Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 437 online users.
» 0 Member(s) | 434 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,482
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  நம்ப முடியுமா....? (shanthy)
Posted by: shanthy - 08-13-2004, 04:18 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (9)

நம்ப முடியுமா....?
(வரிகள் படிக்க முன்னம் வாசகர்க்கு சிலவரி. இக்கவி யாரையும் குத்தவோ குதறவோ எழுதப்படவில்லை. எழுத்துக்குள் வடிக்க முடியாத சீர்கேடுகள் எங்கள் எதிர்காலத்தைச் சிதைத்துவிடாதிருக்க என் உள்ளத்து உணர்வுகளிவை. ஊடகத்துறையிருக்கும் என்னையும் இந்த நாசங்கள் நடுங்க வைக்கிறது. இந்த நாசங்களால் சமூகத்தை வழிநடத்த வேண்டிய குரல்களால் நமது எதிர்காலம் சிதையக்கூடாது என்பதற்காயே இந்தச் சிறுவரிகள். சொல்லாமல் இருக்க முடியவில்லை. சொல்வதால் என் குரல்கூட நசுங்கிப்போகலாம். போகட்டும் என்றிருக்க முடியாத மனசின் வலிகளிவை)

ஏணிகள் நீங்கள்....
உலகத்து ஞானிகள் நீங்கள்....
எட்டாத உச்சத்துத்
து}ய்மைகள் நீங்கள்....

எத்தகு சலனத்திற்கும்
எத்துப்படாத புனிதங்கள்....
இத்தனைக்கும் அடையாளம்
உங்களைவிட யாருமில்லை.

நம்பமுடியுமா.....?

நம்பிக்கைக்கு உரிய
தும்பிக்கைகள் நீங்களாய்....
எத்தனையோ நம்பிக்கைகள்....
பொடியாய்....பொடிப் பொடியாய்....

அறிவிப்பின் புனிதம்
ஆண்கள் பெண்களை அசத்துதல்.....
பெண்கள் ஆண்களை அசத்துதல்....
அறிவிப்பின் புனிதம் சொன்ன
ஆசான்கள் அனேகரின்
புனிதம் இதுவாக....

புழுத்துக் கிடக்கிறது
பல்லாயிரம் குடும்ப கௌரவம்
பறையடித்து சொல்ல வேண்டிய
தேவையின்றியே நாறிக்கிடக்கிறது.
நாகரீக ஊடக தர்மம்.

நம்ப முடியுமா.....?

கொடுவெப்பத் தணல் அருகில்
சமையற்காரனாய்....
சமையற்காரியாய்...
ஓரிடத்தில் கணவனும்...
இன்னோரிடத்தில் மனைவியும்....
உழைப்பாய் கொண்டு வரும்
ஐரோக்களும்....,
பிராங்குகளும்....,
பவுண்ஸ்களும்....,
அநியாயமாய் கரைகிறது.

கவர்ந்த அறிவிப்பாளன்
கனவு நாயகியாய்....
கணவனை அனுப்பிவிட்டு
கள்ளக்காதல் செய்து
களவு பிடிபட்டுக் குடும்ப நிம்மதியும்
குழந்தைகளின் எதிர்காலமும்
கேள்வியாய்....?

நம்பமுடியுமா....?

கவர்ந்த அறிவிப்புப் பெண்ணைக்
கவர்ந்திழுக்க கடனெல்லாம் கட்டிவிட்டு
குறுந்தாடி வளர்த்து
நேசத்துக்கினியவளின்
நெஞ்சில் நெருப்பேற்றி
பாசத்துக்கினிய பிள்ளைகளின்
வாசத்தையும் து}க்கியெறிந்து
வாழ்வை நரகமாக்கி....

நம்பமுடியுமா....?

'இதுவெல்லாம் இங்கு சாதாரணம்"
இப்படியும் வார்த்தைகள்
வந்து விழுகிறது.
காறி முகத்தில் உமிழ வாய் எழுகிறது.
நாகரீகம் என்பதன் பொருள்
இவர்கள் வரையில்
நாலுபேருடன் புணர்ந்து
மேடையேறிப் பொன்னாடை வாங்கலும்
பட்டம் வாங்கலுமோ....?

சிலபேரின் குணமறிந்தும்
எதையும் நம்ப முடியவில்லை.
கண்ணால் பார்த்த பின்னும்
கனவு போல் தானிருக்கிறது.
கோவலர்களும் , மாதவிகளும்தான்
இன்றைய ஊடக ராசாக்கள் , ராணிகளா....?

நம்பமுடியுமா....?

தீக்குச்சிகளின் குணம் சொன்னாள்
ஒரு தோழி.
'உரசவிடும் எளிதில் பற்றவிடாது"
அதுபோலே அறிவிப்புத் துறைக்குள் - பல
ஆண்களும் பெண்களுமாம்....!
உணர்ந்து அறிந்து சொன்னவளில்
ஒரு நாள் கோபித்தது
எத்தனை முட்டாள் தனம்....!

பெண்ணியம் பேசியென்ன...,
புரட்சி பாடியென்ன....,
சமூக விழிப்புச் சொல்லியென்ன....,
தாயக எழுச்சி எழுதியென்ன....,
நன்னடத்தை இல்லாமல்
வேடம்போட்டு ஏமாற்றும்
வித்தகத்தில் விடியலில்லை.

கண்ணுண்டு பார்க்க...,
காதுண்டு கேட்க...,
நற்குரல் வளமுண்டு கவர...,
எது இருந்தென்ன ?
சபலபுத்தியுள்ள வரை
சாதிப்பது எதுவுமில்லை.

13.08.04.

Print this item

  குப்பை
Posted by: Mathan - 08-13-2004, 03:07 PM - Forum: புலம் - Replies (3)

குப்பை


ஷீலாவை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அவளுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட நாட்கள் கொஞ்சமே கொஞ்சம் என்றாலும், மின்னல் மாதிரி விருட்டென்று கண்ணில் அடித்து விட்டுப் போன வித்தியாசமான அனுபவம்.

