Yarl Forum
நலமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நலமா? (/showthread.php?tid=667)

Pages: 1 2 3


நலமா? - வர்ணன் - 03-01-2006

<b>காற்றே நலமா?
என்னை தாங்கி நின்ற
தாய் நிலமே நலமா?

கடலே நலமா?
அலையே நலமா?
கரை தூங்கும்-கட்டுமரமே
நீ- சுகமா?

மரத்தடி பிள்ளையாரே நலமா?
எங்கள் மனங்களில் வாழும்
மறவர் குலமே
நீங்களும் நலமா?

ஒற்றை பனை மரமே - நலமா?
உயிர்வாழ பால் தந்த பசுவே
நீயும் நலமா?

பள்ளிக் கூடமே நீ நலமா?
பாடம் சொல்லி தந்த - குருவே
நீங்களூம் நலமா?

முரட்டு வீதியே
நீ நலமா?
அதில் முக்கி முக்கி போகும்
மாட்டுவண்டிலே நீ நலமா?

தோழர்களே நீங்க நலமா?
தோழியரே நீரும் சுகமா?

முச்சை கயிறு அறுந்து போக
ஓடி போன நான் விட்ட
பட்டமே நீ நலமா?
எங்கு நீ இருந்தாலும்
என்னையும் கேளேன்
"நீ நலமா?"

வயல் வெளியே நலமா?
வரம்புகளே நீங்கள் சுகமா?
ஆழக்கிணறே நீ நலமா?
அதனருகில் நிழல் பரப்பும்
ஆலமரமே நீயும் நலமா?

பத்துதரம் கிழமைக்கு நான்
ஒட்டுபோடும் சைக்கிளே நீ நலமா?
பாதி வழியில் எனை துரத்தும்
ஜிம்மி நாய்குட்டியே நீயும் நலமா?

காற்றே நீ நலமா?
நான் காதலித்த தேசமே
நீ நலமா?

மரமேறும் அணிலே நலமா?
மறைந்திருந்து பாடும்
குயிலே நீ சுகமா?

பூவரசம் மரமே நலமா?
வாடாமல் என்றும் நிற்கும்
வாதராணி மரமே - நீ சுகமா?

வேப்பமரமே சுகமா?
அதன் விரிந்த கிளைகளில் வாழும்
காக்கைகளே நீங்களும் நலமா?

கனவுகள் மட்டும் இங்கிருக்கு
எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு
பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு
அவை நலமா?

விலை எதுவும் நெருங்கா
தலைவரே நீங்க நலமா?
விடுதலைக்காய் வெடித்து சிதறும்
வேங்கைகளே - நீரும்
"உயிர் பிரிந்திருக்காதெனின்"
சொல்லுங்கள் - சுகமா?</b>[color=green]


- Selvamuthu - 03-01-2006

காற்றில் தொடங்கி கடைசிவரை ஊரிலுள்ள
களத்துப் போராளிகள்வரை நலம் கேட்கும்
வர்ணனே உங்கள் இதயத்து வரிகள்
மணவாசனையை அள்ளியே வீசுகின்றன
வாழ்த்துக்கள்.


- அருவி - 03-01-2006

நலமா என அனைவரையும் நலம்கேட்கும் உங்கள் கவி மிகவும் அழகாய் இருக்கிறது.


- Rasikai - 03-01-2006

உங்கள் நலமா கவிதை நன்றாக இருக்கிறது. அதுசரி என்னை கேக்க இல்லை நலமா என்று? Cry சரி பறவாய் இல்லை. நான் நலம் நீங்கள் நலமா? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வர்ணன் - 03-02-2006

நன்றி ஆசிரியர் - அருவி - ரசிகை!! 8)


- RaMa - 03-02-2006

பத்துதரம் கிழமைக்கு நான்
ஒட்டுபோடும் சைக்கிளே நீ நலமா?
பாதி வழியில் எனை துரத்தும்
ஜிம்மி நாய்குட்டியே நீயும் நலமா?

வர்ணன் எல்லோரையும் நலம் கேட்டு உங்கள் கவி வரிகளில் வடித்து இருக்கிறீர்கள். பாரட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


Re: நலமா? - Jenany - 03-02-2006

கனவுகள் மட்டும் இங்கிருக்கு
எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு
பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு
அவை நலமா?

விலை எதுவும் நெருங்கா
தலைவரே நீங்க நலமா?
விடுதலைக்காய் வெடித்து சிதறும்
வேங்கைகளே - நீரும்
"உயிர் பிரிந்திருக்காதெனின்"
சொல்லுங்கள் - சுகமா?[/b][color=g

உங்க கவிதை வரிகள் ரொம்ப அழகா இருக்கு.....


- இளைஞன் - 03-02-2006

நலமாய் தந்த கவிதை
சுகமாய் இருந்தது வர்ணன்.
ஈழத்து நினைவுகளை மீட்டி
நலம் கேக்கும் கவியழகு.

ஆனாலும் சிறு சந்தேகம்:
கவிதை தொடங்கி முடியும் வரை "நலமா" , "சுகமா" என்கிற
வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இவை மீள மீள
வருவதால் வாசிப்பவர்க்கு சோர்வை ஏற்படுத்தாதா? இது
என கேள்வி/சந்தேகம் மட்டுமே. ஏனென்றால் முன்னர் நானும்
இப்படி சில சொற்களை கவிதை முழுதும் மீள மீள பயன்படுத்தி
எழுதியிருக்கிறேன். அதற்கு சிலர் சொன்ன விமர்சனங்களையே
இங்கு கேள்வியாக முன்வைக்கிறேன். இங்கு கவிதை வாசிப்பவர்கள்
யாவருமே உங்கள் வாசிப்பனுபவங்களையும் எழுதுங்களேன்.
பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி


- ப்ரியசகி - 03-02-2006

Quote:கனவுகள் மட்டும் இங்கிருக்கு
எம் விழிகள் எப்போதும் அங்கிருக்கு
பட்டாம்பூச்சியே பார்த்து சொல்லு
அவை நலமா?

