Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 207 online users.
» 0 Member(s) | 205 Guest(s)
Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,190
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,182
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,577
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,575
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,003
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,082
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,971
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  மண்ணை கவ்விய அவுஸ்திரேலிய அணி
Posted by: தூயா - 03-04-2006, 01:05 AM - Forum: விளையாட்டு - Replies (5)

<img src='http://news.ninemsn.com.au/img/sport/cricket/2502_gilchrist_smith_g.jpg' border='0' alt='user posted image'>

[size=15][b]

அப்பாடா ஒரு மாதிரி சவுத் ஆபிரிக்கா அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துவிட்டதே.

விபரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்

நன்றி

Print this item

  வவுணதீவில் ஒட்டுப்படை ஊடுருவித் தாக்குதல்: போராளி வீரச்சாவு
Posted by: வினித் - 03-04-2006, 12:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

வவுணதீவில் ஒட்டுப்படை ஊடுருவித் தாக்குதல்: போராளி வீரச்சாவு

Written by Paandiyan - Saturday, 04 March 2006 05:01

இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசம் ஊடக விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண் பகுதிக்குள் ஊடுருவி ஒட்டுப்படை மேற்கொண்ட தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.
ஒட்டுப்படைகளால் தாக்குதல் ஆரம்பித்ததும் காவலரணில் இருந்த போராளிகளில் மேற்கொண்ட பதில் தாக்குதலையடுத்து ஒட்டுப்படையினர் வவுணதீவு படைமுகாமை நோக்கி தப்பியோடியுள்ளனர்.

ஒட்டுப்படைகளின் இத்தாக்குதலை முறியடித்து போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் அறியப்படவில்லை

http://sankathi.org/index.php?option=com_c...=1986&Itemid=26

Print this item

  IBCCCCCCCCCCCCCCCCCCC
Posted by: வினித் - 03-03-2006, 09:01 PM - Forum: புலம் - Replies (1)

[b]போர்நிறுத்த உடன்பாடு திருத்தியமைக்கப்படவில்லை!! விடுதலைப் புலிகள் அறிவிப்பு.

சமாதான முன்னெடுப்புக்கள் பாதிப்படையலாம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை!!!

போர்நிறுத்தம் திருத்தப்படவில்லை!. ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு.

ஆயுதக் குழுக்கள் குறித்து நேர்மையுடன் கருத்து வெளியிடுக! சிறீலங்கா படைகளிடம் கண்காணிப்புக் குழுத் தலைவர் வலியுறுத்து.


வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்.

எனும் பல உண்மைச் செய்திகளுடன் ஜபிசி வானொலி
IBC நேரடி ஒலிபரப்பு

Print this item

  யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம்
Posted by: வினித் - 03-03-2006, 08:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம்


மாசிலான்


<b>அன்புக்குரிய தென்தமிழீழ மக்களுக்கு</b>!

எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்த ஜெனிவாப் பேச்சுவாரத்தை குறிப்பிட்ட திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஏப்ரல் திங்களில் 19,20,21 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை ஜெனிவா நகரிலேயே தொடர்வதெனவும் தீர்மானித்துள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களிடம் பல பயிற்சி வகுப்புக்குளில் கலந்துவிட்டு ஜெனிவாவுக்குச் சென்றனர். சிறிலங்காவின் அரசுக் குழுவினர் ஆனால் இப்பயிற்சி எல்லாம்; எவ்வளவுதூரம் அவர்களுக்குப் பயன்பட்டதோ தெரியவில்லை.

ஜெனிவா நகரில் நடந்த பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 22ம்ஆம் நாள் கையெழுத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுவான முறை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேடையே இதுவென எரிக்சொல்கைம் கூறி இப் பேச்சுவார்த்தை தொடக்கிவைத்தார்.





ஆனால் சிறிலங்காவின் அரசுக் குழுவினர்; யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்தங்களை செய்யும் நோக்கத்துடனேயே ஜெனிவாவிற்கு சென்றிருந்தனர்;;. இதற்காக அவர்கள் கூறிய காரணம் யுத்த நிறுத்த உடன்படிக்கை சிறிலங்காவின் அரசியல் அமைப்புக்கு முரணானது சிறிலங்காவின் இறையான்மைக்கும் பங்கம் விளைப்பது எனவே புதிய முயற்சி எடுக்கவேண்டும் என்பதாகும்..

இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டவைகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்காக தொடர்ந்து பேசுவது எனவும் அதற்காக அடுத்த பேச்சுவார்த்தையையும் ஜரோப்பா கண்டத்தில் ஜெனிவா நகரிலேயே நடத்துவதென முடிவற்கு வந்துள்ளனர். இது அரசுத் தரப்பில் ஏற்பட்ட முன்னேற்றகரமான மாற்றமாகும.;

பேச்சுவார்த்தை சூனியப் பிரதேசத்தில் என்றார்கள் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்றனர். அதன்பின் ஆசியா கண்டத்திற்கு வெளியே நடத்துவதில்லை என்று விடாப்பிடியாக இருந்தர்hகள். பின் ஜெனிவா என்ற உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை காரசாரமாக நடந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும் இறுக்கமான சூழலிலேயே பேச்சுக்கள் நடைபெற்றனர் என்று தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முக்கிய முடிவு துணை ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்துவதாகும். பேச்சுவார்த்தை மேசையில் சிறிலங்கா தரப்பினரோ துணை ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்துவதில் பலத்த சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கூறினர்.

