Yarl Forum
புலத்தின் தகவல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புலத்தின் தகவல்கள் (/showthread.php?tid=6733)



புலத்தின் தகவல்கள் - sayanthan - 09-07-2004

இன்றைக்கு தமிழர்கள் உலகின் பெரும்பான்மையான இடங்களில் எல்லாம் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில் ஆங்கிலம் மட்டுமே(அதுவும் படித்த வர்க்கத்திற்கு) தெரிந்திருந்த தமிழனுக்கு இன்று உலக மொழிகள் அத்துப்படி. இந்த பகுதியில் புலத்தில் இருக்கும் தமிழ்ர்கள் தாங்கள் வாழும் நாடுகள் பற்றி தாங்களுக்கு தெரிந்த தகவல்கள், காலநிலை விபரங்கள் உங்களுக்கு பிடித்த பிடிக்காத விடயங்கள்.. எதுவாயினும் பகிரலாமே..


- tamilini - 09-07-2004

நல்லதொரு விடயத்தை தொடக்கியிருக்கிறீர்கள் நன்றிகள்.... எங்கை பாப்பம்; யார் தருகிறார்கள் முதல் தகவல் என்று..!;


- Shan - 09-07-2004

நான் வசிப்பது வேல்ஸ் என்னும் நாட்டில். இது பிரித்தானியா என்று அழைக்கப்படும் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள நாடுகளில் ஒன்று. நமது நாட்டன் அயல் நாடுகள் இங்கிலாந்து, வட அயர்லாந்து, அயர்லாந்து. இங்கே அங்கிலம் முதல் மொழியாக இருந்தாலும் வேல்ஸ் மொழி பாவலாக பாவனையில் உண்டு. ஆங்கிலமும் வேலஸ் மொழியான கைமுறுவும் உத்தியோக மொழிகள். மழை குழிர் மிகவும் கூடிய இந்த பிரதேசம் விவசாயத்திற்தும் செம்மறி வளர்ப்பிற்கும் பெயர் பேனது. வடக்கு வேல்ஸ் மலை பிரதேசங்களை கொண்ட அழகிய பிரதேசம். உல்லாசப்பயணிகள் அடிக்கடி வந்து போகும் இடம். வேல்ஸ்சைப்பற்றி அனேக தமிழ் மக்களிற்கு தெரிமு;. காரணம் இங்கும் ஒரு கோயில் உள்ளது. ஒதுக்கப்புறமான ஒரு இடத்தில் மலையில் சிங்கள் தமிழ் கோயில் உள்ளது. இங்கு பூசை செய்வது வேல்ஸ் நாட்டவர்கள். முதன்னை சாமியார் ஒரு சிங்கள இனத்தவர்ன. எல்லா கடவுளும் இங்கே உண்டு. முருகன் யேசு அல்லா என்று எம்மதமு;ம சதம்மதமான கோயில். ஆனால் மழ பூசைகளும் சைவ முறைப்படி அழகாக நடை பெறும். இந்த நாட்டை பற்றி கேள்விப்படாதவர்கள் இவர்களின் உதை பந்தாட்ட குழு பற்றி தற்போது கேழ்விப்பட hய்ப்புண்டு. காரணம் உலக கிண்ண பந்தயங்களில் இங்கிலாந்து அணியின் குழுவில் உள்ள நாடு. நமக்கு பிடிக்கதது ஆங்கிலேயர்களை. பிடித்தது செம்மறி ஆடுகளை!


