![]() |
|
குடைக்குள் மழை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: குடைக்குள் மழை (/showthread.php?tid=6721) |
குடைக்குள் மழை - AJeevan - 09-13-2004 <b> <span style='font-size:30pt;line-height:100%'>குடைக்குள் மழை </b></span> <img src='http://www.vikatan.com/av/2004/sep/19092004/p7.jpg' border='0' alt='user posted image'> பார்த்திபனிடமிருந்து மிக நுணுக்கமான, மாறுபட்ட, பயங்கரமான காதல் கதை! <b>காதல், நினைத்தால் குடைக்குள்ளே மழை பெய்ய வைக்கவும் முடியும். ஒருவனின் வாழ்க்கையையே குடை சாய்க்கவும் முடியும் என்பதே கதை. </b> <img src='http://www.vikatan.com/av/2004/sep/19092004/p7a.jpg' border='0' alt='user posted image'> ஆளில்லாத ஒரு பழைய மாடல் பங்களாவில், தன்னந்தனியே இருக்கிற பார்த்திபன், மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். ஏன்... அப்படி அவருக்கு ஏற்பட்ட விரக்தி என்ன என்பதை அவரது எண்ண அலைகளாகவும், இடையிடையே அவர் நடத்துகிற தொலைபேசி உரையாடல்களாகவும் நமக்கு விளக்கிக் கொண்டே நகர்கிறது முதல்பாதி படம். அந்த வீட்டுக்குள் நடக்கிற சில சம்பவங்களினால் அடிக்கடி கட் ஆகி, மறுபடி ஃப்ளாஷ்பேக்கைத் தொடரும் உத்தியைப் படுஷார்ப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். கதாநாயகி மதுமிதாவின் துள்ளலான காதல் குறும்புகளும் பளீர் நடிப்பும் துடிப்பான சீண்டலுமாக அந்தக் காதல் எபிஸோடு விறுவிறுப்பான வேகத்தில் நகர்ந்து, எதிர்பார்க்க முடியாத திருப்பத்தில் முடிவது, பார்த்திபனோடு சேர்த்து நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வித்தியாசமான இந்த ÔஒருதலைÕ காதல் தோல்வியில் துவண்டதால்தான் பார்த்திபன் தற்கொலைக்கு முயற் சிக்கிறார் என்று நமக்கு முழுசாக உணர வைக்கும் போது, அவரைத் தடுத்துக் காப்பாற்ற, திடீரென அறிமுகமாகிறார் சிங்கப்பூர் ரிட்டர்ன் தம்பி (இதுவும் பார்த்திபனே!). ஃபிரெஞ்ச் தாடியும், மைக்கேல் ஜாக்ஸன் ஹேர்ஸ்டைலுமாக இவரது வரவு, கதையில் புதிய சுவாரஸ்யங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், எம்.ஆர்.ராதா ஸ்டைலில் புரட்சிகர(?) கருத்து மழையும், விஜய டி.ராஜேந்தர் பாணியில் இழுத்து இழுத்து உச்சரிப்புமாக வளைய வந்தா லும், அடுத்த சிறிது நேரத்திலேயே பொசுக்கென்று இவர், அண்ணன் பார்த்திபன் கையால், துப்பாக்கிக்கு இரையாகி உயிரை விட்டுவிடுகிறார். மேலோட்டமாக ஒரு சராசரியான கதைபோலத் தோன்றினாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புரட்டிப்போடு கிற அந்த பகீர் க்ளைமாக்ஸ், தமிழ் சினிமா ரசிகர்களின் சிந்தனைக்குப் புது சவால். ஒரு மனிதனின் எண்ணச் சுழலை, காட்சி வடிவத்தில் கொண்டு வருவதற்கு எத்தகைய சிரத்தையும் கற்பனா சக்தியும் தேவை என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசன, இயக்குநர் ரா.