அதேநேரம் இராணுவப் பேச்சாளர் துணை இராணுவக் குழுக்கள் இராணுவக் கட்டுப்பட்டுப் பகுதியில் இல்லையென்றார். ஆனால் விடுதலைப் புலிகள் அங்கு முன்வைத்த சான்றுகள் துணை ஆயுதக் குழுக்கள் என்ன பெயர்களுடன் எங்கு எங்கு இருந்து இயங்குகின்றனர் என்பதை அரசுத் தரப்பினரால் மறுக்கமுடியாது இருந்தது.

பலத்த வாதங்களின் பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமிழ் துணை ஆயுதக் குழுங்களை இயங்க அனுமதிக்க மாட்டோம் என சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று எரிக்சொல்கைம் வெளியிட்ட கூட்டறிக்கையில்;; தெரிவித்துள்ளனர். இது ஒரு முன்னேற்ற கரமான முடிவாக இருந்தாலும் இதனை முழுமனதுடன் அரசு நடைமுறைப்படுத்துமா? என்று மக்களின்; மனங்களில் கேள்வி எழுவது இயற்கையே. ஏனனில் சிறிலங்காவின் நம்பகத் தன்மையை தமிழ்மக்கள் நன்கறிவர்.;;.

ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்த போது கூடத்தென் தமிழீழத்தில் பேச்சுக் குழுக்கள் தமிழீன ஆதரவாரள்களைக் கொன்று கொண்டுயிருந்தன. எனவேதான் தமிழ்மக்கள் சிறிலங்;கா அரசை நம்புவதற்கு தயாராகயில்லை என்று கூறுகிறார்கள். இதைத்தான் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனிவா பேச்சுக்களில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கான உறுதி மொழியை அரசு நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கடந்த காலத்தில் அரசுத்தரப்பு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றது ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இப்போது அரசுத் தரப்பு கொடுத்திருக்கும் உறுதிமொழியைக் கூட முழுமையாக நம்புவார்கள் என்று எதிர்;;பார்க்கமுடியாது என்று மக்களின் எண்ண அலைகளை பற்றி மிகச்சரியாகக் கூறியுள்ளார்.

யுத்த நிறுத்த உடன்டிக்கையை கூறப்பட்டவைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நடைமுறைப்படுத்த தவறியமையே சமாதானம் கேள்விக்குறியாக மாறுவதற்கு காரணமாகும். சிங்கள் ஆட்சியாளர்கள் யாராயிருந்தாலும் அவர்களின் நிலைப்பாடு இதுதான் இதற்கு புதிய ஆடசித்தலைவர் மகிந்த ராஜபக்ச விதிவிலக்காக இருக்கமாட்டார்.

இதுவரை இருந்த சிங்கள ஆட்சியாளரிகளின் பார்க்க தானே சிங்கள பௌத்தத்தின் உண்மையான காவலன் எனகாட்டுவதில் அதிக அக்கறைகொண்டவர் மகிந்த ராஜபக்ச. எனவே ஜெனிவாவில் ஏற்பட்ட துணை ஆயுதக் குழுங்கள் பற்றிய தீமானதத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஒட்டுப்படைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற யுத்த நிறுத்த விதியை செவ்வனே நிறைவேற்றப் போவதாக அரசுத் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. அவ்வாறெனின் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களும் களையப்பட வேண்டுமென்று ஜே.வி.பி குரல் கொடுத்துள்ளது. அத்துடன் மகிந்த சிந்தனை மூலம் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை நீக்கவேண்டும் என்று ஜே.வி.பி மகிந்த ராஜபக்சாவிடம் கோரிக்கை விடுத்தள்ளது.

நோர்வேயின் நடுநிலைப் பணியைக்; கேவலப்படுத்திச் சிங்கள மக்களிடம் உள்ளுராட்சித் தேர்தலில் தனது வாக்குவங்கிளை அதிகரிக்க ஜே.வி.பி முயற்சிக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் ஜே.வி.பி, ஹெல உறுமயவுடன் கூட்டு இல்லாத நிலையில் மகிந்தரின் அடுத்த நகர்வு எப்படியிருக்கும் என்று கூறமுடியாதுள்ளது அதேநேரம் சந்திரிகாவும் தனது கட்சி அதிகாரத்தை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்;.

எனவே இனவாதத்தை வைத்து வாக்குகiளாப் பெறலாமா? அல்லது சமாதானக் குரலைக் வைத்து வாக்குகளைப் பெறலாமா?? என்று தீர்மானிக்கவேண்டிய நிலைக்கு மகிந்த ராஜபக்ச தள்ளபப்பட்டுள்ளார். மகிந்தவின் சிந்தனை என்று தூக்கிப்படிப்பாரானால் ஜெனிவாவில் எட்டப்பட்ட முடிவை அவரால் நிறைவேற்ற முடியாமல் போகும்;. ஜெனிவாவில் எட்டப்பட்டவாறு உறுதியாக போர்நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவும், தொடர்ந்து ஜரோப்பாவிலேயே பேச்சுவார்த்தைக்குச் செய்வதாக உறுதி பூணுவராக இருந்தால் மகிந்தவின் சிந்தனைகளைத் தூக்கி எறிய வேண்டும் எதைச் செய்வார் மகிந்தர்?

