![]() |
|
லண்டன் அகதிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: லண்டன் அகதிகள் (/showthread.php?tid=6713) |
லண்டன் அகதிகள் - ganesh - 09-16-2004 லண்டன் அகதிகள் - ganesh - 09-16-2004 லண்டனில் அகதிஅந்தஸ்து கோரி நிராகரிக்கபட்டவர்களை வெகுவிரைவாக நாடுகடத்தப்போவதாக இன்றை பத்திரிகை செய்திகள் மூலம் அறியவருகிறது இது சம்பந்தமாக தங்கள் கருத்துகளை எழுதுங்கள் - kuruvikal - 09-17-2004 அநேகம் இளையவர்கள் பயம் காரணமாகவேதான் தாயகம் செல்ல அஞ்சுகின்றனர்... அதற்கான காரணங்களை மேற்குலகம் நன்கு அறியும்..! காரணம் சிறிலங்கா சிங்களப் பயங்கரவாதம் செய்யும் சித்திரவைகளில் பெரும்பாலானவற்றைக் கற்றுக் கொடுத்தவர்கள் இவர்களே....! அதேவேளை மேற்குலகிற்கு இலங்கையின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பற்ற தமிழ் மக்களின் அரசியல் சூழ்நிலை தெரிந்திருந்தும் சிங்கள அரசின் அட்டூழியங்களை கருத்தில் எடுக்காது அகதிகளை திருப்பி அனுப்புவது என்று எடுக்கும் முடிவு சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு தீனி போட்டுக்கொண்டு சர்வதேச பயங்கரவாதம் என்று கூறி ஆப்கானிஸ்தான் ஈராக் சூடான் என்று தங்கள் பிராந்திய எதிரி அரசுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதானது சர்வதேச சமூகத்துக்கு மேற்குலகின் இரட்டை முகத்தை வெளிப்படுத்தப் போதுமானதாக இருக்கும்...! தாயக இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டு ஒரு நிரந்தர அமைதியும் சமாதானமும் நிலவுவதற்கு முதலே இப்படி அகதிகளை திருப்பி அனுப்புவது அகதிகள் தொடர்பான மேற்குலகக் கொள்கைகள் தொடர்பில் சந்தேகங்களை எழுப்புவதுடன் இவர்களின் மனித உரிமை பாதுகாப்பென்பது ஈராக்கில் சர்வதேசத்தின் முன் அடிவாங்கிக் கிடக்கும் இவ்வேளையில் இதுவும் அரங்கேற்றப்படுதல் சர்வதேச அரங்கில் மேற்குலகின் போலி வேடங்கள் மேலும் வெளிக்காட்டப்பட தகுந்த உதாரணங்களை விட்டுச் செல்லும்....! அதேவேளை அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பலரும் கூட உண்மையான அகதிகளா என்றால் கிடையாது...அங்கும் பணம் விளையாடி இருக்கிறது பல சந்தர்ப்பங்களில்... பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்து பலரும் (அகதியான கருதப்பட்ட முடியாதவர்கள் கூட) அகதிகளாக இனங்காணப்பட்டிருப்பதும் உண்மையான அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டிருப்பதும் மேற்குலக அகதிகள் நிர்ணயிப்பில் உள்ள செம்மைத் தன்மை குறித்து பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது....! மேற்குலகு சிறிலங்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் அகதிகளை தாயகம் அனுப்பும் செயலானது தமிழர் பகுதிகளில் கொடிய அரச இராணுவ கட்டமைப்பை நிறுவி...சுமார் 65,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்து பல இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்கி பல கோடி சொத்துக்களை அழித்த...சிங்கள இனவாத அரச பயங்கரவாதிகளுக்கும்...சிங்கள இனவாத பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் பயங்கரவாதக் கொள்கைகளை ஸ்திரத்துடன் முன்னெடுத்துச் செல்ல உதவுவதுடன் மேற்குலகம் பயங்கரவாதத்தின் கூட்டாளிகள் என்பதையும் அப்பட்டமாக பறைசாற்றும்...! :evil:
