Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 520 online users.
» 0 Member(s) | 517 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  சுவிசிலிருந்து உலக நாடுகளுக்கு பேசுவதற்கான சேவை
Posted by: AJeevan - 08-18-2004, 02:50 PM - Forum: புலம் - No Replies

<b>இதோ சுவிசிலிருந்து உலக நாடுகளுக்கு பேசுவதற்கான ஒரு தொலைத்தொடர்பு சேவை.</b>

கட்டணம் சுவிசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலமே அறவிடப்படுகிறது.

முன் பணம் கட்டவோ அல்லது பதியவோ தேவையில்லை.

உங்கள் தொலைபேசியிலிருந்து நேரடியாக குறிப்பிட்ட எக்ஸஸ் இலக்கத்துடன் தொடர்பு கொண்டால் அது நிமிடத்துக்கு எவ்வளவு என்று சொல்லும்.

<b>உதாரணத்துக்கு:</b>
<span style='color:red'>இலங்கைக்கு:-
எக்ஸஸ் இலக்கம் 09003344
சாதாதரண தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசிக்கு 10 றாப்பன் நிமிடத்துக்கு

இந்தியாவுக்கு:-
எக்ஸஸ் இலக்கம் 0900889981
சாதாதரண தொலைபேசி 15 றாப்பன் நிமிடத்துக்கு
கைத்தொலைபேசிக்கு - 18 றாப்பன் நிமிடத்துக்கு

இலண்டன்:-
எக்ஸஸ் இலக்கம் 0900889981
சாதாதரண தொலைபேசி 3 றாப்பன் நிமிடத்துக்கு
கைத்தொலைபேசிக்கு - 20 றாப்பன் நிமிடத்துக்கு

ஜேர்மனி;:-
எக்ஸஸ் இலக்கம் 0840511511
சாதாதரண தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசிக்கு 1 றாப்பன் நிமிடத்துக்கு


Quote:
Helvatel is easy to use because our access numbers are available from almost any telephone in Switzerland. The international connection charges and VAT are included in the price stated for calling our access numbers. You will not receive a separate telephone bill from us; your call charges to our access numbers will simply appear on your telephone bill from your normal provider, (usually Swisscom) but you can also use Helvatel from mobiles or even phone boots.

You can use Helvatel even if you are subscribed to another call provider, such as Tele2 and save even more money on your international calls.

<b>How it works:</b>

1.Dial the relevant access number for the country you wish to call.
2.Once you are connected you will hear a voice prompt, now dial the international telephone number in full (including 00).

<b>For example:</b>
You want to call the number 0123456789 in France. Dial the relevant access number for France: 0840511511. Once you are connected dial the country code for France 0033, followed by the subscriber number without the 0: 123456789. So dial 0840511511 0033 123456789! That's all!

<b>The Advantages:</b>

No pre-payment or calling card needed
Your provider will invoice you as usual
No subscription or hidden costs
Tariff message played before each call
All prices include VAT
No separate bills, payment via your regular phone bill.

மேலதிக விபரங்கள்:
http://www.helvatel.ch/english.php
or
http://www.helvatel.ch/

</span>
<span style='font-size:19pt;line-height:100%'>ஏயை நாடுகளாக்கான கட்டணங்களை இணைய தள முகவரியில் பார்க்கவும்.</span>
http://www.helvatel.ch/tarifliste.php

Print this item

  ஏதோ நான் இருந்தேன்
Posted by: Paranee - 08-18-2004, 11:52 AM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஏதோ நான் இருந்தேன்</span>

<img src='http://www.theage.com.au/ffxImage/urlpicture_id_1077072707094_2004/02/18/marriage,0.jpg' border='0' alt='user posted image'>

இலை உதிர செடி அழுவதில்லை
இதழ் உதிர மலர்வாசம் மடிவதில்லை
அன்னைமண் பிரிந்து அழுதிட்ட காலங்கள்
அன்பை தொலைத்து
அனலான நாட்கள்

உதிர பந்தம் இல்லை
உறவுப்பந்தமும் இல்லை
ஊர் உறவும் இல்லை
பிரியும்போது நெஞ்சம் பிழிந்து வடிகின்றதே

உள்ளத்தின் கண்ணாடி
விழியாகி நிற்க
கண்ணீர் வெள்ளம் கரைந்தோடுகின்றதே
அருகிருந்த அன்பும் தொலைந்து செல்ல
அன்று தோன்றவில்லை பிரிவின் வலி
கொஞ்சம் விலகி நிற்க
வீரியம் காட்டி விக்கித்து அழுகின்றதே
உள்ளம் என்னும் குழந்தை

இரவான வாழ்வில் என்றும் சுகம் இல்லை
சற்று ஓளி சேர்த்து இரவை பிரிந்தால்
சுகம் தினம் சுகமே

ஆண்டுகள் பிரியாமல் என்றும்
அனுபவங்கள் கிட்டுவதில்லை
அமாவாசை தொலைத்த வெளிச்சம்
பௌர்ணமியில் துரத்தி வந்து அணைக்கும்
கைகாட்டி விலகும்வரை கண்கள் பனிக்கவில்லை
உள்ளத்தின் அழுகுரல் ஓசையின்றி ஓலித்தபடி
பிரிந்துசெல் அன்பே
உன் நினைவும் ஓர் சுகம்தான்

நினைக்க ஓர் மனம் இருந்தால்
இவ்வையகம் எங்கும் இன்பம்தான்
பாலைவனம்கூட பளிங்கு மாளிகைதான்
ஓர் நாள் பட்டினி
மறுநாள் உணவருந்த இன்பம் பொங்குமே
பிரிவும் அவ்வாறே

பத்தை மூன்றால் பிரித்துப்பார்
என்றும் முடிவிலிதான் எம்
அன்பும் அப்படித்தான்
பிரிந்து செல்ல பிணைப்பு இறுகும் அன்பே
கொஞ்சம் பிரிந்தால்தான்
நம் அன்பின் ஆழம் புரியும்

Print this item

  சிறீலங்கா ஏர்லைன்ஸ் - சீண்டிப் பார்த்தேன்
Posted by: தமிழன் - 08-18-2004, 02:18 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (28)

<span style='font-size:25pt;line-height:100%'>சிறீலங்கா ஏர்லைன்ஸ்</span>

சமீபத்தில் தமிழ்நாதம் இணையதளத்தில் திரு நக்கீரன் எனபர் எழுதி வரும் வன்னிச் செலவு எனும் அவரது பயன அனுபவ தொடர் கட்டுரையைப் படித்து வந்தேன். 3ம் தொடரில் http://www.tamilnatham.com/vanni/vannitrip20040715.htm (இப்பொழுது 6 தொடர்கள் வந்து விட்டது) சிறீலங்கா ஏர்லைன்ஷில் பயனிகளை தமிழில் வரவேற்பதில்லை என்பதை அறிந்து சிங்களவர் செயல் தெரிந்தது தானே இதில் என்ன விசேடம் என எண்ணி நக்கீரருக்கு ஒரு மடல் அனுப்பினேன். ஏன் இன்னொருவனின் நாட்டில் நாம் சென்று எமது தமிழ் மொழியை உபயோகிக் சொல்லவேண்டும் எமது தமிழீழ தாய்நாடு வந்நபின் எங்கள் சொந்த விமானங்கள் பறக்கும் அதில் தமிழ் சேவைதான் இருக்குமென்றேன்.

