![]() |
|
ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? (/showthread.php?tid=658) |
ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? - வினித் - 03-02-2006 <span style='color:brown'><b>ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன?</b> <img src='http://img75.imageshack.us/img75/2702/jenivatalks80wz.jpg' border='0' alt='user posted image'> <b>அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் அமுல்படுத்துவதற்கு இணங்கியதை தொடர்ந்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் முதல் சுற்றை விடுதலைப் புலிகள் வென்றனர். நோர்வே அனுசரணையாளர்களால் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒரு சொல் குறித்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் வாதாடிய பின்னர் இறுதியில் அரசாங்கம் விட்டுக் கொடுத்ததுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சட்ட பூர்வ தன்மையையும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் வன்னிக்கு இன்னுமொரு வெற்றியை கையளித்தது. அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு பெருமளவு பிரதிநிதிகள், ஆலேசகர்கள், விசுவாசமான ஊடகவியலாளர்கள், மேலும் அரசாங்க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்களுடன் கலந்து கொண்ட போதிலும் இறுதி வரை (பட்டன்) புலிகளின் பிடியிலேயே இருந்தது.</b> <b>[size=24]தந்திரோபாயம்</span></b> <b>அரசாங்கத்தின் தந்திரோபாயம் வெளிப்படையானது பழையது -அரசாங்கம் பலதரப்பட்ட அணுகு முறையை கையாண்டது. மாநாட்டு அறையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதேவேளை, கடும் போக்கு குழுக்கள் மூலமும் அவதானமாக திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஊடகங்கள் ஊடாக பக்கச் சார்பான செய்திகள் மூலமும் அழுத்தங்களைக் கொடுக்க முனைந்தது. எனினும், விடுதலைப் புலிகள் நன்கு பழுத்த அனுபவமுள்ளவர்கள். இதன் காரணமாக கடும் போக்காளர்களின் குழப்பமான முயற்சிகள் வெற்றி பெறவில்லை ஆகக் குறைந்த அளவில் முதல் சுற்றிலாவது. <span style='color:darkblue'>கூட்டறிக்கை [b]இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் நோர்வே அனுசரணையாளர்கள் கூட்டறிக்கையை தயாரிக்க தொடங்கினர். இதனை பின்னர் இரு தரப்பிடமும் அவர்களது சம்மதத்திற்காக கையளித்தனர். அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் உடனடியாக நேரடி தொலைத் தொடர்பு வசதிகள் ஊடாக அலரிமாளிகையை தொடர்பு கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். கூட்டறிக்கையின் ஆரம்ப பந்திகள் மிக சாதாரணமானவையாகத் தோன்றின. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் 22-23 பெப்ரவரி 2006 யுத்த நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர். எனினும், இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாக இருந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடும் அதிருப்தியடைந்தார். தனது அங்கீகாரத்தை வழங்க மறுத்தார். உடன்படிக்கை என்ற சொல் குறித்தே மகிந்த குழப்பமடைந்தார். 2002 உடன்படிக்கையை குறிப்பிடும் உடன்படிக்கை எனும் சொல்லை ஏற்றுக் கொண்டால் அவர் இயல்பாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதே ஜனாதிபதியினதும் ஜே.வி.பி.யினதும் சிந்தனை. மேலும், அந்த அறிக்கையின் மூன்றாவது பந்தியே ஜனாதிபதியால் அதிகம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் காணப்பட்டது. மூன்றாவது பந்தியில் அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள உறுதி பூண்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது யுத்த நிறுத்த உடன்படிக்கை வெறுமனே அரசியலமைப்புக்கு எதிரானது மேலும் தேசிய இறைமையை விட்டுக் கொடுக்கின்றது என்ற அவரின் வாதத்திற்கும் முடிவு கட்டுகின்றது. ராஜபக்ஷ யுத்த நிறுத்தம் என்ற சொல்லை உடன்படிக்கையுடன் சேர்க்காமல் பயன்படுத்த விரும்பினார். உடன்படிக்கை என்பது குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை குறிப்பிடும் என்பது அவரது கருத்து. உடன்படிக்கை என்ற சொல் கூட்டறிக்கையில் இடம் பிடிக்க முடியாது என அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு