| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 323 online users. » 0 Member(s) | 321 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,194
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,578
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,006
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,398
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,090
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,971
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,234
|
|
|
| இந்திய வல்லாதிக்கக் கனவுகளும் புஸ்ஸின் வருகையும் |
|
Posted by: Birundan - 03-02-2006, 05:19 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
சோவியத்தின் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின்னால் உலக நாடுகள் இரண்டு கோஸ்டிகளாகப் பிரியும் சாத்தியங்கள் தோன்றினாலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னான காலகட்டத்திலேயே கிட்லரின் ஜெர்மனியின் வீழ்ச்சியுடன் இப்பிளவு கொள்கை மற்றும் நாடுகள் ரீதியாக வலுப்பெற்றிருந்தது.
சோவியத் சார்பு சோஷலிச நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு முதலாளித்துவ நாடுகள் என்ற சார்பு நிலையில் உலகம் இரண்டாகப் பிரிந்து கொண்டது. இரண்டு பக்கமும் பிரிய முடியா வளர்முக நாடுகள் கலப்புப் பொருளாதாரம் என்னும் இடைநிலையை எடுத்து அணிசேராநாடுகள் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தன. சோஷலிச சார்பு நாடுகளுக்கும் முதலாளித்துவ சார்பு நாடுகளுக்கும் இடையிலான பிளவும் போட்டாபோட்டிகளும் சகல துறைகளிலும் ஆக்ரோஷத்துடன் முனைப்புப் பெற்றிருந்தன. ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்தனவாயும் ஒன்றில் இருந்து ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலும் ஆயுத உற்பத்தியை முன்னிறுத்தி மேலாண்மையைப் பெற்றுக் கொள்ளும் செயற் பாடுகளில் அதி தீவிரம் காட்டின. அதன் பலன் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்களை கண்டுபிடித்துக் கொண்டனர். பனிப்போர்க்காலம் என அழைக்கப்பட்ட இக்காலகட்டம் உலக அழிவுக்கான பல ஆபத்தான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றது.
இன்று சோவியத்தின் வீழ்ச்சி அல்லது சிதைவு இந்நெருக்கடியில் இருந்து உலகை நிம்மதிப் பெரு மூச்சை விடச்செய்திருக்கும் போதிலும் வேறு வகையான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.
அமெரிக்காவை தட்டிக்கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டன் வேடத்தை எடுத்துக் கொள்ள வைத்திருக்கின்றது.
இதுவரை காலமும் சோவியத் சார்பு நிலையிலிருந்த நாடுகள் சோவியத்தின் வீழ்ச்சியின் பின் இரண்டும் கெட்டான் சங்கடத்திற்குள் உள்ளாகின. இந்தியா அணிசேரா நாடுகள் என்றும் சோவியத் அணிநாடு என்றும் இரண்டு வேடங்களைப் போட்டிருந்தது. அதற்கும் மேலாக அமெரிக்காவின் எதிரணி அல்லது நம்பகத்தன்மையற்ற நாடு என்னும் எண்ணத்தையே பெற்றிருந்தது.
சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஆயுததளபாட உதவிகளும் நேரடி பாதுகாப்பும் இல்லாதொழிந்த வேளையில் இந்தியா உட்பட பலநாடுகள் சுய அளவில் படைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிடப்பட்டன.
தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டனாக அமெரிக்கா உலகைத் தன் ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் உட்படுத்தி வைக்கும் செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடத்தொடங்கியது.
அணு ஆயுதத்தின் பரம்பலைத் தடை செய்யவும் அணு ஆயுத வலிமையை வேறு நாடுகள் பெற்றுக் கொள்வதைத் தடை செய்யவும் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் "வீற்றோ" எனப்படும் அதிகாரம் பெற்ற அதி முக்கிய நாடுகளான இங்கிலாந்து, ரஷ்யா,சீனா,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவர் (International Atomic Energy Agency - IAEA ) என்ற ஒரு பக்கச் சார்பான நீதியான நோக்கமற்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது. உலக நாடுகளில் அணு ஆயுத உற்பத்தியை கண்காளிப்பதும் தடை செய்வதுமே இதன் முதன்மையான நோக்கமாகும். அணு ஆயுத உற்பத்தியை உலகில் தடை செய்வது உலக நன்மைக்கான விடயமெனினும்
அமெரிக்கா உட்பட இந்த ஐந்து நாடுகளையும் அவற்றின் அணு ஆயுத உற்பத்தியையும் வைத்திருப்பையும் இவ்வமைப்பு கட்டுப்படுத்தாது என்பதே இதிலுள்ள குறைபாடாகும். இதே நேரம் அணு ஆயுதக் குவிப்பு தடுப்பு (Nuclear Non-Proliferation Treaty -NPT) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதத்தின் முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டலைத் தடைசெய்தலும் உலக நாடுகளின் அணு ஆயுத உலைகளை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவரின் கண்காணிப்பிற்குத் திறந்து விடுதலும் ஆகும்.
