| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 324 online users. » 0 Member(s) | 322 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,194
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,578
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,006
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,398
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,090
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,971
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,234
|
|
|
| புலம் பெயர் வாழ்வு- |
|
Posted by: கறுப்பன் - 03-01-2006, 03:27 PM - Forum: புலம்
- Replies (2)
|
 |
புலம் பெயர் வாழ்வு (2)
இளைய அப்துல்லாஹ்
லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் தம்பி... இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சா¤வராது ஒரு கோயிலைத் திறந்திட்டம் ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
லண்டன் தெருக்களில் ஈஸ்ட்ஹம்,இல்பேட்,லூசியம்,விம்பிள்டன்,அல்பேட்டன்,வெம்பிளி,ஹரோ என்று இலங்கைத் தமிழர்கள் கூடி வாழும் ஊர்களில் கோயில்கள் பல அடிக்கடி முளைக்கும். ஒரு கோயிலின் தர்மகர்த்தாவோடு சண்டை பிடித்துப் போய் பி£¤யும் ஐயர் இன்னொரு கோவிலை பிரதிஷ்டை செய்வார்.
கட்சிகளின் பெயர்கள் போல கோவில்களின் பெயர்களும் வைக்கப்படும். உதாரணமாக தி.மு.க. பி£¤ந்து அ.தி.மு.க போல... அநேகமான கோவில்களில் ஐயர் மாருக்கு உ£¤ய வேதனம் கொடுக்கப்டுவதில்லை. ஆலயத்தை மட்டும் நம்பி இலங்கையில் இருந்து செல்லும் ஐயர்மாருக்கு தங்குமிடம், விசா, உணவு என்று கொடுத்து விட்டு இலங்கை ரூபாப்படி சம்பளம் கொடுப்பதாகவும் ஒரு ஐயர் வருத்தப்பட்டார்.
கோயில்கள் மக்களின் மன அமைதியைத் தரும் ஞானாலயங்களாக கருதப்பட்ட காலங்கள் போய் இப்பொழுது வருமானங்கள் தரும் ஒரு பணப்புழக்கமுள்ள இடங்களாக மாறியிருக்கின்றன. லண்டனில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட கோவில்கள் பணம் கொழிக்கும் இடங்களாக இருக்கின்றன. கோவில்களிடையே சண்டைகள் லண்டனில் மிகவும் பிரபலம்.
ஒரு சில கோவில்கள் சேர்ந்து ஒரு திதியை அறிவிக்கும். ஏனைய கோவில்கள் மற்றொரு நாளில் அந்த அனுஷ்டானங்களை மேற்கொள்ளும். தைப்பொங்கல், தீபாவளி போன்ற விடயங்கள் சித்திரை வருடப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி கூட சில நேரம் கோவில்களுக்கிடையில் மாறுபடும். சண்டையாக மாறிவிடும்.
கோவில்கள் சைவா¤ன் அடையாளங்களாகவும் ஆத்ம விமோசன தலங்களாகவும் இருக்க வேண்டியவை வெறும் சண்டை சச்சரவுக்கு£¤ய இடங்களாக இருப்பது கண்டு சைவர்கள் மிகவும் நொந்து போயுள்ளனர்.
இந்தியக் கோவில்களின் கருத்துக்கணிப்பு, நேரக்கணிப்பு இலங்கைக் கோவில்களின் நேரக் கணிப்பு என்று இரண்டு வகைக் குழப்பங்களையும் லண்டனில் காணக்கூடியதாக இருக்கும். இரகுநாதையர் பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என்ற பி£¤வுகள் பெரும் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துபனவாக இருக்கின்றன.
இரகுநாதையர் பஞ்சாங்கத்தை பின்பற்றுகிறவர்கள் ஒரு நாளும், வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்கள் இன்னொரு நாளும், விசேஷ தினங்களை பங்குபோடும் பொழுது பொது மக்கள் பாவம் குழம்பிப்போய் நிற்கின்றனர்.
சைவத் திருக்கோவில் ஒன்றியம் என்ற ஒன்று இப்பொழுது பல மாநாடுகளை நடத்தி வருகின்றது. ஆனால் இந்த சைவத் திருக்கோவில் ஒன்றியத்தினால் கூட எல்லாத் திருக்கோவில்களையும் ஒன்றிணைக்க முடியவில்லை.
ஏன்! என்று அதன் தலைவரைக் கேட்டால் “போய் இணையாத கோவில்களைக் கேளுங்கள்” என்கிறார். இணையாத கோவில்களை வினவினால் சைவத் திருக்கோவில் ஒன்றியத்திடம் நம்பிக்கையின்மையைத் தொ¤விக்கின்றன. இந்நிலையில், நம்பிக்கையும் சமூக அக்கறையும் இளைஞர்கள் மீது கா¤சனையும் வைக்க வேண்டிய சமய நிறுவனங்கள் தங்களிடையேயுள்ள குடுமி பிடி சண்டையைத் தீர்ப்பதற்கே நேரமில்லாமல் அலைகின்றன.
புகலிடத் தமிழர்கள் பற்றிய அக்கறையை அல்லது அவர்கள் மீதான கா¤சனையை அங்குள்ள ஊடகங்கள் வெளிப்படுத்துகின்ற போதும் பொது அமைப்புகள் பாராமுகம் காட்டுகின்றன.
யோகாசனம் பயிற்றுவித்தல், பிரசங்கங்களுக்கு ஆட்களை இலங்கையில் இருந்து அழைப்பித்தல் போன்ற விடயங்களோடு ஐந்து கால நைவேத்தியங்களுடனான பூஜைகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் இளைஞர்கள் மீது காட்டப்படுவதில்லை....
அதனால் இளைஞர்கள் வழிதவறியவர்களாக ஆகிவிட்டார்கள். மேற்றோ போலிட்டன் பொலிஸ் பத்தி£¤கையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அழைத்து தமிழ் இளைஞர்கள் பயன்படுத்திய சாமுராய் வாள்களையும், கிறிஸ் கத்திகளையும் கைத்துப்பாக்கிகளையும் ஆயிரக்கணக்கான கள்ளமான முறையில் தயா£¤க்கப்பட்ட கிறடிட் காட்களையும் காட்டியது.
அவற்றை பார்த்த பிறகாவது சமூக அமைப்புகள் இளையவர்கள் மீது அக்கறை செலுத்தினவா என்றால் இல்லை.
இங்கு ஊ£¤ல் ஒரு பையன் கெட்டவனாக மாறுகிறான் என்றால், சமூகத்தின் கண் அவன் மீது வெறுப்பையுமிழும். லண்டனில் அவனைப் பார்த்து பெருமை பேசுகின்றனர். அதனால் இவன் இன்னும் அலைக்கழிந்து போகிறான்.
முழுக்க முழுக்க தமிழர் சமூக அமைப்புகளின் அக்கறையின்மையே இவற்றிற்கு காரணம் பணம் பறித்தல் அல்லது கிறடிட் காட் தொடர்பாக... கணினியை வெகு இலாவகமாகப் பயன்படுத்த தொ¤ந்த தமிழ் இளைஞர்கள் கடன் அட்டைகளை தாங்களே செய்கிறார்கள். இது கி£¤மினல் குற்றமாகும்.