இருப்பினும் என் மனம் கேட்கவில்லை, சிறீலங்கா ஏர்லைன்சுக்கு ஒரு மின்மடல் அனுப்பினேன். விமானத்தில் நான் பயனம் செய்ததாகத குறிப்பிட்டு சமீபத்தில் பயணம் செய்யும் போது எனக்கு விளங்காத சிங்கள மொழியில் பணிப்பெண்கள் என்னை வரவேற்றனர் என்று எனது அதிருப்தியை அழுத்தமாக வெளிக்காட்டி கடிதம் அனுப்பினேன். திரு நக்கீரன் தனது கட்டுரையில் இருந்து இலங்கை அரசியல் யாப்பு தமிழும் இலங்கையின் தேசிய மொழி என்பதை சுட்டிக் காட்டியிருந்தார். அந்த யாப்பை நானும் அவர்களுக்கு அனுப்பிய மின்மடலில் இணைத்திருந்தேன்.

இறுதியாக நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு சிறீலங்கா ஏர்லைன்ஸ் பதில் அனுப்பியிருந்தார்கள். அக்கடிதத்தில் தமது விமான சேவையில் தமிழ் பாவிக்காத காரணம் என்ன என்று குறிப்பிட்டு இருந்தார்கள். என்னைப்போல் தாங்களும் அந்த காரண்ததை அறிய விரும்பினால். சிறீலங்கா ஏர்லைன்ஸ் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்த இணைபில் பார்க்கலாம். எனது பெயரை மட்டும் மறைத்துள்ளேன்.

http://www32.brinkster.com/famoustamils/sr...n_arilines.html

தமிழன்

Print this item

  குழந்தையின் குறும்புகள்.....(தொடர்)
Posted by: kavithan - 08-17-2004, 10:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

<span style='font-size:30pt;line-height:100%'><b>குழந்தையின் குறும்புகள்.....</b></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kuzanththaiyinkurumpu.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>
அன்னையை கண்டவுடன்
அழகான ஒரு அழுகை.
அப்புறமாய்.. அன்னை
ஒரு முத்தமிட
அப்பாவியாய் ஒரு சிரிப்பு.

இது பாசத்துக்காகவாம்......

கொஞ்சம் செல்ல.. திரும்பவும்
ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.
இது பாசத்துக்காக அல்ல,
பசியாலாம்.....!
பாசமான அன்னை
புட்டியில் பால் எடுத்து வந்திட
மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு
குழந்தையின் முகத்தில்.

பால் குடித்து முடிந்தவுடன்
பாரதியாய் மாறி அக்குழந்தை
பாடல் ஒன்று பாடியது
தனக்கு தெரிந்த மழலை மொழியில்.
அது எனக்கு புரியவில்லை.....
ஆனாலும்,
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.


கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிப் பேசிய அக் குழந்தை
குட்டி தூக்கம் போட்டு
குறண்டிப் படுத்தது.</span>

<b>
உங்கள் கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன் இத் தொடருக்கு.....</b>

Print this item

  தொலைபேசி அட்டைகள்
Posted by: shanmuhi - 08-17-2004, 10:29 PM - Forum: புலம் - Replies (9)

<b>பலவிதமான தொலைபேசி அட்டைகள் வந்து போய்க் கொண்டிருக்கிறன.
சில அட்டைகள் வந்த இடம் தெரியாமலே மறைந்து போய் விடுகின்றன.

இந்நிலையில் தற்போது பாவனையில் இருக்கும் தொலைபேசி அட்டைகளில் எது பயனுள்ள சிறந்த அட்டை எது என்று கருதுகிறீர்கள்...? ? ?</b>

Print this item

  DJ Rama Remix (Switzerland)
Posted by: AJeevan - 08-17-2004, 06:38 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_djphoto.jpeg.2.jpg' border='0' alt='user posted image'>

http://www.djrama.com/profile.html


<b><span style='font-size:22pt;line-height:100%'>வாழ்த்துகள் சன்ஜீ</b></span>

Print this item

  கிழக்குத் தீமோர் தரும் பாடம்
Posted by: Kanani - 08-17-2004, 03:51 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (2)

<b>சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம் டி.சிவராம் (தராக்கி)</b>

இலங்கையில் இன்று நிரந்தர அமைதி ஏற்படுமா, இல்லையா என்பதற்கு புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் ஒரு வரலாற்று உரை கல்லாக அமைந்துள்ளது. இதில் காணப்படும் தமிழர் சுயநிர்ணய உரிமை பற்றிய அடிப்படை கருத்தையே சிங்கள தேசம் பெரும் அச்சுறுத்தலாகவும் நசுக்கப்படவேண்டிய சவாலாகவும் கருதி செயல்படுகின்றது.

இலங்கை தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறிய கணத்திலிருந்து இன்றுவரை இத்தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை சிங்கள தேசத்திடம் ஒப்புக்கொடுக்கவில்லை என்ற வரலாற்று உண்மையின் அடித்தளத்திலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானமும் (1976) சுதந்திரத் தமிழீழ அரசை அமைப்பதற்கான சர்வஜன வாக்காக தமிழர் தாயகத்தில் 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் 1985ஆம் ஆண்டு கூட்டணியும் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் ஒருமித்துப் பிரகடனப்படுத்திய திம்புக் கோட்பாடுகளும் புலிகள் இன்று முன்வைத்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டமும் அமைந்துள்ளன.

எமது சுயநிர்ணய உரிமை சரியாக அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு அரசியல் தீர்வும் எம்முடைய சமூகத்தின் வேலையில்லாப் பிரச்சினை தொடக்கம் நிலப்பயன்பாட்டுச் சிக்கல்கள் வரை எதையுமே தீர்க்கக்கூடிய நிரந்தர அடிப்படையாக இருக்க முடியாது என்ற உண்மையை பல படித்த தமிழர்கள் கூட புரிந்து கொள்ளாது உளறித் திரிகின்றனர்.

எமது சுயநிர்ணய உரிமை என்பது சிங்கள தேசம் கற்பனை செய்வது போல இலகுவாகத் து}க்கியெறிந்து விடக்கூடிய விடயமல்ல. ஏனெனில், சர்வதேச சமூகம் அண்மைக் காலங்களில் சுய நிர்ணய உரிமையை புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் நடைமுறையாக ஏற்கத் தலைப்பட்டுள்ளது. போன கிழமை இது தொடர்பாக நாம் சூடானின் அரசியலைப் பற்றிப் பார்த்தோம்.

இன்று கிழக்குத் தீமோரைப் பற்றிச் சுருக்கமாக நோக்குவோம்.

கிழக்குத் தீமோரின் சுயநிர்ணய உரிமைக்கான வரலாற்றுக் காரணங்களைப்போல எமக்கும் ஆணித்தரமான காரணங்கள் உண்டு என்பதை அரசியல்வாதிகள் எமது மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய வகையில் களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டும்.

கிழக்கு தீமோருக்கு அவுஸ்திரேலியாவைப்போல இந்தியா எமக்கு அமைந்துள்ளது. இதில் நாம் கற்கவேண்டிய பாடங்கள் பல எமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுப்பதைத் தடுக்க பாசிச அரசுகள் எவ்வாறு அமெரிக்கா, பிரித்தானிய ஆகியவற்றின் துணையோடு கைக்கூலிகளையும் ஒட்டுப்படைகளையும் (Pயசய ஆடைவையசநைள) எவ்வாறு கட்ட விழ்த்துவிடுகின்றன என்பதையும் கிழக்குத் தீமோர் எமக்குக் கற்றுத் தருகின்றது. மேற்கத்தேய நாடுகள் பேசும் மனித உரிமை, ஜனநாயகம், நல்லாட்சி எல்லாவற்றையும் விட அவற்றிற்கு எண்ணெய் மற்றும் கனி வளங்கள், கடற்பாதைகள் என்பவையே முக்கியமானவை என்ற பாடத்தையும் நாம் கிழக்குத் தீமோரிலிருந்து தெளிவாகக் கற்றுக் கொள்ளலாம்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

தீமோர் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையில் அமைந்துள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாகும். அவுஸ்திரேலியா தனது பாதுகாப்புக்கு இன்றியமையாத ஒரு இடமாக தீமோரைக் கருதி வருகின்றது. அது மட்டுமின்றி இருநாடுகளுக்குமிடைப்பட்ட கடற்பகுதியில் இருக்கின்ற பெரும் எண்ணெய் வளத்தை தனதாக்கிக் கொள்வதிலும் அவுஸ்திரேலியா குறியாக இருக்கின்றது. கிழக்குத் தீமோரின் விடுதலைப்போராட்டம் அவுஸ்திரேலியாவினுடைய இவ்விரு நலன்களின் அடிப்படையில் பல இன்னல்களை சந்தித்தது. சுதந்திர கிழக்குத் தீமோருடைய இறைமையை இந்த அடிப்படையிலேயே அவுஸ்திரேலியா மட்டுப்படுத்த முனைகின்றது.

13ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தீமோரின் வரலாறு பற்றி அறியப்படவில்லை. சீன வர்த்தகர்களும் தமிழரும் பண்டைக்காலத்தில் அங்கு கிடைக்கப்பெறும் சந்தன மரங்கள், தேன், மெழுகு ஆகியவற்றை பெறுவதற்கு தீமோருக்குச் சென்று வந்தனர். தீமோர் தீவில் பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடிகள் வாழுகின்றனர். அந்நாட்டில் பெரும் பகுதி மலைப்பாங்கான பிரதேசமாகும்.

பெரும்பான்மையான மக்கள் சேனைப் பயிர்ச் செய்கை விவசாயம் ஆகியவற்றிலே ஈடுபட்டிருக்கின்றனர். கரையோரப் பகுதியிலுள்ள சிலர் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பான்மையான மக்கள் எழுத்தறிவில்லாதவர்களாகவும் புராதன மதங்களை பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துக்கேய வர்த்தகர்கள் தீமோர் தீவில் 1509ஆம் ஆண்டு காலடி வைத்தனர்.

இதன் பின்னர் 1556இல் அவர்கள் அங்கு தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டினர். இந்தோனேசியாவில் 17ஆம், 18ஆம் நு}ற்றாண்டுகளில் ஒல்லாந்தர் கால் வைத்த பின்னர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான ஆச்சே மற்றும் தீமோர் தொடர்பாக போர்த்துக்கேயர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.

இதன் இறுதியில் 1859ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீமோர் தீவை கிழக்கு மேற்கு என பிரித்து எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் 1975ஆம் ஆண்டுவரை கிழக்குத் தீமோர் போர்த்துக்கலின் இறைமைக்கு உட்பட்ட ஒரு பிராந்தியமாக இருந்து வந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர் தீமோர் தீவைக் கைப்பற்றினர். அவுஸ்திரேலியாவின் மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றுவதற்கான ஒரு முன்தளமாக அவர்கள் தீமோரில் போர் தயாரிப்புகளைச் செய்யலாயினர். இதை முறியடிக்க அவுஸ்திரேலியா தனது விசேட படையினர் 250 பேரை அனுப்பி அங்கு ஜப்பானியருக்கு எதிரான கெரில்லாப் போரொன்றைத் தொடங்கியது. இதன் மூலம் தமது நாட்டின் மீது ஜப்பான் திட்டமிட்டபடி உரியநேரத்தில் படையெடுக்காது தாமதமடைய வைக்கலாம் என அவுஸ்திரேலியர் எதிர்பார்த்தனர்.

ஜப்பானியருக்கு எதிரான கெரில்லாப் போரில் அவுஸ்திரேலியருக்குத் துணையாக பல்லாயிரக்கணக்கான கிழக்குத்தீமோர் மக்களும் இணைந்து போராடினர். இதில் அறுபதாயிரம் கிழக்குத் தீமோர் மக்கள் உயிரிழந்தனர்.

1974ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டில் ஒரு இராணுவச்சதிப்புரட்சி நடைபெற்றது. இதன் காரணமாக அந்நாடு அங்கோலா போன்ற தனது காலனிகளில் வைத்திருந்த பிடி தளரத் தெடங்கிற்று. இந்த சந்தர்ப்பத்தைப் பன்படுத்தி கிழக்குத் தீமோரிலும் அதன் சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டும் நோக்குடன் படித்த இடதுசாரி இளைஞர்கள் பிரேட்டிலின் என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள்.

அதே காலப்பகுதியில் தீமோர் ஜனநாயக யுனியன் என்ற கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தாம் கிழக்குத் தீமோரை தனிநாடாக பிரகடனப்படுத்தப் போவதாகவும் ஆனால், இந்தோனேசியாவின் பாதுகாப்புக்குக் குந்தகம் இல்லாத வகையிலும் அதன் கேந்திர மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஏற்ற வகையிலும் தமது நாடு தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொள்ளும் என இந்தோனேசிய அரசுடன் கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தன. சரியான பதில் கிடைக்காத நிலையில் பிரேட்டிலின் அமைப்பு தேசங்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டின் அடிப்படையில் கிழக்குத் தீமோரை ஒரு தனிநாடாக 1975ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பிரகடனப்படுத்திற்று. இதைத்தொடர்ந்து அவ்வமைப்புக்கும் இந்தோனேசிய உளவுத் துறையின் பின்னணியில் இயங்கிய ஒரு குழுவுக்குமிடையில் ஏற்பட்ட மோதலைச் சாட்டாக வைத்து 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியப்படைகள் கிழக்குத் தீமோர் மீது படையெடுத்தன. 1976ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்குத் தீமோர் இந்தோனேசியாவின் 27ஆவது மாகாணமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் கிழக்குத் தீமோரில் தனக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் பூண்டோடு அழிக்கும் நோக்கில் இந்தோனேசிய இராணுவம் ஒரு இலட்சம் மக்களுக்கு மேல்கொன்று குவித்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டனர். மேலும் பல்லாயிரம் மக்கள் அகதிகளாக வீடு வாசல்களை விட்டு மேற்குத் தீமோரில் தஞ்சம் புகுந்தனர்.

இந்தோனேசிய படைகளுக்கு எதிராக ஆரம்பத்தில் பிரேட்டிலின் விடுதலை அமைப்பின் படைப்பிரிவான பலின்ரின் வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு எந்தவித வெளிஉதவிகளும் இருக்கவில்லை. கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத்தின் இராணுவப் பிரிவை போர்த்துக்கீச இராணுவத்தில் பணியாற்றி வெளியேறிய பல அதிகாரிகள் இணைந்து உருவாக்கினர். போர்த்துக்கீச இராணுவம் ஆங்காங்கே விட்டுச் சென்ற மற்றும் களவாடப்பட்ட ரைபிள்களை கொண்டே விடுதலை இயக்கத்தின் இராணுவம் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. அத்துடன் மரபு வழி இராணுவத்திற்குரிய பயிற்சிகளின் அடிப்படையிலேயே விடுதலைப்போராளிகள் உருவாக்கப்பட்டனர்.

ஆனால் இந்த போராட்டத்தை இந்தோனேசியப் படைகள் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகளின் ஆலோசனைக்கு இணங்க மிகக் கொடூரமான முறைகளின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்குத் தீமோர் கெரில்லாக்கள் பலமாக இருந்த மலைப்பிராந்தியங்களில் அவர்களை தனிமைப்படுத்தி அழிப்பதற்காக இந்தோனேசிய இராணுவம் உணவு, மருந்து ஆகியவை உட்பட்ட முற்றுமுழுதான பொருளாதாரத் தடையை போட்டது. கால்களின் வேலி என அழைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் மலைச் சாரல்களில் இருந்த பல நு}ற்றுக் கணக்கான கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தோனேசியப் படையினரால் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். இவர்கள் கம்பியால் அடைக்கப்பட்ட இராணுவ வலயங்களுக்கு உட்பட்ட அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

தேச, வர்க்க விடுதலைக்காக பேராடும் கெரில்லாக்கள் தமது மக்களிடையே கடலில் மீன்கள் வாழ்வதைப் போன்று செயல்படவேண்டும் என சீனப் புரட்சித் தலைவர் மாசேதுங் கூறுகிறார்.

