Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 337 online users.
» 0 Member(s) | 335 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  காணாமல் போன இலங்கைவிளையாட்டு வீரர்கள்
Posted by: yarl - 09-14-2004, 01:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

ஜேர்மனிக்கு விளையாட வந்த இலங்கை அனைத்து கைப்பந்தாட்ட வீரர்களையும் காணவில்லை என பொலிசார் விசாரணை..ப்ரான்சுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம்..

Handball-Nationalteam aus Sri Lanka in Bayern spurlos ...

Wittislingen (dpa) - Die komplette Handball-Nationalmannschaft aus Sri Lanka hat bei einem Trainingsaufenthalt in Bayern das Weite gesucht. 23 Sportler und Betreuer hätten sich von Wittislingen offenbar nach Frankreich abgesetzt, berichtet die Polizei über das spurlose Verschwinden des asiatischen Teams. Zunächst hatten Helfer vermutet, die Asiaten hätten sich beim Waldlauf verirrt. Seit Donnerstag waren die Handballer aus Sri Lanka auf Einladung des TSV Wittislingen zu einem Trainingslager in dem schwäbischen Ort gewesen.

Print this item

  ஈழத்துப் பெண் போராளிகள் பற்றிய விவரணப்படத்தை தயாரிப்பதில் தன
Posted by: tamilini - 09-13-2004, 10:49 PM - Forum: சினிமா - Replies (1)

'என் கருத்தியலுக்கான நடைமுறை வடிவத்தை இங்கு தான் காண்கிறேன்"
முதல் முதல் இலங்கை வந்து சில இடங்களைப் பார்வையிட்ட அப்பெண்ணிடம் 'உங்களுக்கு எந்த இடம் பிடித்திருக்கிறது? என்று கேட்டபோது, கிளிநொச்சி என்று கூறினார் அப்பெண். இலங்கையில் இயற்கை வளம் கொஞ்சம் இத்தனை இடங்களிலிருதும், போரில் சிதைவுற்று முழுக்க முழுக்க செயற்கைத்தனங்களால் கட்டியெழுப்பப்படும் அந்த இடமா பிடித்திருக்கிறது என்ற கேள்வி, கேட்டவரிடம் அந்த அழிவும் அந்த அழிவுக்குப் பக்கத்திலேயே ஓர் உயிர்ப்பும் தோன்றிக் கொண்டிருக்கின்ற, வாழ்வின் மீது இன்னும் நம்பிக்கை இழந்துவிடாத அந்த மக்களைக் கொண்ட இடம்தான் பிடித்திருக்கிறது என்ற பதில் பெண்ணின் உடலை அல்ல ஆளுமையை வைத்து அவளைப் பார் என்பது போல் இருந்தது.



ஆம்!

ஊடகவியலாளாரன ரேவதி 'அண்மையில் இலங்கை வந்திருந்தார். இவரைச் சந்திக்கத் தூண்டியே இந்தப் பதிலும் அந்தப் பதிலை அவர் கூறிய விதமும்தான்.

ஆறு வருடங்களாக 'சன்" தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணி புரிந்தவர். பின்னர் 'Pioner'பத்திரிகையின் தமிழ்நாட்டு செய்தியாளராகப் பணிபுரிந்தவர். அதன் பின் தேசிய மாதர் சம்மேளத்தில் நான்கு வருடங்கள் இணைந்து பணியாற்றியவர். 'கதையல்ல நிஐம்" என்ற லட்சுமியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும் சிறிது காலம் பணியாற்றியவர். தற்போது விவரண படம் தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளார்.

அவர் இலங்கை வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்டபோது.

ரேவதி :- போராளிப் பெண்கள் பற்றிய விவரணப்படம் ஒன்றைத் தயாரிப்பதற்கான முன்னோடி விஜயம்தான் இது.

கேள்வி :-ஏற்கனவே விவரணப் படம் தயாரித்த அனுபவம்?

ரேவதி :- திரைபட விழா ஒன்றிற்குப் போயிருந்தபோதுதான் விவரணப் படம் தயாரிப்பில் என் கவனம் திரும்பியது. இதற்காக திரைப்பட அனுபவத்தைப் பெறுவதற்காக மனிரத்தினத்தை நாடினேன். திரைப்பட விழாவில் வைத்தே அவரைச் சந்தித்தேன். அலுவலகத்தில் வந்து சந்திக்குபடி கூறினார். உடனடியாக பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அங்கு போனேன். மூன்றுமாதம் கழித்து வரச்சொன்னார். என்னால் அவ்வளவு காலம் பொறுக்க முடியவில்லை. கௌதமைச் சந்தித்தேன். அவர் மூலம் 'காக்க காக்க" திரைப்படத்திற்கு அவருடன் சேர்ந்து பணியாற்றினேன். அதன்பின் நானே எனது சொந்த முயற்சியால் உங்களில் ஒருத்தி என்ற விவரணப்படத்தை எடுத்தேன். பலராலும் அழைக்கழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை இது. மும்பை திரைப்பட விழாவிற்கு இது தெரிவாகி தற்போது அமெரிக்காவில் நடக்கவிருக்கும் திரைவிடவிழாவிற்கும் தெரிவாகியுள்ளது. அக்டோபர் 1 இலிருந்து 7 வரைக்கும் இத்திரைப்பட விழா நிய10யோர்க்கில் நடைபெறவுள்ளது.

கேள்வி :- ஈழத்துப் பெண் போராளிகள் பற்றிய விவரணப்படத்தை எடுக்க வேண்டும் எனத் தோன்றியது ஏன்?