அண்மையில் ஒரு செய்தி: கிறடிட் காட்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் மெசின்கள் லண்டனில் பார்க்குமிடமெல்லாம் இருக்கும். தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஒரு இடத்தில் மெசின் ஒன்றின் உட்பக்கமாக நுண்ணிய கமராவைப் பொருத்தி காட்டை உட்செலுத்தும் போது கார்ட்டின் நம்பரையும்-இரகசிய “பின்” நம்பரையும் கமரா மூலமாக களவாடி அதேபோல் புதிய நகல் ஒன்றை செய்து பணம் முழுவதையும் எடுத்து விட்டார்கள் தமிழர்கள். இன்னொரு சம்பவம். சவுத்ஹோல் பகுதி தமிழர்கள் நிறைந்து வாழும் இடங்களில் ஒன்று, ஒரு தமிழ் தாதி இரவு 11.30 அளவில் வேலை முடிந்து வரும் பொழுது அவரை அள்ளி கா£¤ல் திணித்து விட்டு அவா¤டம் இருந்த “கிறடிட் காட்டுகள்” இரண்டினை அபகா¤த்து இரவு 11.30 இற்கு 1000 பவுண்கள் எடுத்து விட்டு பின்பு அவரை அப்படியே கா£¤ல் வைத்து அழுத்திப் பிடித்து அதிகாலை 12.10 இற்கு மேலும் 1000 பவுண்களை காட்டில் இருந்து எடுத்துவிட்டு அந்தத் தாதியை நட்ட நடு றோட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.
லண்டனில் ஒரு நாளுக்கு 500 பவுண்கள் கார்ட்டில் எடுக்க முடியும் தாதியும் தமிழ், களவெடுத்தவர்கள் அல்லது அபகா¤த்தவர்களும் தமிழர்கள். இது உதாரணத்திற்கான இரண்டு சம்பவங்கள். இப்படி பல வன்முறைகளில் ஈடுபடும் தமிழ் இளைஞர்களின் செயல்களைப் பார்க்கிறோம்.
இது தமிழர் மீதான இங்கிலாந்து அரசாங்கத்தின் நெருக்கடியை அதிகப்படுத்துவதை நேரடியாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு கொலை வழக்கில் செய்தி சேகா¤ப்பதற்காக சென்றிருந்த பொழுது தலைமைப் பொலிஸ் அதிகா£¤ சொன்னது ஞாபகம் வருகிறது. “இப்படி தமிழர்கள் செய்தால் இங்கிலாந்து அவர்கள் மீது இரக்கம் காட்டாது” உண்மைதான். பல தமிழ் இளைஞர்கள் இங்கிலாந்து சிறைகளில் இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். இன்னும் பத்து வருடங்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பல இளைஞர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் சிறைக் கம்பிகளுக்குள்ளேயே முடங்கிப் போய்க்கிடக்கின்றது.
ஒரு தந்தை சொன்னார்: “தம்பி...இஞ்சை பொம்பிளைப் பிள்ளையளையோ நாளும் நடக்கிற சம்பவங்களைப் பார்க்கும் போது ஊரோடை போய்விட வேணும்”.
உண்மையில் பல பெற்றோர்களுக்கு இந்த எண்ணம் வந்து விட்டது.
கலாசார பிறழ்வு, தாய் தந்தையர் உறவுகள் பற்றிய அசட்டை என்று பொ¤யவர்கள் தாங்க முடியாத அந்தரங்களை சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இந்நிலையில், தமிழர்களின் குற்றச் செயல்கள், நடவடிக்கைகள் அகதிகள் விடயத்தில் பல பாதகமான திருப்பங்களை இங்கிலாந்து அரசு எடுப்பதற்கான நிர்ப்பந்தங்களை எதிர்கொள்கிறது. சுதேசிகளாலும் அரசியல் எதிர்ப்புக் காரர்களாலும் இந்த அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு வருகின்றன. உள்துறை அமைச்சும் குடிவரவு, குடியகல்வு அமைச்சும் இது தொடர்பான அறிக்கைகளை அடிக்கடி மாற்றி மாற்றி தொ¤விக்கும் போது அகதிகள் தொடர்பான நெருக்குதல்கள் அதிகா¤க்கின்றன.
முக்கியமாக அகதிகளின் வேலை செய்யும் அனுமதியை எவ்வித முன்னறிவித்தலுமின்றி அரசாங்கம் பறித்து விடுகிறது. அதனால் அவர்கள் ஜீவனோபாயத்துக்கு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
ஆதனோடு நாஸ் எனும் அகதிகளுக்கான உதவும் அமைப்பும் இப்பொழுது கொடுப்பனவுகளை நிறுத்தி விட்டது. அகதிகள் தொடர்பாக வழக்குகளில் வாதாடும் சட்ட நிறுவனங்களுக்கு கொடுத்து வந்த ஒரு தொகைப் பணத்தையும் சில நிறுவனங்களுக்கு நிறுத்தி விட்டது. சில நிறுவனங்களுக்கு குறைத்து விட்டது.
இந்த நிலையில், அகதிகள் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளி அவர்களை இங்கிலாந்தில் இருந்து வலுக்கட்டாயமாக திருப்பி தமது நாடுகளுக்கு அனுப்பும் விடயத்தையே அரசும் உள்துறை அமைச்சும் செய்து வருகின்றது.
சில அகதிகள் மாதமொரு முறை அதற்கென அமைக்கப்பட்ட நிலையங்களுக்கு வந்து கையெழுத்திட பணிக்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு வாரமொரு தடவை சிலருக்கு ஒவ்வொரு நாளும். இப்படியான நெருக்குதல்களும் திருப்பி அனுப்புவதிலும் தொடர்ந்த வண்ணமிருக்கும் நிலையில், அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் பலரை அரசு கையெழுத்திடக் கூப்பிட்ட தினங்களில் திருப்பி அனுப்பும் சம்பவங்களும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.
ஊடகங்களுக்குத் தொ¤யாமல் சமூக நிறுவனங்கள் அகதி உதவி நிலையங்களுக்குத் தொ¤யாமல் நடைபெறும் சங்கதிகள் இவை.
இந்தப் பிரச்சனைகள் பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டிய சமூக அமைப்புகள் இன்னும் பிரசங்கங்களில் மட்டும் வாளாவிருக்க முடியாது. மற்றையை அமைப்புகளில் எவ்வளவு அழகாக பஞ்சாபிகள், குஜராத்திகள், கிறிஸ்தவர்கள் எவ்வளவு அழகாக சமூக கட்டமைப்பை முன்நிறுத்தி வாழ்கிறார்கள். தமிழ், சைவ சமூக கட்டமைப்பை சீர்செய்ய வேண்டியது ஒவ்வொரு சமூக அமைப்புகள் சங்கங்களினதும் கடமையாகும். தமிழர்கள் தொடர்பான ஒரு சந்தேகமற்ற அரசுக்கு தொந்தரவற்ற நிலை வரும் வரைக்கும் தமிழர்கள் மீதான நெருக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இது இங்கிலாந்திலுள்ள தமிழர் சமூக அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் கவனத்திற்கு....
இளைய அப்துல்லாஹ்
லண்டன்
<b>நன்றி: திண்ணை.கொம்</b>
|
|
|
| நலமா? |
|
Posted by: வர்ணன் - 03-01-2006, 07:22 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (41)
|
 |
<b>காற்றே நலமா?
என்னை தாங்கி நின்ற
தாய் நிலமே நலமா?
கடலே நலமா?
அலையே நலமா?
கரை தூங்கும்-கட்டுமரமே
நீ- சுகமா?
மரத்தடி பிள்ளையாரே நலமா?
எங்கள் மனங்களில் வாழும்
மறவர் குலமே
நீங்களும் நலமா?
ஒற்றை பனை மரமே - நலமா?
உயிர்வாழ பால் தந்த பசுவே
நீயும் நலமா?
பள்ளிக் கூடமே நீ நலமா?