வாய்ஸ் மெயிலில் அவள் பெயரைக் கேட்டதும் முதலில் இந்தியப் பெண் என்றுதான் நினைத்தேன். அபார்ட்மென்ட்டைப் பகிர்ந்து கொள்ள ஆள் வேண்டும் என்று லோக்கல் பத்திரிகையில் இலவச விளம்பரம் தந்ததால் - கூப்பிட்டிருந்தாள். நேரில் வந்து, " நான் ஷீலா தாம்ஸன் ! " என்று கை குலுக்கியபோதுதான், அட அமெரிக்கா எனத் திகைத்தேன்.

சரியா, தப்பா? ஒத்து வருமா, வராதா? என்றெல்லாம் சாலமன் பாப்பையா பண்ண அவகாசமில்லாமல் - மிச்சமாகப் போகும் முன்னூத்தி சொச்சம் டாலர்கள் மட்டுமே மனசின் அகலத் திரையில் தெரிந்தது. லீசிங் ஆபிசில் கையெழுத்துப் போட்டு, காரிலிருந்து மூன்று பெரிய சூட்கேஸ்களை அவளுடைய படுக்கையறையில் உருட்டிக் கொண்டு வந்து வைத்து, முறைப்படி என் வீட்டுப் பங்காளி ஆனாள்.

ஒரு ஷவர் அடித்து விட்டு, டொவ் சோப்பு வாசனையுடன் நிதானமாய் அந்த டூ பெட்ரூம் அபார்ட்மென்ட்டை முழுசுமாய் ஒரு வலம் வந்தவள், கண்களை விரித்து சந்தோஷப்பட்டாள். " வாவ், வீட்டை நீட்டா வெச்சிருக்கே. சோ·பா, மைக்ரோ வேவ் ஓவன், ரீடிங் டேபிள், அயர்னிங் போர்ட் எல்லாமே இருக்கு ! இந்த செளகரியத்துக்காகத்தான் நான் எந்த ஊருக்குப் போனாலும் ஏற்கெனவே செட்டிலான ஆளோட பங்கு போட்டுக்கறது. அட மியூசிக் சிஸ்டம் வேற இருக்கா? பட்டி ஜ்வெல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெச்சிருக்கியா? "

" இல்லே. என் கிட்டே ஏ ஆர் ரெஹ்மான்தான் இருக்கு. "

" ஹூ ஈஸ் தட்? " என்றவள் என் விளக்கம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த சங்கதிக்குத் தாவினாள். " ஆமா, எல்லாமே இருந்தாலும் என்னவோ மிஸ் ஆகிறதே? டிவி இல்லையா? "

நான் ஜன்னலைப் பார்த்துக் கொண்டே - " இன்னும் கிடைக்கலை. " என்றேன்.

" வாட் டூ யு மீன்? ஆர்டர் பண்ணிருக்கியா? "

" யாரும் ஒரு டிவியைக் கொண்டு வந்து இன்னும் குப்பைத் தொட்டில போடலை. "

என்னுடைய பதில் அவளுக்கு ரொம்ப விநோதமாய் இருந்திருக்க வேண்டும். புன்னகைத்தேன். " ஷீலா, இந்த வீட்டிலிருக்கிற அத்தனை பொருட்களும் அதோ அந்தக் குப்பைத் தொட்டியிலிருந்து ஒவ்வொண்ணா சேகரிச்சதுதான். யாஹூ மெயிலையும், அந்தக் குப்பைத் தொட்டியையும் ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி செக் பண்றது என்னோட தினசரிக் கடமைகளில் ஒண்ணு. ஒரு பொருள் லேசா மக்கர் பண்ணினா உடனே குப்பையில் தூக்கிப் போடறதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை. ஒரே ஒரு ஸ்பிரிங் அறுந்து போன சோ·பா கம் பெட், நாப் மட்டுமே உடைஞ்சு போன ஓவன், இந்த ரைட்டிங் டேபிளில் என்ன குறைன்னு இன்னிக்கு வரைக்கும் என்னால கண்டு பிடிக்க முடியலை. தினமும் இங்க ஒரு ஆள் கொட்டற குப்பையில் எங்க ஊரில் நாலு குடும்பம் பிழைக்கும். "

அவள் சிரித்தாள். " நீ சொல்றது சரி போல தோணினாலும் லாஜிக்கலா யோசிச்சா அது தப்பு. இங்கே ரிப்பேர் கான்சப்ட் இல்லை. ரீப்ளேஸ்மென்ட்தான். ஸ்பேர் பார்ட் விலையும், அதை மாத்த லேபர் சார்ஜூம் புதுசு வாங்கறதை விட எக்ஸ்பென்சிவ் . அதனால பழசு குப்பைத் தொட்டிக்கு வருது. அதே போல ஊர் விட்டு மாத்தலாகிப் போறப்ப சில பொருட்களை எடுத்துட்டுப் போறதுக்காக மூவர்சுக்கு தர பணத்தை விட தூக்கி எறிஞ்சிட்டுப் புதுசு வாங்கறது சல்லிசா இருக்கு. ஒரு விஷயம் குடைச்சல் தரும்ன்னா தூக்கி எறிஞ்சிட்டுப் போயிடறதுதான் சரியான தீர்வு. கட்டிட்டு அழக் கூடாது. "

அடுத்த நாள் வால்மார்ட்டில் போய் வீட்டு சாவியை ட்யூப்ளிகேட் போட்டு விட்டு வரும்போது, அட அதிர்ஷ்டமே - ட்ராஷ் குவிக்கும் இடத்தில் ஒரு டிவி பெட்டி உட்கார்ந்திருந்தது. நான் கேட்டுக் கொண்டதால் வேண்டா வெறுப்போடு ஒரு கை பிடித்தாள் ஷீலா. அதை நான் கழட்டிப் போட்டு ஒயர்களை ஆராய்ந்து, கடைசியில் ஒரு ட்ரான்சிஸ்டர் இணைப்பை மாற்றிக் கொடுத்து உயிர் கொடுத்ததைப் பார்த்து ஆச்சர்யமடைந்தாள். இன்னும் என் சாம்பார், ஆந்திர நண்பரின் சகவாசத்தால் அதில் கொஞ்சம் அதிகப்படியாய் மிதக்கும் மிளகாய்த் தூள், அதிகாலை பூஜை எல்லாமே அவளுக்கு ஆச்சர்யம்தான்.

