![]() |
|
கடவுள் நம்பிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763) |
கடவுள் நம்பிக்கை - Thiyaham - 08-25-2004 கடவுள் நம்பிக்கை.. ஆம் இந்த தலைப்பில் ஒரு காரசாரமான விவாதத்தை எழுதலாம் என சில வாரங்களுக்கு முன் நினைத்திருந்தேன். வெளி இடம் சென்றதால் முடியவில்லை. ஆதிகாலத்தில் மிருகங்களை போல் சுற்றி திரிந்த மனிதர்களை சீரிய வழியில் கொண்டு வருவதற்கு ஒரு சாராரால் அறிமுகப்படுதபட்டதே சமய நம்பிக்கை. இது எப்படி என்றால், "சொல்வழி" கேளாத சிறு பிள்ளைகளை நாம் "அதிற்ர பிடிச்சு கொடுப்பன் இதிற்ர பிடிச்சு கொடுப்பன்" என்று மிரட்டுகின்றோமே அதைப்போன்றது (குழந்தைகள் விஞ்ஞானதில் இது ஒரு தவறான செயல் என்பது வேறு விடயம்). இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....????? - tamilini - 08-25-2004 Quote:இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....?????கடவுள் இல்லை என்கிறீங்களா..?? - kavithan - 08-25-2004 கடவுள் இல்லை என்று எப்படி இப்படி ஆணித்திரமாக கூறுகிறீர்கள்...... இதனால் பார்த்தா..<img src='http://www.yarl.com/forum/images/avatars/125663101541278d82b15af.jpg' border='0' alt='user posted image'> உங்கள் விவாதத்தை தொடருங்கள் பார்ப்போம்.. ... ஆதரவு தருவோம் நாமும். எதிர்கட்சியிலோ .. நடுவிலோ.. உங்கள் பக்கத்திலோ.. .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thiyaham - 08-25-2004 கடவுள் இல்லை என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. இருக்கு என்பதற்கு தமிழினி, நீங்கள் ஏதாவது ஆதரம் காட்டுங்களேன் - tamilini - 08-25-2004 இந்த பு}மி இயங்கிறதிக்கு காரணம் யார் என்கிறீங்கள்..?? - Thiyaham - 08-25-2004 வான சாஸ்திரம் படியுங்கள் - tamilini - 08-25-2004 என்னது வான சாஸ்திரத்துக்கு நான் எங்க போறது.. பதில் தெரிந்தால் சொல்லுங்கள்....! - Thiyaham - 08-25-2004 Physics Astrology எண்டெல்லாம் கனக்க சொல்லுவாங்க - shanthy - 08-25-2004 kavithan Wrote:கடவுள் இல்லை என்று எப்படி இப்படி ஆணித்திரமாக கூறுகிறீர்கள்...... பட்டிமன்றம் நடத்தப்போறியளே கவிதன் ??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanthy - 08-26-2004 Thiyaham Wrote:கடவுள் இல்லை என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. இருக்கு என்பதற்கு தமிழினி, நீங்கள் ஏதாவது ஆதரம் காட்டுங்களேன் நீங்களிப்ப என்ன தியாகம் சொல்ல வாறியள் ? கடவுள் இருக்கா இல்லையை ? அதுதானே ? உங்கடை கருத்தையெல்லோ முதலில் வைச்சு விவாதிக்க வேணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thiyaham - 08-26-2004 கடவுள் ஒருவன் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை கூட. காரணம் நிறைய பேர் பசி பஞ்சம் என்று வாடுகிறார்கள். ஆவர்களுடைய வாட்டம் போக்க கடவுள் ஒருவன் வேண்டும். ஆனால் நடப்பது என்ன..? கடவுளை மட்டும் கும்பிட்டவன் கதி என்ன? எமது முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கும் போது இல்லாத கடவுள் நமக்கு எதற்கு..............? கடவுளை ஒழிப்போம் - இளைஞன் - 08-26-2004 Quote:இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....????? Quote:கடவுள் இல்லை என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உண்டு Quote:கடவுளை ஒழிப்போம் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். பிறகெப்பிடி இல்லாத கடவுளை ஒழிப்பது? - kavithan - 08-26-2004 shanthy Wrote:kavithan Wrote:கடவுள் இல்லை என்று எப்படி இப்படி ஆணித்திரமாக கூறுகிறீர்கள்...... நான் பட்டிமன்றம் நடத்தவில்லை அக்கா..... எந்த பக்கதில் நின்று கை தட்டுவது என்று தான் பார்க்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thiyaham - 08-26-2004 கடவுள் நம்பிக்கை, இதனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோடிக் கணக்காக சம்பாதிப்பவர்கள். கடவுளின் பெயரால் மூட நம்பிக்கை