| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 437 online users. » 0 Member(s) | 434 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,635
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,060
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,463
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,482
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| பின்னனிபபாடகி ஜிக்கி மறைந்தார். |
|
Posted by: yarl - 08-16-2004, 08:51 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (5)
|
 |
பின்னனிபபாடகி ஜிக்கி மறைந்தார்
Playback singer Jikki dies of cancer
Monday, 16 August , 2004, 21:52
Chennai: Veteran South Indian playback singer of yesteryear, P G Krishnaveni, popularly known in the industry circles as Jikki, died of liver cancer at a private hospital in Chennai on Monday, hospital sources said.
She was 70 and is survived by two sons and four daughters. Her husband, A M Raja, also a famous playback singer of that period, pre-deceased her a few years ago.
Jikki was suffering from cancer for the past two years and was in and out of hospital all these days.
Jikki had sung nearly 10,000 songs in Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi and Sinhala during her career, spanning over five decades.
Born in Chittoor in Andhra Pradesh, she started her film career as a child artiste at the age of seven and switched over to singing at the age of 16. She had also sung several hit songs with her husband, Raja.
|
|
|
| நாணயமான புலி |
|
Posted by: தமிழன் - 08-16-2004, 03:30 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (5)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழ தங்க நாணயம்</span>
<img src='http://www.tamilstore.net/exi/Tamil-Eelam-Gold-Coin.jpg' border='0' alt='user posted image'>
[u]வரலாறு:
1990ம் ஆண்டு தமிழீழ மண்மீட்ப்பு போராட்டத்திற்க்கு தமிழீழ மக்களிடமே நிதி சேகரித்தன்ர். 1990 பங்குனி 11 அன்று சிறீலங்கா இராணுவத்திற்க்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கியது. ஒரு மாத காலம் நீடித்த இச்சமரின் இறுதியில் வைகாசி 1990 ல் தமிழீழ புலிகளே வெற்றி பெற்று யாழ்பாணம் அவர்கள் கட்டுப்ாபடிலே வந்தது.
பின்னர் மக்களிடம் சேகரித்த நிதியை அவர்களிடமே புலிகள் திருப்பிக் கொடுத்தனர். ஆம்... 22 கரட் தங்க நாணயமாக.
1995 ல் சிறீலங்கா இராணுவம் மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. பெரும்பாலான மக்கள் அச்சத்தில் தங்க நாணயத்ததை உருக்கி நகையாக்கிக் கொண்டனர். ஒரு சிலரிடம் இன்னும் இந்த நாணயம் உள்ளது.
உலக நாணயங்கள் சேர்க்கும் அவுஸ்ரேலிய பிரஜை ஒருவர் 2003 ல் யாழ்ப்யாணம் சென்று அரும்பாடுபட்டு இந்த நாணயம் ஒனறை தன்வசம் பெற்றுக்கொண்டார் தன்னிடம் இந்த நாணயம் இருப்பதால் தான் பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழன்
|
|
|
| மலருக்கொரு அவசர மடல்...! |
|
Posted by: kuruvikal - 08-15-2004, 10:06 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (23)
|
 |
<img src='http://p.webshots.com/ProThumbs/25/41525_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
மலரோடு ஒரு பிரிவு...
பாவம் மலர்
வாடியாதோ வதங்கியதோ
பூங்குருவி அறியுமா...???!
மனதோடு கூடிய மலர் சொல்லுது
மலரின் மனதோடு நோய் என்று...!
நோய் தீர்க்க வழி என்ன
பூங்குருவி தவிக்கிறது
காலம் விளையாட்டுக் காட்டி
வேடிக்கை பார்க்குது....!
நெஞ்சு நிறை நேசம்
துணைதேடி தூக்கிலாடுது.....!
உயிர் மூச்சளித்து
உயிர் தந்த மலரே
எங்கே ஓடினாய்....
கண்ணிமைப் பொழுதில் ஓடோடிவா
தாமதித்தால் குருவிதன் ஆவி
கூடுவிட்டோடிவிடும்....!
இப்படிக்கு பூங்குருவி...! :wink:
(யாவும் பொழுதுபோக்குக் கவிதைக்கான கற்பனை...!)
|
|
|
| DOOM 3 |
|
Posted by: Aalavanthan - 08-15-2004, 01:36 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (2)
|
 |
DOOM 3 game இங்கு தரவிறக்க முடியும்.