அன்றைக்கு ஆபிசிலிருந்து திரும்பிய போது - வீட்டுக்குள் டிவி சத்தம் கேட்டது. ஷீலா நேரமே வந்து விட்டாள் போல. யோசித்தபடி கதவைத் திறந்த நான் திடுக்கிட்டுப் போனேன். ஹால் சோபாவில் ஒரு வெள்ளைக்காரனின் மேல் சரிந்து தீவிரமாய் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஹாய் என்பது போல் கையை அசைத்ததைத் தவிர என்னை அவர்கள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. எனக்குக் கொஞ்சம் கால்கள் நடுங்க ஆரம்பிக்க - வேகமாய் என்னுடைய அறைக்குள் போய் விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து கதவைத் தட்டினாள் ஷீலா. என்னைப் பார்த்து பலமாகச் சிரித்தாள். " என்ன இப்படி வெக்கப்படறே? அவன் என்னோட பாய் ·ப்ரெண்ட் ஸ்டீவ். இனிமே இங்க அடிக்கடி வருவான். "

" வர்றது இருக்கட்டும். இதெல்லாம் உன்னோட ரூமுக்குள்ளே வெச்சிக்கக் கூடாதா? " என்று நான் கேட்டதற்கு கெக்கே பிக்கே எனச் சிரித்தாள்.

" ஸ்டீவ் ஒரு முரடன். இடமெல்லாம் பார்க்க மாட்டான். நானும்தான். " என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

முன்னூறு டாலர்களை மிச்சம் பிடிக்கப் போய் இதென்ன கண்றாவி. லீசில் அவளுக்கும் சம உரிமை கொடுத்துத் தொலைத்திருக்கிறேன். இவர்களை எப்படி விரட்டுவது என்று நான் குழம்பிப் போனேன். இப்படிக் குழப்பத்திலேயே இரண்டு வாரம் ஓடிப் போயிருக்க - ஒரு சுபயோக சாயந்தரத்தில் சூட்கேஸ்களை பேக் பண்ணி வைத்துக் காத்திருந்தாள் ஷீலா.

" நியுயார்க்கிலிருந்து ஒரு ஆ·பர் வந்திருக்கு. மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வேலை பார்க்கணும்ங்கறது என் ரொம்ப நாள் ஆசை. வீட்டைக் காலி பண்றேன். உனக்கு நான் பணம் தரணுமா, அல்லது நீ எனக்குத் தரணுமான்னு கணக்கைப் பார்த்து செட்டில் பண்ணிடறியா? என்னை ஏர்போர்ட்டில் டிராப் பண்ண இன்னும் பத்து நிமிஷத்தில் ஸ்டீவ் வந்துருவான். "

பெரியதாய் ஒரு கும்பிடு போட்டு - அவசர அவசரமாய்க் கணக்கை பைசல் பண்ணி, அவளை அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் குப்பைத் தொட்டி அருகே லேமினேஷன் கிழிந்திருந்த ஒரு அழகான போட்டோ ஆல்பம் கிடந்தது. புரட்டிப் பார்த்த போது - எல்லா போட்டோக்களிலும் ஷீலாவும், ஸ்டீவும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

Thanx: சத்யராஜ்குமார்

Print this item

  பொப்பிசைப் பாடல்கள்!
Posted by: sOliyAn - 08-13-2004, 12:55 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (19)

நித்தி கனகரத்தினத்தின் பாடல் ஒன்று... ஹாய்! ஹாய்! லண்டன் 'காய்ஸ்'! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இலண்டனிலை மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க..

Print this item

  பால் வடியும் முகம் இதை பார்ப்பதில் தான் எத்தனை சுகம்...!
Posted by: kavithan - 08-12-2004, 10:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (18)

<span style='font-size:30pt;line-height:100%'><b>பால் வடியும் முகம் இதை பார்ப்பதில் தான் எத்தனை சுகம்...!</b></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/10-10-alamuae-9.jpg' border='0' alt='user posted image'>


<span style='font-size:25pt;line-height:100%'>
பால் வடியும் முகம்
பஞ்சிலும் மென்மையானபாதங்கள்
இடையிடை
மொட்டவிழும் முல்லை சிரிப்பு
குஞ்சுக் கண்களின்
குறு... குறுத்த பார்வை
பட்டு கன்னங்களின்
பள....பளவென்ற ஒலிப்பு
முத்து சிதறல்களாய்
இடையிடை ஒலிக்கும்
மழலை மொழி
இதை எல்லாம் பார்ப்பதில்,
கேட்பதில் தான் எத்தனை சுகம்.</span>

www.kavithan.yarl.net

Print this item

  சுடாத கவிதை
Posted by: kuruvikal - 08-12-2004, 08:57 PM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

சுட்ட கவிதையே...
சுட்டது போதும்
சுயமா சிலதாவது
சிந்திக்க விடு....!
சுதந்திரம் உணரவிடு
சுதேசியாய் எழுதவிடு
சுட்டதில் இல்லா சுகம்
சுயத்தில் தெரியும்
சுயமிருந்தால் சிந்தித்துப்பார்....!
இன்றேல்....
சுடு...சுட்டுக் கொண்டே இரு
சுடுவதே வேலையாகும்
சுயத்தை
சுரண்ட நினைப்பதற்கு....!

