள்ளியமாக தெரியும். 24 இது பொதுவாக இரண்டு பேர் பேசும் MID லாங் ஷாட்டுக்காக இந்த லென்ஸை உபயோகிக்கலாம். 32 கணுக்கால் வரை தெரியும்படியான MID SHOTக்கு இந்த லென்ஸை உபயோகிக்கலாம். 50 இது குளோப் ஷாட்டிற்கு பயன்படுத்தப்படும் லென்ஸ் 85 இது டைட் குளோசப்பிற்கு பயன்படுத்தப்படும் லென்ஸ் அதாவது இந்த லென்ஸால் கண்களை மட்டும் தனியாக குளோசப்பில் எடுக்கமுடியும். 100 இது எக்ஸ்ட்ரீம் குளோசப் ஷாட் எடுக்க பயன்படும் சென்ஸ் அதாவது காது ஜிமிக்கி ஒரு கண் திறந்து, மூடுவது போன்ற மிக நெருங்கிய குளோசப் ஷாட்களை எடுக்கலாம். சூம் லென்ஸ் பெரும்பாலும் இந்த லென்ஸ்தான் கேமராவில் பயன்படுத்தபடும். ஏனென்றால் 25 + 250 என்கிற அமைப்பிலிருக்கும் இந்த சூம் லென்சின் மூலம் குளோசப், மிட் ஷாட், லாங் ஷாட் என்று எல்லா ஷாட்களையும் எடுக்க முடியும். அதேபோல் ஒரு நடிகர் பேசும்போது சூம் போவது இதன்மூலம் எடுக்கமுடியும் மற்ற லென்ஸ்களில் சூம் போக முடியாது. அப்படி சூம் போவதென்றால் டிராலியை உபயோகித்து காமேராவை முன் நோக்கி நகர்த்திதான் சூம் போகமுடியும். இதில் அப்படியில்ல கேமராவில் இருந்த இடத்திலிருந்தே சூம் போகலாம். அதாவது ஒரு தெருவின் முனையில் கேமரா இருக்க தெருவின் அடுத்த முனையில் நடிகர் இருந்தாலும் இங்கிருந்து சூம் மூலமாக நடிகரின் முகத்தை குளோசப்பில் எடுக்கமுடியும். அவ்வளவு துள்ளியமானது அந்த சூம் லென்ஸ். அடுத்து 1000 சூம் பைப் லென்ஸ் என்றும் இருக்கிறது. இதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு நடிகரை இங்கிருந்தே குளோசப் செய்யமுடியும். அடுத்து வைட் ஆங்கிள் லென்ஸ் என்றும் இருக்கிறது. இது மிக குறுகலான இடத்தையும் மிகவும் அகலமான அறையாக பரிமாணித்து காட்டும் ஆற்றல் உள்ளது. சினிமாஸ்கோப் லென்ஸ்களை பொறுத்தவரை அது படத்தில் அகலமான பரிமாணத்தை கொண்டது என்பதால் ஆறு லென்ஸ்கள் உள்ளது. இப்போது சினிமாஸ்கோப் லென்ஸ்களை பார்ப்போம். 24 இது ஒரு அறையின் முழு பரிமாணத்தையும் காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. காமரா வைத்த இடத்திலிருந்து எல்லா பொருட்களும் நடிகர்களும் பிரேமிற்குள் வந்திடுவது இது லென்சின் சிறப்பாகும். 40 இது இருவர் நின்று பேசும் காட்சியை மிட் ஷாட் ஆக எடுக்க உதவும். கணுக்கால் வரையிலான ஷாட்டிற்கு இது உபயோகப்படுத்தப்படுகிறது. 50 இது இருவர் பேரும் ஓவர் ஷோல்டர் ஷாட்டிற்கும் குளோசப் ஷாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. 75 இது டைட் குளோசப் ஷாட்டிற்கு பயன்படுத்தபடுகிறது. அதாவது வெறும் முகம் வரையாக குளோசப் ஷாட்களுக்கு இந்த லென்ஸை பயன்படுத்துகிறார்கள். 100 இது (எக்ஸ்ட்ரீம்) மிக நெருங்கிய குளோசப் ஷாட்களுக்காக பயன்படுத்தப்படும் லென்ஸ். சூம் லென்ஸ் இது 35எம்எம் படத்தில் பயன்படுத்தப்படும் சூம் லென்ஸ்தான் இதன்மூலம் பாடல் காட்சிகளில் முதற்கொண்டு லாங்ஷாட்வரை எடுக்கலாம். அதேபோல் மிட்ஷாட்ஸ், குளோசப் ஷாட்ஸ் என்ற எல்லா விதமான ஷாட்களையும், சூம் செல்வதற்கும், வருவதற்கும் பயன்படுத்தலாம். லென்சிற்கு அடுத்து கேமராவில் பில்டர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அதாவது பகலில் எடுக்கப்படும் ஷாட்டை இரவு எஃபெக்டோடு