*ftp://elpinc:password@64.82.17.109:21/
முகவரியிற்கு முன்னால் கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரக் குறியினை நீக்கிவிட்டு ஏதாவது ஒரு ftp program கொண்டு இறக்கிக் கொள்ளலாம்
|
|
|
| மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி - 2 |
|
Posted by: Mathan - 08-14-2004, 11:19 PM - Forum: கணினி
- Replies (3)
|
 |
மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி - 2
சேவைப்பொதி என்றால் எதோ இடியாப்பம் சமாச்சாரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது "ஆனாலும் கந்தை அதிலுமோர் ஆயிரங் கண்" என்று இரட்டைப் புலவர்கள் பாடியதைப் போன்ற துளையுள்ள மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களுக்கு அவ்வப்பொழுது பொத்தல்களை அடைக்க மைக்ரோஸாப்ட் தரும் ஒட்டுகளை (Patches) ஒன்றாகப் பொதியாக்கித் தருவதற்குப் பெயர்தான் சேவைப்பொதி (Service Pack). நேற்று மைக்ரோஸாப்ட் தன்னுடைய வின்டோஸ் எக்ஸ்பி இயக்கு தளத்திற்கு இரண்டாவது சேவைப்பொதியை வெளியிட்டிருக்கிறது.
பல நாட்களாக (மாதங்களாக) இதோ வரப்போகிறது, அதோ.. என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த சேபொ-2 ஒரு வழியாக வந்திருக்கிறது. இதன் அளவு 250 மெகாபைட். (விண்டோஸ் 98 இயக்குதளத்தின் மொத்த அளவைவிட அதிகம்). மைக்ரோஸாப்ட் இந்தப் பொதியில் முக்கியமாக எந்த முன்னேற்ற சாதனங்களும் இல்லையென்றும், இயக்குதளத்தில் இருக்கும் பொத்தல்களை அடைப்பதுதான் இதன் முக்கிய வேலை என்று அறிவித்திருக்கிறது. அப்படியென்றால் 250 மெகாபைட் அளவிற்குத் தேவையான பொத்தல்கள் இருந்திருக்கின்றன என்றுதானே அர்த்தம்! (இது எல்லா ஒட்டைகளையும் அடைக்கும் என்று நம்பவேண்டாம், என்னுடைய கணிப்பில் இது பாதி ஓட்டைகளை அடைக்கும். கொஞ்சம் திறப்பு இருந்தாலும் பாதுகாப்பு அம்பேல்தானே, எனவே தலைவலிகள் உத்தரவாதமாகத் தொடரும்).
இந்த முறை மைக்ரோஸாப்ட் சேபொ-2 வெளியீட்டில் சில புதுமைகளைச் செய்திருக்கிறது. திறந்துவிடப்பட்ட நேற்று இது முக்கியமான நண்பர்களுக்கும் (OEM Partners), எம்எஸ்என் இணையச் சேவையை வாங்கியிருப்பவர்களுக்கும்தான் என்று சொல்லிவிட்டார்கள். அதாவது மற்றவர்கள் எல்லோரும் காத்துக்கிடக்க வேண்டும். பின் எனக்கு எப்படிக் கிடைத்தது என்கிறீர்களா? அதுதான் நேரடிப்பகிர்வு வலைகளின் (P2P Networks) அற்புதம்.
வெளியான சில மணிகளுக்குள்ளே இது நேரடி பகிர்வுவலைகளில் ஏற்றப்பட்டுவிட்டது. பிட் டாரண்ட் (Bit Torrent) என்று சொல்லப்படும் சிறு கருவியைப் பயன்படுத்த இது அடுத்த பத்து நிமிடங்களில் என் கணினியில். (இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி இன்னொருமுறை விரிவாக எழுத முயற்சிக்கிறேன்). சத்தியமாக மைக்ரோஸாப்ட்டே நேரடியாக இதை எடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தால்கூட 250 மெகாபைட் பொதியை அரைமணிநேரத்தில் (தோராயமாக ஒரு மெகாபைட் இரண்டு நொடிகளில் என்ற வேகத்தில் இறங்கியது) இறக்க முடியாது. இதற்குக் காரணம், என்னைப் போன்று இறக்கிக் கொண்டிருந்த பலரின் கணினிகளும் எனக்கு வழங்கிக்கொண்டிருந்தன (என் கணினியும் இறக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில் வழங்கு சேவையையும் செய்துகொண்டிருந்தது). இது நேரடி பகிர்வு வலைகளில் மாத்திரமே சாத்தியம். (இப்படியான உன்னத தொழில்நுட்பத்தை வழக்கம்போல அமெரிக்க பாடல்பதிவுக் கலைஞர்கள் குழுமமும், ஹாலிவுட்டும் சேர்ந்து சட்டவிரோதம் என்று அறிவிக்க வற்புறுத்த்திக் கொண்டிருக்கின்றன).
இன்னொரு வெளியீட்டுப் புதுமை. மைக்ரோஸாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சே.பொ-1 வெளியிடும்பொழுது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருப்பது சட்டபூர்வமானதா என்று சோதித்துவிட்டே அனுமதித்தது. (இது சட்டவிரோதமான நகல்கள் மேலதிக பயன்களை அனுபவிப்பதைத் தடுக்கும் முயற்சி). ஆனால் இந்த முறை உங்களிடம் திருட்டு நகல் இருந்தாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தாராளமாக அனுமதித்திருக்கிறது. காரணம், இந்த முறை பெரும்பாலும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான் சேவைப்பொதியில் இருக்கின்றன. அதிகபேர் பாதுகாப்பாக இருந்தால், வைரஸ்களும், எரிதங்களும் (காசு கொடுத்து வாங்கியவர்களுக்கு) பரவுவது குறையும்தானே.