எனவே, தண்ணியை இறைத்துவிட்டால் அதில் வாழும் மீன்கள் இறந்து விடும் என்ற அமெரிக்க, பிரித்தானிய எதிர் கெரில்லா போரியல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இவ்வகையான கொடூரமான நடவடிக்கைகளை இந்தோனேசிய இராணுவம் மேற்கொண்டது.

இந்தோனேசியப் படைகளுக்கு அமெரிக்க, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகள் நவீன எதிர் கெரில்லா போரியல் முறைகளில் தொடர் பயிற்சி வழங்கின என்பது இங்கு குறிப்படப்பட வேண்டிய விடயம்.

கிழக்குத் தீமோர் மக்களிடையே காணப்பட்ட பல்வேறு வட்டார மற்றும் மொழி, மத பிரிவுகளையும் முரண்பாடுகளையும் இந்தோனேசிய இராணுவம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான பல மோசமான ஒட்டுப்படைகளையும் கைக்கூலிகளையும் உருவாக்கியது. இந்த ஒட்டுப்படைகள் தாம் விரும்பயபடி அட்டூழியங்களில் ஈடுபட்டன. கிழக்குத் தீமோர் சமூகத்தில் காணப்பட்ட மேற்படி முரண்பாடுகளை இந்தோனேசிய இராணுவம் மிக நுட்பமாகப் பயன்படுத்தியதன் மூலம் அந்நாட்டின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஒருமித்த கருத்தை பிரேட்டிலின் அமைப்பு அரசியல் hPதியாக கட்டியெழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டது. (கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பலர் முக்கிய பங்காற்றினர் என்பதும் குறிப்படத்தக்கது)

கிழக்குத் தீமோரில் இந்தோனேசிய இராணுவம் 1975ஆம் ஆண்டின்பின் செய்த மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் என்பது போன்ற அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி மேலைத்தேய ஊடகங்கள் அந்த நேரத்தில் கண்டு கொள்ளவில்லை.

இதற்குக் காரணம் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பரவுவதை தடுப்பதற்கு அக்காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு இருந்தமிக முக்கியமான கூட்டாளி நாடாக இந்தோனேசியா அமைந்திருந்ததே ஆகும். அத்துடன் மாக்சீய இயக்கமான கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கம் வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இன்றியமையாதென கருதப்பட்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் சோவியத் யுூனியனின் கைக்குள் போய்விடும். எனவே கிழக்குத் தீமோரை இந்தோனேசியாவின் மிகக் கொடூரமானபடிக்குள் வைத்திருப்பதையே அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான அவுஸ்திரேலியாவும் விரும்பின. இதன் காரணமாக கிழக்குத் தீமோர் விடுதலைப்போராட்டத்தையும் அந்தப் போராட்டத்தையொட்டி இந்தோனேசிய இராணுவம் அங்கு செய்த பயங்கரமான செயல்களையும் மேற்கத்திய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

1985ஆம் ஆண்டளவில் தீமோர் விடுதலை இயக்கம் தனது மாக்சீய நிலைப்பாட்டிலிருந்து விலகி முழுமையான தேசிய விடுதலைக் கோட்பாட்டினைக் கொண்ட ஒரு அமைப்பாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டது. இதன் மூலம் கிழக்குத் தீமோர் விடுதலை தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் அதன் மேற்குலக கூட்டு நாடுகளுக்கும் இருந்த அச்சங்களை அகற்றலாமென அது எண்ணிற்று.

1990ஆம் ஆண்டில் சோவியத் யுூனியன் வீழ்ச்சியடைந்ததோடு உலக அரசியல் நிலமைகள் முற்றாக மாறின. சோவியத் யுூனியன் தென்கிழக்காசியாவில் காலு}ன்றுவதைத் தடுத்திடுவதற்கான ஒரு தளமாக இந்தோனேசியா பேணப்படுவதற்கான தேவை அமெரிக்காவிற்கு இல்லாமல் போனது. அத்தோடு இந்தோனேசியாவின் அமெரிக்கச் சார்பு சர்வாதிகாரியான சுகார்த்தோவும் பதவி இறங்க வேண்டியதாயிற்று. இக்காலகட்டத்திலேயே கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி மேலைத்தேய ஊடகங்கள் கவனமெடுக்கத் தொடங்கின. 1991ஆம் ஆண்டு அங்கு ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது இந்தோனேசிய இராணுவம் செய்த படுகொலையொன்று பெரியளவில் மேலைத்தேய ஊடகங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் 1993ஆம் ஆண்டு கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத் தலைவரை இந்தோனேசிய படைகள் கைது செய்து 20வருட சிறைத்தண்டனை வழங்கின.

1998ஆம் ஆண்டு சுகார்த்தோவை அடுத்துப் பதவிக்கு வந்த இந்தோனேசிய ஐனாதிபதி கபீப கிழக்குத் தீமோரில் அதன் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பதற்கான ஒரு சர்வஐன வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அறிவித்தார். இதன் பின்னணியில் அவுஸ்திரேலியா செயற்பட்டதாகக் கருத இடமுண்டு. அதாவது கிழக்குத்தீமோருக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைக் கொடுத்து அந்நாட்டையும் அதன் கடலில் காணப்படும் எண்ணெய் வளங்களையும் நிரந்தரமாகவே தன் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என அவுஸ்திரேலியா கருதியதாலேயே அது கிழக்குத் தீமோர் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென இந்தோனேசிய அரசின் மீது அழுத்தம் கொடுத்தது. அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மையாக இருந்த சுகாத்தோவின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த அரசுகள் கிழக்குத் தீமோரின் வளங்களை அவுஸ்திரேலியா பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடலாம் என அவுஸ்திரேலியா பயந்ததும் இதற்குமுக்கிய காரணமாகும். 1999ஆம் ஆண்டு மே மாதம் கிழக்குத் தீமோரின் சுயநிர்ணய உரிமையை வழங்குவது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் போர்த்துக்கலும் இந்தோனேசியாவும் கைச்சாத்திட்டன. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை சர்வஐன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக கிழக்குத் தீமோரில் இந்தோனேசிய இராணுவத்துடன் செயற்பட்டு வந்த ஒட்டுப்படைகள் அனைத்தும் வாக்கெடுப்புக்கு முன்னர் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் இணங்கப்பட்டது.

எனினும் சர்வஐன வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபைமுற்பட்ட வேளையில் இந்தோனேசியப் படைகளின் உதவியோடு ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோரில் பயங்கர அழிவு நடவடிக்கைகளில் இறங்கின. இதனிடையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எண்பது சதவீதமான கிழக்குத் தீமோர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து மேற்படி ஒட்டுப்படைகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவைப்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இவ்வொட்டுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். கிழக்குத் தீமோரின் தலைநகரமான டிலி நாசமாக்கப்பட்டது. ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்த நிலமைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக 99 செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் தலைமையில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும்படையொன்று கிழக்குத் தீமோரில் சென்றிங்கியது. இதன் பின்னர் அங்கு ஒழுங்கு ஓரளவு நிலைநாட்டப்பட்டது. ஆனால் கிழக்குத் தீமோர் விடுதலைப் படை நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது ஆயுதங்களைக் களையவேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டது. இதை அதன் சில தளபதிகள் எதிர்த்தபோதும் எதுவும் செய்ய முடியாது இருக்கின்றனர்.