எடுக்க நைட் எஃபெக்ட் பில்டர் பயன்படுத்தினால், பகலில் படம் எடுத்தாலும் அது இரவில் எடுத்தது போல் இருக்கும். அதேபோல் உச்சி வெயிலில் எடுக்கும்போது அதீதமான வெளிச்சம் இருக்கும். அதை குறைத்து மிதமான ஒளி தெரியும் விதமாக படம் எடுக்க சன்ஃசாப்ட் பில்டரை உபயோகப்படுத்துவார்கள். அதேபோல் கேமராவின் இயக்க வேகத்தில் வித்தியாசப்படுத்தினால் பலவிதமாக எஃபெக்டுகள் வரும். வழக்கமாக 24 பிரேம்கள் ஒரு நொடிக்கு என்ற வேகத்தை கூட்டி 48 அடிகள் 72 அடிகள் என்ற வேகத்தில் படம்பிடித்தால் அது திரையில் ஸ்லோமோஷனாகத் தெரியும். அதேபோல் 24 பிரேம்களை 12 பிரேம் என வேகம் குறைத்து எடுத்தால் வேகவேகமாக ஓடுவதுபோல் திரையில் தெரியும். இந்த வேகத்தை அதிகப்படுத்தும் வசதி ERRI 2, ERRI 3, 435 கேமராக்களில் உள்ளது அதாவது ஒரு நொடிக்கு நூறு பிரேம்கள் வரை வேகத்தை கூட்டமுடியும். அடுத்து இரண்டு கார்கள் வேகமாக மோதிக்கொள்ளும் காட்சியையும், கீழேயிருந்து ஒருவர் பல்டி அடித்து மேலே சென்று நிற்கும் காட்சியும் ரிவர்சில் எடுத்தால் படம் பார்க்கும்போது தத்ரூபமாக இருக்கும். அதாவது இரண்டு கார்கள் நச்சென்று மோதிக்கொள்வதுபோல் எடுத்தால் பிரச்னை என்பதால் இரண்டு கார்களையும் மிக நெருக்கமாக ஒட்டியிருக்கும்படி வைத்துவிட்டு காருள்ளிருக்கும் நபர்கள் ஒரே வேகத்தில் சராலென ரிவர்சில் காரை எடுக்கும்படி காட்சி எடுப்பார்கள். அந்த காட்சியின் நேரத்திற்கு தக்கவாறு கேமராவில் ஃபிலிமை ஓடவிட்டு அதை ரிவர்ஸில் படம் பிடிப்பார்கள். இப்போது திரையில் பார்த்தால் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது போல் தெரியும். இதேபோல்தான் மேலே இருக்கும் ஒரு நடிகர் குதிப்பதை ரிவர்சில் படம்பிடித்தால் திரையில் கிழேயிருந்து பல்டியடித்து மேலே செல்வதைப் போல் தெரியும். இது மட்டுமில்லாமல் இதுபோன்ற நிறைய டெக்னிக்குகளை கேமராவில் செய்யமுடியும். இந்த வாரம் கேமரா லென்ஸ் பற்றி ஆழமாக மனதிற்குள் பதிவு செய்துகொள்ளுங்கள் பார்வையை அடுத்தவாரம் பார்ப்போம்.</span> - tamilini - 09-30-2004 நன்றிகள் அஜீவன் அண்ணா...! தொடர்ந்து வழங்குங்கள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 09-30-2004 <b>நன்றிகள் தமிழினி.......!</b> [size=15] Quote:அடுத்து இரண்டு கார்கள் வேகமாக மோதிக்கொள்ளும் காட்சியையும், கீழேயிருந்து ஒருவர் பல்டி அடித்து மேலே சென்று நிற்கும் காட்சியும் ரிவர்சில் எடுத்தால் படம் பார்க்கும்போது தத்ரூபமாக இருக்கும். அதாவது இரண்டு கார்கள் நச்சென்று மோதிக்கொள்வதுபோல் எடுத்தால் பிரச்னை என்பதால் இரண்டு கார்களையும் மிக நெருக்கமாக ஒட்டியிருக்கும்படி வைத்துவிட்டு காருள்ளிருக்கும் நபர்கள் ஒரே வேகத்தில் சராலென ரிவர்சில் காரை எடுக்கும்படி காட்சி எடுப்பார்கள். இதே மாதிரி நிழல்யுத்தம் குறும்படத்தில் கார் மோதும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. http://www.appaal-tamil.com/index.php?opti...