![]() |
|
நதிக்கரையோரத்து நாணயங்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: நதிக்கரையோரத்து நாணயங்கள்... (/showthread.php?tid=6768) Pages:
1
2
|
நதிக்கரையோரத்து நாணய - kavithan - 08-24-2004 <span style='font-size:30pt;line-height:100%'><b>நதிக்கரையோரத்து நாணயங்கள்...</b></span> "நதிக்கரையோர நகரங்களில்தான் நாகரீகம் தோன்றியது. அப்படிப்பட்ட இடங்களில்தான் நாணயங்களும் முதன் முதலாக புழக்கத்திற்கும் வந்தன. அதனால் நதிக்கரையோரமுள்ள நகரங்களுக்குச் சென்று நாணயங்களைச் சேகரித்து வருகிறேன்" என்கிறார், வேலூர் அருகேயுள்ள வள்ளிமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆர்.சங்கரன். <img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2c.jpg' border='0' alt='user posted image'> <b>ஆர்.சங்கரன்</b> அபூர்வ நாணயங்கள் சேகரிப்பது இவரது பொழுதுபோக்கு. கடந்த 16 வருடங்களாக இவ் வாறு இவர் சேகரித்த பழமையான நாணயங்களின் எண்ணிக்கை இரு நூற்றுக்கும் அதிகம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாணயங்களைக் கூட இவர் சேகரித்து வைத்திருக்கிறார். இவற்றில் பல்லவ, சோழர்கள் கால நாணயங்களும் அடங்கும். 1803-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வெளியிட்ட விநாயகர் படம் பொறித்த நாணயம், 1818-ல் வெளியிட்ட ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் பொறித்த ராமர் பட்டாபிஷேக நாணயம், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் காட்சி கொண்ட நாணயம் (1840), என்று அன்றைய காலத்தின்படி அரையணா முக மதிப்பு கொண்ட அரிய நாணயங்களும் இவரிடம் உண்டு. இந்த நாணயங்களில் அதன் மதிப்பிற்கேற்ப ஒன் கேஷ், பைவ் கேஷ் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. 1907-ல் விக்டோரியா மகா ராணி உருவம் பொறித்த வெள்ளி நாணயம் வெளியிடப் பட்டது. இதன் அன்றைய மதிப்பு ஒரு ரூபாய் (16 அணாக்கள்) ஆகும். இதன் எடை 11 கிராம். முழுக்க முழுக்க வெள்ளியால் தயாரிக்கப்பட்டது. இதே ஆண் டில் எட்வர்ட் மன்னர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதன் மதிப்பும் ஒரு ரூபாய்தான். இப்போது வெள்ளியின் மதிப்பு மட்டும் 120 ரூபாய் பெறும். <img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2b.jpg' border='0' alt='user posted image'> <b>பல்லவர், சோழ கால நாணயங்கள் இப்படி பழமையான நாணயங்களைச் சேகரிக்கும் ஆர்வம் சங்கரனுக்கு எப்படி வந்ததாம்?...அவரையே கேட்டோம்.</b> "முதன் முதலில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பல்வேறு வகை நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வம் வந்தது. முதலில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா என சேகரித்தேன். அதிலும் பழமையான வருடங்கள் கொண்ட நாணயங்களைத் தேடினேன். இப்படி வருடம் பின்னோக்கிய பழைய நாணயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தபோது, 50, 60 வருடங்களுக்குமுந்தைய நாணயங்களும் கிடைத்தன. உற்சாகம் அதிகமானது. அப்படியே ஆங்கிலேயர் கால நாணயங்கள், மொகலாயர் கால நாணயங்கள் என்று இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போக ஆரம்பித்தேன். சோழர் காலம், பல்லவர் காலம், கிருஷ்ண தேவராயர், நாயக்கர் மன்னர் காலம், மைசூர் மன்னர்கள், ஹைதராபாத் நிஜாம் காலம் ஆற்காட்டு நவாப் என்று அப்படியே பெரிய வரலாற்று பின்னணி கொண்ட நாணயங்கள் சேர்ந்து விட்டன. புதுச்சேரியில் நாணயங்கள் சேகரித்தபோது பிரஞ்சு நாட்டவர்கள் ஆட்சி காலத்தில் அச்சிட்ட நாணயங்களும் கிடைத்தன. <img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2.jpg' border='0' alt='user posted image'> <b> இயேசு நாதர், அனுமன்,விநாயகர், ராமர்பட்டாபிஷேக உருவம் பொறித்த நாணயங்கள். இந்த நாணயங்கள் எல்லாமே பொன், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் வார்க்கப்பட்டுள்ளன.