- ganesh - 09-17-2004 ஜேர்மனியில் அகதிஅந்தஸ்து கிடைத்து 10 வருடங்களுக்கு மேல் வசித்து வருபவர்களை நாடு திரும்பும் படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது? இது சாத்தியமா? ஒவ்வொருமாதமும் நூற்றுக்கணக்கான மக்கள் எமது நாடு சென்று திரும்பிவரும்பொழுது அதனை சாதகமாக பயன்படுத்தி இப்படிசெய்கிறார்கள் இதற்காக ஜேர்மனி அரசுமீது குறை கூறமுடியாது அங்கு பிரச்சனை என்று கூறியவர்கள் எப்படி பிரச்சனைமுடியும் முன் அங்கு சென்று வருகிறார்கள் ஒரு சிலர் இங்கு வேலையில்லாமல் அகதிப்பணத்தில் வாழ்கிறார்கள் ஆனால் விடுமுறையைக்கழிக்க நமது நாடு செல்கிறார்கள் இது எப்படி முடியும்? ஐரோப்பாவில் சகல நாடுகளிலும் இனிவரும் காலங்களில் இப்படியான முடிவு எடுக்கப்படலாம் தற்போது சில நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத்திண்டாட்டம் மற்றையபயங்கரவாதம் போன்றவற்றினால் அகதிஅந்தஸ்து ஏற்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் பிரசாஉரிமைபெற்றவர்கள் கூட திருப்பி அனுப்பப்படலாம் - kuruvikal - 09-17-2004 இதையும் பாருங்க... <b>சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முயன்ற 31 பேர் கைது </b> சட்டவிரோதமாக விமானம் மூலம் இங்கிலாந்து செல்லமுயன்ற 31 பேரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோரில் 26 பேர் தமிழ் இளைஞர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாலைதீவுக்குச் செல்வதாக தெரிவித்து இவர்கள் இங்கிலாந்துக்கு செல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களிடமிருந்து போலி விமானப் பயணச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்து செல்வதற்கான விசா அனுமதி இவர்களிடம் இருந்த போதிலும் அதற்கான விமானப் பயணச்சீட்டு போலி என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். puthinam.com - ganesh - 09-17-2004 நான் இரண்டு மாதங்களுக்கு முன் லண்டன் சென்றிருந்தேன் அந்தநேரத்தில் கையொப்பம் இடுவதற்காக சென்ற பலர் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதை அறியக்கூடியதாக இருந்தது இதில்6 மாத கர்ப்பிணி பெண்ணும் அடங்கியிருந்தார் அதனைவிட மனைவியை இங்குவிட்டு கணவரையும் கணவரைவிட்டு மனைவியையும் அனுப்பியிருந்தார்கள் தற்போது மனிதாபம் என்பது அங்குஇல்லை எப்பொழுது கைதுசெய்யப்பட்டு திருப்பி அனுப்புவார்கள் என்று பயத்துடனேயே வாழ்கிறார்கள் பிரச்சனையென்று இங்குவந்தவர்கள் அகதிஅந்தஸ்து கிடைத்தவுடன் விடுமுறைக்கு எந்தவித பிரச்சனையுமின்றி சென்றுவரும்போது எப்படி இதனை சட்டத்தரணிகளால் தடுக்கமுடியும் - kuruvikal - 09-17-2004 இதற்கெல்லாம் காரணம் நம்மாக்களுக்கு அகதி அந்தஸ்து குடும்ப அந்தஸ்தாகி இருப்பதுதான்... அகதி அந்தஸ்து என்பது அந்தந்த நாடுகள் அகதிகள் தங்கள் மறுவாழ்வுக்காக தந்த புகழிட அனுமதி என்பதை அறியாமல் தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்குத் தந்த அனுமதியாகவே பலர் கருதி துஸ்பிரயோகமும் செய்கின்றனர்... இவர்கள் அகதி அந்தஸ்தை மட்டும் அல்ல தாயகத்தில் ஏதிலிகளாக உள்ள மக்களின் மனங்களிலும் தான் புகழிடம் பற்றிய மாயத் தோற்றங்களைக் காட்டிவிட்டு வருகின்றனர்...அதன் விளைவுகளே மேலே வந்த இன்றைய செய்திகள்... இங்கிலாந்தில் ஒரு பிரஜைக்கு உள்ள சராசரி வங்கிக்கடன் எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 17,000 பவுண்கள்... இலங்கையில் ஒரு பிரஜைக்குள்ள கடன் கிட்டத்தட்ட 70,000 ரூபா கிட்டத்தட்ட 400 பவுண்கள் மட்டுமே....இப்போ சொல்லுங்கள் யார் கடன்பழுக் குறைந்த வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று....!