சொல் கொழும்பில் ராஜபக்ஷவிற்கும் ஜெனீவாவில் அவரது பிரதிநிதிகளுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை வியாழக்கிழமை பேச்சுவார்த்தை மேசையிலும் இது குறித்து ஆராயப்பட்டது. அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இரண்டு காரணத்திற்காக யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவதாக குறிப்பிட்டார், முதலாவது அது அரசியலமைப்பிற்கு எதிரானது அடுத்தது அதனை அப்போது தகுதி வாய்ந்த அதிகாரியாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திடவில்லை. நோர்வே இந்த சமயத்தில் தலையிட்டு உடன்படிக்கை சட்டபூர்வமானது எனவும், அவ்வேளை அரசாங்கத்தின் தலைவராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ அந்தஸ்தின் அடிப்படையில் கைச்சாத்திட்டார் எனவும் தெரிவித்தது. எவ்வாறாயினும் 2004 ஏப்பிரலில் மீண்டும் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் இதனை இரத்து செய்ததையும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டினார். இது அரசாங்கம் அதனை அங்கீகரித்ததற்கு சமனானது என அரச பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ராஜபக்ஷ உடன்படிக்கையை இரத்து செய்யாத பட்சத்தில் அவர் அதன் நியாய தன்மையை ஏற்றுக் கொண்டதாக அமையும் என்பதே தெளிவான பாதிப்பு தற்போது கூட்டறிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் அவர் அதனை செய்துள்ளார். எனினும், மூன்று மணித்தியாலங்களாக இது குறித்து ஆராய்ந்த பின்னர் ராஜபக்ஷ விட்டுக் கொடுத்தார். அவரது பிரதிநிதிகளுக்கு கூட்டறிக்கையை ஏற்றுக் கொள்ள அனுமதியளித்தார். விடுதலைப் புலிகளும் நோர்வேயும் விட்டுக் கொடுக்க மறுத்ததை தொடர்ந்தே ராஜபக்ஷ இதனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். விடுதலைப் புலிகள் அறிக்கையில் உடன்படிக்கை என்ற சொல் இடம்பெறாவிட்டால் தாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள போவதில்லையெனவும் மேலும் பேசுவதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். பாலசிங்கம் ஒரு அடியில் அரசாங்கத்தை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்கச் செய்துள்ளார். அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளுக்காக தம்மை தீவிரமாகவும் கவனமாகவும் தயார்படுத்தியிருந்த போதிலும் அன்ரன் பாலசிங்கம் அவர்களை தோற்கடித்துள்ளார். உயர்மட்ட ஹவாட் பேச்சுவார்த்தை திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் சர்வதேச நிபுணர்கள் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு கையாள்வர் மற்றும் மோதல் தவிர்ப்பு குறித்து விரிவுரைகளையும் நடத்தியுள்ளனர். மேலும் அரச தரப்பு பிரதிநிதிகள் சமாதானம் தொடர்பாக சர்வதேச சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர். எனினும், கூட்டறிக்கை, இருதரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்தும் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களின் கரிசனைகள் குறித்தும் ஆராய்ந்ததாக தெரிவிக்கின்றது. அதில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைப்பிடிக்கவும் மேலும் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களின் தீர்ப்பை ஏற்கவும் இணங்கியது குறித்த பந்தியும் உள்ளது. விடுதலைப் புலிகள் இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தை தாக்குவதை நிறுத்தவும் இணங்கியுள்ளனர். இந்த அறிக்கை சிறுவர்களை படையணியில் சேர்ப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். பல விடயங்கள் பற்றி தெரிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</b> <b>[size=24]ஆயுதக் குழுக்கள் [b]சுவாரஸ்யமான விதத்தில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரை தவிர வேறு எந்த ஆயுத குழுவும் ஆயுதங்களுடன் நடமாடுவதையோ அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அனுமதிக்காது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் துணைப் படையினர் குறித்து யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கு இணங்கியுள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையில் ஆயுதக் குழுக்கள் குறித்து தெரிவிக்கும் 1.8 இல் தமிழ் ஆயுதக் குழுக்கள் முப்பது நாட்களுக்கு முன் இலங்கை அரசாங்கத்தால் ஆயுத களைவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையச் செய்யும் முக்கிய நோக்கத்தை எய்தியுள்ளனர். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு படையினரை தவிர வேறு ஆயுத குழுக்கள் எனும் சொற்றொடரை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே சேர்த்திருந்தது. எனினும் இதுவும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. எனினும், வியாழக்கிழமை கூட்டறிக்கை பல மணி நேர கடும் உழைப்பிற்கு பின்னரே சாத்தியமானது என்றால் புதன்கிழமை ஆரம்ப உரைகள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்திலேயே முறிவடையும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தன. புதன்கிழமை விடுதலைப் புலிகள் தமது பிரதான சமாதான பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் உரையை உடனடியாக ஊடகங்களுக்கு வெளியிட்டதன் மூலம் அரசாங்கத்தையும் அதனை செய்ய வைத்து, பேச்சுவார்த்தை குறித்த அதன் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தினர். ஆகவே பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலேயே நகர முடியாமல் செய்யப்பட்டு விட்ட அரச தரப்பு, பொதுமக்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தியதுடன் பேசப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு விட்டுக் கொடுத்தது. மேலும் பலவீனமானதாகவும் பேச்சுவார்த்தை மேசைகளில் மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்தின் முன்னாலும் திறமையற்றதாகத் தோற்றமளித்தது. அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிமால் சிறி பால டி சில்வா அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை எமது அரசியலமைப்பிற்கு முரணானது. அதன் மூலம் ஏற்படும் பாரதூரமான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றோம் என குறிப்பிட்டார். சில்வா விடுதலைப் புலிகள் 3519 யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். பாலசிங்கம் இதனை உடனடியாக நிராகரித்ததுடன் இந்த எண்ணிக்கை மிகவும் பெரிதுபடுத்தப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டார்.</b> <b>([size=18]அன்டனின் அறிக்கை [b]இதற்கு நேர்மாறாக அன்ரன் பாலசிங்கம் தனது 12 பக்க அறிக்கையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதே சமாதான இயல்பு நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு இரு தரப்பிற்கும் உள்ள வழி எனக் குறிப்பிட்டார். நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் மிகவும் ஆக்க பூர்வமான விடயம் யுத்த நிறுத்த உடன்படிக்கை என குறிப்பிட்டார். யுத்த நிறுத்த உடன்படிக்கை முழுமையான யுத்தம் மூழ்வதை தவிர்த்துள்ளது. மேலும் இரு தரப்பும் அமைதியான இயல்பான சூழலில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒரு தரப்பிற்கு சாதகமான விதத்தில் அவசரமாக தயாரிக்கப்படவில்லை. சகல விடயங்களும் துள்ளியமாக ஆராயப்பட்டுள்ளது. நோர்வே அனுசரணையாளர்களின் திறமையான உதவியுடன் என்பதை நினைவு படுத்தினார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை சமாதானத்திற்கான வலுவான சாதனம் என அழைத்த அவர் இதனை தளமாகக் கொண்டே சமாதான முயற்சிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றார். </b> <b>[size=24]சிநேக பூர்வமற்ற உறுதி மொழி</span> [b]உரையின் ஆரம்பத்துக்கு முன்னர் இடம்பெற்ற கைகுலுக்களின் போதே இந்த சிநேக பூர்வமற்ற உறுதிமொழி தென்பட்டது. இது அடுத்து வருவதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது. மண்ணிற உடையணிந்தபடி சிரித்தபடி காணப்பட்ட நிமால் சிறிபால டி சில்வாவுடன் அன்டன் பாலசிங்கம் கைகுலுக்கிய விதமும் அதன் போது தென்பட்ட நம்பிக்கையின்மையும் பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலை எவ்வாறு அமையப் போகின்றது என்பதைப் புலப்படுத்தியது. மிகவும் ஆரம்ப தருணத்திலேயே இரண்டு தரப்பும் தமது கடும் வேறுபாடுகளைக் கொண்ட ஆரம்ப உரைகள் மூலம் மோதலிற்கு தயார்படுத்தி விட்டன. ஆகக் குறைந்தளவில் ஒரு தரப்பு தோற்றால் அல்லது விட்டுக் கொடுத்தால் மாத்திரமே பொதுவான நிலைப்பாடு சாத்தியமாக இருந்தது. விடுதலைப்புலிகள் இன்னுமொரு உளவியல் ரீதியிலான வெற்றியை பெறுவதற்கு எதிர்பார்த்திருந்ததுடன் இறுதியில் அதனை இலகுவாக சாதித்தனர். பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை ஆரம்பமாவதற்கு முன்னர் நோர்வே, பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதற்கு இரு தரப்பு பிரதிநிதிகளையும் பல தடவை சந்தித்தது. எனினும், இதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை இரு தரப்பும் பரஸ்பரம் ஏனைய தரப்பினை சந்திப்பதில் ஆர்வம் காட்டின. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. பேரியல் அஷ்ரப், ரோஹித போகொல்லாகம, பாலித ஹோகன ஆகியோர் அன்டன் பாலசிங்கத்தையும் தமிழ்ச் செல்வனையும் சந்தித்தனர். எனினும், பின்னர் சில்வாவும் பாலசிங்கத்தை சந்தித்தார். வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட பின்னர் பாலசிங்கம் நாளை போர்களத்தில் சந்திப்போம் எனக் கூற சற்றே குழம்பிப் போன சில்வா இல்லை இல்லை நாங்கள் அதனை சமாதான களமாக்குவோம் என்றார். பெப்ரவரி 22 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்ற பகுதிக்கு முதலில் வந்து சேர்ந்தவர்கள் அரச தரப்பினர். முதலில் வந்த சில்வா தவறுதலாக விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களை நோக்கி சென்றுவிட்டார். கொல்லா கமவும் அஷ்ரப்பும் அவரை பின்தொடர்ந்தனர். எனினும், குழப்பமடைந்தது அவர் மாத்திரமல்ல, பாலசிங்கமும் விடுதலைப் புலிகளின் ஆலோசனை குழுவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமற முயன்றார். அரச தரப்பிற்கான மேசையில் நிமால் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, அஷ்ரப், பெர்னாண்டோ புள்ளே எச்.எல்.டி. சில்வா பாலித ஹோஹொன ஆகியோர் அமர்ந்தனர்.</b> <b>-நாளை தொடரும்- </b> நன்றி: தினக்குரல் - வினித் - 03-03-2006 <b>ஜெனீவா</b><b> பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? (நேற்றைய தொடர்ச்சி) உத்தியோகபூர்வ ஆவணத்தின் படி பிரதிநிதிகள் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. எனினும், இறுதி நேரத்தில் ஜனாதிபதி மகிந்தவின் நம்பிக்கைக்குரிய வாஸ் குணவர்த்தனவும் வந்து சேர்ந்தார். ஜனாதிபதியிடமிருந்து கொண்டு வந்திருந்த கடிதத்தின் அடிப்படையில் அவர் தூதுக் குழுவினரின் ஆசனத்தில் அமர்ந்தார். எனினும், அவரது பெயர் பட்டியிலில் இடம்பெறவில்லை. எனினும், இதற்கு முன்னர் பிரதி நிதிகள் தொடர்பாக பிரச்சினையொன்று உருவானது. அரசாங்க குழுவில் முக்கிய ஆசனங்களில் ஏழு பேரும் அவர்களுக்கு உதவியாக வேறு ஏழு பேரும் இதனை விட, உதவி உத்தியோகஸ்தர்கள், ஆலோசகர்கள் என பலர் இடம்பெற்றிருந்தனர்.விடுதலைப் புலிகள் தரப்பில் எட்டு பேர் மாத்திரம் இடம் பெற்றிருந்தனர். இதற்கு முந்தைய தினம் நோர்வே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட வேளை, விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளின் போது சம அந்தஸ்தின் அவசியம் கருதி அரசாங்க பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். எனினும், அரசாங்கம் தனது எண்ணிக்கையை குறைக்க மறுத்த அதேவேளை, விடுதலை புலிகள் தமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டது. விடுதலைப் புலிகளின் தரப்பில் அன்டன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், நடேசன், கேர்ணல் ஜெயம், மார்ஷல் ஆகியோர் முக்கிய ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். இவ்வாறான அசௌகரியமான சூழ்நிலையிலேயே புதன்கிழமை பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றினார். பேச்சுவார்த்தைகள் குறித்த யதார்த்த பூர்வமான கண்ணோட்டம் அவசியம் என்றார். இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் இரு தரப்பிற்கும் இடையில் மிகக் குறைந்தளவு நம்பிக்கைகளே உள்ளதால் அதிகளவு எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டும். எனினும், இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்தது சாதகமான விடயம் என்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு இரு தரப்பும் இணங்கியபோது இலங்கை யுத்தத்தின் விளிம்பில் இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான வேளை முதலில் பேசியவர் சுவிர்ற்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் சமஷ்டி திணைக்களத்தின் அரசியல் விவகார இயக்குநர் ஊர்ஸ் ஜிலை வில்லொ. இதன் பின்னரே எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றினார். எச்.