</b> இப்படி நாணயங்கள் சேகரிக்கப்போய் அது தொடர்பான அரிய தகவல்களும் கிடைத்தன. அதற்கு ஒரு சின்ன உதாரணம். இப்போது பல இடங்களில் புதையல் எடுத்ததாக கூறுகிறார்களே, அதன் பின்னணி என்ன தெரியுமா? அந்தக் காலத்தில் பொன் வெள்ளி, செம்பு நாணயங்களை சரியான முறையில் மக்களுக்குப் பாதுகாக்கத் தெரியவில்லை. இதனால் மண் அல்லது உலோக கலசங்களில்தான் இவற்றைப் புதைத்து வைத்தனர். அதுவே இப்போது புதையலாகக் கிடைக்கிறது. <img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2a.jpg' border='0' alt='user posted image'> <b> கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1818 மற்றும் 1840_ல் வெளியிட்ட நாணயங்கள்.</b> 1996-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு பழமையான நாணயங்கள் சேகரிப்பதை தீவிரமாக செய்துவருகிறேன். நதிக்கரை நகரங்களில்தான் நாகரீகம் தோன்றியது, வளர்ச்சி யடைந்தது என வரலாறு கூறுவ தால் நதிக்கரையோரம் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், ஆக்ரா, மதுரா போன்ற பல வடமாநில நகரங்களுக்குச் சென்று நாண யங்களைச் சேகரிக்கிறேன். இவ்வாறு சேகரித்த நாண யங்களையெல்லாம், தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சென்று பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்களுக் காக கண்காட்சியும் நடத்தி வருகிறேன்." *** நன்றி தினத்தந்தி - tamilini - 08-24-2004 நன்றி தகவலுக்கு....! - kuruvikal - 08-24-2004 tamilini Wrote:நன்றி தகவலுக்கு....! இதுதான் எங்கள் கருத்தும்... சின்னனில உந்தப் பழைய நாணயங்கள் அரிய நாணயங்கள் சேர்கிறதில குருவிகளுக்கு ரெம்பப்பிரியம்....நிறைய நாணயங்கள் வைச்சிருந்தம்... உவன் ஆமிக்காரன் குருவிகளின் கூட்டோட சேத்து அதுகளையும் அழிச்சு எங்கையோ ஒதுக்கிப்போட்டான்....! முத்திரை அல்பம் எண்டு நிறைய பழைய அரிய முத்திரைகள் எல்லாம் வைச்சிருந்தம்.... இப்ப ஒன்றுமே இல்லை....! எந்த மூலைக்க கிடந்து உக்கிச்சோ...பாவம் அதன்ர சுயசரிதை ஒன்று எழுதத்தான் வேணும் ஒரு காலத்தில....! :evil:
- tamilini - 08-24-2004 இப்படி எத்தனை பேருக்கு எத்தனையின் சுயசரிதையை எழுத வைத்துவிட்டான் ஆமிக்காரன்....! நாங்கள் எப்பவும் இப்படி பட்ட புத்தகங்கள் அல்பங்களை தவறவிட்டதேகிடையாது.. முதல் கட்டிறதும்.. கட்டினதும் அவற்றை தான்... எல்லா இடமும் எங்கள் கு}டவே வரும்......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-24-2004 tamilini Wrote:இப்படி எத்தனை பேருக்கு எத்தனையின் சுயசரிதையை எழுத வைத்துவிட்டான் ஆமிக்காரன்....! உள்ளதைத்தானே கட்ட முடியும்... அவ்வளவுத்தான் இருந்திருக்கும் கட்டியிருப்பியள்...அதுக்க கதையப் பாரு...! நாங்கள் என்னவோ நாணயம் அரிய நாணயங்கள் முத்திரைகள் தொலைஞ்சு போச்சே என்று கவலையில இருக்கிறம்...அதுக்க நக்கல்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-24-2004 Quote:உள்ளதைத்தானே கட்ட முடியும்... அவ்வளவுத்தான் இருந்திருக்கும் கட்டியிருப்பியள்...அதுக்க கதையப் பாரு...! நாங்கள் என்னவோ நாணயம் அரிய நாணயங்கள் முத்திரைகள் தொலைஞ்சு போச்சே என்று கவலையில இருக்கிறம்...அதுக்க நக்கல்...!