Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 354 online users.
» 0 Member(s) | 352 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,190
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,577
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,003
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,082
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,971
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  எரிமலை சஞ்சிகையின் 25 வது ஆண்டு
Posted by: shanmuhi - 03-03-2006, 11:57 AM - Forum: தமிழும் நயமும் - Replies (2)

<img src='http://www.suratha.com/erimalai.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ƒ¡÷ˆ Ò‰ ìÌ ¾Á¢ú¿¡ðÊø ÅçÅüÒ
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-03-2006, 10:41 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

Print this item

  இறால் B.B.Q
Posted by: தூயா - 03-03-2006, 09:10 AM - Forum: சமையல் - Replies (17)

[b][size=15]இறால் B.B.Q

<img src='http://www.euv-frankfurt-o.de/icons/schmude/bbq.gif' border='0' alt='user posted image'>

தேவையானவை:

இறால் - 30
ஒலிவ் ஒயில் - 1/2 கப்
உள்ளி - 4
எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு
ஒரேஞ் பழ சாறு - 1
உப்பு போட மறந்திடாதிங்க <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர)

2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க.

3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள்.

3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும்.

4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள்.

பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம்.

நன்றி

Print this item

  தடுமாற வைக்கும் உறவுகள்
Posted by: RaMa - 03-03-2006, 07:39 AM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (29)

"அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள்.

வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட்டாலும் வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைவு மேலும் மேலும் வருத்திக்கொண்டே இருக்கும். அதற்குள் அண்ணி வேறு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எந்நேரமும் போனில் அலட்டிக்கொண்டேயிருப்பாள் என்று எண்ணியே அன்று முதல் தான் வேலைக்குச் செல்வதென்று முடிவு செய்திருந்தாள் வித்தியா.

அதிகாலையில் வேலைக்குச் செல்லும் அண்ணாவிற்கு தேநீர் வைத்துக் கொடுப்பதில் இருந்து இரண்டு வேலைகளை முடித்துவிட்டு நடுச்சாமம் வரும் அண்ணா ரவிக்கு இரவுச்சாப்பாடு செய்து கொடுப்பதுவரை இவளின் தலையில்தான். அம்மா இருக்கும் மட்டும் இவைகள் எல்லாம் அவளே பார்த்துக்கொண்டாள். அம்மாவும் அலுக்காமல் சலிக்கமால் தன் பிள்ளைகளுக்குத்தானே என்ற ஓர் உணர்வுடனே அண்ணியின் குத்தல் கதைகளையும் கேட்டும் புன்னகையுடனே சகித்து வந்தாள். சில சமயங்களில் அண்ணியின் லொள்ளுக்கள் தாங்கமால் வித்தியா எதிர்த்துக் கதைக்க முற்பட்ட பொழுதெல்லாம் அம்மர்
"இஞ்சை பார் பிள்ளை! எப்படியிருந்தாலும் அவா உனது அண்ணி. ஒரு காலத்தில் எனக்கு எதாவது நடந்தால் அவர்கள்தான் உனக்கு தாயும் தகப்பனுமாக இருந்து நல்ல காரியங்கள் எல்லாம் செய்து வைக்க வேண்டும். ஆகவே பொறுமையாக இருக்கப்பழகு" என்று அறிவுரை கூறுவாள்.

ஐக்கெட்டை போடச் சென்றபோது அண்ணியின் அழைப்புக் கேட்டது. "ஆமா, நித்திரை தூக்கத்தில் மாகராணிக்கு கீழே வந்து கதை சொல்ல இயலாமல் இருக்கு ஆக்கும்" என்று நினைத்தபடியே திரும்பவும் மாடி ஏறி வந்து "என்ன அண்ணி?" என்று கேட்டாள்.
"இல்லை வித்தியா எனக்கு சரியான தலையிடியாக இருக்கின்றது, நீர் வேலையால் வரும்போது ஒரு 2 பால் பக்கற்றுக்கள் வாங்கிக்கொண்டு வாரும்" என்று கூறினாள்.

