Yarl Forum
பிரதாபன் - இந்தியாவில் மரணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: பிரதாபன் - இந்தியாவில் மரணம் (/showthread.php?tid=6724)



பிரதாபன் - இந்தியாவில் - இளைஞன் - 09-11-2004

கீழே ஒரு விபத்து பற்றிய இரண்டு நாளேடுகளின் செய்திகள் தரப்பட்டுள்ளது. இது ஒரு கவலையான நிகழ்வு. ஆனாலும், செய்திகளில் உள்ள தகவற்பிழை பற்றிக் குறிப்பிடவே இங்கே இவற்றை இட்டுள்ளேன். இங்கு விபத்துக்குள்ளான சிறுவன் ஜேர்மனியில் நான் முன்னர் வசித்த நகரில் தான் வசித்து வந்தவர். சிறுவனுக்கு 14 வயது. சிறுவனின் பெயர் பிரதாபன். பிரதாபன் ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த சிறுவன். ஜேர்மன் பாடசாலையில் படித்து வருகிறான். தாய் தந்தை இரண்டு சகோதரிகள் என்று குடும்பமாக இருக்கிறார்கள். தந்தை ஜெயபாலசந்திரன் ஒரு மரக்கறி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அவரை ஜெயா மாஸ்ரர் என்றுதான் அழைப்பார்கள். காரணம் முன்னர் தமிழாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுவன் பிரதாபனும் திறமையான மாணவன். இங்கே என்ன தமிழ் கலை நிகழ்வுகள் நடந்தாலும், தமிழாலய நிகழ்வுகள் நடந்தாலும் அதில் பங்குபற்றுவான். பரதநாட்டியம், வயலின் போன்றவையில் ஆர்வம் கொண்டு பயின்று வந்தவன். உண்மையிலேயே மிகவும் திறமையான ஒரு சிறுவன்.

இப்பொழுது பாடசாலை விடுமுறை என்பதால் தாயும் மூன்று பிள்ளைகளும் இந்தியாவிற்கு சென்றார்கள். தந்தை வேலைகாரணமாக போகவில்லை. விடுமுறை எல்லாம் முடிந்து ஜேர்மனியிற்கு அடுத்தநாள் திரும்பவேண்டிய நிலையில், தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக நண்பருடன் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது. சிறுவனின் மரணத்தினால் அதிர்ச்சியுற்ற தாய் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். தந்தையும் எமது நகரில் வசிக்கின்ற இன்னொருவரும் இப்பொழுது இந்தியா சென்றுள்ளனர். சிலவேளை சிறுவனின் உடலை ஜேர்மனி கொண்டு வருவார்கள்.

இந்த சிறுவன் பிரதாபனின் மரணம் எமது நகரில் உள்ள அனைவருக்கும் மிகவும் கவலை தந்துள்ள நிகழ்வு. எம்மோடு பழகிய, மிகவும் திறமையான இந்தச் சிறுவனின் இழப்பால் கவலையுற்றிருக்கும் அவனது பெற்றோர்க்கு எமது ஆறுதலைச் சொல்கிறோம்.

இந்தச் செய்திகளில் உள்ள தகவற் பிழைகள், மிகவும் வருத்தத்திற்குரியது.

<b>தினந்தந்தி</b>

நடிகர் செந்தில் மகன் விபத்தில் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் உடன் சென்ற நண்பர் பலி

சென்னை, செப்.9-

நடிகர் செந்தில் மகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் அவர் படுகாய மடைந்தார். உடன் சென்ற அவருடைய நண்பர் பரிதாபமாக செத்தார்.

நடிகர் செந்தில் மகன்:
வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் செந்தில். இவருடைய மகன் ராமச்சந்திர பிரபு. இவர் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ராமச்சந்திர பிரபுவின் நண்பர் பிரபா (என்கிற) பிரதாப். இவர் இலங்கையை சேர்ந்தவர். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பிரதாப் தற்போது ஜெர்மனியில் பணிபுரிந்து வந்தார்.