எவர் எதைச் செய்தாலும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாகவும் உறுதியாக இருப்போம். விடுதலை ஒன்றே எம்விடிவிற்குவழி.


அன்புடன்
மாசிலான்.

http://www.battieelanatham.com/weeklymatte...06/maselan.html

Print this item

  தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த நபர் திடுக்கிடும் தகவல்
Posted by: வினித் - 03-03-2006, 08:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த நபர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட உள்ளார்: தயாமோகன்

[வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2006, 18:50 ஈழம்] [க.நித்தியா]

கருணா குழுவைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரண் அடைந்துள்ளதாகவும் அவர் விரைவில் திடுக்கிடும் தகவல்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பார் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.


கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தயாமோகன் கூறியுள்ளதாவது:

மட்டக்களப்பு நகரை அண்மித்த பகுதியில் இராணுவத் துணை ஆயுதக்குழுக்கள், இராணுவப் புலனாய்வுத்துறையினரின் மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

கடந்த சில நாட்களாக படைத்துணைக் குழுக்கள் மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் நடமாடி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கச்சேரிக்கு முன்பாக உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் சிறிலங்கா இராணுவத் துணைக்குழு ஒரு அலுவலகத்தைத் திறந்து தமது செயற்பாட்டை தொடங்க சிறிலங்கா இராணுவத்தினர் துணைபுரிந்துள்ளனர்.

ஜெனீவா பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இராணுவத் துணைக்குழுவினர் அலுவலகங்களை அமைத்து ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில் நடமாடி ஆயுதங்களை அலுவலகங்களுக்குள் வைத்திருக்கும் அளவிற்கு மட்டக்களப்பு நகரப்பகுதி தற்போது மாறியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமும் அரச படைகளும் இப்படித்தான் செயற்படுகின்றனவே தவிர ஜெனீவாப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதையே பார்க்கமுடிகின்றது.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த கருணா குழு உறுப்பினர், ஜெனீவாப் பேச்சுக்களைக் குழப்பும் நோக்கில் தாக்குதலை நடத்துமாறு இராணுவப் படை அதிகாரி ஒருவர் தனது உறுப்பினர் ஒருவருக்கு பணித்து அனுப்பியதாக தெரிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தையைக் குழப்பி மீண்டும் போரை தொடங்க வேண்டும் என்ற எண்ணமே சிறிலங்கா படை உயர் அதிகாரிகளுக்கும், அரச தலைமைகளுக்கும் உள்ளன என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இராணுவத் துணை ஆயுதக்குழுக்களிடம் இருந்து களையப்படும் என்பதை சிறிலங்கா இராணுவமோ, சிறிலங்கா அரசோ ஏற்பதாக இல்லை என்பதையே இது காட்டுக்கிறது

கருணா குழுவில் தற்போது 40 முதல் 60 வரையானோர் உள்ளதாக சரணடைந்த இளைஞர் தெரிவித்தார்.

அவர்களில் சிலர் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் முன்னாள் ஈ.என்.டி.எல்.எஃப் உறுப்பினர்கள். அவர்களை இந்தியாவில் இருந்து சிலர் தயார் செய்து அனுப்புகின்றனர். ஆயுதங்களுடன் அவர்களுக்கு சிறிலங்கா அரசினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் அந்த இளைஞர் கூறினார்.

இந்நிலையில் மற்றொரு கருணாகுழு உறுப்பினர் ஒருவர் எம்மிடம் சரணடைந்துள்ளார்.

அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை மிக விரைவில் நடத்த உள்ளோம் என்றார் தயாமோகன்.



puthinam

Print this item

  விடுதலைப் புலிகள் கைது தொடர்பாக விசாரணை: ஹக்ரூப் ஹொக்லெண்ட்
Posted by: வினித் - 03-03-2006, 08:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>விடுதலைப் புலிகள் கைது தொடர்பாக விசாரணை: ஹக்ரூப் ஹொக்லெண்ட் </b>

[சனிக்கிழமை, 4 மார்ச் 2006, 00:01 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகள் 5 பேரை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஹொக்ரூப் ஹொக்லெண்ட் மேலும் கூறினார்.

சிறிலங்கா இராணுவத்தினரே விடுதலைப் புலிகள் 5 பேரை கைது செய்தனர் என்பதற்கான சாட்சியங்கள் உள்ளன என்று விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சி. எழிலன் கூறியிருந்தார்.

இருப்பினும் வழமை போல் சிறிலங்கா இராணுவத் தரப்பு இச்சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.



ஆதாரம் புதினம்

Print this item

  நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் விடுதலைப் புலிகள் சந்திப்பு
Posted by: வினித் - 03-03-2006, 08:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் விடுதலைப் புலிகள் சந்திப்பு

<img src='http://img446.imageshack.us/img446/179/j15md.jpg' border='0' alt='user posted image'>

[வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2006, 23:53 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழுவினர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ய+ணாஸ் ஸ்தோரவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
<img src='http://img446.imageshack.us/img446/4188/j23sz.jpg' border='0' alt='user posted image'>

ஜெனீவா இணக்கப்பாடுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத் தரப்பு முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் தருவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ய+ணாஸ் ஸ்தோரவிடம் விடுதலைப் புலிகளின் குழுவினர் எடுத்துக் கூறினர்.
நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சிறப்புத் தளபதி கேணல் ஜெயம், சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன், புலித்தேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சமாதான முயற்சிகளில் சிரத்தையுடன் செயற்பட்டுவரும் நோர்வேயின் புதிய அரசாங்கத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரினதும் மக்களினதும் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்த சுப.தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் ய+ணாஸ் ஸ்தோரவுக்கு விளக்கினார்.

