09-15-2004, 12:35 AM
<img src='http://www.thamilfilmclub.com/files/tamil_short_film.jpg' border='0' alt='user posted image'>
|
குறுந்திரைப்படவிழா
|
|
09-15-2004, 12:35 AM
<img src='http://www.thamilfilmclub.com/files/tamil_short_film.jpg' border='0' alt='user posted image'>
09-15-2004, 02:29 PM
ஆகா... இன்னும் பல குறும் படங்கள் வரப்போகின்றன.. நன்றி இளங்கோ அண்ணா
[b][size=18]
09-16-2004, 01:58 AM
<b>நடைபெறப் போகும் குறும்பட விழா வெற்றி பெற வாழ்த்துகள்..............</b>
09-29-2004, 07:49 PM
<b>விம்பம் குறும்பட விழா வெற்றி பெற வாழ்த்துகள் </b>
கனவுகளும் - யதார்த்தமும் - கலைநயமும் கொண்டவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவற்றை வெளிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு இவை சாத்தியப்படுவதே இல்லை. இவர்களில் அநேகர் தான் மட்டுமே இவற்றைச் செய்து பெயர் எடுக்க வேண்டும் எனக் கருதி செயல்படுவதால் அனைவரும் இணைவதற்கு பதில் பிரிவதற்கே இவை வழி வகுக்கிறது. *2003 ம் ஆண்டு சுவிசில் நடைபெற்ற ஐரோப்பிய திரைப்பட விழாவுக்கு உலகின் பல பாகங்களில் இருந்து குறும்படங்கள் வந்தாலும் புலம் பெயர் குறும்படங்கள் 4 மட்டுமே இறுதி நேரங்களில் வந்து சேர்ந்தது. சில குறும்படங்கள் காலம் தாமதித்து வந்ததால் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. இதனால் கசப்பானவர்கள் அவர்களது பொறுப்பற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளாதது வருத்தமானது. தமிழ் நாட்டிலிருந்து சில குறும்படங்களைப் பெற தபால் செலவைக் கூட அனுப்ப வேண்டியிருந்தது. இது ஒரு விழா அமைப்புக்கான முறையல்ல. தெரிவான குறும்படங்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டாலும் படைப்பாளிகள் பணப் பரிசுகளை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து வருத்தப்பட்ட போது அது நியாயமாகவே தென்பட்டது. முதல் முறையாக ஒரு விழாவை நடத்தும் போது அனைத்தும் சாத்தியமல்ல. இருந்தாலும் அவர்களது குறை எதிர்காலத்தில் நிர்வர்த்தி செய்யப்பட வேண்டும். *2004 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உருவான சமாதானச்சுருள் குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஓரு குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டதால் கலைஞர்களை கௌரவிக்க மட்டுமே எம்மால் முடிந்தது. புலம் பெயர் குறும்படங்கள் வளர்ச்சி பெற வேண்டுமானால், ஏனைய நாட்டு குறும்படங்களைப் பார்த்தாவது உலக தரத்துக்கு நமது முழுநீளத் திரைப்படங்களை உருவாக்க முடியாவிட்டாலும் குறும்படங்களையாவது உருவாக்க முயல வேண்டும். இலங்கையில் நாம் நமக்கானதொரு சினிமாவொன்றை வடிவமைக்க தவற விட்டு விட்டோம் எனக் குறைப்பட்டுக் கொள்கிறோம். இதில் ஓரளவுதான் நியாயமிருக்கிறது. ஆனால் வருவாயற்ற ஒரு துறையை அதன்பால் ஈடுபாடு கொண்டோரால் கூட கொண்டு செல்ல முடியவில்லை என்பதே அடிப்படை உண்மை. வருவாய் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் வளரும் குறும்படப் படைப்பாளிகளை விமர்சிப்பதை விடுத்து அவர்களது அடுத்த படைப்புக்காவது உதவி விட்டு விமர்சித்தால் அது ஆரோக்கியமாய் இருக்கும். இதுவே புலம் பெயர் சினிமா ஒன்று உருவாக வழி வகுக்கும். இவற்றை விடுத்து அடுத்தவரை சாடுவதால் ஒரு அடி கூட நம்மால் நகர முடியுமென நான் நம்பவில்லை. உலகெங்கும் நடைபெறும் தமிழர் குறும்பட விழாக்கள் மத்தியில் விம்பத்தின் குறும்பட விழாவும் படைப்பாளிகளுக்கு வலுச் சேர்க்கிறது. <span style='color:green'><b>விம்பம்</b> குறும்பட விழா வெற்றி பெற வாழ்த்துகள்................ அஜீவன் ஐரோப்பிய திரைப்படக் கழகம் சுவிற்சர்லாந்து</span> http://www.europemoviesfestival.com/ 28.09.2004 http://ajeevan.blogspot.com/
10-03-2004, 03:22 PM
நானும் சென்று பார்த்தேன்.தொடர்ந்து நடைபெறவேண்டும்.நல்ல முயற்சி.
12-06-2004, 01:07 PM
நானும் போய் இருந்து பாத்தன்! குறும்படங்கள் சோக்கயிருக்கு! ஆனால் அதை ஒழுங்கு பண்ணினவையும் வந்து நிண்டவையும் கொஞ்சம் இசகுபிசகான ஆக்கள் கண்டியளோ! தேசியம் எண்டால் அவைக்கு கசப்பு! பேச்சு வாக்கிலை பொறுக்கின சில விசியங்கள் அவ்வளவாய் நல்லதாய் காணேல்லை! செய்யிற அலுவல் என்னவோ நல்லது தான் ஆனால் அவை பறையிற விசியம் பாருங்கோ கொஞ்சம் வில்லங்கமாயிருக்கும் போல தான் கிடக்குது! பாப்பம் எங்கோ போயினமெண்டு!
Summa Irupavan!
|
|
« Next Oldest | Next Newest »
|