பாடம் சொல்லி தந்த - குருவே
நீங்களூம் நலமா?
முரட்டு வீதியே
நீ நலமா?
அதில் முக்கி முக்கி போகும்
மாட்டுவண்டிலே நீ நலமா?
தோழர்களே நீங்க நலமா?
தோழியரே நீரும் சுகமா?
முச்சை கயிறு அறுந்து போக
ஓடி போன நான் விட்ட
பட்டமே நீ நலமா?
எங்கு நீ இருந்தாலும்
என்னையும் கேளேன்
"நீ நலமா?"
வயல் வெளியே நலமா?
வரம்புகளே நீங்கள் சுகமா?
ஆழக்கிணறே நீ நலமா?
அதனருகில் நிழல் பரப்பும்
ஆலமரமே நீயும் நலமா?
பத்துதரம் கிழமைக்கு நான்
ஒட்டுபோடும் சைக்கிளே நீ நலமா?
பாதி வழியில் எனை துரத்தும்
ஜிம்மி நாய்குட்டியே நீயும் நலமா?
காற்றே நீ நலமா?
நான் காதலித்த தேசமே
நீ நலமா?
மரமேறும் அணிலே நலமா?
மறைந்திருந்து பாடும்
குயிலே நீ சுகமா?
பூவரசம் மரமே நலமா?
வாடாமல் என்றும் நிற்கும்
வாதராணி மரமே - நீ சுகமா?
வேப்பமரமே சுகமா?
அதன் விரிந்த கிளைகளில் வாழும்
காக்கைகளே நீங்களும் நலமா?
கனவுகள் மட்டும் இங்கிருக்கு
எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு
பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு
அவை நலமா?
விலை எதுவும் நெருங்கா
தலைவரே நீங்க நலமா?
விடுதலைக்காய் வெடித்து சிதறும்
வேங்கைகளே - நீரும்
"உயிர் பிரிந்திருக்காதெனின்"
சொல்லுங்கள் - சுகமா?</b>[color=green]
|
|
|
| பாம்பு+தவளை= கலைஞர்+வை.கோ |
|
Posted by: Birundan - 03-01-2006, 01:09 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (21)
|
 |
பாம்பு - தவளை குட்டி கதை - வைகோ - Tuesday, February 28, 2006
குரோம்பேட்டையில் நடைபெற்ற ம.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் பாம்பு, தவளை பற்றிய கதையை வைகோ கூறினார்.
நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார்.
நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல்.
நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வாலை தரையில் ஊன்றி வேறு வழியில்லாமல் தலையை முழுவதும் தூக்கி படமெடுத்து நிற்கிறது. கீழே விழுந்தால் பாம்பு கருகி செத்துவிடும்.
கை தட்டல்
இந்த படமெடுத்து நிற்கும் பாம்பின் கீழே நிழலாக இருப்பதால் தவளை நாக பாம்பின் கீழே நிற்கிறது. பசிக்கு கொஞ்சம் வேண்டும் என்றாலும் தவளையை பாம்பு விழுங்கிவிடும். ஆனால் இப்போது விழுங்கமுடியாது. ஏன் விழுங்கமுடியாது என்றால், தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான். தவளை, பாம்புக்கு கீழே இருக்கிறது. தவளைக்கு பாம்பு எமன். ஆனால் வேறு வழியில்லாமல் தவளை, பாம்பின் நிழலில் நிற்கிறது. (பலத்த கைதட்டல்) எதையோ நினைத்து கை தட்டாதீர்கள். நான் சங்க இலக்கிய கதையை சொன்னேன்.
இங்கே, ம.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். அர்ஜூனனுக்கு கண்ணன் தேர் செலுத்துவது போல. ம.தி.மு.க. தொடங்கி 13-வது ஆண்டு நடைபெறுகிறது. அஞ்ஞாதவாச கட்டத்தில் இருக்கிறோம். இந்த கட்டத்தில்தான் அர்ஜூனனின் வில்லின் வீரம் வெளிப்பட்டு தெரிந்தது.
தேர்தல் வரட்டும்
வெள்ளித்திரையில் மீதத்தை காணுங்கள் என்பார்கள். தேர்தல் தேதி அறிவிக்கட்டும். புதிய கருத்துக்களோடு தேர்தல் நேரத்தில் வந்து மீதியை சொல்கிறேன்.
நன்றி : தினத்தந்தி
|
|
|
| இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு!! |
|
Posted by: Rasikai - 02-28-2006, 10:23 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (19)
|
 |
[b]இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு Phishing
(Online Credit Card Fraud)
Credit Card பாவிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு அடிப்படை விடயம்
இலத்திரனியல் உலகில், இமாலயப் பிரச்சனையாக எழுந்துள்ள இந்த கடன் அட்டை குறித்த தரவுகளைத் திருடும் மாபாதகத் திருட்டு, தற்போது சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே சவாலாக விளங்கும் ஒரு கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.
Spoofing, Carding, Phishing, Phreaking என்று பல பெயர்களில் இந்த தகவல் திருட்டு அறியப்படுகிறது. fishing என்றால் தூண்டில் போட்டு, தூண்டிலைக் கவ்வும் மீன்களைப் பிடிப்பதைக் குறிக்கிறது, Phishing என்றால், அதே பாணியில், தூது அனுப்பி, அந்தத் தூதை உண்மையென்று நம்பும் மனிதர்களைப் பிடிப்பது என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இந்தப் பெயர் உருவானதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.
இப்போது கொஞ்சம் உங்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கலாம். வங்கிக் கடன்அட்டைகள் தற்போது பரவலாக மென்வலைச் சஞ்சாரத்தில் பாவிக்கப்படுவதால், அதையே தமக்கான ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு, இந்த இரகசியத் திருட்டில் தினமும் பல ஆயிரம் திருடர்கள் முழுநேரத் தொழிலாய் இறங்கி நிறையவே சம்பாதிக்கிறார்கள்.
அப்படி என்னதான் நடக்கிறது?
நாங்கள் கொடுக்கும் இரகசியத் தகவல்களைப் பெறும் நிறுவனங்களான வங்கிகள், பணமாற்று நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், ஏனைய கடனட்டைகளை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள், மென்வலை வர்த்தக நிறுவனங்கள் போன்றன உட்பட அரசகரும விவகாரங்களுக்கான பலவித அமைச்சுக்கள், நிலையங்களுடன் நாம் பரிமாறும் பலவித தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடுகிறார்களா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் இவர்களுக்கு வழங்கும் தகவல்கள், தகவல்களாகவே செல்லாமல், அவை திரிக்கப்பட்டு 'encrypted' வடிவில் செல்வதால், அந்தத் தகவல்களை யாரும் திருடுவது அத்தனை எளிதல்ல. அதனால், நாம் 'ஒன்லைன்' அதாவது மென்வலையூடாக பரிமாறும் தகவல்கள் உருவப்படுவது மிகவும் அபூர்வம்.
ஆனால், இப்படி இரகசியமாகப் பரிமாறப்படும் தகவல்களை, பரிமாறுபவர்களிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளுவதற்காக, மென்வலைத் திருடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாற்றுத் திட்டமே இந்த 'phishing' என்ற சதிவலைத் திட்டம்.
இதை இலகுவாக விளக்குவதற்காக நமக்குப் பரிட்சயமான உதாரணமொன்றை எடுத்துக் கொள்வோம்.
