![]() |
|
எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....? (/showthread.php?tid=6761) |
எல்லாம் நாசமே இதிலெங் - shanthy - 08-27-2004 எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....? நீழும் இரவின் கருமைக்குள் கண்ணெங்கும் விளக்காக.... அச்சத்தின் விரல்களுக்குள் ஆவிகள் நசிபட வேலி பிரியும்..., நாய் குரைக்கும்...., விதம் விதமாய் ஒலியெழும் திசைபார்த்து விக்கித்துப் போய்விடும் உயிர்களுக்கு உத்தரவாதம் தராத இரவுகள். வேட்டதிரும்...., எங்கோ ஒரு வீட்டின் மகனோ , மகளோ.... அவர்களுக்கு இரையாக.... இருளோடு ஒரு சாவு உறுதியாய்.... 'சலோ" என்றபடி விடிகாலை - அவர்கள் வீதியுலா வெளிக்கிடுவர். புலியொன்றைக் கொன்றதாய் பொய்சொல்லி ஊர்வாயில் மெய்யாக்கிப் போய்விடுவர். சந்திகளில் அரணமைத்து சாவிழுத்தக் காத்திருக்கும் மந்திகளின் மணம் உணரும் மூக்குத் துவாரங்கள் - உயிர் மூச்சையே அதிர்விக்கும். வீதியில் தேவைகட்காய் விரையும் மனிதரின் உயிர்களில் வலியெடுக்கும்.... பெண்களைக்காணும் பனைமரத்து அரணிருக்கும் பேய்களின் இடையிருக்கும் உடை நழுவ விரல் நீட்டி அழைக்கும் விழுங்கிடும் பார்வைகளில் உயிர் மூச்சே நின்றுவிடும்...., பாவாடை கட்டிய ஒரு பூவின் இதழ்கள் பற்களின் அடையாளங்களுடன் பனைவடிலிப் பற்றையில் பிணமாகும். இப்படித்தான் அவர் வருகை சாவையும் , கண்ணீரையும் , உறவுப்பிரிவையும் , ஊரழும் துயரையும் தந்து போன உண்மைகள். எதை மறக்க....? எதை நினைக்க.....? என்றுதான் எமை வாழவிட்டார் நன்றியுரைக்க எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....? - kavithan - 08-27-2004 <span style='font-size:25pt;line-height:100%'>எல்லாமே நாசம் இதில் எங்கே நேசம் சிங்கள ஓநாய்களின் பாசம் தமிழனை அழிக்க போட்ட வேசம்.</span> அக்கா ஆழமான உண்மைகளை அற்புதமாக சொல்கிறது கவிதை.... கவிதைகளுக்கு நன்றிகள்.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... எனக்கு பிடித்த வரிகள் Quote:சந்திகளில் அரணமைத்து - shanmuhi - 08-27-2004 Quote:சாவையும், கண்ணீரையும், கவிதை அருமை. வாழ்த்துக்கள்... - yarl - 08-27-2004 சலோ என்பது இந்திய இராணுவம்?? நல்லதொரு உணர்வுபுூர்வமான கவிதை - tamilini - 08-27-2004 Quote:நீழும் இரவின் கருமைக்குள்இனியகவிக்கு என் வாழ்த்துக்கள்.....! - shanthy - 08-27-2004 yarl Wrote:சலோ என்பது இந்திய இராணுவம்?? இந்திய ராணுவகாலத்து நினைவே இக்கவி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- shanthy - 08-27-2004 நெஞ்சிலின்றும் ரணமாக.... துயர் எங்கள் வீதிகளில் நடந்ததை து}ரதேசச் சொந்தங்களே அறியாக் கொடுமையெங்கள் வீதிகளில்....வீடுகளில்....கோவில்களில்.... ஆழுக்காள் அழுதபடி... ஊருக்குள் எங்கள் துயர்.... சிங்களத்தான் தந்த கொடும் துயர் ஆற முன்னாலே இந்தியராய்....எங்கள்....உறவினராய்.... வந்தவரின் வாகனச் சில்லுக்குள்.... ஆட்லறி ஷெல்லுக்குள்.... அடுத்து வந்த இயந்திரத் துப்பாக்கிக்குள்... அழிபட்ட துயர் சொல்லி ஆறவொரு நாதியின்றி அழிபட்டோம்....,அடிபட்டோம்..., உலகறிந்து வரவில்லை - எந்த உலகநாடும் வாய் திறக்கவில்லை. நாங்களே செத்தோம்...., நாங்களே அழுதோம்...., நாங்களே அழிந்தோம்...., நமக்குள்ளே துயர்மண்டி நம் துயர் நமக்குள்ளே புதையுண்டு.... நாங்கள் வாழ்ந்த காலம் நெஞ்சிலின்றும் ரணமாக.... - kavithan - 08-27-2004 நல்ல கருக்துள்ள கவிதை தொடருங்கள்...