"என்ன அண்ணி, கடையில் பால் என்ன கடனாகவா வேண்டுவது?" என்று கேட்க நினைத்துவிட்டு "ஒக்கேய் அண்ணி நான் வரும்போது வாங்கி வருகின்றேன்" என்று கூறிவிட்டு கதவைத் திறந்து பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

பனிமழை பொழிந்துகொண்டு இருந்தது. பனி பொழியும்போது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது கரைய வெளிக்கிட்டால்தான் குளிர் தாங்க முடியாது என்று நினைத்தபடியே பஸ் நிலையத்தை அடைந்தாள்.

முதல் பஸ் நிலையம் என்றபடியால் ஆட்கள் குறைவாக இருந்தது. பஸ் வண்டியினுள் நுழைந்தபோது அங்கே இருந்தவர் ஒரு தெரிந்த தமிழ் பஸ் சாரதி என்றபடியால் ஒரு புன்னகையுடன் "வணக்கம்" என்று மட்டும் கூறிவிட்டு ஓர் ஆசனத்தில் போய் அமர்ந்தாள்.

புலம் பெயர்ந்து வந்தாலும் நம்முடைய ஆட்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்கின்றார்கள். இதற்கு காரணம் எம்மினத்தவரின் முயற்சியும் நம்பிக்கையும்தான். எமக்கு என்று நிம்மதியாக இருக்க ஒரு நாடு இருந்தால் நாம் எல்லாம் ஏன் அகதியாக எல்லா இடங்களிற்கும் அலைய வேண்டும்? என்ன வளம் இல்லை எம் ஊரில்? குளிர் இல்லை, தண்ணீருக்கு காசு கட்டத் தேவை இல்லை, அநேகமாக எல்லோருக்கும் சொந்த வீடுகள் உண்டு, ஆகவே வீட்டு வாடகையும் இல்லை. வீட்டுத் தோட்டத்திற்குள்ளேயே வீட்டிற்கு தேவையான மரக்கறிகளை பயிரிடலாம். அன்பான உறவினர்கள், ஐய்யோ என்ற குரல் கேட்டு ஒடி வரும் அயலவர்கள் என எம்மை சுற்றியே ஓர் ஆனந்தம் பரவிக்கொண்டிருக்கும்.

அந்த அழகான ஊரை விட்டுவந்து இங்கு கொட்டும் பனியின் குளிரால் கண்ணால் வழியும் நீரைத் துடைக்ககூட கையை தூக்க முடியாது. அவ்வளவிற்கு கைகள் எல்லாம் விறைத்துப் போயிருக்கும். அதோடு காற்றும் சேர்த்து வந்தால் சொல்லவே தேவையில்லை. உயிர் போய் வரும்.

கடந்தகால கற்பனையில் மிதந்திருந்த வித்தியா யாரே "பெல்" அடிக்கும் சத்தம் கேட்டு தன் சுயநினைவுக்கு வந்தாள். "என்ன இது விடியற்காலையிலேயே ஒரே குழப்பமாக இருக்கின்றதே! இன்று என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை" என்று நினைத்துவிட்டு தான் இறங்க வேண்டி இடமும் வந்துவிட்டதை உணர்ந்து இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

அப்போது அவசரம் அவசரமாக வந்த அவள் நண்பி ஒரு கடித உறையை அவள் கையில் திணித்து "இந்தா, இக்கடிதம் நேற்று உனக்கு வந்தது. உன்னுடைய வீட்டிற்கு போன் எடுத்தால் உனது அண்ணிக்குப் பிடிக்காது. அதுதான் இப்போ நான் வேலைக்கு போகும் வழியில் உன்னிடம் தந்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்று கூறிவிட்டு மறுபக்கமாக நடக்கத் தொடங்கினாள்.