துரை என்பவர் 'ஒன்லைன்' வசதியைப் பாவித்து, மென்வலையூடாக தனது வங்கியில் தொடர்பை மேற்கொள்கிறார். முதற்தடவை துரை தனது கணக்கை 'ஒன்லைன்'ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை இலக்கம், முடியும் காலம் போன்ற அனைத்தையும் 'ஒன்லைன்' பத்திரத்தில் நிரப்புகிறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, துரையின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, துரை திருப்தியடைகிறார். அன்றிலிருந்து துரை தனது வங்கியுடன் அவ்வப்போது 'ஒன்லைன்' தொடர்பில், பணப்பரிமாற்றம் உட்பட, ஏனைய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி முகாமைத்துவ அலுவல்களையும் மேற்கொள்கிறார்.
இந்த விடயங்களில் எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாதிப்பும் இதுவரை துரைக்கு ஏற்படவில்லை. துரை மேற்கொண்ட இந்த 'ஒன்லைன்' தொடர்புகளிலும், தகவல் பரிமாற்றத்திலும் ஆபத்து எதுவும் இல்லை. அனைத்தும் சரியாகவும் பாதுகாப்பாகவுமே செய்யப்பட்டுள்ளன.
எல்லாம் இலகுவாக வெற்றியாக பாதுகாப்பாக நடைபெறுவதையிட்டு துரை மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழமைபோன்று துரை தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. ஏனைய ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் துரை. வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில், நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. என்ன அது? நண்பர் துரை அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாம் மீள உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தரத் தவறினால், தங்கள் 'ஒன்லைன்' வங்கிச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இவ்வாறு அந்த ஈமெயிலில் கோரப்பட்டிருக்கும்.
மிக இலகுவாக 'ஒன்லைன்' சேவையைப் பாவித்துக்கொண்டிக்கும் துரைக்கு, இந்த இடைநிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், துரை உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார். தற்காலிக இந்த இடைநிறுத்த அறிவிப்பை தனது திறமையால் உடனடியாக பதிலனுப்பி தவிர்த்துவிட்டதாக தன் மனைவியிடம் சொல்லி, கொலரைத் தூக்கிவிடுகிறார்.
ஆனால் பாவம் துரை. இங்கேதான் இந்த 'phishing' என்ற திருட்டு, எந்தப் பாவமும் செய்யாத துரையைப் பதம் பார்த்துவிட்டதை உணர மறந்துவிட்டார்.
நடந்தது என்ன?
வங்கி உண்மையில் அனுப்பும் அதே ஈமெயிலைப் பிரதிசெய்து, அவர்களது 'லோகோ', அவர்களது பெயர், அவர்களது முகவரி உட்பட, அப்படியே அவர்களது கடிதம் போன்று ஈமெயிலில் தயாரித்து, தங்களது இரகசிய ஈமெயில் ஊடாக பல ஆயிரம் பேருக்கு இந்த ஈமெயிலை அனுப்பி விடுகிறார்கள் திருடர்கள். தங்களது ஈமெயில் முகவரியை மறைத்து, வங்கி முகவரி போன்ற ஒரு முகமூடி முகவரியை உருமாற்றி, இந்த ஈமெயில் அனுப்பப்படுவதால், பெறுனர் இந்த ஈமெயில் யாரிடமிருந்து வந்தது என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்.
இப்போது துரை அனுப்பிய பதில், வேறு யாரிடமோ சென்றுவிடுகிறது. துரையின் தகவல் கிடைத்து, 3 நிமிடங்களுக்குள், துரையின் கடன்அட்டை பதம்பார்க்கப்படுகிறது. கடன் அட்டையில் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒரு சந்தையில் பாவிக்கப்பட்டு விடுகிறது.
யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
யாரும் கோபிக்க வேண்டாம். இந்தத் திருட்டில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், ஒன்றுமறியா அப்பாவிகளாக 'நாமுண்டு நம்ம வேலையுண்டு' என்று, காலாகாலத்தில் சரியானவற்றை மட்டும் செய்துவிட்டு, சிவனே என்று இருக்கும் நல்லவர்கள் தான் என்கிறது ஆய்வுகள்.
குறிப்பாக, ஈ-பே (e-bay), பே-பால் (Pay-pal), கனடியன் ரயர் (Canadian Tire), பே (Bay), சனக்கோ (Sunocco) போன்ற பல எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களுடன், 'ஒன்லைன்' தொடர்பு வைத்திருக்கும் அனைவரும், மிக அதிகமாக இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். எந்த நிறுவனத்திடமிருந்தும் தகவல் கேட்டு ஈமெயில் வந்தால், உடனே விபரங்களை பதிலாக அனுப்புவதை உடனே நிறுத்திக் கொள்வதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. வந்திருக்கும் ஈமெயில் உண்மையானதா இல்லையா என்று தெரியாமல், எப்படி அதை உதாசீனம் செய்வது என்று நீங்கள் கேட்பது ஒரு நியாயமான கேள்விதான். அப்படி நீங்கள் நினைக்குமளவிற்கு அந்த ஈமெயில் உண்மையானதாகப் பட்டால், மாற்றுவழியைப் பயன்படுத்துங்கள். இரண்டு மாற்றுவழிகள் உண்டு. ஒன்று, அந்த நிறுவனத்தின் உண்மையான ஈமெயில் முகவரியை அவர்களது இணையத்தளத்திலிருந்து பெற்று, அதற்கு நேரடியாக விபரங்களை அனுப்புங்கள். அவர்களுக்கு உங்கள் விபரம் தேவைப்படாவிட்டாலும், ஆபத்து எதுவும் இல்லை. இரண்டாவது, அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரத்தைக் கொடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், கடன்அட்டை பாவிக்கும் நிறுவனங்கள் எதிலிருந்தும் வருகின்ற ஈமெயில் தொடர்புகளுக்கு, விபரங்களுடன்கூடிய பதில் அனுப்பி விடாதீர்கள். கடலில் பல ஆயிரம் மீன்கள் உலாவுகின்றன. நாம் தூண்டில் போடுவது குறிப்பிட்ட ஒரு மீனுக்கு அல்ல, ஏதாவது அகப்படும் ஒன்றை சுண்டி இழுக்கலாம் என்றுதானே! இதே நிலைதான் இணையத்திலும். திருடர்கள் திருட்டு ஈமெயில் தூண்டில்களை ஆயிரமாயிரமாய் வீசிவிட்டு, அகப்பட்டுக்கொள்பவரை சுண்டி இழுப்பதற்காக 'கண்ணில் எண்ணெய் விட்டபடி' காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த திருட்டு குறித்த வரலாறு
1996ல், AOL எனப்படும் அமெரிக்கன் ஒன்லைன் ஈமெயில் மற்றும் இன்ரர்நெற் சேவையில், கட்டணமின்றி களவாக இணைந்துகொள்ள விரும்பிய சில திருட்டு இணையப் பாவனையாளர்கள், AOL பாவனையாளர்களுக்கு பொய்யான ஈமெயில்களை அனுப்பி, அவர்களது தகைமைச்சொல்லை (password) பெற்றுக்கொண்டு, இணையத்தில் இலவச திருட்டு உல்லாசமும் சல்லாபமும் நடாத்தினார்கள் திருடர்கள்.
இது நாளடைவில், தூதுபோகு செயலிகளிலும் (Messenger) உடன்தூதுபோகு செயலிகளிலும் (Instant Messenger) தொற்றிக்கொண்டு, தகைமைச்சொல்லை இலகுவாகப் பெற்று, தங்கள் கிரிமினல் செயல்களுக்கு பாவித்து வந்தனர். Verify your Password’ அதாவது 'தகைமைச்சொல்லை மீண்டும் உறுதிசெய்யவும்' என்று ஈமெயில் வந்ததும், நாம் எம்மையறியாமல் எமது தகைமைச்சொல்லை அதிலே இட்டு சொடுக்கிவிட, திருடர்கள் லாவகமாக அவற்றைப்பெற்று பாவித்துவந்தார்கள்.