ரேவதி :- ஈழப்பிரச்சினைப் பற்றி அல்லது போராளிகள் பற்றி 'ரெரோறிஸ்' என்ற படம் பார்த்தேன். அத்துடன் 'உயிரே' என்ற படத்தையும் பார்த்தேன். இவற்றில் ஒரு ஆண் தான் கொண்ட கொள்கைக்காக இதுவரை போராட முடிகிறபோது, ஒரு பெண் குழந்தை, காதல் என்பனவற்றுக்காக அதை நிராகரிக்கும் போக்கைக் காட்டுகின்றனர். 'ரெரோறிஸ்ற்" என்ற படத்தில் கர்ப்பமாகும் பெண் தன் குழந்தைக்காக தன் கொள்கையை விடுவது காட்டப்படுகிறது. ஒரு ஆணுக்குத் தன் குழந்தை மேல் இருக்கும் இணைவுதான் பெண்ணுக்குப் தன் குழந்தை மேல் இருக்கிறது. ஆனால், அதையே முக்கிய காரணமாக காட்டிக்கொண்டு கொள்கையை விடுவது என்பது குறைபாடுடையதோ எனவே உண்மையில் பெண் இத்தகைய குறைபாட்டுடத்தான் போராட்டத்தில் இயங்குகின்றாளா? என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குத் தோன்றியது. அதுதான் என்னை இப்படியான ஒரு விவரணப்படத்தை எடுக்கத் தூண்டியது.

கேள்வி :- இப்பொழுது நீங்கள் இங்கு வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிறது. இதுவரையான உங்கள் கணிப்பில் தமிழ்ச் சமூகப் பெண்கள் பற்றி?

ரேவதி :- ம்.. எனக்குப் புரிந்து கொள்ள மூடியாத ஒரு விடயமாக, இருப்பது, போராளிப் பெண்களுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி. அதாவது எமது சமூகத்தை விட மரபு ரீதியான ஒரு சமூக அமைப்பை ஆண் - பெண் ஊடட்டத்தை இந்த தமிழ் சமூகம் கொண்டுள்ளது. உதாரணமாக ஒரு பையனும், பெண்னும் நின்று தெருவில் சாதாரணமாக கதைப்பதைக் காண முடியவில்லை. நான் கதைத்தபோதும் அது அசௌகரியமாக உணரப்படுகின்றது. இந்ந நிலையில், பெண்கள் போர்க்களத்தில் நிற்பது ஒரு பெரும் பாச்சல்தான். இதை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சர்வசாதாரணமாக இந்தச் துணிச்சல் கை வந்திருக்கிறது. இந்த ஆளுமை உணரப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், சமூகம் இன்னும் 6 மணிக்குப் பிறகு எங்குபோறாய் என்று சாதாரண, பெண்களைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கிடையேயான மாற்றம் அவர்கள் பதிலில் ஓரளவு தெரிகிறது. அவர்கள் கூறுவார்கள் அங்கு இரவிரவா போர்க்களத்தில் நிற்கிறார்கள். பெண்கள் நீங்கள் என்ன இப்படிப் பயப்படுறீங்க...? என்று கேட்கிறாள் பெற்றோரை பார்த்து! ஆனாலும் இந்த இடைவெளி எப்படி இவ்வளவு காலமும் நிலைத்து இருக்கிறது? இந்தத் தமிழ் சமூகப் பெண்களின் உருவாக்கம் இனி எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வி என்னுள் இருக்கிறது.

அதேவேளை, கொள்கை மேல் பற்றுக் கொண்ட ஒரு பெண்ணாலும் ஆணைப் போல் இயங்க முடியும் என்ற எனது கருத்தியல் ரீதியான நம்பிக்கை இங்கே இயல்பாகி இருப்பதைக் காண முடிந்தது. அதாவது என் கருத்தியலுக்கான நடைமுறை வடிவத்தை இங்கு நான் காண்கின்றேன்.

கேள்வி :- இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள். அரசியல் சார்ந்த பெண்களுக்கான இயங்கங்களால் எதையாவது சாதிக்க முடிந்ததா?

ரேவதி :- அரசியல் சார்ந்த இயங்கங்களாக திராவிட இயக்கத்தின் பெண்கள் அமைப்பையும், இடதுசாரிக் கட்சியின் பெண்கள் அமைப்பையும் நோக்கலாம். இதிலே இடதுசாரி இயக்கம் பெருமளவில் பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளை அதாவது தொழிற்பிரச்சினை, கல்வி, சுகாதாரம் எனத் தீர்வை நோக்கி நகர்ந்தன. ஆனால், திராவிட இயக்கம் கருத்தியல் ரீதியாக தாலி, கற்பு, விழாக்கள், நம்பிக்கைகள் பற்றியதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நேரத்தைச் செலவழித்தது. இந்த இரண்டு இயங்கங்களுமே மிகுந்த தாக்கத்தை விளைவிக்க முடியாமலே இருந்தது. காரணம், ஒன்று அன்றாடப் பிரச்சினையுடன் நின்றுவிட, மற்றது கருத்தியலுடன் மட்டும் நின்றது. அதிலும் திராவிட அரசியல் மந்த நிலையானது இந்தப் பெண்கள் அமைப்புக்களையும் பாதித்தது. எனவே, அரசியல்கட்சி சார்ந்து நின்று இயங்குகின்ற போது பெரிதாக சாதிக்க முடிவதில்லை. கட்சியின் பாதிப்பு மாதர் இயங்கங்களையும் பெருமளவில் பாதிக்கும்.

அதேவேளை, இடதுசாரிகள் அமைப்பானது இன்னும் இயங்குகிற நிலையில் அன்றாடப் பிரச்சினைகளத் தீர்க்கிறது.

ஆனால், கருத்தியல் ரீதியான மாற்றங்களை உருவாக்கும் நிலை இங்கு இல்லாததால் பெருமளவு தாக்கம் விளைவிப்பதாக அது இல்லை. எனவே, ஒரு பெரும் அரசியல் மாற்றுத்தினூடாகத் தான் பால் சமத்துவத்தை உருவாக்க முடியும். அதாவது, ஒரு சமூக அடிப்படை மாற்றத்துடன் தான் இதை உருவாக்க முடியும். ஒரு புரட்சி அரசியல் மாற்றத்துடன்தான் இது வரவேண்டும். ஏற்கனவே கூறப்பட்ட இந்த கட்சி அரசியல், பெண்கள் அமைப்புக்களால் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தமட்டுமே முடிந்தது. பெண்களுக்கான 33வீத இட ஒதுக்கீடும் அந்த வகைதான்.