எல்.டி.சில்வா இதேவேளை, முந்தைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல். டி.சில்வா யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசாங்க அறிக்கையை தயார் செய்து கொண்டிருந்தார். அரசாங்கம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளை இன்னொரு பக்கத்தில் வேறு விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன, யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைமையில் மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது. நோர்வேயை சேர்ந்த ஹொக்லண்டின் இடத்திற்கு சுவீடன் நாட்டை சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்படவிருந்தார். <img src='http://img96.imageshack.us/img96/2236/dscf13303qg.jpg' border='0' alt='user posted image'> யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தலைமை அரசாங்கம் உடனடியாக இந்த மாற்றம் தங்களுடைய வேண்டுகோளின் பேரிலேயே சாத்தியமானது என காண்பிக்க முயன்றது. எனினும், உண்மை இதுவல்ல. ஜனவரி மாதத்தில் பிரபாகரன் சொல்ஹெய்மை சந்தித்த வேளை தனது கரிசனைக்குரிய இன்னுமொரு விடயத்தையும் சொல்ஹெய்மின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.அது ஹொவுக்லான்ட் தொடர்பானது. ஹொக்லண்ட் பதவி விலகப் பட வேண்டும் என அவர் கோரினார்.ஹக்ருப் ஹொக்லண்ட் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்து வரும் அறிக்கைகள் குறித்து அவர் அதிருப்தியடைந்திருந்தார். இதன் காரணமாக ஹொக்லண்ட் நீக்கப்பட்டது அரசாங்கம் தனக்கு கிடைத்த வெற்றி என காட்ட முயன்றால் கூட அது விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த வெற்றியே. முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் வடக்கிற்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்தன. கடந்த வருட தேர்தல் பிரசாரத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் இதனையே செய்து வருகின்றனர். அவர் தனக்கான எல்லைக் கோடுகளை வகுத்துள்ளார். தனது அணியை நிர்ணயித்துள்ளார்.எனினும், பின்னர் ஒவ்வொன்றிலிருந்தும் பின் வாங்கியுள்ளார்.பேச்சுவார்த்தைகளுக்கான இடம், அனுசரணையாளர், யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றம் செய்வது என ஒவ்வொன்றிலும் பின் வாங்கியுள்ளார். <img src='http://img67.imageshack.us/img67/786/flagbookletfigures3bh.jpg' border='0' alt='user posted image'> இதேவேளை, விடுதலை புலிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதுடன் திறமையான, புத்திசாலித்தனமான பேச்சுவார்த்தையாளர்கள் என்ற அவர்களது அந்தஸ்த்தும் அதிகரித்து வருகின்றது. சர்வதேச ரீதியிலும் சாத்தியமாகி வருவதால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரித்து வருவதுடன், தமிழ் மக்களில் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தும் முக்கியமாக அதிகரிக்கின்றது. ஆகவே, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்ததுடன் அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மாற்றியமைப்பது என்ற தனது ஆரம்ப நிலைப்பாட்டையும் விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்துவது என்ற நிலைப்பாட்டையும் வகுத்திருந்தனர். எனினும், புதன்கிழமை (22) இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்வதற்கு முன்னரே செவ்வாய்க்கிழமையே மோதல் ஆரம்பமாகி விட்டது. யார் முதலில் பேசுவது என்பதே முதலில் பிரச்சினையை உண்டு பண்ணிய விடயம். சுவிஸ் அரசாங்கத்தின் அரசியல் விவகார உறுப்பினர் ஒருவர் பேசுவது, அதன் பின்னர் எரிக் சொல்ஹெய்ம் பேசுவார், இதன் பின்னர் இரு தரப்பும் தமது உரைகளை நிகழ்த்துவது என்பதே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. யார் முதலில் பேசுவது என்ற கேள்வி எழுந்தது. அரசாங்க பிரதிநிதிகள் குழு தமக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தாமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட பூர்வமான அரசாங்கம் எனவும் அது வாதாடியது எனினும், விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன் இதனை நிராகரித்து விட்டனர். இதன் பின்னர், சொல்ஹெய்ம் இரு தரப்புடனும் பேசி ஒரு முடிவிற்கு வந்தார். நிமால் சிறிபால டி.