இவ்வாறு உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தியையும் அதனால் பெறக் கூடிய மேலாதிக்கத்தைத் தடை செய்வதும் அமெரிக்காவின் குள்ள நரித் தந்திரமாகும். இதே காரணங்களிற்கு உட்பட மறுத்தமையைக் காரணங்காட்டியே வடகொரியாவையும் ஈரானையும் சாத்தானின் அச்சில் சேர்த்து அமெரிக்கா பிரகடனம் செய்திருந்தது. இன்று ஈரானுக்கான பொருளாதாரத் தடையையும் ஆயுத விற்பனையைத் தடை செய்வதையும் ஐ.நாவிற்கூடாக நிறைவேற்றியிருக்கின்றது. இதற்கான கால அவகாசம் கொடுக்கப் பட்டபோதிலும் ஈரான் இத்திட்டத்திற்கு உடன் படப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. அதே நேரம் அணு ஆயுத உற்பத்திக்கான யுரேனியச் செறிவாக்கலை துரிதப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இதே தேவைகள் இந்தியாவிற்கும் இருக்கின்ற போதிலும் ஈரானிற்கு எதிரான அத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணிந்து போய் விட்டதாக இடது சாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்றைய புஸ்ஸின் இந்திய விஜயம் இதே நெருக்கடியை இந்தியாவிற்கும் வலிந்து திணித்துள்ளது. சோவியத்தின் ஆதரவை இழந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது. காஸ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டினை அமெரிக்காவை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் பாகிஸ்தானினூடாக கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தாக்குதல்களைத் தணித்துக் கொள்வதற்கும் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது. தீவிரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கப் பாகிஸ்தானைத் தூண்டி இந்தியாவை அடிபணியச் செய்வதில் அமெரிக்கா வெற்றி கொண்டிருக்கின்றது என்பதை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒத்துக் கொண்டிருக்கின்றது என்பதாலேயே புரிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கான "உதவிகளைச்" செய்வதற்கான விலையாக அமெரிக்கா போடும் நிபந்தனைகள் நீதியற்ற ஒருபக்கச் சார்பான இந்தியாவின் இறைமையில் தலையிடும் அதிகப்பிரசங்கித் தனமான அசுறுத்தல் விளைவிக்கக் கூடியவையாகும்.
அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெலியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கன்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வ்அகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.
இந்நிபந்தனக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும் ஒருதலைப்பட்சமானதுமாகும்" என்ற கூற்றிலிருந்தே அமெரிக்காவின் கபடத் தனத்தையும் இந்தியாவின் கையறு நிலையையும் விளங்கிக் கொள்ளலாம்.
இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு வைக்கப்படும் "செக்" ஆகவே உலகச் சண்டப்பிரசண்டன் புஸ்ஸின் வருகை பார்க்கப்படுகின்றது.
நன்றி>சிந்து
http://ilanthirayan.blogspot.com/
|
|
|
| ஒரு உதவி |
|
Posted by: Vishnu - 03-02-2006, 01:10 PM - Forum: இணையம்
- Replies (5)
|
 |
ஒரு சிறிய உதவி.. யாராவது தெரிந்தவங்க சொல்லுங்க..
<img src='http://img91.imageshack.us/img91/2931/a3xa.jpg' border='0' alt='user posted image'>
மேலே உள்ளது போல மீடியா பிளேயரில் ஒரு பாடலை கேட்க கூடியமாதிரி இணையத்தளத்தில் வரவேண்டும். அதற்குரிய HTML கோட் யாருக்கு தெரியும். தெரிந்தவங்க சொன்னால் உதவியாக இருக்கும்.
தானாகவே பாடல் ஆரம்பிக்கும் சில தளங்களில். அப்படி இல்லாமல். பிளே பண்ணியதும் பாடல் ஆரம்பிக்க கூடியதாக இருக்கவேண்டும். :roll: :roll: :roll:
நன்றி
|
|
|
| ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? |
|
Posted by: வினித் - 03-02-2006, 11:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<span style='color:brown'><b>ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன?</b>
<img src='http://img75.imageshack.us/img75/2702/jenivatalks80wz.jpg' border='0' alt='user posted image'>
<b>அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் அமுல்படுத்துவதற்கு இணங்கியதை தொடர்ந்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் முதல் சுற்றை விடுதலைப் புலிகள் வென்றனர்.
