Yarl Forum
நீயா பேசியது? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீயா பேசியது? (/showthread.php?tid=6732)



நீயா பேசியது? - வெண்ணிலா - 09-07-2004

[size=24]<b>
நீயா பேசியது?</b>


<img src='http://www.yarl.com/forum/files/vennila_1_.jpg' border='0' alt='user posted image'>

<b>என் உள்ளத்தில் புகுந்து
உன் உருவத்தை இழைக்க வைத்து
என் கனவுகளையும்
இனிமையாக்கிய என் இனியவனே!
நீயா பேசியது
அந்தக் கொடிய வார்த்தையை

சோகத்திலும் உனது
சொர்க்கவைக்கும் வார்த்தைகளை
நினைத்த எனக்கு இன்று
தீயால் செய்த பூவைத்
தூவி நோயால் என்னை
வாட வைத்து பேயாய்
நடந்து கொண்டாயே

உன் பேச்சில் நான்
வார்த்தையாய் இருக்க
நினைத்தேன் - ஆனால்
நீயோ வார்த்தையைப்
பிழையாகப் பேசிவிட்டாயே!

என் இதயத்தில் இருண்டு
கிடந்த மேகத்தை - உன்
மின்னல் பார்வையால்
மழையாய்ப் பொழிய வைத்து
என்னை நீல வானம்
ஆக்கியவனே
நீயா பேசியது?

இரக்கமில்லாதவளே!
உனக்குள் இனியும்
எதற்கு என் ஞாபக உறக்கம்
கலைந்துவிடு உனது
காதல்த் தூக்கத்தை
என்னை மறந்த விடு
வேறு ஆடவனை மணந்து விடு
என்ற பஞ்சமில்லாத பொல்லாத
பொய்யான வார்த்தையை
நீயா பேசியது?</b>


- tamilini - 09-07-2004

ம் என்னச்சுதோ சுட்டிக்கு இப்ப என்ன ஆச்சுதோ..! கவி நன்றாக இருக்கு.. கற்கபனையா இல்லை யாருக்கும் உண்மையாக பேசுறீங்களா.......! வாழ்த்துக்கள் தங்கையே...!


- வெண்ணிலா - 09-07-2004

tamilini Wrote:ம் என்னச்சுதோ சுட்டிக்கு இப்ப என்ன ஆச்சுதோ..! கவி நன்றாக இருக்கு.. கற்கபனையா இல்லை யாருக்கும் உண்மையாக பேசுறீங்களா.......! வாழ்த்துக்கள் தங்கையே...!


<b>கற்பனை தான் அக்கா. சுட்டிக்கு ஒண்ணுமே ஆகவில்லை. அப்படித்தான் ஆகிட கள உறவுகள் விட்டுடுவார்களா?</b>


- tamilini - 09-07-2004

ம் அது தானே.. என்ன..??


- tholar - 09-07-2004

கவிதை நன்றாக இருந்தது.ஒறிஜினலா? அல்லது எங்காவது சுட்டதா?


- Thiyaham - 09-07-2004

வைரமுத்து ரேஞ்சுக்கு கவிதை இருக்கிறதே..


- வெண்ணிலா - 09-07-2004

tholar Wrote:கவிதை நன்றாக இருந்தது.ஒறிஜினலா? அல்லது எங்காவது சுட்டதா?



<b>தோழரே உங்களுக்கு சுட்டதா எனது கவிதை. ஏன் நீங்கள் ஒறிஜினலா? டூப்ளிக்கரா? என்று விசாரிப்பதற்கு நீங்கள் என்ன இன்ஸ்பெக்டரா? ஆனால் இக்கவிதை சுடாதது</b>


- vasanthan - 09-07-2004

Thiyaham Wrote:வைரமுத்து ரேஞ்சுக்கு கவிதை இருக்கிறதே..

அந்த வைரத்தோடு உரசத் தான் முடியுமா? சும்மா பப்பாவில் ஏற்றாதீர்ககள் விழுந்து காலைக் கையை முறிச்சிடுவா!


வளர வாழ்த்துக்கள்!


- tamilini - 09-07-2004

வைரமுத்துற்கு இருக்கிற அனுபவத்திற்கு அவர் வைரமாக தான் தெரிவார் தெரிய வேண்டும்.. இப்பொமுது அடி எடுத்து வைத்திருக்கும் வெண்ணிலா கு}ட நாளை ஜொலிப்பார் ..!


- kavithan - 09-07-2004

யார் இப்படி பேசியது....? ஓ கற்பனையோ.. நியமோ... கவிதை நன்றாக இருக்கிறது ..... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள் மருமகளே....


- வெண்ணிலா - 09-08-2004

kavithan Wrote:யார் இப்படி பேசியது....? ஓ கற்பனையோ.. நியமோ... கவிதை நன்றாக இருக்கிறது ..... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள் மருமகளே....

<b>யாரும் என்னைத் திட்டவில்லை. வாழ்த்துக்கு நன்றி மாமா</b>