- tholar - 09-07-2004

நிறைய வரவேண்டும்


- paandiyan - 09-08-2004

Shan Wrote:நான் வசிப்பது வேல்ஸ் என்னும் நாட்டில். இது பிரித்தானியா என்று அழைக்கப்படும் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள நாடுகளில் ஒன்று. நமது நாட்டன் அயல் நாடுகள் இங்கிலாந்து, வட அயர்லாந்து, அயர்லாந்து. இங்கே அங்கிலம் முதல் மொழியாக இருந்தாலும் வேல்ஸ் மொழி பாவலாக பாவனையில் உண்டு. ஆங்கிலமும் வேலஸ் மொழியான கைமுறுவும் உத்தியோக மொழிகள். மழை குழிர் மிகவும் கூடிய இந்த பிரதேசம் விவசாயத்திற்தும் செம்மறி வளர்ப்பிற்கும் பெயர் பேனது. வடக்கு வேல்ஸ் மலை பிரதேசங்களை கொண்ட அழகிய பிரதேசம். உல்லாசப்பயணிகள் அடிக்கடி வந்து போகும் இடம். வேல்ஸ்சைப்பற்றி அனேக தமிழ் மக்களிற்கு தெரிமு;. காரணம் இங்கும் ஒரு கோயில் உள்ளது. ஒதுக்கப்புறமான ஒரு இடத்தில் மலையில் சிங்கள் தமிழ் கோயில் உள்ளது. இங்கு பூசை செய்வது வேல்ஸ் நாட்டவர்கள். முதன்னை சாமியார் ஒரு சிங்கள இனத்தவர்ன. எல்லா கடவுளும் இங்கே உண்டு. முருகன் யேசு அல்லா என்று எம்மதமு;ம சதம்மதமான கோயில். ஆனால் மழ பூசைகளும் சைவ முறைப்படி அழகாக நடை பெறும். இந்த நாட்டை பற்றி கேள்விப்படாதவர்கள் இவர்களின் உதை பந்தாட்ட குழு பற்றி தற்போது கேழ்விப்பட hய்ப்புண்டு. காரணம் உலக கிண்ண பந்தயங்களில் இங்கிலாந்து அணியின் குழுவில் உள்ள நாடு. நமக்கு பிடிக்கதது ஆங்கிலேயர்களை. பிடித்தது செம்மறி ஆடுகளை!

_____________________________________________________

என்ன சன் ஆங்கிலேயர்களை பிடிக்கயில்லை என்டு சொல்றியள் அவர்களின் நாட்டில் இருந்துகொன்டே. இது நியாயமா???


- sayanthan - 09-08-2004

நான் வசிப்பது அவுஸ்ரேலியா. பிடித்த பிடிக்காத விடயங்கள் நிறைய உண்டு, அது பற்றி பின்னர் தருகிறேன். கடந்த வருட சம்மர் காலத்தில் சுவிஸில் 3 மாதங்களை கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அழகான நாடு. அற்புதமான இயற்கைக்காட்சிகள். சுவிஸில் எவருக்கும் பிடிக்காத விடயங்கள் என்று இருந்தால் யாராவது சொல்லுங்களேன்..


- Shan - 09-08-2004

Quote:என்ன சன் ஆங்கிலேயர்களை பிடிக்கயில்லை என்டு சொல்றியள் அவர்களின் நாட்டில் இருந்துகொன்டே. இது நியாயமா???


அட நாம் வசிப்பது வேல்ஸில் ஐயா! பிடிக்காதது ஆங்கிலேஙர்களை ஆனால் வேலஸ் மக்கiளை பிடிக்கவில்லை என்று கூறவில்லை தானே!!!


- tamilini - 09-08-2004

சுவீஸ் பற்றி..!
ஓங்கி வளரும் மரத்தின் கிளைகள் சில சமயங்களில் தறிக்கப்படுவதுண்டு. இப்படித் தறிக்கப்படுவதற்குப் பல காரணங்களும் வந்து வாய்த்து விடுவதுண்டு. நெடுத்து நிமிர்ந்து நிற்கும் மரத்தின் சில கிளைகள், நிற்கும் இடத்தில் சில இடையூறுகளை ஏற்படுத்த முனைவதால், அவசியம் கருதி, இதன் கிளைகள் தறிக்கப்படுகின்றன. வேகமாக மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில், செழித்தோங்கி வளருகின்ற மரங்களின் கிளைகளைத் தறிப்பதோ அல்லது வேரோடு வெட்டிச் சாய்ப்பதோ நியாயந்தானா என்ற கேள்வி எழுவதுண்டு. ஆனால் முன்பே குறிப்பிட்டதுபோல, அவசியமென்று வரும்போது, தறிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது.
500 வருட காலம் வரை போர் தொடுக்காமல், ஓர் இராணுவப்படை இயங்குவது எந்த நாட்டில் சாத்தியப்படும்? இனிப்பான சுவிஸ் நாட்டில்தான் இது சாத்தியப்படக்கூடிய ஒன்றாகி இருக்கின்றது. பக்கச் சார்பற்று, நடுநிலைமை கொள்கைகளைக் கடைப்பிடிக்கும், இந்த நாட்டில் பெரிய இரணுவப்படை இருந்தாலும், அது போரில் இறங்காமல் இருப்பது அதன் விஷேஷமாகும்.