கடிதத்தில் இருந்த கையெழுத்தைப் பார்த்ததும் அது யாரிடம் இருந்து வந்தது என்று புரிந்துவிட்டது. ஓரு சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அவளின் பெயருக்கு வரும் பல கடிதங்கள் காணாமல் போயிருந்தன. அதற்குக் காரணம் பல நாட்களுக்குப் பின்னர்தான் அவளுக்கு விளங்கியது. அம்மாவிடம் சொல்லி அழுதாள். மகளின் அழுகையைக் கண்ட அம்மா, "அண்ணா வரட்டும் இதைப்பற்றிக் கேட்கிறேன்" என்று கூறி மகனின் வருகைக்காக காத்திருந்தாள். "மகன் வீட்டிற்கு வந்ததும், "தம்பி இவள் வித்தியாவிற்கு இரண்டு மூன்று கடிதங்கள் அவள் ப்ரண்ட்ஸ் போட்டவையாம். இன்னும் வரவில்லையாம். நீ கடிதப்பெட்டியை செக் பண்ணினாயா?" என்று கேட்டாள்.

எங்கிருந்தோ அண்ணியின் காதுக்குள் அது கேட்டுவிட்டது. "ஆமாம் இவாவுக்கு வரும் கடிதங்களை நாங்கள்தான் எடுத்து வைத்திருக்கிறோம் என்ற மாதிரியெல்லோ உங்கள் கதை போகுது. கடிதம் வந்தால் உங்குதானே இருக்கும்" என்று கத்தி ஒரு பெரிய கலாட்டாவையே உருவாக்கிவிட்டிருந்தாள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவள் தனது நண்பியின் விலாசத்தை பாவிக்கத் தொடங்கினாள். அதன்படியே அவளின் மனதைப் பறித்த அந்த மன்மதனும் நண்பியின் விலாசத்திற்கே கடிதத்தை அனுப்பியிருக்கிறான்.

அம்மா இறந்தபிறகு வரும் முதல் கடிதம் அது. கட்டாயம் அவளுக்கு ஆறுதலாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள் அருகில் இருந்த கோப்பிக் கடைக்குள் புகுந்து அமைதியான ஓர் இடத்தை தெரிவு செய்து அமர்ந்து ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்தாள். அதே கையெழுத்து. அதே பரிவுடன் ஆறுதல் கூறி நீண்டதொரு கடிதத்தை எழுதியிருந்தான் அவளின் மன்மதன். கடிதத்தை படித்து முடித்தவள் மீண்டும் கனவுலகில் சஞ்சரித்தாள்.

எப்படி அண்ணாவிடம் இந்த விடயத்தை சொல்லப்போகின்றேன். அண்ணா ஏற்றுக்கொண்டாலும் அண்ணி விடுவாளா? இக்கதையை அறிந்தாலே உடனே தன் தங்கையுடன் என்னையும் ஒப்பிட்டு கதைக்கத் தொடங்கிவிடுவாளே. அவளின் தங்கை நல்லவளாம்! குனிந்த தலை நிமிராமல்தான் நடப்பாளாம். ஆனால் அவள் பாடசாலையில் விடும் கூத்துக்களை பாவம் வீட்டிற்குள்ளேயே நாளெல்லாம் வளையவரும் அண்ணிக்கு எப்படித் தெரியப்போகுது? யாரிடம் சொல்லி இந்தக்கதையை அண்ணாவிற்கு தெரியப்படுத்துவது? பல உறவுகள் இருந்தாலும் யாரின் மேலேயும் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. எல்லோருமே ஓருவரை ஒருவர் குறை சொல்வதிலும், மற்றவர்களைப்பற்றி வீண் கதைகள் கதைப்பதிலும் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். என்னுடைய கதையை கேள்விப்பட்டால் அவ்வளவுதான். பேப்பரில் போட்ட விசேட செய்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