சில்வா முதலில் ஒரு சிறிய உரையை ஆற்றுவார் எனவும், அதன் பின்னர் அன்டன் பாலசிங்கத்தை முழுமையான உரையாற்ற அழைப்பது எனவும், பாலசிங்கத்தின் பேச்சு முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தனது விவரமான அறிக்கையை வெளியிடும் என இணக்கம் காணப்பட்டது. ஆகவே, இவ்வாறான சூழ்நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக இருந்ததுடன், பாதை மிகவும் கரடு முரடாணதாகக் காணப்பட்டது. பேச்சுவார்த்தைகள்- சில்வா சிறு உரையை ஆற்றியதுடன் ஆரம்பித்தன. பின்னர் பாலசிங்கம் அவரது உரையை ஆற்ற அழைக்கப்பட்டார். இதன் பின்னர் அரசாங்கம் தனது அறிக்கையில், பாலசிங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உள்ள பல பிரிவுகள் குறித்து கவனத்தை ஈர்த்தார் (குறிப்பாக, 1.8 ஆயுதக் குழுக்கள் தொடர்பானது). அவர் வட,கிழக்கிலும், கொழும்பிலும் ஐந்து ஆயுதக் குழுக்கள் இயங்குவதாக தெரிவித்தார். கருணா குழு ஈ.பி.டி.பி , புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ்.(வரதர்) மற்றும் ஜிகாத் என சுட்டிக்காட்டினார். கொழும்பிலும் துணைப்படையினர் இலங்கையின் பல பகுதிகளிலும் தலை நகரிலும் செயற்படும் ஆயுதக் குழுக்கள், அதன் பிரதேச தளபதிகள், அதன் தலைவர்கள் குறித்து அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் தலைமைக்கும் குறிப்பாக, இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றித் தெரியும் எனினும், நாங்களும் எமது தரப்பு வாதத்தை வலுப்படுத்துவதற்காக முழுமையான விபரங்களை சமர்ப்பிக்கின்றோம் என்றார். பாலசிங்கத்தின் 12 பக்க அறிக்கையில் பொது மக்களின் கொலைகள், கடத்தல்கள் தொடர்பாக கடும் குற்றம் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. பாலசிங்கம் ஆயுதக் குழுக்களும் இராணுவமும் இணைத்து 109 பேரைக் கொலை செய்துள்ளதாகவும் இவர்களால் கைது செய்யப்பட்ட பின்னர் 48 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழுவிடம் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த முழுமையான பூரணமான விபரங்கள் இருந்தன. விடுதலைப் புலிகள் 546 யுத்த நிறுத்த மீறல்களை புரிந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விபரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்ட பாலசிங்கம், இதில் பெருமளவு குற்றச்சாட்டுகளில் சிறுவர்களை படையணியில் சேர்ப்பது தொடர்பானவை. இவை வட,கிழக்கில் காணப்படும் குழப்பகரமான சிறுவர் உரிமைகளை கணக்கிலெடுக்காதவை என்றார். சிறுவர்களை படையணியில் சேர்த்தல் சகல சந்தர்ப்பங்களிலும் உங்களது அரசாங்கம் என்பதை வலியுறுத்திய அன்டன் பாலசிங்கம், அரசாங்கமும் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவும் வட, கிழக்கில் காணப்படும் நிலைமையை கணக்கிலெடுக்கவில்லை என்றார். தமிழ்ச்செல்வன் இது குறித்து பின்னர் தெளிவுபடுத்துவார் எனவும் குறிப்பிட்டார். தமிழ் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் கொலைகள், ஆட்கடத்தல் போன்றவற்றை அரசாங்கமும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவும் இலகுவாக புறக்கணித்து விட்டன என்றார். விடுதலைப் புலிகளின் ஆடுகளம் ஆக, விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நோர்வே அனுசரணையால் ஏற்பட்ட மிகவும் ஆக்கபூர்வமான விடயம் என அழைத்ததன் மூலம் தமது பேச்சுவார்த்தைகளுக்கு அதனை அடிப்படையாக கொள்ள நினைக்கின்றார்கள் என்பது புலனாகியது. அரசாங்கத்தின் ஆடுகளம் நிமால் சிறிபால டி சில்வாவும் அரச பிரதிநிதிகள் குழுவும் தமது ஆரம்ப உரைகளில் வெளிப்படையாகவும் தெளிவாகவும் கருத்து கூறுவதாக குறிப்பிட்ட போதிலும் துணைப்படை விவகாரத்தை முற்று முழுதாக புறக்கணித்துள்ளதுடன், பாதாள உலகம், போதை பொருள் வியாபாரிகள் போன்றவர்கள் பற்றிப் பேசியதை காண முடிந்தது. அரசாங்கம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை குறித்தும் நீண்ட அறிக்கையை வெளியிட்டது. ஊடகங்களுக்கு வெளியிடுதல் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது போல இரண்டு நாட்களுக்குள் விடுதலைப் புலிகளால் இலங்கை அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. தங்களுடைய முன்னைய நிலைப்பாடுகள் ஒவ்வொன்றிலும் பின்வாங்கியதுடன் ஜெனீவாவிலிருந்து வெறுங்கையுடன் புறப்பட்டது. புதன்கிழமை அன்டன் பாலசிங்கம் தனது உரையை ஆற்றிய பின்னர் , அரசாங்கத்திற்கு தெரியாமல் அது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. இதேவேளை, நிமால் சிறிபால டி சில்வா, யுத்த நிறுத்த உடன்படிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என குறிப்பிட்டதன் மூலம் அரசாங்கம் உடனடியாக தன்னை ஒரு வரையறைக்குள் மட்டுப்படுத்திக் கொண்டது. அதேவேளை, அன்டன் பாலசிங்கம் தனது அறிக்கையினை ஊடகங்களுக்கு வெளியிட்டதும், அவர் அவ்வாறு செய்வார் என்பது அரசாங்க பிரதிநிதிகளுக்கு தெரியாது. இரண்டு ஆரம்ப உரைகளுக்கு பின்னர் மதிய உணவிற்கு சென்றவர்கள், மீண்டும் புதிய மோதலில் ஈடுபட்டார்கள். பாலசிங்கம் தனது அறிக்கையை வெளியிட்டதை அறிந்த நிமிடத்திலிருந்து அவர்கள் சீற்றமடைந்து காணப்பட்டனர். இரண்டு பாரிய வேறுபாடுகளை கொண்ட நிலைப்பாடுகள், பொது மக்களுக்கு தெரிய வந்ததே இதற்கு காரணம். அரசாங்கம் இது குறித்து நோர்வேயிற்கு முறையிட்டதுடன், பாலசிங்கம் ஊடகங்களுக்கான வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற உடன்பாட்டை மீறி விட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. பாலசிங்கம் இதனை மறுத்தார். நான் உடன்பாட்டை மீறவில்லை. அறிக்கைகளை வெளியிடுவது தொடர்பாக உடன்பாடு எதுவுமில்லை. அரசாங்கமே முதலில் இது குறித்த இணக்கப்பாட்டை மீறியது. ரோஹித நீண்ட பேட்டியொன்றை அளித்தார் என அன்டன் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் தனது அறிக்கையினை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இரகசியமாக வைத்திருக்க நினைத்த நிலைப்பாடு தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்து விட்டது. புதன்கிழமை மதிய உணவிற்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்தன. பாலசிங்கம் ஊடகங்களுக்கு அவரது அறிக்கையை வெளியிட்டது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தது. இரு தரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஒவ்வொரு பிரிவாக ஆராய்ந்ததுடன், அதனை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்தின. ஆக அரசாங்கம் ஆர்ப்பாட்டமான ஆரம்ப உரைக்கு பின்னர் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து ஒவ்வொரு விடயத்திலும் விட்டுக் கொடுத்ததுடன் இரண்டு நாட்களும் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டது. மேலும், அரசியல் அமைப்பிற்கு முரணானது என தாம் வர்ணித்த உடன்படிக்கையை வலுப்படுத்துவது குறித்து அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மேசைகளில் ஆராய்ந்தனர். எனினும், அரசாங்க தூதுக்குழுவின் உத்தியோக பூர்வ பேச்சாளர் ரோஹித போகல்லாகம நையோனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாடொன்றிற்கு வர வேண்டியிருந்தது. சுவிஸில் உள்ள அவரது மகள் தக்சித்த தனது தந்தைக்காக காத்திருந்தார். மதிய பேச்சுவார்த்தைகள் 3.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டும். எனினும், மேலே குறிப்பிடப்பட்ட குழப்பங்களால் அது சாத்தியமாகவில்லை. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகள் 6.30 மணிவரை தொடர்ந்ததால் போகல்லாகமவினால் குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் ஹோட்டலிற்கு செல்லாத அவர் தனது மகளை கூட்டி வருவதற்கு வாகனத்தை மாத்திரம் அனுப்பியதுடன் தன்னால் செய்தியாளர் மாநாட்டிற்கு வர முடியாது என சொல்லி அனுப்பியிருந்தார். புதன்கிழமை மேலும் சுவாரஸ்யமாக அமைந்தது. புலிகளின் பிரதிநிதிகள் அரச தரப்பினரிடம் இரண்டு புத்தகங்களை கையளித்தனர். ஒன்று அன்ரன் பாலசிங்கம் எழுதியது. மற்றையது அவரது மனைவி எழுதியது. ஆட்டோகிராப் இரண்டு புத்தகங்களையும் படித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளுங்கள் என பாலசிங்கம் அரச தரப்பினரை கேட்டுக் கொண்டார். அரச தரப்பினர் புத்தகங்கள் குறித்து பெரும் மகிழ்ச்சியடைந்ததுடன், பாலசிங்கத்திடம் ஆட்டோகிராப்பும் பெற்றனர். இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது எச்.