கேள்வி :- பெண் விடுதலை அல்லது பெண்னிலைவாதம் குடும்ப அலகை சிதைக்கிறது என்ற குற்றச்சாட்டு பற்றி...?

ரேவதி :- ஏற்கனவே இருக்கக் கூடிய குடும்ப அலகு சிதைவடைகிறது என்றால் அதைவிட நல்லது ஒன்று உருவாகும் வாய்ப்பு உள்ளது. குடும்பங்கள் என்றும் இருந்து கொண்டுதானிருக்கும். ஏற்கனவே இருந்த அமைப்பில்தான் சிதைவு ஏற்படும். புதிய குடும்ப அலகில் ஐனநாயகப் பண்பும் இருவருக்குமே சமனான கடமைகளும் இருக்கும்போது சிறந்ததான ஒரு குடும்ப முறைமையை அந்தச் சிதைவு எட்டுகிறது. அதற்கான முயற்சியாக இது அமைகிறது எனக் கொள்ளலாம். முதலாளிக்கு எப்பவுமே தொழிலாளி அடங்கி இருக்கும்போதுதான் சந்தோஷம் சுமுகமான ஒரு உறவு அவர்களுக்குள் இருப்பதாக முதலாளி எண்ணுவார். சிலவேளைகளில் தொழிலாளியும் எண்ணிக் கொள்வார். ஆனால், தொழிலாளியின் உரிமை பற்றி அவருக்குத் தெரிந்த பின் அதைக் கேட்டுப் போராடத் தொடங்கும்போது, உறவு நிலை சீர்குலைவது இயல்பானதே. அதுபோல்தான் பெண்களின் ஆளுமை ஒத்துக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், உடலை மட்டுமே வைத்து பலம், பலவீனம் கணிப்பிட்டல்தான் இங்கு நடக்கிறது. குழந்தையைச் சுமத்தல் என்பது பெண்ணின் பலமாகப் பார்க்கப்படுகின்ற நேரத்தில் அதுவே தான் கொண்ட கொள்கையை சிதறடிக்கும் பலவீனமாகவும் வருகிறது.

குடும்பத்தளத்தில் பெண்ணுக்கு முழுமை தருவது என்பது போற்றப்படுகின்ற தாய்மை, சமூகதளத்தில் இயங்கும் போது கொண்ட கொள்கைக்கு, இயங்குநிலைக்குத் தடையாய் இருப்பது தாய்மை. இந்த இரட்டைத் தன்மை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இது 'அதஉச்ச' அளவீடுகள் பற்றிய மதிப்பீடு எப்படியானவை என்பது பற்றிய அறிவு எம்மிடம் இருக்க வேண்டும். இவைதான் சரியான குடும்ப அலகைத் தீர்மானிக்கும்..

கேள்வி :- இப்பொழுது இந்த 'பொன்மொழி' பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. இது சார்ந்த இந்தியாவில் பெண் கவிஞர்கள் மீதான தாக்குதல் பற்றி கூறுங்கள்?

ரேவதி :- காலங்காலமாக பெண்ணை, உடலாகத்தான் பார்த்தார்கள். அதாவது பெண்னுடலை வைத்துத்தான் பெண் பேசப்பட்டாள். அதே பெண்ணுடலை வைத்து பென் தன் பிரச்சினைகளை இப்போது கூறுகிறாள். புரிந்த மொழியில் தெரியாத விடயத்தைக் கூறுகிறாள். தெரிந்து கொள்ளலாமே! அதைவிடுத்து இவர்கள் பார்வைக் கோணத்தை மாற்றிப் பார்க்கிறார்கள். அதற்கு என்ன செய்வது.?

கௌரி தினக்குரல்
from sooriyan.com

Print this item

  குடைக்குள் மழை
Posted by: AJeevan - 09-13-2004, 04:35 PM - Forum: சினிமா - Replies (2)

<b> <span style='font-size:30pt;line-height:100%'>குடைக்குள் மழை </b></span>
<img src='http://www.vikatan.com/av/2004/sep/19092004/p7.jpg' border='0' alt='user posted image'>
பார்த்திபனிடமிருந்து மிக நுணுக்கமான, மாறுபட்ட, பயங்கரமான காதல் கதை!

<b>காதல்,
நினைத்தால் குடைக்குள்ளே மழை பெய்ய வைக்கவும் முடியும்.
ஒருவனின் வாழ்க்கையையே குடை சாய்க்கவும் முடியும் என்பதே கதை. </b>
<img src='http://www.vikatan.com/av/2004/sep/19092004/p7a.jpg' border='0' alt='user posted image'>
ஆளில்லாத ஒரு பழைய மாடல் பங்களாவில், தன்னந்தனியே இருக்கிற பார்த்திபன், மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். ஏன்... அப்படி அவருக்கு ஏற்பட்ட விரக்தி என்ன என்பதை அவரது எண்ண அலைகளாகவும், இடையிடையே அவர் நடத்துகிற தொலைபேசி உரையாடல்களாகவும் நமக்கு விளக்கிக் கொண்டே நகர்கிறது முதல்பாதி படம். அந்த வீட்டுக்குள் நடக்கிற சில சம்பவங்களினால் அடிக்கடி கட் ஆகி, மறுபடி ஃப்ளாஷ்பேக்கைத் தொடரும் உத்தியைப் படுஷார்ப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.