இப்படிக்கு
சுடாத கவிதை....!

Print this item

  அழகிய தீயே _ சினிமா விமர்சனம்
Posted by: vasisutha - 08-12-2004, 08:11 PM - Forum: சினிமா - Replies (1)

<b><span style='font-size:22pt;line-height:100%'>அழகிய தீயே: சினிமா விமர்சனம்</span>


<img src='http://www.thatstamil.com/images23/cinema/alagiyatheeye530.jpg' border='0' alt='user posted image'>

குத்து, அடிதடி, அருவா, என்று படத்தலைப்பிலேயே இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கும் படங்களும், ஒல்லி கதாநாயகன் பத்து, பதினைந்து பேரைத் தூக்கிப் போட்டு பந்தர்டும் நம்பகத்தன்மை அறவே இல்லாத காட்சிகளும், கதாநாயகியின் மார்பு, தொப்புள் ஆகியவைகளையே உண்டியலாக்கி குலுக்கி, ரசிகர்களிடம் பிச்சை கேட்கும் இயக்குநர்களும் .... என்று தமிழ் சினிமாவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மெல்லிய உணர்வுகளால் எழுதப்பட்ட ஒரு நல்ல கவிதை போல் வந்திருக்கும் திரைப்படம் 'அழகிய தீயே'

விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் அநேகமாக அனைத்து இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் இப்படித்தான் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்திருப்பார்கள். 'நாலு பசங்க இருக்காங்க சார், தடால்னு அவங்க வாழ்க்கைல குறுக்க வரா ஒரு பொண்ணு.... ' இப்படி எடுத்த சில படங்கள் குருட்டு அதிர்ஷ்டத்தால் ஓடிவிட, பல படங்கள் மயிலை பார்த்து ஓடின வான்கோழி போல தோற்றுப் போயின.

இந்தப் படத்தின் இயக்குநர் ராதாமோகனும் இப்படியே கதையை ஆரம்பித்திருந்தாலும், கதையை சொல்லியிருக்கிற வித்தியாசத்திலும் காட்சியமைப்புகளிலும் தனித்து நிற்கிறார். பல ஆண்டுகளாக மனதில் ஊறப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளை யோசித்து வைத்திருந்தால்தான் இப்படிப்பட்ட படத்தை எடுக்க முடியும். ஏனெனில் இயக்குநர் படத்தை எந்தவொரு இடத்திலும் தடங்கலின்றி, குழப்பமில்லாமல் எடுத்துச் சென்றிருப்பதே அதற்குச் சான்று.

சுருக்கமான கதைதான். தன் பணக்கார (வில்ல) அப்பா ஏற்பாடு செய்யும் திருமணத்தை தடுக்க சந்திரனின்(பிரசன்னா) உதவியை நாடுகிறாள் நந்தினி(நவ்யா நாயர்). சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் அவன் தன் படைப்பாளியின் மூளையை பயன்படுத்தி, தானும் அவளும் 5 வருடங்களாக காதலிப்பதாக அவளை மணக்கவிருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையிடம் (பிரகாஷ்ராஜ்) மிக உருக்கமாக சொல்கிறான்.
<img src='http://www.thatstamil.com/images23/cinema/navya-alagiye450.jpg' border='0' alt='user posted image'>
அவன் சொன்ன முறையில் இதை தெய்வீக காதல் என்று நம்புகிற பிரகாஷ்ராஜ் இருவரையும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் பதிவுத் திருமணம் செய்ய வைத்து அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து விட்டு அமெரிக்கா சென்று விடுகிறார்.

இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு எலியும் பூனையுமாக இருப்பதும் பிறகு மெல்ல நண்பர்களாவதும், எப்போது அவர்களுக்குள் காதல் நுழைந்தது என்பதே தெரியாமல், படம் முடிய ஒரு விநாடி இருக்கும் போது தம் காதலை வெளிப்படுத்திக் கொள்வதும்..... சுபம்.

சில கிளிஷேவான விஷயங்களை தவிர்த்திருக்கலாம். நான்கு இளைஞர்கள் என்கிற போது ஏற்னெவே எப்படி முந்தைய படங்களில் காட்டப்பட்டதோ அதே மாதிரியான பாத்திர அமைப்புகள். கதாநாயகன் மாதிரியான ஒருத்தன் (பிரசன்னா), அவனின் நண்பன் மாதிரியான பாதி ஹீரோ (ஜெய்வர்மா பழைய நடிகர் ஆனந்தனின் மகன்), பார்க்கும் பெண்களையெல்லாம் சளைக்காமல் காதலிக்கும் வித்தியாசமாக குணாதியசத்தை உடைய ஒருவன் (கூத்துப் பட்டறை நடிகர்), காமெடிக்கென ஒருவன் (மாஜிக் லேண்டன் குழுவைச் சேர்ந்தவர்), அதே போல் பணக்கார மற்றும் வில்ல அப்பா. அமெரிக்க மாப்பிள்ளை. (வழக்கமாக கிளைமாக்சில் வருபவர் இதில் அம்மாதிரி செய்யாதது ஒரு ஆறுதல்)

சினிமாவில் சேர்ந்து வெற்றி பெற துடிக்கும் இளைஞர்கள். அவர்களிடம் வாடகை வாங்க பாடுபடும் ஆனால் அவர்களுக்கு உதவும் வீட்டுக்காரர். ஹீரோ தன் கஷ்டகாலத்தில் விற்காத சைக்கிளை ஹீரோயின் பரீட்சைக்கு பணம் கட்ட விற்று விடும் காரியம். லோபட்ஜெட்டினால் சில இடங்களிலேயே மாற்றி மாற்றி வருகிற காட்சியமைப்புகள். இப்படி சில. ஆனால் சுவாரசியமான திரைக்கதையினால் இந்தக் குறையெல்லாம் மறைந்து போகிறது.

