![]() |
|
நம்ப முடியுமா....? (shanthy) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: நம்ப முடியுமா....? (shanthy) (/showthread.php?tid=6800) |
நம்ப முடியுமா....? (shanthy) - shanthy - 08-13-2004 நம்ப முடியுமா....? (வரிகள் படிக்க முன்னம் வாசகர்க்கு சிலவரி. இக்கவி யாரையும் குத்தவோ குதறவோ எழுதப்படவில்லை. எழுத்துக்குள் வடிக்க முடியாத சீர்கேடுகள் எங்கள் எதிர்காலத்தைச் சிதைத்துவிடாதிருக்க என் உள்ளத்து உணர்வுகளிவை. ஊடகத்துறையிருக்கும் என்னையும் இந்த நாசங்கள் நடுங்க வைக்கிறது. இந்த நாசங்களால் சமூகத்தை வழிநடத்த வேண்டிய குரல்களால் நமது எதிர்காலம் சிதையக்கூடாது என்பதற்காயே இந்தச் சிறுவரிகள். சொல்லாமல் இருக்க முடியவில்லை. சொல்வதால் என் குரல்கூட நசுங்கிப்போகலாம். போகட்டும் என்றிருக்க முடியாத மனசின் வலிகளிவை) ஏணிகள் நீங்கள்.... உலகத்து ஞானிகள் நீங்கள்.... எட்டாத உச்சத்துத் து}ய்மைகள் நீங்கள்.... எத்தகு சலனத்திற்கும் எத்துப்படாத புனிதங்கள்.... இத்தனைக்கும் அடையாளம் உங்களைவிட யாருமில்லை. நம்பமுடியுமா.....? நம்பிக்கைக்கு உரிய தும்பிக்கைகள் நீங்களாய்.... எத்தனையோ நம்பிக்கைகள்.... பொடியாய்....பொடிப் பொடியாய்.... அறிவிப்பின் புனிதம் ஆண்கள் பெண்களை அசத்துதல்..... பெண்கள் ஆண்களை அசத்துதல்.... அறிவிப்பின் புனிதம் சொன்ன ஆசான்கள் அனேகரின் புனிதம் இதுவாக.... புழுத்துக் கிடக்கிறது பல்லாயிரம் குடும்ப கௌரவம் பறையடித்து சொல்ல வேண்டிய தேவையின்றியே நாறிக்கிடக்கிறது. நாகரீக ஊடக தர்மம். நம்ப முடியுமா.....? கொடுவெப்பத் தணல் அருகில் சமையற்காரனாய்.... சமையற்காரியாய்... ஓரிடத்தில் கணவனும்... இன்னோரிடத்தில் மனைவியும்.... உழைப்பாய் கொண்டு வரும் ஐரோக்களும்...., பிராங்குகளும்...., பவுண்ஸ்களும்...., அநியாயமாய் கரைகிறது. கவர்ந்த அறிவிப்பாளன் கனவு நாயகியாய்.... கணவனை அனுப்பிவிட்டு கள்ளக்காதல் செய்து களவு பிடிபட்டுக் குடும்ப நிம்மதியும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்வியாய்....? நம்பமுடியுமா....? கவர்ந்த அறிவிப்புப் பெண்ணைக் கவர்ந்திழுக்க கடனெல்லாம் கட்டிவிட்டு குறுந்தாடி வளர்த்து நேசத்துக்கினியவளின் நெஞ்சில் நெருப்பேற்றி பாசத்துக்கினிய பிள்ளைகளின் வாசத்தையும் து}க்கியெறிந்து வாழ்வை நரகமாக்கி.... நம்பமுடியுமா....? 'இதுவெல்லாம் இங்கு சாதாரணம்" இப்படியும் வார்த்தைகள் வந்து விழுகிறது. காறி முகத்தில் உமிழ வாய் எழுகிறது. நாகரீகம் என்பதன் பொருள் இவர்கள் வரையில் நாலுபேருடன் புணர்ந்து மேடையேறிப் பொன்னாடை வாங்கலும் பட்டம் வாங்கலுமோ....? சிலபேரின் குணமறிந்தும் எதையும் நம்ப முடியவில்லை. கண்ணால் பார்த்த பின்னும் கனவு போல் தானிருக்கிறது. கோவலர்களும் , மாதவிகளும்தான் இன்றைய ஊடக ராசாக்கள் , ராணிகளா....? நம்பமுடியுமா....? தீக்குச்சிகளின் குணம் சொன்னாள் ஒரு தோழி. 'உரசவிடும் எளிதில் பற்றவிடாது" அதுபோலே அறிவிப்புத் துறைக்குள் - பல ஆண்களும் பெண்களுமாம்....! உணர்ந்து அறிந்து சொன்னவளில் ஒரு நாள் கோபித்தது எத்தனை முட்டாள் தனம்....! பெண்ணியம் பேசியென்ன..., புரட்சி பாடியென்ன...., சமூக விழிப்புச் சொல்லியென்ன...., தாயக எழுச்சி எழுதியென்ன...., நன்னடத்தை இல்லாமல் வேடம்போட்டு ஏமாற்றும் வித்தகத்தில் விடியலில்லை. கண்ணுண்டு பார்க்க..., காதுண்டு கேட்க..., நற்குரல் வளமுண்டு கவர..., எது இருந்தென்ன ? சபலபுத்தியுள்ள வரை சாதிப்பது எதுவுமில்லை. 13.08.04. - tamilini - 08-13-2004 காரமாய் நடக்குது யாருக்கு..? ம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி தானே....! - sOliyAn - 08-14-2004 கொஞ்சம் புரியுறமாதிரி இருக்கு! எதுக்கும் விளக்கமா தனிச்செய்தி பிளீசு! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-14-2004 உரச பத்தினால்த்தான் தீக்குச்சி.. உரச பத்தாதது வெறும் குச்சி... புகையிறதைப் பார்க்க.. பத்தி நூந்திட்டுதுபோலைகிடக்கு.. உந்தக்குச்சி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-14-2004 Quote:எதுக்கும் விளக்கமா தனிச்செய்தி பிளீசு!
- S.Malaravan - 08-15-2004 tamilini Wrote:Quote:எதுக்கும் விளக்கமா தனிச்செய்தி பிளீசு!:cry: :cry: :cry: - tamilini - 08-15-2004 :roll: :roll: :roll: - kuruvikal - 08-15-2004 உவன் கோவலனுக்கும் மாதவிக்கும் கவிபாடிய கறுமங்கள் போல ஏன் சாந்தியக்கா உதுகளுக்கும் கவிபாடுறியள்.... மண்டைக்க போட வேண்டிய கேசுகள்... இல்ல சமுதாயத்தில் சாக்கடையில் விட்டெறியுங்கள்... குட்டை நாய்கள் போல் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்....அதுக்கும் வாழ்வுரிமை வழங்க வேண்டாமோ....????! சன நாய் அகத்தில...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 08-15-2004 எழுத்துக்குள் வடிக்க முடியாத சீர்கேடுகள் எதிர்காலத்தைச் சிதைத்துவிடாதிருக்க, வடித்த கவிதை நிஜங்களாய் பரிணமிக்க... நம்பமுடியுமா என்ற தலைப்பிட்டு புரியும் புரியாதமாதிரியும் எழுதிய மர்மம்தான் என்னவோ... ? ? ? - aathipan - 08-19-2004 குறுந்தாடியோடு உள்ள அறிவிப்பாளர் யார்? |