=playVideo&id=3 :!: அக்காட்சி மெதுவாக ரிவசில் கார் செல்வதால் வேகத்தை அதிகரிக்க எடிட்டிங் செய்யும் போது கொம்பியுட்டரில் அதிகரித்திருக்கிறேன். :!: அது போலவே பகலில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு Blue filter மூலமாக இரவாக காட்சியை உருவாக்கியிருக்கிறேன். - AJeevan - 09-30-2004 <span style='font-size:22pt;line-height:100%'>திரைப்படக் ஒளிப்பதிவுக்கு மட்டுமல்ல வீடியோ மற்றும் புகைப்பட ஒளிப்பதிவுக்கு பாவிக்கப்படும் பில்ட்டர் (filter) வகைகளை இத் தளத்தில் பார்க்கலாம். அத்தோடு குறிப்பிட்ட பில்டர் வகை தரும் பெறு பேறுகளுக்கான படங்களையும் இணைத்திருப்பதால் பிரயோசனமாக இருக்கும்.</span> http://www.geocities.com/cokinfiltersystem...em/theguide.htm <img src='http://www.geocities.com/cokinfiltersystem/217e6410.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.geocities.com/cokinfiltersystem/215df410.jpg' border='0' alt='user posted image'> [b][size=18]with out filter - kavithan - 10-01-2004 நன்நி அண்ணா - tholar - 10-03-2004 நன்றி அஜீவன் - tamilini - 10-30-2004 என்ன அஜுவன் அண்ணாவை நீண்ட நாட்களாய் காணவில்லை விபத்திற்கு பின்னர்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 10-30-2004 tamilini Wrote:என்ன அஜுவன் அண்ணாவை நீண்ட நாட்களாய் காணவில்லை விபத்திற்கு பின்னர்...! <!--emo& <span style='font-size:22pt;line-height:100%'>சில நாட்களாக என்னால் கணணியை உபயோகிக்க முடியவில்லை. கூடிய விரைவில் வருவேன்.</span> அது வரை உங்கள் Ajeevan - AJeevan - 11-05-2004 <b>சினிமாவுக்கு பின்னால்... -சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்- பாகம் - 7</b> _ பெ.கணேஷ் _ -------------------------------------------------------------------------------- பார்வை (look) அதாவது கேமரா லுக் என்பது என்ன? நாம் ஒரு காட்சியை படம் பிடிக்கும்போது அதை பலவகையான ஷாட்களில் படம்பிடிக்கலாம் என்பதை முன்பே விரிவாகச் சொன்னேன். அப்படி மிட் ஷாட், லாங், குளோசப் ஷாட் என மாறி மாறி படம்பிடிக்கும்போது அந்த ஷாட்களில் நடிக்கிற நடிகர்களின் பார்வை என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதாவது ஒவ்வொரு ஷாட்டிற்கும் தகுந்தவாறு கேமரா இருக்கும் நிலை, கோணத்தைப் பொறுத்து நடிகர்களின் பார்வை சரியாக அமையவேண்டும். உதாரணத்திற்கு மாஸ்டர் ஷாட்டில் (லாங் ஷாட்டில்) வலதுபுறமாக பார்த்துக்கொண்டிருந்த ஒரு நடிகருக்கு எதிரே அவருக்கு முன் மிக நேர் கோணத்திற்கு கேமரா வருமானால் அப்பொழுது கேமரா இருக்கும் நிலையை பொறுத்து அவர் கேமராவிற்கு வலப்புறமாகவோ... இடப்புறமாகவோ அதில் எது சரியான பார்வை என்பதை உணர்ந்து (பார்வை) லுக் தந்ததால்தான் அடுத்தடுத்து வருகிற ஷாட்களின் கண்டினியுட்டி சரியாக இருக்கும். அதை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். ஒரு அரைவட்ட கோணத்தில் ஆறு நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதிரே நடுப்புள்ளியில் கேமரா இருக்கிறது. இப்போது கேமராவிற்கு இடப்புறமாக இருக்கும் நடிகர் வலப்புறமாக இருக்கும் நடிகர்களையும், கேமராவிற்கு வலப்புறமாக இருக்கும் நடிகர் இடப்புறமாக இருக்கும் நடிகர்களை பார்த்து பேசுகிறார் என வைத்துக்கொள்வோம் இது மாஸ்டர் ஷாட் அதாவது லாங் ஷாட். <img