ஜெனீவாவில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை துரித கதியில் நடைமுறைப்படுத்துவது பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது என்றும் அவை அடுத்தகட்டப் பேச்சுக்களுக்கு முன்னர் அமுலாக்கம் பெறுவது அவசியம் என்றும் நோர்வே வெளியுறவு அமைச்சரிடம் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார்.


மேலும் 25 ஆண்டுகால கொடிய யுத்தமும் ஆழிப்பேரலையின் பேரழிவும் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய அவலங்களினால் தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்றும் அண்மைக்காலமாக சிறிலங்கா அரச படைகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொண்டுவரும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நிலைமைகள் தொடர்பாகவும் நோர்வே அமைச்சருக்கு பேச்சுவார்த்ததைக் குழுவினர் விளக்கினர்.
ஜெனீவா இணக்கப்பாடுகளின் அமுலாக்கம் அவசியமானது என்பதை நோர்வே அரசாங்கம் ஏற்பதாகவும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.</b>



ஆதாரம் புதினம்

Print this item

  இரண்டு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்
Posted by: அருவி - 03-03-2006, 08:22 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (11)

கனடாவின் ஒன்ரோறியோ மாநிலத்தில் மார்க்கம் நகரிலே தாயார் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் (3மாதம், 3வயது) கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். தாயாரின் மீது இரட்டைக்கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.



<b>Police rope off a home in Markham where the bodies of two children were discovered Thursday evening. </b>

<b>
Two children slain in home
Mother `hanging on' to life in hospital
Apparent double murder-suicide bid</b>
Mar. 3, 2006. 01:00 AM
HENRY STANCU AND ROBYN DOOLITTLE
STAFF REPORTERS


A mother was clinging to life after her two small children were pronounced dead following an apparent double murder and attempted suicide in a Markham home last night.

York Region police cordoned off the two-storey brick home and closed a section of Sophia Rd., in the McCowan Rd. and 14th Ave. area, immediately after the dinner-hour incident.

Officers refused to comment on the incident, saying they are still investigating.

But neighbours say they've heard that the children died, but the mother is "still hanging on to her life."

Two youngsters, believed to be girls aged 3 months and 3 years, were pronounced dead in Markham-Stouffeville Hospital, where the mother underwent surgery for slash wounds.

Initial reports indicate the two children were drowned in a bathtub.

Lito Pacariem, who lives next door to the Sophia Rd. residence, said he spoke with the father after the horrific discovery.

"He was out when it happened," Pacariem said. "He told me he just bought something and when he came home the ambulances were here and the cops."

Onlookers said the man, who looked very upset, was grilled by investigators for most of the evening.

The family just moved into the neighbourhood, residents said, and isn't well known on the street.

"They moved in recently, so I don't know much about them. I feel bad. Very shocked," said Rupinder Saini, 41, who lives two doors away.

Saini, who himself is the father of daughters aged 4 and 18 months, described his neighbours as a quiet family.

Others neighbours said both husband and wife are unemployed, but are nice people who kept mainly to themselves.

Neighbours said the family of Sri Lankan nationality moved in around Christmas. The neighbourhood is a mix of families representing numerous cultures. Residents say it has always been a calm and safe place to live.

"It's a very multicultural neighbourhood," Saini added.

Shortly after the mother and children were taken to hospital, a woman arrived at the home shouting "my sister, my sister."

And a distraught man who said he was a brother-in-law said he did not know what happened and left to go to the hospital to get more details.

Georgian Ambulance would not comment on how many people they transported from the residence, or the condition of the victims.

தகவல் மூலம்

மேலதிக இணைப்பு
மேலதிக இணைப்பு

Print this item

  தமிழகமும், தமிழ் ஈழமும்
Posted by: வினித் - 03-03-2006, 04:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழகமும், தமிழ் ஈழமும்


தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் நந்தனின் இந்தப் பதிவு. இந்தப் பதிவை நான் நேற்று படிக்க நேர்ந்தது. நந்தனின் பதிவில் தான் நினைத்ததை அவர் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய நன்றி.


அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா ? புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது.

ஆவணப்படுத்துதல் குறித்து நந்தன் எழுதியிருந்தார். புலிகள் தங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றனர். புலிகள் போல தங்கள் இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்கங்கள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு போரினையும் பதிவு செய்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் போரினையும் பிற முக்கிய நிகழ்வையும் பதிவு செய்யும் ஒரு தனிப் பிரிவே உண்டு. புலிகள் தங்களுடைய போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே இதனை செய்திருக்கிறார்கள்.