மாலையில் வேலை முடிந்து அலுப்புடன் வீடு நோக்கிச் சென்றாள். நல்லாய் ஒரு குளியல் குளித்தால்தான் அலுப்பு எடுபடும் என்று நினைத்தவாறே குளியலறையுள் சென்றாள். நன்றாக சுடு தண்ணிரை தலையில் ஊற்றி குளித்துவிட்டு தலையைத் துடைத்தவறே அறைக்குள் சென்றவள் தனது கைப்பையை பார்த்ததும் அதிர்ந்தாள். கைப்பையை யாரோ கிளறியத்தற்கான அடையாளங்கள் அங்கே தெரிந்தன. நடுக்கத்துடன் மன்மதனின் கடிதத்தை தேடினாள். ஆனால் அது கிடைக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை உடனே ஊகித்துக் கொண்டாள்.

எதுவுமே அறியாதமாதிரி குசினினுக்குள் சென்று தேநீர் போடும்போதுதான் அண்ணி வாங்கி வரச்சொன்ன பால் பைக்கற்றுக்களின் நினைவு வந்தது. ஓ காட்! என்று நினைத்தவள் இன்று ஒரு பெரிய பிரச்சனை இருக்கு என்று நினைத்தாள். எது நடந்தாலும் எல்லாவற்றையும் தாங்குகின்ற சக்தியை என்க்குத்தா கடவுளே! என்று பிரார்த்தித்த வண்ணம் முன் சோபாவில் போய் அமர்ந்தாள்.

அண்ணி யாருக்கோ மாறி மாறி போன் எடுத்து கிசுகிசுத்து கதைத்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். மனம் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தது. என்ன கேட்கப் போகிறார்கள்? என்ன பதில் சொல்லப்போகின்றேன்? என்று அவளின் இதயம் படக் படக்கென்று அடித்து கொண்டிருந்தது. அண்ணா அடித்தாலும் பரவாய் இல்லை. ஆனால் அண்ணியின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க முடியாதே என்று நினைத்தவாறே கடவுளே கடவுளே என்று கடவுளை துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தாள்.

என்ன அதிசயம்! என்றும் இல்லாதவாறு அண்ணன் அன்று வேலையால் சீக்கிரம் வந்து கொண்டிருந்தான். அண்ணைக் கண்ட அண்ணி நமட்டுச் சிரிப்புடன் எழுந்து கதவை திறக்கச் சென்றாள். இன்று நான் தொலைந்தேன் என்று நினைத்தாள் வித்தியா. அம்மா அம்மா என்று அவள் மனம் பதறியது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் எனக்கு ஆதரவாக கதைத்திருப்பாளே. இப்போ இருவரின் கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்லப்போகின்றேன்? என்று கைகளைப் பிசைந்தாள்.

அண்ணண் சப்பாத்தைக் கழற்றாமலே கோலுக்குள் வந்தான். மறுகணம் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வித்தியாவின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விழுந்தது. அதிர்ச்சியினால் தலைசுற்றியது அவளுக்கு. "அம்மா இறந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் உனக்கு காதலா?; எங்களை மதியாமல் இப்படியெல்லாம் செய்ய உனக்கு இப்படி திமிர் வந்திட்டுதா?" என்று அண்ணன் பொரியத்தொடங்கினான்.

"கடித்தத்தைக் கண்டவுடன் அவாவிற்கு பால் பக்கற்றும் மறந்து போச்சு" இது அண்ணி.

யார்? எவன்? எப்படியனாவன்? என்று ஓரு வார்த்தை கூட கேட்கமால் அண்ணா ஏதோ ஏதோ எல்லாம் சொன்னார், கத்தினார், பயமுறுத்தினார். "வேலைக்கு போய் கிழிச்சது காணும் வீட்டில் அண்ணிக்கு துணைக்கு இரு" என்று அதிகார கட்டளையுடன் கூறிவிட்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டார்.