பார்த்திபன். ஆனால், க்ளைமாக்ஸ் வரை சராசரி தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போடுவதற்கான கமர்ஷியல் விஷயங்கள் இதில் குறைவு. படத்தின் நாலாவது ரீலில் சோகப் பாடல், அதிரடி ஆட்டம் வைக்கிற க்ளைமாக்ஸ் ஏரியாவில் தாலாட்டுப் பாட்டு, ஜிலீரென ஒரு ஹீரோயின் இருந்தும் காலரைக்கால் டூயட் என்று ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக் கிறார் பார்த்திபன். அந்த பங்களா... ஓர் அதிசய அரங்கம். இஞ்ச் இஞ்ச்சாக அந்தக் கட்டடத்தைக் கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிற, ரகளையான ரசனைக்காகவே தனிப் பாராட்டுக்கள். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம் ஓர் உதாரணம். ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனுக்கு சபாஷ்! தூக்கு மாட்டிக்கொள்ள பார்த்திபன் ஒரு பட்டுச் சேலையை எடுக்க, அந்த சேலையே மதுமிதாவாக மாறி அவரைப் படாதபாடு படுத்தும் காட்சியில் காமிராமேன் சஞ்சய் & இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இருவரும் சேர்ந்து பிரமாதப்படுத்து கிறார்கள். உடைந்துபோன பல்பின் கண்ணாடிச் சில்லையும் பிறைநிலாவையும் மாறி மாறிப் பார்க்கும் பார்த்திபன், நிலாதான் உடைந்து விட்டதோ என்றெண்ணி அந்த பல்புத் துண்டை நிலாவுடன் பொருத்திப் பார்க்க, பிறைநிலா முழு நிலாவாகி கூரை வழியே குதிப்பது... என ஆங்காங்கே அடடா போடவைக்கும் அழகு. ஆந்திர வரவு புதுமுகம் மதுமிதா. தமிழ் சினிமாவுக்கு பார்த்திபனின் குடை... ஸாரி கொடை! கண்களைஉறுத் தாத கவர்ச்சியும், பஞ்சமில்லாத இளமைத் துள்ளலுமாக வளையவரும் இந்தப் பெண்ணுக்கு, அடுத்தடுத்து திறமையான இயக்குநர்களின் படங் களில் வாய்ப்புக் கிடைத்தால், சந்தேகமில்லாமல் செம ரவுண்டு வருவார்! மதுமிதாவை காரில் போய்க் கடத்தி வருவதும், அவர் பார்த்திபனின் வெறித் தனமான காதலைப் படிப்படியாகப் புரிந்துகொள்வதும்... குணா, சேது, காதல் கொண்டேன் படங்களையெல் லாம் நினைவுறுத்துகின்றன. ஆனால், அந்தக் கடத்தல் அத்தியாயத்தின் முத்தாய்ப்பாக, காதலியோடு தனது கற்பனை வாழ்க்கையை மெகா சைஸ் ஆல்பமாக வரைந்து வைத்து, அதை நெகிழ்ச்சியோடு பார்த்திபன் வர்ணிக்கிற கவிதையான காட்சியில் பழைய வாசனையெல்லாம் பறந்தே போகிறது. பொறிக்குள் வந்து சிக்கும் எலி, ஜன்னல் வழியே நுழையும் பாம்பு, ஃப்ரிஜ்ஜுக்குள் பார்த்திபன் வைத்து அடைகாக்கும் உறைந்த கோழி... இதெல்லாம் சராசரி ரசிகர்களின் மண்டையைக் குழப்பும் புதிர்கள். எஸ்.பி.பி&யின் எங்க போயிச் சொல்லுவேன்... காதுக்கு இதம். ராஜாவின் அடியே கிளியே... மனசுக்குச் சுகம்! இரண்டாம் பார்த்திபன், அவர் சம்பந்தப்பட்ட மிக நீளமான வசனக் காட்சிகள், திகட்டுமளவுக்கு Ôகிம்மிக்Õகுகள் என குடைக்குள் சில கம்பிகள் குத்தினாலும், மனசுக்குள் மழைத்தூறல்தான்! வழக்கமான எதிர்பார்ப்புகளை உதறிவிட்டு உள்ளே போனால், காதலை கதிகலங்கவைக்கும் பரிமாணத்தில் பதிவு செய்திருக்கும் பார்த்திபனின் முயற்சி, புதியதொரு அனுபவம்! \ விகடன் விமரிசனக்குழு - Thiyaham - 09-14-2004 விகடன் இத்திரைப்படத்திற்கு 45 புள்ளிகள் வழங்கியுள்ளது. சாதாரணமாக விகடன் 38 புள்ளிகளுக்கு மேல் வழங்குவதில்லை - tamilini - 09-25-2004 குடைக்குள் மழையை பார்க்க விரும்பின் www.tamilstate.com |