பிரசன்னா அந்த அப்பாவி உதவி இயக்குநர் பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்துகிறார். கதை மிகவும் பலமாக இருக்கும் பட்சத்தில் இது போல பிரபலமாகாதவைரையே தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவர் அந்த கதாபாத்திரமாக நம் கண்முன் நிற்பார். பிரகாஷ்ராஜிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் போதெல்லாம் நன்றாக செய்திருக்கிறார். நாயகியிடம், நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று சொல்லும் காட்சியமைப்பில் சிறப்பாக செய்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் இந்த அபார மனிதருக்கு சரியான தீனி போடும் பாத்திரங்கள் இன்னும் அமையவில்லை என்றுதான் தோன்றுகிறது. பிரசன்னாவை கேவலமாக பார்க்கும் அந்த முதல் காட்சியில் வெளிப்படுத்தும் சில முகக்குறிப்புகள் அவர் திறமைக்கு சான்று. அதே போல் பிரசன்னா சொல்லும் பொய்யை நம்பி அனுபவித்து கேட்பது சிறப்பான நடிப்பு.

நவ்யா நாயர் வழக்கமாக தொப்புளாட்சியாக வரும் நாயகிகளுக்கு மத்தியில் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார். இவர் பிரசன்னாவை காதலிப்பதாக எந்தவொரு காட்சியிலும் குறிப்பால் உணர்த்தாமல் கிளைமாக்சின் போது அவரின் மீது சாய்ந்து கொள்வது அபத்தமாய் இருந்தாலும் கவிதைத்தனமாய் இருக்கிறது.

விஜய்யின் வசனங்கள் மிக யதார்த்தமான நகைச்சுவையுடன் இருக்கிறது. சில உதாரணங்கள்: "ஏம்ப்பா, புரொடக்ஷன் மேனஜர், அந்த டாக்டர் வேஷத்துக்கு கமலாம்மாவை கூட்டிகினு வரச் சொன்னேனே, போய்ப் பாத்தியா?"

"ஒண்ணுக்குப் பத்து தரம் போனேன்............."

"நீ ஒண்ணுக்குப் பத்து தரம் போனியன்னா அது டயாபடீஸா இருக்கும். போய் அந்தம்மாவ வரச் சொல்லு;"
<img src='http://www.thatstamil.com/images23/cinema/navyaa330.jpg' border='0' alt='user posted image'>

"ஏம்ப்பா உன் காதலை அவ கிட்ட சொல்ல மாட்டேன்ற. சினிமால காதல சொல்லாத முரளி கூட இப்பல்லாம் தன் காதலை டக்குன்னு சொல்லிடறார்."



"500 ரூபா கொடுத்தா செல்போன் கொடுத்தாலும் கொடுத்தடறாங்க... இவன்க தொல்ல தாங்கல"

ரமேஷ் விநாயகத்தின் பாடல் இசைகளில் 'ரோஜா ரஹ்மானின்' Freshness தொந்கிறது. பின்னணி இசையும் மோசமில்லை. அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும். பல லாஜிக் ஒட்டைகள் இருந்தாலும் சாமர்த்தியமான வசனங்களின் மூலம் மெழுகி விடுகிறார்கள். பனிப்புகையில் பார்த்த தன் கனவுக் காதலியை, நிஜத்தில் கொசுமருந்துப் புகையின் நடுவில் பார்க்கும் காட்சிகளில் இயக்குநரின் திறமை தெரிகிறது.

ஆபாசப் படங்கள் என்று சொல்லப்படுகின்றவற்றை தியேட்டரில் மெனக்கெட்டுப் பார்த்துவிட்டு குய்யோ முறையோ என்று அலறிக் கொண்டும், இந்த மாதிரியான நல்ல படங்களை திருட்டி வி..சி.டியிலோ (படத்தில் இதைப்பற்றியும் ஒரு கமெண்ட் வருகிறது) தொலைக்காட்சியில் பண்டிகை நேரங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதும் இன்னும் பல நல்ல சினிமாக்கள் வருவதை நாசமாக்கும்.

அழகிய தீயே: மூச்சுத்திணறும் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு ஆக்சிஜன் சிலிண்டர்


[b]thatstamil.com</b>

Print this item

  பிழைப்பு
Posted by: Mathan - 08-12-2004, 06:48 PM - Forum: புலம் - Replies (2)

பிழைப்பு

எல்லோரும் வேலைக்குப் போய் விட்டார்கள். மயான அமைதி. ஹீட்டர் மட்டும் உறுமிக் கொண்டிருந்தது. திரைச் சீலையை விலக்கி, கண்ணாடிக்கு வெளியே பார்த்தபோது - வெள்ளை வெளேரென்று நாலு இஞ்ச்சுக்கு பனி. ஒரு ஈ காக்காய் இல்லை. சை, இதுதான் அமெரிக்காவா?

மூன்று வாரங்களாக பகல் பொழுதுகள் இப்படித்தான் ஆயுள் தண்டனை போல் கழிகிறது. கார் இல்லாமல் வெளியே எங்கும் போக முடியாது. இன்னும் லைசன்ஸ் எடுக்கவில்லை. அதற்கு முன்னால் சோஷியல் செக்யூரிட்டி எண் வர வேண்டும் என்றார்கள். அந்த ஒன்பது இலக்கங்கள்தான் இந்த நாட்டில் உன் அடையாளம். அதைத் தொலைத்தால் நீ தொலைந்தாய் என்று பயம் வேறு உறுத்தினார்கள். அது மட்டுமா, ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் வேறு எடுக்க வேண்டும். அது வரைக்கும் ஷேவிங் கூடப் பண்ண வேண்டாம். பிளேடால் நீ கன்னத்தைக் கொஞ்சம் அறுத்துக் கொண்டால் இங்கே நாங்கள் யாரும் பொறுப்பல்ல என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இந்த சம்பிரதாயங்கள் முடிந்த பின் என் கழுத்தில் மணிக்கு இத்தனை டாலர்கள் என்று விலைப்பட்டியல் மாட்டப்பட்டு நான் சந்தையில் நிறுத்தப்படுவேன். பலரும் டெலிபோனில் என் பல்லைப் பிடித்துப் பார்த்து விட்டு - துண்டு போட்டு என் விற்பனைப் பிரதிநிதிகளிடம் பேரம் பேசிப் பார்ப்பார்கள். பேரம் படிந்தால் நான் நல்ல விலைக்கோ, அடிமாட்டு விலைக்கோ விலை போவேன்.