முன்பொருபோதும் இல்லாதவாறு, தனது இராணுவப் படையையும், ஆகாயப் படையும், தொகையில் குறைத்துக் கொள்ளப் போவதாக, பாதுகாப்பு அமைச்சு அண்மையில் முடிவு எடுத்துள்ளது. ஆட்குறைப்பு வேதனையைத் தந்தாலும், அண்மைக்காலங்களில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ருக்கும் நிதி நெருக்கடி இந்த முடிவை எடுக்க வைத்திருப்பதாக, அமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். தற்பொழுது 4..3 மில்லியன் சுவிஸ் பிராங் தொகையாக இருக்கும் பட்ஜெட் தொகை, 4 மில்லியனுக்கு கீழ் இறங்க இருக்கின்றது. நாடளாவிய 25 இராணுவத் தளங்களும் மூடப்பட இருக்கின்றன. கடந்த வருடம் மே மாதம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் முடிவிலேயே இந்த வருடம், அவசியப்படும் இந்தக் கத்தரிப்புகள் ஆரம்பமாகி இருக்கின்றன.

தற்போதைய இராணுவப் படையினர் தொகை , இனி மூன்றில் ஒன்றாகக் குறைக்கப்பட இருக்கின்றது. தற்பொழுதுள்ள 350,000 இராணுவத்தினர் தொகை, இனிவரும் காலங்களில் 220,000 ஆகக் குறையப் போகின்றது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. கட்டாய இராணுவ சேவைக் காலம் 300 நாட்களில் இருந்து, 260 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளது. 2005ம் ஆண்டின் முடிவில் , 1100 இராணுவத்தினர், வேலையிழந்தவர்கள் பட்டியலில் இணையப் போகின்றார்கள்.2010ம் ஆண்டின் முடிவில் இத் தொகை 2500ஆக அதிகரிக்கப் போகின்றது. வரப்போகும் சில வாரங்களில், 167 இராணுவத்தினர் தத்தம் பதவிகளை இழக்கப் போகின்றார்கள். மாஜி எல்லைக் காவலாளிகளாகக் கடமையாற்றியவர்கள், இராணுவ நிலையங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றார்கள். சுவிஸ் இராணுவத்தின் சரித்திரத்தில், என்றும் இல்லாதவாறு, இப்படியொரு ஆட்குறைப்பு அமுலுக்கு வருகின்றது.

நிலப்பரப்பை நோக்கினால், இந்தச் சிறிய சுவிஸ் நாடுதான், ஐரோப்பிய நாட்டில் அதிக அளவு இராணுவத்தினரைக் கொண்ட நாடு என்றாகின்றது. நடுநிலைமை வகுத்துக் கொண்டு, தன் நாட்டுக்குள் அயல் நாடுகள் புகுந்து ஆக்ரமிப்பு செய்து விடக்கூடாது என்ற முன்னேற்பாடுடன், இங்கு இராணுவம் தயார்நிலையில் இருந்து வருகின்றது. 1984இல் அமெரிக்கர் ஒருவர் எழுதிய நூலொன்றில் ? சுவிஸ் நாட்டில் இராணுவம் இல்லை. சுவிஸ் நாடே ஒரு இராணுவம்? என்று குறிப்பிட்டிருக்கிறார். இங்குள்ள 6 மில்லியன் ஜனத்தொகையில் 400,000 பேர் , இராணுவத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்பதை அறியவரும்போது, அந்த அமெரிக்கர் எழுதியது சரிதான் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

20 வயதை எட்டியதும் ஆண்கள் , இங்கு 15வார காலம் இராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றார்கள். 22 வயதிலிருந்து 32 வயதை எட்டிப் பிடிக்கும் காலம் வரை, இரண்டு தொடக்கம் மூன்று வார காலப் பயிற்சி பெறுகிறார்கள். இந்தப் பயிற்சி இவர்களை, 300 தொடக்கம் 1300 நாட் கால தீவிர சேவைக்கு அனுப்பப்பட, தயாராக்கி விடுகின்றது. சேவைக் காலம் என்பது, இராணுவ தரத்திற்கேற்ப மாறுபடுகின்றது. பதவி உயர உயர, சேவைக் காலம் என்பது இங்கு அதிகரிக்கின்றது.