கதாநாயகி மதுமிதாவின் துள்ளலான காதல் குறும்புகளும் பளீர் நடிப்பும் துடிப்பான சீண்டலுமாக அந்தக் காதல் எபிஸோடு விறுவிறுப்பான வேகத்தில் நகர்ந்து, எதிர்பார்க்க முடியாத திருப்பத்தில் முடிவது, பார்த்திபனோடு சேர்த்து நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

வித்தியாசமான இந்த ÔஒருதலைÕ காதல் தோல்வியில் துவண்டதால்தான் பார்த்திபன் தற்கொலைக்கு முயற் சிக்கிறார் என்று நமக்கு முழுசாக உணர வைக்கும் போது, அவரைத் தடுத்துக் காப்பாற்ற, திடீரென அறிமுகமாகிறார் சிங்கப்பூர் ரிட்டர்ன் தம்பி (இதுவும் பார்த்திபனே!).

ஃபிரெஞ்ச் தாடியும், மைக்கேல் ஜாக்ஸன் ஹேர்ஸ்டைலுமாக இவரது வரவு, கதையில் புதிய சுவாரஸ்யங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், எம்.ஆர்.ராதா ஸ்டைலில் புரட்சிகர(?) கருத்து மழையும், விஜய டி.ராஜேந்தர் பாணியில் இழுத்து இழுத்து உச்சரிப்புமாக வளைய வந்தா லும், அடுத்த சிறிது நேரத்திலேயே பொசுக்கென்று இவர், அண்ணன் பார்த்திபன் கையால், துப்பாக்கிக்கு இரையாகி உயிரை விட்டுவிடுகிறார்.

மேலோட்டமாக ஒரு சராசரியான கதைபோலத் தோன்றினாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புரட்டிப்போடு கிற அந்த பகீர் க்ளைமாக்ஸ், தமிழ் சினிமா ரசிகர்களின் சிந்தனைக்குப் புது சவால். ஒரு மனிதனின் எண்ணச் சுழலை, காட்சி வடிவத்தில் கொண்டு வருவதற்கு எத்தகைய சிரத்தையும் கற்பனா சக்தியும் தேவை என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசன, இயக்குநர் ரா.பார்த்திபன். ஆனால், க்ளைமாக்ஸ் வரை சராசரி தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போடுவதற்கான கமர்ஷியல் விஷயங்கள் இதில் குறைவு.

படத்தின் நாலாவது ரீலில் சோகப் பாடல், அதிரடி ஆட்டம் வைக்கிற க்ளைமாக்ஸ் ஏரியாவில் தாலாட்டுப் பாட்டு, ஜிலீரென ஒரு ஹீரோயின் இருந்தும் காலரைக்கால் டூயட் என்று ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக் கிறார் பார்த்திபன்.

அந்த பங்களா... ஓர் அதிசய அரங்கம். இஞ்ச் இஞ்ச்சாக அந்தக் கட்டடத்தைக் கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிற, ரகளையான ரசனைக்காகவே தனிப் பாராட்டுக்கள். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம் ஓர் உதாரணம். ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனுக்கு சபாஷ்!

தூக்கு மாட்டிக்கொள்ள பார்த்திபன் ஒரு பட்டுச் சேலையை எடுக்க, அந்த சேலையே மதுமிதாவாக மாறி அவரைப் படாதபாடு படுத்தும் காட்சியில் காமிராமேன் சஞ்சய் & இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இருவரும் சேர்ந்து பிரமாதப்படுத்து கிறார்கள்.

உடைந்துபோன பல்பின் கண்ணாடிச் சில்லையும் பிறைநிலாவையும் மாறி மாறிப் பார்க்கும் பார்த்திபன், நிலாதான் உடைந்து விட்டதோ என்றெண்ணி அந்த பல்புத் துண்டை நிலாவுடன் பொருத்திப் பார்க்க, பிறைநிலா முழு நிலாவாகி கூரை வழியே குதிப்பது... என ஆங்காங்கே அடடா போடவைக்கும் அழகு.

ஆந்திர வரவு புதுமுகம் மதுமிதா. தமிழ் சினிமாவுக்கு பார்த்திபனின் குடை... ஸாரி கொடை! கண்களைஉறுத் தாத கவர்ச்சியும், பஞ்சமில்லாத இளமைத் துள்ளலுமாக வளையவரும் இந்தப் பெண்ணுக்கு, அடுத்தடுத்து திறமையான இயக்குநர்களின் படங் களில் வாய்ப்புக் கிடைத்தால், சந்தேகமில்லாமல் செம ரவுண்டு வருவார்!

மதுமிதாவை காரில் போய்க் கடத்தி வருவதும், அவர் பார்த்திபனின் வெறித் தனமான காதலைப் படிப்படியாகப் புரிந்துகொள்வதும்... குணா, சேது, காதல் கொண்டேன் படங்களையெல் லாம் நினைவுறுத்துகின்றன. ஆனால், அந்தக் கடத்தல் அத்தியாயத்தின் முத்தாய்ப்பாக, காதலியோடு தனது கற்பனை வாழ்க்கையை மெகா சைஸ் ஆல்பமாக வரைந்து வைத்து, அதை நெகிழ்ச்சியோடு பார்த்திபன் வர்ணிக்கிற கவிதையான காட்சியில் பழைய வாசனையெல்லாம் பறந்தே போகிறது.

பொறிக்குள் வந்து சிக்கும் எலி, ஜன்னல் வழியே நுழையும் பாம்பு, ஃப்ரிஜ்ஜுக்குள் பார்த்திபன் வைத்து அடைகாக்கும் உறைந்த கோழி... இதெல்லாம் சராசரி ரசிகர்களின் மண்டையைக் குழப்பும் புதிர்கள்.

எஸ்.பி.பி&யின் எங்க போயிச் சொல்லுவேன்... காதுக்கு இதம். ராஜாவின் அடியே கிளியே... மனசுக்குச் சுகம்! இரண்டாம் பார்த்திபன், அவர் சம்பந்தப்பட்ட மிக நீளமான வசனக் காட்சிகள், திகட்டுமளவுக்கு Ôகிம்மிக்Õகுகள் என குடைக்குள் சில கம்பிகள் குத்தினாலும், மனசுக்குள் மழைத்தூறல்தான்!