தன்னுடைய Island of Blood புத்தகத்தில் அனிதா பிரதாப் இவ்வாறு தெரிவிக்கிறார்.

shortly after i was seated, taciturn Tiger guerrillas switched on a color television set ( a rare commodity in those days) and made me watch several video documentaries (even rarer commodities) on the LTTE and its leader. They were beautifully shot. The dance of sunlight and the angle of the camera made pirabhakaran seem larger than life. He looked strong, tough and brave. The film depicted LTTE as the disciplined national army of a proud nation - Tamil Eelam.

தங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன். ஆனால் சிலப் படங்களை மட்டுமே காண முடிந்தது. நன்றாக எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இத்தகையப் படங்கள் ஐரோப்பாவில் திரையிடப்படுகின்றன என்று நான் படித்து இருக்கிறேன். இன்று ஈழத்து செய்திகளை தினமும் பார்க்க தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் உள்ளது. ஈழத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் பொழுதெல்லாம் நான் இந்த தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழக்கம். பிரபாகரன் வன்னியில் ஆற்றும் உரை ஐரோப்பாவில் நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பது எத்தனை "இந்திய" தமிழர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை.


அதே நேரத்தில் இந்த குறும்படங்களும், செய்திகளும் தமிழார்வம் கொண்ட நண்பர்களுக்கு போய்ச் சேர்வது முக்கியமாகப் படுகிறது. குறும்படங்கள் குறித்து மேலும் விபரங்களை தமிழீழ நண்பர்கள் கொடுக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலன், உலகின் பலப் பகுதியில் இருக்கும் ஊடகங்கள் தமிழ் ஈழம் சென்றது தான். புலிகளின் தமிழீழ உள்கட்டமைப்பு பற்றி இந்தியாவின் பத்திரிக்கைகள் தொடங்கி, அமெரிக்காவின் டைம் போன்ற பத்திரிக்கைகள் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இது தவிர பல நாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு செல்லும் பொழுது தமிழ் ஈழத்திற்கும் சென்று தமிழ்ச்செல்வனை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். புலிகள் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அது போல அந்தப் பகுதிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

இன்னொரு விஷயத்தையும் தமிழகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கு வரி செலுத்துபவர்களில் இலங்கை அரசாங்கமும் அடங்கும் என்பதே அந்தச் செய்தி. கொழும்பு - யாழ்ப்பாணம், A9 நெடுஞ்சாலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கடந்தே செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் இராணுவத்தினருக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்ல இந்தச் சாலையை பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம், புலிகளுக்கு சுங்க வரி செலுத்துகிறது.

புலிகளின் இராணுவத் திறன் பற்றிச் சொல்ல வேண்டுமானால் யானையிறவு போரைப் பற்றிச் சொல்லலாம். யானையிறவு போர் பற்றி மட்டுமே ஒரு பெரிய பதிவு எழுதலாம்.

யானையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற நிலங்களுடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் தான். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை பெற்றனர்.

இந்த போர் தான் புலிகளுக்கு ஒரு தனி மரியாதையை கொடுத்தது. 10,000 பேர்களை கொண்ட புலிகள் முன்னேறி வருகிறார்கள். எங்களுடைய
50,000 வீரர்களை காப்பாற்றுங்கள் என உலகநாடுகளிடம் ஒரு நாட்டின் ஜனாதிபதி (சந்திரிகா) கதறும் அளவுக்குத் தான் சிங்கள இராணுவத்தின் motivation உள்ளது. புலிகளை போர் மூலம் வெல்ல முடியாது என்பதும், வேறு எந்த நாடும் இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்காது என்பதும் தெளிவான விஷயம். பிற நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவற்றில் இந்தியப் படைக்கு எதிராகவும் சரி, இலங்கைப் படைகளுக்கு எதிராகவும் சரி புலிகள் பலம் குறைந்தவர்கள் தான். புலிகளுடைய பலமே உயிரை துச்சமென மதித்து ஈழவிடுதலைக்காக போராடும் அவர்களின் மனதிடமும், விடுதலை வேட்கையும் தான். அதற்கு முன் எந்த பெரிய இராணுவமும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை யானையிறவு போர் நிருபிக்கவே செய்தது.

இந்தப் போரும், அதன் வெற்றியும் தான் தமிழர்களுக்கு ஒரு சரிசமமான இடத்தை கொடுத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. சிங்கள அரசு தமிழர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்க காரணமே இந்தப் போரின் வெற்றி தான்.

அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று. ஆனால் அகிம்சை வழியில் இந்தியா தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்த திலீபனின் உயிர் பற்றியோ அவரது அகிம்சை போராட்டம் பற்றியோ இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.

இன்று உலகில் அகிம்சை வழியில் போராடும் மற்றொரு நாடு திபெத். திபெத்திற்கு உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது. உலக நாடுகளின் பரிவு கிடைத்தது. திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது. அவ்வளவு தான். அவர்கள் போராட்டத்திற்கு இதைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை (திபெத் பற்றிய என்னுடைய பதிவு)

மாறாக இன்று உலகநாடுகள் கூட்டாச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கால வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதத்தை எடுத்தார்கள் என்பது தெரியும். புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது. அகிம்சை போராட்டமாக இருந்திருந்தால் எப்பொழுதோ நசுக்கப்பட்டிருப்பார்கள். தமிழர்கள் இன்று சுயமரியாதையுடன் இருப்பதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனை புலிகளின் எதிரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள் (என்னுடைய இந்தப் பதிவை பார்க்கலாம்)


புலிகளின் போராட்டம் மக்கள் போராட்டம் இல்லை, தீவிரவாதப் போராட்டம் என்று உலக அரங்கில் நிலைநிறுத்தியதில் சிங்கள அரசுக்கும், இந்தியச் "சார்பு" ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் உண்மை நிலை அது அல்ல. இதனை பல நடுநிலையாளர்களும், புலிகளின் எதிர்ப்பாளர்களும் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெ.என். தீக்ஷ்த் இவ்வாறு கூறுகிறார்.