டெலிபோன் அலறியது. எடுக்கத் தயங்கினேன். கொஞ்ச நாளாய் எனக்கு போன் போபியா வேறு வந்து தொலைத்திருக்கிறது. ரிசிவரை எடுத்தால் வந்து விழும் அமெரிக்க அக்சென்ட் ஒரு சுக்கும் புரிவதில்லை.

" டிவி நிறைய பாருங்க. சரியாய்டும். " என்று நியுயார்க்கில் வேலை பார்க்கும் சுப்பு யோசனை சொல்லியிருந்தார்.

" பகல்ல நிறைய மார்க்கெட்டிங் கால்ஸ் வரும். அதை எடுத்துப் பேசுங்க. கால் வரலைன்னாலும் பரவாயில்லை. நீங்களா 1-800 நம்பர்களுக்கு டயல் பண்ணிப் பேசுங்க. " - இது கார்த்திக்கின் அட்வைஸ்.

நானும் இங்கே வந்ததிலிருந்து பார்க்கிறேன். இலவச அறிவுரைகள் ஏராளமாய்க் கிடைக்கிறது. சிலது உபயோகமானவை. பலதும் உப்புச்சப்பில்லாதவை. ரிசிவரை எடுத்து விட்டேன். " ஹலோ. "

மார்க்கெட்டிங் கால்தான். நல்ல வேளை மறுமுனையில் அந்த ஆள் பேசிய ஆங்கிலம் எனக்கு அட்சர சுத்தமாய்ப் புரிந்தது. " நீங்க நூறு அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிங்க. அறுபது டாலர் மதிப்புள்ள எங்க கம்பெனி தயாரிக்கும் டெலிபோன் உங்களுக்காக இன்ஸ்டன்ட் தள்ளுபடி இருபது டாலர் போக நாப்பது டாலருக்குத் தரப் போறோம். அந்த நாப்பது டாலரும் மெயில் அண்ட் ரிபேட்டில் உங்களுக்குத் திரும்பக் கிடைச்சிரும். ஆக ஒரு அருமையான போன் உங்களுக்கு இலவசமாக் கிடைக்கிறது. "

அட, அமெரிக்கா வந்த பின் முதல் முதலாய் ஒரு டெலிபோன் உரை வார்த்தைக்கு வார்த்தை தெளிவாய் காதில் விழுந்திருக்கிறது. ஆனால் அவன் சொன்னதின் சாராம்சம் எனக்கு விளங்கவில்லை.

" மெயில் அண்ட் ரிபேட்ன்னா என்ன? "

இப்படிக் கேட்கும் ஒரு ஜந்து கூட அமெரிக்காவில் வசிக்கிறதா என்கிற மாதிரி மறுமுனை கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே பேசவில்லை. " உங்க பேர் என்ன? " பேரைச் சொன்னதும், " நீங்க இந்தியரா? புதுசா அமெரிக்கா வந்திருக்கிங்களா? "

" ஆமா. "

" நானும் ஒரு இந்தியன்தான். விச் பார்ட் ஆஃப் இண்டியா? "

" மெட்ராஸ். "

" அட தமிழா? நான் செங்கல்பட்டு ஸார். என்ன படிச்சிருக்கிங்க? "

" பிஈ. "

" நம்ம கேஸ்தான். நான் அருள்மிகு அற்புதகுஜாம்பாள் சுயநிதிக் கல்லூரிலதான் படிச்சேன். ரொம்ப சந்தோஷம் ஸார். ஒரு இந்தியர், அதிலும் ஒரு தமிழர், அதிலும் ஒரு என்ஜினியர் கிட்டே பிசினஸ் பண்ண வாய்ப்புக் கிடைச்சிருக்கே. சந்தோஷமா இருக்கு. மெயில் அண்ட் ரிபேட்ன்னா நீங்க நாப்பது டாலர் கட்டி எங்க ஃபோனை வாங்கினதும் ஒரு ரிபேட் படிவமும் கூட அனுப்புவோம். அந்த படிவத்தை நிரப்பி, பாக்கெட்டின் மேலிருக்கும் பார் கோடையும், பில்லையும் கூட வெச்சு அனுப்பினா மூணு மாசத்துக்குள்ளே நீங்க குடுத்த நாப்பது டாலரை உங்களுக்கு திரும்பக் குடுத்துருவோம். போன் ஃப்ரீ. "

" இதில் உங்களுக்கென்ன லாபம்? "

" அதெல்லாம் கேக்காதிங்க ஸார். இங்க அப்படித்தான். உங்க கிரெடிட் கார்டு நம்பர் மட்டும் சொல்லுங்க. எக்ஸ்ப்ரஸ் டெலிவரில சாயந்தரம் போன் உங்க வீட்டுக்கு வந்துரும். "

" எனக்கு இன்னும் எஸ்எஸ்என் கூட வரலைங்க. இனிமேதான் நான் வேலையே தேடிப் பிடிக்கணும். அவசர ஆத்திரத்துக்காக ஐசிஐசிஐ க்ரெடிட் கார்டுதான் வெச்சிருக்கேன். "