ஆமாம் அண்ணி இங்கு வேலை செய்கின்ற கடுமையில் அவாவிற்கு துணை நான் இருக்கணுமா? எனக்குத் துணையாகத்தான் அவா இருக்கணும் என்று சொல்ல ஆசைப்பட்டாள். ஆனால் முடியவில்லை. என்னென்றால் அம்மாவின் வார்த்தைகள் அவளைக் கட்டிப்போட்டன. எண்ணங்கள் இப்படி இருந்தபோதும் அண்ணனின் கைபட்ட கன்னம் வலித்துக்கொண்டே இருந்தது. அழுது கொண்டே தனது அறையை நோக்கி நடந்தவள் தனது வாழ்வைப்பற்றி தான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயா சூழ்நிலைக்கு ஆளாக்கப் பட்டதை உணர்ந்தாள்.

காதல் கலியாணம் செய்து கொண்ட அண்ணனே காதலுக்கு எதிரியா? என்று நினைத்தாள். இனி வேலைக்குப் போவதும் முடியாத காரியம். வேலைக்கு போகமால் 3 நேரமும் சமைத்து சாப்பிட்டுவிட்டு இந்த அறைக்குள்ளேயே வலம் வரவேண்டுமா? அப்போ எனது கனவுகள் எல்லாம் மண்ணாகப் போகப்போகின்றனவா? இன்று சகோதரனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எனது வாழ்வை நானே சீரழிக்கப் போகின்றேனா? கொஞ்சக் காலம் பொறுத்திரு பின்பு இவைகளை யோசிப்போம் என்று அண்ணன் ஓரு வார்த்தை கூறியிருந்தால்கூட அண்ணனின் வார்த்தைகளுக்கு காலம் எல்லாம் காத்திருக்க அவள் தயாராக இருந்தாள். ஆனால் கேவலம் ஒரு வார்த்தைகூடக் கேளாது தனது தனது கன்னத்தில் அறைந்துவிட்டு தன் முடிவைச் சொன்ன அண்ணன் எந்த வகையில் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவப் போகின்றார்?

காதலை ஒரு புறம் வைப்போம். அண்ணா வேலைக்குப் போகதே என்று சொன்னதன் அர்த்தம் படிக்கவும் போகக்கூடாது என்பதுதானே. ஆகவே வேலைக்குப் போகாமல், படிக்காமல் வீட்டிலிருந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு நாலு சினிமா நாடகங்களைப் பார்த்து பொழுது போக்கப் போவதால் என் எதிர்காலத்திற்கு எதாவது நன்மை உண்டா? அண்ணாவுடன் நான் வாழப்போகும் காலங்கள் ஆகக்குறைந்தது இன்னும் 3 வருடங்கள்தான். அதற்குப்பிறகு நான் கலியாணமாகி வேறு வீடு செல்லும்போது ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரியா போகவேண்டும்? என் வாழ்க்கையில் எவ்வளவையோ சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் எனது உள்ளம் இந்த 3 வருட சிறை வாழ்க்கையை ஏற்குமா? அண்ணியின் குத்தல் கதைகள், கேலிக்கதைகள் எல்லாமாகச் சேர்ந்து என்னை பையித்தியம் பிடிக்கும் அளவிற்கு அல்லவா கொண்டு செல்லப்போகின்றன? இரவு முழுவதும் யோசித்து யோசித்து ஓரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது தவித்தாள். அதிகாலையில் அந்தத் தவிப்பால் ஏற்பட்ட களைப்பால் தன்னையறியாமலேயே உறங்கிவிட்டாள்.

கள உறவுகளே வித்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.

Print this item

  அண்ணா வணக்கம்
Posted by: piththan - 03-03-2006, 05:32 AM - Forum: அறிமுகம் - Replies (32)

அண்ண வணக்கம்

Print this item

  முரளிதரன் சாதனை
Posted by: KULAKADDAN - 03-02-2006, 10:52 PM - Forum: விளையாட்டு - Replies (27)

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகை வீழ்த்திய முதல் பந்து வீச்சு வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.