வழக்கமான எதிர்பார்ப்புகளை உதறிவிட்டு உள்ளே போனால், காதலை கதிகலங்கவைக்கும் பரிமாணத்தில் பதிவு செய்திருக்கும் பார்த்திபனின் முயற்சி, புதியதொரு அனுபவம்!

\ விகடன் விமரிசனக்குழு

Print this item

  இதயத்தைப் பாதுகாக்க 20 வழிகள்..!
Posted by: vasisutha - 09-12-2004, 05:13 PM - Forum: மருத்துவம் - Replies (25)

<span style='color:red'><b>இதயத்தைப் பாதுகாக்க 20 வழிகள்..!</b>

<b>Doctor.K.நடராஜன்</b>

[size=13]''வேகமான இன்றைய உலகமும், படபடப்பான வாழ்க்கைச் சூழலுமே இன்று பெரும்பாலான நபர்களுக்கு இருதய பிரச்னைகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது'' என்கிறார் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் கே.நடராஜன். இருதயத்தை நாம் பாதுகாக்கவும் இருதயப் பிரச்னைகள் ஏதும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளவும் இருபது வழிகளை அவர் சொல்கிறார். அவற்றைக் கடைப்பிடித்தால் நூறு சதவிகிதம் இருதயப் பிரச்னைகள் வராமல் தவிர்க்க முடியுமாம்.

இதயத்தைப் பாதுகாக்க இருபது வழிகள் :

1.) முதலில் மனிதன் தான் வாழுகிற சூழ்நிலையை சுகாதாரமுள்ளதாக வைத்துக்கொள்ளவேண்டும். அது மாடி வீடாக இருக்கட்டும்; இல்லை குடிசையாக இருக்கட்டும். அதற்குள் நாம் வசிக்கிற சூழல் சாதாரணமாக உள்ளபடி தூய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்.

2.) வெளிச்சம் என்பது மன உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது என்பதால் நாம் வசிக்கிற வீடு உலர்ந்த, வெளிச்சமுள்ள இடமாக இருக்கவேண்டும். இருளடைந்த வீடுகளுக்குள் வசிப்பது மன இறுக்கத்தைத் தரும். மன இறுக்கம் இதயத்திற்கு பிரச்னை தரும் என்பதால் முடிந்தளவு வெளிச்சமுள்ள வீடுகளிலேயே வசிக்கவேண்டும்.

3.) காற்று மனிதனின் அத்தியாவசியத் தேவை என்பதால் நாம் வாழுகிற இடம், சூழலில் காற்றோட்டம் நன்கு இருக்கவேண்டும்.

4.) நாம் வாழுகிற சூழலுக்கும் வேலைகளிலும் வேகமான, படப்படப்பான நிம்மதியற்ற மன நிலைகளைக் கணிசமாக குறைத்துக் கொள்ளவேண்டும். அலைச்சல், பரபரப்பு என்கிற இயந்திரத்தனமான வேலை அமைப்புதான் இருதயப் பிரச்னையில் முதலிடம் வகிக்கிறது என்பதால் அமைதியான, நிம்மதியான மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு,..

ஒருவருக்கு ஒரு வேலையில் லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆனால் அந்த வேலை அளவுக்கதிகமான டென்ஷனையும் ட்ரஸ்சையும் தருகிறது என்றால் அதைத் தவிர்த்துவிட்டு அதைவிட குறைவாகவே கிடைத்தாலும் நிம்மதி கிடைக்கிறது என்கிற சூழலுள்ள வேலையை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் லட்சங்களைவிட, கோடியைவிட உங்கள் உடலுக்கு மதிப்பு அதிகம்.

அப்படி உங்களால் அந்த டென்ஷன் வேலையை விட முடியாது என்றால், அந்த வேலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு அதிலுள்ள டென்ஷனை எப்படிக் குறைத்து அமைதியான முறையில் வாழ்வது என்று முயற்சிக்க வேண்டும்.

5.) தினமும் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் ஏன் எல்லோருமே ஒரு மணி நேரமாவது மெடிடேஷன், யோகா, தியானம் எனக் கடைப்பிடிப்பது இருதயத்திற்கு நல்லது.

6.) உணவு முறைகளில் கட்டுப்பாடுள்ள உணவு முறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்திற்கு மிதமான உணவு சாப்பிடவேண்டும். வயிறு புடைக்க உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிலும் பால், பழங்கள், கீரை காய்கறிகள் என சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும்.

7.) பாஸ்ட்ஃபுட் கலாசாரம் மிகுந்துவிட்ட இன்றைய சூழலில் கண்ட ஓட்டல்களில் கண்ட எண்ணெய்களில் பொரித்த வறுத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை, சிறுநீரகங்கள் சாக்லெட், கொக்கோ, மாமிசக்கொழுப்பு போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.

8.) ஒரே நேரத்தில் வயிறு புடைக்க உண்பதைத் தவிர்த்து, சீரான இடைவெளி நேரங்கள் விட்டு ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறுமுறை சிறு அளவுகளில் சாப்பிடுவது வயிற்றிற்கும் இதயத்திற்கும் நல்லது.

9.) இரவில் படுக்கச் செல்லும் முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. சாப்பிட்டவுடன் சிறிது நேர நடைப்பயிற்சி செய்வது நல்லது.

10.) அடிக்கடி சளி பிடிக்காமலும், தொண்டையில் புண் ஏற்படாமலும் டான்சிலிடிஸ் பிரச்னைகள் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் டான்சிலிடிஸ் பிரச்னைகளால் இதயத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

11.) ஓய்வு ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது என்பதால் உடல் உழைப்புத் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும், வீட்டில் வேலை செய்பவர்களும் கூட சரியான விகிதத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்.

இரவு நாம் தூங்கும் இடத்தை மென்மையான அமைதியான தூக்கத்தைப் பெறும் விதமாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதிக நேரம் கண் விழித்திருப்பதும் கூடாது.