The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.

மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்காக கடத்தி சென்ற கதைகளை பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சுனாமி போன்ற சமயங்களிலும் சரி, சாதாரண சமயங்களிலும் சரி புலிகள் தான் பாதுகாப்பையும், வாழ்க்கைத் தேவைகளையும் வழங்கி இருக்கின்றனர். புலிகளின் பிரதேசங்கள் மீது பல காலமாக இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடைகள் இருந்தன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

உலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நினைக்கின்றன. ரஞ்சன் விஜயரத்னே இலங்கையின் மிகக் கொடூரமான இனவெறிப் பிடித்த தலைவர்களில் ஒருவர். ஒரு முறை அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுக்கச் செல்லும் முன் விஜயரத்னேவை சந்தித்த பொழுது அவர் இப்படி கூறினாராம்.

When you meet Pirabhakaran, tell him it's the last time he will be seeing you. Before you get there next time, I will make sure he is a dead man

இத்தகைய இனவெறி, கொலை வெறிப் பிடித்த தலைவர்களிடம் விடுதலை கேட்டு அகிம்சை வழியிலா போராட முடியும் ?

எந்த அரசியல் படுகொலையும் கண்டனத்திற்குரியதே. அதனை நியாயப்படுத்த முடியாது. அதே இறுகிய கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டே அரசாங்கத்தின் கொள்கைகளை வைத்திருக்க முடியாது. இன்று தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் நிலையை ஏற்று இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான (சோனியா காந்தி) மைய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ள தொடங்கி இருக்கிறது. இது தான் இன்றைய யதார்த்தம். புலிகளின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே "இறந்த" காலத்தை தொடர்ந்து பேசி புலிகள் எதிர்ப்பை நிலைநிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்த திரை சற்றே விலகி இருக்கிறது. இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.

நான் இந்தப் பதிவில் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது.


நன்றி: சசி
http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post.html

Print this item

  Íð¼ ¸ðΨÃ- ¾Çõ ¸£üÚ
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-03-2006, 03:29 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (6)

அக்டோபர் 2005 - மார்ச் 2006



<b>நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்
சூரியதீபன் </b>



தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் ழயயீயீல ஞடிபேயட என்கிற வாசகம் இருந்தது.
காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்டுத் தாக்குதல்களை உணர முடியும். ழயயீயீல ஞடிபேயட என்பதிலே உலகமயமாதலின் வெளிப்பாடு; மீண்டுமொரு பொங்கலிட கோயிலுக்கு வாருங்கள் என்ற அழைப்பிலே இந்துத்வாவின் வெளிப்பாடு. நம் முன்னால் நிற்கிற மிகப்பெரிய இரண்டு பேரழிவுகள் இவை.

எந்த வகையான பண்பாட்டுத் தாக்குதல்கள் நம்மீது தொடுக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு பண்பாட்டின் வேர்கள் எவை என்பதை நாம் அறிய வேண்டும். வரலாற்றை அறிதல் என்பதிலேதான் வரலாற்றில் வாழ்தல் என்பது உருவாகும். எனவே நாம் நமது வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். நம்முடைய பண்பாட்டின் வரலாறு எது?

முதலில் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும். ``பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தின் உறுப்பாக இருந்து கற்கும் திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதி'' என்று எட்வர்ட் பார்மன் டையர் பண்பாட்டை வரையறுக்கிறார். 1877-ல் அவர் ‘பண்பாடு என்றால் என்ன’ என்று எழுதிய நூலின் வாசகம் இது. பிறகு பண்பாடு பற்றி நிறைய விளக்கங்கள் வந்திருக்கின்றன.