1996ம் ஆண்டு வரை, இராணுவ சேவைக்கு உடன்படாதவர்களுக்கு, சிறைவாசம் என்ற நிலையே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது ஒரு சின்ன மாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. ஆயுதம் ஏந்தாமல், வேறு வழிகளில் சேவைசெய்யும் வழிதான் அது. மிக அரிதாக, இராணுவ சேவையை எதிர்ப்பவர்கள், மருத்துவ மனைகள், சுகாதார நிலையம் போன்றவற்றில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் இங்கு இவர்கள் சேவைக்காலம், இராணுவ சேவைக்காலத்தை விட, 50 வீதம் அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் வாழுகின்ற சுவிஸ் நாட்டவர், இராணுவத்தில் இணைய வேண்டிய அவசியம் இல்லாத போதினிலும், தமது வருமானத்தின் 2 வீத தொகையை, சுவிஸ் அரசுக்கு செலுத்தியாக வேண்டும். பெண்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. வரிப் பணமும் செலுத்த வேண்டியதில்லை.

சுவிஸ் இராணுவம் பற்றி நாம், சொல்லிக் கொண்டிருக்கும்போது, Swiss Army Knife பற்றியும் சில வரிகள் சொல்லாமல் இருக்கலாமா? முழு உலகமுமே அறிந்த சிறிய கத்தி இதுவாகும். இந்த நாட்டின் பெயர் சொல்ல வந்து வாய்த்த கத்தி இது. சுவிஸ் நாட்டுக்கு வருபவர்கள், VICTORINOX என்ற பெயர் கொண்ட இந்த அழகிய சிறு கத்தியை வாங்கிக் கொண்டு செல்லாமல் இருப்பதில்லை. இந்தக் கத்திக்கு வயது 100ஐ தாண்டிவிட்டது என்ற விபரம் பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். மத்திய சுவிஸ் மாவட்டமான Schwyz எனப்படும் கன்ரோனிலுள்ள ஒரு தொழிற்சாலையில், 1897ம் ஆண்டு ஜூன் 12ந் திகதியன்று இதன் உற்பத்தி ஆரம்பமாகிற்று. இன்று 34,000க்கு மேற்பட்ட கத்திகள், இத் தொழிற்சாலையிலிருந்து, தினமும் வெளியேறுகின்றன.

இவற்றுள் 90 வீதமானவை, வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகி வருகின்றன. 100 உலக நாடுகளை இவை சென்றடைகின்றன. இன்று இத் தொழிற்சாலை, 950 பேருக்கு வேலை வாய்ப்பும் அளித்து வருகின்றது. சுவிஸ் இராணுவத்தில் பணிக்கு அமர்த்தப்படும். ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் ஒரு கத்தி வழங்கப்பட்டு வருவதை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்தச் சிறிய கத்திகள், வடதுருவத்தின் பனிபடர்ந்த வெளிகள், இமயமலையின் உச்சி, விண்கலங்கள், அமேசன் காடுகள் என்று உலகின் நாலாபக்கங்களிலும் உலா வருவது, வியப்பூட்டும் விடயந்தான். ஒரு சின்னக் கேள்வி. இதைச் செவிமடுக்கும் உங்களில் எத்தனை பேரின் வீடுகளில் இந்த அழகிய சிகப்பு நிறக் கத்தி இருக்கின்றது? ஒரு வாக்கெடுப்பு எடுத்தால், தொகை எப்படி இருக்கும்?

அமைதிப்புறாவைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த போதிலும், தன் இராணுவப் படையினரை உஷார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும், சுவிஸ் நாட்டுக்கும், நிதிப் பளு வரும்போது, அடிமடியில் கைவைக்கும் நிலைதான் வந்து சேர்ந்திருக்கின்றது.

சுவிஸ்-பாசல் நகரிலிருந்து ஏ.ஜே.ஞானேந்திரன்

நன்றி சு}ரியன்.கொம்..


- Nitharsan - 10-09-2004

வணக்கம் அன்புறவுகளே!
புலம் பெயர் நாட்டிலிருக்கும் எம்மவர் நிகழ்வுகளை தொகுத்து எனது இணையத்தில் வெளியிடவிருக்கின்றேன். இப்போது என்னால் கனடிய செய்திகளை மட்டுமே அறிய முடிகிறது காரணம் நான் கனடாவிலிரக்கின்றேன். எனவே மற்றைய நாடுகளிலிருக்கும் நண்பர்கள் உங்கள் நாடுகளில் அல்லது உங்கள் நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
vannitendral@yahoo.com
<span style='font-size:25pt;line-height:100%'>நேசமுடன்நிதர்சன்</span>