12.) உடற்பயிற்சி இதயத்திற்கு மிகவும் பயனளிக்கும். நீந்துதல், வாலிபால், டென்னிஸ், சைக்கிள் ஓட்டுதல், நடைப் பயிற்சி என திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளும் பயிற்சியும் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.

13.) மலச்சிக்கல் என்பது உடலையும் மனதையும் பாதிக்கும். அதனால் கீரைகள் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

14.) தண்ணீர் என்பது மனித உடலுக்கு அவசியமான ஒன்று. அதனால் ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீராவது அருந்தவேண்டும்.

15.) குடிப்பழக்கம் இதயத்திற்கு தீங்கானது என்பதால் குடியை அறவே நிறுத்தவேண்டும். இக்கால இளைஞர்கள் பீர் என்கிற குடி போதைக்கு மிகவும் அடிமையாகியிருக்கிறார்கள். பீர் பெரிதாக போதையில்லை என்று அதை எல்லா கல்யாண விசேஷங்களிலும் பரிமாறப்படுகிற ஃபேஷன் பொருளாக்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த பீர் அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

16.) இதயப் பிரச்னையில் இதய அடைப்பில் முதலிடம் வகிப்பது புகை பிடிக்கும் பழக்கும். சிகரெட், பீடி போன்ற பொருட்களின் புகையை உள்ளிழுக்கும் போது நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் இரத்த நாளங்களில் சென்று பெருமளவு அடைப்பை ஏற்படுத்துகிறது.

இன்று பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் பயிலும் பெரும்பாலான சிறுவர்களும், இளைஞர்களும்கூட 'ஸ்டைல்' என்கிற மனப்பான்மையில் புகைபிடிக்கும் பழக்கத்தைத் துவங்கியுள்ளனர். இதனால் முப்பது முப்பத்தைந்து வயதிலேயே இதயப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்குக் கேடு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டொழிப்பது நல்லது.

17.) உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது இதயப் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி என்பதால் உடல் எடை அதிகப்படியாக கூடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைச் சீராக வைத்திருக்கவேண்டும். அதாவது நம் உயரம் 170 செண்டிமீட்டர் என்றால் அதில் 105_ஐ கழித்து 65 கிலோ உடல் எடையை மெயின்டென் செய்யவேண்டும்.

18.) மணிக்கணக்கில் டி.வி. முன்பு உட்காருவதைத் தவிர்க்கவேண்டும். மன இறுக்கத்தைத் தரும் டி.வி. தொடர்கள் பார்ப்பதையும் டென்ஷனை ஏற்படுத்தும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதையும் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது.

19.) உயர் இரத்த அழுத்தம், சர்க்கரையும் இதயத்தைப் பாதிப்பவை என்பதால், அவை இரண்டும் அதிகரித்துவிடாமல் கட்டுப்பாடாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

20.) எப்போதும் வேலை, படபடப்பு, டென்ஷன் என்கிற சூழலிலிருந்து விடுபட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தினரோடு கோவில்கள், சுற்றுலா என்று சென்றுவருவது நல்லது.

இதயத்தைப் பாதுகாக்க இந்த இருபது வழிகளைக் கடைப்பிடித்தாலே நூறு சதவிகித இதயப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியிலும் கல்லூரியிலும் எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

ஒருவருக்கு இதயத்தில் லேசாக அடைப்பிருப்பதை எப்படிக் கண்டறிவது?

இதயத்தில் அடைப்பிருப்பதற்கான அறிகுறிகள் என்று பார்த்தால் வேகமாக நடக்க முடியாது. அப்படி நடக்க முற்படும்போது மார்பில் வலி தோன்றும். அடுத்து சாப்பிட்டதும் நடக்க முடியாது. மார்பில் வலி எடுக்கும். படிகளில் ஏற முடியாது மூச்சுத்திணறும்.

இந்தப் பிரச்னையுள்ளவர்கள் மருத்துவரை அணுகினால் மருத்துவர்கள் ஈ.சி.ஜி. போன்ற டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்த்து எத்தகை சிகிச்சை தேவை என்ற முடிவுக்கு வருவார்.

ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறி என்ன? தீர்வு என்ன?

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதற்கான முதல் அறிகுறி அதிகப்படியான வியர்வையும், படபடப்பு நிலையும்தான். அடுத்து இடதுகையின் தோளிலிருந்து விரல்கள் வரை கடுமையான வலி இருக்கும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலி ஆரம்பித்து கழுத்து, கன்னம் என வலி பரவ ஆரம்பிக்கும். இப்படியான அறிகுறி தெரிந்தவுடனே அருகிலிருக்கும் மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்லவேண்டும். இதில் முக்கியமான செய்தி. குடும்பத்திலுள்ளோர் அவரின் படபடப்பு அதிகரிக்கும் படியான கூச்சல், அழுகை என இல்லாமல் தன்னம்பிக்கை தரும்படியான வார்த்தைகளைக் கூறி டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.

இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடுவது மிகவும் நல்லது.

இருதய அடைப்பிற்கான சிகிச்சைகள் என்னென்ன?

1. ஆன்ஜியோ பிளாய்ட்

2. பைபாஸ் சர்ஜரி

3. ஸ்டண்ட், என்று மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.

1. இருதயத்தின் ஒரு வால்வில் அடைப்பிருந்தால் ஆன்ஜியோ பிளாஸ்ட் என்கிற இரப்பர் குழாயினை தொடையிலுள்ள இரத்தக் குழாயின் வழியே செலுத்தி, இதயத்தின் அடைப்புள்ள பகுதிக்கு அனுப்பி, அங்கே அடைப்புள்ள பகுதியில் ரப்பரை விரிய வைத்து அடைப்பு சரிசெய்யப்படும்.

