![]() |
|
செருப்பு - குறும்படம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: செருப்பு - குறும்படம் (/showthread.php?tid=6792) |
செருப்பு - குறும்படம் - yarlmohan - 08-15-2004 செருப்பு - காலுக்கு செருப்பு வேண்டுமென கேட்ட சிறுமிக்கு கண்ணி வெடியின் கோரம் அதை சாத்தியப்பட வைத்ததா? http://www.yarl.com/audio_video/archives/2...08/000670.shtml - shanmuhi - 08-15-2004 மனதை நெகிழவைக்கும் சோகம் நிறைந்த குறும்படம் - tamilini - 08-16-2004 மனதை உருக்கிவிட்டது... நன்றிகள்...! - kuruvikal - 08-16-2004 ஈழத்தில் எப்ப பாரு சோகம் தானா... எப்ப தான் சந்தோமா ஈழத்தவரைக் காட்டுவார்களோ.....???????! காலமும் தான் பதில் சொல்ல வேண்டும்....! :roll: - Eelavan - 08-17-2004 ஏன் குருவிகளால் ஊரிலிருந்து வரும் பூப்புனித நீராட்டு விழாக்கள் திருமணவிழாக்கள் குறும்படங்களாக்கப்பட்டு வருகின்றன தானே அவற்றிலெல்லாம் சந்தோசமான ஈழத்தையும் ஈழத்தவரையும் தானே காட்டுகிறார்கள் - kuruvikal - 08-17-2004 பூப்புனித நீராட்டு விழாவா...அப்படி என்றால் என்ன எதற்காக விழா...????! திருமணம் விழாவா...???! இல்லை இருமனம் ஒருமித்ததை சமூகத்துக்குக் காட்டும் அறிவிப்பா....???! அங்கு மகிழ்ச்சிக்கு வரையறை உண்டு....! ஈழத்து மனிதனை துன்பத்தில் துவண்டுவிடுபவனாகவும் இன்பமே அவனுக்கு கிடையாத ஒன்று போலவுமே பல ஈழத்தவர் படங்களில் காட்டப்படுகிறது... இந்தச் செருப்பையும் அம்மா நலமா போண்ற படங்களையும் பார்த்துவிட்டு ஒரு வேற்று நாட்டவர் கேட்ட கேள்வி உங்கள் மக்கள் மகிழ்ச்சி என்று ஒன்றை அறியாதவர்களா எப்போதும் ஏக்கத்தோடு வாழ்பவர்களாகத்தானே காட்டப்படுகின்றனர் என்று.....அது உண்மையா என்று....???! அதுதான் எங்கும் எப்போதும் யதார்த்தமா...?????! ஈழம் பற்றிய போரியல் அரசியல் பின்னணி புரியாதவர்களால் இப்படம் பார்க்கப்படும் போது எழும் கருத்தைத்தான் நாம் இங்கு தந்தோம்.... எனவே இப்படியான படங்களைக் கொடுக்கும் போது அந்த மக்களின் வாழ்வியல் கோலங்களுக்கான அடிப்படைகளை சிறிது காட்டுவது பார்வையாளனிடம் அதிகம் தாக்கத்தை உண்டு பண்ணும் என்று நாம் கருதுகின்றோம்....! - AJeevan - 08-18-2004 [size=15]<b> சில வித்தியாசமான பார்வைகள்:-</b> :!: பெரும்பணம் போட்டு திரைப்படம் எடுத்து குப்பைக்குப் போன சம்பவங்களும் உண்டு.காரணம் அங்கே நல்ல கரு இல்லாதது.ஆனால் இங்கே குறும்படத்திலேயே நல்ல ஒரு கருத்தினை மக்களைச் சென்றடையும் வண்ணம் கொடுத்தது உங்கள் வெற்றியல்லவா?சுவரை விற்றுச் சித்திரம் வாங்கியது போல அச்சிறுமிக்கு காலை இழந்தபின்னர் செருப்பு கிடைப்பது மனதைத் தைத்தது.