தற்போது வங்கிக் கடன் அட்டைகளின் இலக்கங்களை மீள உறுதிசெய்யும்படி ஈமெயில் அனுப்புவது வழக்கத்தில் உள்ளது. ஒரு இணையத்தளத்தை அல்லது ஈமெயிலை, அதன் எச்.ரி.எம்.எல். (HTML) திகுப்பாளர் தரவைப் பயன்படுத்தி, இலகுவாக மீள்பிரதி செய்யலாம் என்பதால், அதை தங்களுக்கான சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்தும் திருடர்கள், இலகுவாக பாவனையாளர்களை ஏமாற்றிவிட முடிகிறது.
பிந்திய கணிப்புகளின்படி, 2003 யூன் மாதத்திலிருந்து 2004 யூன் மாதம்வரை, 6,957 பேர், இத்தகைய கடனட்டை திருட்டில் சிக்கிக் கொண்டார்கள் என்றும், 2005 யூன் மாதம் வரை, 15,050 பேர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வருடாவருடம் கிட்டத்தட்ட மூன்றுமடங்காக இந்த திருடர்களிடம் ஏமாறுவோர் தொகை அதிகரிப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
இந்தத் திருடர்களைப் பிடிக்க என்ன வழி?
இந்தத் திருட்டைச் செய்யும் ஒரு தனிநபர், கிட்டத்தட்ட பல இலட்சம் பாவனையாளர்களுக்கு இந்த ஈமெயிலை அனுப்புகிறார். இவர் அனுப்பும் பல இலட்சம் ஈமெயில்களில், சில பாவனையாளர்களாவது இதனை நம்பி, கடனட்டை விபரங்கள் அல்லது பாஸ்வேர்ட் (தகைமைச்சொல் அல்லது கடவுச்சொல்) போன்ற முக்கிய தகவல்களை அனுப்பி வைக்கிறார்கள். இவற்றை சேகரிக்கும் இந்நபர், ஒரு கடனட்டை இலக்கத்திற்கு கிட்டத்தட்ட 2 டொலர் என்ற அடிப்படையில், 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் கடனட்டை தகவல்களை ஒரு நேரத்தில் இன்னுமொருவருக்கு விற்று விடுகிறார். 2 டொலர் கொடுத்து, இந்த கடனட்டை விபரங்களை வாங்குபவர், அதே நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டுமென்ற நியதியெதுவும் இல்லை.
அண்மையில் ஆராய்ந்து கண்டுபிடித்த தகவல்களின்படி, இப்படி கடனட்டை விபரங்களை தொகையாகப் பெறுபவர்கள், அதிகம் உக்ரெய்ன், பிரேசில், கியூபா, போலந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் தங்கள் தற்காலிக தளங்களை வைத்துள்ள சர்வதேச திருடர்கள் என்று தெரியவந்துள்ளது.
சென்ற வருடம் உண்மையில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவலொன்றை உதாரணத்திற்கு இங்கே தருகிறேன்:
அமெரிக்காவில் தனது கடனட்டையில் ஆயிரம் டொலர்கள் எடுக்கப்பட்டதை அவதானித்த ஒரு பெண்மணி, அந்தப் பணம் எடுக்கப்பட்ட நிறுவனத்தின் விபரங்களை தானே தேடி ஆராய்ந்து கண்டறிந்து, அந்நிறுவனத்தை அழைத்துள்ளார். அப்படி அழைத்தபோது, மறுபக்கத்தில் பதிலளித்தவர் வேறு ஒரு மாநிலத்தில் வாழ்பவர். அவரிடம் இந்த ஆயிரம் டொலர் பணப்பரிமாற்றம் (transaction) பற்றி இந்தப் பெண்மணி விசாரித்தார். கிடைத்த தகவலில் அதிர்ந்துபோனாள் அந்தப் பெண்மணி. இந்தத் தகவலைக் கேட்ட பொலிசார், உறைந்து போனார்கள்.
காரணம், உக்ரெய்ன் நிறுவனமொன்று, இந்த நபரை ஒரு நிரந்தர ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தது. தினமும் அவருக்கு சில கிரடிட் கார்ட் (கடனட்டை) இலக்கங்களும், சில நிறுவனத்தின் புதிய பொருட்கள் பட்டியலும் ஈமெயிலில் வரும். பட்டியலிலுள்ள பொருட்களை, தரப்பட்ட கிரடிட் கார்ட் மற்றும் காலவதியாகும் திகதி போன்றவற்றைப் பாவித்து, 'ஒன்லைனில்' வாங்க வேண்டும். இவர் தினமும் இந்த 'ஒன்லைன்' வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு இவருக்கு முழுநேர ஊதியம். ஆனால், இவர் வாங்கும் பொருட்கள் சென்றடையும் இடம் எங்கே என்பது இவருக்குத் தெரியவில்லை. பல நாட்டு முகவரிகளும் வரும்போது, அங்கங்கே அந்தப் பொருட்களை அனுப்பிவிட வேண்டும்.
இதிலே அதிர்ச்சிதரும் தகவல் என்னவென்றால், இந்த நபருக்கு கடனட்டை விபரங்களை அனுப்புவதற்காக, இன்னும் சிலர் ஆங்காங்கே முழுநேர வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள் என்பது தான். நான் மேலே சொன்ன விபரத்தின்படி, துரை என்பவர் ஈமெயிலில் அனுப்பிய தகவல்கள், முதலில் ஒருவரிடம் சென்று, அங்கே எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டு, பின்னர் இந்த நபருக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அனுப்பப்படும் கடனட்டை விபரத்தைப் பயன்படுத்தி, என்ன பொருளை வாங்குவது என்பது மட்டும் உக்ரெய்னிலிருந்து இந்நபருக்கு தினமும் வந்தது. ஆராய்ந்து பார்த்ததில், உக்ரெய்னில் பாரிய ஒரு வர்த்தக மையமே இந்த சர்வதேச சதிவேலையில் ஈடுபட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக, இதில் ஈடுபட்ட இடைத்தரகர்களாக 'ஒன்லைன்' வியாபாரத்தில் சொடுக்கி (click) உதவிய பலருக்கும் இது ஒரு திருட்டு வியாபாரம் என்பதே தெரிந்திருக்கவில்லை.
ஒரு நிறுவனத்தின் வியாபார நாளாந்த செயற்பாடுகளுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக இவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களை அறியாமல் ஒரு சர்வதேச சதிவலையில் இவர்கள் மாட்டிக்கொண்டு, பாரிய கிரிமினல் குற்றத்தைப் புரிந்திருக்கிறார்கள்.
இதன் தார்ப்பரியம் என்னவென்றால், ஒரு கிரடிட் கார்ட் இலக்கத்தை தலா 2 டொலர் கொடுத்து வாங்கிய இந்நிறுவனம், ஒவ்வொரு கார்ட்டிலும் குறைந்தது 1000 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது. அதாவது 10,000 டொலர் கொடுத்து, 5,000 கார்ட் தகவலைப் பெற்ற இந்த நிறுவனம், அதற்குச் சன்மானமாக, 5 கோடி டொலர்களை சம்பாதித்துள்ளது. 5,000 x 1,000 = 5,000,000.00
இப்படி தொடர்ச்சியாக நடந்த திருட்டில், பல பில்லியன் டொலர்கள் தூண்டில் போட்டு இழுக்கப்பட்டுள்ளமை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தத் தூண்டிலில் அகப்பட்ட மீன்கள், பாவம், தங்கள் பணத்தை மீளப்பெறமுடியாமல் போனது. காரணம், திருடர்கள் சர்வதேசத் திருடர்களாக, வேற்றுநாட்டுத் திருடர்களாக இருந்தார்கள்.