2. வால்வுகளில் அடைப்பிருந்தால் அதற்கு பைபாஸ் சர்ஜரி என்கிற அடைப்புள்ள பகுதிக்கு முன்பாகவும் பின்பாகவும் தொடையிலுள்ள நரம்பை எடுத்து பொருத்தி ரத்தம் செல்வதற்குப் புதிய பைபாஸ் பாதையை உருவாக்குவார்கள்.

3. இப்போது புதிதாக வந்திருக்கிற ஸ்டண்ட் சிகிச்சை என்கிற முறையில் அடைப்புள்ள இடத்தைக் குறுகலாக்கி அதன் இரண்டு பக்கங்களிலும் ரத்தம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தித் தருவார்கள். </span>

www.kumudam.com

Print this item

  காதல் பரிசு...!
Posted by: kuruvikal - 09-12-2004, 12:23 PM - Forum: கவிதை/பாடல் - Replies (80)

<img src='http://kuruvikal.yarl.net/archives/11001_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

காதல் பரிசு
ஒரு பயங்கரம்
முள்ளோடு றோஜா
சொல்லுது வேசம்
எனக்கு மட்டும்
அது என்றும் வெளிச்சம்
காதல் சுத்த
பித்தலாட்டம்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  பிரதாபன் - இந்தியாவில் மரணம்
Posted by: இளைஞன் - 09-11-2004, 12:29 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (9)

கீழே ஒரு விபத்து பற்றிய இரண்டு நாளேடுகளின் செய்திகள் தரப்பட்டுள்ளது. இது ஒரு கவலையான நிகழ்வு. ஆனாலும், செய்திகளில் உள்ள தகவற்பிழை பற்றிக் குறிப்பிடவே இங்கே இவற்றை இட்டுள்ளேன். இங்கு விபத்துக்குள்ளான சிறுவன் ஜேர்மனியில் நான் முன்னர் வசித்த நகரில் தான் வசித்து வந்தவர். சிறுவனுக்கு 14 வயது. சிறுவனின் பெயர் பிரதாபன். பிரதாபன் ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த சிறுவன். ஜேர்மன் பாடசாலையில் படித்து வருகிறான். தாய் தந்தை இரண்டு சகோதரிகள் என்று குடும்பமாக இருக்கிறார்கள். தந்தை ஜெயபாலசந்திரன் ஒரு மரக்கறி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அவரை ஜெயா மாஸ்ரர் என்றுதான் அழைப்பார்கள். காரணம் முன்னர் தமிழாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுவன் பிரதாபனும் திறமையான மாணவன். இங்கே என்ன தமிழ் கலை நிகழ்வுகள் நடந்தாலும், தமிழாலய நிகழ்வுகள் நடந்தாலும் அதில் பங்குபற்றுவான். பரதநாட்டியம், வயலின் போன்றவையில் ஆர்வம் கொண்டு பயின்று வந்தவன். உண்மையிலேயே மிகவும் திறமையான ஒரு சிறுவன்.

இப்பொழுது பாடசாலை விடுமுறை என்பதால் தாயும் மூன்று பிள்ளைகளும் இந்தியாவிற்கு சென்றார்கள். தந்தை வேலைகாரணமாக போகவில்லை. விடுமுறை எல்லாம் முடிந்து ஜேர்மனியிற்கு அடுத்தநாள் திரும்பவேண்டிய நிலையில், தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக நண்பருடன் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது. சிறுவனின் மரணத்தினால் அதிர்ச்சியுற்ற தாய் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். தந்தையும் எமது நகரில் வசிக்கின்ற இன்னொருவரும் இப்பொழுது இந்தியா சென்றுள்ளனர். சிலவேளை சிறுவனின் உடலை ஜேர்மனி கொண்டு வருவார்கள்.

இந்த சிறுவன் பிரதாபனின் மரணம் எமது நகரில் உள்ள அனைவருக்கும் மிகவும் கவலை தந்துள்ள நிகழ்வு. எம்மோடு பழகிய, மிகவும் திறமையான இந்தச் சிறுவனின் இழப்பால் கவலையுற்றிருக்கும் அவனது பெற்றோர்க்கு எமது ஆறுதலைச் சொல்கிறோம்.

இந்தச் செய்திகளில் உள்ள தகவற் பிழைகள், மிகவும் வருத்தத்திற்குரியது.

<b>தினந்தந்தி</b>

நடிகர் செந்தில் மகன் விபத்தில் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் உடன் சென்ற நண்பர் பலி

சென்னை, செப்.9-

நடிகர் செந்தில் மகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் அவர் படுகாய மடைந்தார். உடன் சென்ற அவருடைய நண்பர் பரிதாபமாக செத்தார்.

நடிகர் செந்தில் மகன்:
வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் செந்தில். இவருடைய மகன் ராமச்சந்திர பிரபு. இவர் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ராமச்சந்திர பிரபுவின் நண்பர் பிரபா (என்கிற) பிரதாப். இவர் இலங்கையை சேர்ந்தவர். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பிரதாப் தற்போது ஜெர்மனியில் பணிபுரிந்து வந்தார்.

லாரி மோதல்:
அவர் சென்னையில் உள்ள நண்பர் ராமச்சந்திர பிரபுவை பார்த்துவிட்டு மீண்டும் ஜெர்மனி செல்ல நேற்று சென்னை வந்தார். நேற்று காலையில் பிரதாப், ராமச்சந்திர பிரபு இருவரும் மோட்டார் சைக்கிளில் கோயம் பேடு நூறடி சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். எஸ்.எஸ். ராயல் மகால் அருகே வந்தபோது ரெயில் வேக்கு சொந்தமான இரும்பு சாமான்களை ஏற்றி வந்த லாரி அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

நண்பர் சாவு:
இதில் பிரதாப் - ராமச்சந்திர பிரபு இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியில் பிரதாப் பரிதாபமாக செத்தார். ராமச்சந்திர பிரபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.