src='http://www.kumudam.com/cinema/cam1.jpg' border='0' alt='user posted image'> இதற்கு அடுத்த ஷாட்டில் இடப்புறம் இருக்கும் ஒரு நடிகரின் குளோசப் ஷாட்டோ அல்லது ஓவர் ஷோல்டர் ஷாட்டோ வரவேண்டுமென்றால் கேமராவை வலப்புறமா நடிகரின் இடத்திற்கு மாற்றவேண்டும். <img src='http://www.kumudam.com/cinema/cam2.jpg' border='0' alt='user posted image'> இப்போது வலப்புறமாக இருந்த நடிகரை பார்த்து இடப்புறமுள்ள நடிகரின் வசனம் எடுக்கப்படுகிறது என்றால் அவரது லுக் கேமராவின் வலது பக்க எட்ஜை அதாவது லென்ஸ் கவரின் எட்ஜை பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர் மிகச் சரியாக எதிரே இருந்த நபரை பார்த்து பேசுவது போலிருக்கும். அப்படியில்லாம் ஓவர் ஷோல்டர் ஷாட் என்றால் கேமரா நிற்கும் இடத்தில் முன்பு இருந்த நடிகரின் இடதுபக்க தோள்பட்டையின் வழியே எதிரே இருக்கும் நடிகரின் குளோப் அதாவது ஓவர் ஷோல்டர் ஷாட் எடுக்கலாம். அப்போது அவரது லுக். ஷோல்டரை காண்பிக்கும் நடிகரின் வலது காதை பார்க்கும்விதமாக இருக்கவேண்டும். அப்போதுதான் மேட்ச் ஆகும். அதேபோல் மாஸ்டர் ஷாட்டில் வலது பக்கமாக இருந்த நபரின் குளோசப் என்றால் கேமரா முன்பிருந்த நிலையிலிருந்து இடதுபுறமாக நகர்ந்து இடதுபுறம் இருக்கும் நடிகரின் இடத்திற்கு செல்லவேண்டும். <img src='http://www.kumudam.com/cinema/cam3.jpg' border='0' alt='user posted image'> இப்போது எதிரே இருக்கும் வலப்புற நடிகரின் குளோசப்ஷாட் எடுக்கவேண்டும் என்றால் அவர் கேமரா லென்ஸ் கவரின் இடது பக்க எட்ஜை பார்க்கவேண்டும். அதேபோல் ஓவர் ஷோல்டர் ஷாட் என்றால் இடதுபக்கம் இந்த நபரின் வலது தோள் வழியாக எதிரே இருக்கும் நபரின் குளோசப் அதாவது ஓவர் ஷோல்டர் ஷாட் எடுக்கவேண்டும். அப்போது அவரது லுக் தோள்கொடுக்கும் நடிகரின் இடது காதை பார்க்கும் விதமாக இருக்கவேண்டும் அப்போதுதான் மேட்ச் ஆகும். அதேபோல் லாங் ஷாட்டில் அதாவது மாஸ்டர் ஷாட்டில் ஒரு நடிகர் எந்த நடிகை பார்த்துக்கொண்டிருக்கிறார் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறார் அவர் பார்வை யார் மீது எங்கே இருந்தது என்பதை கூர்மையாக கவனிக்கவேண்டும். அப்போதுதான் அடுத்து அதே நடிகரின் குளோப் ஷாட் தொடர்ச்சி ஷாட்டை எடுக்கும்போது அப்போது கேமரா நிற்கும் நிலை (பொஷிசன்) கோணம் இவற்றைப் பொறுத்து அவரது பார்வையை மிக சரியாக இருக்கும்படி செய்யவேண்டும். பார்வை மாறினால் அடுத்து அந்த ஷாட்டே வீணாகிவிடும் சரி. கேமராவிற்கு இடதுபுறமாக லுக் தரவேண்டிய நடிகர் தவறுதலாக வலதுபுறமாக லுக் கொடுத்துவிட்டார் என்ன செய்வது? அதற்கு மாற்று வழியே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது நெகடிவ்வில் உள்ள பிரேமை திருப்பிப்போட்டு பாஸிட்டிவாக மாற்றினால் இடதுபுறமாக லுக் வந்துவிடும் இது. ஆண் நடிகர்களை பொறுத்தவரையில் சாத்தியம். பெண் நடிகை என்றால் அந்த காட்சியில் புடவை அணிந்திருந்தால் ஷாட்டை திருப்பிப்போகும்போது புடவை தலைப்பு வலப்புறமாக வந்துவிடும். அதனால் மேட்ச் ஆகாது. எனவே எதற்கு சிரமம்? பார்வை என்பதை காட்சி எடுக்கும்போதே கொஞ்சம் கவனத்தில் வைத்து எடுத்தால் பிரச்னையே இல்லை. தமிழ் : நீங்க சொல்றது சரிதான் ஷடே்டிங்லயே அதை கவனிச்சிட்டா பிரச்னை இல்லைதான். சரி நீங்க எப்ப என்ன ஷடை்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிக்கிட்டு போகப்போறீங்க? என்னப்பா இது நாம இப்ப ஸ்டுடியோ வாசல்ல நின்னுதானே பேசிக்கிட்டு இருக்கோம். வா உள்ளே போகலாம். இதுக்குபேர்தான் ஏ.