1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் கிழக்குத் தீமோருக்கான இடைக்கால நிருவாகமொன்று அமைக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத்தலைவர் சனானா குஸ்மாவோ ஐனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். தற்போது கிழக்குத் தீமோரின் எண்ணெய் வளங்களைதான் பயன்படுத்துவதற்கும் அந்நாட்டின் அரசியலையும் பாதுகாப்பையும் தன்கைக்குள் வைத்திருப்பதற்கும் அவுஸ்திரேலியா முயற்சி செய்து வருகின்றது.


நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (15.08.04)

Print this item

  என் அம்மாவுக்கு...!
Posted by: tamilini - 08-17-2004, 11:55 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

<img src='http://www.lowcostprints.com/Merchant2/ab/ab60043_t.jpg' border='0' alt='user posted image'>
<b>
என் அம்மாவுக்கு....!</b>

ஆண்டுகள் ஐம்பதென்ன
ஐயாயிரம் சென்றாலும்
நான் உன் குழந்தை...
இவ்வுலகில் நான் கண்ட
முதல் வழிகாட்டி....
உன் உதிரத்தை
உணவாக்கி எனக்கு ஊட்டியவள் நீயம்மா...!

ஆளாக நான் வளர
எனக்கு ஆசான் நீயம்மா...
ஆயிரம் பேருக்கு நான் உறவானாலும்...
என் முதல் உறவு நீயம்மா...
உயிராக என்னை கொண்டாய்...
உணர்வுகளில் களந்தாய்...
உலக உண்மைகளை உணர்த்தினாய்..

உலகை நான் பார்க்க..
எனக்கு ஒளியாக மாறினையே...
கண்களில் விளக்கு வைத்து
என்னை காத்திட்டாய்.
வாழ்வினில் நானுயர..
வலிகள் பல நீ கொண்டாய்..
உலகில் அம்மா என்ற உறவை..
எந்த உறவாலும்..நிறைக்க முடியாது...
நீ தான் உனக்கு சமம் அம்மா.............!

Print this item

  MP3 தகவல் தெரிந்தால்
Posted by: tamilini - 08-17-2004, 11:09 AM - Forum: கணினி - Replies (2)

எனக்கு MP3 player பற்றிய சில தகவல்கள் தேவை...அதற்கான கோப்புக்கலை எங்கே பெற்றுக்கொள்ள அல்லது தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து எதவ முடியுமா......?

Print this item

  மார்லன் பிராண்டோ
Posted by: AJeevan - 08-17-2004, 05:01 AM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.kumudam.com/theeranadhi/010804/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
<b>மனிதனெனும் வகையில் மார்லன் பிராண்டோ ஒரு தேவன்
நடிகனெனும் வகையில் அவன் ஒரு பிசாசு</b>
_பெர்னார்டோ பெர்ட்டுலூசி

<img src='http://www.kumudam.com/theeranadhi/010804/pg1a.jpg' border='0' alt='user posted image'>
புறவுலகிலிருந்து விலகி நான்கு ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த மார்லன் பிராண்டோ, தன்னிலிருந்து உலகைத் தூரத் தனிமைப்படுத்தி விட்டு, 2004 ஜூலை 4 அன்று தனது எண்பதாவது வயதில் மரணமுற்றிருக்கிறார்.

'நடிப்பை நான் வெறுக்கிறேன்' எனத் தனது இறுதிக் காலத்தில் சொன்னார் மார்லன் பிராண்டோ. 'உலகிலேயே எந்தப் புதிருமற்று சாதாரணமாக நம்மால் புரிந்துகொள்ள முடிவது நடிப்பைத்தான்.

நாம் பிறமனிதரிடம் எதனையேனும் வெளிப்படுத்த நினைக்கும் போதும், மறைக்க நினைக்கும் போதும், ஏமாற்ற நினைக்கும் போதும் உடனடியாகச் செய்வது நடிப்பதைத்தான்' என்றார் 'மார்லன் பிராண்டோ எமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்' எனத் தமது அஞ்சலியில் தெரிவித்திருக்கிறார் ஜாக் நிக்கல்ஸன்.

ஹாலிவுட் ஸ்டுடியோ அமைப்பின் ஆதிக்கத்திலிருந்தும், வித்தியாசமற்று, வரைமுறைக்குட் பட்டு, காலத்தின் வன்முறைக்கு உட்பட்டு வெளிப்படும் ஹாலிவுட் நடிப்புப் பாணியிருந்தும் தனக்குப் பின் வந்த நடிகர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததாக பிராண்டோவின் பாணியிருந்தது.

அவர் வழி வெளிப்பட்ட நடிகனின் கலக பிம்பம், உலககெங்குமுள்ள திரைப்பட ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டது. உடல் மொழியும் உளவியலும் இணைந்து, பாத்திரத்தின் உள் நுழைந்து அதனது ஆன்மாவைத் தேடிச் செல்லும், பாத்திரமேயாகும் பாணி பிராண்டோவின் பாணி.

ரஷ்ய நாடகாசிரியன் ஸ்டானிஸ் லாவஸ்க்கியின் வழி வந்தடைந்த பாணி. அடிக்கடி மெல்லச் செறுமிக் கொள்வதன் வழியும், யதேச்சையாக உடலின் மீது பரவும் கைகளின் நகப் பிராண்டலின் வழியிலும் பாத்திரத்தின் உளவியலுக்குள் நுழைந்து, அதனைப் பார்வையாளன் முன்பு வாழ்ந்து காட்டியவர் மார்லன் பிராண்டோ.

அவர் இல்லையென்றால், 'டாக்ஸி டிரைவர்' ரோபர்ட் டீ நீரோவும், 'ப்ளு ஓவர் குக் குஸ் நெஸ்ட்' ஜாக் நிக்கல்ஸனும், 'டெவில்ஸ் அட்வகேட்' அல் பாச்சினோவும் இல்லையென்பார்கள்.

தமிழ் சினிமாவில் 'நாயகன்' வேலுநாயக்கரும் (காட்பாதர்) 'ஆளவந்தான்' (அபோகலிப்ஸ் நவ்) நந்துவும் இல்லையென்பதும் நிஜம். இவை பிராண்டோ எனும் கலை ஆளுமையின் சர்வவியாபகத்துக்குச் சாட்சியமாக நமக்கு முன் இருக்கிறது.

1924 ஏப்ரல் 3 அமெரிக்காவிலுள்ள நெப்ராஸ்காவில் மார்லன் பிராண்டோ பிறந்தார். அவரது தந்தை ஒரு நாடோடி வியாபாரி. தாய், தொழில்முறை நடிகை. இருவருமே மிதமிஞ்சிய குடியில் ஆழ்ந்தவர்கள்.

தனது பதினாலாவது வயதில் படைத் துறைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார் பிராண்டோ. ஒழுக்க நடவடிக்கையின் அடிப்படையில் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டார். நடிகையான தனது அன்னையின் விருப்பப்படி தனது பதினெட்டாவது வயதில் சமூக ஆய்வுக்கான புதிய நடிப்புப் பள்ளியில் சேர்ந்தார்.

ஸ்டானிஸ் லாவஸ்க்கியைக் கற்றார். அமெரிக்க நாடகாசிரியர் டென்னஸி வில்லியம்ஸின் 'எ ஸ்டீரீட் கார் நெய்ம் டு டிஸயர்' எனும் நாடகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யும் மனம் பிறழ்ந்தவனின் பாத்திரத்தினை ஏற்று நடித்தார்.