இலங்கையில் ஏற்படும் கன்னிவெடியின் கோரத்தினை மிகவும் யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறீர்.கேமரா நன்றாகக் கையாளப் பட்டுள்ளது.அதிலும் சிறுகச் சேர்த்த தன் காசை அம்மா உண்டியலில் இருந்து வெளியெடுக்கும்போது அச்சிறுமியின் பார்வை!கன்னிவெடிக்குத் தெரியுமா எதிரி யாரென்று?குறும்படம் முடிந்ததும் மனதில் ஒரு சோகம். -முத்தமிழ் mantram@muthamilmantram.com :!: ţΠÀ¼õ §À¡Ä ¬É¡ø þýÛõ ¬ÆÁ¡ö (º¢ÚÁ¢ìÌ §¿÷󾾡ø þÕì¸Ä¡õ) ´Õ ¯½÷× ²üÀÎò¾¢ÂÐ. ¯îºÃ¢ôÒ, «¾ý á¸õ §À¡ýÈ ¦¾¡É¢ Á¢¸×õ À¢Êò¾¢Õó¾Ð. ¿ýÈ¢ ¿ñÀ§Ã. -þÇó¾Á¢úøÅý tsmoorthy@hotmail.com இப்படியான பாராட்டுகள் வளரும் கலைஞர்களுக்கு நிச்சயம் உரமாக இருக்கும். - AJeevan - sOliyAn - 08-18-2004 உண்மை! செருப்பு குறும்படத்தை நானும் பார்த்தேன்.. அதில் வரும் உரையாடல்கள் எப்பகுதியில் வழக்கமாக உள்ள தமிழ் என்பதை புரிந்துகொள்ள முடியவில்ல. உதாரணமாக, 'உங்களை பார்க்க யாரோ வந்திருக்கிறார்" என்றொரு வசனம்.. எனது ஊரில் 'உங்களை பார்க்க யாரோ வந்திருக்கினம்" என பாவிப்பார்கள். சில இடங்களில் வலிந்து வசனங்களை புகுத்தினமாதிரி தோன்றினாலும் மொத்தத்தில் தரமான படம். சம்பந்தப்பட்டவர்கள் ஊக்கப்படுத்தப்படவேண்டியவர்களே! ஆனால்--- குருவிகளின் ஆதங்கத்தையும் புறக்கணிப்பதற்கில்லை. பொதுவாக, தமிழ் பிரதேசங்களிலிருந்து வரும் படைப்புகளில் சந்தோசமான சமாச்சாரங்களுக்கு மிகவும் பஞ்சம் என்பதை ஒத்துக்கொண்டுதானாக வேண்டும். ஆகக் குறைந்த பட்ச மகிழ்ச்சியான சம்பவங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இடம்பெறாவிட்டால் அவன் வாழும் வாழ்வில் ஏதோ குறை என்றுதானே பொருள்.. ஆக, அங்கே உள்ளவர்கள் எல்லோரும் ஒரு குறையுடனேயே வாழ்கிறார்கள் என்ற பொதுவான தோற்றம் ஏற்படுவதை படைப்பாளிகள் தவிர்த்து.. அந்த மக்கள் எந்த நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.. அது எந்த விதத்தில் அவர்களை சந்தோசமாக வைத்திருக்கிறது என்பதனையும் வெளிக்கொணர்ந்தால் நன்றாக இருக்கும். - AJeevan - 08-18-2004 இது ஒரு முழு நீளப்படமல்ல சோழியன். அதுவும் போருக்கு பின் வேற்று மக்கள் காண வேண்டிய நிகழ்வுகளையும் அங்கே தினம் தினம் என்ன நடக்கிறது என்பதையும் காட்டும் குறும்படமே இது. இதற்குள் பெரிதாக தேட முயல்வது நியாயமில்லை என்றே தோன்றுகிறது. காரணம் இவ்வளவு கொடிய யுத்தத்துக்கு பின்னர் இப்படியும் இயங்க முடிகிறது என்பதுதான் தன் நம்பிக்கை. காலை இழந்த அந்த பிஞ்சுக்கு இருக்கும் தன் நம்பிக்கை நம்மிடமில்லையா என கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இவ்வளவு சுகமும் வசதிகளும் இருக்கும் இடத்தில் நம்மால் சாதிக்க முடியாததை அவர்கள் சாதித்திருககிறார்கள். அது பெரிய விடயம். <b>வாழ்த்தவேணும். அவர்கள் வளரவேணும்.