எல்.டி.சில்வாவே பிரதான பேச்சாளராக செயற்பட்டதுடன், யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்த நீண்ட விவாதத்தை ஆரம்பித்தார். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் உருவான ஆயுதக் குழுக்கள், உடன்படிக்கையின் வரையறைக்குள் அடங்காது என்பது அவரது கருத்து. இதன் காரணமாக இது குறித்து பேச தேவையில்லை என்றார். இலங்கை அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மையை நாங்கள் ஏற்கவில்லை. இதனால் உங்களது கருத்துக்கள் எங்களுக்கு முக்கியம் இல்லை என்றார் பாலசிங்கம். கடந்த காலங்களில் இந்திய அமைதிப்படை அவர்களை பயன்படுத்தியது, தற்போது அரசாங்கம் அவர்களை பயன்படுத்துகின்றது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ் நீங்கள் ஆயுதக் குழுக்களை வைத்திருக்க முடியாது. அவை எப்போது உருவாகின என்பது குறித்த காலவரையறையை திணிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். நாங்கள் பாராளுமன்றத்திற்கு அப்பால்பட்ட விடுதலை அமைப்பு. இது அரசியல் அடிப்படையில் விடயங்களுக்கு தீர்வு காண்பதற்கான மன்றம். சட்டங்களை அடிப்படையாக வைத்து இங்கு தீர்வு காணமுடியாது. இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கான சந்தர்ப்பம் இல்லாவிட்டால் நாம் வெளியேறுகின்றோம் என்றார். பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளர் கௌசல்யனின் படுகொலை குறித்தும் சுட்டிக்காட்டினார். அவ்வேளை பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ எழுந்து குற்றவாளிகள் இனம் காணப்படாத கைது செய்யப்படாத பல கொலைகள் உள்ளன.அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் கூட குற்றவாளிகள் இனங்கா ணப்படவில்லையென்று தெரிவித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் பாலசிங்கம் இல்லை, இல்லை என பதிலளித்ததுடன் நீங்கள் எங்களது வரலாற்றை வாசிக்கவில்லையா? அதனை செய்தது எங்களது அமைப்பு தான் என தெரிவித்திருக்கின்றோம் என கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் பாலசிங்கம் தான் ஒருவர் தான் பேசுவதாகவும் தான் களைத்து விட்டதாகவும் குறிப்பிட்டார். சிறுவர்களை படையணியில் சேர்த்தல். மதியத்தில் தமிழ்ச்செல்வன் இது குறித்து பேசினார். யுனிசெவ்வுடன் இணைந்து சிறுவர்களின் நலன்களை முன்னெடுப்பதற்கு தமது அமைப்பு பாடுபடுவதாக அவர் குறிப்பிட்டார். சிறுவர்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் விடுதலைப் புலிகளிடம் வருகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வன். இதன் பின்னர், பாலசிங்கம் விவாதத்தில் கலந்து கொண்டதுடன் கண்காணிப்பு குழுவின் தலைவருடன் இது குறித்து காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். சிறுவர்களை படையணியில் சேர்ப்பதை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் எந்த பிரிவின் கீழ் மீறலாக கருதுகின்றீர்கள் என பாலசிங்கம் கேள்வி எழுப்பினார். இந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பேரியல் அஷ்ரப், தாய் என்ற விதத்தில் சிறுவர்கள் எவ்வாறான துயரங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்றார். தமிழ்ச்செல்வன் இதற்கு உடனடியாக பதிலளித்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை என்ற விதத்தில் சிறுவர்கள் அடக்கு முறையின் கீழ் எவ்வாறான துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்றார். இதன் காரணமாக, ஆயுதக் குழுக்கள் மற்றும் சிறுவர்களை படையணியில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முறிவடையும் தறுவாயில் இருந்தன. ஜெனீவாவில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே வழமைக்கு மாறாக காணப்பட்டதுடன் அமைதியாக பேசுவதற்கு தயாராக காணப்பட்டார். அவர் உடனடியாக ஜனாதிபதியுடன் நேரடி தொடர்பு வசதிகள் மூலம் தொடர்பு கொண்டார். இதற்கு தீர்வு காண வேண்டும் அல்லது இது முறிவடைந்துவிடும் என்றார். இதன் காரணமாக அவர் பாலசிங்கத்தை தனிமையில் சந்திக்க விரும்பினார். எனினும், பாலா அதற்கு தயாராகவில்லை. -நன்றி: சண்டே லீடர் தமிழில்: ஏ.ரஜீவன்</b> http://www.thinakural.com/New%20web%20site...3/Article-1.htm |