இந்த வரலாற்று சாதனையை, வங்காள தேசதுக்கெதிராக, சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் அன்று அவர் நிகழ்த்தினார்.

3ம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடமலேயே, வெற்றி பெறும் வலுவான நிலையில் இலங்கை உள்ளது.


நன்றி : http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

Print this item

  Building Tamil Eelam State: Kristian Stokke
Posted by: KULAKADDAN - 03-02-2006, 10:37 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Sri Lankas third Eelam War created a political-territorial division of the island with a resultant dual state structure in the North-East. In the context of the 2002 Ceasefire Agreement and based on earlier institutional experiments, the LTTE is currently engaged in a comprehensive process of state building within the areas they control," says Prof Stokke of Department of Sociology and Human Geography, University of Oslo, in an article which examines the emerging new Tamileelam state structure. He adds that only the "facilitation and dynamics of pro-democracy forces within the LTTE," will determine the transformation from "the"strong and centralized state," that currently exists. </b>

"Within the areas they control, LTTE runs a de facto state administration, which includes revenue collection, police and judiciary as well as public services and economic development initiatives. This political-territorial division means that Sri Lanka has a de facto dual state structure with LTTE also exercising considerable influence on state institutions and officials in the government-controlled parts of the North-East provine, write Prof Stokke.



Prof Kristian Stokke
On the prospects of democracy in NorthEast, Sokke says, "While the operation of the new state institutions is circumscribed by the unresolved conflict, this combination of autonomy and embeddedness give the emerging state a substantial degree of administrative capacity. This may provide an institutional basis for a more democratic relationship between the LTTE and citizens in North-East Sri Lanka."

Stokke quotes Prof Uyangoda, Head of Political Science Colombo University on the need to address long term transformation during conflict resolution process, "Scholars within the conflict transformation approach acknowledge the centrality of formal peace processes but argue that the conflict resolution school focuses too narrowly on elite negotiations and peace pacts, calling instead for attention to the broad and long-term transformation of grievances, forces and strategies."

Pointing out that "functional state failure, i.e. the inability of the state to fulfil its security, welfare and representation fuctions, is at the core of the conflict and also the attempt to build a new state apparatus in the North- East, Stokke writes, "The state building project of the LTTE is also closely linked to their political project of representing the Tamil nation and delivering self-determination for the Tamil nation...The political background for the creation of the Tamil Eelam judicial system was the experienced failure of the Sri Lankan Constitution to provide a functioning framework for realisation of minority rights and aspirations, combined with the subversion of Rule of Law by the Prevention of Terrorism Act and protracted warfare."

"Social welfare is the other state function that has been given a central place in the building of the LTTE state, although in a subordinate role to that of maintaining external and internal security through military, police and judicial me," Stokke says on LTTE's approach to the supporting the welfare of Tamil people, and on development he adds, "The development work of the LTTE after the 2002 Ceasefire Agreement has focused on the development of institutional capacity to address relief and rehabilitation needs and, not the least, the need for coordination of development initiatives."

Stokke also details the contribution of Tamils Rehabilitation Organization (TRO) and the Economic Consultancy House (TECH) in the evolving Tamil eelam state.

Stokke concludes: "The dominant form of governance embedded in the LTTE state institutions is that of a strong and centralised state with few formal institutions for democratic representation, but there are also elements of partnership arrangements and institutional experiments that may serve as a basis for more democratic forms of representation and governance. This is contingent, however, on both a peaceful resolution of the current state of insecurity for Tamils and the LTTE, and on the facilitation and dynamics of pro-democracy forces within the LTTE and in Tamil society at large.