<b>தினமணி</b>
சரக்கு லாரி மோதி மாணவர் சாவு, நடிகர் செந்தில் மகன் காயம்

சென்னை, செப். 9:
சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் சரக்கு லாரி மோதி மாணவர் பிரபாகரன் (14) இறந்தார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நடிகர் செந்திலின் மகன் ஹேமச்சந்திர பாபு (18) லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
நடிகர் செந்தில் மகன் ஹேமச்சந்திர பாபு. இவரது நண்பர் பிரபாகரன் (14). சென்னையில் பள்ளியில் பயின்று வந்தார். பிரபாகரன் தந்தை இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயபாலசந்திர ராஜா. இவர் தற்போது ஜெர்மனியில் உள்ளார்.
புதன்கிழமை மதியம் திருமங்கலம் 100 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் ஹேமச்சந்திர பாபுவும் பிரபாகரனும் வந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து ரயில்வே சாமான்களை ஏற்றி வந்த சரக்கு லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹேமச்சந்திர பாபு லேசான காயத்துடன் உயிர்தப்பினார். ஜெர்மனியில் உள்ள பிரபாகரனின் தந்தைக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எம். சந்திரன் விசாரித்து வருகிறார்.

Print this item

  தியாக தீபம் திலீபன் [ 17வது வருட நினைவு நாளுக்காக]
Posted by: kavithan - 09-11-2004, 09:49 AM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

[b]<span style='font-size:30pt;line-height:100%'>தியாக தீபம் திலீபன் [ 17வது வருட நினைவு நாளுக்காக]</span>

<i><span style='font-size:25pt;line-height:100%'>
1987 ம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் , இலங்கை அரசுக்கு எதிராகவும் 5 கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் அவர்களின் அகிம்சை போராட்டம் நல்லூரின் வீதியில் நடந்து முடிந்து இன்று 17 ஆண்டுகள் கடந்து விட்டது. அன்று அவரின் போராட்டம் மூலம் தலைவருக்கும், எமக்கும் அவர் உணர்த்தியது ஆயுதபோராட்டம் மூலமே எதையும் அடையமுடியும் என்பதாகும். </i></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_img/thileepan.jpg' border='0' alt='user posted image'>



[u]<span style='font-size:25pt;line-height:100%'>உண்ணாவிரதம்
</span>

<span style='font-size:23pt;line-height:100%'>உண்ணாவிரதம்
உணர்வுகள் அற்ற அரசுக்கு
உச்சந் தலையில் கொடுக்கும் அடி.
உரிமைக்காக
உணவின்றி , உருக்குலைந்து
உயிரைக்கொடுக்கும்
உன்னதமான போராட்டம்</span>



<span style='font-size:25pt;line-height:100%'>திலீபன் </span>

<span style='color:darkblue'>தினம் தினம்
நாம் மனதில் காணும்
இதயத்தில் போற்றும்
தியாக தீபம் திலீபன்



[size=18][u]கோரிக்கை
</span>

<span style='font-size:23pt;line-height:100%'>ஜந்து கோரிக்கைகளை
அகலக்கால் வைத்த இந்தியாவுக்கும்
ஆளும் அரசுக்கும்
அடித்து கூறி
ஆகாரம் இன்றி
நல்லூரின் வீதியில்
திலீபன்
நடத்திய வேள்வி
தீ..!
இன்றும் அணையாது எரிகிறது.</span>


<span style='color:brown'>
\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்\"



[size=16]உறுதியான வாசகங்களாலும்
பேச்சாற்றலாலும்
மக்கள் மனதில்
விடுதலையை விதைத்த
வீராதி வீரன்
தியாகி திலீபன்
இன்னும்
அழியா விருட்சமாக
யாழ். பல்கலைகழக
மருத்துவபீடத்தில்
மருத்துவர்களை உருவாக்கும்
மகத்தான பணியில்.</span>




தொடரும்

கவிதன்

Print this item

  கிரிக்கெட் - ICC Champion Trophy
Posted by: kuruvikal - 09-11-2004, 03:12 AM - Forum: விளையாட்டு - Replies (24)

<img src='http://newsimg.bbc.co.uk/sol/shared/img/nav/v3_banners/cricket_banner.gif' border='0' alt='user posted image'>

<b>ICC Champions Trophy</b>

Group A: Australia, New Zealand, USA

Group B: South Africa, West Indies, Bangladesh

Group C: Pakistan, India, Kenya

Group D: Sri Lanka, England, Zimbabwe


<b>Group tables </b>

September

10 England v Zimbabwe, Edgbaston

Scorecard

10 New Zealand beat USA by 210 runs

11 India v Kenya, The Rose Bowl

12 South Africa v Bangladesh, Edgbaston

13 Australia v USA, The Rose Bowl

14 Pakistan v Kenya, Edgbaston

14 Sri Lanka v Zimbabwe, The Oval

15 West Indies v Bangladesh, The Rose Bowl

16 Australia v New Zealand, The Oval

17 Sri Lanka v England, The Rose Bowl

18 South Africa v West Indies, The Oval

19 India v Pakistan, Edgbaston

21 SF1 (Winner Group A v Winner Group D), Edgbaston

22 SF2 (Winner Group B v Winner Group C), The Rose Bowl

25 Final, The Oval


Thanks bbc.com

Print this item

  நந்தவனத்து முகங்கள்....
Posted by: சுடரோன் - 09-10-2004, 11:55 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

காலைக் கதிரால்
பனித்துளியைக் கழுவும்
வாசம் கொண்ட
நந்தவனத்து முகங்கள்

<img src='http://www.jamitaback.com/newprints/1103/images/Garden-at-Dawn.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  துளிகள்.....!
Posted by: tamilini - 09-09-2004, 07:22 PM - Forum: கவிதை/பாடல் - Replies (880)

<img src='http://tamilini.yarl.net/archives/moon.jpg' border='0' alt='user posted image'>

அன்பே நீ பூமி தானே
அங்கேயே நிலவு நானே...
மீண்டும் மீண்டும்
உன்னை சேர்வேனே..
தேய்ந்து வளர்ந்து
உன்னை சேர்வேனே....!

Print this item