" விசா கார்டுதானே. அது போதும். நம்பரைச் சொல்லுங்க. உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமே வேலை கிடைச்சிரும் ஸார். இல்லேன்னா இருக்கவே இருக்கு. ரெஸ்டரென்ட்டிலோ, கேஸ் ஸ்டேஷனிலோ... அதான் ஸார், பெட்ரோல் பங்க்... இங்க எங்கனாச்சும் போய் ஒட்டிக்கங்க. இல்லை என்னை மாதிரி ஸேல்ஸ் ரெப்பா கூட ஆயிருங்களேன். இல்லீகல்தான். ஆனா வயத்தைக் கழுவணுமே. எல்லாரும் கம்ப்யூட்டர் மேலயே போய் விழுந்தா அது தாங்குமா? க்ரெடிட் கார்டு நம்பர் என்ன சொன்னிங்க? "

" நான் இன்னும் சொல்லவே இல்லே. எனக்கு எதுக்கு போன்? ஏற்கெனவே இங்க ஒரு போன் இருக்கே. "

" ஃப்ரீ ஸார். இதுல காலர் ஐடி, ஆன்சரிங் மெஷின் வேற இருக்கு. நீங்க ஒத்தைப் பைசா செலவு பண்ணப் போறதில்லை. சும்மா கிடைக்கற பொருளை வேண்டாம்ன்னு சொல்றிங்க. "

" நான் நாப்பது டாலர் தரணுமில்லையா? "

" அதான் திருப்பி அனுப்பிருவமே. "

" இருந்தாலும்... "

" நாளைக்கே உங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைச்சு வெளியூர் போனா அபார்ட்மென்ட் எடுக்கணும். போன் வாங்கணும். அப்போ உங்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்காது. நீங்க அமெரிக்காவுக்கு புதுசு. புத்திசாலித்தனமா ஷாப்பிங் செய்யறதைப் பத்தி நாலு பேர் கிட்டே கேட்டுப் பாருங்களேன். "

நான் தயங்கினதைப் பார்த்து, அவன் சட்டென அழுகிற மாதிரிப் பேசினான். " ஸார், உங்க கிட்டே ஒரு உண்மையைச் சொல்றேன். எனக்கு சாஃப்ட்வேர் வரலை. அற்புதகுஜாம்பாளில் படிச்சதை வெச்சு இங்க தாக்குப் பிடிக்க முடியலை. கொஞ்ச நாள் கேஸ் ஸ்டேஷனில் இருந்தேன். ஒரு காப் பிடிச்சிட்டான். நல்ல வேளை இரக்கப்பட்டு எச்சரிக்கை குடுத்து அனுப்பிட்டான். அப்புறம் இண்டியன் ரெஸ்ட்டரென்ட் கிச்சனுக்குள்ளே தோசை வார்த்துட்டிருந்தேன். ஓனர் ரொம்ப கேவலமா ட்ரீட் பண்றார் ஸார். நமக்குக் கொஞ்ச நஞ்சம் ரோஷம் இன்னும் இருக்கே. அதையும் விட்டுட்டு இந்த கம்பெனில ஒரு டீஸன்ட்டான பிழைப்புக்கு வந்திருக்கேன். இந்த வாரம் பூரா நான் ஒரு போன் கூட விக்கலை. இன்னிக்கு ஒண்ணாவது விக்கலைன்னா வெள்ளைக்காரன் என்னை ஃபயர் பண்ணிருவான். ஒரு தமிழனை, ஒரு என்ஜினியரை காப்பாத்துங்க ப்ளீஸ். உங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கறேன். "

" அய்யய்யோ. பெரிய வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணாதிங்க. "

" என்ன ஸார் பெரிய! பொழப்புக்காக எவனெவன் கால்லயோ விழறோம். ஒரு தமிழன் காலில் விழறதில் என்ன தப்பு? என்னோட வாழ்க்கை இப்ப உங்க கையில். அதுக்கு மேல உங்க இஷ்டம். "

ராத்திரி சுப்பு ஒரு பீர் பார்ட்டிக்கு கூட்டிப் போனார். அங்கிருந்த அல்ட்ரா மாடர்ன் பேர்வழி, " டார்கெட் கம்ப்ளீட் பண்ணிட்டேன் மச்சி. அதுக்குத்தான் பார்ட்டி. உங்க அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ் ஏரியாலதான் புதுசா வந்திருக்கிற யாரோ ஒரு இளிச்சவாயருக்கு கடைசி போனை வித்திருக்கேன். அப்பப்பா அதுக்காக போன்ல என்ன சர்க்கஸ் எல்லாம் பண்ண வேண்டியிருந்துச்சு. கேஸ் ஸ்டேஷன், ரெஸ்டரென்ட்டுன்னு ஏகப்பட்ட சோகக் கதை அவுத்து விட்டேன். ஸார் யாரு? நீங்க பீர் அடிப்பிங்கதானே? "

என் முன்னால் ஒரு பாட்டிலைத் திறந்து வைத்தான்.

Thanx: sathyarajkumar

Print this item

  இந்திய இராணுவம் செய்தது .....
Posted by: Mathan - 08-12-2004, 02:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (96)

<span style='font-size:21pt;line-height:100%'>ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - ஒல்காரின் அறிவிப்பு (http://www.selvakumaran.de/padam/OlK-Notice.pdf) என்ற செய்தியை யாழ் இணையத்திலும் தனது குடிலிலும் சந்திரவதனா இணைத்திருந்தார். அதனை படித்த இந்திய தமிழர் ஒருவர் (வந்தியத்தேவன்) தனது எண்ணங்களை குடிலில் எழுத தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவற்றை இங்கே இணைக்கின்றேன் படித்துவிட்டு கருத்துக்களை உங்கள் கருத்துக்களை அவற்றின் பின்னூட்டங்களிலோ அல்லது இங்கேயோ எழுதுங்கள்.</span>

எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள்

<span style='font-size:21pt;line-height:100%'>அன்பார்ந்த தோழியர்க்கு,

வதனா அவர்களின் பதிவினைப் படித்தேன். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் யாவர்க்கும் பொது. அதன் அடிப்படையில் அவரது படைப்பினை வரவேற்கின்றேன். கூடவே வெளியான கவிதைதான் வேதனையை வெளிப்படுத்துகிறது.

