![]() |
|
அக்கரைக்கு இக்கரை.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அக்கரைக்கு இக்கரை.... (/showthread.php?tid=6738) |
அக்கரைக்கு இக்கரை.... - shanmuhi - 09-03-2004 <b>அக்கரைக்கு இக்கரை.... </b> அகதியாய் அநாதரவாய் அந்நியதேசமதில் முகவரி தொலைத்து புகலிடம் தேடி வந்ததால் விசா தந்த வாழ்வு இங்கே வளமாக சமூக உதவிகள் அனைத்தும் பெற்றே வசதியான ஏகபோக வாழ்க்கையில் அக்கரையில் காணத வாழ்வு இக்கரையில் கண்டு விட்ட பெருமிதம் எட்டுமணிநேர பகுதி நேர வேலையென்றே பட்டும்படாமல் பருப்பும் சோறும் உண்டே சீட்டுப்பிடித்தே சிக்கனமாய் சேர்த்த பணத்தை வட்டிக்கு விட்டே வளமாய் வாழ்ந்து குட்டிபோட்ட பணத்தையும் தந்திரமாய் வட்டிக்கு விட்டே சொகுசாய் வாழ்ந்திடும் வாழ்வுதான் அக்கரையில் வந்திடுமோ தேசத்தின் விடியலுக்காய் நேசத்துடன் நெஞ்சுருக வாய்கிழிய மூச்சுக்கு மூன்னுறு முறை முழங்கிடுவர் பங்களிப்புச் செய்யாமலே போலியாய் தத்துவங்கள் பேசியே தர்க்கங்கள் புரிந்தே வாழ்ந்திடும் பகட்டு வாழ்க்கை இக்கரையில் கற்றுவிட்ட வித்தைகளோ <b>இக்கரையில் கண்டுவிட்ட அத்தனையும் அக்கரையில் கிடைத்துவிட்டால் இக்கரைக்கு அக்கரை பச்சையென்று அக்கணமே சொல்லிடுவாரோ..</b> - kavithan - 09-03-2004 ம்ம்ம்... இப்படி தான் வாழ்க்கை... கவிதையில் இக்கரையில் இருப்பதை நன்றாகவே சொன்னீர்கள்... பல நாட்களின் பின் இக்களத்தில் உங்கள் கவிதை கண்டது மகிழ்ச்சி... தொடர்ந்து எழுத வாழ்துக்கள் - tamilini - 09-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இக்கரையில் கண்டுவிட்ட அத்தனையும் அக்கரையில் கிடைத்துவிட்டால் இக்கரைக்கு அக்கரை பச்சையென்று அக்கணமே சொல்லிடுவாரோ.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அக்கா நீங்கள் என்ன செய்வீர்கள் கிடைத்துவிட்டால்... வாழ்த்துக்கள் சண்முகி அக்கா...! - shanmuhi - 09-03-2004 தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கவிதன். - shanmuhi - 09-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அக்கா நீங்கள் என்ன செய்வீர்கள் கிடைத்துவிட்டால்... வாழ்த்துக்கள் சண்முகி அக்கா...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றிகள் தங்கள் வாழ்த்துக்களுக்கு தமிழினி... ம்....கிடைக்குதோ.. கிடைக்காதோ.. எனக்கு அக்கரை தான் சொர்க்கம்... - tamilini - 09-03-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ம்....கிடைக்குதோ.. கிடைக்காதோ.. எனக்கு அக்கரை தான் சொர்க்கம்... _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதை தான் நினைத்தேன் நன்றிகள்...... சொர்க்கமே என்றாலும் அது எம ;நாட்டை போல வருமா..என்றீங்கள்......! Re: அக்கரைக்கு இக்கரை.... - kuruvikal - 09-03-2004 நல்லாத்தான் தமிழர்களின் குணத்தைத் தெரிந்து வச்சிருக்கீங்க...கவிதைக்கு பாராட்டுக்கள்...! ஆனா இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது... இன்று உலகை உலுக்கிய ரஷ்சிய சம்பவம் பற்றி ஒர் லண்டன் போரியல் பேராசிரியரிடம் பிபிசி கேட்டபோது சொன்னார்... தமிழ் புலிகள் தான் இதுபோன்ற தற்கொலைத் தாக்குதல்களின் ஆரம்ப கர்த்தாக்கள் என்று.... எங்கள் போராளிகள் பொதுமக்களை வேண்டும் என்றே இலக்கு வைத்துத் தாக்கியதில்லை... ஆனால் எந்த பகட்டுக்கும் சுகபோகத்துக்கும் அடிபணியாமல் கொண்ட கொள்கைக்காக உயிரையே மாய்க்கும் அற்புதங்கள் அக்கரையில் இருப்பது போல் இக்கரையில் இல்லையே....இங்கு பகட்டுக்கும் பணத்துக்கும் காதலுக்கும் தோல்விக்கும் பயந்து தற்கொலை செய்யும் மனிதர்கள் தான் அதிகம்....!
- sOliyAn - 09-04-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சமூக உதவிகள் அனைத்தும் பெற்றே வசதியான ஏகபோக வாழ்க்கையில் அக்கரையில் காணத வாழ்வு இக்கரையில் கண்டு விட்ட பெருமிதம் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்பிடி எழுதப்போறாண்டு ஜேர்மன்காரனுக்கு தெரீஞ்சுட்டுதுபோலை.. கனபேருக்கு கட்டுக்கட்டா விபரங்கள் கேட்டு, படிவங்கள் வந்திருக்கு.. காசு வைச்சிருக்கிற சனமெல்லாம் 'பதிஞ்சு' வேலை செய்ய ஓடித் திரியுதுகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 09-04-2004 ஓ... அதுவும் அப்படியோ... ? ? ? - shanmuhi - 09-04-2004 ¸ÕòÐìÜȢ ÌÕÅ¢¸û, §º¡Æ¢ÂÛìÌõ ¿ýÈ¢¸û... - sOliyAn - 09-04-2004 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->ஓ... அதுவும் அப்படியோ... ? ? ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <img src='http://www.yarl.com/forum/images/avatars/197974250140a9d109d0b96.gif' border='0' alt='user posted image'> மேற்குறிப்பிட்ட கருத்துக்கு படம் நல்ல பொருத்தமா இருக்கு! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|