![]() |
|
ஏதோ நான் இருந்தேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஏதோ நான் இருந்தேன் (/showthread.php?tid=6781) |
ஏதோ நான் இருந்தேன் - Paranee - 08-18-2004 [b]<span style='font-size:30pt;line-height:100%'>ஏதோ நான் இருந்தேன்</span> <img src='http://www.theage.com.au/ffxImage/urlpicture_id_1077072707094_2004/02/18/marriage,0.jpg' border='0' alt='user posted image'> இலை உதிர செடி அழுவதில்லை இதழ் உதிர மலர்வாசம் மடிவதில்லை அன்னைமண் பிரிந்து அழுதிட்ட காலங்கள் அன்பை தொலைத்து அனலான நாட்கள் உதிர பந்தம் இல்லை உறவுப்பந்தமும் இல்லை ஊர் உறவும் இல்லை பிரியும்போது நெஞ்சம் பிழிந்து வடிகின்றதே உள்ளத்தின் கண்ணாடி விழியாகி நிற்க கண்ணீர் வெள்ளம் கரைந்தோடுகின்றதே அருகிருந்த அன்பும் தொலைந்து செல்ல அன்று தோன்றவில்லை பிரிவின் வலி கொஞ்சம் விலகி நிற்க வீரியம் காட்டி விக்கித்து அழுகின்றதே உள்ளம் என்னும் குழந்தை இரவான வாழ்வில் என்றும் சுகம் இல்லை சற்று ஓளி சேர்த்து இரவை பிரிந்தால் சுகம் தினம் சுகமே ஆண்டுகள் பிரியாமல் என்றும் அனுபவங்கள் கிட்டுவதில்லை அமாவாசை தொலைத்த வெளிச்சம் பௌர்ணமியில் துரத்தி வந்து அணைக்கும் கைகாட்டி விலகும்வரை கண்கள் பனிக்கவில்லை உள்ளத்தின் அழுகுரல் ஓசையின்றி ஓலித்தபடி பிரிந்துசெல் அன்பே உன் நினைவும் ஓர் சுகம்தான் நினைக்க ஓர் மனம் இருந்தால் இவ்வையகம் எங்கும் இன்பம்தான் பாலைவனம்கூட பளிங்கு மாளிகைதான் ஓர் நாள் பட்டினி மறுநாள் உணவருந்த இன்பம் பொங்குமே பிரிவும் அவ்வாறே பத்தை மூன்றால் பிரித்துப்பார் என்றும் முடிவிலிதான் எம் அன்பும் அப்படித்தான் பிரிந்து செல்ல பிணைப்பு இறுகும் அன்பே கொஞ்சம் பிரிந்தால்தான் நம் அன்பின் ஆழம் புரியும் - tamilini - 08-18-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பிரிந்து செல்ல பிணைப்பு இறுகும் அன்பே கொஞ்சம் பிரிந்தால்தான் நம் அன்பின் ஆழம் புரியும் _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அன்பின் ஆழத்தை புரிவதற்காக பிரிவு.. நன்றாக இருக்கு பரணீ அண்ணா....! - shanmuhi - 08-18-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நினைக்க ஓர் மனம் இருந்தால் இவ்வையகம் எங்கும் இன்பம்தான் பாலைவனம்கூட பளிங்கு மாளிகைதான் ஓர் நாள் பட்டினி மறுநாள் உணவருந்த இன்பம் பொங்குமே பிரிவும் அவ்வாறே <!--QuoteEnd--><!--QuoteEEnd--> கொஞ்சம் பிரிந்தால்தான் அன்பின் ஆழம் புரியும் என்றே வடித்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்.... - shobana - 08-18-2004 வாழ்த்துக்கள் பரணி அண்ணா - kavithan - 08-18-2004 அண்ணா கவிதை நன்றாக இருக்கிறது.....வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்ன பிரிவின் துயரம் நன்றாகத்தான் வாட்டியது போல் உள்ளது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 08-19-2004 ஊடல் வந்தால்தான் கூடல் இனிக்கும் என்று வள்ளுவனே சொன்னதா ஞாபகம்...... காதல் இலக்கணம் படிச்சு பரீட்சிக்கிறியள் போல.....ஏதோ நல்லது நடந்தால் சரி.... ஊடல் கீடல் ஆகி கூடல் பிரிதல் ஆகாமல் இருந்தால் சரி.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 08-20-2004 பரணீ அண்ணா....!
- phozhil - 08-21-2004 நன்று. அன்பின் வலிமைக்கு நல்லதோர் சான்று. நன்றி விபுதரே! - Paranee - 08-21-2004 நன்றி நல்லுறவுகளே - Paranee - 08-21-2004 தமிழ் வித்தகரின் வாழ்த்தொலி கேட்க செவியிரண்டும் தேன் பாய்கின்றது நன்றி நன்றி நண்பரே என் கிறுக்கல்களிற்கெல்லாம் நுணுக்கமாய் கருத்து இறுக்கும் உமைக்காண விழியிரண்டும் ஏங்கித்தவிக்கின்றது. phozhil Wrote:நன்று. அன்பின் வலிமைக்கு நல்லதோர் சான்று. நன்றி விபுதரே! |