நோர்வே அனுசரணையாளர்களால் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒரு சொல் குறித்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் வாதாடிய பின்னர் இறுதியில் அரசாங்கம் விட்டுக் கொடுத்ததுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சட்ட பூர்வ தன்மையையும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் வன்னிக்கு இன்னுமொரு வெற்றியை கையளித்தது.
அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு பெருமளவு பிரதிநிதிகள், ஆலேசகர்கள், விசுவாசமான ஊடகவியலாளர்கள், மேலும் அரசாங்க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்களுடன் கலந்து கொண்ட போதிலும் இறுதி வரை (பட்டன்) புலிகளின் பிடியிலேயே இருந்தது.</b>
<b>[size=24]தந்திரோபாயம்</span></b>
<b>அரசாங்கத்தின் தந்திரோபாயம் வெளிப்படையானது பழையது -அரசாங்கம் பலதரப்பட்ட அணுகு முறையை கையாண்டது. மாநாட்டு அறையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதேவேளை, கடும் போக்கு குழுக்கள் மூலமும் அவதானமாக திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஊடகங்கள் ஊடாக பக்கச் சார்பான செய்திகள் மூலமும் அழுத்தங்களைக் கொடுக்க முனைந்தது.
எனினும், விடுதலைப் புலிகள் நன்கு பழுத்த அனுபவமுள்ளவர்கள். இதன் காரணமாக கடும் போக்காளர்களின் குழப்பமான முயற்சிகள் வெற்றி பெறவில்லை ஆகக் குறைந்த அளவில் முதல் சுற்றிலாவது.
<span style='color:darkblue'>கூட்டறிக்கை
[b]இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் நோர்வே அனுசரணையாளர்கள் கூட்டறிக்கையை தயாரிக்க தொடங்கினர். இதனை பின்னர் இரு தரப்பிடமும் அவர்களது சம்மதத்திற்காக கையளித்தனர்.
அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் உடனடியாக நேரடி தொலைத் தொடர்பு வசதிகள் ஊடாக அலரிமாளிகையை தொடர்பு கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். கூட்டறிக்கையின் ஆரம்ப பந்திகள் மிக சாதாரணமானவையாகத் தோன்றின.
இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் 22-23 பெப்ரவரி 2006 யுத்த நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
எனினும், இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாக இருந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடும் அதிருப்தியடைந்தார். தனது அங்கீகாரத்தை வழங்க மறுத்தார். உடன்படிக்கை என்ற சொல் குறித்தே மகிந்த குழப்பமடைந்தார்.
2002 உடன்படிக்கையை குறிப்பிடும் உடன்படிக்கை எனும் சொல்லை ஏற்றுக் கொண்டால் அவர் இயல்பாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதே ஜனாதிபதியினதும் ஜே.வி.பி.யினதும் சிந்தனை.
மேலும், அந்த அறிக்கையின் மூன்றாவது பந்தியே ஜனாதிபதியால் அதிகம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் காணப்பட்டது. மூன்றாவது பந்தியில் அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள உறுதி பூண்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது யுத்த நிறுத்த உடன்படிக்கை வெறுமனே அரசியலமைப்புக்கு எதிரானது மேலும் தேசிய இறைமையை விட்டுக் கொடுக்கின்றது என்ற அவரின் வாதத்திற்கும் முடிவு கட்டுகின்றது.
ராஜபக்ஷ யுத்த நிறுத்தம் என்ற சொல்லை உடன்படிக்கையுடன் சேர்க்காமல் பயன்படுத்த விரும்பினார். உடன்படிக்கை என்பது குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை குறிப்பிடும் என்பது அவரது கருத்து. உடன்படிக்கை என்ற சொல் கூட்டறிக்கையில் இடம் பிடிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு சொல் கொழும்பில் ராஜபக்ஷவிற்கும் ஜெனீவாவில் அவரது பிரதிநிதிகளுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை வியாழக்கிழமை பேச்சுவார்த்தை மேசையிலும் இது குறித்து ஆராயப்பட்டது.
அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இரண்டு காரணத்திற்காக யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவதாக குறிப்பிட்டார், முதலாவது அது அரசியலமைப்பிற்கு எதிரானது அடுத்தது அதனை அப்போது தகுதி வாய்ந்த அதிகாரியாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திடவில்லை.