மற்றபடி இதை நிறுவிப்பார்த்ததில் எந்தவிதமான விசேஷ முன்னேற்றங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. முக்கியமாக தீயரண் நிர்வாகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. பலரும் அகலப்பாட்டை இணைய இணைப்பில் நாளெல்லாம் கணினிகளைச் சும்மா இணைத்துவைத்திருக்கையில் தீயரண் வசதி மிகவும் முக்கியமானது. வைரஸ் தடுப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்காக எந்தக் கருவியும் இல்லை. என்னுடைய கணினியைப் பரிசோதனை செய்துவிட்டு "நீங்கள் புத்தம்புதிய ஸிமான்டெக் (நார்ட்டன்) ஆண்டிவைரஸ் வைத்திருக்கிறீர்கள். சந்தோஷம்" என்று முதுகில் தட்டிக் கொடுத்ததுடன் சரி.
ஆனால், கணினி பாதுகாப்பிற்காக மைக்ரோஸாப்ட் செய்திருக்கும் இந்த முயற்சியை மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும் (காலதாமதமாக நடந்திருந்தால்கூட).
Thanx:Venkat
|
|
|
| வசூல்ராஜா M.B.B.S |
|
Posted by: Mathan - 08-14-2004, 08:32 PM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் வித்தியாசமான கலகலப்பான காமெடி படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். கமலுடன் இயக்குனர் சரண், இசையமைப்பாளர் பரத்வாஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்நேகா ஆகியோர் முதன்முதலா இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
வசூலிக்க முடியாத கடன்களை வலுக்கட்டாயமாக வசூல் செய்து கொடுத்து, அதற்காக கமிஷன் வாங்கும் தொழிலைச் செய்யும் முரட்டு ரௌடி கும்பலின் தலைவன் கமல்ஹாசன். ஆனால் அதிலும் ஒரு நியாயம் பார்ப்பவர். அவருடன் பிரபு, கருணாஸ் இருக்கிறார்கள். ஊரில் வசிக்கும் அப்பா நாகேஷ், அம்மா ரோஹினி ஹட்டாங்குடி ஆகியோரிடம் அவர்கள் சந்தோஷத்திற்காக டாக்டர் தொழில் செய்வதாக பொய் சொல்லியிருந்ததால், அவர்கள் வரும்போது, குண்டர்பட்டறை மருத்துவமனையாக அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. மகனை உண்மையில் டாக்டர் என்று நினைத்துவிட்ட நாகேஷ் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி 'டீன்' ஆன தனது பழைய நண்பர் பிரகாஷ்ராஜின் மகள் ஸ்நேகாவை பெண்கேட்க குடும்பத்துடன் செல்கிறார்.
கமல் தனது சிறுவயதுத் தோழி ஸ்நேகாவுக்கு முன்னதாக போன் செய்து உண்மையைச் சொல்லி, அப்பாவின் சந்தோஷத்திற்காக மட்டும் பெண்பார்க்க வரும் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுமாறு கேட்டுக் கொள்கிறார். ஸ்நேகா கமல் விளையாட்டாகக் கூறுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே சமயம் கமல் பற்றிய உண்மை வேலைக்காரி மூலம் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வருகிறது. ஸ்நேகாவை பொய் சொல்லி அனுப்பிவிட்டு, பெற்றோருடன் வீட்டுக்கு வந்த கமலை அவமானப்படுத்தி விடுகிறார். மகன் டாக்டர் இல்லை என்று தெரிந்த நாகேஷ் மனம் நொறுங்கி ஊர் திரும்புகிறார்.
ரௌடியான கமல் அப்பாவுக்காகவும் பிரகாஷ்ராஜை 'டார்ச்சர்' பண்ணவும் டாக்டர் கிரேஸி மோகனை ப்ளேக்மெயில் செய்து நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாக பாஸ் பண்ணி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார். அங்கு அவர் எப்படி 'டீன்' பிரகாஷ்ராஜை டார்ச்சர் பண்ணினார், எப்படி பிரகாஷ்ராஜ் மகள் ஸ்நேகாவின் காதலை பெற்றார் என்பதும் அவரது பிரத்யேக 'கட்டிபிடி வைத்தியம்' எவ்வாறு மாயங்கள் செய்தது என்பதும் மீதிக்கதை.