ஆக, இணையத்தில் அல்லது ஈமெயிலில், உங்களது கடனட்டை விபரங்கள், தனிப்பட்ட SIN கார்ட் மற்றும் ஏனைய பிரத்தியேக தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் வழங்காதீர்கள். அப்படி வழங்கும்படி கோரப்பட்டால், கோரிய நிறுவனத்தை அழைத்து அல்லது ஒரு சிறிய ஈமெயில் தகவல் அனுப்பி, அவர்கள் கோரிய விபரம் உண்மையா என்பதை உறுதி செய்யுங்கள்.
உலகில் இன்னும் பல ஆயிரம் திருட்டுத் தொழில்கள், பல சுவையான கவர்ச்சியான வகைகளில் நடக்கிறது. நம் பாதுகாப்பை உறுதிசெய்வது நாமாகவே இருக்கட்டும்.
Precaution is always better than cure!
பிந்திய ஞானத்தைவிட, முன்னெச்சரிக்கை எப்போதும் சிறந்தது!!
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல் (திருவள்ளுவர்)
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் (கலைஞர் உரை)
குயின்ரஸ் துரைசிங்கம்
(காவலூர்)
ரொறன்ரோ-கனடா
நன்றி எழில்நிலா
|
|
|
| ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர் |
|
Posted by: வினித் - 02-28-2006, 01:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (16)
|
 |
<b>ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர் தகவல் </b>
[செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்காப் படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை சீர்குலைக்க மேற்கொண்ட சதி முயற்சி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்ற ஆரம்ப தினமான பெப். 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கருணா குழு எனக் கூறப்படும் ஆயுதக் குழுவிலிருந்து விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ள இளைஞர் ஒருவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
கோரகல்லிமடுவைச் சேர்ந்த ஆறுமுகம் விக்னேஸ்வரன் (32) என்ற இளைஞர் கிளைமோர்த் தாக்குதல் நடத்துவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட கலன் மற்றும் வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நடைபெற்ற போது மேற்படி இளைஞர் விடயங்களை ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
சந்திவெளி, கோரகல்லிமடுவைச் சேர்ந்த இந்த இளைஞர் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் வலுகட்டாயத்தின் பேரில் கருணா குழுவில் சேர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் கிரான் படைமுகாமில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து பொதுமக்கள் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு ஒரு ஆளாக தன்னைப் பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 18 ஆம் திகதி கிரான் படை முகாமிலிருந்து விக்னேஸ்வரனை கருணா கும்பல் தீவுச்சேனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு சென்றபோது "நீர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடாத்த வேண்டும்" எனக் கூறி அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நிரப்பட்ட ஒரு கலன் சிறிய அலவாங்கு ஒன்று, ஒரு எறிகணை மற்றும் வயர் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.
அத்துடன் மூன்று நாள் சிறப்பு பயிற்சியும் இந்த இளைஞருக்கு தீவுச்சேனையில் வழங்கியுள்ளனர். தாக்குதலை நடத்துவதற்கான ஊக்குவிப்பு பணமாக நாலாயிரம் ரூபா பணமும் கொடுத்ததாக அந்த இளைஞர் குறிப்பிட்டார்.
அதேவேளை புலிபாய்ந்த பாலப் பகுதிக்குச் சென்று தளபதிகளான ஜெயார்த்தனன், உமாறாம் ஆகியோர் மீது தாக்குதலை நடத்திவிட்டு வருமாறு தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் முடிந்த பின் கிரான் படை முகாமிற்கு வருமாறும் வரும் போது டோர்ச் லைட் பாவிப்பதன் மூலம் படையினர் அடையாளம் கண்டுகொள்வார்கள் என கிரான் படைமுகாமிலுள்ள இராணுவ அதிகாரி கப்டன் பந்துல என்பவர் குறிப்பிட்டதாகவும் இந்த இளைஞர் தெரிவித்தார்.
மேற்படி இளைஞர் ஓட்டமாவடிக்கு ஏற்றிவந்து அங்குள்ள இளைஞர்களிடம் ஆயுதக்குழுவினர் ஒப்படைத்துள்ளனர். அந்த இளைஞர்கள் காவத்தைமுனையிலுள்ள ஊர்காவல்படை காவலரணுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் அங்கிருந்து ஆற்றைக் கடந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் இந்த இளைஞர் தெரிவித்தார்.
பின்னர் தாம் செய்யப் போவது தவறு என்பதை உணர்ந்து கொண்டு வந்த வெடிபொருட்களுடன் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தேன் என்றார் ஆயுதக்குழுவிடமிருந்து தப்பி வந்த விக்னேஸ்வரன்.
நனறி:புதினம்
|
|
|
| உடன்பாடுகளை அமுல்படுத்தாவிடின் எதிர்கால பேச்சுக்கள் பயனற்றது |
|
Posted by: வினித் - 02-28-2006, 01:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
உடன்பாடுகளை அமுல்படுத்தாவிடின் எதிர்கால பேச்சுக்கள் பயனற்றது: சி.எழிலன்
[செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:59 ஈழம்] [தி.நிர்மலா]
<b>ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளை சிறிலங்கா அரசு அமுல்படுத்தாவிடின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் பயனற்றதென விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்திற்கு திருகோணமலையில் வைத்து சி.எழிலன் வழங்கிய நேர்காணல்:
சிறிலங்கா அரச பாதுகாப்புப் படையினர் தவிர்ந்து ஏனையவர்கள் ஆயுதங்களை ஏந்தவோ ஆயுதங்களைக் கையாளவோ அனுமதிக்கப்பட மாட்டார்களென கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.
பொதுமக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தேடுதல்களை நிறுத்துமாறும் சோதனைச் சாவடிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்யுமாறும் மீன்பிடித்தடைகளை அகற்றுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுள்ளனர். இவையனைத்தும் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
இணங்கியவற்றை அமுல்படுத்த முடியாவிடின் மீண்டும் மீண்டும் பேச்சுக்களை மேற்கொள்வதில் அர்த்தம் இல்லை. அமுல்படுத்த முடியாவிடில் அதில் எவ்வித பயனும் இல்லை. வெறுமனே காலம் ஓடிக்கொண்டிருப்பது மட்டுமே நடக்கும்.
கடந்த வருட இறுதியில் நிலவிய வன்முறைகளால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படலாமென்ற அச்சம் நிலவிய போதிலும் இருதரப்பினரும் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இணங்கியதையடுத்து பதற்றம் தணிந்தது.
2003 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடந்த வாரம் இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பினையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதென இணக்கம் காணப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் மீண்டும் யுத்தம் வரப்போவதாக நான் நினைத்தேன். ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சமாதானம் மலரும் என்றே எண்ணுகிறேன். ஆனால் அவர்களுக்கு தேவை யுத்தமெனில் நாங்கள் தயாராகவே உள்ளோம். இந்த நிலைமையை நீண்ட காலத்திற்குத் தொடரமுடியாது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இல்லையென அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் அவர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே உள்ளார் என்பதற்குத் எங்களிடம் ஆதாரம் உள்ளது. கருணா ஆயுதங்களைக் கீழே வைக்க மறுத்தால் அரசாங்கம் அவரைக் கண்டுபிடித்து அவரின் ஆயுதங்களைக் களைய வேண்டும்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது நாம் அமைதியாக இருந்தோம். ஆனால் இனிமேலும் அப்படி இருக்க மாட்டோம் என்றார் சி.எழிலன்.