நோர்வே இந்த சமயத்தில் தலையிட்டு உடன்படிக்கை சட்டபூர்வமானது எனவும், அவ்வேளை அரசாங்கத்தின் தலைவராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ அந்தஸ்தின் அடிப்படையில் கைச்சாத்திட்டார் எனவும் தெரிவித்தது. எவ்வாறாயினும் 2004 ஏப்பிரலில் மீண்டும் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் இதனை இரத்து செய்ததையும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டினார். இது அரசாங்கம் அதனை அங்கீகரித்ததற்கு சமனானது என அரச பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
ராஜபக்ஷ உடன்படிக்கையை இரத்து செய்யாத பட்சத்தில் அவர் அதன் நியாய தன்மையை ஏற்றுக் கொண்டதாக அமையும் என்பதே தெளிவான பாதிப்பு தற்போது கூட்டறிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் அவர் அதனை செய்துள்ளார்.
எனினும், மூன்று மணித்தியாலங்களாக இது குறித்து ஆராய்ந்த பின்னர் ராஜபக்ஷ விட்டுக் கொடுத்தார். அவரது பிரதிநிதிகளுக்கு கூட்டறிக்கையை ஏற்றுக் கொள்ள அனுமதியளித்தார்.
விடுதலைப் புலிகளும் நோர்வேயும் விட்டுக் கொடுக்க மறுத்ததை தொடர்ந்தே ராஜபக்ஷ இதனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். விடுதலைப் புலிகள் அறிக்கையில் உடன்படிக்கை என்ற சொல் இடம்பெறாவிட்டால் தாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள போவதில்லையெனவும் மேலும் பேசுவதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
பாலசிங்கம் ஒரு அடியில் அரசாங்கத்தை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்கச் செய்துள்ளார்.
அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளுக்காக தம்மை தீவிரமாகவும் கவனமாகவும் தயார்படுத்தியிருந்த போதிலும் அன்ரன் பாலசிங்கம் அவர்களை தோற்கடித்துள்ளார். உயர்மட்ட ஹவாட் பேச்சுவார்த்தை திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் சர்வதேச நிபுணர்கள் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு கையாள்வர் மற்றும் மோதல் தவிர்ப்பு குறித்து விரிவுரைகளையும் நடத்தியுள்ளனர்.
மேலும் அரச தரப்பு பிரதிநிதிகள் சமாதானம் தொடர்பாக சர்வதேச சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
எனினும், கூட்டறிக்கை, இருதரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்தும் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களின் கரிசனைகள் குறித்தும் ஆராய்ந்ததாக தெரிவிக்கின்றது.
அதில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைப்பிடிக்கவும் மேலும் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களின் தீர்ப்பை ஏற்கவும் இணங்கியது குறித்த பந்தியும் உள்ளது. விடுதலைப் புலிகள் இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தை தாக்குவதை நிறுத்தவும் இணங்கியுள்ளனர்.
இந்த அறிக்கை சிறுவர்களை படையணியில் சேர்ப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். பல விடயங்கள் பற்றி தெரிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</b>
<b>[size=24]ஆயுதக் குழுக்கள்
[b]சுவாரஸ்யமான விதத்தில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரை தவிர வேறு எந்த ஆயுத குழுவும் ஆயுதங்களுடன் நடமாடுவதையோ அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அனுமதிக்காது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசாங்கம் துணைப் படையினர் குறித்து யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கு இணங்கியுள்ளது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையில் ஆயுதக் குழுக்கள் குறித்து தெரிவிக்கும் 1.8 இல் தமிழ் ஆயுதக் குழுக்கள் முப்பது நாட்களுக்கு முன் இலங்கை அரசாங்கத்தால் ஆயுத களைவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையச் செய்யும் முக்கிய நோக்கத்தை எய்தியுள்ளனர்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு படையினரை தவிர வேறு ஆயுத குழுக்கள் எனும் சொற்றொடரை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே சேர்த்திருந்தது. எனினும் இதுவும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
எனினும், வியாழக்கிழமை கூட்டறிக்கை பல மணி நேர கடும் உழைப்பிற்கு பின்னரே சாத்தியமானது என்றால் புதன்கிழமை ஆரம்ப உரைகள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்திலேயே முறிவடையும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தன.
புதன்கிழமை விடுதலைப் புலிகள் தமது பிரதான சமாதான பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் உரையை உடனடியாக ஊடகங்களுக்கு வெளியிட்டதன் மூலம் அரசாங்கத்தையும் அதனை செய்ய வைத்து, பேச்சுவார்த்தை குறித்த அதன் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தினர்.
ஆகவே பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலேயே நகர முடியாமல் செய்யப்பட்டு விட்ட அரச தரப்பு, பொதுமக்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தியதுடன் பேசப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு விட்டுக் கொடுத்தது.