ரௌடி மருத்துவக்கல்லூரி மாணவனாக இருக்கும் வித்தியாசமான பின்னணியில் கதை இருப்பதால், படத்தில் கலகலப்பான காட்சிகள் அதிகம். அதிலும் 'அமர்க்களம்' படத்தை பழைய சினிமா தியேட்டர் பின்னணியிலும் 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தை சிட்டி பஸ் பின்னணியிலும் எடுத்த இயக்குனர் சரணுக்கு சொல்லவா வேண்டும்? கமல், பிரபு இருவரும் ரௌடியாக இருந்தும் படத்தில் வன்முறையான காட்சிகளோ சண்டைகளோ தினிக்கப்படாதது ஒரு ப்ளஸ் பாயிண்ட். ஆனால் ரகசியாவின் கவர்ச்சியான பெல்லி டான்ஸை 'சீனா தானா' பாடலில் வியாபாரத்திற்காக திணித்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
கமல்ஹாசனின் வயதுக்கு மிகப் பொருத்தமான பாத்திரம். அத்துடன் பாத்திரத்திற்கேற்றாற்போல் தோன்றும்படி உடல் தோற்றத்தையும் கொண்டுவந்திருக்கிறார். முரட்டுத் தோற்றத்துடன் படம் முழுக்க அவர் காமெடி செய்தாலும், அவ்வப்போது நம்மை உருகவும் வைத்து விடுகிறார். மகன் டாக்டர் இல்லை என்று தெரியும் போது "உயிரை மட்டும் தனியா உருவிட்டியேடா" என்று உருக்கமாக நாகேஷ் சொல்வதும் கமல் பதைபதைப்பதும் இரு தேர்ந்த நடிகர்களை நமக்கு உணர்த்துகின்றன. 'ஸ்டமக் கேன்சர்' நோயாளி ஜெயசூர்யா ஆறுதல்படுத்தும்போதும், ஜெயசூர்யா வலியுடன் துடித்து இறக்கும்போதும், கமல் நம் உணர்வுகளை பிழிகிறார். 12 வருட கோமா பேஷண்ட்டுக்கும் முதியவர் காக்கா ராதா கிருஷ்ணனுக்கும் அவர் செய்யும் வித்தியாசமான ட்ரீட்மெண்ட்கள் அலாதியானவை.
கமலின் அஸிஸ்டெண்டாக வரும் வாய்ப்பு குறைவா, குறைக்கப்பட்டதா தெரியவில்லை. ஸ்நேகா கொடுத்த வேடத்தை சரியாகச் செய்திருக்கிறார். அவர் பிரகாஷ்ராஜின் மகள் என்பது கடைசி வரை கமலுக்கு தெரியவில்லை என்பது உலகமகா உடான்ஸ். 'சிரிப்பு வைத்தியம்' செய்து கொள்ளும் பிரகாஷ்ராஜ் கேரக்டர் வித்தியாசமாக இருந்தாலும், 'சிரிப்பு வைத்தியம்' திரும்ப திரும்ப 'ரிபீட்' ஆவதால் போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. அன்பான அணைப்பை மகன் கமலுக்கு தரும் ரோஹினி ஹட்டாங்குடியின் முகம் பாசத்தை பொழிகிறது. கருணாஸுக்கும் வாய்ப்பில்லை. மாளவிகா மிகச்சிறய ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.
வைரமுத்துவின் பாடலுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். 'கலக்கப் போவது யாரு', 'சீனா தானா' ஹிட் ரகம். 'சீனா தானா' பாடலை கருணாஸின் மனைவி கிரேஸ் பாடியிருக்கிறார். வெளிநாட்டுப் பாடல் காட்சிகளில் ஏ. வெங்கடேஷின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. கிரேஸி மோகனின் வசனம் ஓ.கே.
'வசூல்ராஜா' வசூலித்து விடுவார்.
Thanx: CineSouth
முடிந்தால் ஒரிஜினல் முன்னாபாய் M.B.B.S ஐயும் பாருங்கள் - BBC
|
|
|
| யேர்மனியில் குறும்பட நிகழ்வு |
|
Posted by: Manithaasan - 08-14-2004, 02:14 PM - Forum: குறும்படங்கள்
- Replies (2)
|
 |
யேர்மனியில் குறும்பட நிகழ்வு
நண்பர்களே!
எதிர்வரும் ஓகஸ்ட் 15ம் திகதி (15-08-2004)Dornseiferweg -Gemeinde Eslohe மண்டபத்தில் இரு நிகழ்வுகளை நடாத்த இருக்கின்றோம்.
நிகழ்வு – 1. கருத்தரங்கம் நேரம். 14.00
முதுபெரும் பத்திரிகையாளரான எஸ்.எம். கோபாலரத்தினம் (கோபு) அவர்களின் நு}ல்களான:
- ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை. - அந்த ஒரு உயிர் தானா உயிர்.
- பத்திரிகைப் பணியில் அரை நு}ற்றாண்டு.
ஆகியவை பற்றிய கருத்தரங்கம். இலக்கிய ஆய்வாளர்கள் கருத்துரை வழங்குகிறார்கள்.
நிகழ்வு – 2. சலனம் வழங்கும் புகலிடக் குறும்பட மாலை. . (பாPஸ் தமிழர் சினிமாக்கலை ரசனை மன்றம்) நேரம். 17.00
1. அழியாத கவிதை. (21 நிமிடங்கள்) அஜீவன் - பிரித்தானியா.