வி.எம்.ஸ்டுடியோ. இங்க கிட்டதட்ட ஒன்பது ப்ளோர்கள் இருக்கு அதாவது ப்ளோர்ங்கிறது உள் படப்பிடிப்பு அரங்கம். இதற்குள்ளே நாம என்ன வேணா செட் போட்டுக்கலாம் பிரமாண்டமான பங்களா, மலைப்பாங்கான இடம், மூங்கில் காடு, குடிசைகள் உள்ள கிராமத்தோட தெருன்னு எதை வேணா போடமுடியும். அதே மாதிரி பாடல் காட்சிகளுக்கான விதவிதமான செட்கள், சண்டை காட்சிக்கான பழைய மெக்கானிக் ஷாப் பாழடைந்த மண்டபம்னு எந்த செட் வேணா அமைச்சுக்கலாம். அந்த செட்களுக்கென்று நாம் ப்ளோர் வாடகை தினசரி கொடுக்கவேண்டும். அதுபோல ஆர்ட் டைரக்டரின் உதவியால் நாம் விரும்பிய செட்டை போடமுடியும். உள்ளே வா... அங்கே மேலே பரண் போன்ற இடத்தில் லைட்டுடன் இருக்கிறார்களே அவர்கள்தான் லைட்மேன்கள் இந்த செட்டிற்கு ஒளியூட்டுபவர்கள் அவர்கள். தமிழ்: ஷடே்டிங்கில் எத்தனை பேர் வேலை பார்ப்பார்கள்? டைரக்டர், உதவி டைரக்டர்கள், கேமராமேன், உதவி கேமராமேன்கள், கேமரா அசிஸ்டென்ஸ், ஆடிட் டைரக்டர் ஆர்ட் அசிஸ்டெண்ட், மேக்கப்மேன், ஏர்டிரஸ்ஸர், டச்சப்பாய் புரொடக்ஷன் மேனேஜர், புரொடக்ஷன் உதவியாளர்கள், லைட்மேன்கள் கிரேன் ஆபரேட்டர்கள், டிராலி தள்ளுபவர்கள், காஸ்ட்யூமர், உதவி காஸ்ட்யூமர், நாகரா இயக்குபவர். மைக் உதவியாளர் போன்ற தொழில் உட்பட பணியாளர்களோடு ஹீரோ, ஹீரோயின் நடிகர், நடிகையர், துணைநடிகர்கள் நடிகர்களின் உதவியாளர்கள் வாகனம் ஓட்டுபவர்கள், ஜெனரேட்டர் ஆபரேட்டர், தயாரிப்பாளர் என்று கிட்டத்தட்ட அறுபதிலிருந்து நூறு பேர் வரை ஷடே்டிங்கில் வேலை செய்வார்கள். பாடல் சண்டைக்காட்சி என்றால் அதற்கான மாஸ்டர்கள் நடிகர்கள் என்று பட்டியல் நீளும். இங்கே நான் சொன்ன அத்தனை கலைஞர்களுமே மிகக் கடுமையாக உழைப்பவர்கள். அவரவர் தொழில்களுக்கு ஏற்ப அவர்களது உழைப்பு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். சினிமாவில் சுலபம் என்று எந்த தொழிலும் இல்லை. உட்கார்ந்தபடியே நாகரா (டேப்)பை இயக்கும் நபர்கூட அடிக்கடி எழுந்து இடம்மாறி, இடம்மாறி உட்கார்ந்துதான் செய்யவேண்டும். அதேபோல்தான் மெயின் சுவிட்போர்டு அருகே உட்கார்ந்து இருக்கும் எலக்ட்ரீஷியன் கூட அவர் பங்குக்கு கடுமையாக உழைத்தே ஆகவேண்டும். சரி தமிழ். என்ன உன் முகம் சரியா இல்ல? நான் சொன்ன இத்தனை பேரும் அப்படி என்ன பெரிசா வேலை பார்க்கிறாங்கன்னு கேட்க வர்ர... அதானே... சரி அவங்க அவங்க என்ன வேலைப் பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டா உனக்கு அந்த கேள்வி வராது. முதல்ல டைரக்டர்ல இருந்து ஆரம்பிக்கிறேன். டைரக்டர்தான் கேப்டன் ஆப் தி ஷிப். அவருக்கு கீழே இரண்டு அசோசியட் டைரக்டர்ஸ், நான்கு அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் வேலை பார்ப்பாங்க. சினிமாவுலயே அதிகம் சம்பளம் கிடைக்காத பாவப்பட்ட ஜென்மங்கதான் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அவங்களோட கஷ்டத்தை அடுத்தவாரம் சொல்றேன். - AJeevan - 11-05-2004 <span style='color:red'>சினிமாவுக்கு பின்னால்... -சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்- பாகம் - 8 _ பெ.