மேலும் பலவீனமானதாகவும் பேச்சுவார்த்தை மேசைகளில் மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்தின் முன்னாலும் திறமையற்றதாகத் தோற்றமளித்தது.
அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிமால் சிறி பால டி சில்வா அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை எமது அரசியலமைப்பிற்கு முரணானது. அதன் மூலம் ஏற்படும் பாரதூரமான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.
சில்வா விடுதலைப் புலிகள் 3519 யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். பாலசிங்கம் இதனை உடனடியாக நிராகரித்ததுடன் இந்த எண்ணிக்கை மிகவும் பெரிதுபடுத்தப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டார்.</b>
<b>([size=18]அன்டனின் அறிக்கை
[b]இதற்கு நேர்மாறாக அன்ரன் பாலசிங்கம் தனது 12 பக்க அறிக்கையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதே சமாதான இயல்பு நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு இரு தரப்பிற்கும் உள்ள வழி எனக் குறிப்பிட்டார்.
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் மிகவும் ஆக்க பூர்வமான விடயம் யுத்த நிறுத்த உடன்படிக்கை என குறிப்பிட்டார். யுத்த நிறுத்த உடன்படிக்கை முழுமையான யுத்தம் மூழ்வதை தவிர்த்துள்ளது. மேலும் இரு தரப்பும் அமைதியான இயல்பான சூழலில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒரு தரப்பிற்கு சாதகமான விதத்தில் அவசரமாக தயாரிக்கப்படவில்லை. சகல விடயங்களும் துள்ளியமாக ஆராயப்பட்டுள்ளது. நோர்வே அனுசரணையாளர்களின் திறமையான உதவியுடன் என்பதை நினைவு படுத்தினார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை சமாதானத்திற்கான வலுவான சாதனம் என அழைத்த அவர் இதனை தளமாகக் கொண்டே சமாதான முயற்சிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றார். </b>
<b>[size=24]சிநேக பூர்வமற்ற உறுதி மொழி</span>
[b]உரையின் ஆரம்பத்துக்கு முன்னர் இடம்பெற்ற கைகுலுக்களின் போதே இந்த சிநேக பூர்வமற்ற உறுதிமொழி தென்பட்டது. இது அடுத்து வருவதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.
மண்ணிற உடையணிந்தபடி சிரித்தபடி காணப்பட்ட நிமால் சிறிபால டி சில்வாவுடன் அன்டன் பாலசிங்கம் கைகுலுக்கிய விதமும் அதன் போது தென்பட்ட நம்பிக்கையின்மையும் பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலை எவ்வாறு அமையப் போகின்றது என்பதைப் புலப்படுத்தியது.
மிகவும் ஆரம்ப தருணத்திலேயே இரண்டு தரப்பும் தமது கடும் வேறுபாடுகளைக் கொண்ட ஆரம்ப உரைகள் மூலம் மோதலிற்கு தயார்படுத்தி விட்டன.
ஆகக் குறைந்தளவில் ஒரு தரப்பு தோற்றால் அல்லது விட்டுக் கொடுத்தால் மாத்திரமே பொதுவான நிலைப்பாடு சாத்தியமாக இருந்தது.
விடுதலைப்புலிகள் இன்னுமொரு உளவியல் ரீதியிலான வெற்றியை பெறுவதற்கு எதிர்பார்த்திருந்ததுடன் இறுதியில் அதனை இலகுவாக சாதித்தனர்.
பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை ஆரம்பமாவதற்கு முன்னர் நோர்வே, பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதற்கு இரு தரப்பு பிரதிநிதிகளையும் பல தடவை சந்தித்தது.
எனினும், இதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை இரு தரப்பும் பரஸ்பரம் ஏனைய தரப்பினை சந்திப்பதில் ஆர்வம் காட்டின.
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. பேரியல் அஷ்ரப், ரோஹித போகொல்லாகம, பாலித ஹோகன ஆகியோர் அன்டன் பாலசிங்கத்தையும் தமிழ்ச் செல்வனையும் சந்தித்தனர்.
எனினும், பின்னர் சில்வாவும் பாலசிங்கத்தை சந்தித்தார். வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட பின்னர் பாலசிங்கம் நாளை போர்களத்தில் சந்திப்போம் எனக் கூற சற்றே குழம்பிப் போன சில்வா இல்லை இல்லை நாங்கள் அதனை சமாதான களமாக்குவோம் என்றார்.
பெப்ரவரி 22 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்ற பகுதிக்கு முதலில் வந்து சேர்ந்தவர்கள் அரச தரப்பினர்.