வளர்ப்பவர்கள், ஏமாற்று வித்தைகள் செய்பவர்கள், கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி இல்லாமல் இருப்பவர்கள். இவர்களை அல்லது இவர்கள் சார்ந்த மனநிலையை ஒழிப்போம் Re: கடவுள் நம்பிக்கை - paandiyan - 08-26-2004 Thiyaham Wrote:கடவுள் நம்பிக்கை.. ஆம் இந்த தலைப்பில் ஒரு காரசாரமான விவாதத்தை எழுதலாம் என சில வாரங்களுக்கு முன் நினைத்திருந்தேன். வெளி இடம் சென்றதால் முடியவில்லை. ###################################### அதெப்படி தியாகம் கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என உங்களுக்குத் தெரியும். அப்படி இல்லை என்று சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா அல்ல்து இருக்கிறார்தான் என்பதையாவது பார்க்க முயச்சி செய்து பார்த்திருக்கிறீர்களா.. நாம் நினைத்தால் நமக்கு முன் கடவுள் வந்து நிற்க வேண்டும் அல்லது அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் என்றே சொல்லலாம். வாழ்க்கையில் நாம் ஒரு நிலைக்கு வர வேண்டுமெனில் எவ்வளவு முயற்சிகள் செய்கிறோம். உதாரணமாக படிப்பை எடுத்தால் நிங்கள் A/L க்கு செல்லவே எத்தனை பரீட்சைகள் எடுக்க வேண்டி இருக்கும் என்டு சொல்லித்தெரிய வேண்டியதில்லை..அப்படி இருக்கும்போது கடவுள் என்றால் சும்மாவா...................இது எனது தனிப்பட்ட கருத்து... - paandiyan - 08-26-2004 Thiyaham Wrote:எமது முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கும் போது இல்லாத கடவுள் நமக்கு எதற்கு..............? ################################## உங்களுக்கு காலும் கையும் தந்தது உங்கட முயச்சியில உழைச்சு உயரவே. அதவிட்டு ஓசியில எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் இருந்தென்ன இல்லாட்டியென்ன. தந்தால்தான் கடவுள் இல்லெண்டா ஒண்டுமில்லை என்பது முட்டாள்தனமாகத் தெரியவில்லை... :roll: hock:
- paandiyan - 08-26-2004 Thiyaham Wrote:கடவுள் நம்பிக்கை, இதனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோடிக் கணக்காக சம்பாதிப்பவர்கள். கடவுளின் பெயரால் மூட நம்பிக்கை வளர்ப்பவர்கள், ஏமாற்று வித்தைகள் செய்பவர்கள், கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி இல்லாமல் இருப்பவர்கள். #################################### :roll: முட்டாள்களை நம்பிப் போகும் அடிமட்ட முட்டாள்கள் இவர்கள்.. இவர்களுக்காக சிரிக்கத்தான் முடியும்... ஆனால் எல்லோரும் ஏமாற்றுபவர்களில்லை என்பதும் உங்களுக்கு தெரியுமா????? - Thiyaham - 08-26-2004 அப்போ நீங்கள் ஐயரிடம் காசு கொடுத்து ஏமாறுவது எந்த வகையில் சேரும்..? - paandiyan - 08-26-2004 Thiyaham Wrote:அப்போ நீங்கள் ஐயரிடம் காசு கொடுத்து ஏமாறுவது எந்த வகையில் சேரும்..? ################################### என்னைப் பொறுத்தவரை நான் கோயிலில் அர்ச்சனை என்ற பெயரில் காசு குடுப்பதுமில்லை, திருப்பணிக்கென்று உண்டியலில் காசு போடுவதுமில்லை(ஐரோப்பாவில்). ஆனால் ஊரிலென்டா குடுக்கலாம். ஏனெனில் அங்கு ஏமாற்ற்பவர்கள் இங்கவிட குறைவு மற்றையது சில கோயிலகளில் அர்ச்சனை காசு உண்மையான திருப்பணிக்கும் கஷ்டப்பட்ட ஐயருக்கும் போகும்(சம்பளமாக). அப்படியான இடங்களில் குடுப்பது பிழையில்லை என்டு நினைக்கிறன். :roll: - shanmuhi - 08-26-2004 Quote:கடவுள் நம்பிக்கை இதனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோடிக் கணக்காக சம்பாதிப்பவர்கள். கடவுளின் பெயரால் மூட நம்பிக்கை வளர்ப்பவர்கள் ஏமாற்று வித்தைகள் செய்பவர்கள் கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி இல்லாமல் இருப்பவர்கள். கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி செய்யாமல் இருப்பது என்பதை என்ன என்று சொல்வது...? பிரார்த்தனைகளினாலோ... வேண்டுதல்களினாலோ.. துனபங்களைக் குறைக்க முடியாது. பிரார்த்தனை மனதை அமைதியாக்குகின்றது. எந்த சோகத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்ளக்கூடிய மனத்தைரியத்தை தருகின்றது. |