கணேஷ் _ -------------------------------------------------------------------------------- சினிமாவில் உதவி இயக்குனர்களின் பங்கு திரைப்படங்களில் உதவி மற்றும் இணைஇயக்குனர்களின் பங்கு மிக முக்கியமானது. கதை டிஸ்கஷன் என்கிற கதை உருவாக்கத்திலிருந்து ஷடே்டிங், எடிட்டிங், டப்பிங், ரீ_ரெக்கார்டிங், மிக்சிங், என அத்தனை வேலைகளுக்கும் அவர்கள் மிகவும் தேவையான நபராக இருப்பார்கள். உதவி இயக்குனர்களின் சம்பளம் என்று பார்த்தால், ஒரு படத்திற்கு அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகவும் சொற்பமானது. ஒரு தயாரிப்பு உதவியாளர் (புரொடக்ஷன் பாய்) சம்பாதிக்கும் அளவிற்குக்கூட உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கிடையாது. உதவி இயக்குனர்கள் சம்பளம் வாங்கவேண்டுமென்றால் அவர்களுடைய பாட்டியோ, தாத்தாவோ சாகவேண்டும் என்று வேடிக்கையாக சொல்வார்கள். அதாவது ‘‘சார் என் பாட்டி இறந்து போய்ட்டாங்க ஊருக்கு போகணும் ஒரு ரெண்டாயிரம் ரூபா தர்றீங்களான்னு கேட்டுக்கேட்டு வாங்கவேண்டிய சூழல்தான் உதவி இயக்குனர்களோட நிலை. எதிர்காலத்தில் இயக்குனர் ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கைதான் அவர்களுடைய சம்பளம். தமிழ் : அப்படின்னா அசிஸ்டெண்ட் டைரக்டர்களோட நிலைமை ரொம்ப கஷ்டம்னு சொல்லுங்க. சரி.. அதோ ஒருத்தர் கையில பேரு வச்சிக்கிட்டு அந்த நடிகருக்கு வசனம் சொல்லியிருக்கிறாரே அவர் யாரு? அவர்தான் முதல் இணைஇயக்குனர் _ ஒரு படத்திற்கு இரண்டு இணை இயக்குனர்கள் நான்கு உதவிஇயக்குனர்கள் இருப்பாங்கன்னு சொன்னேனில்-லையா? அதுல முதல் இணைஇயக்குநரோட வேலை வசனம் சொல்லிக் கொடுக்கறது. அதாவது அன்றைக்கு என்ன காட்சி எடுக்கப் போகிறாங்களோ அந்த காட்சியோட தன்மை... அதில நடிக்கிற நடிகரோட உணர்வு (எமோஷனல்) வசன உச்சரிப்பின் (மாடுலேஷன்) ஏற்ற இறக்கம் இதையெல்லாம் கவனிக்கிறவர் அவர்தான். ஒரு சீன்ல அந்த நடிகர் பேசவேண்டிய வசனத்தைக் கொடுத்து அவர் அதை எப்படி பேசி நடிக்கிறாரு.. அதுல அந்த காட்சியின் தன்மையும், எமோஷனலும் சரியா வருதான்னு பார்ப்பாரு. அதே மாதிரி பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் எழுத படிக்க ஏன், பேசக்கூடாது தெரியாதுங்கிறதால அந்த இணைஇயக்குனர் அவங்க பேசவேண்டிய வசனத்தை பாவத்தோட, ஏற்ற இறக்கத்தோட தமிழ்ல பேச.. அதை அவங்க அந்த காட்சியில எப்படி நடிக்கணும்னு டைரக்டர் சொல்லிக்கொடுத்திடுவாரு. முதல் இணைஇயக்குனர்கள் இப்படி வசனம் சொல்லிக் கொடுக்கிறது மட்டுமில்லாம டைரக்டர் வர முடியாத சூழல்கள்ல டைரக்ஷனும் பண்ணுவாங்க... அதே மாதிரி பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் எடுக்கும்போது பெரும்பாலும் இயக்குனர்களுக்கு வேலை இருக்காது என்பதால் முதல் இணைஇயக்குனர்களேகூட அந்த சண்டை, மற்றும் பாடல் காட்சிகளை அருகிலிருந்து கவனத்தோடு படம்பிடிப்பார்கள். தமிழ் : அப்படியா? சரி அவருக்கு பக்கத்துல இன்னொரு பேடு வச்சிக்கிட்டு நிற்கிறாரே.. அவரும் இணைஇயக்குனர்தானா? அவருக்கு என்ன வேலை? ஆமாம் அவரும் இணைஇயக்குனர்தான். அதாவது இரண்டாவது இணைஇயக்குனர். அவரோட வேலை ஆக்ஷன் கண்டினியூட்டி பார்க்கிறது. அதாவது நான் முன்பு சொன்ன பார்வை நடிப்பு காட்சியின் தன்மை என ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் இடையே மிகச் சரியாக, பொறுத்தமாக இருப்பதை கவனிக்கவேண்டிய பொறுப்பு அவர்களோடது. தமிழ் : புரியல. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க? சரி... சொல்றேன். அதாவது ஆக்ஷன் கண்டினியூட்டிங்கிறது ஒரு படத்திற்கு மிக முக்கியமான வேலை. அதை விளக்கமா சொல்லணும்னா.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு காட்சிகளின் முதல் ஷாட் பெரும்பாலும் மாஸ்டர் ஷாட்டாக அதாவது லாங் மிட் ஷாட்டாகவோ _ லாங் ஷாட்டாகவோ இருக்கும். அந்த ஷாட்டில் ஹீரோ, ஹீரோயின், நகைச்சுவை நடிகர்னு நான்கு அல்லது மூன்று நடிகர்கள் பிரேமிற்குள் வருவது நடிப்பது என ஷாட் நீளமாக இருக்கும். அப்படி இருக்கும் ஷாட் ஏதோ ஒரு இடத்தில் கட் ஆகும். அந்த ஆக்ஷனை... பார்வையை அதனுடைய கன்டினியூட்டியை துள்ளியமாக கவனிக்கிறவர்தான் இரண்டாவது இணைஇயக்குனர். அதற்காக அவர் சில குறியீடுகளை தனது நோட்டில் குறித்துக்கொள்வார். அதாவது < இப்படி குறியீடு இருந்தால் வலது பக்க பார்வை என்று பொருள் < இப்படி குறியீடு இருந்தால் அந்த குறிப்பிட்ட நடிகர் இடது பக்கமாக பார்த்தார் என்று பொருள் ஸ் இப்படி குறியீடு இருந்தார் நேரே பார்த்தார் என்று பொருள். இதேபோல் ஒரு காட்சியில் எத்தனை நடிகர்கள் நடித்தாலும் ஒவ்வொருவரும் வசனம் பேசும்போது அவர்களின் பொசிஷன், பார்வை கைகால் அசைவு எல்லாவற்றையும் துள்ளியமாக குறித்து வைத்தோ அல்லது மனதிற்குள் ஞாபகம் வைத்துக்கொண்டே அடுத்த ஷாட் எடுக்கும்போது மிகச் சரியாக அவரின் நிலையை மற்றும் பார்வையை சொல்வார்கள். < = கை மேலே தலையை தடவிவிட்டு எடுத்தார். தமிழ் : இவ்வளவு வேலை இருக்கா? சரி உதவி இயக்குனர்களுக்கு என்னென்ன வேலை? நாலு உதவி இயக்குனர்கள்ல முதல் உதவி இயக்குனர் ஓ.கே.டேக்ஸ் அதாவது எடுத்து காட்சியில் எந்தெந்த டேக்ஸ் ஓ.கே.ஆனது. எந்தெந்த டேக் ரிஜெக்ட் ஆனது என்பதை துள்ளியமாக குறித்து வைப்பார். இந்த ஓ.கே.டேக்ஸ் ரிப்போர்ட் என்பது எடிட்டிங்கிற்கு மிக முக்கியமானது. தமிழ் : அப்ப அந்த உதவி இயக்குனர் வேலை முக்கியமான வேலைன்னு சொல்லுங்க. ஆமா அதோ அந்த நடிகையோட முகத்தைப் பார்த்து பார்த்து நோட்ல ஏதோ எழுதறாரே அவர் யாரு? அவர்தான் இரண்டாவது உதவி இயக்குனர். அவரோட வேலை என்ன தெரியுமா? காஸ்ட்யூம் கண்ட்னியூட்டி பார்க்கிறது. அதாவது ஒரு காட்சியில ஒரு நடிகை எந்த நிறத்துல, வடிவத்துல டிரஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க அவங்களோட காதுல எந்த டிசைன் கம்மல் போட்டுக்கிட்டு இருந்தாங்க. மூக்குத்தி எந்த மாதிரி டிசைன்ல இருந்தது. அவங்க வச்சிருந்த பொட்டு எந்த நிறம். அது மீடியம் சைஸ் பொட்டா, பெரிய பொட்டா, சிறிய பொட்டா... ஏர்ஸ்டைல் எப்படியிருந்தது. கையில எத்தனை வளையல் போட்டிருந்தாங்க. மோதிரம் எத்தனை, என்ன மாதிரி டிசைன்ல மோதிரம் இருந்தது. கழுத்துல செயின் போட்டிருந்தா அதோட டிசைன் என்ன? இதையெல்லாம் துள்ளியமா கவனிச்சு குறிச்சு வச்சிருப்பாரு. இது