முதலில் வந்த சில்வா தவறுதலாக விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களை நோக்கி சென்றுவிட்டார். கொல்லா கமவும் அஷ்ரப்பும் அவரை பின்தொடர்ந்தனர். எனினும், குழப்பமடைந்தது அவர் மாத்திரமல்ல, பாலசிங்கமும் விடுதலைப் புலிகளின் ஆலோசனை குழுவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமற முயன்றார்.
அரச தரப்பிற்கான மேசையில் நிமால் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, அஷ்ரப், பெர்னாண்டோ புள்ளே எச்.எல்.டி. சில்வா பாலித ஹோஹொன ஆகியோர் அமர்ந்தனர்.</b>
<b>-நாளை தொடரும்- </b>
நன்றி: தினக்குரல்
|
|
|
| சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி! |
|
Posted by: ஜெயதேவன் - 03-01-2006, 11:31 PM - Forum: சினிமா
- Replies (48)
|
 |
சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார்.
அதென்ன மாயக்கண்ணாடி?
மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய நான் உழைக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார். நவ்யா நாயரை 'ஆடும் கூத்து' நடிக்கும்போது பார்த்தேன். உணர்வுகளை பிடித்துக் கொண்டு நடிப்பில் பல வித்தைகள் செய்து அதிர வைக்குது. அவங்களையே என் இணையாக தேர்ந்தெடுத்தேன். த. தவமிருந்து சாயல் எங்கேயும் இருக்காது. இது வேறு உணர்வுகள். இது வேறு மாதிரியான படம்.
ஏன் குடும்பம்னு ஒரே வட்டத்திற்குள்ளே சுற்றிச் சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க?
குடும்பம் இல்லாமல் நாம் யாருமே இல்லையே! குடும்பத்தின் உன்னத உறவுகளை முறிச்சுவிடாமல் இருக்கணும். வாழ்க்கைக்குள் தொலைந்து கிடக்கிற, கண்டுபிடிக்க முடியாத ஆழத்தில் இருக்கிற உணர்வுகளை கொஞ்சமாவது பாசாங்கு இல்லாமல் செய்யணும் என்ற ஆர்வம் தான் இருந்துகிட்டே இருக்கு. இந்த சமூகம் சீர் கெட்டுப் போனால் எனக்கும் பங்கு இருக்கு. அந்தத் தவறை நான் செய்ய முடியாது.
ஏன் சன் டி.வி.யை எதிர்த்து நிற்கிறீர்கள்?
என்னோட எதிர்ப்பு அவர்களைப் புறம்தள்ளுவதுதான். அவர்களின் சுயலாபத்திற்காக, தொலைக்காட்சி வளர்ச்சிக்காக, நல்ல படங்கள் என்ற பார்வையே இல்லாமல், மக்களை தவறான வழிக்கு இழுத்துக் கொண்டே போகுது சன் டி.வி. என் 'பொற்காலத்தை' விமர்சித்த போது 'பாதிப் பொன், பாதிக்கு மேலே மண்ணு' என்று சொன்னாங்க. அன்றையிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு பேட்டி, படங்கள் தருவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னோட படத்திற்கு ஐந்தாவது, ஆறாவது இடம் கொடுக்கும்போதே இந்த டி.வி.யின் ஓரவஞ்சகம் ஜனங்களுக்கு தெரிந்து போகிறது இல்லையா? முதலிடம்னு ஏதோ ஒரு படத்தைப்போட்டு ஜனங்களுக்கு திசை திருப்புவது மிகப்பெரிய துரோகமாக படலையா?
உங்களை மாதிரி நல்ல டைரக்டர்கள் நடிக்க வந்துவிட்டால், இருக்கிற நடிகர்களுக்கு ஸ்டார்ட், கட் சொல்கிற டைரக்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?
'தவமாய் தவமிருந்து' படத்தில் கூடப் படிச்ச பெண்ணை கெடுத்திட்டு, நகரத்திற்கு ஓடுகிற கேரக்டர். எந்த ஹீரோ செய்ய முன்வருவாங்க சொல்லுங்க! இமேஜ் இருக்கே, ரசிகர்கள் கிட்டே முகம் காட்ட முடியாதே. நடிகர்கள் மனசு வைத்தால், யதார்த்தமான படங்கள் வரும். எனக்கு ஹீரோவாகி நாற்காலியைப் பிடிக்கணும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. மக்களை முட்டாள் ஆக்காத சினிமா வரணும். எல்லோரும் மஞ்சள் பையை தூக்கிக்கிட்டு ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகணும்னு வந்துவிடுகிறார்கள். அவங்க கஷ்டப்பட்டு வந்த கதை யாருக்கும் தெரியாது. சினிமாவில் ஹீரோ என்கிற மாயை ஏராளமானவர்களின் வாழ்க்கையை கெடுத்திருக்கு.