நீங்கள் ஒன்டு எங்களையே ஏறக்குறைய கட்டின மாதிரி தான்.... இதில நாங்கள் எங்க கட்டிற... எல்லாரும் தங்களுக்கு வேண்டியதை து}க்க நாங்கள்... புத்தகங்களை கு}க்கினம் அதோட கு}ட வந்தவைகள் தான் இவைகள்... புத்தகங்கள் என்டால் என்ன பெரிய கட்டா இல்லை.. ஒரு கணிதமும் தமிழும். ஆங்கிலமும் தானே.. அப்ப நாங்கள் படிச்சது.. இவை பெரிய பாராமா என்ன.....?? அதைவிட வேறை என்னத்தை கட்டுறது....?? சரி சரி கவலைப்படாதேங்க குருவிகளே.... என்ன செய்வது.. ஒருவேளை அவை வேறு யாருடைய கைகளிலும் சிக்கி பாதுகாக்கபட்டுக்கொண்டிருக்கலாம் தானே.....! - kuruvikal - 08-24-2004 உங்களைக் கட்டிக்கொண்டு வந்திச்சினமோ கட்டவச்சினமோ எங்களுக்குத் அதெல்லாம் தெரியாது.. நீங்க சொல்லுறது போல எங்கள் முத்திரை பாதுகாக்கப்பட்டிருக்க ஏலாது...அது மழைக்கு நனைஞ்சு உக்கியிருக்கும்.....நாணயங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம்...ஆனா கண்ணி வெடிக்க எவன் நாணயம் தேடுவான்.....எங்களுக்கு உதில எல்லாம் நம்பிக்கையில்ல... கையவிட்டுப் போனாப்பிறகு அது எங்களது இல்லத்தானே அப்படி என்று தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-24-2004 Quote:கையவிட்டுப் போனாப்பிறகு அது எங்களது இல்லத்தானே அப்படி என்று தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்....!சரி அப்படியே தேற்றிக்கொள்ளுங்கள்... நல்லது தானே......! - kuruvikal - 08-24-2004 தேற்றினபடியாத்தானே இப்ப நிம்மதியா இருக்கிறம்... தொலைந்ததைப் பற்றி நினைச்சு வருந்திக் கொண்டே இருக்க நாங்க என்ன கோமாளிகளா... கிடைக்கிறது கிடைக்கும் கிடையாதது கிடைக்காது என்று கீதையில பகவான் கிருஷ்ணர் சொன்னது என்ன சும்மாவா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-24-2004 Quote:என்ன கோமாளிகளா...இல்லையா..?? அப்ப சரி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-24-2004 என்ன நக்கல் சிரிப்பு.... தம்பி போல அக்காவும் ஏதாவது அரிய தகவல் கொண்டு வரலாம் எல்லே...உந்தச் சிரிக்கிற வேலையை குறைச்சுப் போட்டு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 08-24-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
- kuruvikal - 08-24-2004 ஓ சிரிக்கிறதைக் குறைச்சா கோபம் தான் வருமோ...அப்ப சிரியுங்கோ....! நாணயத்தோட இருந்தாச் சரி... இல்ல பூட்டுத்தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-24-2004 Quote:நாணயத்தோட இருந்தாச் சரி... இல்ல பூட்டுத்தான்...! :roll: :roll: :roll: hock:
- kuruvikal - 08-24-2004 ஏன் முழிக்கிறீங்க... நாணயம் தவறிப்போச்சா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-24-2004 நாணயம் தவறல... அது எங்க கு}ட தான் இருக்கும்... இல்லை ஏதோ பு}ட்டு என்டு இருந்திச்சுது அதுதான் முழிச்சம்......! :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 08-24-2004 சரி சரி நாணயத்தோட இருந்தாச்சரி.. பூட்டுக்கு அவசியம் வராதுதானே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-24-2004 அப்படியா.. அப்ப சரி - kavithan - 08-24-2004 [quote=kuruvikal][quote=tamilini]இப்படி எத்தனை பேருக்கு எத்தனையின் சுயசரிதையை எழுத வைத்துவிட்டான் ஆமிக்காரன்....! நாங்கள் எப்பவும் இப்படி பட்ட புத்தகங்கள் அல்பங்களை தவறவிட்டதேகிடையாது.. முதல் [size=18]கட்டிறதும்.. கட்டினதும் [b]உள்ளதைத்தானே கட்ட முடியும்... ??????? :roll: - kuruvikal - 08-24-2004 ஏன் கவிதன் நீங்களும் முழிக்கிறீங்கள்... என்ன நடந்தது இன்று எல்லோருமே முழிக்கிறார்கள்...நதியோர நாணயம் அப்படி என்ன தான் செய்தது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|