நினைவுகளை மீட்கும் ஒரு அழகான கவிதை வர்ணன்...
தொடர்ந்தும் எழுதுங்கள்..


- Snegethy - 03-02-2006

நலம் விசாரிக்கும் கவிதை நல்லா இருக்கு வர்ணன்....சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆகியிருக்குப்போல.....உருட்டிக்கொண்டு போன ஞாபகம் வருது.


- ப்ரியசகி - 03-02-2006

எனக்கு அப்படி சோர்வை ஏற்படுத்தவில்லை.
சோர்வு ஏற்படுத்துவதும், ஏறபடுத்தாமல் இருப்பதும்...அவரவரின் ரசனையை பொறுத்தது..
அப்படி என்று நான் நினைக்கிறேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வர்ணன் - 03-03-2006

நன்றி ரமா ஜெனனி!


- வர்ணன் - 03-03-2006

நன்றி உங்கள் கருத்துக்கு இளைஞன் -!
வேறு சொற்களை பயன்படுத்தி இருக்கலாம்தான் - வார்த்தைகளை கோர்ப்பது கஸ்டமாய் போகும் என்று நினைச்சேன் அதனால்தான் மீண்டும் மீண்டும் - இரு சொற்களை மாறி மாறி போட்டேன்!

அத்துடன் கருத்து களத்தில எழுதுறது போல-முன்னேற்பாடு இல்லாமல் உடனயே கவிதையை யோசிச்சு - யோசிச்சு எழுதுவது வழக்கம் -
அதனால்தான் வார்த்தைப் பஞ்சம் அந்த நேரத்தில் ஏற்பட்டு விடுகிறது! :roll:

மிகவும் நன்றி - ப்ரியசகி !

நன்றி சினேகிதி! - கவிதைக்கு ஒரு பொறி போதும் எண்டு சொல்லுறத போல - உங்க நட்சத்திரங்களோடு பேசும் கதையை பார்த்திட்டுத்தான் - இப்பிடி ஒண்டு எழுதினால் என்ன என்று யோசிச்சன்! 8)


- Snegethy - 03-03-2006

அப்பிடியா வர்ணன்.....உங்கட கவிதையப் பார்த்தவுடனே நானும் சைக்கிள், கொய்யா மரம், வீட்டு மதில்ல ஏறிநின்றுகொண்டு தோட்டத்தில நிக்கிற எல்லாரயும் நலம் விசாரிக்கோணோம் போல இருக்கு.


- narathar - 03-03-2006

வருணன் கவிதை நன்றாக இருக்கிறது.
நலமா என்பது பல பரந்துபட்ட அனுபவங்களை இணைக்கும் கோர்வையாக வருவதால் அலுப்புத் தட்டவில்லை.
எளிய நடை,இலகுவான சொற்கள், ஆனால் பரந்த அனுபவங்களைச் சொல்வதால் நெஞ்சை வருடிச் செல்கிறது.


- ப்ரியசகி - 03-03-2006

Snegethy Wrote:அப்பிடியா வர்ணன்.....உங்கட கவிதையப் பார்த்தவுடனே நானும் சைக்கிள், கொய்யா மரம், வீட்டு மதில்ல ஏறிநின்றுகொண்டு தோட்டத்தில நிக்கிற எல்லாரயும் நலம் விசாரிக்கோணோம் போல இருக்கு.

ஆமா..எனக்கு கூடவே தான்..5 ரூபா ஐஸ் பழம் கூட ஞாபகம் வந்து விட்டது Cry Cry Cry Cry


- அனிதா - 03-03-2006

நலமா என்று எல்லாரையும் நலம் விசாரிக்கும் கவி நன்று.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் வர்ணன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Snegethy - 03-03-2006

லொள் சகி....ஐஸசொக் ஞாபகம் வரவில்லையா?


- வர்ணன் - 03-04-2006

நன்றி நாரதர், அனிதா! 8)

ஆமா சினேகிதி எதை பத்தியும் கதையுங்க , ஐஸ்சொக் பத்தி மட்டும் பேசாதீங்க , - கொஞ்சம் தட்டுப்பட்டா குச்சுதான் கையில மிஞ்சும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:


- Thala - 03-04-2006

நல்ல கவி. வர்ணன்....!

பரிசாக இன்னும் ஒரு கவி... இதை முடித்து வைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு..... ! :wink: 8) 8)

<b>செடியாய் கருகி
சருகாய் ஆனோம்.
சருகாய் உதிர்ந்து
உரமாய் ஆனோம்.
உரமாய் புகுந்து
மரமாய் ஆனோம்.
மரமாய் காய்ந்து.
விறகாய் ஆனோம்.
விறகாய் எரிந்து
சாம்பலாய் ஆனோம்.
சாம்பலாய் எழுந்து
புகையாய் ஆனோம்.</b>

புகையாய் எழுந்து
முகிலாய் ஆனோம். .... <b>இப்பிடிக்கூட வரலாம்...! </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->