அதற்கு எனது வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Quote:உலகறிந்து வரவில்லை - எந்த - kavithan - 08-27-2004 shanthy Wrote:yarl Wrote:சலோ என்பது இந்திய இராணுவம்?? தகவலுக்கு நன்றி அப்போ நான் வெறும் சின்ன குழந்தை.. சலோவோ .. கலோவோ .. கிலோவோ எது சொன்னாலும் புரியாத வயசு...... ஆனால் அவர்கள் செய்த அட்டூளியங்கள் எல்லாம் புரிந்ததுவே.. - tamilini - 08-28-2004 Quote:அவர்கள் செய்த அட்டூளியங்கள் எல்லாம் புரிந்ததுவே..ம் அப்படியா.. ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- shanthy - 08-30-2004 அன்றழுத குரல் என் அயல்வீட்டுக் குரலல்லவா....! 'ஐயோ....அம்மா....ஆராவது வாங்கோவன்....." இன்றும் நினைவகலா அழுகையது. கோடிசுற்றி ஓடியோடி கும்பிட்ட தெய்வமேதும் - அவள் துயரில் குரல்கூட எழுப்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் உடல் துளாவி உடற்சட்டை கிழித்து மரணத்தின் வாசலில் துடிதுடிக்க மாறிமாறி அவள் உடல் கிழிபட்ட துயர் சொல்ல எனக்குத் துணிச்சலில்லை. ஊர் எல்லை வரையிலுமாய் அந்தக்குரல் இப்பவும் தான் நினைவிருக்கு. .....! அவள் குரல்தான் அது. புரிந்திருந்தும் காப்பாற்ற ஒரு புழுவும் அசையவில்லை. இருபதுக்கும் மேலானவர்கள் ஒருத்தியின் உடல் உழுத உண்மை புரியாது இன்னும் அவர்களை நேசிக்கும்படியான வார்த்தைப் பூச்சுக்கள்... எப்படித்தான் ஜீரணிக்க...! அன்றழுத குரல் எந்தன் அயல்வீட்டின் குரலல்லவா....! மூச்சிழந்து போன பின்னும் மும்பைக்காரச் சிப்பாயின் கோரம் அடங்காமல் மீண்டும்....மீண்டும்.... அடுத்தடுத்துக் கொடியவரின் வெறி அவள் உடலில்..... வேலியெங்கும் துப்பாக்கிக் கூலிகளின் வாயெங்கும் வீணி வடிந்தபடி.... படுகிழவியென்றாலும் பறவாயில்லை பாவியரின் கண்ணெல்லாம் அதுவாக.... வல்லுறவு கொண்ட துயர் வடிக்கவா முடியும் வார்த்தைக்குள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 08-30-2004 எங்கும் ஆதிக்க வெறி அதுதான் இத்தனை கூத்தும்...! ஆதிக்க செய்ய வந்த முப்பாய்க்காரச் சிப்பாய்தன் வால் பிடித்த உங்கள் தம்பி எத்தனை செய்தான் உடை என்ன உடலென்ன எல்லாம் கிழித்து வெட்டி வீதியில் விட்டெறிந்தான் குழிதோண்டிப் புதைத்தான் இத்தனை அநியாயம் அடுக்கடுக்காய் செய்த அந்த அரக்கனுக்கு தன் சகோதரியின் ஈனக்குரல் என்னவாய் விழுந்தது...???! அரக்கம் எம்மிடத்திலும் தான் அடக்க வேண்டியது நம் கடமை அநியாயங்கள் அன்று மட்டுல்ல இன்றும் எங்கும் தான் தொடர்கதையாய்....! அந்நியர் செய்ததுக்காய் ஓங்க அலறிடும் நாம் நமக்குள் எத்தனை அநியாயங்கள் அனுதினமும் கண்டு மெளனிகளாயாவதுமேன்...???! உங்கள் தம்பிமார் தம் நிலத்தில் அல்ல புலத்திலும் தான் காட்டினம் தம் 'திறமை' அநியாயமாய் மாழுது மனிதம்...! அநியாயம் கண்டு அழும் மானுடம்தன் அழுகுரல் உங்கள் செவியினில் விழவில்லையா நம் செவிப்பறை கிழிகிறதே...!!!!! :evil: :roll:
- tamilini - 08-30-2004 Quote:மூச்சிழந்து போன பின்னும்இவற்றை கண்டவர்கள் சொல்லி கலங்கும் போது... மனம் என்னவோ செய்கிறது.. நன்றி அக்கா உங்கள் கவிக்கு...! - tamilini - 08-30-2004 அநியாயம் கண்டு மனம் நோகும் குருவிகளிக்கு கவிக்கு நன்றிகள்... ! - சுடரோன் - 09-08-2004 ..நீளும் இரவின் கருமைக்குள் கண்ணெங்கும் விளக்காக.... அச்சத்தின் விரல்களுக்குள் ஆவிகள் நசிபட ... தேர்ந்த சொற்களின் சேர்ககையில் ஒரு பயம்காட்டும் இரவு நயமாய்க் காட்டப்படுகின்றது இங்கே... அந்த இரவுகளின் அச்சங்கள் அகலட்டும்...! வாழ்த்துக்கள் |