நல்ல இயக்குநராக இருக்கும்போது நடிகர்களுக்கு மெனக்கெட்டீங்க. சுமாரான நடிகரான உங்களை வைச்சே நீங்க டைரக்ட் பண்றது நியாயமாகப் படுதா? மிகச் சிறந்த நடிகர்கள் உங்க டைரக்ஷனில் வரும்போது உங்க கதை சிறப்பாக வரும் இல்லையா?
நீங்கதான் என்னை சுமாரான நடிகர்னு சொல்றீங்க. மக்கள் என்னை மதிக்கிறார்கள். மிகச் சிறந்த நடிகர்கள் யாரும் என்னை இயக்குநராகவே மதிக்கிறதில்லை. நானும் நிறையப் பேரிடம் கதை சொல்லியிருக்கேன். என் கதை அவங்களுக்கு பிடிச்சதில்லை. இனிமேல் மிகச் சிறந்த நடிகர்கள்தான் எதையும் செய்ய முடியும் என்பது கிடையாது. ராஜ்கிரணை நீங்கள் சாதாரண நடிகராக மதிப்பிடக் கூடாது. சிவாஜி, கமலுக்குப் பிறகு மிக அழகாக, சின்னச் சின்ன உணர்வுகளை யதார்த்தமாக, போலித்தனம் இல்லாமல், மிகை நடிப்பு இல்லாமல் வெளிப்படுத்துகிறார் ராஜ்கிரண். சொல்லப் போனால் விக்ரமை விட ராஜ்கிரண் சிறந்த நடிகர். விக்ரம் ஒரு மாயை. இந்த வருடம் அந்நியன், தவமாய் தவமிருந்து இரண்டும் தேசிய விருதுக்குப் போனால் தவமாய் தவமிருந்து படத்திற்குத்தான் விருது கிடைக்கும். மூன்று கெட்டப்பில் வருவது ஈஸி. ஆனால் மூன்று பருவங்களில் ராஜ்கிரண் மாதிரி உயிரோட்டமாக வருவதுதான் பெரிய சாதனை.
வைகோ தேர்தலில் தனியாக நிற்கணும்னு பேசியிருக்கீங்க?
வைகோ ஊழல் இன்னும் அண்டாத ஆத்மா. அவர்கிட்டே மக்களை ஏமாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை. அவரோட மேன்மை புரியாமல் அவர் ஏதோ ஒரு இடத்தில் போய் ஒட்டிக்கிறார். ஏன் ஒட்டுறீங்க. தனியாக நடை போடுங்கன்னு சொன்னேன். தப்பா!
விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
முதலில் மக்கள்கிட்டே பழகணும். இறங்கி யாருக்கு என்ன பிரச்னை என்று தெரிஞ்சிக்கணும். எல்லாத்தையும் தெரிஞ்சுதான் காமராஜர், ராஜாஜி, அண்ணா, ஏன் இப்ப கலைஞர் வரைக்கும் வந்தாங்க. விஜயகாந்த் வர நினைப்பது தவறு அல்ல. விஜயகாந்த் நல்ல குணமா, நல்ல மனுஷனாக இருக்கிறது மட்டும் அரசியல்வாதியாக இருக்க போதாது. அந்த அனுபவம் உங்கள் கைக்கு வர ஐந்து வருஷம் சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு இறங்குங்க. அப்புறம்வாங்க, உங்களுக்கு வெற்றிதான்.
_ நா.கதிர்வேல
http://www.kumudam.com/kumudam/mainpage.php
|
|
|
| என் தோழி.. |
|
Posted by: jcdinesh - 03-01-2006, 08:16 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
எங்கிருந்தோ வந்து
அன்பு என்னும் மூன்று எழுத்தால்
இணைக்கப்பட்டுள்ளோம்...
அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது
அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது
அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது.
அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது
ஆனால் நானே அவளை சங்கடப்பட வைத்து விட்டேன்.
அதை எண்ணும் போது என் மனம் இன்னும் சங்கடப்பட வைத்தது.
என்றும் பிரிவு என்னும் மூன்று எழுத்தால்
பிரியாமல் இருக்க வேண்டும் நாம்.........
<img src='http://img104.imageshack.us/img104/2497/074dn8fh.jpg' border='0' alt='user posted image'>
[size=8]படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.- யாழ்பிரியா
|
|
|
| மாறா வடுக்கள்....... |
|
Posted by: jcdinesh - 03-01-2006, 08:09 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது....