நன்றி தமிழ்நெட்
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=17291

[url=http://www.pooraayam.com/doc/Building_the_state_1.pdf] [b]முழுமையாக இதன் மூலகாட்டுரையை தரவிறக்கம் செய்ய

Print this item

  இந்தியாவின் வல்லாதிக்க கனவுகளும் புஸ்ஸின் வருகையும் -2
Posted by: Birundan - 03-02-2006, 10:28 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (11)

அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத விஞ்ஞானம் மற்றும் கச்சாப் பொருட்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் அணு ஆற்றலின் மூலம் பொது தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.

இதற்காக இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா விரும்பிப் பெற்றுக் கொண்டது இந்தியாவின் அணு ஆயுத உலைகளை சர்வதேசத்தின் பரிசோதனைகளுக்காகத் திறந்துவிட்டிருப்பது. 30 வருடம் கட்டிக்காத்து வந்த வீராப்பு கைவிடப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் தனது அணு ஆயுத செயல் திட்டங்களில் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது என்ற பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதனையே எதிர்பார்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இக்காலங்களில் இந்தியா அதிக அளவில் விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கின்றது என்று கிலாகித்துப் பேசும் வண்ணம் அமெரிக்கர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.

IAEA - சர்வதேச அணு சக்திக் கண்காணிப்பு முகவர் அமைப்பில் இந்தியா , ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளைப் போன்று கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல அணு ஆயுத அறிவை வேறு நாடுகளிற்கு விற்பனை செய்வதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரம் அமெரிக்கர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக்காயாகவே பயன் படுத்த முனைகின்றார்கள்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் சேதத்தை விளைவிக்கும் நோக்கிலேயே இந்தியாவை உபயோகப்படுத்த அவர்கள் முன் வந்திருக்கின்றார்கள்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பாரிய அணு ஆயுத வல்லமைக்கும் பொருளாதார எழுச்சிக்கும் எதிரான அமெரிக்காவின் சொற்படி கேட்கும் "unique roll " பாத்திரத்தை இந்தியா வகிக்கும் வரை அவர்கள் அடைந்த வெற்றி "land mark "என்றும் " historic " என்றும் அமெரிக்கர்கள் சந்தோஷப்படுவது போல மிகவும் சரியானதே.

நன்றி>சிந்து
http://ilanthirayan.blogspot.com/

Print this item

  வணக்கம் வணக்கம் வணக்கம்
Posted by: Sivakolunthu - 03-02-2006, 10:11 PM - Forum: அறிமுகம் - Replies (46)

வணக்கம் வணக்கம் வணக்கம்

Print this item

  &quot;கோணல்&quot; கறுணாவிடமும் ஆயுதக் களைவாம் ?!?!?!...
Posted by: கறுணா - 03-02-2006, 06:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

காய் காய் கய் ... மீண்டும் உங்களுடன் கோணல் .... காய் ...

... என்ன இந்தப் பக்கம் காணேலை எண்டு யோசிச்சிருப்பியள்??? என்ன செய்யிறது ... இளவு விழுந்த வாழ்க்கை! நக்கிறதை நக்கி, கழுவுறதை கழுவி சொறி பிடித்து தெருநாயாய் வாழும் எனக்கு, என்டை "அறசியள் ஆளோசகர்கல்" சொன்னார்கள் .. "..மாண், உங்களை இப்போ பங்கருக்கு பங்கர் மாற்றும் அரசுகள் ஒருநாள் கைவிட்டாலும், ... நீங்கள் தூக்கிக் கொண்டு ஓடிவந்த பைசாவெல்லாம் ஓல்ரெடி முடிச்சுது, இப்பவே நக்கி, கழிவி, கடத்தி, ... அ"றோ"கராப் போட்டுத்தான் பைசாவிற்கு தடுங்கினத்தோம் போடுகிறீங்கள்!! ... நாளை??? .. ஆகவே பேசாமல் ஒரு கோயிலைத் தொடங்குங்கள் .. அதுதான் இப்ப பெரிய மக்னெட்டுகளின் பிஸினசுமாம்!! ... ஒரு சின்ன கல்லை லிங்கமாய் வைச்சிட்டு பெரிய உண்டியலை வையுங்கோ ... எதோ ஒரு ...ஈஸ்வரம் எண்டும் பெயரை வையுங்கோ!! ... சனம் அரோகராப் போட்டுக் கொண்டு அள்ளிப் போடுங்கள் ... உதுதான் இப்ப வெளிநாடுகளிலும் பாஷனுமாம் ... நாளைக்கு உங்களை வைச்சு பிலிம் காட்டுறவங்கள், தங்கள் தேவைக்காக உங்களை அமத்தினாலும் ... கோட்டு கேஷுகளுக்கும் பயன்படுமாம் ..." ... வாவ்வ்வ்வ்வ் ... எனக்கும் ஏதோ விடிவெள்ளி தெரிந்த மாதிரி உந்த ஐடியா பட்டுது!!! அதுதான் கொஞ்சம் பிஸியாக யோசிச்சுக் கொண்டிருந்திட்டன் ....