2. தாகம். (15 நிமிடங்கள்) ஓசை மனோ - பிரான்ஸ்.
3. கனவுகள். (27 நிமிடங்கள்) கலைக்கண் பாலராஜா - ஜேர்மன்.
4. எச்சில் போர்வை. (11 நிமிடங்கள்) அஜீவன் - சுவிஸ்.
5. விலாசம். (17 நிமிடங்கள்) வதனன். - பிரான்ஸ்.
6. நிழல் யுத்தம். (15 நிமிடங்கள்) அஜீவன் - சுவிஸ்.
புகலிடத்திலும் தன் கலைப்பணிகளைத் தொடரும் கலைஞன் நாச்சிமார் கோவிலடி ராஜன் கௌரவிப்பு.
கலந்துரையாடல் - திரை இரசனை.
நன்றி. - ஈழவர் சினி ஆட்ஸ் எஸ்.ஏ. ஜோசப், திரைக்கலை ஆர்வலர்கள் அஜீவன், வதனன், ஓசை மனோ, மற்றும் புகலிடத் திரை வளர்ச்சியில் அயராத ஒத்துழைப்பை வழங்கும் சமூக ஆர்வலர்கள்.
குறும்படம் பற்றிய தொடர்புகட்கு:- சலனம் e-mail address: kmukunthan@hotmail.com
நிகழ்ச்சித் தொடர்புகளுக்கு. தொலைபேசி இலக்கம். 0049-(0)-2973-818384 e.mail-kabilan@web.de
|
|
|
| ஆணுறைகள் |
|
Posted by: Mathan - 08-13-2004, 06:49 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (2)
|
 |
ஆணுறைகள்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரை பதின்மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது.
தமிழில் மிகவும் குறைவாக எழுதப்பட்ட/பேசப்படும் விஷயங்களுள் ஒன்று ஆணுறைகள். இந்தியா அவசரநிலையில் இருந்த எழுபதுகளில் சஞ்சய்காந்தியின் வற்புறுத்தலில் அகில இந்திய வானொலி இரவு ஒன்பது மணிக்குத் தவறாமல் நிரோத் உபயோகியுங்கள் என்று கணக்கு வாத்தியாரைப்போன்ற குரலில் சொல்ல ஆரம்பித்து இப்பொழுது கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகப்போகிறது. குடும்பக் கட்டுப்பாடும், எய்ட்ஸ் வியாதியுமான இந்த நாட்களிலும் இன்னும் ஆணுறைகளைப் பற்றி பொதுவில் யாரும் பேசுவதில்லை. சராசரி இந்தியனின் தினசரி வாழ்க்கையை அதிகமாகப் பாதிக்காத உலகளாவிய சூடேற்றம், கணினி வைரஸ் இத்யாதிகளைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள்கூட ஆணுறைகளைக் குறித்து மௌனம் சாதிப்பது புரியாத புதிராக இருக்கிறது. சிகரெட் போன்ற உயிரைக்குடிக்கும் வஸ்துக்களை வாங்கவும் பொதுவில் பயன்படுத்தவும் கூச்சமும் தயக்கமும் காட்டாத சமுதாயம், நோயிலிருந்து காக்கக்கூடிய, பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சமூகத்திற்குப் பயனுள்ள ஆணுறைகளை வாங்கத் தயக்கம் காட்டுவது சோகமான விஷயம்தானே.
இரண்டு கைகளையும் பயன்படுத்த முடியாதபடி சிலுவையில் ஆணியடித்துக் கொல்லப்பட்ட ஏசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆணுறைகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. கி.மு ஆயிரம் ஆண்டுகளில் மெல்லிய துணிகளை சுற்றிக்கொள்வதன்மூலம் நோய்களைத் தடுக்கமுடியுமா என்று எகிப்தியர்கள் முயற்சி செய்துபார்த்திருக்கிறார்கள். தொடந்து பிரெஞ்சுக் குகை ஓவியங்களிலும், ரோம ஓவியங்களிலும் ஆணுறைகளைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. சீனர்கள் பட்டுத்துணிகளையும் மெல்லிய காகிதங்களையும் ஒருவித எண்ணெய்களில் தோய்த்து தங்கள் ஆணுறுப்புகளின்மீது சுற்றிக்கொண்டார்கள் (சை! இந்த இடத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமால் 'ஐயோ பத்திக்கிச்சு' என்ற பாட்டு நினைவிற்கு வருகிறது). ஜப்பானியர்கள் ஆமையோட்டினுள்ளே இருக்கும் மெல்லிய சவ்வுகளைப் பயன்படுதினார்கள். இத்தாலியர்கள் இந்த விலங்குச் சவ்வுகளை சில மூலிகைச் சாறுகளில் தோய்த்துப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் பயன் அதிகரிப்பதைக் கண்டார்கள். தற்காலத்தில் உலக ஆணுறை உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தை வகித்தாலும் இந்தியாவில் இவற்றின் வரலாறு சரியானமுறையில் பதிவு செய்யப்படவில்லை.
தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வரலாற்றில் ஆணுறை பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கின்றது. பல முறை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைகள் தொடங்கி, வைதீக இஸ்லாமியர் வாரியாக, ஆயுதம்தாங்கும் இந்து பஜ்ரங்தள் வரை ஆணுறை கடவுளுக்கு எதிரானதாகவே அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. இருந்தபொழுதும் தொடர்ந்தும் ஆணுறைகளின் புழக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்களாக இரண்டைக் கூறலாம்; தொடர்ந்தும் முன்னேறிவரும் பாலிமர் தொழில்நுட்பம், அந்தப் பாலிமர் தொழில்நுட்பத்தைத் தன்னுடைய சந்தோஷத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதில் மனிதனுக்குள்ள அடிப்படை ஆர்வம்.
முதலில் ஆணுறை என்பது என்ன? செயற்கை பாலிமர்களால் ஆன, அழுத்தத்திற்கு உள்ளாகும்பொழுது தன் சமநிலைப் பரப்பிலிருந்து பலநூறு மடங்குகள் விரியும் தன்மைகொண்ட சவ்வுபோன்ற உறை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், ஆண் உறுப்புகளின் மீது சுற்றப்படும் துணி, விலங்குச் சவ்வுகள், செயற்கை பாலிமர் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி அடிப்படைத் தொழில்நுட்பம் வேறுபட்டாலும் இவற்றின் இலக்கு ஒன்றுதான் திடீர்ப்பெருக்கத்தால் தோன்றும் பல மில்லியன் விந்துக்களின் இயக்கத்தை தம்முள்ளே கட்டுப்படுத்தி நிறுத்திவைப்பது, அதன் மூலம் 1. அந்த விந்துக்களை உண்டாக்கும் செயலில் துணையாக இருக்கும் இணையை அடையவிடாமல் விந்துக்களைத் தடுப்பது, 2. இன்னபிற உயிரியல் ரீதியான திரவங்களின் பரிமாற்றத்தைத் தடுப்பதன்மூலம் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி பால்வினை நோய்களின் பரவலைத் தடுப்பது. முந்தைய விளைவு கருத்தரிப்பைக் கட்டுப்படுத்துகிறது, பின்னது உயிரழிவைத் தடுக்கிறது. இப்படி படைத்தல், காத்தல், அழித்தல், எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் தர்க்க ரீதியாவும், தத்துவரீதியாகவும் ஆணுறைகள் அவற்றுக்குரிய இடத்தைப் பெறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
தற்காலத் தொழில்நுட்பத்தில் ஆணுறைகள் பலவிதங்களில் உருவாக்கப்படுகின்றன.
சாதாரணம் - அவ்வளவுதான். பயன்கடந்த பிற விஷயங்களுக்கு இவற்றில் இடமில்லை.
தடிப்பானவை - அசாதாரண நுழைவுகளுக்கான இவை பலவித தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே வெளிவருகின்றன. ஆதிகாலங்களில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட இந்தியாவின் நிரோத் இந்த வகையில் அடங்காது.
உயவு குறைக்கப்பட்டவை - எளிதான பயனுக்கான இவற்றில் பலவிதமான எண்ணெய் கலவைகள் பூசப்படும். இவற்றில் சில தற்செயலாக சவ்வூடுபரவும் திரவங்களில் இருக்கும் விந்துக்களை அழிக்கவல்லவை.
வரியோடிவை - முன்னதற்கு மாறாக, உராய்வை அதிகரிக்க சில ஆணுறைகளில் முழு நீளத்திற்கோ அல்லது நுனியில் ஒன்றிரண்டு சென்டிமீட்டர்களுக்கோ தடிப்பான வரிபோன்ற அமைப்பில் உருவாக்கப்படுகின்றன.
புள்ளி போட்டவை - அ·தே.
நிறமானவை - பொதுவில் வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்துகொண்டிருந்த ஆணுறைகள் தற்பொழுது பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன. இருட்டில் நின்றொளிரும் இவை ஆர்வத்தைத் தூண்ட உதவுகின்றன.
வாசனையுள்ளவை - மேற்படி வகையில் அந்த நேரத்தில் கண்களை மூடிக்கொள்பவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்படுபவை.
சுவையுள்ளவை - இன்னும் கொஞ்சம் அபத்தம் கூடுதல்.