- tamilini - 09-17-2004 அப்ப எல்லாரையும் கண்டிப்பாக திருப்பி அனுப்புவார்களா... என்ன பண்ண முடியும்.... - tamilini - 09-17-2004 Quote:இங்கிலாந்தில் ஒரு பிரஜைக்கு உள்ள சராசரி வங்கிக்கடன் எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 17,000 பவுண்கள்அப்ப மற்ற நாடுகளில் இருப்பவர்கள் என்ன மாதிரி அவையும் இப்படியோ இல்லை கு}டவே...?? - tamilini - 09-17-2004 Quote:விமானப் பயணச்சீட்டு போலி என்று தெரிவிக்கப்படுகின்றது.விசா எடுத்தவைக்கு இடையில என்ன நடந்தது...! - vasisutha - 09-17-2004 Quote:அப்ப எல்லாரையும் கண்டிப்பாக திருப்பி அனுப்புவார்களா... என்ன பண்ண முடியும்.... தாயகத்தில் இருக்கிறவர்கள் என்ன பண்ணுகிறார்களோ அதை பண்ண வேண்டியது தான். இங்க இருந்து எப்ப திருப்பி அனுப்புவானோ என்று பயப்படாதீர்கள். திருப்பி அனுப்பினால் என்ன செய்யலாம் என்று இப்பவே யோசியுங்கள். துணைக்கு நாங்களும் வாறம். டோன்ற் வொரி.. சியர் அப். :mrgreen: - kuruvikal - 09-17-2004 vasisutha Wrote:Quote:அப்ப எல்லாரையும் கண்டிப்பாக திருப்பி அனுப்புவார்களா... என்ன பண்ண முடியும்.... அப்ப கம்பனிக்கு ஆள் இருக்கென்று சொல்லுறியள்... நம்மாக்கள் அதிலும் கெட்டிக்காரர் போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 09-17-2004 நாங்கள் இன்னும் ஒரு கொஞ்சக்காலம் பயப்படாமல் தங்கலாம்... நான் பாவம் மற்றவர்களிக்காக தான் கவலைப்பட்டேன்.. அப்ப நீங்கள் பயப்பட்டு கொண்டா இருக்கிறியள் வசி....?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்கள் ஆறுதலுக்கு நன்றிகள்...! - vasisutha - 09-17-2004 இப்பத்தானே விசா இருக்கிறவையும் அனுப்ப போறாங்கள். அப்ப நீங்களும் நானும் அதில் அடக்கம் தானே
- tamilini - 09-17-2004 விசா உள்ளவர்களையும் அனுப்புறார்களா.. நாங்கள் எப்படியும் இன்னும் ஒரு 5 வருசம் இருக்கலாம் எப்படி அனுப்பினாலும்.... இங்க இருந்து என்ன தான் செய்ய போறம்.. கடைசி பிறந்த மண்ணில வாழ்ந்தம் என்றாவது வரலாறு இருக்கட்டும்.. அனுப்பினால் போவம்.. அனுப்பாவிட்டாலும் வந்த அலுவல் முடிய நாம் போறது தான் சோ கவலை இல்லை.. பயப்படாதேங்க வசி.. உங்கள திருப்பி எல்லாம் அனுப்ப மாட்டாங்க...! - ganesh - 09-24-2004 ஜேர்மனி தற்போது வதிவிடஉரிமைபெற்ற 1000 மேற்பட்ட இலங்கைத்தமிழரை திருப்பியனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில் விடுமுறைக்காக நூற்றுக்கணக்கானோர்; எமது நாடுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் இதனை சிந்திப்பது மிகவும் நல்லது - ganesh - 09-25-2004 ஜேர்மனியின் சட்டம் தெரிந்தவர்கள் யாராவது இதனைப்பற்றி எழுதினால் உதவியாகவிருக்கும் இவர்களைத்திருப்ப அனுப்புவதை நிறுத்தமுடியாதா? ஒரு சிலரின் தவறினால் இப்போது எல்லோரும் பாதிப்கப்படபோகிறார்கள்? பிரஜாஉரிமை பெற்றவர்களுக்கும் இதே கதியா? இவர்களுக்கு என்னமாதிரியான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது? நெதர்லாந்தில் இரண்டுவிதமான அனுமதி ஒன்று ஐக்கியஸ்தாபன ஒப்பந்தத்தின்படி அகதி அந்தஸ்து இரண்டாவது மனிதாபமான அடிப்படையில் குறிப்பிட்ட காலங்கள் இங்கு இருந்தால் நிரந்தர அனுமதி ஆனால் சட்டங்கள் நாளுக்குநாள் மாற்றம் அடைகிறது ஆனால் ஆரம்பகாலங்களில் இங்குவந்த அனைவரும் பிரஜாஉரிமை பெற்றுவிட்டார்கள் ஆனாலும் வரும்காலங்களில் அவர்களும் திருப்பி அனுப்பப்படலாம்? ஆகவே நாங்கள் கவனமாக இருந்தால் நல்லது |