</b> யுத்தத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் விபரீதமே கருவாகியிருக்கிறது. இங்கு காதல்-வீரம் இப்படியான சினிமாத்தனங்களுக்கு இடமில்லை. குருவியின் ஆதங்கம் நிறைவேறும் காலம் ஒன்று உண்டு. அதுவரை பொறுப்பது நமது கடமையல்லவா? - kavithan - 08-21-2004 நல்ல படம்.. உண்மை சம்பவங்களை அப்படியே சித்தரிக்கின்றது.... இது போல் பலவற்றை நானும் நேரில் கண்டுள்ளேன்... நல்ல முயற்சி .. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்......... ஆனால் படத்தில் ஒலியை இணைக்கும் போது பல இடங்களில் காட்சிக்கும் கேட்கும் ஒலிக்கும் இடையில் நேர வித்தியாசம் இருக்கின்றது என நினைக்கின்றேன் அது தவிர படம் சூப்பர்.... பல மக்களின் உள்ள குமுறல்களை வாழும் வாழ்க்கையை ஒற்றை காலில் நின்ற அச் சிறுமியின் ஒரு கால் செருப்புக்குள் ஒன்றாக சேர்த்து செருப்பு என்று பெயரிட்டு குறும் படத்தில் எமது மக்களின் நீண்ட பயணத்தை எடுத்து காட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் - yarlmohan - 08-21-2004 kavithan Wrote:...ஆனால் படத்தில் ஒலியை இணைக்கும் போது பல இடங்களில் காட்சிக்கும் கேட்கும் ஒலிக்கும் இடையில் நேர வித்தியாசம் இருக்கின்றது என நினைக்கின்றேன் .... இது எமது பக்கத் தவறே. படத்தினை இணையத்தில் பார்ப்பதற்கு ஏற்றது போன்று மாற்றும்போது இப்பிழை ஏற்பட்டுவிட்டது - kavithan - 08-21-2004 தகவலுக்கு நன்றி அண்ணா..... நான் நினைத்தேன் இவ்வளவு திறமையாக செய்தவர்கள் எப்படி இப்பிழையை விட்டிருப்பார்கள் என்று... . அது பெரிய பிரச்சனை அல்ல நீங்கள் இப்படங்களை எமக்கு பார்ப்பதற்காக வழங்குவதே காணும் நான் யாழ் இணையத்தில் மட்டும் தான் குறும்படம் பற்றி அறிந்ததும் பார்ப்பதும்... அந்த வகையில் தற்போது நீங்கள் எமக்கு வழங்கிய இரண்டு குறும் படங்களுக்கும் நன்றிகள் பல - vasisutha - 08-23-2004 அருமையான படம் நன்றி. செருப்பு பற்றி - tholar - 08-25-2004 நானும் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. என் பாராட்டுக்கள். தோழர் - kirubans - 01-23-2005 திண்ணையில் வந்த குறிப்பு. http://www.thinnai.com/le0120054.html - Niththila - 01-23-2005 நல்ல படம் உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- patiyaatiyaar - 01-24-2005 <span style='font-size:25pt;line-height:100%'>மிகவும் நல்ல படம். ஒரு திருத்தம்: இரத்தம் சொட்டும் காலுக்கு மருந்துகட்டிய நிலையில் வீடு செல்வது முரணானது. அக்காட்சியில் அதனை தவிர்த்திருக்கவேண்டும். </span> - கீதா - 08-11-2005 நல்ல படம் நன்றி அன்புடன் jothika |