![]() |
|
எப்படித்தான்...? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எப்படித்தான்...? (/showthread.php?tid=6746) |
எப்படித்தான்...? - shanthy - 09-01-2004 எப்படித்தான்...? நீண்ட நாளின் பின்னான இந்த இரவு எங்களுக்காய் தனிமையில் காய்கிறது. வழமைபோல் இந்த இரவும் அரசியல்,சமூகம், ஆணாதிக்கம்;...பெண்ணியம்..., அப்படித்தானே ஆரம்பித்தோம். யாருக்காகவோ நாங்களே எங்கள் மனங்களைச் சுட்டுக் கொள்ளும் வழமை இன்றும் என்றையும் போல.... எத்தனையோ கவனமாய் எடுத்து வந்த வார்த்தைகள்... எப்படித்தான்....? 'மௌனக்கண்ணீர்" வடித்து எங்கள் மனங்களைச் சிதைக்கும் மகத்துவம் கற்றதோ....? 27.08.04. - Paranee - 09-02-2004 மௌனத்தின் மொழி மனங்களை சிதைக்கும் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன் புரிகிறது கண்ணீர் வழிமொழிந்த மௌன வார்த்தைகள் வீரியம் பெற்றவையாகி நிற்கின்றது வாழ்த்தக்கள் சாந்தி அக்கா ! எதையோ பட்டும் படாமல் தொட்டுச்செல்கின்றீர்கள் - tamilini - 09-02-2004 Quote:யாருக்காகவோ நாங்களேஅடுத்தவை கதை எடுத்தாலே பிரச்சனை தானா....?? வாழ்த்துக்கள் சாந்தி அக்கா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: எப்படித்தான்...? - வெண்ணிலா - 09-02-2004 shanthy Wrote:எத்தனையோ கவனமாய் <b>நன்று. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் அக்கா</b> - kavithan - 09-02-2004 Quote:வழமைபோல் இந்த இரவும் நல்ல நல்ல வரிகள்.... தொடர்ந்து கவிதை தர வாழ்த்துக்கள் அக்கா |