லாரி மோதல்:
அவர் சென்னையில் உள்ள நண்பர் ராமச்சந்திர பிரபுவை பார்த்துவிட்டு மீண்டும் ஜெர்மனி செல்ல நேற்று சென்னை வந்தார். நேற்று காலையில் பிரதாப், ராமச்சந்திர பிரபு இருவரும் மோட்டார் சைக்கிளில் கோயம் பேடு நூறடி சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். எஸ்.எஸ். ராயல் மகால் அருகே வந்தபோது ரெயில் வேக்கு சொந்தமான இரும்பு சாமான்களை ஏற்றி வந்த லாரி அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

நண்பர் சாவு:
இதில் பிரதாப் - ராமச்சந்திர பிரபு இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியில் பிரதாப் பரிதாபமாக செத்தார். ராமச்சந்திர பிரபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.



<b>தினமணி</b>
சரக்கு லாரி மோதி மாணவர் சாவு, நடிகர் செந்தில் மகன் காயம்

சென்னை, செப். 9:
சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் சரக்கு லாரி மோதி மாணவர் பிரபாகரன் (14) இறந்தார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நடிகர் செந்திலின் மகன் ஹேமச்சந்திர பாபு (18) லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
நடிகர் செந்தில் மகன் ஹேமச்சந்திர பாபு. இவரது நண்பர் பிரபாகரன் (14). சென்னையில் பள்ளியில் பயின்று வந்தார். பிரபாகரன் தந்தை இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயபாலசந்திர ராஜா. இவர் தற்போது ஜெர்மனியில் உள்ளார்.
புதன்கிழமை மதியம் திருமங்கலம் 100 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் ஹேமச்சந்திர பாபுவும் பிரபாகரனும் வந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து ரயில்வே சாமான்களை ஏற்றி வந்த சரக்கு லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹேமச்சந்திர பாபு லேசான காயத்துடன் உயிர்தப்பினார். ஜெர்மனியில் உள்ள பிரபாகரனின் தந்தைக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எம். சந்திரன் விசாரித்து வருகிறார்.


- tamilini - 09-11-2004

இறந்த சிறுவனுக்கு பிரதாபனிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 09-11-2004

பிரதாபனுக்கு எனது எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்


- aathipan - 09-11-2004

அவர்கள் சென்ற வீதி ஆந்திராவையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் நெடுஞ்சாலை. தினமும் அங்கு விபத்துக்கள் நடக்கும். யாருமே அந்த நெடுஞ்சாலையில் போகவேண்டும் என்றால் இரண்டு தடவை யோசித்து வேறு வழி இல்லை என்ற பின் தான் செல்வார்க்ள். அனுபவம் மிக்;க பெரியவர்களே காரோ மோட்டார் சைச்கிளோ ஓட்டப்பயப்படும் இடம். எப்படி சிறுவர்கள் பயமின்றி சென்றார்கள்? N;ஜர்மனியில் இருந்து விதி துரத்தியதோ அந்தப்பாலகனை?. இரக்கமற்ற கடவுள்.


- kuruvikal - 09-12-2004

அருமைச் செல்வத்தை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் யாழ் கள உறவுகளாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெருவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமடைந்த உறவு விரைந்து குணம் பெற ஆண்டவனையும் வேண்டுகின்றோம்...!


- sOliyAn - 09-12-2004

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அம் மைந்தனின் பெற்றோருக்கும் உற்றாருக்கும்!


- kirubans - 09-12-2004

பிரதாபனது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


- Manithaasan - 09-12-2004

பிரதாபனுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியும்
பிள்ளையைப் பிரிந்து தவிக்கும் பெற்றார் உறவுகள் நட்புகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.


- வெண்ணிலா - 09-12-2004

:oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Chandravathanaa - 09-14-2004

<b>Heilbronn இல் நடைபெற்ற சில கலை நிகழ்ச்சிகளில்
பிரதாபனினதும் அவரது சகோதரிகளினதும்
கலைத்திறனைக் கண்டு வியந்திருக்கிறேன்.

அவர் இறந்த செய்தி செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.</b>