அவள் என்னுடன் இருந்த நாளில்
துக்கம் என்பதே தெரியாது.
அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி
அவளின் கள்ளத்தனமான வெறுப்பு
ஒரு சுகம்..............
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....
அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................
>>>>***டினேஸ்***<<<<
>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<
<img src='http://img419.imageshack.us/img419/6087/hi8pp.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? |
|
Posted by: Rasikai - 03-01-2006, 07:57 PM - Forum: சினிமா
- Replies (30)
|
 |
<b>காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன் </b>
<img src='http://thamilworld.com/gallery/albums/userpics/10002/024%7E0.JPG' border='0' alt='user posted image'>
காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்!
நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண தம்பதிகளின் ரகசிய ரொமான்ஸ்கள்! திடீரென்று வருகிற சூறாவளி போல் வந்து சேர்கிறார் அக்ஷயா. ஆர்யாவின் ஆசை மனைவி ரேணுகா மேனனின் தங்கை! கொழுந்தியாளாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளியே இரு என்கிற லாஜிக் தெரியாத ஆர்யா, அக்ஷயாவோடு நெருங்கி பழக, அவரோ நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார் ஆர்யாவிடம். மனைவியை கூட கொஞ்ச விடாமல் குறுக்கே நுழைகிறது அக்ஷயாவின் அடாவடி. பொறுத்து பொறுத்து பார்க்கிற ஆர்யா போடுகிற திட்டம் என்ன? அக்ஷயாவின் காதல் நிறைவேறியதா என்பது முடிவு.
புதுமண தம்பதிகள் போலவே நெருக்கத்தை காட்டியிருக்கிறார்கள் ஆர்யாவும், ரேணுகா மேனனும். சமையல் அறையில் இருக்கிற ரேணுகாவை போனில் வெளியே வரவழைத்த பின், நைசாக சமையல் கட்டில் நுழைகிற ஆர்யா, ரேணுகா திரும்பி வருவதற்குள் கோழி குழம்பு வைத்துவிட்டு சைலண்டாக வெளியேறுகிற காட்சியில் கும்மென்ற காதல் வாசம்! அதே மாதிரி ரேணுகாவின் பிறந்த நாளுக்கு ஆர்யா கொடுக்கிற சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றொரு ஆச்சர்யம்.!
அதிகம் ஸ்கோர் பண்ணியிருப்பது அக்ஷயாதான். பார்க்க குயிலாக இருந்தாலும், நடிப்பில் ஒயிலாக இருக்கிறார். தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டாத ஆர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஊஞ்சலையே கழற்றி வைப்பதும், தன் பெற்றோர்களுக்கும், ஆர்யா பெற்றோர்களுக்கும் சண்டை மூட்டிவிட்டு அவர்களை சென்னையை விட்டு விரட்டுவதும், இந்த ஒல்லிக்கார வில்லியின் அட்டகாச அசத்தல்!
கோபமாக டயலாக் பேச வேண்டிய இடங்களில் எல்லாம், உஸ்பெகிஸ்தான் சிட்டிசன், 30 நாளில் தமிழ் கற்று கொண்டது போல் பேசுகிறார் ஆர்யா. மனசில் என்ன நினைக்கிறேன். முடிந்தால் கண்டுபிடியேன் என்கிற மாதிரியே முகபாவங்கள்... கடவுளே!
அக்ஷயாவை விரட்டி விரட்டி காதலிக்கிற அந்த வில்லனும் அசத்தல் பார்ட்டிதான்!
இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... தோகை விரித்தொரு ஆண் மயில்... இரண்டு பாடல்களை திரும்ப திரும்ப கேட்கலாம். பின்னணி இசைக்காகவும் பலே சொல்லலாம்! தோகை விரித்தொரு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனரும், அப்பாடலுக்கு அழகான செட் போட்ட ஆர்ட் டைரக்டரும் கவனிக்கப்பட வேண்டியவர்களே! மதியின் ஒளிப்பதிவில் முழு மதியின் நிறைவு! எல்லாம் ஓ.கே! ஆனால்,
கற்பழித்தவனுக்கே மகளை கட்டிக் கொடுக்க நினைக்கிற குடும்பம். எங்கேயோ நடக்கிற அரிதான முரண்பாடுகளை நியாயப்படுத்துகிற திரைக்கதை. கலாபம் என்றால் தோகை விரித்தாடுகிற மயில் என்று பொருளாம். இந்த மயில் ஆடியிருப்பது காபரே ஆட்டம்!
tamilcinema.com
விடுப்பு : .
|
|
|
|