நாட்களின் நகர்வில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் இயலவில்லை
இன்னும்

இக்கவிதையைப் படித்தபின் என்னுள் பல கேள்விகள்.

எங்கேயோ இருக்கும் நார்வே, இலங்கை தேசத்தில் அமைதி ஏற்படுத்த தீவிரமாய் செயல்படுகிறது. முதன் முறை கையைச் சுட்டுக் கொண்டாலும், இந்தியா அமைதிப் பேச்சுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கும் சமயத்தில் இக்கவிதை எனது பலவீனமான பகுதியில் பலமாய் இடித்தது. காயங்கள் ஆறும் தருணத்தில், சிரங்கு சொறிந்த க(ரம்)விதை இது.

ஆமாம். வதனா, உங்களுக்கு இக்கவிதையில் முழு உடன்பாடா? இதுதான் அனைத்து ஈழத்தமிழர்களின் எண்ணவோட்டமா? அப்படியென்றால் உங்கள் தேசத்தில் யார் நெருப்பள்ளிக் கொட்டியது? இந்திய ராணுவமா? உங்கள் வானத்தின் மீது இருளள்ளிப் பூசியது யார்? இந்தியாவா? விடுதலைப் புலிகள் என்றால் அவரும் ஈழத் தமிழரா? இல்லை அவர்கள் வேறா?

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, எக்கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்? தனது 1,200 மகன்களை காவு கொடுத்து 3,000 மகன்களை காயப்படுத்தி இந்தியத் தாய் கண்ட பலன் என்ன? தனது மண்ணிலேயே ஒரு தலைவனை/தனையனை இரத்த சகதியில் அமிழ வைத்தென்ன புண்ணியம்? தடா, பொடா இன்னும் எத்தனை \"டா\"க்கள் காத்துள்ளன? என்னாலும் நடந்தவற்றை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை, இன்னும்.

உடனே கற்பழிப்பு, கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்துகிறேனென்று எண்ணாதீர். அது நான் சொல்ல வந்த கருத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

நியாயமான பின்னூட்டங்களுக்கும், எதிர் பதிப்புகளுக்கும் கண்டிப்பாய் என் பக்க நியாயத்தை நிலை நிறுத்துவேன்.

வந்தியத்தேவன். </span>

http://vanthiyathevan.blogspot.com/2004/07...og-post_25.html

Print this item

  ஒலிம்பிக்- 2004
Posted by: kavithan - 08-11-2004, 10:48 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (61)

<b><span style='font-size:30pt;line-height:100%'>ஒலிம்பிக்- 2004</span>


[b]<span style='font-size:25pt;line-height:100%'> வருகிற 13 ம் திகதி கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸில் ஆரம்பமாக உள்ள ஒலிம்பிக் போட்டி பற்றி வெளியாகின்ற தகவல்களையும், அதில் வெற்றி பெறுகின்ற வீரர்கள், அவர்கள் பெற்றுக் கொண்ட பதக்கங்கள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி</b></span>

Print this item

  காலம் சொல்லும் பதிலுக்காய்...!
Posted by: tamilini - 08-10-2004, 11:25 PM - Forum: கவிதை/பாடல் - Replies (25)

<img src='http://www.maps2anywhere.com/Graphics/India_-_Hindu-wedding-ceremony.jpg' border='0' alt='user posted image'>


விழிகளில் கண்ணீர் மல்க..
வீடு விட்டு வீடு மாறி.
விடைபெற்று
செல்ல போகிறாள்...

பெயரில் கூட சார்ந்து வாழும்...
பெண்ணின் பிறப்பு...
பிறந்ததன் பின் செல்வியாய்
தந்தையின் பின்..
இனி திருமதியாய் கணவனின் பின்...
ஒட்டுண்ணியாய் ஒட்டி...
இவள் வாழ்வின் ஓட்டம்....

இன்று இவளுக்கு இனிய நாளா...?
இல்லை உறவுகளை பிரியும்.. நாளா...?
இன்பமோ துன்பமோ தெரியவில்லை....ஆனால்
இதற்கு இவள் பட்ட துன்பம் கொஞ்சமில்லை....
இவளை பார்க்க வந்தவர்கள்
இலட்சங்களை கேட்க....
இலட்சங்களின்றி இவள் இருட்டினில்...

வந்தவர்கள் செல்லும் போது...
கூடவே இவளுக்கு ஒரு பெயரும் வந்தது....
அதிஸ்டம் இல்லாதவள் என்று....
இலட்சங்களை கேட்டவர்கள்
இவளை பார்க்கவில்லை...
இவள் மனதை பார்க்கவில்லை...
இலட்சங்களை இலட்சியங்களாய் கொண்டனர்...

அன்றாடம் அடுப்புக்கே...
அந்தி சாயும்...
இதில் இலட்சம் எங்கே....
ஒன்டியிருந்த வீட்டை விற்று
இன்று இவளுக்கு திருமணம்....
உடன் பிறப்புக்களின் வாழ்வு
கேள்விக்குறியாய்.....!

இவளுக்காக இலட்சங்கள் கொடுத்து
வாங்க பட்டவன்.. இவளுக்காய் வாழ்வானா...?
இல்லை வாழாவெட்டி எனும் இன்னொரு
பெயரை பெறுவாளா....?
காலம் சொல்லும் பதிலுக்காய்...!

Print this item