கடந்த ஜனவரி மாதம் எழிலனைச் சந்தித்த போது அவரின் அருகில் அவரது பிஸ்டல் இருந்ததாகத் தெரிவிக்கும் ரொய்ட்டர்ஸ் செய்தியாளர், ஆனால் இம்முறை சந்திப்பின் போது அவர் தனது பிஸ்டலை அலுவலக அறையில் வைத்துவிட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தைப் பற்றிப் பேசும் போது யுத்தத்தை மனதில் வைக்கவும் யுத்தம் செய்யும் போது சமாதானத்தை மனதில் வைக்கவும் என்ற சீனப் புரட்சியாளர் மா ஓ சேதுங்கின் கூற்றினையே விடுதலைப் புலிகள் பின்பற்றுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
</b>
நன்றிபுதினம்
|
|
|
| நமது சின்னம் வெத்து சின்னம்! |
|
Posted by: SUNDHAL - 02-28-2006, 10:46 AM - Forum: நகைச்சுவை
- Replies (1)
|
 |
நமது சின்னம் வெத்து சின்னம்!
கற்பனை: முகில்
"டேய்.. கைய வைச்சிக்கிட்டு சும்மா இருடா! ஏய்..'னு என்னோட சுவருக்கு வாய் இருந்தா அனைத்துக் கட்சிக்காரங்களையும் பாத்துப் பாடும். அவனவன் என்னோட சுவரை தன்னோட சொந்தச் சுவரா நினைச்சு கட்சி சின்னத்தை உரிமையோட உட்கார வைச்சிட்டுப் போறான். இப்படி கேணையன் கோயிஞ்சாமியா எல்லாக் கட்சிக்காரங்ககிட்டயும் ஏமாந்து போறதுக்குப் பதிலா நாமளே புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி தேர்தல்லே நின்னா என்ன! என்ன? என்ன! என்ன! ச்சீ! ரொம்ப ஓவரா இருக்கோ? "கட்சியெல்லாம் டூ த்ரீ ஃபோர் மச்! வேணும்னா சுயேட்சையா நிக்கலாம்'னு சைடு மூளை ஒரு வைடு பால் போட்டுச்சு! "நீயெல்லாம் சுயேட்சையா நின்னா ஒரு சுண்டெலி கூட மதிக்காது'ன்னு உள்மனசு ஒரு பெüன்ஸர் போட்டுத் தாக்கிச்சு!
"ஒரு முறையாவது தேர்தல்ல நின்னு நீ ஜெயிக்கணுங்கறது என்னோட லைஃப் லட்சியம்'னு பாட்டி வேற தனியா பட்டா போட்டா. நான் தீர யோசிச்சேன். யோசனை தீரத் தீர யோசிச்சேன். சுயேட்சையாகவே நின்னுக்கலாம். ஆனா "கட்சி'ன்னு ஒரு பேரைப் பரப்பிக்கலாம்னு பைனலா முடிவெடுத்தேன்.
நம்மகிட்ட இருக்கறதோ எலிப்புழுக்கை அளவு பணம். ஆனா செலவோ யானை போடுற சாணி அளவுக்கு இருக்கும். "என்ன பண்ணப் போற கோயிஞ்சாமி?'ன்னு மலை மேல நின்னு யாரோ கத்துற மாதிரி எக்கோ ஒலிச்சுது! விடுறா! விடுறா!
"கன்னியாகுமரி தெற்குப் பக்கம்;
காஷ்மீர் வடக்குப் பக்கம்;
அம்பத்தூருக்கு ஆவடி பக்கம்;
ஆண்டவன் என்னிக்கும் என் பக்கம்!'னு எனக்கு நானே பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டு படுத்துத் தூங்கிட்டேன்.
"உம்பேரன் கட்சிக்கு நச்சக்குன்னு ஒரு பேரைச் சொல்லு'ன்னு பாட்டிகிட்ட பக்குவமா ஆலோசனை கேட்டேன். "கோயிஞ்சாமி முன்னேற்றக் கழகம் -இப்படி வையி!'ன்னு சொன்னா! கெழவிக்கு என்னா நக்கலு! கட்சியோட பேருலயே அம்பது சதவிகித அனுதாபத்தை அள்ளணும்னு நெனைச்சேன். சிந்திச்சேன். மூளையே வெறுப்பாகி மண்டைக்குள்ள இருந்து வெளிய எந்திரிச்சுப் போற அளவுக்குச் சிந்திச்சேன். அப்பத்தான் உருவாச்சு "தே.பி.பா.மு.க'. அந்தப் புனிதமான கட்சிப் பெயர் "தேர்தல் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டோர் முன்னேற்றக் கழகம்'. கட்சிப் பேரை ஒரு பேப்பர்ல எழுதி வைச்சு, அரை மணி நேரம் மனப்பாடம் பண்ணுனேன். அப்புறம் மறந்து போயிடுச்சுன்னா யாரு ஞாபகப்படுத்தி உடுறது!
கட்சிக் கொடி என்னாக் கலரு வைக்கலாம்னு ஒவ்வொரு கலரையா மனசுக்குள்ள நிக்க வைச்சு "இங்கி பிங்கி பாங்கி' போட்டுப் பார்த்தேன். எல்லா கலர் காம்பினேஷனுலயும் எவனாவது கொடியை நட்டு வைச்சுருக்கான். எதுக்கு வம்பு! தேபிபாமுக-வின் கொடியின் நிறம் புடவைக் கடை வெளம்பரத்துல வர்ற மாதிரி அம்பதாயிரம் வண்ணங்கள் கொண்டதா என்னோட சுய செயற்குழு தீர்மானம் நிறைவேத்துச்சு! "எல்லாக் கலர் கொடியும், தேபிபாமுக-வில் மட்டும்'னு ஜோதிகா என் கட்சி வெளம்பரத்துல நடிக்கிற மாதிரி ரெண்டு கண்ணும் கற்பனையா ஸீன் பாத்துச்சு! ராஜீவ் மேனன் ப்ரீயா இருந்தா அவருக்கே நம்ம கட்சியோட வெளம்பரத்தை எடுக்குற பொன்னான வாய்ப்பைக் கொடுக்கலாம்னு, பலசரக்குக் கடை பாக்கியையே இன்ஸôல்மெண்ட்ல கொடுக்குற என்னோட பணக்கார மனசு நெனைச்சுது.
கட்சியோட சின்னமா எதை வைக்கலாம்னு திங்க் பண்ணத் தொடங்கினேன். கொஞ்சம் வீரம் கலந்த சின்னமா இருந்தா நல்லாயிருக்குமே! ஆம்பிளைக்கு மூக்குக்குக் கீழ உதட்டுக்கு மேல ஏதோ இருக்கணும்னு சொல்லுவாகளே! ஆங், மீச..மீசை! அதுக்கே வழியக் காணும்! இத்தனை வருசமா கண்மையால வரைஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன். கட்சி சின்னமாவது வீரமா இருந்தாத்தான் நாலு பேரு நம்மளையும் மதிப்பாக! உருட்டுக் கட்டை, ஆசிட் பாட்டில், அருவா, சைக்கிள் செயின், சோடா பாட்டில், துண்டு பிளேடு -இப்படி ரவுடி, டூல்ùஸல்லாம் என் தலைக்கு மேல ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடிச்சு!