எதுக்குன்னா... ஒரு காட்சி சென்னையில எடுக்கறாங்கன்னு வச்சிப்போம். அதோட தொடர்ச்சி இங்கே எடுக்க முடியாமப் போகலாம். அப்படியில்லாம இந்த காட்சியோட தொடர்ச்சி காட்சி வேறு ஊர்ல வேறு நாள்ல எடுக்கலாம். அதாவது ஒரு நடிகர் வீட்டைவிட்டு கிளம்பற மாதிரியான காட்சி எடுத்துட்டு அவங்க அடுத்த ஷாட்ல வேறு இடத்துக்கு வருகிற மாதிரி காட்சி எடுக்கலாம். அப்படி தொடர்ச்சியான ஷாட் வரும்போது நடிகை அல்லது நடிகரோட டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாமே முன் காட்சியில் உபயோகித்ததே இருக்கவேண்டும். அதனால்தான் இந்த காஸ்ட்யூம் கண்டினியூட்டி என்னு குறித்து வைப்பது மிகவும் தேவையான விஷயம். ஒரு நடிகரோ_நடிகையோ ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடிப்பவர்கள் என்பதால் அவர்களால் அன்று அந்தக் காட்சியில் இந்த கலர் டிரஸ் போட்டிருந்தேன் என்று ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. அதனால் இரண்டாவது அசிஸ்டெண்ட் டைரக்டர்தான் அதை ஞாபகத்திற்கு சரியான நிறத்திலுள்ள டிரஸை எடுத்துத்தரவேண்டும். தமிழ்: அதோ கையில சின்ன நோட் வச்சிருக்கிறாரே அவர்தான் மூணாவது உதவி இயக்குனரா? ஆமாம். அவரோட வேலை நடிகர் நடிகையர் பேசும் வசனத்தை பதிவு செய்வது... அதாவது ஷடே்டிங்கில் ‘நாகரா’ என்கிற ஒலிப்பதிவு இயந்திரத்தில் பெரும்பாலும் வசனத்தை பதிவு செய்துவிடுவார்கள். அப்படி ‘நாகரா’ இல்லாத சூழலில் இந்த மூன்றாவது உதவி இயக்குனர்தான் டேப்பில்... வசனத்தை பதிவு செய்யவேண்டும். நாகரா இருந்து வசனத்தை பதிவு செய்தாலும் நடிகர் நடிகையர்கள் இயக்குனர் சொல்வதுபோல், வசனப் போப்பரில் எழுதப்பட்டிருக்கும் வசனத்தையும் மீறி ஓரிரு வசனம் அதிகமாக பேசினால் அதை மூன்றாவது உதவி இயக்குனர்தான் குறித்து வைக்கவேண்டும். இது டப்பிங்கிற்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். தமிழ் : அதோ கிளாப் போர்டு வச்சிருக்காரே அவர்தான் நாலாவது உதவி இயக்குனர்? ஆமா. ஒரு படத்திற்கு மிக முக்கியமான விஷயம் கிளாப் போர்டு. அந்த கிளாப் போர்டில் எழுதப்படுகிற எண்களை வைத்துதான் எடிட்டிங்கில் நெகடிவ்வை கட் பண்ணுவார்கள். இது இந்த சீன் _ இந்த ஷாட், இந்த டேக்... இந்த டேக் இத்தனை தரம் எடுக்கப்பட்டது என்கிற எல்லா விபரமும் இந்த கிளாப் போர்டு மூலம் அறிந்துவிடலாம். இப்படியுள்ள கிளாப் போர்டில், ஒரு டேக் எடுத்து சரியில்லாமல் இரண்டாவது டேக் எடுத்தால் உடனே போர்டில் ஒன்றை அழித்து இரண்டு என எழுதி கேமராவின் முன்பு காட்டி பதிவு செய்யவேண்டும். இந்த பதிவு என்பது எப்போது வேண்டுமானாலும் செய்துவிடமுடியாது. அந்த டேக்கில் நடிகர்_நடிகை நடிக்கத்துவங்குவதற்கு முன்பு இயக்குனர் ஆக்ஷன் என்று சொன்ன நொடியில்... கேமரா இயங்க ஆரம்பிக்கும் நொடியில் மிக சரியாக கேமரா முன்பு கிளாப் போர்ட்டை காட்டிவிட்டு சட்டென்று விலகிச் செல்லவேண்டும். கிளாப்போர்டு அடிக்கும் வேலை, கடைநிலை வேலை என்பதால் பெரும்பாலான நேரங்களில் டைரக்டரிடமும் கேமராமேனிடமும் திட்டு வாங்குவார்கள். என்ன தமிழ்.. இப்ப... அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுதா... அடுத்த வாரம் கேமரா அசிஸ்டெண்ட்ஸ் பத்து பார்க்கலாம்.</span> |