ஒவ்வாமையற்றவை - பலருக்கும் இயற்கை மற்றும் செயற்கை இரப்பர் தயாரிப்புகள் அரிப்பை உண்டாக்கக் கூடும். இப்படிப்பட்டவர்களுக்கு சிறப்பான திரவக்கலவைகளில் இடப்பட்டு பூச்சுகளுடன் தயாரிக்கப்படுபவை உதவக்கூடும்
இன்னும் அச்சிடப்பட்ட ஆணுறைகள், கார்ட்டூன்கள் வரையப்பட்டவை, இத்யாதிகளும் சந்தையில் கிடைப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இப்படி பல விதங்களில் தயாரிக்கப்பட்டாலும் இவற்றின் அடிப்படை பயனாக வரையறுக்கப்பட்ட திரவத்தடுப்பை உறுதிசெய்யவும், அடிப்படை குணங்களான நீள்தன்மை, விரிதன்மை, கிழியாமை போன்றவற்றை உறுதி செய்யவும் பல சோதனைகளும் தரக்கட்டுப்பாடுகளும் உண்டு. உலகப் பொது தர நிர்ணய நிறுவனம் (International Organization for Standardization) ISO 4074:2002 ஆணுறைகளின் தரத்தை நிர்ணயம் செய்யத் தேவையான சோதனைகளைப் பரிந்துரைக்கிறது. இவற்றையே இன்னும் கொஞ்சம் கடுமையாக்கி ஐரோப்பிய தரநிர்ணயம் (EN 600) பரிந்துரைக்கிறது.
சாதாரணமாகப் பொதுவில் பேசத்தயங்கும் நம் சமூகத்தில் ஆணுறைகளை கடையில் சென்று வாங்குவது மிகவும் சிக்கலான காரியமாக அறியப்படுகிறது. பலரும் கடைகளில் சென்று பொருளின் பெயரைக்கூறாமல் தயாரிப்பாளரின் பெயரைச் சொல்லியே வாங்கிப் போவதாக மருந்துக்கடை வைத்திருக்கும் என் நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார். (சிகரெட் போன்றவற்றிலும் இப்படித்தான் என்றாலும் இந்தப் பழக்கத்தின் அடிப்படிக் காரணங்கள் முற்றிலும் வேறானவை).
நீடித்து உழைக்கக்கூடியது, நன்றாக விரியக்கூடியது என்றெல்லாம் நீட்டிக்கொண்டு போகாமல் சுருக்கமாக 'கேஎஸ்' என்ற இரண்டே எழுத்துக்களின் மூலம் எளிதில் உணர்த்துவதில் வெற்றிகண்டது அந்த நிறுவனத்தின் மாபெரும் வியாபார உத்தி என்று சொல்கிறார்கள். மருந்துக்கடையில் பலவருடங்களாக வேலைசெய்யும் என்னுடைய நண்பர் தயக்கத்துடன் ஆணுறை வாங்க வருபவர்களுக்குக் கூறும் அறிவுரைகள்;
1. நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுமாக கடைக்கு வரவும்
2. குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று பொருள்களை ஆணுறைகளுடன் சேர்த்து வாங்குவது உசிதம். அவையும் மாத்திரைகளாகவும் மருந்துகளாகவும் இருந்தால் நல்லது. "சார் பத்து பரால்கான், முப்பது ஆஸ்ப்ரின், பதினைஞ்சு ஜெல்லுசில், இருபது ட்யூரெக்ஸ், பத்து டிஸ்பிரின், இருபது டயானில்" என்று சொல்வது மிகவும் எளிது.
3. அப்படிச் சமாச்சாரத்தைக் குறிப்பிடும்பொழுது எந்தத் தயக்கமும் இல்லாமல் நேராக கடைக்காரரின் முகத்தைப் பார்த்துப் பெயரைத் தெளிவாகச் சொல்லவும். இது திரும்பத்திரும்ப கடைக்காரர் அதைக் கேட்டு உறுதிசெய்துகொள்வதைத் தவிர்க்க உதவும்.
4. இப்படிப் பெயர் சொல்லி வாங்கத் தைரியமில்லாதவர்கள், ஒரு சீட்டில் எழுதிக் கொண்டுவரலாம் "மைசூர் சாண்டல் சோப் - 1, க்ளியெரஸில் க்ரீம் - 1, காமசூத்ரா - 10, க்ளாக்ஸ்கோ பிஸ்கெட் - 1" ரீதியில் தொந்தரவில்லாத குடும்பச் சாமன்களுடன் கூடச் சேர்த்துக்கொள்ளலாம்.
5. முதன் முறையாக வாங்கவரும் பையன்களுக்கு - ஓரளவுக்கு முகத்தில் மீசையுடன் வருவது நல்லது. குறைந்த பட்சம் ஏதாவது கேள்வி கேட்டால் "எங்க அம்மாதாங்க வாங்கிக்கிட்டு வரச்சொன்னாங்க" என்று புலம்பாமல் இருக்கும் தைரியத்துடன் வரவேண்டும்.
வாங்கியவுடன் வீட்டுக்கு வந்து கீழ்க்கண்ட விபரங்களைச் சோதிக்கவும், 1. தயாரிப்பு தேதி, 2, காலாவதி தேதி, 3. தரநிர்ணயம் செய்யப்பட்டதா? 4. அதனுடைய உறை சேதமில்லாமல் இருக்கிறதா?
ஆணுறைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இங்கே சொல்லிக்கொடுக்க முயற்சி செய்யப்போவதில்லை. (சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்று சொன்னதில் இதற்கும் இடமுண்டு). ஆதிகாலங்களில் கிராம சேவகர்கள் நிரோத் பயன்பாட்டைல் கட்டைவிரலைக் காட்டி விளக்கியதாகச் சொல்வார்கள். மக்களும் "ஆஹா, இவ்வளவு சுலபமாக இருக்கிறதே என்று கட்டைவிரலைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவின் ஜனத்தொகை இன்னும் ஒரு சில இலட்சங்கள் கூடிப்போனது. எனவே, என்னச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி கொஞ்சம்;
1. பாதி காரியத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்தி பிரயோசனமில்லை. வருமுன் காப்பதே நலம்.
2. உங்களைப் போலல்ல ஆணுறைகள், ஒருதடவைதான் அவற்றின் பயன். இவற்றைத் துவைத்தோ, துடைத்தோ, திருப்பிப் போட்டோ பயன்படுத்த முடியாது. அப்படிச் செய்யமுயற்சி செய்தால் மொட்டைமாடியில் கொடியில் காயப்போடாதீர்கள். காக்கைகளுக்கு இவற்றின்மீது ஆர்வம் அதிகம்.
3. கூடுமானவரை இடையில் தங்கும் காற்றைத் தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள். பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டு மையங்கள் இவற்றின் முக்கிய பிழைகள் காற்து அழுத்தத்தாலே உருவாகின்றன என்று சொல்கிறார்கள். (காற்றடைத்த பையை இகழ்ந்த சித்தர்களையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்).
காலம் காலமாக ஆணுறைகளுக்குப் பிற உபயோகங்களும் கண்டறியப்பட்டிருக்கின்றன;
1. நீர் குண்டுகள் - மேற்கத்திய நாடுகளில் இளைஞர்கள் பங்குபெறும் போராட்டங்களில் நீர் நிரப்பப்பட்ட ஆணுறைகள் காவலர்கள் மீது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
2. மலையேறுபவர்கள் கனமான தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதற்குப்பதிலாக, நீர் நிரப்பப்பட்ட ஆணுறைகளைச் சாதாரண துணிப்பைகளில் எடுத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள்.
3. கல்லூரி மாணவர்களின் பொழுதுபோக்கு.
4. இவை எல்லாவற்றுக்கும் மேலாக - வீட்டில் ஒழுகும் தண்ணீர்க் குழாயைச் சரிசெய்ய ஆள்வரும்வரை, அதன் மூக்கில் ஆணுறையை மாட்டிவிட்டு வீடு சேதமாகாமல் தடுக்கமுடியும். முன் ஜாக்கிரதை அதிகம் உள்ளவர்கள் ஒன்றுக்கு இரண்டாகப் பயன்படுத்தலாம்.
இந்தக் கட்டுரையில் ஆணுறைகளைப்பற்றி பொதுவில் எழுதப்பட்டிருந்தாலும், சமீபகாலங்களில் பெண்ணுரைகளும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பற்றி விபரம் தெரிந்த யாராவது எழுதினால் சந்தோஷம்.
Thanx: venkat
|
|
|
| பைபிள் சொல்லும் காதல் ரூல்ஸ்! |
|
Posted by: AJeevan - 08-13-2004, 04:57 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (2)
|
 |
<img src='http://www.acm.org/crossroads/xrds1-4/gfx/netlove_small.gif' border='0' alt='user posted image'>
<span style='color:green'><b>பைபிள் சொல்லும் காதல் ரூல்ஸ்! </b>
பைபிளில் காதலுக்கென்று தனியாக ரூல்ஸ் எல்லாம் எழுதி வைக்கவில்லை. ஆனால்
அதில் பல விதிமுறைகள் காதலுக்குப் பொருந்தும்...
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். - ரோமன்ஸ் 15:7; 14:13
ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருங்கள். - மார்க் 9:50; ரோமன்ஸ் 12:16
ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருங்கள். - ரோமன்ஸ் 12:10
ஒருவரை ஒருவர் நாடுங்கள்; ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
- 1 கொரிந்தியன்ஸ் 11:33
ஒருவர் சுமையை ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். - காலத்தியன்ஸ் 6:2
பரஸ்பரம் மன்னித்துக்கொள்ளுங்கள்.- எஃபீசியன்ஸ் 4:32; கொலோசியன்ஸ் 3:13
ஒருவரிடம் ஒருவர் பணியுங்கள். - எஃபீசியன்ஸ் 5:21
ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லாதீர்கள். - கொலோசியன்ஸ் 3:9
பரஸ்பரம் சந்தித்துக்கொள்வதைக் கைவிடாதீர்கள். - ஹீப்ரூஸ் 10:25
ஒருவரிடம் ஒருவர் பொறுமை காட்டுங்கள். - எஃபீசியன்ஸ் 4:2
</span>
நன்றி : வெப் தமிழ்
|
|
|
|