அந்த வகையில் பார்க்கிறபோது இந்தப் பண்பாடு என்பதற்கும் விஞ்ஞானபூர்வமான ஓர் ஆய்வு தேவைப்படுகிறது. இது இரு வகையாக வெளிப்படும். 1. ஏற்கெனவே நிலவுகிற சமுதாய அமைப்பைக் கொண்டு செலுத்துகிற அரசு அமைப்பு, அதனுடைய அதிகார உறுப்புகள் அதாவது ஆட்சி அமைப்பு, ராணுவம், காவல் என ஆயுதங்களாலே இயக்கப்படுகிற ஒரு வடிவம். 2. பண்பாட்டு வடிவம். ஓர் அரசு இந்த சமுதாயம் முழுவதும் வன்முறை எந்திரங்களால்தான் இயக்கப்படுகிறது என்பதை மார்க்ஸ் வரை யறுத்தார். ஆனால் ஆலிவர் கிராம்சி கூடுதலாகக் கூறுகிறார். பண்பாட்டு மேலாதிக்கம் என்பது இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என மார்க்சியத்தை இன்னும் வளப் படுத்தினார். ஆனால் இவற்றினால் மட்டுமே ஒரு மேலாண்மை மற்றும் ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்படுவதாக நான் கருதவில்லை. மாறாக மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் சமூக ஒப்புதலை மக்களிடமிருந்து மேட்டிமையாளர்கள் பெற்றுக் கொள்வதன் மூலம் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது என்று கிராம்சி குறிப்பிடுகிறார். எனவே பண்பாடு என்பது ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. மேலாண்மை அல்லது ஆதிக்க சக்திகளுடைய ஆட்சி அதிகாரம் என்பது மக்களுடைய அங்கீகாரத்தோடு நிறுவப்படுகிறது. பண்பாட்டு தளத் திலே இதற்கான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழர் திருமணங்கள் கடந்த காலத்திலே எப்படி நடந்தன என்பதை நாம் அறிவோம். இப்போதும்கூட கிராமப்புறங்களிலே ஓரிரு இடங்களில் நடக்கிற திருமணங்கள் சங்க காலத் திருமணங்களை ஞாபகப்படுத்துகின்றன. முற்றத்திலே புதுமணல் பரப்பி பந்தல் காலிட்டு அந்த ஊரிலே இருக்கிற பெரியவர்கள் அந்த சமுதாயத்தின் பழக்க வழக்கம் பற்றி அறிந்த அறிவார்ந்த ஒரு நபர் அல்லது அந்தக் குழுவிலே, குடும்பத்திலே மூத்தவர் அல்லது அந்த சமுதாயத்திலே இருக்கிற பெரியவர் இவர்களுடைய தலைமையிலே அந்தத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அந்த மாதிரி திருமணங்களை நானே நேரடியாக-சாட்சியாகக் கண்டிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கிராமப்புறங்களிலே நடத்தப்படுகிற திருமணங்கள்கூட பக்கத்திலே இருக்கிற சிறுநகரங்களிலே பெரு நகரங்களிலே திருமண மண்டபங்களில் நடத்தப்படுகின்றன. இது ஒரு பொது கலாச்சாரம் என்பதற்குள்ளே வாழ்க்கையைக் கொண்டு வந்துவிடுகிறது.

மேலாண்மை செலுத்துகிற ஆதிக்க சக்திகளின் கலாச் சாரம்தான் இன்றைக்கு பொது கலாச்சாரமாக இருக்கிறது. மக்களுடைய கலாச்சாரம் என்பது பொது கலாச்சாரமாக இல்லை. ஆகவே திருமண மண்டபம் என்ற வடிவம் வந்தவுடனே திருமணம் என்பது பார்ப்பனர்களால் ஓதப்படுகிற மந்திரங்களில் நடத்தப்படுவதாக மாறுகிறது. ஆகவே இன்றைக்குப் பண்பாட்டு வடிவம் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. வாழ்வின் பல்வேறு வடிவங்களிலே அது வெளிப்படுகிறது.

சீர்திருத்த திருமணங்கள் பற்றி இப்போது நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். விதவை மறுமணம் என்பது ராஜாராம் மோகன்ராய் காலத்திலிருந்து பால்ய விவாகம் தடுப்பு என்பதிலிருந்து தொடங்கி, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே மிகவேகமான சீர்திருத்தமாக வைக்கப்பட்டது. இன்றைக்கும் அது பேசப்படுகிறது. ஆனால் கைம்மை நோன்பு, விதவையாக இருப்பது அல்லது வேறொரு திருமணம் செய்து கொள்வது, சாதாரண தமிழ்க் குடியிலே இயல்பாக இருக்கிற எதார்த்தம்.

இந்த சமூகத்திலே ஒதுக்கப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கைம்மை நோற்பதில்லை. அவர்களுக்கு ஒரு கணவனைப் பிடிக்காதபோது வேறு கணவனைத் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. எனவே அவர்கள் விவாகரத்து செய்கிறார்கள். அதற்கு அறுத்துக் கட்டுதல் என்று பெயர். நவ நாகரிகமாக விவாகரத்து என்று சொல்கிறோம்.

வேறொரு ஆணை மணந்து கொள்கிறபோது ஏற்கெனவே இருந்த கணவன் மூலம் பெற்ற குழந்தைகள் ஆணுடையதா? பெண்ணுடையதா? இந்து திருமணச் சட்டங்கள் ஆணுக்குச் சாதகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அறுத்துக் கட்டுகிற பழக்கமுடைய இந்த மக்கள் பெண்ணுக்கு முதல் கணவனாலே பிறந்த குழந்தைகளையும் அவள் இரண்டாவது ஆணுடன் வாழச் செல்கிறபோது அழைத்துச் செல்கிறாள். இதுகாலம் வரை இந்த வழக்கம் இருந்துகொண்டு வருகிறது. பூமணியின் பிறகு நாவலிலே இது வரும்.

இது நமது அடித்தள மக்களின் பண்பாடு. இந்தப் பண்பாட்டிலிருந்து எல்லாமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

இன்னொரு பேராபத்து. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல உலகமயமாதல். இந்த உலகமயமாதல் என்பது தனியார்மயம் தாராளமயம்-இவற்றினால் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதுதான் உலகமயமாதலின் சாரம். கல்வி வியாபாரமயமாதலின் விளைவுதான் கும்பகோணத்திலே 88 குழந்தைகளின் சாவு. இதன் தொடக்கத்தினை முன்பே பலர் தொடங்கி வைத்து விட்டார்கள். குறிப்பாக கல்வி வியாபாரமாக்குதலைத் தொடங்கி வைத்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சாரும்.