எலியா காசானின் இயக்கத்தில் இந்த நாடகம் திரைப்படமாகியபோது, அந்தத் திரைப்படத்திலும் நடித்தார். அலட்சியமும் வன்முறையும் அமெரிக்க சமூக மதிப்பீடுகள் குறித்த நிராகரிப்பும் கொண்ட பாத்திரங்களை ஏற்ற பிராண்டோ அமெரிக்க இளைஞர்களின் ஆதர்சமானார்.

1950_ல் 'தி மென்' எனும் படத்தில் நடிக்கத் துவங்கிய பிராண்டோவின் திரைப்பட வாழ்வில் ஐம்பது ஆண்டு காலத்தில் முப்பத்து ஒன்பது திரைப்படங்களிலேயே அவர் நடித்துள்ளார்.

2001_ல் அவரது இறுதிப் படமான 'தி ஸ்கோர்' வெளியானது. 'தி வொன் ஐடு ஜேக்' எனும் திரைப்படத்தினை 1961_ஆம் ஆண்டு இயக்கியிருக்கிறார்.

ஐம்பதுகளில் வெளியான 'தி ஸ்டிரீட் கார் நெய்ம் டு டிஸயர்', 'விவா ஜபாட்டா', 'தி வாட்டர் பிரண்ட்' போன்ற படங்களையடுத்து, எழுபதுகளில் வெளியான 'காட் பாதர்', 'அபோகலிப்ஸ் நவ்', 'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்' போன்ற படங்களே அவருக்கு உலக அளவில் விமர்சகர்களிடமிருந்தும் சினிமாப் பார்வையாளர்களிடமிருந்தும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

விதிவிலக்காக 1996_ல் வெளியான பிராண்டோவின் 'டான் ஜுவான்' அவரது ரசிகர்களுக்கு மறக்கமுடியாத காதல் படமாக அமைந்தது. இடைப்பட்ட காலங்களில் அவர் நடித்த படங்கள் அவரது திறமையை வீணடித்த படங்கள்.

பிராண்டோ தனது முப்பத்து மூன்றாவது வயதில் திருமணம் செய்துகொண்டார். மூன்றுமுறை திருமணம் செய்து கொண்ட அவர், மரணமடையும்போது தனிநபராகவே மரணமுற்றார். அவ்வேளை அவர் திருமண பந்தத்தில் இல்லை. ஒன்பது குழந்தைகளும் பல வளர்ப்புக் குழந்தைகளும் அவரது வாரிசுகளாக இருக்கிறார்கள்.

அவரது ஒரு மகன், தனது ஒன்றுவிட்ட சகோதரியின் காதலனை கொன்றதற்காகக் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான். காதலனைப் பறிகொடுத்தத் துயரில் பிராண்டோவின் மகள் பிற்பாடு தற்கொலை செய்துகொண்டாள்.

மார்லன் பிராண்டோ எனும் ஆளுமையை முற்றிலும் நிலைகுலைந்து போகச் செய்தன நடந்த சம்பவங்கள்.

வழக்கு மன்றத்தில் சாட்சியமாக பிராண்டோ தோன்றியபோது,
"நான் எனது குழந்தைகளை நன்றாகவே வளர்த்தேன். அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தேன்" என்று மட்டுமே சொன்னார்.

உடைந்துபோன மனிதனாக அவர் ஆனார். இதன் பின் வெளியுலகிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது லாஸ் ஏஞ்ஜல்ஸ் வீட்டின் உயர்ந்த, மூடிய கதவுகளின் பின்னும், தாகித் தி எனும் பூர்வகுடி இந்தியப் பிரதேசத்தில் அமைந்த தனித்த வீட்டிலுமே தனது இறுதிக் காலங்களைக் கழித்தார் 'அம்மா எனக்குச் சொன்ன பாடல்' எனும் தனது சுயசரிதையை 1996_ஆம் ஆண்டு பிராண்டோ எழுதி வெளியிட்டார்.

அவரது உடல் ஜூலை மாதம் ஏழாம் திகதி குடும்ப நிகழ்வாக ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. அதிகமும் புறநிகழ்வாக இல்லாமல் இது போலவே நடந்த இன்னொரு அமெரிக்க சினிமா ஆளுமையின் உடல் அடக்கம் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கினுடையது.

பிராண்டோவைப் போலவே வெளியுலகத் தொடர்புகளிலிருந்து விலகி, உயர்ந்த மதில் கொண்ட மாளிகையில் வாழ்ந்தவர் குப்ரிக். ஒரு வகையில் மிக வெளிப்படையாகத் தமது படைப்புகளை ஆரவார உலகின் முன் வைத்த இக்கலைஞர்கள் இருவரும்_தமது வாழ்வை உலகை விலக்கிவைத்த வகையில் முடித்துக் கொண்டது,

நடிப்புக்கும் நிஜத்துக்கும் இருந்த பொய்யான உறவை ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டதனால்தானோ என்பது விடை காணவியலாத கேள்வியாகவே இருக்கிறது.



பிராண்டோ நடித்த 'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்' படம், திரைப்படம் குறித்த நமது அனைத்து எண்ணங்களையும் மாற்றியமைத்த படம்.

இனி இதுபோல் இன்னொரு படம் வருவதற்கான சாத்தியமேயில்லை என 'நியூயார்க்கர்' சஞ்சிகை விமர்சகரான பாவ்லின் கேயிலினால் வியந்து சொல்லப்பட்டது.

'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்' இயக்குநர் பெர்ட்டுலூசி ஒரு மார்க்சியராவார். காதலைத் தேடிய, வலி கொண்ட ஒரு மத்திய வயது ஆணும், ஒரு இளம் பெண்ணும், முற்றிலும் அன்னியர்களாகி உடலுறவில் திளைப்பதும், அந்த உடலுறவு தரும் நெருக்கத்தில் தாம் அருகருகில் வருவதையுணர்ந்து, ஆண் பெண்ணைத் தேடிச் செல்பவனாக ஆக, பெண் அவனை விட்டுவிலகி ஓடி, இறுதியில் ஆணின் மரணத்துடன் முடியும் கதை 'தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்'. கட்டற்ற காதலையும் வாழ்வையும் அதனது உளவியல் உடல் பதட்டத்தையும் திரைக்கதையில் அகப்படுத்த முடியும் என்பதற்குச் சான்றாக, இப்படம் இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பெர்ட்டுலூசி தன்னை பாலியல் பலாத்காரத்துக்கும் உளவியல் பலாத்காரத்துக்கும் உட்படுத்திவிட்டார் எனப் பின்னாளில் சொன்னார் பிராண்டோ.

இப்படம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை தன்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார் எனவும் தானே முன் வந்து பிராண்டோவுடன் பேச முயற்சித்தேன் எனவும், பெர்ட்டுலூசி குறிப்பிடுகிறார்.

ஒரு வகையில் பற்பல காதலியரைக் கொண்டிருந்த, மனைவியரை விவாகரத்துச் செய்த பிராண்டோவின் சொந்த வாழ்வாக, இப்படம் அமைந்திருக்கிறது எனவும், இப்பாத்திரத்திற்காக அவர் தன்னையே மறுபடி மறுபடி தோலுரித்துக் கொண்டார் என்றும் சொல்கிற ஐரோப்பிய விமர்சகர்கள் உண்டு.

