02-28-2006, 01:00 PM
உடன்பாடுகளை அமுல்படுத்தாவிடின் எதிர்கால பேச்சுக்கள் பயனற்றது: சி.எழிலன்
[செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:59 ஈழம்] [தி.நிர்மலா]
<b>ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளை சிறிலங்கா அரசு அமுல்படுத்தாவிடின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் பயனற்றதென விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்திற்கு திருகோணமலையில் வைத்து சி.எழிலன் வழங்கிய நேர்காணல்:
சிறிலங்கா அரச பாதுகாப்புப் படையினர் தவிர்ந்து ஏனையவர்கள் ஆயுதங்களை ஏந்தவோ ஆயுதங்களைக் கையாளவோ அனுமதிக்கப்பட மாட்டார்களென கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.
பொதுமக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தேடுதல்களை நிறுத்துமாறும் சோதனைச் சாவடிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்யுமாறும் மீன்பிடித்தடைகளை அகற்றுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுள்ளனர். இவையனைத்தும் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
இணங்கியவற்றை அமுல்படுத்த முடியாவிடின் மீண்டும் மீண்டும் பேச்சுக்களை மேற்கொள்வதில் அர்த்தம் இல்லை. அமுல்படுத்த முடியாவிடில் அதில் எவ்வித பயனும் இல்லை. வெறுமனே காலம் ஓடிக்கொண்டிருப்பது மட்டுமே நடக்கும்.
கடந்த வருட இறுதியில் நிலவிய வன்முறைகளால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படலாமென்ற அச்சம் நிலவிய போதிலும் இருதரப்பினரும் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இணங்கியதையடுத்து பதற்றம் தணிந்தது.
2003 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடந்த வாரம் இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பினையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதென இணக்கம் காணப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் மீண்டும் யுத்தம் வரப்போவதாக நான் நினைத்தேன். ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சமாதானம் மலரும் என்றே எண்ணுகிறேன். ஆனால் அவர்களுக்கு தேவை யுத்தமெனில் நாங்கள் தயாராகவே உள்ளோம். இந்த நிலைமையை நீண்ட காலத்திற்குத் தொடரமுடியாது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இல்லையென அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் அவர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே உள்ளார் என்பதற்குத் எங்களிடம் ஆதாரம் உள்ளது. கருணா ஆயுதங்களைக் கீழே வைக்க மறுத்தால் அரசாங்கம் அவரைக் கண்டுபிடித்து அவரின் ஆயுதங்களைக் களைய வேண்டும்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது நாம் அமைதியாக இருந்தோம். ஆனால் இனிமேலும் அப்படி இருக்க மாட்டோம் என்றார் சி.எழிலன்.
கடந்த ஜனவரி மாதம் எழிலனைச் சந்தித்த போது அவரின் அருகில் அவரது பிஸ்டல் இருந்ததாகத் தெரிவிக்கும் ரொய்ட்டர்ஸ் செய்தியாளர், ஆனால் இம்முறை சந்திப்பின் போது அவர் தனது பிஸ்டலை அலுவலக அறையில் வைத்துவிட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தைப் பற்றிப் பேசும் போது யுத்தத்தை மனதில் வைக்கவும் யுத்தம் செய்யும் போது சமாதானத்தை மனதில் வைக்கவும் என்ற சீனப் புரட்சியாளர் மா ஓ சேதுங்கின் கூற்றினையே விடுதலைப் புலிகள் பின்பற்றுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
</b>
நன்றிபுதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>