1964 ல் நான் மதுரை தியாகாரய கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மதியம் வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண் டிருந்தபோது எல்லாப் பேருந்துகளும் ஒரு திசை நோக்கித் திருப்பப்படுகின்றன. மதுரையில் அப்போது டிவிஎஸ் என்ற பேருந்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஏறிச் சென்று மதுரை ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள சரஸ்வதி உயர்நிலைப் பள்ளி இடிந்து 44 மாணவிகள் சவமானதைக் கண்டேன். அதைப்பற்றி தோழர் பச்சையப்பன் என்கிற நாட்டுப் புறக் கவிஞர் “படபடவென வருகுது ரயிலு கிடுகிடுவென நடுங்குது ஸ்கூலு” என்று நாட்டுப்புறப் பாடல் வடிவிலே ஒரு பாடலை எழுதியிருப்பார். அந்த மாணவிகளை இடிபாடுகளிலிருந்து காப்பாற்றுகிற வேலையை டிவிஎஸ் நிறுவனத்தினுடைய தொழிலாளர்கள்தான் செய்தார்கள். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 1967 ல் திராவிட இயக்கத்தின் ஆட்சி வந்தபோது 44 மாணவிகளின் கொலைக்குக் காரணமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் அதே பள்ளிக் கூடத்தை அதே பெயரில் வேறொரு இடத்திலே புதிதாகக் கட்டி நடத்தி வருகிறார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்தவுடன் சாதி பண
அடிப்படையில் அய்க்கியமாகி விடு கிறார். இயக்கத்தைச் சார்ந்தவர்களின் எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்கு இருக்கிறது. ஆகவே அன்றைக்கு கல்வி வணிக மயமாகி வந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

உலகமயமாதல் என்பது எல்லாவற்றிலும் ஊடுருவி வருகிறது. பொருளாதார வேட்டையின் காரணமாக உள்ளுக்குள் நுழைகிற பன்னாட்டு நிறுவனங்கள் வெறும் பொருளாதார வேட்டையை மட்டும் நடத்துவதில்லை. அவை பண்பாட்டுத் தளத்தையும் குறிவைக்கின்றன. மலேசிய முன்னாள் பிரதமர் சொன்னார் : ``கொக்கோ கோலா நிறுவனத்தை மலேசியாவுக்குள்ளே நுழைய விட்டதுதான் எங்களுடைய பெரிய தவறாக ஆகிவிட்டது. மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சுரண்டிக் கொண்டு போய்விட்டது மட்டுமல்ல எங்கள் பண்பாட்டையே அவர்கள் தகர்த்து விட்டார்கள்'' என்று குறிப்பிட்டார். அது போலவே ஒரு கொகோ கோலா அல்லது பெப்சி நிறுவனம் நம்மூர் காளி மார்க் வின்சென்ட் சோடா மாப்பிள்ளை விநாயகர் போன்ற வற்றை தூக்கிச் சாப்பிட்டு விட்டது.

12,000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்த கல்லூரி விரிவுரையாளர்களை-பேராசிரியர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள். நிரந்தரமான, அமைதியான குடும்பம் என்ற அமைப்புக்குள்ளான இந்த வாழ்க்கையிலே இருந்து அவர்களைப் பிரித்து, அலைந்து திரியும் வாழ்க்கையை அவர்களுக்கு உருவாக்குகிறார்கள். அலைந்து திரியும் வாழ்க்கை என்பது அலைந்து திரியும் மனநிலையை உருவாக்குவதாகவே இருக் கிறது. இதுதான் நுகர்வு கலாச்சாரத்துக்கான அடிப்படை. நடுநிலையற்ற மனம் எதன்மீதும் நம்பிக்கை இல்லாத மனம் வேறொரு பண்பாட்டுக்கு அவர்களை இழுத்துப் போகிறது. இவ்வகையான கூறுகளும் இந்த சமுதாயத்திலே இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே உலக அளவிலான அபாயம் உலகமயமாதல்; உள்நாட்டு அபாயம் இந்துத்வா. இந்த இரு அபாயங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இதற்கான மாற்றுத் தளங்களை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம்? இதற்காக அரசியல் துறையிலும் பண்பாட்டுத் தளத்திலும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய காலகட்டத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இக்கால தமிழ் இலக்கியத்தில் தகுதி திறன் மேம்பாடு உன்னதம் பற்றியெல்லாம் பேசுபவர்கள் உலக மயமாதல் இந்துத்வா ஆகியவை பற்றிப் பேசுவதில்லை. இலக்கியப் படைப்புகளிலே இவைபற்றிப் பேச முடியவில்லை என்றால் வேறு அரங்கிலே ஊடகங்களிலே பேச வேண்டும். அரசியல் நீக்கமற்ற இலக்கியங்களை உருவாக்குவது என்ற போராட்டத்தையும் நாம் தொடங்க வேண்டும்.

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம் : சூரியசந்திரன்)


<b>¿ýÈ¢-Üð¼¡ï§º¡Ú</b>



[/b]

Print this item