மனைவியினால் துரோகத்திற்கு ஆட்பட்ட மனிதன்; மனைவியின் காரணமற்ற தற்கொலைக்குப் பிறகு, அவளது உடலின் முன்பு அமர்ந்தபடி தனிமையில் அரற்றும் மனிதன்; குளியலறைத் தொட்டியின் அருகில் நின்றபடி, சுவற்றில் அணைத்தபடி, வெற்றுத் தரையில் புரண்டபடி எனக் குற்றமற்று உடலுறவில் ஈடுபடும் மனிதன்; இருவரது அடையாளமும் தேவையில்லை என ஒப்புக் கொண்டுவிட்டு, பிற்பாடு இளம் பெண்ணைத் தேடித் தேடி அலைந்து திரியும் மத்திய வயது மனிதன் என, உலக சினிமா நடிகர் எவருக்குமே கிடைத்திராத ஒரு உக்கிரமான பாத்திரத்தில் இப் படத்தில் வாழ்ந்திருக்கிறார் பிராண்டோ.

'ஓர் ஆண் தனது வாழ்வின் சம்பாத்யத்திற்கு என்ன செய்கிறான் என்பது பிரச்சினையில்லை' என்பார் 'காட் பாதர்' டான் கோர் லியோன் பிராண்டோ. 'காட் பாதர்' திரைப்படம் மூன்று பாகங்களில் வெளியானது. அந்தத் திரைப்படங்கள் பிராண்டோவை அடியற்றி, ராபர்ட் டுவெல், ராபர் டி நீரோ, அல் பாச்சினோ, ஆன்டி கர்ஸியா போன்ற திறனும் புகழும் பெற்ற நடிகர்களை உருவாக்கியது.

அரசியல், அறிவியல், சமூகம், விசுவாசம், குடும்ப உறவுகள், வாழ்வின் நிச்சயமின்மை, அமெரிக்க வியாபார நிறுவனங்கள் எனப் பல விசயங்களைப் பேசியதாக 'காட் பாதர்' குறித்த மூன்று படங்களும் அமைந்தன. மாபியாவின் வாழ்வுக்கும் மீறலுக்கும் கொலைகளுக்கும் கூட ஒழுக்கங்கள் நியதிகள் இருந்தன.

குடும்ப உறவும் ஆண் மேலான்மையும், பலமுள்ளவனை அடிபணிந்து பலமற்றவன் ஒப்புக்கொள்வதும் என அவர்களது கட்டுக்கோப்பான வாழ்வின் வன்முறையையும், அதனுள் இயங்கும் அன்பும் காதலும் கொண்ட உறவுகளையும் 'காட்பாதர்' சொல்லியது. 'காட்பாதர்' படத்தின் முதலாவது பாகத்திலேயே மாபியா 'டானா'க இருந்த மார்லன் பிராண்டோ சுடப்பட்டு, கொஞ்சம் நாட்கள் பிழைத்திருந்து மரணமடைகிறார்.

நாவலாசிரியர் கான்ராட் ருக்ஸ் தனது 'ஹார்ட்ஸ் ஆஃப் டார்கனெஸ்' நூலில் முன் வைத்த காங்கோ அனுபவத்தை வியட்நாமில் பொருத்திப் பார்த்ததாக அமைந்த திரைப்படம், 'அபோகலிப்ஸ் நவ். 'காட்பாதர்' படத்தை இயக்கிய கொப்போலோதான் இப்படத்தையும் இயக்கினார்.

அமெரிக்காவினால் வியட்நாமுக்கு அனுப்பப்பட்ட கலோனல் குர்ட்ஸ் எனும் படையதிகாரி வியட்நாமில் ஒரு தனித்த பிரதேசத்தை தன் வசப்படுத்தி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக்கொண்டு, கொலை வெறி கொண்ட ஒரு உன்மத்தனின் மனநிலையுடன் வாழ்கிறான்.

வன்முறைச் சுழல், கொலைச்சுழல் போன்றன தப்ப முடியாது, அதிகார வேட்கையினால் கடுமையான சந்தோசத்தை மனிதனுக்கு வழங்கிவிடும் என்பதை இந்தப்படம் பார்வையாளனுக்குரிய செய்தியாக முன் வைக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகளின் கைகளை தனியே வெட்டி வரிசையாக வைத்துப் பார்க்கப் பழகினால் கொலை செய்வதிலுள்ள குற்றமனம் இல்லாது போய்விடும் எனச் சொல்கிற மனம் படைத்தவனாக, தீவு மனிதனாக 'அபோகலிப்ஸ் நவ்' படத்தில் பிராண்டோ தோன்றியிருக்கிறார். கொழுத்த கழுத்தும் முழுக்க மழித்த மொட்டையும், மொட்டைத் தலையைச் சுற்றித் தொட்டு நழுவும் கையும் என மங்கலான வெளிச்சத்தில், சில கணங்களே அவரது மாயத்தன்மை பெற்ற முகம் வெளிப்பட்டு இருளில் மறைவதாக இந்தப் படத்தின் பிராண்டோ சம்பந்தமான காட்சிகள் அமைந்திருக்கும். இந்தத் திரைப்படம் வெட்டப்படாத பகுதிகளோடு, இன்னும் கொஞ்சம் பிராண்டோவின் உக்கிரமான பிம்பத்துடன் 2000_த்தில் வெளியானபோது, அதற்காகவே இப்படத்தின் டிஜிட்டல் வீடியோப் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

இந்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறான ஒரு முதியமனிதனின் குதூகலமும் நேசமும் கொண்ட காதல் வாழ்வைச் சித்தரிக்கும் படம் 'டான் ஜூவான்'. ஜானி டெப் நவீன காஸினோவாக நடிக்க, கண்ட பெண்களின் மீதெல்லாம் காமுறும் அந்த இளைஞனின் காதலுக்கும் காமத்துக்கும் உளவியல் அடிப்படைகளைத் தரும் உளப் பகுப்பாய்வனாக பிராண்டோ நடித்தார்.

இப்படத்தில் தனது நூற்று முப்பத்து மூன்று கிலோவிலான பருத்த உடலுடன் மனைவியுடன் அவர் புரியும் காதல் காட்சி நம்மை பரவசத்தின் விளிம்புக்கு இட்டுச் செல்லும் தன்மை படைத்ததாகும். கடைவாயில் பஞ்சுப் பொதியை அடக்கியபடி, அடிக்கடி மெல்லத் தொண்டையைச் செறுமியபடி, உதடு பிரியாமல் தமது செல்ல மகன்களை கைவிரல் ஜாடையில் அழைத்தபடியிருக்கும் 'காட் பாதர்' டான் போல் லியோன், தன்னைவிடவும் பல பத்தாண்டுகள் வயது குறைந்த.. தான் உடலுறவு கொண்ட பெண்ணின் மீது உன்மத்தம் பிடித்த மத்திய வயது மனிதனாக பாரிசின் தெருக்களில் அலைந்து திரிந்து, டாங்கோ நடனச் சாலையில் குடித்துக் கிடந்து, அவளால் உதாசீனப்படுத்தப்படுத்தப்படும் 'லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸின்' நாயகன், வியட்நாமில் அமெரிக்க நரவேட்டையில் மூழ்கி கொலையே கலையாகி, வாழ்வின் நியதியாகி, மனிதர்கள், எருதுகள், குழந்தைகள் என அனைவரையும் வெட்டிச் சாய்த்தும் குத்திக் கிழித்தும் பிளந்தும் சந்தோசமுறும் 'அபோகலிப்ஸ் நவ்' தளபதி கலோனல் குர்ட்ஸ் என மார்லண் பிராண்டோ எனும் கலைஞனது நடிப்பாற்றலை அனுபவித்தவர்களுக்கு நிச்சயம் அவரது மரணச் செய்தி மனம் துணுக்குறச் செய்து உணர்ச்சி வாசத்தில் ஒரு கனம் கண்ணீரை வரவழைத்தே தீரும்.



மார்லன் பிராண்டோ, கலைஞன் எனும் வகையிலும் சமூக அரசியல் ஜீவி எனும் வகையிலும் கலகக்காரனாகவே வாழ்ந்தார். தனது சொந்தப்படக் கம்பெனியின் இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக்கை படத்திலிருந்த விலக்கினார்.

ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் தயாரித்த பல படங்களின் படப்பிடிப்பு அரங்கில் இயக்குனர் சொல்வதைக் கேட்காமல் தவிர்ப்பதற்காகத் தனது காதுகளில் பஞ்சை அடைத்துக் கொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அவரது படங்கள் குறித்து அவர் பேச விரும்பியதில்லை.

தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் நடிகர்களை அவர் வெறுத்தார். கொப்போலா, பெர்ட்டுலாசி, பொன்டகாரவோ, எலியா காசான் போன்றவர்களின் படங்கள் தவிர, அவர் பிற படங்களில் நடிப்பதில் Êஆர்வம் காட்டவில்லை. "நடிப்பை விட்டொழிப்பதுதான் முதிர்ச்சியுற்ற மனிதன் செய்ய வேண்டிய காரியம்" என அவர் அடிக்கடி சொன்னார். 'வெறுமனே நடிக்காதே, மாறாக இயல்பாக இருக்கப் பழகு' என்பதுதான் அவரது நடிப்பு குறித்த ஆத்மார்த்தமான புரிதலாக இருந்தது.

இந்தக் காரணத்திற்காகத்தான், "நிஜத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. காசுக்காகவே படங்களில் நடித்தேனா" என அவர் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தார்.



இளமைக் காலத்திலிருந்தே தாராளவாத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். 1959 _ ஆம் ஆண்டு ஹென்றி போண்டா, மர்லின் மன்றோ, ஆர்தர் மில்லர் போன்றவர்களுடன் இணைந்து அணு ஆயுதத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டார்.

1963_ஆம் ஆண்டு மாரட்டின் லூதர் கிங் உரை நிகழ்த்திய ஆகஸ்ட் மக்கள் உரிமைப் பேரணியில் பங்கேற்றார். 1964, மே லண்டனின் தென் ஆப்ரிக்கத் தூதரகத்தின் முன்பு நடைபெற்ற நிறவாதத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுவிக்கும் இயக்கத்தில் பங்கேற்றார். தமது படங்களை நிறவெறிப் பார்வையாளர்கள் முன்பு காண்பிக்கக் கூடாது என, திரைப்படக் கதாசிரியர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துமாறு கோரி முன்னணியில் நின்று செயல்பட்டார். இப்படி அனேகம் இருக்கின்றன. 'காட் பாதர்' படத்திற்காக இரண்டாம் முறையாக ஆஸ்கார் விருது பெற்ற பிராண்டோ, இம்முறை பூர்வகுடி தென்அமெரிக்க மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஆஸ்கார் விருதை நிராகரித்தார்.



அந்தப் பரிசளிப்பு விழாவுக்கு, தனது சார்பாக ஒரு தென்அமெரிக்கப் பெண்ணை அனுப்பி தனது பதினைந்து பக்க அறிக்கையை வாசிக்குமாறு ஏற்பாடு செய்தார். ஒன்றிரண்டு வாசகங்கள் வாசிக்கப்பட்ட நிலையில் அப்பெண் மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எலியா காசானின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்த பிராண்டோ, அவரது 'தி வாட்டர் பிரண்ட்' படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் வாழ்ந்த வெளிநாட்டைச் சேர்ந்த மார்க்சியர்களான பெர்ட்டோல்ட் பிரெக்ட் போன்றவர்கள் மீதும், சார்லி சாப்ளின் போன்றவர்கள் மீதும், அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் செயல்பட்ட அப்ரகாம், போலன்ஸ்க்கி, வால்ட்டர் பெர்ன்ஸ்டீன் போன்ற திரைப்பட இயக்குனர்கள் மீதும் சென்ட்டர் மெக்கார்த்தி தேசபக்த விரோதச் சட்டம் கொண்டுவந்தபோது, தனது நண்பர்களைக் காட்டிக் கொடுத்து, அமெரிக்க அரசுக்கு உளவு சொல்லித் துரோகமிழைத்ததோடு, தனது அமெரிக்க தேசபக்தியைக் காட்டிக் கொண்டார் காசான். எலியா காசானின் துரோகத்தை நியாயப்படுத்துவதாகவும், காசானின் இரட்டை மனநிலையை வெளியிடுவதாகவும் இருந்த அந்தப் படத்தின் கதாநாயகரின் பாத்திரத்தை ஏற்று நடித்த பிராண்டோ, எலியா காசானின் எண்ணம் அப்போது தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனப் பின்னாளில் தெரிவித்தார்.

"பிரண்டோ ஒரு பந்தயக் குதிரை போன்றவர். அவரோடு வேலை செய்வது கடினம். ஆனால் அவர் ஒரு அசாதாரணமான நடிகர். ஒரு மேதை. அவர் பிரச்சினைகள் செய்தபோதும் நாம் என்ன கேட்கிறோமோ அதை அவர் நமக்கு வழங்குவார் என்பது மட்டும் நிச்சயம்" என்கிறார் பொண்டகாரவோ.



புகழ்மிக்க இத்தாலிய நடிகையான சோபியா லொரய்ன் சொல்கிறபடி, சொந்த வாழ்வில் பற்பல துயர்களை எதிர்கொண்ட பிராண்டோ, பிற்காலத்தில் தன்னைக் கவனித்துக்கொள்ளவே மறந்துவிட்டார்.

கட்டான உடல் கொண்ட இளைஞனான பிராண்டோ, எழுபதுகளில் மிகுந்த சதைகொண்ட மாமிச மலை போன்ற உடல்வாகு கொண்டவரானார். இறக்கும் தருவாயில் நூற்றி முப்பத்து நான்கு கிலோ பருமன் கொண்டவராக பிராண்டோ இருந்தார். ஆனால் 'டான் ஜவான்' படத்தில் உடலைக் கடந்து செல்லும் காதலனாக அவர் தோன்றவே செய்தார்.

அமர கலைஞன் மார்லன் பிராண்டோ குறித்த தனது அஞ்சலியில் அவுஸ்திரேலிய மார்க்சிய சினிமா விமர்சகர் டேவ் வீச் இவ்வாறு குறிப்பிடுகிறார் : 'குறிப்பிட்ட மனித இயல்பினுள்ளும் ஆளுமையினுள்ளும் அரை மயக்க நிலையில் ஆழ்ந்து செல்லும் ஒரு வகைத் திறனே நடிப்பு என்பதாகும்.

ஒரு மகத்தான நடிகர் இத்தகைய பாத்திரங்களினுள் பயணம் செய்கையில் ஓரளவு உலகைக் குறித்து அறிவதும் உணர்தலும் முக்கியம். மனித குலத்தின் விரிந்துபட்ட அக்கறையின் பொருட்டு, ஒரு நடிகன் கண்டடைந்ததை அவன் பரந்துபட்ட மனித குலத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

பிராண்டோவினுடைய ஆளுமையின் ஒருமை என்பது, இறுதிப் பகுப்பாய்வில் அவர் எவ்வாறாக சமூத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்தார் என்பதிலிருந்து அறியப்படுவதல்ல, மாறாக கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலவிய சமூக அமைப்பினை எதிர்த்து, எவ்வாறு அவர் போராடினார் என்பதே எமக்கு முக்கியமானதாகும். இவ்வாறான பிராண்டோவின் கலகப் பண்புதான் அவருக்குப் பின் வந்தோருக்கு அவர் விட்டுச் சென்ற பங்களிப்பு என நாம் சொல்லலாம்'.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யமுனா ராஜேந்திரன், சினிமா விமர்சகர், மொழி பெயர்ப்பாளர், கவிஞர் என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். லண்டனில் வசித்து வருகிறார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

- தீராநதி

Print this item