ஒரு முடிவுக்கு வந்தேன். கண்ணுல படுற பொருள்களையெல்லாம தனித்தனி துண்டுச் சீட்டுல எழுதி ஒரு டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு நேரா புள்ளையார் கோயிலுக்குப் போனேன். புள்ளையாரை பொங்கப் பொங்கப் பக்தியோட கும்புட்டுட்டு, டப்பாவை சினிமாவுல சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆடுற கெஸ்ட் ஹீரோயின் இடுப்பைக் குலுக்குற மாதிரி குலுக்குனேன். கண்ணுல படுறவங்களையெல்லாம் ஆளுக்கு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னேன். அதையெல்லாம் பிரிச்சுப் பார்க்காம, கடைசியா டப்பாவுல மிஞ்சுகிற சீட்டுல இருக்குற பொருளைத்தான் என் கட்சியோட பெருமைக்குரிய சின்னமா அறிவிக்கலாம்னு முடிவு பண்ணுனேன். கடைசிச் சீட்டு மட்டும் டப்பாவுல கிடக்க, கபால்னு எடுத்துப் பிரிச்சிப் பார்த்தா..அதுல நான் ஒண்ணுமே எழுதுல போல! "நமது சின்னம் வெத்துச் சின்னம்! வெற்றியின் சின்னம் வெத்துச் சின்னம்! உங்கள் ஓட்டு வெறுமைக்கே!' ன்னு கூவிக்கூவி என்னோட மனசாட்சியே என்னை வெறுப்பேத்துச்சு!
செம கடுப்பாகி வீட்டுக்கு வந்தேன். பாட்டி அங்க கைரேகை பார்க்குற ஜோசியரோட எனக்காகக் காத்திருந்தா! "வா சாமி வா! வந்து உக்காரு! உன்னோட வருங்கால அரசியல் வாழ்க்கைய அக்கு வேறா சாப்ட்வேரா ஹார்டுவேரா பிரிச்சு மேய்ஞ்ச்சு பிட் எழுதித் தாரே'ன்னு சொன்னாரு அந்த பான்பராக் வாய் ஜோசியர். "நீங்க ரேகை பார்க்குறதுல அம்புட்டுப் பெரிய ஆளா?'ன்னு சந்தேகம் கொப்பளிக்கக் கேட்டேன். "என்னைப் பத்தி என்னா நெனைச்சுக்கிட்ட நீ! பூமீயில அட்ச ரேகை, தீர்க்க ரேகை, பூமத்திய ரேகையெல்லாம் பார்த்துச் சொன்னதே நாந்தான். அப்படிப்பட்டவனுக்கு உன் கைரேகை பார்க்கறதெல்லாம் ஜூஜூபி மேட்டர்!'னு அந்த ஆளு அளந்த வார்த்தைகள்ல வழுக்கி விழுந்துட்டேன்.
இந்தியா மேப்புல இருக்கங்குடி இருக்கான்னு தேடுறமாதிரி, என் கையில லென்ûஸ வைச்சு எதையோ தேடுனாரு ஜோசியர். என் ஜாதகத்தையும் கொல வெறியோட கூர்ந்து பார்த்தாரு. திடீர்னு காணாமப் போன மணிபர்ûஸக் கண்டுபிடிச்ச மாதிரி குதிச்சுக்கிட்டே கூவ ஆரம்பிச்சாரு. "உன்னோட 3வது பாதத்துல ராகு ஒக்காந்திருக்கான். ஆறாவது பாதத்துல கேது ஒக்காந்திருக்கான்'னு அவரு சொல்லறப்பவே வேகமா ஓடிவந்த என் பையன் என்னோட ரைட் பாதத்துல ஒக்காந்தான். "உன்னோட ஜாதகப்படி உனக்கு இருபத்து மூணு வயசுலேயே ஈராக் அதிபராகிற யோகம் இருந்திருக்கு! நீ அப்ப இந்தியாவுல இருந்ததால அது நிறைவேறல! ஆனா உன்னோட அம்பதாவது வயசுல நீ அமெரிக்காவுல இருந்தேன்னா அமெரிக்க அதிபராக வாய்ப்பு பிரகாசமா இருக்குன்!'னு என் காதுல ரத்தம் வர்ற அளவுக்குப் பேசினாரு. "ஐஎஸ்டி காலையெல்லாம் விடுங்க, லோக்கல் ஒரு ரூபா போன் ரேஞ்சுக்கு ஏதாவது சொல்லுங்க! வார்டு கவுன்சிலர் ஆகற பாக்கியமாவது என் வாழ்க்கையில இருக்கான்னு?'னு எதார்த்தத்துக்கு அவரை இறக்கி வுட்டேன்.
"நீ முயற்சி பண்ணுனா தமிழ்நாட்டோட முதலமைச்சரா ஆகுற யோகமே இருக்கு! இதை நான் சொல்லல. ரேகை சொல்லுது'ன்னு சிக்ஸர் அடிச்சாரு. ரேகை என்ன ஆல்-இந்தியா-ரேடியோ ஆறரை மணி மாநிலச் செய்திகளா? இதையெல்லாம் சொல்லுறதுக்கு! "உனக்கு கடந்த எட்டரை வருஷமா ஏழரைச் சனி நடக்குறதால, வர்ற தேர்தல்ல நீ நல்லபடியா நின்னு ஜெயிக்கணும்னா ஒரு யாகம் வளர்க்கணும்'ன்னு அடுத்த யார்க்கரைப் போட்டாரு. "சாமி நான் இருக்குற நிலைமையில நகம் வேணா வளர்க்கலாம். யாகம்லாம் முடியாது'ன்னு அவருக்கு ஒரு அம்பதைத் தள்ளி வீட்டை வுட்டு வெளிய தள்ளுனேன்.
"தேபிபாமு கழகம் -நினைத்தால் படைக்கும் புது உலகம்'னு பிரசாரகீதங்கள் எழுத ஆரம்பிச்சேன். அதுல சில வரிகள் எழுதறப்போ அரிச்ச அரிப்புல என் கன்னத்தை நானே கிள்ளி கொஞ்சிக்கிட்டேன். அவ்ளோ சூப்பரான வரிகள் அது!
"தென்னாட்டுச் சூரியனே!
தெனாவெட்டுச் சந்திரனே!
மண்ணாள வந்த சாமியே!
எந்நாளும் நீ கோயிஞ்சாமியே!' -அன்னிக்குத் தான் எனக்குள்ள ஒளிஞ்சு ஒக்காந்திருந்த கவிஞன் "ஐஸ்பால்'லு சொல்லிட்டு வெளிய வந்தான். அப்படியே கவிதை காலராவா மாறி நிக்காம போக, நானூறு பக்கம் எழுதி முடிச்சேன்.
அப்பத்தான் தூங்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சு. ஆஹா..இன்னிக்குத் தான் தேர்தல் நாமினேஷன் ஆரம்பிக்குது. தொகுதில முதல் நாமினேஷன் இந்த "கோமகன் கோயிஞ்சாமி'யோடதாத்தான் இருக்கணும்னு வெறி வந்துச்சு.
சட்டுபுட்டுன்னு குளிச்சி நாமினேஷன் பண்ணக் கௌம்பினேன். ஆனா ஒரு அப்பாவி கெடைச்சா சுத்தி இருக்கிற "அடப்பாவி'களெல்லாம் என்னா பாடு படுத்துவாங்கன்னு எனக்கு அன்னிக்குத்தான் நல்லாவே புரிஞ்சுது. நாமினேஷன் பண்ணப் போய் நான் நாய் படாத பாடு பட்ட சம்பவங்கள்... அடுத்த வாரம்!
|
|
|
|