03-01-2006, 11:31 PM
சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார்.
அதென்ன மாயக்கண்ணாடி?
மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய நான் உழைக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார். நவ்யா நாயரை 'ஆடும் கூத்து' நடிக்கும்போது பார்த்தேன். உணர்வுகளை பிடித்துக் கொண்டு நடிப்பில் பல வித்தைகள் செய்து அதிர வைக்குது. அவங்களையே என் இணையாக தேர்ந்தெடுத்தேன். த. தவமிருந்து சாயல் எங்கேயும் இருக்காது. இது வேறு உணர்வுகள். இது வேறு மாதிரியான படம்.
ஏன் குடும்பம்னு ஒரே வட்டத்திற்குள்ளே சுற்றிச் சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க?
குடும்பம் இல்லாமல் நாம் யாருமே இல்லையே! குடும்பத்தின் உன்னத உறவுகளை முறிச்சுவிடாமல் இருக்கணும். வாழ்க்கைக்குள் தொலைந்து கிடக்கிற, கண்டுபிடிக்க முடியாத ஆழத்தில் இருக்கிற உணர்வுகளை கொஞ்சமாவது பாசாங்கு இல்லாமல் செய்யணும் என்ற ஆர்வம் தான் இருந்துகிட்டே இருக்கு. இந்த சமூகம் சீர் கெட்டுப் போனால் எனக்கும் பங்கு இருக்கு. அந்தத் தவறை நான் செய்ய முடியாது.
ஏன் சன் டி.வி.யை எதிர்த்து நிற்கிறீர்கள்?
என்னோட எதிர்ப்பு அவர்களைப் புறம்தள்ளுவதுதான். அவர்களின் சுயலாபத்திற்காக, தொலைக்காட்சி வளர்ச்சிக்காக, நல்ல படங்கள் என்ற பார்வையே இல்லாமல், மக்களை தவறான வழிக்கு இழுத்துக் கொண்டே போகுது சன் டி.வி. என் 'பொற்காலத்தை' விமர்சித்த போது 'பாதிப் பொன், பாதிக்கு மேலே மண்ணு' என்று சொன்னாங்க. அன்றையிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு பேட்டி, படங்கள் தருவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னோட படத்திற்கு ஐந்தாவது, ஆறாவது இடம் கொடுக்கும்போதே இந்த டி.வி.யின் ஓரவஞ்சகம் ஜனங்களுக்கு தெரிந்து போகிறது இல்லையா? முதலிடம்னு ஏதோ ஒரு படத்தைப்போட்டு ஜனங்களுக்கு திசை திருப்புவது மிகப்பெரிய துரோகமாக படலையா?
உங்களை மாதிரி நல்ல டைரக்டர்கள் நடிக்க வந்துவிட்டால், இருக்கிற நடிகர்களுக்கு ஸ்டார்ட், கட் சொல்கிற டைரக்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?
'தவமாய் தவமிருந்து' படத்தில் கூடப் படிச்ச பெண்ணை கெடுத்திட்டு, நகரத்திற்கு ஓடுகிற கேரக்டர். எந்த ஹீரோ செய்ய முன்வருவாங்க சொல்லுங்க! இமேஜ் இருக்கே, ரசிகர்கள் கிட்டே முகம் காட்ட முடியாதே. நடிகர்கள் மனசு வைத்தால், யதார்த்தமான படங்கள் வரும். எனக்கு ஹீரோவாகி நாற்காலியைப் பிடிக்கணும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. மக்களை முட்டாள் ஆக்காத சினிமா வரணும். எல்லோரும் மஞ்சள் பையை தூக்கிக்கிட்டு ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகணும்னு வந்துவிடுகிறார்கள். அவங்க கஷ்டப்பட்டு வந்த கதை யாருக்கும் தெரியாது. சினிமாவில் ஹீரோ என்கிற மாயை ஏராளமானவர்களின் வாழ்க்கையை கெடுத்திருக்கு.
நல்ல இயக்குநராக இருக்கும்போது நடிகர்களுக்கு மெனக்கெட்டீங்க. சுமாரான நடிகரான உங்களை வைச்சே நீங்க டைரக்ட் பண்றது நியாயமாகப் படுதா? மிகச் சிறந்த நடிகர்கள் உங்க டைரக்ஷனில் வரும்போது உங்க கதை சிறப்பாக வரும் இல்லையா?
நீங்கதான் என்னை சுமாரான நடிகர்னு சொல்றீங்க. மக்கள் என்னை மதிக்கிறார்கள். மிகச் சிறந்த நடிகர்கள் யாரும் என்னை இயக்குநராகவே மதிக்கிறதில்லை. நானும் நிறையப் பேரிடம் கதை சொல்லியிருக்கேன். என் கதை அவங்களுக்கு பிடிச்சதில்லை. இனிமேல் மிகச் சிறந்த நடிகர்கள்தான் எதையும் செய்ய முடியும் என்பது கிடையாது. ராஜ்கிரணை நீங்கள் சாதாரண நடிகராக மதிப்பிடக் கூடாது. சிவாஜி, கமலுக்குப் பிறகு மிக அழகாக, சின்னச் சின்ன உணர்வுகளை யதார்த்தமாக, போலித்தனம் இல்லாமல், மிகை நடிப்பு இல்லாமல் வெளிப்படுத்துகிறார் ராஜ்கிரண். சொல்லப் போனால் விக்ரமை விட ராஜ்கிரண் சிறந்த நடிகர். விக்ரம் ஒரு மாயை. இந்த வருடம் அந்நியன், தவமாய் தவமிருந்து இரண்டும் தேசிய விருதுக்குப் போனால் தவமாய் தவமிருந்து படத்திற்குத்தான் விருது கிடைக்கும். மூன்று கெட்டப்பில் வருவது ஈஸி. ஆனால் மூன்று பருவங்களில் ராஜ்கிரண் மாதிரி உயிரோட்டமாக வருவதுதான் பெரிய சாதனை.
வைகோ தேர்தலில் தனியாக நிற்கணும்னு பேசியிருக்கீங்க?
வைகோ ஊழல் இன்னும் அண்டாத ஆத்மா. அவர்கிட்டே மக்களை ஏமாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை. அவரோட மேன்மை புரியாமல் அவர் ஏதோ ஒரு இடத்தில் போய் ஒட்டிக்கிறார். ஏன் ஒட்டுறீங்க. தனியாக நடை போடுங்கன்னு சொன்னேன். தப்பா!
விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
முதலில் மக்கள்கிட்டே பழகணும். இறங்கி யாருக்கு என்ன பிரச்னை என்று தெரிஞ்சிக்கணும். எல்லாத்தையும் தெரிஞ்சுதான் காமராஜர், ராஜாஜி, அண்ணா, ஏன் இப்ப கலைஞர் வரைக்கும் வந்தாங்க. விஜயகாந்த் வர நினைப்பது தவறு அல்ல. விஜயகாந்த் நல்ல குணமா, நல்ல மனுஷனாக இருக்கிறது மட்டும் அரசியல்வாதியாக இருக்க போதாது. அந்த அனுபவம் உங்கள் கைக்கு வர ஐந்து வருஷம் சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு இறங்குங்க. அப்புறம்வாங்க, உங்களுக்கு வெற்றிதான்.
_ நா.கதிர்வேல
http://www.kumudam.com/kumudam/mainpage.php

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :evil:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&