ம்ம்ம்ம் ... உதுகள் கிடக்க ... ஏதோ சுவிஸ்ஸில் ஏதோ பேச்சுவார்த்தையாம் ... முடிபு .. ஒட்டுப்படைகளின் ஆயுதங்களை பறிக்க வேணுமாம்!!! ... உதிலை பாருங்கோ இந்தக் கோணலிட்டையுமாம்!!!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம் .... இந்தக் கோணலிட்டை ..

* 40 புளேனுகள்!
* 30 கப்பலுகள்!
* 100 ஆட்லெறிகள்!
* அங்கை, இங்கை விடுகிற இலட்சக்கணக்கான ராக்கட்டுக்கள்!
* ஆயிரக்கணக்கான சின்ன ஆயுதங்கள்!

... தானே கிடக்குது, ஒப்படைப்பதற்கு??????? இங்கை சொறிநாயாப் படுகிற பாட்டை யார்தான் அறிவார்??????? "எடுப்பார் கைப்பிள்ளையாக" ... நிக்கிறது, நடக்கிறது, கிடக்கிறது, ... உயிரினங்கள், உயிரற்றதுகளும் "கோணல் கறுணாவாம்"!!! யாருக்குச் சொல்லி அழுகிறது!!!!! ராவோ ரோவோடை சிங்களவன் கோணலை பங்கருக்குள் போட்டுட்டு, "கோணல் கறுணா" எல்லாம் விடுகிறாராம்!!! .. உதிலை பாருங்கோ எனக்கு முன்னம் நக்கத்தொடங்கின "மகேஸ்வரியுடையான் டக்லஸோ", "தண்ணிக்குட்டி சித்தாத்தனோ", "இளசுகளை தேடியலையும் ஆவாவ்சங்கரியோ" எச்சம் சொச்சமட்டுமல்ல இங்கு ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியாவில் இருக்கிற "ஒட்டுண்ணிகளும்" வயித்துப் பிளைப்புக்கு "கோணல் கறுணாவாம்" ... "பழமாய் இருக்கிறனாம்" ... "பெறும் படை வைத்திருக்கிறனாம்" ... "விட்டால் அமெரிக்காவிற்கும் பூறிசும் விட்டுடுவனாம்" ... ஐயோ ... கறுமம் பாருங்கோ!!!!

முன்பு பிறக்கேக்கை "வினாயகமூர்த்தி முரளீதரன்", இப்ப "விக்னேஸ்வரன் மதன்குமாராம்"!!!! சொந்தப் பெயர் மட்டுமல்ல அப்பன் பெயரும் தெரியாமல் ... கோதாரி .... எளிய சீவியம் பாருங்கோ ... சாக்கடையில் குட்டை பிடித்த சொறிநாய் கூட தன்னிச்சையாகத்தான் பவ்வியடிக்குமாம்!! ஆனால் இந்தக் கோணலுக்கு ....????????????

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Print this item